Thursday, August 16, 2007

தஸ்லீமாவைத் தாக்கியது சரியா?

தஸ்லீமாவைத் தெரியாதவர்கள் கிடையாது என்று சொல்லும் நிலைக்கு அவரது எதிர்ப்பாளர்கள் அவருக்குப் பிரபலத்தைத் தேடித் தருகிறார்கள். சமீபத்தில் அவர் தாக்கப்பட்டார். ஐதராபாத்தில்.

அவர் என்ன சொன்னார் என்று இன்னும் படிக்கவில்லை. நேரமின்மையின் காரணமாகவே அது. ஆனால் தாக்கப்பட்டார் என்று தெரிந்தும் வலைப்பூ பரபரப்பாக இல்லாமல் இருந்தது வியப்புதான். தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது. வலைப்பு அல்லோகல்லோலப் பட்டது. சிவசேனை அட்டகாசங்களும் வலைப்பூக்களில் பரவலாகப் பேசப்பட்டது. சிவசேனையின் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதைக் கண்டித்ததும் சரிதான்.

ஆனால் தஸ்லீமா தாக்கப்பட்டது? நமது அமைதி வியப்புதான். அவர் கருப்பைச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசியதாகக் கேள்விப்படுகிறேன். பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தில் பெரியாரும் அதே போன்ற...அல்லது அதே கருத்தைச் சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். (முதலில் பெரியார் சொன்னதையும் தஸ்லீமா சொன்னதையும் படிக்க வேண்டும்.)

தஸ்லீமா தாக்கப்பட்டது சரியா தவறா என்று நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதோ நீங்களே சொல்லுங்கள். ரகசிய வாக்கெடுப்புதான். தஸ்லீமா சொன்னதையும்...அவரை ஒரு சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் பின்னணியை மட்டும் வைத்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அவன் இவனை அடித்த பொழுது எங்கே போனோம். இவனை அவன் கடித்த போது எங்கே போனோம் என்ற கேள்விகள் சண்டைகள் வேண்டாம். அதெல்லாம் நடக்கும் பொழுது அதற்கென்று ஓட்டெடுப்பு வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்தச் சூழ்நிலையை மட்டும் வைத்து, உங்கள் வாக்கை அளியுங்கள். பின்னூட்டத்தில் எதையும் சொல்ல விரும்பினால் அதையும் சொல்லுங்கள்.அன்புடன்,
கோ.இராகவன்

29 comments:

said...

what's the difference between 2nd & 3rd? - other then 'thum'

said...

ராகவன்,
ஓட்டு போட்டாச்சு!

சரி! என்ன மாதவன் படம் போட்டுருக்கீங்க!

said...

Ragavan,
uNmaiyil mun vivaram enakkuth theriyaathu.

irunthaalum vanmai eppavum kaNdikkath thakkathu.

ellorum thadiyaik kaiyil eduththaal yaarthaan enna karuththu solla mudiyum.

said...

// வற்றாயிருப்பு சுந்தர் said...
what's the difference between 2nd & 3rd? - other then 'thum' //

சுந்தர், மாத்தீட்டேன். இப்பச் சரியாயிருக்கும்னு நெனைக்கிறேன். பாருங்க. :)

said...

// ஜோ / Joe said...
ராகவன்,
ஓட்டு போட்டாச்சு! //

நன்றி நன்றி

// சரி! என்ன மாதவன் படம் போட்டுருக்கீங்க! //

மாதவனா? யாரு அண்ணாநகர் முதல் தெருவுல வருவாரே மாதவன்....மாதவா நீ எங்கயோ போய்ட்டடா! அந்த மாதவனா? கடைசீல காமெடியன் ஆக்கீட்டீங்களே!!!!!

said...

// வல்லிசிம்ஹன் said...
Ragavan,
uNmaiyil mun vivaram enakkuth theriyaathu.

irunthaalum vanmai eppavum kaNdikkath thakkathu.

ellorum thadiyaik kaiyil eduththaal yaarthaan enna karuththu solla mudiyum. //

வாங்க வல்லீம்மா. நானும் இன்னும் விவரங்களைப் படிக்கலை. சனி ஞாயிறுல கொஞ்சம் படிச்சி அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரிஞ்சுக்கனும். அத்தோட பெரியாரோட பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் ஆன்லைன்ல கிடைக்குதான்னு பாக்கனும். ரெண்டையும் ஒப்பிட்டுப் பாக்கனும். அப்புறம் நம்ம நண்பர்கள் போட்ட ஓட்டுகளை வேற அலசனும்.

ஆனாலும் என்னைப் பொறுத்தவரை கருத்தைக் கருத்தால் எதிர்க்கத் தெரியாதவர்கள் கோழைகள். அது யாராக இருந்தாலும் சரி.

said...

ஓட்டுப் போட்டுவிட்டேன் கை சிலீர் என்றது, என்னடா கணீனியில் கூட் மை வைக்கும் பழக்கம் வந்து விட்டதா என பார்த்தேன், பின்புறமிருந்த A.C யில் இருந்து தண்ணீர் தெளித்தது தெரிய வந்தது.

சரி விடயத்திற்கு வருவோம், தஸ்லீமா 'லஜ்ஜா' எழுதி அது பலத்த கண்டனத்திற்கு உள்ளாகி வங்க தேசத்திலேயே அவரை தாக்க முற்பட்டனர்.வங்க அரசு அவரை நாடு கடத்தியது, நாடு கடத்தப்பட்டவர்களுக்கெல்லாம் கரம் நீட்டும் இங்கிலாந்து, இவருக்கும் கரம் கொடுத்தது.ஆறுமாத இடைவெளிக்குப்பின் இந்தியா வந்தார். வந்த போது பெங்கால் முற்போக்கு எழுத்தாளர்கள் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்கள். முஸ்லிம்கல் முற்போக்கு சிந்தனை இல்லாதவர்கள் தஸ்லீமா சொன்னது சரிதான் என வாயாரப் புகழ்ந்தார்கள். இவருக்கான ஆறுமாத விசா முடிந்தது மீண்டும் இங்கிலாந்து பயணம். கொழுப்பெடுத்த தஸ்லீமா வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாம். மேற்கு வங்க எழுத்தாளர்கள் சுத்த மோசம், நான் முற்போக்கு கொள்கையை உடையவள் என்பதால் ஆண் எழுத்தாளர்கள் என்னை பகிரங்கமாக படுக்கைக்கு அழைத்தார்கள். ஆண்கள் சுத்த மோசம் என ஆங்கில நாட்டிலிருந்து அறிக்கை விட்டார். உடனே நம் அறிவுஜீவிகள், அய்யோ நாங்கள் அப்படி நடக்கவில்லை. அவர் சொல்வது பொய், வங்க தேசம் இவரை நாடு கடத்தியது சரியே என் பதில் அறிக்கை விட்டர்கள். (ஆதாரம் சிராஜ் - மலையாள் மாத இதழ்)

தாக்கியது சரியோ தவ்றோ கொழுப்பெடுத்தவர் என்பது உண்மை -

said...

ராகவன்,

தஸ்லீமா என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும்
கருத்துக்களை எதிர் கொள்கின்ற விதமா இது
இஸ்லாம் மதத்தை ஆதரித்து எழுதும் எத்தனையோ பதிவர்கள் தமிழ்மணத்தில் உண்டு
இவர்களில் ஒருவர் கூட இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

இது தொடர்பாக என் பதிவு
http://sreesharan.blogspot.com/2007/08/blog-post_10.html

நன்றி

said...

ஹ்ம்ம்! இப்படி நடந்துகிட்டா, நமக்கும் டனிஷ் கார்ட்டூன் போஒட்டவரை கொலை செய்த வெறியர்களுக்கும் என்ன வித்தியாசம்.

Nothing justifies initialising Violence to another being.

said...

திரு.ராக்வன்,
//தஸ்லீமா என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும்
கருத்துக்களை எதிர் கொள்கின்ற விதமா இது//

சரண் அவர்களின் மேற் கருத்தில் நான் உடன்படுகிறேன்.

said...

இராகவன்,

இது குறித்து கேள்வி எழுப்பும் பலரும் மோடிகளின் செயல், பாபர் மசூதி இடித்தலை ஞாயப்படுத்துதல், கோட்சேவை புனிதராக காட்டுபவர்களாக இருக்கிறார்கள் என்பதால் இஸ்லாமியர்களும் அதைக் குறிப்பிட்டே இதற்கும் ஞாயம் கற்பிக்க முயல்கிறார்கள் என்று எனக்கு தெரிகிறது.

அந்நிய தேசத்தவர் நம் தேசத்து விருந்தினர் போலத்தான் நடத்தப்படவேண்டும். தலாய்லாமாவுக்கும், அன்னை தெரசாவுக்கும் நம்மண்ணில் பெரிதாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதால் இங்கு இஸ்லாமியர்களில் சிலர் அவசரப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இதன் மூலம் இவர்கள் சொல்லவருவது 'இஸ்லாமியாராக இருக்கும் பெண் வெளிப்படையாக பேச அச்சப்பட்டவளாகவே இருக்க வேண்டும்' என்ற பய உணர்வை ஊட்டி தங்கள் மதத்திற்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது

said...

ஜிரா

நானும் மாதவன் என்றே நினைத்தேன்..

உங்க படம?!

சரி சரி.. நீங்க ஏன் சினிமாவின் நடிக்கக் கூடாது? Ha Ha Ha..

said...

கருத்துக்களை எதிர் கொள்ள தெரியாமல் நடந்த நீகழ்வு. ஆனா இது வரைக்கும் ஏன், எதற்கு, என்ன காரணம் எண்று தெரியாது.

1) அவர் கூறிய கருத்து சரியோ , தவறோ அவரை அடித்தது தவறு. வேண்டுமென்றால் அதற்கு பதில் கூறி இருக்கலாம் அல்லது சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இது கருத்து சுதந்திரதிக்கு எதிராக உள்ளது.

2) அதற்க்கும் மேலாக, பெண்களை அடிப்பது அதனினும் இழிவு.

said...

// பூவண்ணன் said...
ஓட்டுப் போட்டுவிட்டேன் கை சிலீர் என்றது, என்னடா கணீனியில் கூட் மை வைக்கும் பழக்கம் வந்து விட்டதா என பார்த்தேன், பின்புறமிருந்த A.C யில் இருந்து தண்ணீர் தெளித்தது தெரிய வந்தது. //

ஹா ஹா ஹா பாத்தீங்களா...ஓட்டுப் போட்டதுமே பன்னீர் தெளிச்சு வரவேற்பு

// சரி விடயத்திற்கு வருவோம், தஸ்லீமா 'லஜ்ஜா' எழுதி அது பலத்த கண்டனத்திற்கு உள்ளாகி வங்க தேசத்திலேயே ......... நாடு கடத்தியது சரியே என் பதில் அறிக்கை விட்டர்கள். (ஆதாரம் சிராஜ் - மலையாள் மாத இதழ்)

தாக்கியது சரியோ தவ்றோ கொழுப்பெடுத்தவர் என்பது உண்மை - //

தஸ்லீமா சொன்னது சரியான கருத்தா தவறான கருத்தா என்பதையும் ஆராய வேண்டும். அது கருத்தியல் ஆய்வு. ஆனால் தாக்குதல் என்பது? பிடிக்காத ஒன்றைச் சொல்கிறார் என்பதால் தாக்குதலா? அது சரியா என்பதுதான் இந்தப் பதிவு. அதற்கு உங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கின்றீர்கள். தஸ்லீமா சொன்னதையும் தேடிக்கொண்டிருக்கிறேன். படித்து விட்டு வேறொரு பதிவில் பார்க்கலாம். :)

said...

// ஸ்ரீசரண் said...
ராகவன்,

தஸ்லீமா என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும்
கருத்துக்களை எதிர் கொள்கின்ற விதமா இது
இஸ்லாம் மதத்தை ஆதரித்து எழுதும் எத்தனையோ பதிவர்கள் தமிழ்மணத்தில் உண்டு
இவர்களில் ஒருவர் கூட இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

இது தொடர்பாக என் பதிவு
http://sreesharan.blogspot.com/2007/08/blog-post_10.html

நன்றி //

ஸ்ரீசரண், இந்த விஷயத்தில் பொதுவாகவே ஒரு அமைதி இருந்தது என்றே நினைக்கிறேன். ஆனால் இஸ்லாமிய நண்பர்கள் தாக்குதலுக்கு எதிர்ப்பு சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

// Dreamzz said...
ஹ்ம்ம்! இப்படி நடந்துகிட்டா, நமக்கும் டனிஷ் கார்ட்டூன் போஒட்டவரை கொலை செய்த வெறியர்களுக்கும் என்ன வித்தியாசம்.

Nothing justifies initialising Violence to another being. //

வாங்க டிரீம்ஸ். கார்டூன் போட்டவரைக் கொலை செய்தவர் மட்டுமல்ல..ஒரிசாவில் பாதிரியாரைக் கொன்றவர்கள்...இலங்கையில் தமிழர்களை வதைப்பவர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். நாமாகப் பார்த்துத் திருந்தினால்தான் உண்டு.

said...

// நட்டு said...
திரு.ராக்வன்,
//தஸ்லீமா என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும்
கருத்துக்களை எதிர் கொள்கின்ற விதமா இது//

சரண் அவர்களின் மேற் கருத்தில் நான் உடன்படுகிறேன். //

வாங்க நட்டு. கருத்துக்கு நன்றி. ஓட்டுப் போட்டுட்டீங்களா?

// கோவி.கண்ணன் said...
இராகவன்,

இது குறித்து கேள்வி எழுப்பும் பலரும் மோடிகளின் செயல், பாபர் மசூதி இடித்தலை ஞாயப்படுத்துதல், கோட்சேவை புனிதராக காட்டுபவர்களாக இருக்கிறார்கள் என்பதால் இஸ்லாமியர்களும் அதைக் குறிப்பிட்டே இதற்கும் ஞாயம் கற்பிக்க முயல்கிறார்கள் என்று எனக்கு தெரிகிறது. //

கோவி, எந்த ஒரு சமயத்திலும் ஒரு நிகழ்வைத் தமக்குச் சாதகமாகத் திரிப்பவர்கள் உண்டு. அதற்காக தவறு என்ற ஒன்றைத் தவறு என்று சொல்லாமல் விடக் கூடாது என்பது கருத்து. உங்களது கருத்தும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும்...அப்ப நீ கேட்டியா..இப்பக் கேட்டியா என்று எதிர்கேள்விகளைக் கேட்பது அலுப்பூட்டுகிறது. யார் செய்தால் என்ன...எந்த மதமாக இருந்தால் என்ன..தவறு என்று தோன்றினால் அதைத் தவறு என்று சொல்ல வேண்டும். அவ்வளவுதான்.

// அந்நிய தேசத்தவர் நம் தேசத்து விருந்தினர் போலத்தான் நடத்தப்படவேண்டும். தலாய்லாமாவுக்கும், அன்னை தெரசாவுக்கும் நம்மண்ணில் பெரிதாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதால் இங்கு இஸ்லாமியர்களில் சிலர் அவசரப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இதன் மூலம் இவர்கள் சொல்லவருவது 'இஸ்லாமியாராக இருக்கும் பெண் வெளிப்படையாக பேச அச்சப்பட்டவளாகவே இருக்க வேண்டும்' என்ற பய உணர்வை ஊட்டி தங்கள் மதத்திற்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது //

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். முன்பு மற்றவர்கள் செய்த தவறு..கண்டிக்கப்பட்ட தவறு..இங்கு எடுத்துக்காட்டாகி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு கருத்து எப்பொழுது வலுப்பெறும் தெரியுமா? அது எதிர்க்கப்படுகையில்தான். தஸ்லீமாவின் மீது காட்டப்படும் எதிர்ப்பு அவரை வளர்க்கத்தான் பயன்படும்.

said...

// சிவபாலன் said...
ஜிரா

நானும் மாதவன் என்றே நினைத்தேன்..

உங்க படம?!

சரி சரி.. நீங்க ஏன் சினிமாவின் நடிக்கக் கூடாது? Ha Ha Ha.. //

ஆகா...சிவபாலன்..இப்பிடி வாரி விட்டுட்டீங்களே! சினிமாவுல நான் நடிக்கவா? பாக்குறவங்க மேல ஒங்களுக்குக் கருணை இல்லாமல் போச்சே. :))))))))))))


// Anandha Loganathan said...
கருத்துக்களை எதிர் கொள்ள தெரியாமல் நடந்த நீகழ்வு. ஆனா இது வரைக்கும் ஏன், எதற்கு, என்ன காரணம் எண்று தெரியாது.

1) அவர் கூறிய கருத்து சரியோ , தவறோ அவரை அடித்தது தவறு. வேண்டுமென்றால் அதற்கு பதில் கூறி இருக்கலாம் அல்லது சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இது கருத்து சுதந்திரதிக்கு எதிராக உள்ளது.

2) அதற்க்கும் மேலாக, பெண்களை அடிப்பது அதனினும் இழிவு. //

வாங்க லோகநாதன். கருத்தைக் கருத்தால் எதிர்க்கனும்னு சொல்றீங்க. ஆமா. அதுதாங்க என்னோட கருத்தும்.

said...

//வாங்க லோகநாதன். கருத்தைக் கருத்தால் எதிர்க்கனும்னு சொல்றீங்க. ஆமா. அதுதாங்க என்னோட கருத்தும்.//

ராகவன் உங்களோட இந்தப் பதிவுல சொல்லியிருக்கிற கருத்தை என்னால என் கருத்தால எதிர்க்க முடியாதுங்க. ஆதரிக்கத்தான் முடியும்.

said...

இங்கேயும்தான் போய் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்களேன்...

http://yehathuvaislam.blogspot.com/2007/08/blog-post_9342.html

said...

வாக்குண்டாம்.
வாக்கிட்டேன்

said...

// ஓகை said...
//வாங்க லோகநாதன். கருத்தைக் கருத்தால் எதிர்க்கனும்னு சொல்றீங்க. ஆமா. அதுதாங்க என்னோட கருத்தும்.//

ராகவன் உங்களோட இந்தப் பதிவுல சொல்லியிருக்கிற கருத்தை என்னால என் கருத்தால எதிர்க்க முடியாதுங்க. ஆதரிக்கத்தான் முடியும். //

வாங்க ஓகை வாங்க. நன்றி. :) ஆதரவு இல்லாம எதுவும் நடக்காதுங்களே. :)

// ஏகத்துவ இஸ்லாம் said...
இங்கேயும்தான் போய் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்களேன்...

http://yehathuvaislam.blogspot.com/2007/08/blog-post_9342.html //

நண்பரே, உங்கள் பதிவைப் படித்தேன்..அல்லது கேட்டேன். அங்கு சொன்ன கருத்தை இங்கும் எல்லாருக்கும் தெரியச் சொல்கிறேன்.
=================================
http://yehathuvaislam.blogspot.com/2007/08/blog-post_9342.html

பேசுறவரு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசுறாரு.

தஸ்லீமா தாக்குதலை எதுக்குறவங்கள்ளாம் தஸ்லீமா கருத்தை ஆதரிக்கிறவங்கங்குற தொனியில இவரு பேசியிருக்காரு. புஷ் சொன்ன மாதிரி "எங்க கூட இருக்கீங்களா அவங்க கூட இருக்கீங்களா" அதுதான் இதுவும்.

தஸ்லீமாவின் கருத்து தவறென்றால் அதை எதிர்க்க வேண்டியது சரிதான். ஆனால் தாக்குதல்? அதுதான் கண்டிக்கப்படுகிறது. இப்படியே போனால் கருத்து பிடிக்கவில்லை என்றால் தாக்குவது சரி என்றாகும். அத்தோடு எதிர்த்துக் கேட்டால் நீயும் அந்தக் கருத்தா என்று கேட்பதும் சரியாகாது.

மொத்தத்தில் தாக்குதல் தவறு. தஸ்லீமா சொன்னது கண்டிப்பாக விவாதத்திற்கு உரியது.

நேற்றுதான் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் படிக்க நேர்ந்தது. அவரது காலகட்டத்தில் எழுதப்பட்ட நூலானாலும்....மையக்கருத்தில் கடைசியாக அவர் முன் வைப்பது இரண்டு விஷயங்கள். கர்ப்பத்தடை ஒன்று. ஆண்மை அழிவது இரண்டு. அப்பொழுதே பெரியார் இதற்காக எதிர்க்கவும் தாக்கவும் பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ம்ம்ம்ம்... மீண்டுமொருமுறை அவர் சொன்னதைப் படித்துப் பார்க்க வேண்டும்.
=================================

said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
வாக்குண்டாம்.
வாக்கிட்டேன் //

உங்க வாக்குண்டாம்...

அப்ப நல்ல மனமுண்டாம்
நல்ல நோக்குண்டாம் :) சரியா யோகன் ஐயா?

said...

மாதவன்...சாரி ராகவன்..

ஓட்டு போட்டாச்சு

said...

... G.Ragavan said...
அத்தோடு எதிர்த்துக் கேட்டால் நீயும் அந்தக் கருத்தா என்று கேட்பதும் சரியாகாது....

அது பாதிக்கப்பட்டவங்களிடமிருந்து வருகின்ற கருத்து. அது அப்படித்தான் இருக்கும். அவள் என்னா சொன்னா என தெரியாமல் கருத்துக் கூற வந்திருக்கின்றீர்கள். அதை முதலில் தெரிந்துக் கொண்டு விவாதம் செய்தல் நலம்.

... G.Ragavan said... தஸ்லீமாவின் கருத்து தவறென்றால் அதை எதிர்க்க வேண்டியது சரிதான். ஆனால் தாக்குதல்? ....

அவளை கண்டிக்கனும், ஆனால் கண்டித்தவிதம் தான் தவறு என்றல்லவா கூறியிருக்கின்றார். வேண்டுமென்றால் திரும்பவும் கேளுங்கள்.

said...

// ஏகத்துவ இஸ்லாம் said...
... G.Ragavan said...
அத்தோடு எதிர்த்துக் கேட்டால் நீயும் அந்தக் கருத்தா என்று கேட்பதும் சரியாகாது....

அது பாதிக்கப்பட்டவங்களிடமிருந்து வருகின்ற கருத்து. அது அப்படித்தான் இருக்கும். அவள் என்னா சொன்னா என தெரியாமல் கருத்துக் கூற வந்திருக்கின்றீர்கள். அதை முதலில் தெரிந்துக் கொண்டு விவாதம் செய்தல் நலம். //

நண்பரே...தஸ்லீமா என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது என்று சொல்லித்தான் பதிவையே போட்டிருக்கிறேன். ஆகையால்தான் தஸ்லீமா சொன்னது தெரியாது..ஆனால் தாக்குதல் தவறு என்றும் ஒன்று கொடுத்திருக்கிறேன்.

அதுவுமில்லாமல் தஸ்லீமா என்ன சொன்னார் என்பதை அந்த ஆடியோவில் பேசுகிற பெரியவர் சொல்லியிருக்கிறாரே.

//... G.Ragavan said... தஸ்லீமாவின் கருத்து தவறென்றால் அதை எதிர்க்க வேண்டியது சரிதான். ஆனால் தாக்குதல்? ....

அவளை கண்டிக்கனும், ஆனால் கண்டித்தவிதம் தான் தவறு என்றல்லவா கூறியிருக்கின்றார். வேண்டுமென்றால் திரும்பவும் கேளுங்கள். //

சொல்லியிருக்கிறார். மறுக்கவில்லை. ஆனால் அதைப் போகிற போக்கில் சொல்லிவிட்டு...இதெல்லாம் ஒரு விஷயமா என்கிற வகையில் பேசியிருக்கிறார். அபுமுஹைப் பதிவைப் பார்த்தீர்கள்தானே. வெளிப்படையாகக் கண்டித்திருக்கிறார். அபுமுஹை நிலைப்பாடுதான் எனதும். இந்தப் பதிவு தஸ்லீமாவின் கருத்தை ஆதரித்து அல்ல. தஸ்லீமா மீதான தாக்குதல் பற்றிதான். தஸ்லீமா சொன்னதைத் தேடிக்கொண்டிருக்கிறேன். முழு வடிவமும் கிடைத்த பின்பு...அது குறித்து எனது கருத்தை இடுகிறேன்.

said...

வாக்கியாச்சு.

யாரும் யாரையும் தாக்கக் கூடாது.

said...

ஒரு பெண்பிள்ளையை பத்து ஆம்பளைகள் கும்பலாக போய் அடிப்பது...அடித்து விட்டு அதை வீரம் என்பது..அதற்கு வக்காலத்து வாங்க ஒரு கும்பல் வேறு..

பொம்பளையை கும்பலாக போய் அடிக்க சொல்லித்தான் கடவுள் சொல்லித் தந்தாரா?

said...

தான் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்காக எதையாவது எழுதி அதுவும் இஸ்லாத்தைப்பற்றி அவதூறு சொல்லும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது.

இஸ்லாத்தைப்பற்றி யாராவது குறை சொல்லி எழுதிவிட்டால் அவர்களுக்கு பணமும் பட்டமும் அடைக்கலமும் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் கருத்து சுதந்திரம், மனிதஉரிமை என்ற பெயரில் தயார்.

ஒரு தனி மனிதனுடைய சுதந்திரத்தை(?!) பார்க்கும் இவர்கள் கோடானுகோடி மக்களின் உணர்வுகளையும் மத சுதந்திரத்தையும் காலில் போட்டு மிதிக்க நினைப்பது இவர்களின் மத துவேஷத்தையே காட்டும்.

இஸ்லாம் எந்த ஒரு மதத்தையோ அவர்களின் வேத நூல்களையோ குற்றம் குறை கூற தடைவிதிக்கிறது.ஆனால் இஸ்லாம் குர்ஆனிலோ நபியின் பொன்மொழியிலோ குற்றம்குறை காண்போர் அறிவு ரீதியாக விவாதிக்க வருமாறு சவால் விடுகிறது.

இதைவிடுத்து தான் பிரபலம் அடையவேண்டும் என்பதற்காகவும் தனது மற்றும் அனைத்து பெண்களின் கற்ப்பப்பையில் யார் வேண்டுமானாலும் விந்துவை செலுத்திக்கொள்ள கற்ப்பப்பை சுதந்திரம் வேண்டும் என்ற தனது விபச்சார கருத்தை வலியுறுத்தவும்குர்ஆனில் குறை சொல்லும் இவள் முஸ்லிம்களை பொருத்தவரை ஒரு பைத்தியக்காரியே.

பைத்தியத்தை கல்லால் அடிப்பது உலகெங்கும் உள்ள ஊரின் வழமைதான்.

www.nanmaivirumbi.blogspot.com>

said...

தோழர் தமிழச்சி மட்டும் தான் "தரம் கெட்டது தஸ்லீமா? மதவெறியில் திரியும் கொழுப்பெடுத்த இஸ்லாமிய மதவாதிகளா?" என்று தஸ்லீமா தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு போட்டிருந்தார். வேறு யாரும் அதுபற்றி வாய் திறக்கவில்லை என்பது வெட்கக்கேடானது.

http://thamizachi.blogspot.com/2008/02/blog-post_2228.html