Monday, September 29, 2008

சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள்

அரசியல்வாதிகள் நிலம் திருடுவது ஒன்றும் புதிதில்லை. பழைய ஜெயலலிதா ஆட்சியில் பல பணக்காரர்கள் நடுயிரவில் வீட்டை விட்டு வெளியே போனதெல்லாம் நாம் நாளிதழ்களிலும் படித்ததுதான். திமுகவினரும் அதை எல்லாருக்கும் எடுத்துச் சொன்னதும் தெரிந்ததுதான்.

இப்பொழுது காட்சிகளும் கோலங்களும் ஆட்சிகளும் மாறியிருக்கிறதும் தெரிந்ததுதானே. சமீபத்தில் சென்னையில் இருக்கும் இடங்களை மதுரையின் முக்கிய அரசியல் மையத்தின் மகனும்... அவருடைய சகோதர உறவுடைய மறைந்த நடிகரின் மகனும் வளைப்பதாகத் தெரிகிறது.

என்னுடைய உறவினர்கள் ஒரு இடம் வாங்கியிருந்தார்கள். சமீபத்தில் அங்கு புதிதாக ஒரு போர்டு போடப்பட்டு சுற்றிலும் தட்டியும் போட்டிருக்கிறார்கள். அதாவது அவர்கள் இடம் மட்டுமல்லாது .. சுற்றியுள்ள இடங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் நிலத்தை வளைத்திருக்கிறார்கள்.

சினிமாவில் வருவது போல.. ஒரு குடிசை.. ஒரு மாருதி வேன். கொஞ்சம் அடியாட்கள் (மதுரையிலிருந்தாம்)....இப்பிடி இருக்கிறதாம் காட்சி.

காவல்துறையில் புகார் கொடுக்கப் போனாலும் அவர்கள் எந்தப் புகாரையும் ஏற்க மறுக்கிறார்களாம். தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மகன் இந்த விஷயத்தில் இருப்பதால் புகார் வேண்டாம் என்று காவல் துறையினரே "நல்லது" சொல்லி அனுப்புகிறார்களாம்.

அந்த ஆட்சியில்தான் இப்பிடியென்றால்... இந்த ஆட்சியிலுமா! இப்பொழுது இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டால்... மற்ற அரசியல் பதிவுகளுக்கு எது ஆதாரமோ...அதேதான் ஆதாரம். கும்முகின்றவர்கள் கும்முக. பம்முகின்றவர்கள் பம்முக.

Sunday, September 14, 2008

பிரியாணி - 3

பிரியாணி போட்டு ரொம்ப நாளாச்சுல்ல. அதான் இப்பக் கிண்டியாச்சு. மொதல்ல கொஞ்சம் அறிவியல் பச்சடி போடுவோம்.

இந்த கடவுள் நுண்துகள்...அல்லது பெருவெடிப்பு ஆராய்ச்சியப் பத்தித்தான் இப்ப எங்க பாத்தாலும் பேச்சு. அது சரியா...தப்பா... நல்லதா... கெட்டதா...இப்பிடி நூறு கேள்விகள்...விவாதங்கள். அட.. நமக்கு அவ்வளவு அறிவியல் தெரியாதுன்னு வெச்சுக்கோங்களேன். ஆகையால நல்லது கெட்டது சொல்ல முடியாது. ஆனா இங்க நெதர்லாந்துல இருக்குறவங்களுக்குள்ள ஒரு பேச்சு. அதாவது இங்க எங்கூட வேலை செய்ற இந்திய நண்பர்களுக்குள்ள.

இந்தச் சோதனைக்காக 27 கிலோமீட்டருக்கு சுரங்கப்பாதை போட்டிருக்காங்களாம். அதாவது சுவிட்சர்லாந்துல தொடங்கி பிரான்சு வரைக்கும் போகுது இந்தச் சுரங்கம். ஐய்யா...ஆராய்ச்சி நல்லவிதமா முடிஞ்சிருச்சுன்னு வெச்சுக்கோங்களேன்....எல்லாருக்கும் சந்தோசம். ஆனா ஒவ்வொருவரு பயமுறுத்துறாப்புல கருந்துளைன்னு ஒன்னு உண்டாயிருச்சுன்னா...அதுக்குள்ள எல்லாம் போயி ஒன்னுமில்லாம ஆயிருமாம்ல. அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா.....? பிரான்சுக்கு மேலதான நெதர்லாந்து... ரொம்பப் பக்கமாச்சேய்யா.....அதான் இப்பதையப் பேச்சு. எந்தத் தேதீல இந்தப் பெருவெடிப்ப உண்டாக்குறாங்கன்னு சொல்லீட்டாங்கன்னா...இல்ல ஒங்களுக்குத் தெரிஞ்சா நீங்களும் சொல்லுங்க. அந்தத் தேதி வாக்குல ஒரு வாரமோ ரெண்டு வாரமோ லீவக் கீவப் போட்டு இந்தியாவுல குடும்பத்தோட இருக்கலாம் பாருங்க. தேதி தெரிஞ்சாச் சொல்லுங்கய்யா... பிரான்சு சுவிட்சர்லாந்துல இருக்குற நம்மூர்க்காரகளப் பாத்து ஆறுதல் பட்டுக்கிட்டாலும்....பலருக்கு இங்க அடிவயிறு ஜிலீர்ங்குதாங்கோய்.

---------------------------------------------------------------------------

அடுத்து ஒரு கேள்வி. இந்தியாவுல மருத்துவம் பாக்கலாமா? பாக்கக் கூடாதா? இன்னும் குறிப்பாச் சொல்லனும்னா......வெளிநாட்டுல இருக்குற இந்தியர்கள் இந்தியாவுல மருத்துவம் பாக்கலாமா கூடாதா? ஏன் இந்தக் கேள்வின்னா...ஒரு மெயில் வந்துச்சு. இங்கிலாந்துல இருக்குற ஒரு தமிழர் அனுப்புன மெயில்தான். எனக்கு நேரடியா அவரைத் தெரியாதுன்னு வெச்சுக்கோங்களேன். ஆனாலும் மெயில்னு ஒன்னு வந்துருச்சே. அவரோட மனைவிய இழந்துட்டாராம் இந்தியாவுல. அவங்களுக்கு ஹெர்னியா இருந்திருக்கு. இங்கிலாந்துல மருத்துவம் பாத்திருக்காங்க. அவங்களும் இது ஒன்னும் பிரச்சனையே கெடையாது. அவசரப் பிரச்சனையும் கெடையாது. ஓய்வா இருக்குறப்போ சொல்லுங்க...இப்பத்தான கொழந்தை பிறந்து ரெண்டு மாசம் ஆகுது.. ஆகையால கொஞ்ச நாள் கழிச்சி....அறுவை சிகிச்சை செஞ்சிக்கிறலாம்னு சொன்னாங்களாம். இவங்களும் இந்தியாவுக்கு லீவுல போறோமே...அங்க நம்மூரு டாக்டருங்க நல்லா பாத்துச் சொல்வாங்கள்ளன்னு வந்திருக்காங்க. வந்த அன்னைக்கே டாக்டர் கிட்ட அப்பாயிண்டுமெண்டு. பெருங்குடி பக்கத்துல இருக்குதே லைப்லைன் மருத்துவமனை. அங்க இருக்குற டாக்டர்.ராஜ்குமார் கிட்ட. அவரு சொன்னாராம்...அடுத்த நாளே அறுவை சிகிச்சை வெச்சிக்கலாம்னு.

அடுத்த நாள் அறுவை சிகிச்சையும் நடந்தது. ஆனா அதுக்கப்புறம் ஒன்னு மேல ஒன்னா பிரச்சனைகள் வந்து கடைசியில் மனைவியை வெறும் உடலாத்தான் வீட்டுக்குத் தூக்கீட்டுப் போக முடிஞ்சதாம். அந்த அபாய நிகழ்வுகளை மின்னஞ்சலில் தொகுத்து அனுப்பியிருக்காரு. இதுல எவ்வளவு உண்மை பொய்னு தெரியலை. ஆனாலும் படிக்கிறப்போ நமக்கே பயமாயிருக்குங்க. அந்தக் குறிப்பிட்ட மருத்துவரைப் பத்தியோ மருத்துவமனையைப் பத்தியோ குறை சொல்லனுங்குறது என்னோட எண்ணம் இல்ல. ஆனா வந்த மின்னஞ்சலில் சாராம்சத்தைப் பகிர்ந்துக்கனுங்குறதால சொன்னேன். இந்த மின்னஞ்சல் வேணுங்குறவங்க...எனக்கு gragavan@gmail.comக்கு மின்னஞ்சல் அனுப்புங்க. நான் ஒங்களுக்கு அனுப்புறேன்.

அதுவுமில்லாம...சமீபத்துல என்னுடைய மாமாவும் மருத்துவமனையில் இருந்தாரு. அவங்க அவரைப் பாத்துக்கிட்ட விதத்தப் பாக்குறப்போ இந்திய மருத்துவர்கள் வியாபாரிகளாகிப் போயிட்டாங்களோன்னுதான் தோணுச்சு. விதிவிலக்குகள் இருக்கலாம். எல்லாரும் அப்படித்தான்னு இல்லை. ஆனாலும் அந்த மருத்துவர்ங்குறது போய் மருத்துவ வியாபாரிங்குற எண்ணம் எழுந்தது உண்மைதான். இங்க நெதர்லாந்துல கூட வேலை பாக்குற பொண்ணுக்கு ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு. மருத்துவமனைல பத்து நாளு இருந்துட்டு அப்புறம் இந்தியாவுக்குப் போயிட்டா. ஆனா அந்தப் பத்து நாளும் அருமையா பாத்துக்கிட்டாங்க. நெறைய சோதனைகள் செஞ்சாங்க. ஆனா மருந்தோ எதுவுமோ படக்குன்னு குடுத்துறலை. அதே மாதிரி அந்தப் பொண்ணு இந்தியா போனப்பிறகும் நல்ல மருத்துவர் கிட்ட பாத்து சரியாப் போச்சு. அதுவும் உண்மைதான். முன்னமே சொன்னாப்புல நெறைய மருத்துவ வியாபாரிகள்..சில மருத்துவர்கள். இதுதான் இந்தியாவின் நிலையோ!!!!!

---------------------------------------------------------------------------

அடுத்து எதாச்சும் ஜாலியா பாப்போமா! ஒரு ஜாலியான பாட்டு. ஆனா தெலுங்குல. தமிழ்லயும் இந்தப் படத்தப் பாத்திருப்பீங்க. பாட்டையும் கேட்டுருப்பீங்க. வாழ்வே மாயம்னு தமிழ்ல வந்துச்சுல்ல. அது பிரேமாபிஷேகம்னு மொதல்ல தெலுங்குல வந்துச்சு. படம் குண்டக்க மண்டக்க ஓடுனதால அதைக் கமலை வெச்சு தமிழ்ல எடுத்தாங்க. பில்லா கிருஷ்ணமூர்த்திதான் இயக்கம். தமிழில் இசை கங்கையமரன். எல்லாப் பாட்டையும் புதுசாப் போட்டாலும் இந்தப் பாட்டை அப்படியே தெலுங்குல சக்கரவர்த்தி இசைல இருந்து சுட்டுட்டாரு. பாட்டைக் கேளுங்க. பாருங்க. விழுந்து விழுந்து சிரிச்சு ஒடம்பைப் புண்ணாக்கிக்கிறாதீங்க.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, September 01, 2008

ஒரு பாடல் மூன்று மொழி இளையராஜா எம்.எஸ்.விஸ்வநாதன்

வெத்தலையப் போட்டேண்டி பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். பில்லா படத்துப் பாட்டுதான். மலேசியா வாசுதேவன் பாடியிருப்பாரு. இந்தப் பாட்டை இதுக்கு முன்னாடி பாக்காதவங்க எங்கயாச்சும் பாத்துருங்க. வீடியோ எங்க கெடைக்கும்னு தெரியலை. இந்தப் பாட்டுக்கு இளையராஜா இசையமைச்சா எப்படியிருக்கும்னு ஆசைப்படுறவங்க கொஞ்சம் பொறுங்க....

தமிழில் வந்த இந்தப் படத்திற்கு மூலம் இந்திப் படமான டான். அந்தப் படத்துல இந்தப் பாட்டு எப்படியிருக்குன்னு இங்க பாத்துக்கோங்க.


அடுத்து இளையராஜாவுக்கு வருவோம். தமிழில் மெல்லிசை மன்னர் இசையமைச்சாரு பில்லாவுக்கு. ஆனா தெலுங்குல இளையராஜா இசை. ரஜினிகாந்துக்குப் பதிலா என்.டி.ராமாராவ். பாட்டைப் பாத்துருவோமே.



இதே படத்துல கலக்கலா இளையராஜா ஒரு பாட்டு ஜெயமாலினிக்குப் போட்டிருக்காரு. நா பருவம் நீக்கோசம்...பல்லவி பாடுத்துன்னதி... செம பாட்டு. இது தமிழ்ல பின்னாடி வாலிபமே வா வான்னு வந்துச்சு.


அந்தப் பாட்டையே தமிழ்ல மெல்லிசை மன்னர் போட்டிருக்காரு. எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கீருக்காங்க. ஆனா அதோட வீடியோவும் கிடைக்கலை.

அடுத்து மூலமான இந்தியில்.


இந்தப் பாட்டெல்லாம் பாத்தீங்கள்ள. உங்க கருத்துகளை அள்ளித் தெளிங்க. :)

அன்புடன்,
கோ.இராகவன்