Showing posts with label mellisai mannar. Show all posts
Showing posts with label mellisai mannar. Show all posts

Monday, September 01, 2008

ஒரு பாடல் மூன்று மொழி இளையராஜா எம்.எஸ்.விஸ்வநாதன்

வெத்தலையப் போட்டேண்டி பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். பில்லா படத்துப் பாட்டுதான். மலேசியா வாசுதேவன் பாடியிருப்பாரு. இந்தப் பாட்டை இதுக்கு முன்னாடி பாக்காதவங்க எங்கயாச்சும் பாத்துருங்க. வீடியோ எங்க கெடைக்கும்னு தெரியலை. இந்தப் பாட்டுக்கு இளையராஜா இசையமைச்சா எப்படியிருக்கும்னு ஆசைப்படுறவங்க கொஞ்சம் பொறுங்க....

தமிழில் வந்த இந்தப் படத்திற்கு மூலம் இந்திப் படமான டான். அந்தப் படத்துல இந்தப் பாட்டு எப்படியிருக்குன்னு இங்க பாத்துக்கோங்க.


அடுத்து இளையராஜாவுக்கு வருவோம். தமிழில் மெல்லிசை மன்னர் இசையமைச்சாரு பில்லாவுக்கு. ஆனா தெலுங்குல இளையராஜா இசை. ரஜினிகாந்துக்குப் பதிலா என்.டி.ராமாராவ். பாட்டைப் பாத்துருவோமே.



இதே படத்துல கலக்கலா இளையராஜா ஒரு பாட்டு ஜெயமாலினிக்குப் போட்டிருக்காரு. நா பருவம் நீக்கோசம்...பல்லவி பாடுத்துன்னதி... செம பாட்டு. இது தமிழ்ல பின்னாடி வாலிபமே வா வான்னு வந்துச்சு.


அந்தப் பாட்டையே தமிழ்ல மெல்லிசை மன்னர் போட்டிருக்காரு. எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கீருக்காங்க. ஆனா அதோட வீடியோவும் கிடைக்கலை.

அடுத்து மூலமான இந்தியில்.


இந்தப் பாட்டெல்லாம் பாத்தீங்கள்ள. உங்க கருத்துகளை அள்ளித் தெளிங்க. :)

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, March 25, 2008

பூப்பறிச்சு மாலை கட்டி - சுருளி வில்லுப்பாட்டு

சுருளிராஜன் நகைச்சுவை 70களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும் மிகவும் பிரபலம். அப்பொழுது இரண்டு திரைப்படங்களில் வந்த இரண்டு பாடல்கள் மிகவும் பிரபலம். ஒன்று "உப்புமா கிண்டி வையடி" என்ற பாடல். இதில் மலேசியா வாசுதேவன் சுருளிக்கும் வசந்தா சச்சுவிற்கும் பாடியிருப்பார்கள். நடுவில் சுருளியும் சச்சுவும் பேசியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் இசை. படத்தின் பெயரும் தெரியவில்லை. பாடலும் கிடைக்கவில்லை. கிடைத்தால் கொடுக்கவும்.

ஆனால் இன்னொரு பாடலின் வீடியோவே கிடைத்து விட்டது. ஹிட்லர் உமாநாத் படத்தில் இடம் பெற்ற இந்த வில்லுப்பாட்டுதான். இதிலும் சுருளிக்கு மலேசியா வாசுதேவனே பாடியிருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. மிகவும் அருமையான நகைச்சுவை வில்லுப்பாட்டு. கேட்டு ரசியுங்கள்.



அன்புடன்,
கோ.இராகவன்