Tuesday, October 09, 2007

சூனியமான நண்பன்

விவாஜியோட கவுஜைக்கும் ராயலார் கவுஜைக்கும் எதிர்க்கவிதை இது.

சனி உன்னைப் பிடிச்சிருக்குன்னு
தெரு முக்கு ஆசாரி சொன்னாரே
கேட்க மறுத்தது உன்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா நீ என்னப் பாத்த

நான் ஒங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
ஒன்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டேன்!
ஒன்னோட கடங்கார அட்டையெல்லாம்
ஒன் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டேன்!

பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
எனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நானே குடிக்கிறதால
எப்பவுமே ஒனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நீ போறத
யாரும் சொல்லாம எனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
மாட்டிக்கிறன்னு எவனுக்கும் தெரியாது

சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பேன்!
மாசக் கடைசி ஆகி நீ என்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பேன்!

சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
அப்பவும் உன்னாலதான பரோட்டா பார்சல் தூக்குனேன்
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே யோகம்டா.

உன் நட்பு வேணாமுன்னு யாருடா சொல்வா?
நீ வருவேன்னு தெரிஞ்துன்னா போடுவேன் பெரிய "Salute"டா!
போகும் போது மறக்காம சொல்லி அனுப்புடா
நட்பத் தூக்கீட்டு நானும் வந்துர்ரேண்டா!

16 comments:

said...

அய்யா சாமிகளா. முதல் கவிதை கவிதாயினி போட்டது.
இரண்டாவது நான் போட்ட எதிர் கவிதை. அதாவது 1*-1=-1. அதாவது நான் போட்ட எதிர் கவிதைக்கு -1. உண்மையான எதிர்.

அடுத்தது ராம் எனக்கொரு எதிர் கவிதை போட்டது. அதாவது 1*-1*-1=1. அதாவது அது பாஸிட்டிவ் ஆகிருச்சு. சோ, கவிதாயினி கவிதையும் ராம் கவிதையும் ஒரே அர்த்தம் சொல்லனும். சொல்லிச்சா? இல்லியே.

அப்புறம் கவிதாயினிக்கு நான் போட்ட எதிர்கவிதைக்கு ராம் போட்ட எதிரி கவிதைக்கு நீங்க ஒரு எதிரி கவிதை போட்டு இருக்கீங்க,. அதாவது 1*-1*-1*-1=-1. அதாவது உங்க கவிதையும் என் கவிதையும் ஒரே அர்த்தம் சொல்லனும். அதுவும் இல்லியே. கொழப்பமா இருக்கு. பெஞ்சுல உக்காந்துகிறேன்.

said...

என்ன இளா இப்பிடிச் சொல்லீட்டீங்க. ஒங்க கவுஜையும் எங்கவுஜையும் ஒன்னுதான். நல்லாப் படிச்சிப் பாருங்க. நீங்க கண்ணாடிக்கு இந்தப் பக்கம் இருந்து பாக்குறீங்க. நான் அந்தப்பக்கம் இருந்து பாக்குறேன்.

said...

இன்னா தான்பா நடக்குது இங்கே , எதிர்க்கு எதிர்னு ஒரே புதிரா கீதே, அல்லாம் ஒன்னா கூடிப்பேசி ஒரு முடிவ சொல்லுங்கப்பா ,அப்பாலிக்க ரிஜல்ட் மட்டும் கேட்டுக்குறேன்! :-))

said...

'பாத''ரசம்' போட்ட கண்ணாடியின் 'அந்தப்புற'த்துல இருந்து பார்த்தா எப்படி ஒரே மாதிரித் தெரியும்.

said...

\\நீங்க கண்ணாடிக்கு இந்தப் பக்கம் இருந்து பாக்குறீங்க. நான் அந்தப்பக்கம் இருந்து பாக்குறேன்.\\

ஆஹா...இதுல இதை வேற பார்க்கனுமா...

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...முடியல !

said...

'கவி' அரங்கமா?

said...

//அதாவது 1*-1*-1*-1=-1//

என்னய்யா கணக்கு போடறீங்க?
கவுஜய யாராச்சும் பெருக்குவாங்களா?
கவிதைன்னா கூட்டல் யா, கூட்டல்!
கவிதைக்குச் சுவையைக் கூட்டின்னு-தான் சொல்லுவாய்ங்க!
ஸோ, ஒன்லி கூட்டல்!!
1+-1+-1+-1=-2
இப்படி -2 ன்னு தெரியாம எப்பிடி +2 பாஸ் பண்ணினீங்க? :-))))

//ஒங்க கவுஜையும் எங்கவுஜையும் ஒன்னுதான். நல்லாப் படிச்சிப் பாருங்க//

இன்னும் கொழப்பமா இருக்கு. பெஞ்சுல உக்காந்துகிறேன்! (நான் கண்ணாடிக்கு நடுவுல இருந்து படிச்சேன் ஜிரா :-))

said...

//என்ன இளா இப்பிடிச் சொல்லீட்டீங்க. ஒங்க கவுஜையும் எங்கவுஜையும் ஒன்னுதான். நல்லாப் படிச்சிப் பாருங்க. நீங்க கண்ணாடிக்கு இந்தப் பக்கம் இருந்து பாக்குறீங்க. நான் அந்தப்பக்கம் இருந்து பாக்குறேன்.//

:-)))))

said...

//நீ வருவேன்னு தெரிஞ்துன்னா போடுவேன் பெரிய "Salute"டா!//

அடிங்கய்யா... அடிங்க...

உங்க விளையாட்டு தெரியாம நேத்து என்னய வேற பழி ஆடு ஆக்கிட்டிங்களே இளா பதிவில்....

நல்லா இருங்க சாமிகளா... நல்லா இருங்க..

said...

"சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பேன்!
மாசக் கடைசி ஆகி நீ என்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பேன்!"

:)))) சூப்பர்

ஆனா இளா பின்னூட்டத்தை டெலிட் செய்யவும்!!! மண்டை காஞ்சு போச்சு..அவ்வ்வ்வ்வ்

said...

ஹி ஹி.... இதுக்கொரு எதிர் கவுஜ யாரும் போடுவாங்களா??? :))

said...

/ILA(a)இளா said...

அய்யா சாமிகளா. முதல் கவிதை கவிதாயினி போட்டது.
இரண்டாவது நான் போட்ட எதிர் கவிதை. அதாவது 1*-1=-1. அதாவது நான் போட்ட எதிர் கவிதைக்கு -1. உண்மையான எதிர்.

அடுத்தது ராம் எனக்கொரு எதிர் கவிதை போட்டது. அதாவது 1*-1*-1=1. அதாவது அது பாஸிட்டிவ் ஆகிருச்சு. சோ, கவிதாயினி கவிதையும் ராம் கவிதையும் ஒரே அர்த்தம் சொல்லனும். சொல்லிச்சா? இல்லியே.

அப்புறம் கவிதாயினிக்கு நான் போட்ட எதிர்கவிதைக்கு ராம் போட்ட எதிரி கவிதைக்கு நீங்க ஒரு எதிரி கவிதை போட்டு இருக்கீங்க,. அதாவது 1*-1*-1*-1=-1. அதாவது உங்க கவிதையும் என் கவிதையும் ஒரே அர்த்தம் சொல்லனும். அதுவும் இல்லியே. கொழப்பமா இருக்கு. பெஞ்சுல உக்காந்துகிறேன்.//

சுத்தம்.... தள'யோட சங்கத்து பதிவை படிச்ச எபக்ட்.... :)

said...

avvvvvvvvvvvvv! onnum solrathukku illa!

said...

// வவ்வால் said...
இன்னா தான்பா நடக்குது இங்கே , எதிர்க்கு எதிர்னு ஒரே புதிரா கீதே, அல்லாம் ஒன்னா கூடிப்பேசி ஒரு முடிவ சொல்லுங்கப்பா ,அப்பாலிக்க ரிஜல்ட் மட்டும் கேட்டுக்குறேன்! :-)) //

என்னது? ரிஜல்ட்ட நீங்க கேக்கப் போறீங்களா? ரிஜல்ட் சொல்ல வேண்டியதே நீங்கதானய்யா! என்னய்யா இப்பிடிச் சொல்லீட்டீங்க!!!!

// ILA(a)இளா said...
'பாத''ரசம்' போட்ட கண்ணாடியின் 'அந்தப்புற'த்துல இருந்து பார்த்தா எப்படி ஒரே மாதிரித் தெரியும். //

"பாத"ரசமோ "சாத"ரசமோ எந்தப்புறந்த இருந்து பாத்தாலும் ஒரே மாதிரிதான் தெரியும்யா!


// கோபிநாத் said...
\\நீங்க கண்ணாடிக்கு இந்தப் பக்கம் இருந்து பாக்குறீங்க. நான் அந்தப்பக்கம் இருந்து பாக்குறேன்.\\

ஆஹா...இதுல இதை வேற பார்க்கனுமா...

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...முடியல ! //

என்னது இது? அதுக்குள்ள முடியலைன்னு? இன்னும் எவ்வளவோ இருக்கே. ஆனித்தலை தாங்கி பாணிக்குடை பிடித்து தானி சுற்றினால் போணி ஆகுமா? அதச் சொல்லுங்க மொதல்ல.

said...

// துளசி கோபால் said...
'கவி' அரங்கமா? //

கவிக்கூட்டம் டீச்சர். :))))))))))))))

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அதாவது 1*-1*-1*-1=-1//

என்னய்யா கணக்கு போடறீங்க?
கவுஜய யாராச்சும் பெருக்குவாங்களா?
கவிதைன்னா கூட்டல் யா, கூட்டல்!
கவிதைக்குச் சுவையைக் கூட்டின்னு-தான் சொல்லுவாய்ங்க!
ஸோ, ஒன்லி கூட்டல்!!
1+-1+-1+-1=-2
இப்படி -2 ன்னு தெரியாம எப்பிடி +2 பாஸ் பண்ணினீங்க? :-)))) //

வாங்கய்யா கே.ஆர்.எஸ். இப்பிடியெல்லாம் கணக்குப் பண்ணுனா ஒன்னுமே படியாது. என்னத்தக் கணக்குப் போட்டீங்களோ!!!!

////ஒங்க கவுஜையும் எங்கவுஜையும் ஒன்னுதான். நல்லாப் படிச்சிப் பாருங்க//

இன்னும் கொழப்பமா இருக்கு. பெஞ்சுல உக்காந்துகிறேன்! (நான் கண்ணாடிக்கு நடுவுல இருந்து படிச்சேன் ஜிரா :-)) //

பெஞ்சுல உக்கார்ரதா? ஏறி நில்லுங்க. அந்தப்புறம் இருந்துதான படிக்கச் சொல்லீருக்கு. நடுவுல இருந்து ஏன் படிச்சீங்க? ஏறுங்க பெஞ்சு மேல.

said...

//இப்படி -2 ன்னு தெரியாம எப்பிடி +2 பாஸ் பண்ணினீங்க? :-))))//
நாங்க எங்கே +2 pass பண்ணினோம். எல்லாம் Boss பண்ணித்தான். அதாங்க கோல்மாலு.

எனக்கு புடிச்சமாதிரி பின்னூட்டம் போட்ட புலி, ராம், குசும்பனுக்கு நன்றி.