Saturday, October 25, 2008

கானா பிரபாவுக்குப் போட்டியா ரேடியோஸ்பதி புதிர்

இந்த வாரம் நம்ம கானாபிரபா அண்ணாச்சி புதிர் போடாம ஏமாத்துன கோவத்துல... அவருக்குப் போலியா உருவெடுக்குறதா முடிவு பண்ணியாச்சு. அட.. என்னோட பேரைப் போட்டுத்தான்....

அடுத்து அவரு புதிரு போடுறாரோ இல்லையோ.. நம்ம அவருக்குப் போட்டியா களம் எறங்கீற வேண்டியதுதான். அவரு இளையராஜா மாதிரி. இருந்தாலும்.. நம்ம சந்திரபோஸ் ரேஞ்சுக்கு "ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே..."

சரி புதிருக்கு வருவோம். கிந்த உண்டேதி ஒக தெலுகுப் பாட்டா.. அதாவது தெலுங்குப் பாட்டு. இந்தப் பாட்டு தமிழிலும் இருக்கு, இந்த தெலுங்குப் பாட்டுக்கு இசையமைச்சவருதான் தமிழுக்கும் இசையமைச்சிருக்காரு. இதே பாடகர்கள்தான். படமும் இதே படம்தான். ஆனா தமிழில் பிரபலமான கதாநாயகன் நடிச்சாரு. ஆனா மெட்டு மட்டும் வேற. ஒரே பாடல் காட்சிக்கு தெலுங்குக்கு ஒரு மெட்டும்... தமிழுக்கு ஒரு மெட்டும் இசையமைப்பாளர் போட்டிருக்காரு. ஆனா அதே பாடகர்களை அந்தப் பாட்டைப் பாட வெச்சிருக்காரு.தமிழ்ப் படத்துல எல்லாப் பாட்டையும் கவியரசர் எழுதுனாலும் ஒரு பாட்டு மட்டும் கங்கை அமரன் எழுதுனாரு. இன்னொரு குறிப்பு சொல்றேன். இந்தப் படத்துல ஒரு கதாநாயகன் வில்லன் ஆனாரு.

தமிழ்ப் பாட்டு ரொம்பவே பிரபலமான பாட்டு. பாட்ட உத்து உத்துப் பாக்குறவங்களுக்கு தமிழில் கதாநாயகர் யாருன்னு பெரிய குறிப்பு இருக்கு.

இன்னொரு குறிப்பு.... இந்தப் படத்தோட பேர ரெண்டா பிரிச்சா ரெண்டு படங்கள் கிடைக்கும். ஒன்னு விஜய் நடிச்சது. இன்னோன்னு நடிகர்திலகம் நடிச்சது.

கண்டுபிடிங்க பாக்கலாம்.

போட்டி முடிவடைந்து விட்டதால் விடையை இங்கேயே சொல்லி விடுகிறேன்.

சுட்டாளுன்னாரு ஜாக்ரதா என்கின்ற தெலுங்குப் படத்தைத் தமிழில் போக்கிரிராஜா என்று எடுத்தார்கள். தெலுங்கில் இசையமைத்த மெல்லிசை மன்னர்தான் தமிழிலும் இசை. ஆனால் தெலுங்கில் பயன்படுத்திய எந்த மெட்டையும் தமிழில் பயன்படுத்தவில்லை. மேலே நீங்கள் கேட்ட தெலுங்குப் பாட்டுக்கு இணையான தமிழ்ப் பாடல் "நான் போக்கிரிக்குப் போக்கிரி ராஜா.. பக்கத்துல பட்டுல ரோஜா" என்ற பாடல். அதை எஸ்.ஜானகியும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இணைந்து பாடியிருந்தார்கள்.

இந்தப் படத்தில் முதன்முதலாக முத்துராமன் வில்லனாக நடித்தார். எல்லாப் பாடல்களையும் கவியரசர் எழுதியிருந்தாலும் ஒரேயொரு பாடலை மட்டும் கங்கையமரன் எழுதியிருந்தார். அது இந்தப் பாடலா... "வாடா என் மச்சிகளா" பாடலா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். :)

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

20 comments:

said...

ஏண்ணா!

என்னை வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணிலியே?

உண்மையிலேயே நீங்க போக்கிரிக்கு போக்கிரி ராஜா தான் ;-)

said...

அந்த கதாநாயக வில்லன்: முத்துராமன்

எம் எஸ் விஸ்வநாதன் இசையில் போக்கிரிக்கு போக்கிரி ராஜா

said...

போட்டிக்குக்குக் கூப்டதாலோ என்னவோ பிரபா அண்ணாச்சி பட்டுன்னு விடையச் சொல்லீட்டாரு.... அவர் கிட்ட வடையக் கேட்டு வாங்கிக்கிறவங்க வாங்கிக்கலாம்.

// என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே //

அண்ணாச்சி... எங்க காமெடிக்கெல்லாம் நீங்கதான் ஊற்று. ஒங்கள வெச்சி யாவாரத்தைத் தொடங்கீருக்கேன். நல்லா போணியாகும்னு நெனைக்கீறேன்.

said...

போக்கிரி ராஜா

said...

நிஜமா நல்லவன் - கலக்கீட்டீங்க. சரியான விடை. :)

said...

போக்கிரி ராஜா

said...

தமிழ்ப்பறவை.. மிகச் சரியான விடை... கலக்கல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

said...

போக்கிரி ராஜா ?

said...

கோவி, நீங்க கேள்வியாக் கேட்டாலும் விடை அதுதான். சரிதான். :) ஊகமும் உதவீருக்கு :)

said...

ராகவன் அண்ணே,

படம்: போக்கிரி ராஜா
நடிகர்கள்: ரஜினி,ஸ்ரீதேவி,ராதிகா
வில்லன்:முத்துராமன்

said...

ஆகா... குட்டிப் பிசாசு... கலக்கலு....வடைகளைச் சரியா சுட்டிருக்கீங்க.

என்னதிது... எல்லாருமே சரியான வடையவே சுட்டிருக்கீங்க. ஒன்னு புதிரு லேசானதா இருக்கனும்... இல்லைன்ன்னா... வடைய யாராவது எல்லாருக்கும் சுட்டுக் குடுக்கனும்.... எது உண்மை?

said...

நாக்கு தெளிலேது பாபு.

said...

இதுக் கூட தெரியலைனா எப்படி?

போக்கிரி ராஜா

said...

யப்பா...இங்க அமீரகத்துல இந்த வீடியோ தெரியல ;-)))

said...

அத்திரி... பின்னிப் பெடலெடுத்துட்டீங்க... மிகச் சரியான விடை..... சூப்பர்

said...

// Udhayakumar said...

நாக்கு தெளிலேது பாபு.//

என்னது தெளியலையா? எலுமிச்சம்பழம் பயன்படுத்திப் பாக்குறதுதானே.... ;) ஏதாச்சும் கலந்தீங்களா? இல்ல... அப்படியே......... :D

said...

annatha! Belated Happy Diwali!

said...

போக்கிரிக்குப் போக்கிரி ராஜான்னு பாடினது மலேசியாவும் ஜானகியும்தானே...

said...

நம்ப நடத்தின பதிவர் சந்திப்பு பத்தி எழுதுவீங்கன்னு பாத்தா இன்னும் எழுதல ! இது ரொம்ப ஓவர். சீக்கிரம் எழுதுங்க !

said...

அன்பு ஜீரா இங்கே பாருங்கள். உங்களுக்கு பட்டாம் பூச்சி பதிவர் விருது :)

http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html