Monday, September 01, 2008

ஒரு பாடல் மூன்று மொழி இளையராஜா எம்.எஸ்.விஸ்வநாதன்

வெத்தலையப் போட்டேண்டி பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். பில்லா படத்துப் பாட்டுதான். மலேசியா வாசுதேவன் பாடியிருப்பாரு. இந்தப் பாட்டை இதுக்கு முன்னாடி பாக்காதவங்க எங்கயாச்சும் பாத்துருங்க. வீடியோ எங்க கெடைக்கும்னு தெரியலை. இந்தப் பாட்டுக்கு இளையராஜா இசையமைச்சா எப்படியிருக்கும்னு ஆசைப்படுறவங்க கொஞ்சம் பொறுங்க....

தமிழில் வந்த இந்தப் படத்திற்கு மூலம் இந்திப் படமான டான். அந்தப் படத்துல இந்தப் பாட்டு எப்படியிருக்குன்னு இங்க பாத்துக்கோங்க.


அடுத்து இளையராஜாவுக்கு வருவோம். தமிழில் மெல்லிசை மன்னர் இசையமைச்சாரு பில்லாவுக்கு. ஆனா தெலுங்குல இளையராஜா இசை. ரஜினிகாந்துக்குப் பதிலா என்.டி.ராமாராவ். பாட்டைப் பாத்துருவோமே.



இதே படத்துல கலக்கலா இளையராஜா ஒரு பாட்டு ஜெயமாலினிக்குப் போட்டிருக்காரு. நா பருவம் நீக்கோசம்...பல்லவி பாடுத்துன்னதி... செம பாட்டு. இது தமிழ்ல பின்னாடி வாலிபமே வா வான்னு வந்துச்சு.


அந்தப் பாட்டையே தமிழ்ல மெல்லிசை மன்னர் போட்டிருக்காரு. எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கீருக்காங்க. ஆனா அதோட வீடியோவும் கிடைக்கலை.

அடுத்து மூலமான இந்தியில்.


இந்தப் பாட்டெல்லாம் பாத்தீங்கள்ள. உங்க கருத்துகளை அள்ளித் தெளிங்க. :)

அன்புடன்,
கோ.இராகவன்

8 comments:

said...

கலக்கல் தொகுப்பு ராகவன், தெலுகு யுகேந்தர் மீண்டும் ரீமிக்ஸ் வாசுவின் கைவண்ணத்தில் ஜீனியர் என்.டி.ஆர் நடிக்க வரப்போகுதாம். இசை ஜீனியர் ராஜாவோ தெரியல.

said...

முதுகுல ஏதோ நாடி முடிச்சி இருக்கு போல் இருக்கு!! அதை சுண்டிவிட்டு அவுங்க ஆடராங்க??
போதை தலைக்கேறிடிச்சு போல் இருக்கு.

said...

எப்படி ஜிரா இந்த மாதிரி எல்லாம் தேடி எடுத்து கலக்குறிங்க..;))

சூப்பர் தொகுப்பு...;)

said...

//தெலுங்குல இளையராஜா இசை. ரஜினிகாந்துக்குப் பதிலா என்.டி.ராமாராவ்//

ஹூம்...ரஜினி செய்யும் ஸ்டைல் தெலுங்குல மிஸ்ஸிங்!
இசையும் அப்படித் தான் தெரியிது!

//ஒரு பாட்டு ஜெயமாலினிக்குப் போட்டிருக்காரு. நா பருவம் நீக்கோசம்//

மிக மிக நன்றி! :))

said...

தொடர்புடைய சுட்டியாக நான் கருதுவது


இளையராஜாவின் 3 in 1 பாடல்

said...

// கானா பிரபா said...
கலக்கல் தொகுப்பு ராகவன், தெலுகு யுகேந்தர் மீண்டும் ரீமிக்ஸ் வாசுவின் கைவண்ணத்தில் ஜீனியர் என்.டி.ஆர் நடிக்க வரப்போகுதாம். இசை ஜீனியர் ராஜாவோ தெரியல. //

என்னக் கேட்டா ராஜாவே இசையமைக்கலாம். கலக்கலா இருக்கும். தெலுகு அவருக்குப் புதுசு இல்லையே.

said...

// Blogger வடுவூர் குமார் said...

முதுகுல ஏதோ நாடி முடிச்சி இருக்கு போல் இருக்கு!! அதை சுண்டிவிட்டு அவுங்க ஆடராங்க??
போதை தலைக்கேறிடிச்சு போல் இருக்கு. //

ஆனாலும் ஒங்களுக்குக் கிண்டல்தான். ஜெயமாலினி அகில உலக ரசிகர் மன்றத் தலைவர் கே.ஆர்.எஸ் இதைப் பாத்தாச் சும்மா விட மாட்டாரு. :)

said...

திரை நடிகர் ரஜினியின் ரோலை வேறு யார் செய்தாலும் ஏதோ இல்லாத மாதிரி தெரிகிறது. நிஜமா அல்லது mind set-ஆ தெரியவில்லை.

இசை? அதற்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம்?

தொகுக்க மெனக்கெட்டிருக்கும் உங்களுக்குப் பாராட்டுக்கள்.