Thursday, May 19, 2005

பார்களும் பண்பாட்டு வேர்களும்

நடன பார்களுக்கு மகாராஷ்டிரம் தடை...............என்ன நடக்கிறது? பண்பாடு காக்கின்றார்களா? மராட்டிய முதல்வரின் மகன் திரைப்படங்களில் ஆபாசமாக நடிகைகளை ஆடுவதைத் தடுப்பார்களா? ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஏன் தடை செய்யவில்லை. விலை கூடிய சரக்கைத்தான் விற்க வேண்டுமோ!

வெள்ளைக் குர்தா கசங்காமல் குளிர்சாதன அறையில் கும்மாளம் போட்டல் சரி. அதே கும்மாளத்தை ஏழையும் நடுத்தரவர்க்கத்தினனும் சாதாரண அறையில் வண்ண விளக்குகளுக்கிடையில் போட்டால் சட்டம் கைது செய்யுமாம். மூன்று லட்சம் ரூவாய் வரை அபராதம் விதிக்குமாம். மூன்றாண்டு சிறைத்தண்டனையாம். அடப் போங்கய்யா!

பதினாயிரம் பெண்கள் வீதியில் நிற்கின்றார்களே....அவர்களுக்கு என்ன வழி? மராட்டியப் பெண்களுக்கு மட்டும் மறுவாழ்வு தருவார்களாம். சீரழிக்கும் பொழுது தோன்றாத இனம் மறுவாழ்வில் தெரிகிறது. அதிகார வர்க்கம் அதிக கார வர்க்கமாக நடக்கிறது.

இந்த நடன பார்களும் விபச்சாரமும் சட்டப்படி அனுமதி கொடுக்கப் படவேண்டியவை. அதை விட்டு விட்டு.......

4 comments:

said...

வாங்க வாங்க ராகவன்.

said...

சட்டப்படி அனுமதி கொடுப்பது நிறையப் பிரச்சினைகளைத் தவிர்க்கும். மக்களிடம் பெரிய எதிரொலி ஏதும் இது விதயமாய் அங்கு இருக்கிறதா ?

said...

வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்.

முத்து....மக்களிடம் இது குறித்து எந்த எண்ணமும் இல்லை. இன்னமும் மக்களே விபச்சாரத்தைப் பற்றித் தவறாகவே எண்ணி வருகிறார்கள். பழந்தமிழர்கள் இதை ஏற்றுக் கொண்டேயிருந்திருக்கின்றார்கள். சங்க நூல்கள் எல்லாம் அதை ஒத்துக் கொள்கின்றன. என்னவோ போங்கள்.......பண்பாடு பேசிகின்றவர்கள் பசியில் துடிக்கும் பெண்பாடு அறிவார்களா?

said...

நல்ல சமூக சிந்தனை. அருமையான தகவல். கலக்குங்க ராகவன்.