Friday, July 07, 2006

அறுவர் தந்த ஆறு இசையாறுகள்

சும்மாயிருக்காமல் குமரன் என்னையும் ஆறு பதிவில் இழுத்து விட்டு விட்டார். எனக்கு இப்பொழுது இருக்கும் மனநிலையில் ஆழ்மையான பதிவு இட மனமில்லை. ஒரு இசைப் பதிவு. இசை என்றாலே தமிழில் சினிமா இசை என்று ஆகி விட்டதே. எனக்குப் பிடித்த ஆறு பாடகர்களும் அவர்கள் பாடிய ஆறு பாடல்களும் சொல்லலாம் என இருக்கிறேன். இந்த ஆறுதான் பிடிக்குமென்று இல்லை. ஆனாலும் முடிந்த வரையில் சுவையான ஆறுகள். இன்னொரு விஷயம். இந்தப் பட்டியலால் இவர்கள்தான் சிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லாரும் பாடத் தெரியாதவர்கள்னு சொல்லலை. எனக்குப் பிடிச்ச ஆறு. அவ்வளவுதான்.

இசையரசி பி.சுசீலா

1. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - பஞ்சவர்ணக்கிளி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
2. கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே - தண்ணீர் தண்ணீர், மெல்லிசை மன்னர், வைரமுத்து
3. கண்ணுக்கு மை அழகு கவிதைக்குப் பொய்யழகு - புதிய முகம், இசைப்புயல், வைரமுத்து
4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ - படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி
5. அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் - உயர்ந்த மனிதன், மெல்லிசை மன்னர், கவியரசர்
6. மறைந்திருக்கு பார்க்கும் மர்மமென்ன - தில்லானா மோகனாம்பாள், திரையிசைத் திலகம், கவியரசர்

இசைக்குயில் வாணி ஜெயராம்

1. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரலல்வோ - தீர்க்க சுமங்கலி, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
2. நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா - அழகே உன்னை ஆராதிக்கிறேன், இசைஞானி, வாலி
3. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - முள்ளும் மலரும், இசைஞானி, கங்கை அமரனா?
4. மலைராணி முந்தானை சரியச் சரிய - ஒரே வானம் ஒரே பூமி, மெல்லிசை மன்னர், கவியரசர்
5. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் - புன்னகை மன்னன், இசைஞானி, வைரமுத்து
6. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது - படத்தின் பெயர் தெரியவில்லை, சங்கர்-கணேஷ், வைரமுத்து

இசைத்துள்ளல் எல்.ஆர்.ஈஸ்வரி

1. இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (பாடியவர் டீ.எம்.எஸ் என்றாலும் ஈஸ்வரியின் அந்த அதியற்புதமான ஹம்மிங்...ஆகா) - ஆலயமணி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
3. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் - வல்லவனுக்கு வல்லவன், வேதா, கவியரசர்
4. அடடா என்ன அழகு அருகே வந்து தழுவு - நீ, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
5. வாராயென் தோழி வாராயோ - பாசமலர், மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
6. இது மாலை நேரத்து மயக்கம் - தரிசனம், சூலமங்கலம் ராஜலட்சுமி, கவியரசர் (இது ஒரு மிகச்சிறந்த பாடல். எல்.ஆர்.ஈஸ்வரியின் திறமையை திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததை இந்தப் பாடலில் அறியலாம். )

இசைவேந்தர் டீ.எம்.எஸ்

1. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப்புதல்வன், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. முத்தைத்தரு பத்தித் திருநகை - அருணகிரிநாதர், ஜி.ராமநாதன் - டீ.ஆர்.பாப்பா, அருணகிரிநாதர்
3. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் - நல்லதொரு குடும்பம், இசைஞானி, கவியரசர்
4. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம், இசைஞானி, கவியரசர் (மிகவும் அருமையான பாடல். கேட்டுப் பாருங்கள். மனமயக்கும்.)
5. ஆண்டவன் இல்லா உலகமெது ஐலசா - நந்தா என் நிலா, தட்சிணாமூர்த்தி, கவியரசர் (இன்னொரு அருமையான பாடல். வாணி ஜெயராமுடன் பாடியது)
6. மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - இரு மலர்கள், மெல்லிசை மன்னர், வாலி

இன்னிசைக் குரலோன் ஜெயச்சந்திரன்

1. கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள், மெல்லிசை மன்னர், கவியரசர் என நினைவு
2. ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள், இசைஞானி, பாட்டு எழுதுனது யார்னு தெரியலையே!
3. கன்னத்தில் முத்தமிட்டால் - கன்னத்தில் முத்தமிட்டால், இசைப்புயல், வைரமுத்து
4. கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி - கிழக்குச் சீமையிலே, இசைப்புயல், வைரமுத்து
5. பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள், மெல்லிசை மன்னர், கவியரசர் (ஜெயச்சந்திரன் அறிமுகமாகிய பாடல். மிகவும் இனியது.)
6. புல்லைக் கூடப் பாட வைத்த புல்லாங்குழல் - என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான், இசைஞானி, வாலியா?


சிறந்தவை ஆறு

இந்த ஆறும் பல பாடகர்களும் பாடி எனக்கு மிகவும் பிடித்தவைகளில் வரும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் நான் சுவைக்கும் இனிய பாடல்கள்.

1. அழகிய கண்ணே உறவுகள் நீயே - எஸ்.ஜானகி, இசைஞானி, உதிரிப் பூக்கள், கவியரசர் (யாருக்குப் பிடிக்காது இந்தப் பாட்டு!)
2. காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைப்புயல், ரோஜா, வைரமுத்து
3. கூண்ட விட்டு ஒரு பறவ கோடு தாண்டிப் போச்சு - பி.சுசீலா, யேசுதாஸ், கட்டபொம்மன், தேவா, பாடலாசிரியர் தெரியலை. தேவா இசையமைத்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
4. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை - யேசுதாஸ், இசைஞானி, அவள் அப்படித்தான், கவியரசர்
5. மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா - கமலஹாசன், விருமாண்டி, இசைஞானி, வாலியா?
6. சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே - ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹாரிஸ் ஜெயராஜ், முத்துக்குமார்

பாடல்களில் தேர்ந்தெடுத்துக் கேட்பதுதான் வழக்கம். இந்தத் தேர்ந்தெடுத்தலில் இப்பொழுது எண்ணிக்கைகள் குறுகிக்கொண்டே வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் வந்த புதிதில் அத்தனை கேசட்டுகளும் சீடீக்களும் வாங்குவேன். கொஞ்ச நாளாகவே இசை வட்டுகள் வாங்குவது மிக மிகக் குறைந்திருக்கிறது. டீவியில் வரும் ஒன்றிரண்டு பாடல்களள மிகவும் ரசிக்கிறேன். எ.டு பொய் சொல்லப் போறேன், ரகசியமானது காதல் மிக மிக....ஆனால் அந்தப் படத்தில் மற்ற பாடல்களை ரசிக்க முடியாததால் இசைவட்டு வாங்குவதில்லை.

ஆறு பேரக் கூப்பிடனுமா? ஏற்கனவே எல்லாரும் போட்டுட்டாங்க...நான் கட்டக் கடைசீல வந்திருக்கேன். யாராவது தங்களை இன்னும் யாரும் கூப்பிடலைன்னு நினைக்கிறீங்களா? இதோ இராகவன் அழைக்கிறான் (இதெல்லாம் ஓவராத் தெரியல!) சரி. இதுவரை அழைக்கப் படாதா ஆறு நண்பர்கள் இதை அழைப்பா எடுத்துக்கிட்டு பதிவு போடுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

42 comments:

said...

நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - முள்ளும் மலரும், இசைஞானி, கங்கை அமரனா?

சின்ன வயசில் எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த பாடல்.. இப்பவும்தான்...

பாட்டுக்கள் செலக்சன் அனைத்தும் சூப்பர்.

said...

நல்ல பாடல் தேர்வுகள் ராகவன். இதில் பல பாடல்கள் எனக்கும் பிடித்தமானவை.

//கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே - தண்ணீர் தண்ணீர், மெல்லிசை மன்னர், வைரமுத்து//
இதன் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன்...மெல்லிசை மன்னர் அல்ல.

//மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா - கமலஹாசன், விருமாண்டி, இசைஞானி, வாலியா?//
இப்பாடலின் பாடலாசிரியர் கவிஞர்.முத்துலிங்கம்.

இதே பாடலையும் வேறு சில பாடல்களையும் நானும் எனது ஆறு பதிவில் போட்டிருக்கிறேன்.
http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html

said...

வழக்கம் போலவே சிறப்பா எழுதிட்டீங்க. உங்களக்கு பிடித்த அந்த ஆறும் மத்தவங்களுக்கும் பிடித்த மாதிரிதான் இருக்குது.

said...

//4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ - படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி//


நெற்றிக்கண்.

said...

// முத்து(தமிழினி) said...
நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - முள்ளும் மலரும், இசைஞானி, கங்கை அமரனா?

சின்ன வயசில் எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த பாடல்.. இப்பவும்தான்... //

பாட்டு மட்டுமா முத்து? எனக்குப் பாட்டுல வர்ர ஐட்டங்கள் அத்தனையும் பிடிக்கும். :-)

// பாட்டுக்கள் செலக்சன் அனைத்தும் சூப்பர். //

இந்தப் பாட்டுகளுக்கு எங்கையாவது லிங்க் இருந்தாக் குடுங்களேன். இங்கக் குடுப்போம்.

said...

// கைப்புள்ள said...
நல்ல பாடல் தேர்வுகள் ராகவன். இதில் பல பாடல்கள் எனக்கும் பிடித்தமானவை. //

அப்படியா? சரி...அப்பப் பிடிக்காத சில பாடல்களையும் சொல்லீருங்க கைப்பு. ;-)

// //கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே - தண்ணீர் தண்ணீர், மெல்லிசை மன்னர், வைரமுத்து//
இதன் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன்...மெல்லிசை மன்னர் அல்ல. //

தண்ணீர் தண்ணீர் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர்தான். அச்சமில்லை அச்சமில்லை படத்துக்குத்தான் இசை வி.எஸ்.நரசிம்மன்.

// //மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா - கமலஹாசன், விருமாண்டி, இசைஞானி, வாலியா?//
இப்பாடலின் பாடலாசிரியர் கவிஞர்.முத்துலிங்கம். //

ஓகோ! முத்துலிங்கமா. நல்ல கவிஞர்தான். அன்னைக்கு இளையராஜாவை ஒருவழியா திருப்புகழ் பாட வெச்சாரே!

// இதே பாடலையும் வேறு சில பாடல்களையும் நானும் எனது ஆறு பதிவில் போட்டிருக்கிறேன்.
http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html //

இதோ..வந்து பாக்குறேன்.

said...

// அனுசுயா said...
வழக்கம் போலவே சிறப்பா எழுதிட்டீங்க. உங்களக்கு பிடித்த அந்த ஆறும் மத்தவங்களுக்கும் பிடித்த மாதிரிதான் இருக்குது. //

அப்படீங்குறீங்க. இதுல சில பழைய பாட்டுகள் பலருக்குத் தெரியாம இருக்கலாம்னு நெனச்சேன்.

said...

//மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ - படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி//

சூப்பர்ஸ்டார் டபிள் ஆகிட் கொடுத்த படம்யா அது.இந்தப் பாட்டை சரிதா பாட விஜயசாந்தி அபினயம் புடிச்சிருப்பாங்க.படத்தோட பேரு நெற்றிக்கண்.

"நாளை இந்த வேளை பார்த்து" பாட்டு உமக்குப் புடிக்காதா?

கை எப்படி இருக்கு?

said...

//அப்படியா? சரி...அப்பப் பிடிக்காத சில பாடல்களையும் சொல்லீருங்க கைப்பு. ;-)//

பிடிக்காத பாட்டுன்னு எதுவும் கெடையாது ராகவன். ரொம்ப புடிச்சப் பாட்டே கூட சில சமயத்துல வேறொரு மனநிலையுல இருந்தா கேட்டா அவ்வளவு சுகமா இருக்காது. நீங்க அனுசுயாவுக்குச் சொன்னது போல சில பாடல்களை நான் கேட்டதே இல்லை...உதாரணமா ஜெயச்சந்திரன் பத்தி போட்டிருக்கீங்களே அலைகள் படப்பாட்டு.

//தண்ணீர் தண்ணீர் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர்தான். அச்சமில்லை அச்சமில்லை படத்துக்குத்தான் இசை வி.எஸ்.நரசிம்மன்.//
நீங்க சொல்றது சரி தான்.

//ஓகோ! முத்துலிங்கமா. நல்ல கவிஞர்தான். அன்னைக்கு இளையராஜாவை ஒருவழியா திருப்புகழ் பாட வெச்சாரே!//
இது எப்போ? எதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலயா?

said...

// manasu said...
//4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ - படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி//


நெற்றிக்கண். //

ஆமாம் மனசு. நினைவுக்கு வந்துருச்சு. நெற்றிக்கண்தான் படம்.

said...

// சுதர்சன்.கோபால் said...
//மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ - படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி//

சூப்பர்ஸ்டார் டபிள் ஆகிட் கொடுத்த படம்யா அது.இந்தப் பாட்டை சரிதா பாட விஜயசாந்தி அபினயம் புடிச்சிருப்பாங்க.படத்தோட பேரு நெற்றிக்கண். //

அதே அதே. மனசும் பாட்டைச் சொல்லீட்டாரு. படம் நானும் பாத்திருக்கேன். நல்லாயிருக்கும். ராஜா ராணி ஜாக்கிங்குற குஜால் பாட்டும் ராமனின் மோகனம்-ங்குற காதல் பாட்டும் இந்தப் படத்துலதான்.

// "நாளை இந்த வேளை பார்த்து" பாட்டு உமக்குப் புடிக்காதா? //

கண்டிப்பா பிடிக்கும். அது பிடிக்காம இருக்குமா? அந்த பாட்டு வந்த வருசந்தான் தேசிய விருதுல பின்னணிப்பாடகி விருதும் சேத்தாங்க. அந்த மொத விருந்தும் இந்தப் பாட்டுக்காக பி.சுசீலா வாங்குனாங்க.

// கை எப்படி இருக்கு? //

இப்பத் தேவலாம். ஆனா முழுசாச் சரியாகலை. கைய முழுசா மேல தூக்க முடியாது. இடது கால மடக்கி உக்கார முடியாது. அங்கங்க வலி இருக்கு. ஆனா கஷ்டப்பட்டு என்னுடைய வேலைய நானே செய்ய முடியுது. குறிப்பா வலது கையால சாப்பிட முடியுது. :-))))

said...

// கைப்புள்ள said...
//அப்படியா? சரி...அப்பப் பிடிக்காத சில பாடல்களையும் சொல்லீருங்க கைப்பு. ;-)//

பிடிக்காத பாட்டுன்னு எதுவும் கெடையாது ராகவன். ரொம்ப புடிச்சப் பாட்டே கூட சில சமயத்துல வேறொரு மனநிலையுல இருந்தா கேட்டா அவ்வளவு சுகமா இருக்காது. நீங்க அனுசுயாவுக்குச் சொன்னது போல சில பாடல்களை நான் கேட்டதே இல்லை...உதாரணமா ஜெயச்சந்திரன் பத்தி போட்டிருக்கீங்களே அலைகள் படப்பாட்டு. //

அந்தப் பாட்டு ரொம்ப நல்ல பாட்டு கைப்பு. ஜெயச்சந்திரன் பாடுன மொதப் பாட்டு. கெடைச்சா கேட்டுப் பாருங்க.

பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
உன் கல்யாணம் ஆகாமல் பெண்ணே
புவி காணாமல் போகாது முன்னே

ரொம்ப நல்லாருக்கும்.

// //தண்ணீர் தண்ணீர் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர்தான். அச்சமில்லை அச்சமில்லை படத்துக்குத்தான் இசை வி.எஸ்.நரசிம்மன்.//
நீங்க சொல்றது சரி தான். //

நன்றி. நன்றி.

// //ஓகோ! முத்துலிங்கமா. நல்ல கவிஞர்தான். அன்னைக்கு இளையராஜாவை ஒருவழியா திருப்புகழ் பாட வெச்சாரே!//
இது எப்போ? எதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலயா? //

ஆமா. அது இளையராஜாவோட இசை நிகழ்ச்சி. ராஜ் டீவியில வந்துக்கிட்டு இருந்தது. அதுல திருப்புகழைப் பாடச் சொன்னார். திருவாசகம் போட்டீங்களே. திருப்புகழையும் பாருங்கன்னு. திருப்புகழ் எழுதுன அருணகிரியே அதுக்குத் தாளம் ராகம் எல்லாம் எழுதி வைச்சிருக்காரு. பெரும்பாலும் யாரும் அத மீற மாட்டாங்க. அடிப்படை தாளம் மாறாம மெட்டை மட்டும் கொஞ்சம் முன்னப் பின்ன போடுவாங்க. அந்தத் தாளங்களை மாத்துறது ரொம்பக் கஷ்டம். அத லேசா மாத்திப் பாக்க முயற்சி செஞ்சார் இளையராஜா. சின்ன முயற்சிதான். இதைத் தனி ஆல்பமாகவே இளையராஜா கொண்டு வரனுங்குறது என்னுடைய ஆவல்.

திருப்புகழ் தாளத்தை அப்படியே வெச்சு ரகுமான் ரெண்டு பாட்டு போட்டிருக்காரு தெரியுமா? இன்னும் சொல்லப்போனா இளையராஜாவும் ஒரு பாட்டு போட்டிருக்காரு தெரியுமா?

said...

//குறிப்பா வலது கையால சாப்பிட முடியுது. :-)))) //

ஒடம்பைப் பத்திரமா பார்த்துக்கும்.

//திருப்புகழ் தாளத்தை அப்படியே வெச்சு ரகுமான் ரெண்டு பாட்டு போட்டிருக்காரு தெரியுமா?//

ஒண்ணு "வெற்றிக் கொடி கட்டி-படையப்பா".இரண்டாவது தெரியலையே???

அப்புறம் உம்ம பொறந்ததேதி என்னான்னு ஒரு மயில அனுப்பரது....

said...

// சுதர்சன்.கோபால் said...
//குறிப்பா வலது கையால சாப்பிட முடியுது. :-)))) //

ஒடம்பைப் பத்திரமா பார்த்துக்கும். //

கண்டிப்பாய்யா!

// //திருப்புகழ் தாளத்தை அப்படியே வெச்சு ரகுமான் ரெண்டு பாட்டு போட்டிருக்காரு தெரியுமா?//

ஒண்ணு "வெற்றிக் கொடி கட்டி-படையப்பா".இரண்டாவது தெரியலையே??? //

வெற்றிக்கொடி கட்டுதான் ரெண்டாவது. முத்தைத்தரு பத்தித் திருநகை மெட்டுல அமஞ்சது. மொதப் பாட்டு என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் பாடல். செஞ்சுருட்டி ராகத்தின் அடிப்படையில் நாத விந்து கலாதி நமோ நம பாடலைக் கொண்டு இசையமைத்தது.

இளையராஜா பாட்டு கண்டுபிடிச்சீங்களா? சூப்பர் டூப்பர் பாட்டுங்க அது!

// அப்புறம் உம்ம பொறந்ததேதி என்னான்னு ஒரு மயில அனுப்பரது.... //

இராணுவ ரகசியங்கள மயில்ல அனுப்பச் சொல்றீங்களே! நியாயமா?

said...

//திருப்புகழ் தாளத்தை அப்படியே வெச்சு ரகுமான் ரெண்டு பாட்டு போட்டிருக்காரு தெரியுமா? இன்னும் சொல்லப்போனா இளையராஜாவும் ஒரு பாட்டு போட்டிருக்காரு தெரியுமா?//

தெரியாது...தெரியாது. எல்லாத்தையும் சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்.

//அப்புறம் உம்ம பொறந்ததேதி என்னான்னு ஒரு மயில அனுப்பரது.... //
நீங்க ஜெமினின்னு தெரியும்...அப்போ போன மாசமாத் தான் இருந்திருக்கனும். எப்பொன்னு கேக்கலாம்னு பாத்தா அப்ப நீங்க ஆளையே காணோம். இதையும் சொல்லுங்க...அடுத்த வருஷம் பட்டையைக் கெளப்பிருவோம்.
:)

said...

// கைப்புள்ள said...
//திருப்புகழ் தாளத்தை அப்படியே வெச்சு ரகுமான் ரெண்டு பாட்டு போட்டிருக்காரு தெரியுமா? இன்னும் சொல்லப்போனா இளையராஜாவும் ஒரு பாட்டு போட்டிருக்காரு தெரியுமா?//

தெரியாது...தெரியாது. எல்லாத்தையும் சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம். //

ரகுமான் பாட்டு ரெண்டையும் மேல சொல்லீட்டேன். இளையராஜா பாட்ட நீங்க சொல்லனுமே...இளையாராஜா ரசிகராச்சே....சரி. நானே சொல்றேன். மாங்குயிலே பூங்குயிலே பாட்டுதான் அது. ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று திருப்புகழ் அடிப்படையில் அமைந்தது அது.

// //அப்புறம் உம்ம பொறந்ததேதி என்னான்னு ஒரு மயில அனுப்பரது.... //
நீங்க ஜெமினின்னு தெரியும்...அப்போ போன மாசமாத் தான் இருந்திருக்கனும். எப்பொன்னு கேக்கலாம்னு பாத்தா அப்ப நீங்க ஆளையே காணோம். இதையும் சொல்லுங்க...அடுத்த வருஷம் பட்டையைக் கெளப்பிருவோம்.
:) //

ஜெமினீன்னு எப்படிச் சொல்றீங்க? இந்த விஷயத்த எங்க பிடிச்சீங்கன்னு சொல்லுங்க பாப்போம்.

நான் பொறந்த நாள் கொண்டாடுறது இல்லைன்னு கொள்கை வெச்சிருக்கேன். ஆகையால பொறந்த நாளச் சொல்லாம இருக்குறதுதான் நல்லது.

said...

//இளையராஜா பாட்ட நீங்க சொல்லனுமே...இளையாராஜா ரசிகராச்சே....சரி. நானே சொல்றேன். மாங்குயிலே பூங்குயிலே பாட்டுதான் அது. ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று திருப்புகழ் அடிப்படையில் அமைந்தது அது.//
ராஜா ரசிகருங்கிறது உண்மை தான். அதுக்காக நீங்க இப்படி டெக்னிகல் டெர்ம்ஸ் எல்லாம் எடுத்து வுட்டா எனக்கு எப்படி தெரியும்? எதோ எங்க லெவலுக்குக் கேளுங்க...முயற்சி மாட்தானு.
:)

//ஜெமினீன்னு எப்படிச் சொல்றீங்க? இந்த விஷயத்த எங்க பிடிச்சீங்கன்னு சொல்லுங்க பாப்போம்.//
இங்கே தான் - http://www.blogger.com/profile/9038000. ஸ்கூல்ல சேர்றதுக்காகக் குடுத்த தேதின்னு சொல்லிடாதீங்க.

//நான் பொறந்த நாள் கொண்டாடுறது இல்லைன்னு கொள்கை வெச்சிருக்கேன். ஆகையால பொறந்த நாளச் சொல்லாம இருக்குறதுதான் நல்லது//
உங்க கொள்கைக்கு மதிப்பு குடுக்கறேன்
:)

said...

அனைவருக்கும் இசைவான இசையாறு இட்டிருக்கிறீர்கள் ! நீங்களே குறிப்பிட்டது போல சுட்டிகளை இணைத்திருந்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அடிபட்டது கை என்றாலும் துள்ளுகின்ற மனதை திறந்து விட்டீர்கள்! விரைவில் முழுநலம் மீள வாழ்த்துக்கள்!

said...

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் பாடல் ஒரு தெய்வம் தந்த பூவே..... கேட்க கேட்க சுவைக்கும் பாடல்.
இராகவன் அண்ணா வழமைபோல உங்கள் தெரிவுகள் உங்களைப் போலவே முத்து முத்தான தெரிவுகள்.....

பெங்களூர்சாலையில் முட்டி மோதிய கை இப்ப எப்பிடி இருக்கு இராகவன் அண்ணா? எல்லாம் வெல்லலாம் இறைவன் கருணையால்....

said...

ராகவன்,

இந்த பாடல்கள் டவுண்லோடு சமாச்சாரம் எனக்கும் தெரியாது.

இங்க நிறைய ஆட்களை தெரிந்தவாகள்இருக்கிறார்கள்.அவர்களை கேட்போம்.எனக்கும் தேவைப்படுகிறது.

said...

பொதுவா எல்லாமே நல்ல பாடல்கள். சிலது கேட்டதில்லை / கேட்ட ஞாபகமில்லை. தேடிக் கேட்க முயல்கிறேன்.

said...

இராகவன்,
நல்ல பாடல் தேர்வுகள். நீங்கள் குறிப்பிட்டுள்ள சில பாடல்கள் நான் இதுவரை அறியாதவை. இனித்தான் கேட்க வேண்டும். அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

/* எனக்கு இப்பொழுது இருக்கும் மனநிலையில் ஆழ்மையான பதிவு இட மனமில்லை. */

உங்கள் மனக்குறைகள் விரைவில் நீங்கி மனதில் சாந்தி நிலவ இறைவனை வணங்கி நிற்கிறேன்.

said...

// மணியன் said...
அனைவருக்கும் இசைவான இசையாறு இட்டிருக்கிறீர்கள் ! நீங்களே குறிப்பிட்டது போல சுட்டிகளை இணைத்திருந்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அடிபட்டது கை என்றாலும் துள்ளுகின்ற மனதை திறந்து விட்டீர்கள்! விரைவில் முழுநலம் மீள வாழ்த்துக்கள்! //

நன்றி மணியன். கை இப்போக் கொஞ்சம் தேவலாம். அதுனாலதான் இவ்வளவு அடிக்க முடியுது. இன்னும் ஒன்னு ரெண்டு நாள்தான் கைத்தொட்டில். அப்புறம் அதுக்கு ஒய்வுதான்.

said...

// mayooresan மயூரேசன் said...
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் பாடல் ஒரு தெய்வம் தந்த பூவே..... கேட்க கேட்க சுவைக்கும் பாடல்.//

உண்மைதான் மயூரேசன். மிகச் சிறப்பான பாடல். அதே போல விடை கொடு எங்கள் நாடே பாடலும் மிகச் சோகமான சிறப்பு. மெல்லிசை மன்னர் குரலில் கரகரவென்றாலும் சுருதி பேதமின்றி பாவக் குறைவுமின்றி சோகத்தோடு தொடங்கி கேகேயும் விநாயகமும் கொண்டு செல்லும் பொழுது கண்ணில் ரெண்டு சொட்டாவது வரும் நெஞ்சில் ஈரமுள்ள தமிழருக்கு. மொழியறியாத என்னுடைய வங்க நண்பர்கள் கூட விரும்பிய பாடல் இது. குறிப்பாக விஸ்வநாதன் குரல் அவர்களைக் கவர்ந்தது என்பது மிக வியப்பே. அதே போல அவர்கள் ரசிக்கும் மற்றொரு பாடல் வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே.

// இராகவன் அண்ணா வழமைபோல உங்கள் தெரிவுகள் உங்களைப் போலவே முத்து முத்தான தெரிவுகள்..... //

வாங்க மயூரேசன் தம்பி. என்னை அண்ணனாக்கீட்டீங்களே. அப்ப நீங்க தம்பிதான. அது என்னவோ எதோ தெரியலை....என்னுடைய நண்பனுடைய தம்பி...அவன் அண்ணனைக் கூட அண்ணா என்று கூப்பிட மாட்டான். என்னைப் போய் அண்ணா அண்ணா என்பான். நேற்று கூட இன்னொரு நண்பன் அவனை ஏன் வரிக்கு வரி அண்ணா போட்டு என்னை அழைக்கிறான் என்று அவனிடமே கேட்டு விட்டான். அதுக்கு அவன் அப்படிக் கூப்பிடப் பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லீட்டான். நானும் வரிக்கு வரி அண்ணா போடாத...கேக்குறதுக்குச் செயற்கையா இருக்கும்னு சொன்னேன்.

// பெங்களூர்சாலையில் முட்டி மோதிய கை இப்ப எப்பிடி இருக்கு இராகவன் அண்ணா? எல்லாம் வெல்லலாம் இறைவன் கருணையால்.... //

பெங்களூர்ல எனக்கு இந்த மாதிரி ஆனதில்லையே. மூனு நாலு மாசம்னு சென்னைக்கு வந்தேன். வந்த எடத்துல பரிசு இப்படி. ஆகஸ்டு முடிஞ்சதும் பெங்களூரப் பாத்து மூட்டையக் கட்ட வேண்டியதுதான்.

said...

// முத்து(தமிழினி) said...
ராகவன்,

இந்த பாடல்கள் டவுண்லோடு சமாச்சாரம் எனக்கும் தெரியாது.

இங்க நிறைய ஆட்களை தெரிந்தவாகள்இருக்கிறார்கள்.அவர்களை கேட்போம்.எனக்கும் தேவைப்படுகிறது. //

அதான முத்து...இங்கயே கேட்டுப் பாப்போம்.

ஐயாமார்களே! அம்மாமார்களே! அண்ணர்மார்களே! அக்காமார்களே! தம்பிமார்களே! தங்கச்சிமார்களே! மற்றும் கூட்டத்துல இருக்குறவங்களே! இல்லாதவங்களே! தெரியாத்தனமா ஒரு பட்டியல் போட்டுட்டேன். ஆனா இந்தப் பாட்டுகள எல்லாம் கேக்குறதுக்கும்...இறக்குமதி பண்றதுக்கும் ஏதாவது வழி இருந்தாப் போடுங்கம்மா..சீச்சீ சொல்லுங்கம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ!

said...

// இலவசக்கொத்தனார் said...
பொதுவா எல்லாமே நல்ல பாடல்கள். சிலது கேட்டதில்லை / கேட்ட ஞாபகமில்லை. தேடிக் கேட்க முயல்கிறேன். //

என்ன கொத்சு...சிலது கேட்டதில்லையா? அதெல்லாம் எந்தப் பாட்டுக? தொடுப்பு கிடுப்பு கெடச்சாக் குடுங்களேன்.

said...

// வெற்றி said...
இராகவன்,
நல்ல பாடல் தேர்வுகள். நீங்கள் குறிப்பிட்டுள்ள சில பாடல்கள் நான் இதுவரை அறியாதவை. இனித்தான் கேட்க வேண்டும். அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. //

வெற்றி, நான் குறிப்பிட்ட பாடல்களில் எதையாவது இதுவரை கேட்டதில்லை என்றால் கண்டிப்பாக தேடிக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். நான் குறிப்பிட மறந்த இன்னொரு பாடல் "வான் நிலா நிலா அல்ல. உன் வாலிபம் நிலா"

// /* எனக்கு இப்பொழுது இருக்கும் மனநிலையில் ஆழ்மையான பதிவு இட மனமில்லை. */

உங்கள் மனக்குறைகள் விரைவில் நீங்கி மனதில் சாந்தி நிலவ இறைவனை வணங்கி நிற்கிறேன். //

மிக நன்றி வெற்றி.

said...

இராகவன்,

எப்படி இவ்வளவு பழய படங்களை ட்ராக் வைத்துள்ளீர்கள்?

பாலும்(இசையும்), தேனும்(இனிமையும்) ஓடும் ஆறில் குளிக்க லேட்டானாலும் லேட்டஸ்ட் தான்.
ஒவ்வொரு ஆறும் அருமை.

said...

என்ன இராகவன்? நீங்களும் கேட்டதில் பிடித்தது போடத் தொடங்கிவிட்டீர்களா? :-)

இசையாறுகள் நன்றாக இருக்கின்றன.

//எனக்கு இப்பொழுது இருக்கும் மனநிலையில் ஆழ்மையான பதிவு இட மனமில்லை. //

?????

said...

முத்து, பாட்டுங்க மட்டுமா?

ஜி.ரா வோட டேஸ்ட்டே தனிதான்..

பின்னி பெடலெடுத்திட்டீங்க.. ச்சை. இந்த ஃப்ரேஸ் இதுக்கு பொருந்தாதோ.. சரி ஏதோ ஒன்னு..

சூப்பர் டேஸ்ட் ராகவன் ஒங்களுக்கு.

said...

ராகவன்
நல்ல தேர்வுகள்
எனக்கும் பிடித்தவையே.

said...

// குமரன் (Kumaran) said...
என்ன இராகவன்? நீங்களும் கேட்டதில் பிடித்தது போடத் தொடங்கிவிட்டீர்களா? :-)

இசையாறுகள் நன்றாக இருக்கின்றன. //

பின்னே ஆறு பதிவு போடக் கூப்பிட்டது நீங்கதானே. அதான். பாட்டுகள் பிடிச்சிருக்கா? தெரியுமா?

said...

// tbr.joseph said...
முத்து, பாட்டுங்க மட்டுமா? //

அப்புறம் வேறென்ன சார்?

// ஜி.ரா வோட டேஸ்ட்டே தனிதான்..

பின்னி பெடலெடுத்திட்டீங்க.. ச்சை. இந்த ஃப்ரேஸ் இதுக்கு பொருந்தாதோ.. சரி ஏதோ ஒன்னு..

சூப்பர் டேஸ்ட் ராகவன் ஒங்களுக்கு. //

நன்றி சார். பொதுவா விலக்கு இல்லை. கேட்டாப் பிடிக்கனும். ஆனா கேட்டா எது பிடிக்குங்குறது நம்ம ரசனையைப் பொறுத்துத்தான அமையும். இல்லையா?

said...

// Chandravathanaa said...
ராகவன்
நல்ல தேர்வுகள்
எனக்கும் பிடித்தவையே. //

நன்றி சந்திரவதனா, முன்பெல்லாம் நீங்களும் பாட்டு போடுவீர்களே. இப்பொழுதெல்லாம் இல்லையே. ஏன்?

said...

//ரகசியமானது காதல் மிக மிக....//

இந்த பாட்டு லொக்கேஷனுக்காகவே பார்க்கலாம்... மழை ஈரத்தில் இந்த மேற்கு தொடர்ச்சி மலை ரொம்ப அழகாகவே இருக்கும்.

புன்னகை மன்னன் தீம் மியுசிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

மொத்ததில் அத்தனையும் அருமையான ஆறு.

said...

உங்களுக்குப் பிடித்த பாடல்கள் எனக்கும் பிடித்தவையே!

அதிலும் இந்த "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!" பாடலை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

தாலாட்டும் இசையாறு.

said...

//கண்ணில் ரெண்டு சொட்டாவது வரும் நெஞ்சில் ஈரமுள்ள தமிழருக்கு.//
படம் பார்க்கும் போது என்னை அறியாமலேயே கண்ணில் சில துளிகள். அடடா மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என எண்ணிக்கொண்டு திரும்பி பார்க்கும்போது அம்மா கண்ணிலும் கண்ணீர். சினிமாவை தீவிரமாக வெறுப்பவர் கண்ணிலேயே கண்ணீரா அப்போ நான் சில துளிகள் சிநதியது பரவாயில்லைதானே?


//ஆகஸ்டு முடிஞ்சதும் பெங்களூரப் பாத்து மூட்டையக் கட்ட வேண்டியதுதான்//
ஆமா ஆமா சீக்கிரம் ஓடிடுங்க... தமிழ்நாடு ஒத்துக்கல போல....

//அவன் அண்ணனைக் கூட அண்ணா என்று கூப்பிட மாட்டான்.//
தப்பா எடுக்காதீங்க!
நான் பார்த்தவரையில் தமிழக தமிழர்கள் மரியாதையில்லாமல் பேசுவது அதிகம். குறிப்பாக குட்டி சிறார்களுடன். வா! போ! என்று பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல கீழ்மட்ட வேலைசெய்யும் தொழலாளிகளுடன் குறிப்பாக சமையல் காரன் பொன்றோருடன். (எனது மாமா பிரபல தமிழ்நாடு சைவ உணவகத்தின் இலங்கை கொழும்பு கிளையில் எம் டியாக உள்ளார். அங்குதான் சமையல் காரரை எப்படி இந்திய மானேஜர் நடத்துகின்றார் என்று பார்த்தேன்.) குப்பைக் காரனைக் கூட வாங்க என்று தான் நான் கதைப்பேன்.......

said...

// விடாதுகறுப்பு said...
உங்களுக்குப் பிடித்த பாடல்கள் எனக்கும் பிடித்தவையே!

அதிலும் இந்த "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!" பாடலை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

தாலாட்டும் இசையாறு. //

வாங்க கருப்பு. நம்ம பதிவுக்கு வருகை தந்திருக்கீங்க.

அழகன் முருகனிடம் பாட்டு உங்களுக்கும் பிடித்ததில் மெத்த மகிழ்ச்சி. மிகவும் அருமையான பாடல். இசையரசி பி.சுசீலாவின் இனிய குரலாட்சியில் சுவைக்கும் பாடல் அது. விஜயலட்சுமின் நடனத்தில் படமாக்கலும் நன்றாகவே இருக்கும்.

said...

// mayooresan மயூரேசன் said...
//கண்ணில் ரெண்டு சொட்டாவது வரும் நெஞ்சில் ஈரமுள்ள தமிழருக்கு.//
படம் பார்க்கும் போது என்னை அறியாமலேயே கண்ணில் சில துளிகள். அடடா மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என எண்ணிக்கொண்டு திரும்பி பார்க்கும்போது அம்மா கண்ணிலும் கண்ணீர். சினிமாவை தீவிரமாக வெறுப்பவர் கண்ணிலேயே கண்ணீரா அப்போ நான் சில துளிகள் சிநதியது பரவாயில்லைதானே? //

நீங்கள் கண்ணீர் சிந்தியதுதான் இயல்பு. தவறேயில்லை. உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லாத நிலையில், நம்மோடு தொடர்புடைய உண்மையே கண் முன்னே ஓடுகையில் கண்ணீர் சிந்துவது இயற்கை. அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புண்கண்ணீர் பூசல்தரும்.


// //ஆகஸ்டு முடிஞ்சதும் பெங்களூரப் பாத்து மூட்டையக் கட்ட வேண்டியதுதான்//
ஆமா ஆமா சீக்கிரம் ஓடிடுங்க... தமிழ்நாடு ஒத்துக்கல போல.... //

:-) தமிழனுக்குத் தமிழ்நாடு ஒத்துக்கலைன்னு கர்நாடகாவுக்கு ஓட வேண்டியிருக்கு பாத்தீங்களா! :-)))))))))

// //அவன் அண்ணனைக் கூட அண்ணா என்று கூப்பிட மாட்டான்.//
தப்பா எடுக்காதீங்க!
நான் பார்த்தவரையில் தமிழக தமிழர்கள் மரியாதையில்லாமல் பேசுவது அதிகம். குறிப்பாக குட்டி சிறார்களுடன். வா! போ! என்று பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல கீழ்மட்ட வேலைசெய்யும் தொழலாளிகளுடன் குறிப்பாக சமையல் காரன் பொன்றோருடன். (எனது மாமா பிரபல தமிழ்நாடு சைவ உணவகத்தின் இலங்கை கொழும்பு கிளையில் எம் டியாக உள்ளார். அங்குதான் சமையல் காரரை எப்படி இந்திய மானேஜர் நடத்துகின்றார் என்று பார்த்தேன்.) குப்பைக் காரனைக் கூட வாங்க என்று தான் நான் கதைப்பேன்....... //

சென்னை வந்த பிறகு இதை நானும் உணர்ந்து கொண்டேன். மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த மரியாதை மலையாளத்தில் மொழியிலேயே போய் விட்டது. களிஞ்ஞோ-வை மரியாதையாகவும் மரியாதை இல்லாமலும் பயன்படுத்தலாம். தமிழில் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் மனதில் போய் விட்டது என்றே நான் கருதுகிறேன். என்னுடைய ஒற்றைக்கை அனுபவங்களை எழுதலாம் என இருக்கிறேன். அதில் சில வேதனையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

said...

இராகவன்,

ஏற்கெனவே நான் ஒருமுறை உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டுப் பின்னூட்டமும் இட்ட ஞாபகம்..

இன்னொரு விஷயம்... நீங்கள் என் வகுப்புத்தோழன் மீனாட்சி சுந்தரத்துடன் பணிபுரிவது.. அவன் என்னிடம் அவன் நண்பன் ஒருவன் (நீங்கள்) கூறியதாக ஒரு கருத்தினைச் சொன்னான். நான் அனுப்பிய கவிதை ஒன்றினைப் படிக்குங்கால் நீங்கள் அவனிடம் படைப்புக்களைத் தமிழ்மணத்தில் பதிவுசெய்யும்படி சொன்னதாய்... முதலில் நான் நீங்கள் சென்னைவாசி என்று நினைத்திருந்தேன்... ஆனால் இப்பொழுது வலைப்பூவைப் படிக்கும் பொழுது நீங்கள் பெங்களூரா? என்று உள்ளூரக் குழம்பியது நிஜம்... குழப்பம் தெளிந்தது தங்களின் பதில் பின்னூட்டத்தில்.. பெங்களூரூ - மதராஸ் அலுவலகப் பணிமாற்றம் என்று... ('மூணு மாசத்துல பெங்களூரப் பாத்து மூட்ட கட்டிர வேண்டியது தான்')

சரி விஷயத்துக்கு வர்றேன்.. முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

(1) நீங்களும் ஒரு 'சிறந்த' பெயரைக் கொண்டு வழங்கப்பெறுவதற்கு ('இராகவன்' - ஹி ஹி ஹி)
[ஆயினும் தங்களுடைய பெயரில் 'h' என்ற எழுத்து இல்லை ஆங்கிலத்தில்.. ஏன்?]

(2) நல்ல நல்ல பதிவுகளை இட்டு நிறையப் பேருக்கு நிறைய விஷயங்களை அறியத் தருவது..

தங்களுடைய இந்தப் பதிவில் நான் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.. உதாரணத்திற்கு - 'கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்' பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் என்ற விஷயம்...

பின்னூட்டங்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டது, திருப்புகழ் ராகத்தில் இசைப்புயல் இட்ட (1)என் வீட்டுத் தோட்டத்தில் (2) வெற்றிக் கொடிகட்டு பாடல்களும் இசைஞானி இட்ட மாங்குயிலே பூங்குயிலே பாடலும்..

உண்மை பகன்றால் எனக்குச் சங்கீத ஞானம் அறவே இல்லை.. பாடல்களைக் கேட்டு ரசிப்பதோடு சரி.. நீங்கள் நல்ல ஞானம் உள்ளவர் என்று தெரிகிறது...

நீங்கள் 'சுட்டும் விழிச் சுடரே' பாடலைப் பாடியவர்கள் பட்டியலில் '
ஹரிஹரன்' என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. அதைப் பாடியது - ஸ்ரீராம் பார்த்தசாரதி (எளங்காத்து வீசுதே பாடலைப் பாடியவர் - விஜய் டிவி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் ஒருமுறை
கலந்துகொண்டார்). மற்றவை சரியே.

[சிறு தகவல்: அந்தப் பாடலின் வரிகளை நீங்கள் இந்தச் சுட்டியில் காணலாம்.]

நீங்கள் சொன்னது போல் நானும் திரையிசைப் பாடல்கள், பக்திப் பாடல்களை ஒலிநாடா வடிவிலும் , குறுந்தகடு வடிவிலும் வாங்குபவன். தற்பொழுது அதன் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது.. அவ்வப்பொழுது தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி.. (தொலைக்காட்சி பார்ப்பதுவும் குறைந்து விட்டது ;-)).

நிறையத் தட்டச்சு செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்.. உங்களுடன் நிறையப் பேச வேண்டும் தோழா..

உங்களுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய பின்னூட்டம் பற்றியும் பேசிகிறேன்..

தொடரும்..
(உங்க பாணி மாதிரியே இருக்கா..)

said...

// இராகவன் (எ) சரவணன் said...
இராகவன்,

ஏற்கெனவே நான் ஒருமுறை உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டுப் பின்னூட்டமும் இட்ட ஞாபகம்.. //

ஆமாம். நினைவிருக்கிறது.

// இன்னொரு விஷயம்... நீங்கள் என் வகுப்புத்தோழன் மீனாட்சி சுந்தரத்துடன் பணிபுரிவது.. அவன் என்னிடம் அவன் நண்பன் ஒருவன் (நீங்கள்) கூறியதாக ஒரு கருத்தினைச் சொன்னான். நான் அனுப்பிய கவிதை ஒன்றினைப் படிக்குங்கால் நீங்கள் அவனிடம் படைப்புக்களைத் தமிழ்மணத்தில் பதிவுசெய்யும்படி சொன்னதாய்...//

ஆமாம் சொன்னேன். உடனே அவனும் உங்களுக்கு மயில் அனுப்பினானே....

// முதலில் நான் நீங்கள் சென்னைவாசி என்று நினைத்திருந்தேன்... ஆனால் இப்பொழுது வலைப்பூவைப் படிக்கும் பொழுது நீங்கள் பெங்களூரா? என்று உள்ளூரக் குழம்பியது நிஜம்... குழப்பம் தெளிந்தது தங்களின் பதில் பின்னூட்டத்தில்.. பெங்களூரூ - மதராஸ் அலுவலகப் பணிமாற்றம் என்று... ('மூணு மாசத்துல பெங்களூரப் பாத்து மூட்ட கட்டிர வேண்டியது தான்') //

:-)

// சரி விஷயத்துக்கு வர்றேன்.. முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

(1) நீங்களும் ஒரு 'சிறந்த' பெயரைக் கொண்டு வழங்கப்பெறுவதற்கு ('இராகவன்' - ஹி ஹி ஹி)
[ஆயினும் தங்களுடைய பெயரில் 'h' என்ற எழுத்து இல்லை ஆங்கிலத்தில்.. ஏன்?]

(2) நல்ல நல்ல பதிவுகளை இட்டு நிறையப் பேருக்கு நிறைய விஷயங்களை அறியத் தருவது.. //

முதல் பாயிண்ட் சரி. ரெண்டாவது பாயிண்ட் இடிக்குதே....

// தங்களுடைய இந்தப் பதிவில் நான் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.. உதாரணத்திற்கு - 'கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்' பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் என்ற விஷயம்...

பின்னூட்டங்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டது, திருப்புகழ் ராகத்தில் இசைப்புயல் இட்ட (1)என் வீட்டுத் தோட்டத்தில் (2) வெற்றிக் கொடிகட்டு பாடல்களும் இசைஞானி இட்ட மாங்குயிலே பூங்குயிலே பாடலும்..

உண்மை பகன்றால் எனக்குச் சங்கீத ஞானம் அறவே இல்லை.. பாடல்களைக் கேட்டு ரசிப்பதோடு சரி.. நீங்கள் நல்ல ஞானம் உள்ளவர் என்று தெரிகிறது... //

கேள்வி ஞானந்தான். அதாவது கேக்குற ஞானம். அப்பப்போ தானா உக்காந்து பாடுற ஞானம். அவ்வளவுதான்.

// நீங்கள் 'சுட்டும் விழிச் சுடரே' பாடலைப் பாடியவர்கள் பட்டியலில் '
ஹரிஹரன்' என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. அதைப் பாடியது - ஸ்ரீராம் பார்த்தசாரதி (எளங்காத்து வீசுதே பாடலைப் பாடியவர் - விஜய் டிவி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் ஒருமுறை
கலந்துகொண்டார்). மற்றவை சரியே. //

ஆமாம். அது ஹரிஹரன் அல்ல. ஸ்ரீராம் பார்த்தசாரதி. சரிப்படுத்தியமைக்கு நன்றி.

// [சிறு தகவல்: அந்தப் பாடலின் வரிகளை நீங்கள் இந்தச் சுட்டியில் காணலாம்.]

நீங்கள் சொன்னது போல் நானும் திரையிசைப் பாடல்கள், பக்திப் பாடல்களை ஒலிநாடா வடிவிலும் , குறுந்தகடு வடிவிலும் வாங்குபவன். தற்பொழுது அதன் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது.. அவ்வப்பொழுது தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி.. (தொலைக்காட்சி பார்ப்பதுவும் குறைந்து விட்டது ;-)).

நிறையத் தட்டச்சு செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்.. உங்களுடன் நிறையப் பேச வேண்டும் தோழா.. //

கண்டிப்பாகப் பேசலாம். பேச என்ன கசக்குதா! :-)

// உங்களுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய பின்னூட்டம் பற்றியும் பேசிகிறேன்.. //

பேசுங்க பேசுங்க

// தொடரும்..
(உங்க பாணி மாதிரியே இருக்கா..) //

:-)

said...

//ஆமாம் சொன்னேன். உடனே அவனும் உங்களுக்கு மயில் அனுப்பினானே....//

ஆமாங்கோ.. ஆமாங்கோ...

நீங்கள் தற்பொழுது எங்கே வசிக்கிறீர்கள் சென்னையில்..?

//முதல் பாயிண்ட் சரி. ரெண்டாவது பாயிண்ட் இடிக்குதே....//

அது என்னங்க அது.. புடிச்சாலும் புடிக்காட்டியும் சூரியன் கிழக்கே தான் உதிக்குது..

//கேள்வி ஞானந்தான். அதாவது கேக்குற ஞானம். அப்பப்போ தானா உக்காந்து பாடுற ஞானம். அவ்வளவுதான்.//

கேள்வி ஞானமே இவ்வளவா? வியந்து நிற்கிறேன் சிலையாய்.. உண்மையிலேயே.. நானுந்தேன் பாடுறேன் (எனக்காக மட்டும் ;-))

//கண்டிப்பாகப் பேசலாம். பேச என்ன கசக்குதா! :-)//

பேசத் தானே போறேன்.. ஆனால் பாருங்க திடீருனு ஒரு டெலிவரி. ;-) இடைவெளி ஏற்படலாம்! முன்கூட்டியே சொல்கிறேன்..

//பேசுங்க பேசுங்க//
நீங்க சொன்னது போல நான் இந்த வருடம் என் பிறந்த நாளை (25வது பிறந்த நாளுங்கோ) கொண்டாட விரும்பவில்லை. ஏனென்று தெரியவில்லை..திடீரென்று தோன்றிற்று..

எனினும்.. ஒவ்வொருவருக்கும் அது விசேட நாள் என்பது என் தாழ்மையான கருத்து..அவரவர் இந்த அவனியில் அவதரித்த நாளல்லாவா?

:-)
தொடரும் - அப்படின்னு நீங்க உங்க வலைப்பூக்களில் போடறீங்கள்ல.. அதான்....