Thursday, November 30, 2006

ராகவன் நிறுத்திய தேர்தல்

பெரிய இரும்புக் கதவுக்கு முன்னாடி ரொம்பப் பேரு கூட்டமா இருந்தாங்க. சன், ஜெயா, விஜய், ராஜ் அது இதுன்னூ ஊர்ப்பட்ட டீவிக்காரங்க கூட்டம் வேற. ஆனா இரும்புக் கதவு மூடியிருக்கு. அதுக்குப் போலீஸ் காவல் வேற. அப்பத்தான் ராகவனோட கார் வருது. சர்ருன்னு பின்னாடியே ரெண்டு காருக. ஒடனே இரும்புக் கதவு தெறக்குது. ஆனா வந்த மூனு காருகளத் தவிர வேற யாரும் உள்ள நொழைய முடியலை. காருங்க உள்ள போனதும் கதவு மூடிருது.

காருக்குள்ள இருந்து இறங்குனது ராகவந்தான். உருண்ட மொகம். மொட்டைத்(அல்லது சொட்டை) தலை. கண்ணாடி வேற. கார்ல இருந்து எறங்கி விடுவிடுன்னு உள்ள போறாரு. போனவரு உள்ள ஏற்கனவே இருந்தவங்களையெல்லாம் கூட்டி வெச்சித் தேர்தலைத் தள்ளி வெச்சிட்டதா சொல்றாரு.

ஏனாம்? தேர்தல்ல கலந்து கிட்ட வேட்பாளர்கள்ள கிட்டத்தட்ட எல்லாக் கட்சீல இருந்தும் பலர் கொலயாயிருக்காங்களே! அமைச்சர் உட்பட. அப்புறம் எப்படித் தேர்தலை நடத்துறதாம்?

என்ன படிக்கிறவங்களுக்குக் கிறுகிறுங்குதா? எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சி உப்புப் போட்டு சோடா ஊத்தி பௌன்ஸ் குடிக்கனும் போல இருக்கா? இதப் படிக்கிற ஒங்களுக்கே இப்படியிருக்குன்னா...படத்தப் பாத்த எனக்கு எப்படி இருக்கும்! அதாங்க சிவப்பதிகாரம் படந்தான். அதுல இப்பல்லாம் படத்துல முக்கிய பாத்திரங்களுக்கு ராகவன்னு பேரு வெக்கிறது ஒரு ஃபாஷன் போல. இந்தப் படத்துல தேர்தல் ஆணையருக்குப் பேரு ராகவன். அவரு முக்கியப் பாத்திரமோ இல்லையோ...படத்தப் பாத்து எழுந்திரிச்சி ஓட முடியாம முக்கியப் பாத்திரம் நானு.

படத்தப் பாத்துட்டு "ஏதாவது செய்யனும்னு" முடிவோடதான் இந்தப் பதிவைப் போடுறேன். ஏன்னா கதாநாயகரு ஏதாவது செய்யனும்னு சொல்லித்தான் படத்த முடிச்சி வெக்கிறாரு.அதுல பாருங்க இந்தக் கதாநாயகருதான் அத்தன பேரையும் கொன்னது. அதுலயும் எல்லாரும் இருக்குற எடத்துல கையில கத்திய தெளிவாக் காட்டிக்கிட்டே போயி....."கொலை வாளினை எடடா"ன்னு பாவேந்தர் பாட்டோட பின்னணியில ஒவ்வொருத்தரையா குத்திக் கொல செஞ்சிட்டு...நின்னு நிதானமா...சாவகாசமா நடந்து போய் தப்பிக்கிறாராம். அதுவும் ஒன்னு ரெண்டு இல்ல...கிட்டத்தட்ட அறுவதுக்கும் மேல.

ஏன் எதுக்குங்குறதுதான் கதை. ஆனா அதச் சொன்ன விதம் இருக்குதே...நமக்கே "கொலை வாளினை எடடா"ன்னு தோணும். அந்த அளவுக்குச் செஞ்சிருக்காங்க. அதுலயும் பாரதிதாசனோட அந்தப் பாட்டுக்கு இசையமைச்ச விதம் இருக்குதே...அடடா! அதப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டுத்தான் அப்பவே அவரு "கொலை வாளினை எடடா"ன்னு எழுதீட்டாரோ என்னவோ. பாவேந்தரோட பாட்டுகள் திரைப்படத்துல இவ்வளவு மோசமா இசையமைக்கப்பட்டது இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறேன். துன்பம் நேர்கையில் பாட்டு இத்தன வருசத்துக்கு அப்புறமும் கேக்க எவ்வளவு இனிமையா இருக்கு. மெல்லிசை மன்னர் இசையமைச்ச "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாட்டு. அப்புறம் கலங்கரை விளக்கத்துல வருமே "சங்கே முழங்கு சங்கே முழங்கு"ன்னு மெல்லிசை மன்னர் இசையில சீர்காழியும் இசையரசி பி.சுசீலாவும் பாடுவாங்களே. அப்புறம் சங்கர்-கணேஷ் கூட "சித்திரச் சோலைகளை உம்மை இங்கு திருத்த இப்பாரினிலே எத்தனை எத்தனை வீரர்கள் இரத்தம் சொரிந்தனரோ"ன்னு அருமையாத்தாங்க போட்டிருந்தாரு. வித்யாசாகருதான்.......சிவப்பதிகாரத்துல இப்பிடி.....ஏன் வித்யாசாகர்? பாட்டு புரியலையா? காதிலா வரிகளே விழாத அளவுக்கு இரைச்சல்.

சரி. இந்தப் பாட்டுதான் இப்பிடி. மத்த பாட்டுங்க? படத்தோட மொதப் பாதியில ரகுவரன் அவரோட பட்டிக்காட்டுக்கு வர்ராரு. அவரோட நாட்டுப்புறப் பாட்டு ஆய்வுக்கு உதவுற மாதிரி விஷாலும் அந்த ஊருக்கு வர்ராரு. அப்ப ரகுவரனோட மகளுக்கு விஷால் மேல காதல் வருது. இதுதாங்க இடைவேளை வரைக்கும் நடக்குது. அதுவே இழு இழுன்னு இழுத்ததுன்னா...பாட்டுங்க அழு அழுன்னு அழுத்துதுங்க. வெங்கலத் தொண்டை, பாரித் தொண்டை, கீரித் தொண்டை, வெள்ளித் தொண்டைன்னு ஒவ்வொரு தொண்டையும் விளக்குறப்போ நமக்கே தொண்டத் தண்ணி வத்திப் போகுது. உள்ளபடி சொன்னா நல்லா செஞ்சிருக்க வேண்டிய காட்சி அது.

அப்புறம் அறுவடைக்கு ஒரு பாட்டு. டி.கே.கலா குரல்ல தொடங்குது. உண்மையிலே நல்ல குரல். நாட்டுப் பாட்டுக்குப் பொருத்தமான பிருகாக் குரலு. ரகுமான் கூட இவர "குளிச்சா குத்தாலம்", "எதுக்குப் பொண்டாட்டி", "செங்காத்தே"ன்னு நாலஞ்சு பாட்டுக்கும் மேலையே குடுத்திருக்காரு. "போய் வா நதியலையே", "தாயிற் சிறந்த கோயிலுமில்லை"ன்னு பழைய பாட்டெல்லாம் பாடியிருக்காரு. அப்படி அனுபவமுள்ள பாடகர வெச்சிப் பாட வெச்சும் அந்தப் பாட்டு கேக்க முடியலைங்குறதுதான் ரொம்ப வருத்தம். அத விட ஒரு கரகாட்டப் பாட்டு இருக்குதப்பா....ஷர்மிலியும் இன்னொரு பொண்ணும் சேந்து ஆடுறாங்க....பாத்தா கிளுகிளுப்பு வரலை...பயந்தான் வந்தது. வித்யாசாகர் பட்டிக்காட்டுப் பாட்டுன்னா அவ்வளவு லேசாப் போச்சு ஒங்களுக்கு. டைரக்டர் கரு.பழநியப்பன் அவர்களே...உங்களுக்குந்தான்.

ரெண்டு மூனு காதல் பாட்டுகள் வேற. சில்மிஷியேன்னு ஒரு பாட்டு. பா.விஜய்தான் இத எழுதீருக்கனும். கேக்க ஓரளவுக்குச் சுமாரா இருந்துச்சு. ஆனா பாக்க. ம்ம்ம்...அற்றைத் திங்கள் வானத்துலன்னு ஒரு பாட்டு. அதாவது தேன் இருப்பது தேன் கூட்டிலே...பால் இருப்பது பசுமடியிலேன்னு அடுக்கிக்கிட்டே போறாரு. அற்றைத் திங்கள்னா அன்றைய நிலா. அன்றைய நிலா வானத்திலேன்னா..இன்றைய நிலா எங்கேன்னு தெரியலை! கவிஞர்களே உங்களத் திட்டுறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. கொஞ்சம் புதுமையா சிந்திங்க. இல்லைன்னா பழைய பாட்டுகளப் போல எழுதீருங்க. ஏன்னா ஒங்களை விட நல்லா எழுதுறவங்கள பல தமிழ் மன்றங்கள்ளையும் வலைப்பூக்கள்ளயும் சந்திச்சிருக்கேன்.

கதாநாயகரு விஷாலு. நாலாவது படமாம். ஆனா வாயில தமிழ் விலையாடுது. காதுக்குள்ள கோணூசி போகாத குறைய தீர்த்து வைக்குறாரு. அது சரி...தமிழர்களே தமிள் நல்லாப் பேசும் போது இவரு தமில் பேசலாம். தப்பில்லை. நடிப்பு....மொறச்சு மட்டுந்தான் பாக்கத் தெரியும்னு நெனைக்கிறேன். மத்தவங்க என்ன சொல்றாங்களோ தெரியலையே.

என்னடா படத்தப் பத்தி இப்பிடி சொல்லிக் கிட்டே போறானே...நல்லதே இல்லையான்னு கேக்குறீங்களா? இருக்குங்க. ரெண்டு இருக்கு. கஞ்சா கருப்பும் கதாநாயகியும். ரெண்டு பேருமே நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா ரெண்டு பேருக்கும் நடிப்புக்கு வாய்ப்பே இல்லை. இவங்க ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்து நல்ல படங்கள் கிடைக்க வாழ்த்துகள்.

இந்தப் படத்துக்குப் போகனும்னு ஒரு நண்பர் கூப்பிட்டப்போ சிலப்பதிகாரம்னு என்னோட காதுல விழுந்தது. அதெல்லாம் எடுக்க மாட்டாங்களேன்னு நெனச்சப்போ சிவப்பதிகாரம்னு அவரு திருத்தினாரு. சிவப்பான அதிகாரமாம். படம் பாத்தவன் கண்ணுல காதுல மூக்குல கழுத்துல சிவப்பா வழிஞ்சதே அந்தச் சிவப்பதிகாரம் போல!

38 comments:

said...

//...பார்த்தா கிளுகிளுப்பு வரல்லே....பயந்தான் வந்தது....//

...படிச்சப்பவும்தான்!

said...

என்ன இருந்தாலும் இத்தன கோபம் கூடாதுங்க.. இப்டி போட்டு கிழிச்சுட்டீங்க. பதிவ வேற சிவப்புல போட்டு சிவப்பா அதிகாரம் பண்ணிட்டீங்க போங்க.

said...

ம்ம்ம்,
தலைப்பைப் பார்த்ததும், என்னடா தமிழமணத்தின் வாரியாரும் அரசியலில் குதித்து விட்டாரோ என ஓடி வந்தேன்.:)

said...

பார்த்திபன் கனவுன்னு ஒரு தரமான படத்தை குடுத்த இயக்குனரா இப்படி???

said...

//அவரு முக்கியப் பாத்திரமோ இல்லையோ...படத்தப் பாத்து எழுந்திரிச்சி ஓட முடியாம முக்கியப் பாத்திரம் நானு.
//

amazing :-)

said...

//ஏன்னா ஒங்களை விட நல்லா எழுதுறவங்கள பல தமிழ் மன்றங்கள்ளையும் வலைப்பூக்கள்ளயும் சந்திச்சிருக்கேன்.
//

ஹிஹி...

said...

விமர்சனம் அருமை ராகவன்!

நல்ல வேளை நாங்க பிழைச்சோம்!

வல்லவனுக்கு வல்லவன் உண்டுன்னு சொல்லுங்க!

said...

நல்ல வேளை சொன்னீங்க.

said...

வெற்றி, ரொம்ப நாளா பாக்கமுடியலை. எப்ப திரும்பி வந்தீங்க?

said...

//படம் பாத்தவன் கண்ணுல காதுல மூக்குல கழுத்துல சிவப்பா வழிஞ்சதே அந்தச் சிவப்பதிகாரம் போல!//
அதுக்காக சிகப்பு கலர்லயா விமர்சனம் போடனும் :-))

அப்பறம் என்ன அடிக்கடி போட்டோ மாறுது? ;)

said...

சிவப்பதிகாரத்துக்கு இப்படி சிவப்பு பதிவு போட்டு சிவப்பு கார்டு போட்டுட்டீங்களே. இப்போதான் தேவு எதோ படம் பாத்துட்டு அழுதாரு. இப்போ நீங்க.

நல்ல படமா எதனாச்சும் வந்தா சொல்லுங்கப்பா.

said...

ஹா....... இப்படியா இருக்கு?
நான் தப்புவேனா?

said...

// sivagnanamji(#16342789) said...
//...பார்த்தா கிளுகிளுப்பு வரல்லே....பயந்தான் வந்தது....//

...படிச்சப்பவும்தான்! //

சிவஞானம் ஐயா...தியேட்டருக்குள்ள கதவெல்லாம் சாத்தி...எந்திரிச்சி ஓட முடியாத மாதிரி இருந்த எங்க நெலைய யோசிச்சிப் பாருங்க. :-(((((((((

// சிறில் அலெக்ஸ் said...
என்ன இருந்தாலும் இத்தன கோபம் கூடாதுங்க.. இப்டி போட்டு கிழிச்சுட்டீங்க. பதிவ வேற சிவப்புல போட்டு சிவப்பா அதிகாரம் பண்ணிட்டீங்க போங்க. //

நூத்து அறுவது ரூவா சிறில். வீணாப் போச்சு. அத விடக் கொடுமை...கோடிக்கணக்கான மதிப்புள்ள அமைதியும் நிம்மதியும் காணாமப் போச்சு..இன்னமும் அப்பப்ப தூக்கத்துல சிவப்பதிகாரம் பத்தி கெட்ட கெட்ட கனவா வருது. அப்புறம் கிழிக்காம என்ன செய்றது!

said...

// வெற்றி said...
ம்ம்ம்,
தலைப்பைப் பார்த்ததும், என்னடா தமிழமணத்தின் வாரியாரும் அரசியலில் குதித்து விட்டாரோ என ஓடி வந்தேன்.:) //

வெற்றி வந்தாச்சு. வெற்றி வந்தாச்சு. ஆகா...சொல்லும் போதே எவ்வளவு சந்தோசம். வெற்றி வேண்டாம்னு யாரும் சொல்ல முடியுங்களா! :-)

தமிழ்மண வாரியாரா! அவரு மாமனிதர். நான் வெறு மனி-தான். மாவும் இல்லை தர்ரும் இல்லை. :-))))))))))))))))) ஆனால் வாரியார் சுவாமிகள் எனக்கு உளப்பூர்வ ஆசான் என்று சொல்லிக் கொள்வதில் பெரும் பெருமை கொள்கிறேன்.

said...

// தம்பி said...
பார்த்திபன் கனவுன்னு ஒரு தரமான படத்தை குடுத்த இயக்குனரா இப்படி??? //

அதச் சொல்லித்தான் தம்பி என்னைய படத்துக்குக் கூட்டீட்டுப் போயி பொங்கல் வெச்சிட்டாங்க. :-(((((((( நெனைக்க நெனைக்க துக்கம் தொண்டைய அடைக்குது. இப்பத்தான் போயி ஒரு டீய தொண்டைக்குள்ள ஊத்தீட்டு வந்தேன்.

// Udhayakumar said...
//அவரு முக்கியப் பாத்திரமோ இல்லையோ...படத்தப் பாத்து எழுந்திரிச்சி ஓட முடியாம முக்கிய பாத்திரம் நானு.
//

amazing :-) //

என்னய்யா சொல்றீங்க...நான் எழுந்திரிச்சி ஓட முடியாம முக்கிய பாத்திரமா இருந்தது உங்களுக்கு amazingகா? :-(

said...

//இன்னமும் அப்பப்ப தூக்கத்துல சிவப்பதிகாரம் பத்தி கெட்ட கெட்ட கனவா வருது//

இராகவன்,
இதுக்கா கவலைப் படுறீங்க! நம்ம சிம்பு நடிச்ச வல்லவன் பாருங்க!
எல்லாம் சரியாப் போயிடும்!

said...

// நாமக்கல் சிபி @15516963 said...
விமர்சனம் அருமை ராகவன்!

நல்ல வேளை நாங்க பிழைச்சோம்!

வல்லவனுக்கு வல்லவன் உண்டுன்னு சொல்லுங்க! //

நீங்க எல்லாரும் பெழைக்கிறதுக்காக நான் தியாகியாயிருக்கேன். எனக்கு ஒரு செலையோ..இல்லைன்னா நல்ல பட்டமும் பதக்கமும் தருவீங்கன்னு பாத்தா....வல்லவன் சிம்பு நயனதாரான்னு சொல்றீங்களே!

// குமரன் (Kumaran) said...
நல்ல வேளை சொன்னீங்க. //

இல்லைங்க...கெட்ட வேளை. அதான் பாக்க வேண்டியதாப் போச்சு. அதத்தான் சொன்னேன். :-((

said...

// வெட்டிப்பயல் said...
//படம் பாத்தவன் கண்ணுல காதுல மூக்குல கழுத்துல சிவப்பா வழிஞ்சதே அந்தச் சிவப்பதிகாரம் போல!//
அதுக்காக சிகப்பு கலர்லயா விமர்சனம் போடனும் :-)) //

பின்னே என்ன கலர்ல போடுறது? புதுமையாப் படமெடுக்கிறேன்னு இப்பிடிக் குதறித் தள்ளுறத விட நாலு பாட்டு ரெண்டு சண்டை வடிவேலுன்னு படம் எடுக்குறது எவ்வளவொ மேலுன்னு தோணுது.

// அப்பறம் என்ன அடிக்கடி போட்டோ மாறுது? ;) //

போனா போட்டோ சரியில்லைன்னு நம்ம இலவசக் கொத்தனார் சொல்லீட்டாரே. சட்டியில இருக்குறதுதான் அகப்பையில வரும்னு அவருக்குத் தெரியாமப் போச்சு. அதான் கருப்புக் கண்ணாடி போட்டு பாதி மூஞ்சிய மறைச்சுப் படம் போட்டிருக்கேன். :-) இப்பச் சுமாரா இருக்கா?

said...

// இலவசக்கொத்தனார் said...
சிவப்பதிகாரத்துக்கு இப்படி சிவப்பு பதிவு போட்டு சிவப்பு கார்டு போட்டுட்டீங்களே. இப்போதான் தேவு எதோ படம் பாத்துட்டு அழுதாரு. இப்போ நீங்க.

நல்ல படமா எதனாச்சும் வந்தா சொல்லுங்கப்பா. //

என்னத்தச் சொல்றது. டிசம்பர் 16ல Hobbit வருது. Peter jackson இயக்கத்துல. Lord of the ringsக்கு prequel புத்தகம். படிச்சா பிரம்மாதமா இருக்கும். JRR.Tolkienக்கு நான் பரம விசிறியாயிட்டேன். அந்தப் படத்துக்குத்தான் நான் காத்திருக்கேன். டிசம்பர் 16ல இந்தியாவுல வருமான்னு தெரியலையே!

// துளசி கோபால் said...
ஹா....... இப்படியா இருக்கு?
நான் தப்புவேனா? //

டீச்சர். சொல்ல வேண்டியதச் சொல்லீட்டேன். இனிமே உங்க சமத்து. சமயத்துல மாணவர்களும் பாடஞ் சொல்லித் தர வேண்டியிருக்குது பாருங்க!

said...

// நாமக்கல் சிபி @15516963 said...
//இன்னமும் அப்பப்ப தூக்கத்துல சிவப்பதிகாரம் பத்தி கெட்ட கெட்ட கனவா வருது//

இராகவன்,
இதுக்கா கவலைப் படுறீங்க! நம்ம சிம்பு நடிச்ச வல்லவன் பாருங்க!
எல்லாம் சரியாப் போயிடும்! //

சிபியாரே...ஒமக்கு இவ்வளவு வஞ்சகம் நெஞ்சகம் இருக்கும்னு நெனைக்கலை ஐயா. வல்லவன் வெவகாரம் ஏற்கனவே வந்துருச்சு. நான் வல்லவன் பாக்கனும்..ஏற்கனவே பாதித் தூக்கம் சிவப்பதிகாரத்தால போச்சு..மீதி வல்லவனாகப் போகனும்னு தான ஒமக்கு ஆசை. ரொம்ப நல்ல ஆசைதான். மக்களே..இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை.

said...

ஃபோட்டோ பார்த்தேன் : )

அடுத்த தமிழ்ப்பட வில்லன் ரெடி. பந்தாவா இருக்கு : )

said...

.//படம் பாத்தவன் கண்ணுல காதுல மூக்குல கழுத்துல சிவப்பா வழிஞ்சதே அந்தச் சிவப்பதிகாரம் போல!//
ஆஹா. நன்றி

said...

ராகவன்,
நிறைய பேரின் 3 மணி நேரத்தை காத்ததற்கு நன்றி

said...

ராகவன் சார்,
"படத்தப் பாத்துட்டு "ஏதாவது செய்யனும்னு" முடிவோடதான் இந்தப் பதிவைப் போடுறேன்"....

..நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு..

"அதான் கருப்புக் கண்ணாடி போட்டு பாதி மூஞ்சிய மறைச்சுப் படம் போட்டிருக்கேன். :-) இப்பச் சுமாரா இருக்கா?"...

ஆயுத எழுத்து மாதவன் போல இருக்கிங்க....

said...

//Peter jackson இயக்கத்துல. Lord of the ringsக்கு prequel புத்தகம். படிச்சா பிரம்மாதமா இருக்கும். JRR.Tolkienக்கு நான் பரம விசிறியாயிட்டேன்.//

நான் முதலில் படித்தது Hobbittதான். அதுக்கு அப்புறம்தான் LOTR படித்தேன். எனக்கு Hobbitt அளவுக்கு LOTR பிடிக்கவில்லை. என் கருத்து.

said...

ராகவன்,
ஒரு வாரமா என்னடா ஆள் பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்கன்னு கேட்டப்போ கூட உடம்பு சரியில்லைனு சொல்லி மழுப்பிட்டேங்களே...

இவ்வளவு சோகத்தையும் ஒரு வாரமா மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்திருக்கீங்களே.. பாவம்யா நீங்க...

அப்புறம் கேட்க மறந்துட்டேனே வல்லவன் சி.டி இருக்கு வேணுமா? ;)

said...

//நூத்து அறுவது ரூவா சிறில்.//
அடப் பாவமே. கறுப்பா?

// வீணாப் போச்சு. அத விடக் கொடுமை...கோடிக்கணக்கான மதிப்புள்ள அமைதியும் நிம்மதியும் காணாமப் போச்சு..இன்னமும் அப்பப்ப தூக்கத்துல சிவப்பதிகாரம் பத்தி கெட்ட கெட்ட கனவா வருது. அப்புறம் கிழிக்காம என்ன செய்றது! //

ஆகா நம்ம 3 மணி நேரத்தக் காப்பாத்துனீங்க.

said...

சங்கீதத்துக்கு ஒரு சுப்புடுன்னா தமிழ்படத்துக்கு ராகவன்!!

அப்ப திருட்டு சீடியில கூட இத பாக்கக் கூடாதுன்னு சொல்றீங்க..

சரீஈஈ.. கொஞ்சம் வல்லவனையும் பார்த்து எழுதுங்களேன்..

said...

// Boston Bala said...
ஃபோட்டோ பார்த்தேன் : )

அடுத்த தமிழ்ப்பட வில்லன் ரெடி. பந்தாவா இருக்கு : ) //

நன்றி நன்றி. இதத்தான் நான் ஜோசப் சார் கிட்ட சொன்னேன். அவரு எடுக்குற சினிமாவுல நாந்தான் வில்லன்னு. ஆனா அவரு எனக்கு ஒத்து வராதுன்னு சொன்னாரு. இப்ப ஒத்து வருமான்னு கேக்கனும் :-)

என்ன ஜோசப் சார், என்னைய இப்ப வில்லனாப் போட்டா ஒத்து வருமா?

// ILA(a)இளா said...
.//படம் பாத்தவன் கண்ணுல காதுல மூக்குல கழுத்துல சிவப்பா வழிஞ்சதே அந்தச் சிவப்பதிகாரம் போல!//
ஆஹா. நன்றி //

என்னது நன்றியா! அடக்கொடுமையே...நீங்கள்ளாம் தப்பிக்க இப்பிடி ஒரு கொடுமைய அனுபவிச்ச எனக்கு விழா எடுக்காம....ம்ம்ம்..நன்றியாம்..நன்றி. சரி. உங்க நன்றிக்கு ரொம்ப நன்றி.

said...

// ஜோ / Joe said...
ராகவன்,
நிறைய பேரின் 3 மணி நேரத்தை காத்ததற்கு நன்றி //

யூ டு ஜோ :-((((((((((((((((((((

// Gopinath said...

"அதான் கருப்புக் கண்ணாடி போட்டு பாதி மூஞ்சிய மறைச்சுப் படம் போட்டிருக்கேன். :-) இப்பச் சுமாரா இருக்கா?"...

ஆயுத எழுத்து மாதவன் போல இருக்கிங்க.... //

வாங்க கோபிநாத். அந்தப் படத்துல மாதவந்தான் வில்லன்னு சொல்லாமச் சொல்றீங்க. ;-) எனக்கும் வில்லன் ரோல்தான் வேணும். அதுதான் சூப்பரு.

said...

// இலவசக்கொத்தனார் said...
//Peter jackson இயக்கத்துல. Lord of the ringsக்கு prequel புத்தகம். படிச்சா பிரம்மாதமா இருக்கும். JRR.Tolkienக்கு நான் பரம விசிறியாயிட்டேன்.//

நான் முதலில் படித்தது Hobbittதான். அதுக்கு அப்புறம்தான் LOTR படித்தேன். எனக்கு Hobbitt அளவுக்கு LOTR பிடிக்கவில்லை. என் கருத்து. //

கொத்ஸ்..ஹாபிட் ஒரு விதம் என்றால் லார்டு இன்னொரு விதம். ஹாபிட் கொஞ்சம் நகைச்சுவை கலந்தது. ஆனால் லார்டின் தொடக்கம் மட்டுமே நகைச்சுவை. அதற்கப்புறம் கதையோ கதை....அதில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரங்களும்....காவியமய்யா...காவியம்.ஃபராமியரும் இயோவினும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். காண்டால்ஃப்ம் தான். சொல்ல வேண்டுமா! டெனொதர் மாதிரி ஆளுங்க...டார்க் லார்ட விட மோசம். வாங்களேன்...ஒரு சாட் போட்டு இதப் பத்தி ரொம்பவும் பேசுவோம்.

said...

// அருட்பெருங்கோ said...
ராகவன்,
ஒரு வாரமா என்னடா ஆள் பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்கன்னு கேட்டப்போ கூட உடம்பு சரியில்லைனு சொல்லி மழுப்பிட்டேங்களே...

இவ்வளவு சோகத்தையும் ஒரு வாரமா மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்திருக்கீங்களே.. பாவம்யா நீங்க... //

ஆகா அருளு....என் நெலம உனக்காவது புரிஞ்சதே! வாழ்க நீ எம்மான்.

// அப்புறம் கேட்க மறந்துட்டேனே வல்லவன் சி.டி இருக்கு வேணுமா? ;) //

வாழ்கன்னு சொல்லி வாய இன்னமும் மூடலை....காமத் கூட்டீட்டுப் போனேன்ல...அப்புறமுமா இப்பிடி!!!!!!!


// சிறில் அலெக்ஸ் said...
//நூத்து அறுவது ரூவா சிறில்.//
அடப் பாவமே. கறுப்பா? //

கருப்பாவது செவப்பாவது...எல்லாம் வெளுப்புதான். வெளுப்புக்கே இந்தப் பாடு பெங்களூருல.

// ஆகா நம்ம 3 மணி நேரத்தக் காப்பாத்துனீங்க. //

சிறில்...இதுக்கெல்லாம் தியாகி பென்ஷன் தருவாங்களான்னு கேட்டுச் சொல்றீங்களா?


// tbr.joseph said...
சங்கீதத்துக்கு ஒரு சுப்புடுன்னா தமிழ்படத்துக்கு ராகவன்!!

அப்ப திருட்டு சீடியில கூட இத பாக்கக் கூடாதுன்னு சொல்றீங்க..

சரீஈஈ.. கொஞ்சம் வல்லவனையும் பார்த்து எழுதுங்களேன்.. //

ஐயோ ஜோசப் சார்...விட்டுருங்க..விட்டுருங்க...எனக்குத் தமிழே தெரியாது..தமிழ்ப் படம் பாத்தாலே புரியாது. முஜே பச்சாவ். முஜே பச்சாம். ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா!

said...

உங்க புது போட்டோ, வில்லன் கசன்கானை நினைவு படுத்துது:-))

said...

சினிமா பாக்குற கொஞ்ச நஞ்ச ஆசய கூட கெடுத்துரும்ன்னு சொல்றீங்க.

"நல்ல வேளை நான்.... பிழைத்து கொண்டேன்."

said...

அந்த படத்துல ஹைலைட்டே, அந்த போலிஸ்கார், கொல செஞ்சவன கண்டுப் பிடிக்கிறதுதான்.

அவருதான் டைரக்டர்னு நெனக்கிறேன்...

நம்ம காது, மூக்கு, வாய் எல்லாத்துலயும் ரத்தம் வர வச்சிட்டாரு டைரக்டர்.

said...

// கானா பிரபா said...
உங்க புது போட்டோ, வில்லன் கசன்கானை நினைவு படுத்துது:-)) //

இந்தக் கசன்கான் யாருன்னு சொல்லுங்களேன். அவரோட படமாச்சும் ஒன்னு ரெண்டு காட்டுங்களேன். அவரும் இப்பிடித்தான் மொட்டை மண்டையோட இருப்பாரா?

// சிவமுருகன் said...
சினிமா பாக்குற கொஞ்ச நஞ்ச ஆசய கூட கெடுத்துரும்ன்னு சொல்றீங்க.

"நல்ல வேளை நான்.... பிழைத்து கொண்டேன்." //

நீங்க பெழச்சிக்கிட்டீங்க...நாங்க...ஹும்ம்ம்ம்


// ஜி said...
அந்த படத்துல ஹைலைட்டே, அந்த போலிஸ்கார், கொல செஞ்சவன கண்டுப் பிடிக்கிறதுதான்.

அவருதான் டைரக்டர்னு நெனக்கிறேன்... //

இல்ல. அவரு இந்தி சினிமாக்காரராம். அவரு அவ்வளவு லேசாக் கண்டுபிடிச்சிருவாருங்க...அடேங்கப்பா...பெரிய தில்லாலங்கடிதான் போங்க.

// நம்ம காது, மூக்கு, வாய் எல்லாத்துலயும் ரத்தம் வர வச்சிட்டாரு டைரக்டர். //

அதத்தாங்க நானும் சொல்றேன் :-((((((((((((((((((((

said...

Enna sir,

ellarum padam hit, pichchittu poguthundraanga..neenga ippadi soldreenga?

said...

// Pradeep said...
Enna sir,

ellarum padam hit, pichchittu poguthundraanga..neenga ippadi soldreenga? //

இப்பச் சொல்லுங்க பிரதீப். படம் ஹிட்டா? பிளாப்பா?