Monday, February 19, 2007

5ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"ஹலோ தேன் தூங்கீட்டியா?"

"ஹே சந்தீ....இல்லடீ. அதுக்குள்ளயா? புத்தக வெளியீடு இருக்குல்ல. அதுக்குத்தான் மகளத் தூங்க வெச்சுட்டு நானும் அவரும் வேலை பாக்குறோம்."

"மகளத் தூங்க வெச்சுட்டு...நீயும் அவரும் வேல பாக்குறீங்களா! பெரிய ஆளுதான் நீ. கேட்டா புத்தக வெளியீடுன்னு சொல்வ." (குறும்புடன் சொன்னாள் சந்தியா)

(பொய்க் கோபத்துடன்) "நீ அடி வாங்கப் போற. ஒன்ன மாதிரியா நான்? அஞ்சுமாடி மகன், புதுமுக நடிகன், ஹாஸ்பிடல் ஓனர், இண்டஸ்டிரியலிஸ்ட்.....அத்தோட புதுப்புது பசங்க. வெளுத்து வாங்குற. எனக்கிருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு." (பொய்யாக அலுத்துக் கொண்டாள்)

"ஏய்! சினிமாக் கவிஞர்னு நிரூபிக்கிற பாரு. வரிசையா அடுக்குறா. ஒங்க சினிமாவுல இல்லாததா. அந்தப் புதுமுக நடிகர் திரிந்தும் திரியாமலும் ஜெய்தீப். நீ கூட இண்ட்ரோ குடுத்தியே. நியாபகம் இருக்கா? அவன பைக்ஸ் அண்டு பேரல்ஸ்ல பாத்தேன். சரி. ஏற்கனவே சாப்ட பிரியாணிதானன்னு கிட்டப் போய்ப் பேசலாம்னு பாத்தேன். ஆனா அவன் அதே படத்துல நடிச்ச இன்னொரு ஹீரோ பின்னாடி ஓடுறான். என்னத்தச் சொல்றது! மொதவாட்டி அவனோட ஜி.ஆர்.டி கிராண்டு போறப்பவே எனக்கு ஒரு டவுட்தான். ம்ம்ம்...இப்பிடி இருக்கு சினிமா. இதுல நீ என்னயச் சொல்ல வந்துட்டியா? வரவர ஆம்பிளைங்களே சரியில்லை. சரி. சரி. நான் சொல்ல வந்ததையே விட்டுட்டு வேறெதையோ பேசிக்கிட்டிருக்கேன். ரொம்ப முக்கியமான விஷயம். சரவணன் மெயில் அனுப்பீருக்கான். இந்தியாவுக்கு வர்ரானாம்." (கொஞ்சம் இறுகியது சந்தியாவின் குரல்)

(திடீர்க் குரலில்) "யாரு? சரவணனா? ஏண்டி...புருஷன் வர்ரான்னு சந்தோஷமாச் சொல்லாம இப்பிடிச் சோகமாச் சொல்றியே! இது ஒனக்கே நல்லாயிருக்கா?"

"ஏய்! என்ன ஒளர்ர? சரவணன் எப்படி எனக்குப் புருஷனானான்? விட்டா எனக்குத் தாலியே கட்டி அவனோட நெதர்லாண்டுக்கு அனுப்பீருவ போல?" (சுருக்கென்று கேட்டாள் சந்தியா. சரவணன் அவளது கணவன் என்பதை அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.)

"நானா ஒளர்ரேன்? ஒன்னோட மகனுக்கு அவந்தான் அப்பான்னா....அவனுக்கு நீ யாரு? ஒனக்கு அவன் யாரு? அதச் சொல்லும்மா."

"சரி. இந்த கே.பாலச்சந்தர் மாதிரி கேக்குறத நீ கொஞ்சம் நிறுத்து. ஊருக்கெல்லாம் artifical inseminationன்னு சொல்லீருக்கேன். ஒன்னோட டமாரத்த இந்த விஷயத்துல அடிச்சிறாத." (கொஞ்சம் அமைதியாகக் கெஞ்சும் குரலில் சொன்னாள்.)

(தேன்மொழியும் அமைதியானாள்.) "சீச்சீ. அப்படிச் செய்வேனாடி? ஏதோ கிண்டலுக்குச் சொன்னா...சீரியஸ் ஆயிட்டியே. ம்ம்ம்...அந்தக் கொழந்தைக்கு அவந்தான் அப்பான்னு யார் கிட்டயும்......ஏன்? சரவணன் கிட்டயும் சொல்ல மாட்டேன். சரியா?"

"ஏ தேன்! ஒன்னய எனக்குத் தெரியாதா? திடீர்னு அப்படிச் சொல்லீட்டேன். சரி. நம்ம கதைக்கு வருவோம். சரவணன் சென்னைக்கு வர்ரானேடி. என்ன பண்றது? பாக்குறதா வேண்டாமா? சுந்தர அவன் கண்ணுல காட்டாம எப்படி இருக்குறது? வீட்டுக்கெல்லாம் வருவானேடி!"

"சென்னைக்கு வந்தான்னா...போய்ப் பாரு. வழக்கம் போல ...அதது..இததுன்னு...பிரியாணி போடுங்க. ஆனா வீட்டுக்கெல்லாம் அவன் வருவானே. சுந்தரப் பாத்துட்டான்னா? கண்டிப்பா யாருன்னு கேப்பான். அவனுக்குச் சொல்லாம இருக்க முடியாது. அதே நேரத்துல நீ artificial insemination செஞ்சிருக்குறன்னு நெனைக்கிற அப்பாம்மாவுக்கு அது சரவணனுக்கேத் தெரியாதுங்குறதுங்குறது அதிர்ச்சியாக்கூட இருக்கலாம். நம்ம காலேஜ்ல சேந்ததுல இருந்து ஒங்க வீட்டுக்கு வர்ரவனாச்சே அவன். பேசாம சுந்தர் விஷயத்தை அவனுக்குச் சொல்லீட்டா? அவன் இதக் கூடப் புரிஞ்சிக்க மாட்டானா?"

(சந்தியாவுக்கு அதில்தான் தயக்கம்) "அவன் கிட்டச் சொல்றதா? அவனும் சுதந்திரப் பறவை. அவனுடைய சுதந்திரத்துல எதுவும் குறுக்க வர்ரத ஏத்துக்க அவனால முடியாது. என் மேல அவனுக்குப் பாசமெல்லாம் உண்டு. நல்ல நண்பனா எனக்கு நெறைய செஞ்சிருக்கான். என்ன இருந்தாலும் அவந்தான நம்பர் 1. அதுக்கப்புறந்தான அவன்களும் இவன்களும். இன்னைக்கும் எந்த அழகான பொண்ணுன்னாலும்......நான் இருந்தா அவங்களைக் கண்டுக்கவே மாட்டான். ஆனா....அந்த உரிமை நட்பைத் தாண்டிப் போகலையேடி. அவன எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மறுக்கலை. அதுனாலதான் எனக்குக் கொழந்தை வேணும்னு ஆச வந்ததும் அவனோட கொழந்தையைச் சுமந்தேன். அதுவும் போன வாட்டி அவன் இந்தியா வந்திருந்தப்போ நான் protection பயன்படுத்துறேன்னு பொய் சொல்லி. ஆனா அத வெளியில சொல்ல முடியுமா? அதுக்குத்தான் artificial inseminationன்னு சொன்னேன்."

"ஏய்...கொஞ்சம் நிறுத்து. எனக்கு இப்பத்தான் இரு டவுட். இத்தன நாள் இது எனக்குத் தோணவேயில்லை. protection நீ பயன்படுத்துறேன்னு சொன்னியே. அப்போ அவன் condom போட்டுக்க மாட்டானா? இது ரிஸ்க்காத் தெரியலையா ஒனக்கு?"

(பெருமூச்சு விட்டாள் சந்தியா) "ம்ம்ம்....அவன் எவ கூடப் போனாலும் condom இல்லாமப் போகவே மாட்டான். ஆனா என் கிட்ட மட்டும் இல்லை. நாங்க பழகத் தொடங்குனப்போ இருந்தே அப்படித்தான். அதே மாதிரி.....I ensure everybody uses condom but not him. ஆனாலும் இப்ப பெண்களுக்கு மட்டுமான கருத்தடைச் சாதனங்கள் எக்கச்சக்கமா இருக்கேடி. அதுனால எங்களுக்குக் குழந்தை இல்லாமப் பாத்துக்கிட்டோம். ஆனா உடலுறவுன்னு வர்ரப்போ...அது அப்படித்தான்." ( சந்தியா சொன்னதைக் கேட்ட தேன் பேச்சில்லாமல் இருந்தாள்)

"என்னடி அமைதியாயிட்ட? நாங்க நண்பர்களா? காதலர்களா? கணவன் மனைவியான்னு யோசிக்கிறையா? ரொம்ப யோசிக்காத. ஏன்னா...எங்களுக்கே தெரியாது. திரும்பவும் சொல்றேன். எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். அவன் நெதர்லாந்து போனது கூட எனக்குப் பிடிக்கலை. அவனப் போகாதேன்னு சொல்லீருந்தா அவனுக்கும் அது பிடிச்சிருந்திருக்காது. அவனைப் பிரிய விரும்பாம அவன் இங்கயே இருந்தான்ன விரும்புனதும் உண்டு. ஆனா அதுக்காக என்னோட காதனாவோ கணவனாவோ என்னை அவன் dominate பண்ண விட முடியுமா? அவன் மேல இருக்குற உரிமை என்னை அவன் அடிமைப் படுத்தக் கூடாது. I miss him. But he cant mentally dominate me. I hate him because I am posessive. But I cant let him be my husband to loose even my surname."

(தேன்மொழிக்குச் சிரிப்பு வந்தது.) "நல்லா ஒளர்ர நீ. எனக்கென்னவோ நீ அவனக் காதலிக்கிறன்னுதான் நெனைக்கிறேன். ஒருவேளை அவன் தாலியோடயோ மோதிரத்தோடயோ வந்து கல்யாணம் செஞ்சுக்கோன்னு கேட்டா ஒத்துக்கிருவன்னுதான் நெனைக்கிறேன்."

(சந்தியாவிற்குக் கோவம் வந்தது.) "ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! காதலா? எனக்கா? I am not so weak. ஒங்கிட்ட பேசுனா கொஞ்சம் நிம்மதியா இருக்குமேன்னு கூப்டா...இப்பிடிக் கொழப்புறயேடி. சரி. வேறெதாவது பேசலாம். என்னவோ புத்தக வெளியீட்டு விழான்னு சொன்னியே...அதப் பத்திச் சொல்லு."

(சிரித்து விட்டாள் தேன்.) "ஹாஹாஹா..நல்லா பேச்ச மாத்துற நீ. சரி. அப்படியே செய்வோம். ஏற்கனவே புதுப் புத்தகத்தைப் பத்திச் சொல்லீருக்கேன். ஒனக்கு அதுவா நெனைவுல இருக்கும்! கள்ளியிலும் பால்னு கவிதைத் தொகுப்புக்குப் பேரு. நீதான் இதுக்கு inspiration. ஒன்னய வெச்சுத்தான் இத்தன கவிதை எழுதீருக்கேன். இதுவரைக்கும் படிச்சவங்களும் நல்லாயிருக்குன்னு சொல்லீருக்காங்க. டைரக்டர் சேரன் கூட அதுல ரெண்டு கவிதைய அவரோட அடுத்த படத்துக்குன்னு சொல்லி வெச்சிருக்காரு. இன்னும் ரெண்டு வாரந்தான் இருக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு. ஒன்னையும் கூப்பிடுறேன். நீயும் வரனும்."

"என்னது? என்னைய வெச்சு..ஒரு கவிதைத் தொகுப்பே போட்டுட்டியா? நீ ஏதோ வெளையாட்டுக்குச் சொல்றன்னு நெனச்சேன். எங்கிட்ட என்னடி நல்ல விஷயம் இருக்குன்னு கவிதையெல்லாம் எழுதீருக்க?" (தன்னை வைத்துக் கவிதை எழுதியிருப்பது சந்தியாவின் ஆர்வத்தைக் கிளறி விட்டது."

"உன் கிட்ட இருக்குறது அடுத்தவங்களுக்கு நல்லதோ இல்லையோ..ஒனக்கு நல்லதுங்குறதுதாண்டி கவிதைத் தொகுப்போட கரு. இரு ஒரு கவிதை சொல்றேன் கேளு.

கள்ளிப்பால்
கள்ளிக்கு நஞ்சோ?
கிள்ளிப் பார்க்கும்
மனிதனுக்கே நஞ்சு
உதவாது என்றால்
எதையும் தீதென்பான்
கைக்குத் தோதாதானால்
அதையும் சாதென்பான்...."

"நிறுத்துடி (சொல்லிக் கொண்டிருந்த கவிதையை நிறுத்தச் சொன்னாள் சந்தியா)...எனக்கு ஒன்னும் புரியல. ஏதோ தமிழ் வாத்தியார் செய்யுள் நடத்துற மாதிரி இருக்கு. ஆள விடும்மா. இதுக்கு என்னதான் பொருள்?"

(டெலிபோனில் தேனின் புன்னகை சந்தியாவைச் சேரவில்லை.) "அதாவது கள்ளிக்குள்ள இருக்குற கள்ளிப்பால் நஞ்சுன்னா...அது ஏன் கள்ளியைக் கொல்லலை? அதக் கீறிப் பாக்குறவனுக்குத்தான நஞ்சாகுது. அப்ப கள்ளிகிட்ட தப்பா? கீறுனவன் கிட்ட தப்பா? இதுதாண்டி நான் கேக்குறது. புரிஞ்சதா?"

(உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை சந்தியாவிற்கு) "புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. என்னைய ஆள விடும்மா. சரி. ரொம்ப நேரமாச்சு. நீ போய் வேலையப் பாரு. நாளைக்குப் பேசுறேன்."

இருவரும் பேச்சை முடித்துக் கொண்டனர். சுந்தர் விஷயத்தைச் சரவணனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்றே யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள் சந்தியா. கனவில் சரவணனோடு......சரி. சரி. புரியுது. இங்க நிறுத்திக்கிறேன்.

தொடரும்....

24 comments:

said...

//அதே மாதிரி.....I ensure everybody uses condom but not him. //

இது தமிழ்நாட்டுல பெரிய பிரச்சனை நண்பா, தாலி சென்டிமென்டுல விழுந்த பொண்ணு மாதிரி அன் கண்டிஷன் லவ் சென்டிமென்டுல, படு சுதந்திரமா நீங்க கற்பனை பண்ண சந்தியாவுமா இப்படி ரிஸ்க் எடுக்க விட்டுட்டீங்க!

ஒரு வேளை கதையோட கரு அதுல இருக்கோ!

You are building up an extremely dangerous situation! :)

said...

ராகவன் கதையில் ஒரு மெல்லியத் திருப்பம் தெரிகிறது.. கள்ளியின் கதை தொடரட்டும்ங்க..

said...

// Madura said...
//அதே மாதிரி.....I ensure everybody uses condom but not him. //

இது தமிழ்நாட்டுல பெரிய பிரச்சனை நண்பா, தாலி சென்டிமென்டுல விழுந்த பொண்ணு மாதிரி அன் கண்டிஷன் லவ் சென்டிமென்டுல, படு சுதந்திரமா நீங்க கற்பனை பண்ண சந்தியாவுமா இப்படி ரிஸ்க் எடுக்க விட்டுட்டீங்க!

ஒரு வேளை கதையோட கரு அதுல இருக்கோ!

You are building up an extremely dangerous situation! :) //

சரியாச் சொன்னீங்க மதுரா. சந்தியாவுக்கு நான் எதுவும் சொல்லிக் குடுக்கலை. அவளுக்கான முடிவுகளை அவதான் எடுக்குறா. அவளை டீவி சீரியல் கதாநாயகி மாதிரி எல்லாம் சீறிய முடிவெடுக்கும் உத்தமியாக் காட்ட விரும்பலை. அதே நேரத்துல அவ என்னதான் சுதந்திரமா இருந்தாலும் சமயத்துல ஏதோ ஒன்னு தடுத்துக்கிட்டேயிருக்கு. எத்தனையோ நடந்திருந்தாலும் முதல் காதலும் செக்சும் யாருக்கும் மறக்கவே மறக்காதாம். சந்தியாவுக்கு மட்டுமென்ன.

extreamly dangerous situation...ம்ம்ம்ம்...சந்தியாவும் சரவணனும் ரிஸ்க் எடுக்குறாங்கன்னு தேனே சொல்லியாச்சே. அப்புறமென்ன.

said...

// தேவ் | Dev said...
ராகவன் கதையில் ஒரு மெல்லியத் திருப்பம் தெரிகிறது.. கள்ளியின் கதை தொடரட்டும்ங்க.. //

என்னங்க பண்றது. எவ்வளவு நாளா வண்டிய நேராவே ஓட்டுறது. அதான் லேசாத் திருப்பியாச்சு. இதுவரைக்கும் நடந்துக்கெல்லாம் இப்பக் காரணம் தெரிஞ்சி போயிருக்கும். இனிமே நடக்கப் போறது என்னன்னு தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். இனிமே நடக்கப் போறது என்னன்னு பொறுத்திருந்து பாக்கலாம்.

said...

//அவளை டீவி சீரியல் கதாநாயகி மாதிரி எல்லாம் சீறிய முடிவெடுக்கும் உத்தமியாக் காட்ட விரும்பலை. அதே நேரத்துல அவ என்னதான் சுதந்திரமா இருந்தாலும் சமயத்துல ஏதோ ஒன்னு தடுத்துக்கிட்டேயிருக்கு.//

இது யதார்த்தமான பார்வை ஜி.ரா.

நான் அந்த வரி வந்தவுடனே சந்தியாவுக்காக ரொம்ப டென்ஷனாயிட்டேன் போல! :) கடைசியா நெதர்லாந்து போய் ஆம்ஸ்டர்டேமில ரொம்ப ஷாக்கான டூரெல்லாம் தனியா போய் சன்யாசம் வாங்கிற ரேஞ்சுக்கு குடைஞ்சிருக்கேன் மண்டைக்குள்ள. நெதர்லாந்து வேற சொன்னீங்களா, அதுதான் சந்தியாவுக்காக டென்ஷன்! :)

நோ மோர் டென்ஷன். :) கதையின்னு நாலு தரம் சொல்லிக்கிட்டேன்! :)

said...

// Madura said...
இது யதார்த்தமான பார்வை ஜி.ரா.

நான் அந்த வரி வந்தவுடனே சந்தியாவுக்காக ரொம்ப டென்ஷனாயிட்டேன் போல! :) கடைசியா நெதர்லாந்து போய் ஆம்ஸ்டர்டேமில ரொம்ப ஷாக்கான டூரெல்லாம் தனியா போய் சன்யாசம் வாங்கிற ரேஞ்சுக்கு குடைஞ்சிருக்கேன் மண்டைக்குள்ள. நெதர்லாந்து வேற சொன்னீங்களா, அதுதான் சந்தியாவுக்காக டென்ஷன்! :)

நோ மோர் டென்ஷன். :) கதையின்னு நாலு தரம் சொல்லிக்கிட்டேன்! :) //

ஆகா...நீங்களும் ஆம்ஸ்டர்டாம் போயிருக்கீங்களா? நல்ல பொழுது போக்கான எடம். ஹி ஹி. நானும் போயிருக்கேன். அட மேடம் டுசாட் ம்யூசியம் பாத்ததச் சொல்றேங்க. :-)

சந்தியா நல்ல பொண்ணுதாங்க. அதுல எந்தச் சந்தேகமும் இல்லை. அடுத்தவங்களுக்கு எதுவும் கெடுதல் செஞ்சாளா? யாரையும் அடுத்துக் கெடுத்தாளா? கொலைகொள்ளை செஞ்சாளா? இல்லையே. ஆனா ஒரு தப்பு செஞ்சிருக்கா. சரவணனுக்கே தெரியாம அவனோட குழந்தையைச் சுமந்தது. அதுக்கு அவள என்னதான் செய்யலாம்?

said...

ஜி ரா ,

முன்னாடி வந்த பகுதியோட பின்னூட்டங்கள்ல இது கத்தியில நடக்குற கதை அப்படின்னு படிச்சேன்...

உண்மையிலேயே இந்தப் பகுதி தான் அப்படி இருக்கு...

கால பதம் பாத்துடாம நீங்க நடக்கப் போறத அடுத்து வர்ற பகுதியிலப் பாக்கனும்...

அது வரைக்கும்..... ஷ் ஷ் ஷ்

said...

// அருட்பெருங்கோ said...
ஜி ரா ,

முன்னாடி வந்த பகுதியோட பின்னூட்டங்கள்ல இது கத்தியில நடக்குற கதை அப்படின்னு படிச்சேன்...

உண்மையிலேயே இந்தப் பகுதி தான் அப்படி இருக்கு...

கால பதம் பாத்துடாம நீங்க நடக்கப் போறத அடுத்து வர்ற பகுதியிலப் பாக்கனும்...

அது வரைக்கும்..... ஷ் ஷ் ஷ் //

கோ, யாரோட காலச் சொல்ற? என்னோட காலா? சந்தியாவோட காலா? :-) என்னப்பா ரெண்டு நெருங்கிய நண்பிகள் இதக் கூடப் பேச மாட்டாங்களா?

said...

//தாலி சென்டிமென்டுல விழுந்த பொண்ணு மாதிரி //
இது சூப்பர்.:-)

பயங்கர ஸ்பீட் கதை. என்னதான் நடக்கும்?

said...

/என்னப்பா ரெண்டு நெருங்கிய நண்பிகள் இதக் கூடப் பேச மாட்டாங்களா?/

நான் இதுக்காக அத சொல்லல ராகவன்...

நான் சொன்னது சரவணனோட அனுமதி இல்லாம அவனோடக் குழந்தைய உருவாக்கிட்டாளே அதற்குதான்...

அது சரவணனுக்கு தெரிய வந்தால்் சந்தியாவுக்கும் அந்தக் குழந்தைக்கும் எப்படிப்பட்ட விளைவுகள் வரும்.?

சரி சரி அடுத்தப் பகுதியில தான் சரவணன் வந்துடப் போறாரே அப்போத் தெரிஞ்சிடும் ;-)

said...

டுசாட் ம்யூசியமும் பாத்தீங்களா? ;)
இப்ப தெரியுது ஏன் நெதெர்லான்ட்ஸ் ஆச்சு ஹீரோ ஊருன்னு!
...
நல்லது-கெட்டது தப்பு-ரைட்டு இடம் மற்றும் காலம் பொறுத்து மாறுபடும் பல விஷயங்களில! அதனால நீங்க சந்தியாவை எப்படி வேணா சித்தரிக்கலாம். நோ அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்! :)

அது சரி, மெர்சி-பிக்-கிங் ஒருக்கால் கோவமா இருக்காரோ! :)

said...

ராகவன் சார்

நான் எதிர்பாத்திறாத பகுதி அதுவும் சந்தியாவும், தேனும் உரையாடல்கள்.....என்னென்னு சொல்லுறதுன்னு தெரியல.

அடுத்த பகுதி எப்படி இருக்கும் என்ற துடிப்புடன்...

said...

// வல்லிசிம்ஹன் said...
//தாலி சென்டிமென்டுல விழுந்த பொண்ணு மாதிரி //
இது சூப்பர்.:-)

பயங்கர ஸ்பீட் கதை. என்னதான் நடக்கும்? //

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
சந்தியாவே முடிவை எடுக்கட்டுமே
தன்னாலே தெரிந்திடும் தயங்காதீர்
(உதவ) சரவணன் இருக்கிறான் தயங்காதீர்

said...

// Madura said...
டுசாட் ம்யூசியமும் பாத்தீங்களா? ;)
இப்ப தெரியுது ஏன் நெதெர்லான்ட்ஸ் ஆச்சு ஹீரோ ஊருன்னு! //

ஹி ஹி ஹி ஹி :-)

// ...
நல்லது-கெட்டது தப்பு-ரைட்டு இடம் மற்றும் காலம் பொறுத்து மாறுபடும் பல விஷயங்களில! அதனால நீங்க சந்தியாவை எப்படி வேணா சித்தரிக்கலாம். நோ அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்! :) //

நன்றி யுவர் ஆனர் :-)

// அது சரி, மெர்சி-பிக்-கிங் ஒருக்கால் கோவமா இருக்காரோ! :) //

ரொம்பவே கோவமா இருக்காரு? என்னன்னு கேக்கனும்.

said...

// அருட்பெருங்கோ said...
/என்னப்பா ரெண்டு நெருங்கிய நண்பிகள் இதக் கூடப் பேச மாட்டாங்களா?/

நான் இதுக்காக அத சொல்லல ராகவன்...

நான் சொன்னது சரவணனோட அனுமதி இல்லாம அவனோடக் குழந்தைய உருவாக்கிட்டாளே அதற்குதான்...

அது சரவணனுக்கு தெரிய வந்தால்் சந்தியாவுக்கும் அந்தக் குழந்தைக்கும் எப்படிப்பட்ட விளைவுகள் வரும்.? //

விளைவுகள்..........சரவணனும் நல்லவந்தான். ஆனா அவனுக்குத் தெரியாமலே அவனோட குழந்தைங்குறது கொஞ்சம் பெரிய தப்பு மாதிரித்தான் தெரியுது. ம்ம்ம்ம்....என்ன பண்ணப் போறானோ? பாவம் சந்தியா.

// சரி சரி அடுத்தப் பகுதியில தான் சரவணன் வந்துடப் போறாரே அப்போத் தெரிஞ்சிடும் ;-) //

என்னது? அடுத்த பகுதியில சரவணனா? அவ்வளவு லேசுல விட்டுருவேனா? ;-)

said...

// கோபிநாத் said...
ராகவன் சார்

நான் எதிர்பாத்திறாத பகுதி அதுவும் சந்தியாவும், தேனும் உரையாடல்கள்.....என்னென்னு சொல்லுறதுன்னு தெரியல. //

என்னங்க செய்றது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி.

// அடுத்த பகுதி எப்படி இருக்கும் என்ற துடிப்புடன்... //

ஏற்கனவே என்னென்ன நடந்ததுன்னு இது வரைக்கும் பாத்துட்டோம். இனிமே நடக்க வேண்டியதை அடுத்துப் பாப்போம்.

said...

எச்சூஸ் மீ, நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ்.

இப்படி கதையை கட்டபொம்மன் வண்டி மாதிரி டப்பு டிப்புன்னு உடைக்கறீங்களே. எங்க போவுதுன்னே பயமா இருக்கு! :))

said...

// இலவசக்கொத்தனார் said...
எச்சூஸ் மீ, நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ். //

நெக்ஸ்ட் பார்ட் நெக்ஸ்ட் வீக் :)

// இப்படி கதையை கட்டபொம்மன் வண்டி மாதிரி டப்பு டிப்புன்னு உடைக்கறீங்களே. எங்க போவுதுன்னே பயமா இருக்கு! :)) //

கட்டபொம்மன்னாலே அப்படித்தானவே! பழைய பிரச்சனைகள் எல்லாந் தெரிஞ்சிருச்சி. இனிமே அதுகள ஒன்னொன்னா தீக்க வேண்டியதுதானே! தீத்திருவோம். சரவணனுக்குச் சந்தியா செஞ்சது துரோகந்தானே?

said...

அண்ணே வணக்கம்..

நானே தான்.. என்னடா திடீர்னு வர்றான்.. அப்புறம் ஆளு காணாமப் போயிர்ரான்னு பாக்குறீகளா.. என்ன பண்றது அண்ணாச்சி.. நம்ம பொயப்பு அப்படியிருக்கு..

நடுநடுவுல வலைப்பூக்கள் பாக்கற அனுமதியைக் கத்திரிச்சுப் பூடுறாங்க.. என்ன பண்றது? பிரசவம் (டெலிவரி) வேற வந்துக்கினே இருக்கா.. அதான்.

சரி சரி.. மேட்டருக்கு வர்றேன்...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்ததுனால கள்ளியிலும் பாலைப் பாத்தவுடனே ஒரு தொடர்கவிதையா இருக்குமோன்னு நெனச்சேன்.. அப்பால உருட்டிப் பாத்ததுக்கப்புறம் (Scroll) அது கதன்னு தெரிஞ்சிச்சு..

1-லருந்து 5-ம் பாகம் வரைக்கும் படிச்சிட்டு இப்போ.. இப்போ சொல்றேன் என் கருத்துக்களை.. கேட்டுக்கங்க...

மொதல்ல இப்டி ஒரு சூப்பர் கருவைக் கையில எடுத்ததுக்காக ஒரு ஓ!! சபாஷ்!! கலக்கல்.. பிண்றீங்க.. நெறைய எதிர்பாராத திருப்பங்கள்...

சந்தியா... நிச்சயம் பாரதி கண்ட புதுமைப்பெண் அப்படிங்கற இலக்கை எப்படியும் தாண்டிடுவா.. நீங்க தாண்ட வைச்சிடுவீங்கன்னு தெரியுது!!

அப்பால.. நம்ம எல்லாரும் பண்றதுனால தான் லஞ்சம் வாங்குறது, கொலை, கொள்ளை எல்லாம் பெரிய தப்பாத் தெரியல..அதுவே ஒரு பொண்ணு தாலி இல்லாமக் கொழந்த பெத்துக்கிட்டா ஊரு ஒலகம் எது வேணா பேசும் - இதுக்கு ஒரு ஷொட்டு!! வித்தியாசமான, உங்க வலைப்பூவில் நீங்க மகரந்தம் ங்கிற வார்த்தைக்குக் குடுத்துருக்கற வார்த்தைகளுக்கு உயிர்கொடுக்கிற கரு!! உங்க தைரியத்தைப் பாராட்டுறேன்..

அப்பால, ஒரு நட்பில் உணர்வுகள் பகிர்தலுக்கு இருக்கிற கவுரவம் உணர்ச்சிகள் பகிர்தலுக்கு இல்ல.. அதுக்கு ஒரு எதிர்மறையைச் சொன்ன விதம்.. அருமை!! நம்புவீங்களோ மாட்டீங்களோ ஜி ரா.. எனக்குள்ளே திடீர்னு இந்தக் கேள்வி ஒருநாள் வந்துச்சு.. ஏன் வந்துச்சு, எப்படி வந்துச்சுன்னெல்லாம் தெரியாது.. ஆனா நான் என்கூட இருந்த நண்பன்கிட்ட இதப்பத்திச் சொல்லி அவனோட அபிப்ராயத்தைக் கேட்டேன்.. இப்போ அதே கருத்துக்களை வரிவடிவமா உங்க வலைப்பூவில் பாத்தேனா, நிஜமா மெய் சிலிர்த்துடுச்சு..

நான் அடிக்கடி சொல்ற மாதிரி, நம்ம சிந்தனைகள் ஒரு சில இடங்கள்ல ஒத்துப்போகுதோ..

என்னவோ போங்க... எல்லார் மாதிரியும் நானும் முதல் பெஞ்சுல.. சீட் இல்லாங்காட்டியும் சைடுல நின்னுக்கிட்டாவது உங்க ஷோவப் பாத்தே ஆகுறதுன்னு முடிவுல அடுத்த செவ்வாய ஆவலோட எதிர்நோக்கிக் காத்திருக்கேன்..

ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. யாரது உங்கள ஜி.ரா ன்னு கூப்பிட ஆரம்பிச்சது.. அவங்களுக்கும் ஒரு ஓ!!!ஜீரா மாதிரி நல்லாவேயிருக்கு உங்கள அப்டிக் கூப்பிடுறதுல..

அம்புட்டுதேன் இப்போதைக்கு..
வர்ட்ட்டா.....

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன்.

said...

// itsraghz said...
அண்ணே வணக்கம்..

நானே தான்.. என்னடா திடீர்னு வர்றான்.. அப்புறம் ஆளு காணாமப் போயிர்ரான்னு பாக்குறீகளா.. என்ன பண்றது அண்ணாச்சி.. நம்ம பொயப்பு அப்படியிருக்கு..

நடுநடுவுல வலைப்பூக்கள் பாக்கற அனுமதியைக் கத்திரிச்சுப் பூடுறாங்க.. என்ன பண்றது? பிரசவம் (டெலிவரி) வேற வந்துக்கினே இருக்கா.. அதான். //

வாங்க ராகவன். ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க. நல்லாயிருக்கீங்களா?

// சரி சரி.. மேட்டருக்கு வர்றேன்... //

வாங்க :)

// ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்ததுனால கள்ளியிலும் பாலைப் பாத்தவுடனே ஒரு தொடர்கவிதையா இருக்குமோன்னு நெனச்சேன்.. அப்பால உருட்டிப் பாத்ததுக்கப்புறம் (Scroll) அது கதன்னு தெரிஞ்சிச்சு..

1-லருந்து 5-ம் பாகம் வரைக்கும் படிச்சிட்டு இப்போ.. இப்போ சொல்றேன் என் கருத்துக்களை.. கேட்டுக்கங்க... //

சரி. கேட்டுக்கிறேங்க :-) jokes apart. உங்க கருத்து எதுன்னாலும் தயங்காமச் சொல்லலாம்.

// மொதல்ல இப்டி ஒரு சூப்பர் கருவைக் கையில எடுத்ததுக்காக ஒரு ஓ!! சபாஷ்!! கலக்கல்.. பிண்றீங்க.. நெறைய எதிர்பாராத திருப்பங்கள்... //

தூத்துடி திருநவேலி கே.டீ.சி பஸ்சு மாதிரி திரும்புதுன்னு இலவசக் கொத்தனாரும் சொல்லீட்டாரு.

// சந்தியா... நிச்சயம் பாரதி கண்ட புதுமைப்பெண் அப்படிங்கற இலக்கை எப்படியும் தாண்டிடுவா.. நீங்க தாண்ட வைச்சிடுவீங்கன்னு தெரியுது!! //

சந்தியாக்கள் நமது நாட்டிற்குப் புதியவர்கள் அல்லர். பண்பாட்டுக் காவலர்களிடம் மாட்டிக் கொண்டு அல்லல் படுகின்ற அபலைகள்.

// அப்பால.. நம்ம எல்லாரும் பண்றதுனால தான் லஞ்சம் வாங்குறது, கொலை, கொள்ளை எல்லாம் பெரிய தப்பாத் தெரியல..அதுவே ஒரு பொண்ணு தாலி இல்லாமக் கொழந்த பெத்துக்கிட்டா ஊரு ஒலகம் எது வேணா பேசும் - இதுக்கு ஒரு ஷொட்டு!! வித்தியாசமான, உங்க வலைப்பூவில் நீங்க மகரந்தம் ங்கிற வார்த்தைக்குக் குடுத்துருக்கற வார்த்தைகளுக்கு உயிர்கொடுக்கிற கரு!! உங்க தைரியத்தைப் பாராட்டுறேன்.. //

நன்றி ராகவன்

// அப்பால, ஒரு நட்பில் உணர்வுகள் பகிர்தலுக்கு இருக்கிற கவுரவம் உணர்ச்சிகள் பகிர்தலுக்கு இல்ல.. அதுக்கு ஒரு எதிர்மறையைச் சொன்ன விதம்.. அருமை!! நம்புவீங்களோ மாட்டீங்களோ ஜி ரா.. எனக்குள்ளே திடீர்னு இந்தக் கேள்வி ஒருநாள் வந்துச்சு.. ஏன் வந்துச்சு, எப்படி வந்துச்சுன்னெல்லாம் தெரியாது.. ஆனா நான் என்கூட இருந்த நண்பன்கிட்ட இதப்பத்திச் சொல்லி அவனோட அபிப்ராயத்தைக் கேட்டேன்.. இப்போ அதே கருத்துக்களை வரிவடிவமா உங்க வலைப்பூவில் பாத்தேனா, நிஜமா மெய் சிலிர்த்துடுச்சு.. //

கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன். கொஞ்சம் சரியாப் புரியலைங்க.

// நான் அடிக்கடி சொல்ற மாதிரி, நம்ம சிந்தனைகள் ஒரு சில இடங்கள்ல ஒத்துப்போகுதோ..

என்னவோ போங்க... எல்லார் மாதிரியும் நானும் முதல் பெஞ்சுல.. சீட் இல்லாங்காட்டியும் சைடுல நின்னுக்கிட்டாவது உங்க ஷோவப் பாத்தே ஆகுறதுன்னு முடிவுல அடுத்த செவ்வாய ஆவலோட எதிர்நோக்கிக் காத்திருக்கேன்.. //

கண்டிப்பா. வந்து படிச்சு உங்க கருத்துகளைச் சொல்லுங்க.

// ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. யாரது உங்கள ஜி.ரா ன்னு கூப்பிட ஆரம்பிச்சது.. அவங்களுக்கும் ஒரு ஓ!!!ஜீரா மாதிரி நல்லாவேயிருக்கு உங்கள அப்டிக் கூப்பிடுறதுல.. //

ராமச்சந்திரன் உஷா அப்படீங்குற வலைப்பூ நண்பர்தான் மொதல்ல அப்படிக் கூப்பிட்டது. எனக்கு ஒரு பேரே சூட்டீட்டாங்க.

// அம்புட்டுதேன் இப்போதைக்கு..
வர்ட்ட்டா.....

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன். //

வாங்க. வணக்கம். நன்றி மீண்டும் வருக.

said...

ஜிரா....

என்ன சொல்றதுன்னே தெரியல....

ரொம்ப வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க... இந்த தலைமுறை ஜெயகாந்தன்.... கே.பி...

முந்தா நாள் செவ்வாய்ங்றதையே மறந்துட்டேன்... அதான் அன்னைக்கேப் படிக்கல...

said...

// ஜி - Z said...
ஜிரா....

என்ன சொல்றதுன்னே தெரியல.... //

இதத்தான் ஜி, வெட்டி முதல் அத்தியாயத்துல இருந்து சொல்லிக்கிட்டிருக்கான்.

// ரொம்ப வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க... இந்த தலைமுறை ஜெயகாந்தன்.... கே.பி... //

போச்சு. போச்சு. அவங்கள்ளாம் நெறைய சாதிச்சவங்க.

// முந்தா நாள் செவ்வாய்ங்றதையே மறந்துட்டேன்... அதான் அன்னைக்கேப் படிக்கல... //

இன்னமும் சொல்லப் போனா திங்கக் கெழமையே போட்டுட்டேன். செவ்வாய் கொஞ்சம் அலைச்சல் அதான்.

said...

//வாங்க ராகவன். ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க. நல்லாயிருக்கீங்களா?//

ஆண்டவன் அருளால, நல்லாயிருக்கேன் ராகவன்.

//தூத்துடி திருநவேலி கே.டீ.சி பஸ்சு மாதிரி திரும்புதுன்னு இலவசக் கொத்தனாரும் சொல்லீட்டாரு.//

இலவசக் கொத்தனாரும் நம்ம கட்சியா?பலே பலே.

//சந்தியாக்கள் நமது நாட்டிற்குப் புதியவர்கள் அல்லர். பண்பாட்டுக் காவலர்களிடம் மாட்டிக் கொண்டு அல்லல் படுகின்ற அபலைகள்.//

முழுசா அப்படிச் சொல்லிட முடியுங்களா? ஏன்னா நீங்க சொல்ல வர்ற கருத்து இந்தக்காலத்துல அவ்வளவு சுலபமா உலவிடல..ஏன்னா அதுக்கான காரணத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க.... போகப்போக நடைமுறையில எல்லாராலும் ஒத்துக்கொள்ளக் கூடியதா மாறலாம்.. பார்ப்போம்...

//கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன். கொஞ்சம் சரியாப் புரியலைங்க.//

அதாவதுங்க, ஒரு நட்புக்குள்ள உணர்வுகள் பகிர்தல்-ங்கிறது ரொம்ப கெளரவமான விஷயம்.. அதுக்காகத்தானே நட்புங்கற ஒண்ணே இருக்கு!! ஆனா அதே சமயம், உணர்ச்சிகள் பகிர்தல்ங்கிறது ரொம்பப் பாதகமான, தகாத செயல் மாதிரித்தானே இருக்கு!!

உணர்ச்சி ன்னு நான் சொல்ல வர்றது பாலியல் உணர்ச்சிகளை.. இப்பப் புரியுதுங்களா.. நாம யாருமே அந்த கண்ணோட்டத்துல பெரும்பாலும் யோசிச்சுப் பாத்திருக்கமாட்டோம்.. ஏன்னா நம்ம வாழற, வளர்ற சூழ்நிலை அப்படி..

ஒரு நண்பன், நண்பிகிட்டயோ அல்லது நண்பி தன்னோட நண்பன்கிட்ட தன்னோட பாலியல் உணர்வுகள் மட்டுமில்லாது உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளுதல்ங்கிது - மேலைநாடுகளில் சாத்தியமே.. ஏன்னா 'கலாச்சாரம்' அல்லது 'பண்பாடு' என்ற வார்த்தை பெருமளவு வித்தியாசப்பட்டிருக்கு. இல்லயா...

நம்ம நாட்டுல இருக்குற 'ஒருவனுக்கு ஒருத்தி' ங்க கொள்கையும் இதனால தான் பெருமளவு தனிப்பட்டு, மரியாதையோடு பரிசீலிக்கப்படுகிறது..

உங்க சந்தியா, சரவணன் நிலை இதைத் தழுவி வர்றதுனால நம்ம சிந்தனை ஒத்துப்போகுது சில இடங்களில்னு சொன்னேன்.

இதப்பத்தித் தான் நான் என் நண்பன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்னு சொன்னேன்.. புரியுதுங்களா?

//கண்டிப்பா. வந்து படிச்சு உங்க கருத்துகளைச் சொல்லுங்க.//

வர்றேன். நிச்சயமா..

//ராமச்சந்திரன் உஷா அப்படீங்குற வலைப்பூ நண்பர்தான் மொதல்ல அப்படிக் கூப்பிட்டது. எனக்கு ஒரு பேரே சூட்டீட்டாங்க.//

தகவலுக்கு நன்றி ஜி.ரா.

said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)