Monday, February 05, 2007

யார் இவர்?

இந்தப் படத்துல இருக்குறவரப் பாருங்க. யார்னு தெரியுதா? கண்டுபிடிச்சிருப்பீங்களே. அவரேதான்.


சரி. இந்தப் படத்துக்குத் தகுந்தாப்புல ஒரு துணுக்கு அல்லது கவிதை அல்லது ஜோக்கு...அல்லது ஒங்களுக்கு என்ன தோணுதோ.....அதச் சொல்லுங்க பாக்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

60 comments:

said...

ஒரு ரோஜா பூவே
பூசிணிப் பூவாய்
மாறியாதே (அதிர்ச்சிக் குறி)

said...

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் :(

சோகத்துடன் அரவிந் சாமி

said...

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன் :)

said...

Dun publish: unga thodar kathai enna acchu.. innaikku tuesday!!!

said...

அடுப்புல வெந்த சாமி !!!!

said...

எப்படி இருந்த நீ, இப்படி ஆய்ட்டியேப்பா ?

said...

கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வெளியே !
:))

said...

ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்ட வாயி மாரிமுத்து, ஊருக்குள்ள மொந்த மூஞ்சிங்க சவுக்கியமா ?

பொண்டாட்டிக்கிட்ட சண்டைய போட்டு, புள்ளைங்க்களை தொரத்திவுட்டு, அடுப்புல வெந்த சாமி எப்படி இருக்கிறான் ?

said...

கவிதை ...

சோத்தாங்கை பக்கம்
அரவிந்சாமி போட்டோ
*ச்சாங்கை பக்கம்
அடுப்புல வெந்த சாமி போட்டோ

சும்மாதாஙக கோபப்படப்டாது

said...

அரவிந்தசாமி,
??????

said...

அடுப்புல வெந்த சாமியா??

said...

எப்படி இருந்தவரு.. இப்படி ஆயிட்டாரே!! (நீங்க எதிர் பார்த்திருபீங்களே?)

said...

enna eludha onnum illaya he he he.

enna solradhu avru vera sw company nadathuraarrm

said...

இவன் ரோஜாவின் காதலன்
இல்லை பம்பாயின் காவலன்
அன்று கன்னியரின் நாயன்
இன்று காணாமல் போனவன்!

ஏதோ என்னாலான ஓர் நக்கல் கவிதை!!!! ;)

said...

// Hari said...
ஒரு ரோஜா பூவே
பூசிணிப் பூவாய்
மாறியாதே (அதிர்ச்சிக் குறி) //

ஆகா! அதிர்ச்சிக் குறி எப்படிப் போடனும்னு தெரியாம....அத எழுத்துல காட்டீட்டீங்களே ஹரி.. ஆனாலும் கமெண்ட்டு சூப்பரப்பு.

said...

// We The People said...
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் :(

சோகத்துடன் அரவிந் சாமி //

என்ன நட்சத்திரமே....இப்படிச் சொல்லீட்டீங்க. படத்துல அவரு சிரிச்சிக்கிட்டுத்தான இருக்காரு. நீங்க சோகத்தோடன்னு சொல்றீங்க?

// இராம் said...
எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன் :) //

நீயுமா ராம்? ஏன்? ஏன்? ஏன்? ஏற்கனவே ஆளு மெல்லிசாத்தான இருப்ப!

said...

// தேவ் | Dev said...
Dun publish: unga thodar kathai enna acchu.. innaikku tuesday!!! //

இன்று இரவு வருகிறது தேவ். நேற்று ஊரில் இல்லை. இன்று காலையில்தான் பெங்களூர் வந்தேன். அதான். தாமதத்திற்கு மன்னிக்க.

said...

// செந்தழல் ரவி said...
அடுப்புல வெந்த சாமி !!!! //

ஹி ஹி இதக் கவுண்டர் சொல்வார்ல. என்ன படம்?

// எப்படி இருந்த நீ, இப்படி ஆய்ட்டியேப்பா ? //

என்ன செய்றது ரவி? வயசுன்னு ஒன்னு இருக்குல்ல.

// ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்ட வாயி மாரிமுத்து, ஊருக்குள்ள மொந்த மூஞ்சிங்க சவுக்கியமா ? //

அவரு சிரிச்சிக்கிட்டு நிக்குறதப் பாத்தா சவுக்கியம்னுதான் தெரியுது.

// பொண்டாட்டிக்கிட்ட சண்டைய போட்டு, புள்ளைங்க்களை தொரத்திவுட்டு, அடுப்புல வெந்த சாமி எப்படி இருக்கிறான் ? //

ஓ இது வேறயா? என்ன கொடுமை சரவணன் இது!

said...

// கோவி.கண்ணன் said...
கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வெளியே !
:)) //

ஆகா! கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா...அப்படீன்னுதான நீங்க சொல்றீங்க? ;-)

said...

// Prasram said...
கவிதை ...

சோத்தாங்கை பக்கம்
அரவிந்சாமி போட்டோ
*ச்சாங்கை பக்கம்
அடுப்புல வெந்த சாமி போட்டோ

சும்மாதாஙக கோபப்படப்டாது //

கோவமெல்லாம் இல்லைங்க. ஆனா ஒரு கொழப்பம். நான் போட்டது ஒரு போட்டாதானுங்களே..நீங்க ரெண்டுன்னு சொல்றீங்களே!

said...

// Thillakan said...
அரவிந்தசாமி,
?????? //

// சுதர்சன்.கோபால் said...
அடுப்புல வெந்த சாமியா?? //

திலகனும் ஓமப்பொடியும் சரியான விடையைச் சொல்லியிருக்கீங்க. பூவப் பூவுன்னும் சொல்லலாம். புய்ப்பம்னும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.

said...

// Fast Bowler said...
எப்படி இருந்தவரு.. இப்படி ஆயிட்டாரே!! (நீங்க எதிர் பார்த்திருபீங்களே?) //

fast bowler இப்படி ஸ்லோவாப் போட்டா எப்படி? இதுதான் எல்லாரும் சொல்றதாச்சே! நீங்க அப்படியே ஸ்பீடா வேறொன்னு எடுத்து விடுங்க.

// கார்த்திக் பிரபு said...
enna eludha onnum illaya he he he.

enna solradhu avru vera sw company nadathuraarrm //

என்னது சாப்பிட்டவேர் கம்பெனி நடத்துறாரா? சொல்லவேயில்லையே!

said...

// மயூரேசன் Mayooresan said...
இவன் ரோஜாவின் காதலன்
இல்லை பம்பாயின் காவலன்
அன்று கன்னியரின் நாயன்
இன்று காணாமல் போனவன்!

ஏதோ என்னாலான ஓர் நக்கல் கவிதை!!!! ;) //

கன்னியரின் நாயனா? என்ன சொல்ற மயூர்? காணாமல் போனவரா? பாத்தா எங்க இருந்தாலும் கண்டுபிடிக்கிற மாதிரிதானே இருக்காரு.

said...

இந்த சினிமாகாரனுங்ககிட்ட நாம மாட்டினா தமிழ்படத்துக்கு வில்லனா போட்டுருவானுங்களோ...

said...

***********************************
கோவமெல்லாம் இல்லைங்க. ஆனா ஒரு கொழப்பம். நான் போட்டது ஒரு போட்டாதானுங்களே..நீங்க ரெண்டுன்னு சொல்றீங்களே!
***********************************
http://gragavan.blogspot.com/2007/02/blog-post.html

இந்த தொடுப்பில் இடத பக்கம் ஒரு படம் தெரியுது பாருங்க ... அது நீங்க கண்ணாடில பாத்தா கூட தெரியும்னு நினைக்கிறேன்

said...

தமிழா! தமிழா!!

said...

பள்ளி நன்பர்கள் குழுமத்தில் இப்படத்தை இரு வருடத்திற்க்கு முன் பார்க்க நேர்ந்தது அப்போது நன்பர்கள் சிலர் உதிர்த்தவை

"என்ன கொடுமை இது?"

"என்னை பார் சிரி"

"சிரிக்காதே சீரழிஞ்சிருவ"

said...

//என்ன நட்சத்திரமே....இப்படிச் சொல்லீட்டீங்க. படத்துல அவரு சிரிச்சிக்கிட்டுத்தான இருக்காரு. நீங்க சோகத்தோடன்னு சொல்றீங்க?//

இடுக்கன் வருங்கால் நகுக என்ற கோட்பாட்டின் அடிபடையில் அவர் சிரிக்காருபா!!

said...

குந்தித் தின்றால் குன்று போல் ஆவோம்!

said...

he is CEO and MD of talent maximus

chk this http://www.talentmaximus.com/management_team.htm

MeenaArun

said...

// தம்பி said...
இந்த சினிமாகாரனுங்ககிட்ட நாம மாட்டினா தமிழ்படத்துக்கு வில்லனா போட்டுருவானுங்களோ... //

இது நல்லாயிருக்கு தம்பி. அடுத்து ஷங்கர் படத்துல அவர வில்லனாப் பாத்தாலும் பாக்கலாம். சொல்ல முடியாது. நடந்தாலும் நடந்திரும்.

said...

// Prasram said...
***********************************
கோவமெல்லாம் இல்லைங்க. ஆனா ஒரு கொழப்பம். நான் போட்டது ஒரு போட்டாதானுங்களே..நீங்க ரெண்டுன்னு சொல்றீங்களே!
***********************************
http://gragavan.blogspot.com/2007/02/blog-post.html

இந்த தொடுப்பில் இடத பக்கம் ஒரு படம் தெரியுது பாருங்க ... அது நீங்க கண்ணாடில பாத்தா கூட தெரியும்னு நினைக்கிறேன் //

ஆகா! அப்ப நானும் பதினைஞ்சு வருசங் கழிச்சி அப்படித்தான் இருப்பேன்னு சொல்றீங்களா? ஆனா அரவிந்தசாமி அளவுக்குப் பளபளப்பு இருக்காதுங்க.

said...

// தம்பி said...
தமிழா! தமிழா!! //

நாளை உன் நாளேன்னு சொல்றீங்களா? நாளைக்கு எல்லாத் தமிழனும் இப்படித் தண்டியாத்தான் இருப்பான்னு முடிவே கெட்டீட்டீங்களா? சோத்தைக் கொறக்கச் சொன்னா கேட்டாதான.

// சிவமுருகன் said...
பள்ளி நன்பர்கள் குழுமத்தில் இப்படத்தை இரு வருடத்திற்க்கு முன் பார்க்க நேர்ந்தது அப்போது நன்பர்கள் சிலர் உதிர்த்தவை

"என்ன கொடுமை இது?"

"என்னை பார் சிரி"

"சிரிக்காதே சீரழிஞ்சிருவ" //

ஹா ஹா ஹா....அச்சச்சோ நான் சிரிக்கலை. நான் சிரிக்கலை.

said...

// We The People said...
//என்ன நட்சத்திரமே....இப்படிச் சொல்லீட்டீங்க. படத்துல அவரு சிரிச்சிக்கிட்டுத்தான இருக்காரு. நீங்க சோகத்தோடன்னு சொல்றீங்க?//

இடுக்கன் வருங்கால் நகுக என்ற கோட்பாட்டின் அடிபடையில் அவர் சிரிக்காருபா!! //

அப்படியும் இருக்குமோ! இருக்கலாம் இருக்கலாம். நட்சத்திரம் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

// We The People said...
குந்தித் தின்றால் குன்று போல் ஆவோம்! //

இது. இதுதான் நட்சத்திரப் பஞ்ச்.

said...

// MeenaArun said...
he is CEO and MD of talent maximus

chk this http://www.talentmaximus.com/management_team.htm

MeenaArun //

வாங்க மீனா அருண். ஒரு புதுத் தகவலச் சொல்லீருக்கீங்க. ஒரு நடிகனாப் பாத்த அரவிந்தசாமியை சாப்ட்வேர் கம்பெனி ஓனராப் பாக்க முடியலையே!

said...

*****************************************
ஆகா! அப்ப நானும் பதினைஞ்சு வருசங் கழிச்சி அப்படித்தான் இருப்பேன்னு சொல்றீங்களா? ஆனா அரவிந்தசாமி அளவுக்குப் பளபளப்பு இருக்காதுங்க.
*****************************************

நான் ஒன்னும் அந்த படத்துல(இடது) இருப்பது அரவிந்சாமின்னு சொல்லலியே ...
அ**** வெ** சாமி- தான சொன்னேன்

said...
This comment has been removed by the author.
said...

Sorry for typing in English.Basically he is an enterperner.Kaveri enginering works , trichy was started by his father.He is from abusiness family,no wonder he chosed his career in the line of business.we only(rasigais) miss him.hmmmm

Btw, if i show this photo to my husband then he will happy as he is my favourite hero

MeenaArun

said...

தொடர் கதை வர்றதே வாரத்திற்கு ஒரு முறைதான். அதனையும் செவ்வாய் தாண்டியும் போடாமல் விட்ட ஜி.ரா விற்கு எனது கண்டனங்கள் :)))

[என்ன.. இந்த வாரம் ஸ்பான்ஸர் பண்ண விளம்பரம் கிடைக்கலையா?...]

said...

ஒரு தென்றல் புயலானது.... ச்சே.. பூகம்பமானது....

said...

டுபுக்கு ஏற்கனவே இந்த படத்த போட்டு எஙகள மாறி ரசிகைகள் மனச நோக அடிச்சார் நீஙக வேற
adding fuel to the fire!!!

என்னவோ போஙக நீஙக ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன்!!!!எல்லாம் அந்த முருகனுக்கே வெளிச்சம்!!!

said...

என்னது சாப்பிட்டவேர் கம்பெனி நடத்துறாரா? சொல்லவேயில்லையே!.//

ungaluku theriyadha idhu kelunga

namitha- oru e commerce company naduthuraanga

ippo sun tv la verudhey thirumadhi program andh anadikai (adhan vidhi herion) -avanaga project manage am singapore la

innum niraya peru irukkanga pa

said...

my 2 cents
madhavn is having a networking company in vadapalani

nepolian is having a BPO

said...

// MeenaArun said...
Sorry for typing in English.Basically he is an enterperner.Kaveri enginering works , trichy was started by his father.He is from abusiness family,no wonder he chosed his career in the line of business.we only(rasigais) miss him.hmmmm //

வருத்தப்படாதீங்க மீனா. இதெல்லாம் காலத்தின் கோலம். யாரும் தப்பிக்க முடியாது.

// Btw, if i show this photo to my husband then he will happy as he is my favourite hero

MeenaArun //

காட்டுனீங்களா? அவங்க என்ன சொன்னாங்க?

said...

// ஜி said...
ஒரு தென்றல் புயலானது.... ச்சே.. பூகம்பமானது.... //

நடுங்கிப் போயிட்டீங்கள்ள ஜி. :-)


// Radha Sriram said...
டுபுக்கு ஏற்கனவே இந்த படத்த போட்டு எஙகள மாறி ரசிகைகள் மனச நோக அடிச்சார் நீஙக வேற
adding fuel to the fire!!!

என்னவோ போஙக நீஙக ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன்!!!!எல்லாம் அந்த முருகனுக்கே வெளிச்சம்!!! //

ஆகா டுபுக்கு இந்தப் படத்தைப் போட்டுட்டாரா? நான் பாக்கலைங்க. தெரியாமப் போட்டுட்டேன். மன்னிச்சிருங்க.

ஆனா ஒன்னுங்க....நான் நல்லவன்னாவது நெனைச்சீங்க பாருங்க...அது என்ன ரொம்ப ஃபீல் பண்ண வெச்சிருச்சுங்க. ரொம்ம்ம்ம்ம்ப நன்றிங்க. :-)

said...

// கார்த்திக் பிரபு said...
என்னது சாப்பிட்டவேர் கம்பெனி நடத்துறாரா? சொல்லவேயில்லையே!.//

ungaluku theriyadha idhu kelunga

namitha- oru e commerce company naduthuraanga //

அடடே! இத நம்மத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குச் சொன்னா பயனுள்ளதாயிருக்குமே. ஆகா.

// ippo sun tv la verudhey thirumadhi program andh anadikai (adhan vidhi herion) -avanaga project manage am singapore la //

நான் டீவி...நாடகங்கள் பாக்குறதில்ல காபி. விதி ஹீரோயின் பூர்ணிமா ஜெயராம்னு தெரியும். அதுக்கு மேலத் தெரியாதுப்பா.

// innum niraya peru irukkanga pa //

எடுத்து விடுங்க.

// MeenaArun said...
my 2 cents
madhavn is having a networking company in vadapalani

nepolian is having a BPO //

மீனா, ஒன்னு மட்டும் புரியுது. சினிமாவுல சம்பாதிச்சதை எல்லாரும் நல்லபடியா இன்வெஸ்ட் செஞ்சிருக்காங்கன்னு. வாழ்க வளமுடன்.

said...

நான் என்னாடா குத்தம் பண்னுனேன் ...
என்னை என்டா வம்புக்கு இழுக்கிருங்க ...

அன்புடன்
அரவிந்சாமி !

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

//பாத்தா எங்க இருந்தாலும் கண்டுபிடிக்கிற மாதிரிதானே இருக்காரு.//
நக்கலு....
சினிமாவில தொலைந்து போய்விட்டார் தானே?

said...

சினிமாவிலதான் சான்ஸ் போச்சு!
சுமோவிலயாவது சான்ஸ் தேடிதான்!
இப்படி!!
(சுமோ-ஜப்பானிய மாமிச மலைகளின் மல்யுத்தம்)
யோகன் பாரிஸ்

said...

//chk this http://www.talentmaximus.com/management_team.htm//

மேலே குறிப்பிட்ட சுட்டியில் பார்த்ததில் இன்னுமொரு சுவாரசியமான தகவல். TalentMaximus-ன் HR Director ராஜா கிருஷ்ணமூர்த்தி வேறு யாருமல்ல... நமக்கெல்லாம் நன்றாக அறிமுகமாகிய 'கிட்டி' என்னும் வில்லன் நடிகர்தான்.

இவருடைய (ஒரிஜினல்) தந்தைதான் TV சீரியல்களில் (மெட்டி ஒலி) மற்றும் திரைப்படங்களில் (டும் டும் டும்) தந்தை பாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கும் 'டெல்லி குமார்.

காவேரி இஞ்சினியரிங் ஒர்க்ஸ் நிறுவனர் 'சுவாமி' இவருடைய சுவீகாரத் தந்தை ஆவார்.

இப்போ கமெண்ட் (அட அதுக்குதானே பதிவு போட்டிருக்கார் பாவம்). எல்லாரும் போட்ட கமெண்ட்தான். கொஞ்சம் பெருசா போட்டிருக்கேன் :-)

நேற்று...
ரோஜாவின் ராஜா
கன்னி(களின்) தளபதி
செலுலாய்டின் புதையல்!
மறுபடியும் மறுபடியும்
பாசமலர்கள் சூடிய இந்திரன்(ரா)

இன்று...
அட போங்கப்பா...

said...

ஜட்ஜ்: நீங்க அரவிந்த் சாமி மனைவியா? எல்லா பொண்ணுங்களும் அவர்மாதிரி கணவன் வேணும்னு அலையுறாங்க நீங்க விவாகரத்து கேக்குறீங்களே.
அ. சாம்இ மனைவி: Yes your honor.

அ. சாமி கோர்ட்டுக்குள் நுழைவதை ஜட்ஜ் பார்க்கிறார்.

ஜட்ஜ்: Divorce granted.

said...

ஏய். யாருப்பா அது என் உடம்புல அரவிந்த் சாமி முகத்தை ஒட்டுனது? அதுவும் இராகவனைப் போல மொட்டை அடிச்சு? இந்த போட்டோ ஷாப் தொல்லை தாங்க முடியலையப்பா... :-)

said...

// சுந்தர் / Sundar said...
நான் என்னாடா குத்தம் பண்னுனேன் ...
என்னை என்டா வம்புக்கு இழுக்கிருங்க ...

அன்புடன்
அரவிந்சாமி ! //

சுந்தர், கலக்கல். படிச்சிட்டு சிரிச்சிட்டேன். உண்மையிலேயே அவர் இந்தப் பதிவைப் பாத்தா அப்படித்தான் கேப்பாருன்னு நெனைக்கிறேன்.

said...

// மயூரேசன் Mayooresan said...
//பாத்தா எங்க இருந்தாலும் கண்டுபிடிக்கிற மாதிரிதானே இருக்காரு.//
நக்கலு....
சினிமாவில தொலைந்து போய்விட்டார் தானே? //

அதென்னவோ உண்மைதான் மயூர். அவர் காணாமல் போனதிற்குக் காரணம் பலவிதப் பாத்திரங்களிலும் பொருந்தாமைன்னு நெனைக்கிறேன்.

said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
சினிமாவிலதான் சான்ஸ் போச்சு!
சுமோவிலயாவது சான்ஸ் தேடிதான்!
இப்படி!!
(சுமோ-ஜப்பானிய மாமிச மலைகளின் மல்யுத்தம்)
யோகன் பாரிஸ் //

வாங்க யோகன் ஐயா. நீங்களும் களத்துல இருக்கீங்களா. போட்டுத் தாக்கீருக்கீங்க. சுமோன்னு இந்தியாவுல ஒரு வண்டியும் ஓடுது.

said...

// Sridhar Venkat said...
//chk this http://www.talentmaximus.com/management_team.htm//

மேலே குறிப்பிட்ட சுட்டியில் பார்த்ததில் இன்னுமொரு சுவாரசியமான தகவல். TalentMaximus-ன் HR Director ராஜா கிருஷ்ணமூர்த்தி வேறு யாருமல்ல... நமக்கெல்லாம் நன்றாக அறிமுகமாகிய 'கிட்டி' என்னும் வில்லன் நடிகர்தான். //

ஆகா..அவரு பேரு கிருஷ்ணமூர்த்தியா. அப்ப இவங்கள்ளாம் இப்ப அமெரிக்காவுல இருக்காங்களாக்கும். நல்லாயிருந்தாச் சரி. மேரிலேண்டு மாகாணத்துல ஜெர்மன் டவுன் அப்படீங்குற ஊருக்குப் போயிருந்தப்போ அங்க ஒரு தென்னிந்திய உணவுக்கூடம் இருந்தது. அங்க அரவிந்தசாமி அடிக்கடி சாப்பிட வருவாருன்னு சொன்னாங்க.

// இவருடைய (ஒரிஜினல்) தந்தைதான் TV சீரியல்களில் (மெட்டி ஒலி) மற்றும் திரைப்படங்களில் (டும் டும் டும்) தந்தை பாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கும் 'டெல்லி குமார். //

ஆகா. அவரா இவர். மக்களே ஸ்ரீதர் எப்பேர்ப்பட்ட தகவல் கொண்டு வந்திருக்கிறார் பாருங்க. ஜோரா ஒரு வாட்டி கை தட்டுங்க. ஸ்ரீதர், டிவி பாக்குற தாய்க்குலங்கள்ளாம் ஒங்களுக்கு நன்றியோட இருப்பாங்க.

// காவேரி இஞ்சினியரிங் ஒர்க்ஸ் நிறுவனர் 'சுவாமி' இவருடைய சுவீகாரத் தந்தை ஆவார். //

ஓகோ. சரி.

// இப்போ கமெண்ட் (அட அதுக்குதானே பதிவு போட்டிருக்கார் பாவம்). எல்லாரும் போட்ட கமெண்ட்தான். கொஞ்சம் பெருசா போட்டிருக்கேன் :-) //

நன்றி. :-)

// நேற்று...
ரோஜாவின் ராஜா
கன்னி(களின்) தளபதி
செலுலாய்டின் புதையல்!
மறுபடியும் மறுபடியும்
பாசமலர்கள் சூடிய இந்திரன்(ரா)

இன்று...
அட போங்கப்பா... //

ஆகா...அவரு நடிச்ச படங்களை வெச்சே அவருக்குக் கவிமாலை சூட்டீட்டீங்களே.

அது சரி. விஜயகாந்தும் இந்த அளவுக்குத்தான இருக்காரு. அவர மட்டும் சினிமாவுல ஏன் விட்டு வெச்சிருக்காங்கன்னு ஊருல கேக்குறாங்க!

said...

பதிவுல படம் மட்டும்தான் இருக்கு. உங்களுக்கு பிடித்த / எல்லாருக்கும் பிடித்த கமெண்ட் எல்லாம் தெரியலையே... அப்படியே கமெண்ட்களை பதிவிலும் ஏற்றினால் நல்லா இருக்காது? சரி சரி... மயில் குயில் ஆராய்ச்சி (இன்னும் எத்தனை நாளைக்கோ?!?!) எல்லாம் சீக்கிரம் முடிச்சிட்டு அடுத்த போட்டோ போடுங்க பாஸ்.

said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)