Monday, February 18, 2008

தங்க மரம் - 6

முன்கதைச் சுருக்கம்

இருண்டு கிடக்கும் ஆலோர் கிரகத்தைப் பிழைப்பிக்க தனிமாவாலும் பிடிமாவாலும் மட்டுமே முடியும் என்று அரசி சொன்னதைக் கேட்டுச் செயல் முடிக்க வாக்குறுதி அளித்தாள் தனிமா. பாதி உண்டிருந்த கிரகத்திற்காகப் புறப்பட்டாள் தனிமா.....
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5

தங்க மரம் - 6

ஆலோரின் நடுக்கோபுர உச்சியிலிருந்து ஜிவ்வென எழும்பிப் பறந்தார்கள் தனிமாவும் பிடிமாவும். ம்ம். இல்லையில்லை. பிடிமாதான் இறக்கைகளை விரித்துப் பறந்தாள். தனிமா பிடிமாவின் மேல் உட்கார்ந்திருந்தாள்.

பழுப்பு நிறம்...மரகதத் தந்தம்..இரண்டு அழகிய இறக்கைகள் கொண்ட பெண்யானைதான் பிடிமா. அவள் மீது ஏறித்தான் பறந்து கொண்டிருந்தாள் தனிமா. அதுவும் பூமியை நோக்கி. அவ்வப்பொழுது திசைகாட்டியை எடுத்துப் பறக்கும் வழியைச் சரி பார்த்துக் கொண்டாள். விண்வெளியில் வழி மறந்து விட்டால் தொலைந்து போக வேண்டியதுதானே.

முதன்முதலாக தன்னுடைய கிரகத்தை விட்டுத் தெரியவே தெரியாத இடத்திற்குப் போகிறாள். அதுவும் போரிடுவதற்கு. எப்படிப் போரிடப் போகின்றோமோ என்ற எண்ணம் அவ்வப்பொழுது தோன்றினாலும் உள்ளத்தில் உறுதி குறையவேயில்லை. அதுவுமில்லாமல் பறக்கும் பொழுது காணும் காட்சிகள் அவளுக்கும் பிடிமாவிற்கும் புதுமகிழ்ச்சியை உண்டாக்கின. பலப்பல சிறிய நட்சத்திரங்கள்..எரிகற்கள்..கிரகங்கள்..தொலைவில் மினுக்கும் தாரகைகள்...என்று நவரத்தினங்களைக் கொட்டி வைத்த சாலையில் செல்வது போல இருந்தது. தேவையான ஆற்றல் இருந்ததால் பறப்பது பிடிமாவிற்கு எளிதாகவே இருந்தது.
அவ்வப்பொழுது ஒளித்தாரகைகளுக்குள் புகுந்து வெளிவருவதும் இருவருக்கும் சுகமாக இருந்தது. அந்தத் தாரகைகளில் இருந்து ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சம் ஏற்றிக் கொண்டார்கள்.

கிட்டத்தட்ட பாதி தொலைவு கடந்திருந்தார்கள். ஒருவருக்கொருவர்தானே பேச்சுத்துணை.

"நாம் புறப்பட்டு இரண்டு நாட்களாகிவிட்டன. பூமியை அடைய இன்னும் ஒன்றரை நாளாவது ஆகும் என்று தெரிகிறது. புறப்படும் பொழுது கட்டிக் கொடுத்த காரிசுகள் நிறைய இருக்கின்றன. ஆளுக்கொன்று கொறிப்போமா?"

தலையை ஆட்டி மறுத்தாள் பிடிமா. "வேண்டாம் தனிமா. சற்று நேரம் போகட்டும். இப்பொழுது பசியில்லை." பேசிக்கொண்டே வந்த பிடிமா படக்கென்று நின்று விட்டாள்.

ஏன் என்று கேட்க நினைத்து வாயைத் திறந்தாள் தனிமா. ஆனால் முடியவில்லை. அவளால் சிறிதும் அசைய முடியவில்லை. பிடிமாவாலும்தான். ஆகையால்தான் படக்கென்று நின்று விட்டாள். ஒரு நொடி இருவருமே திகைத்துப் போனார்கள். இப்பிடி அசையாமல் தொடர்ந்து நின்று விட்டால் ஆற்றல் வீணாகிவிடுமே. பிறகெப்படி பூமிக்குப் பறப்பது?

அப்பொழுதுதான் அவர்களுக்கு நேர்ந்தது சற்றுப் புரியத் தொடங்கியது. கண்ணுக்குத் தெரியாத ஒருவிதக் கண்ணாடிக் கயிற்றால் இருவரும் கட்டப்பட்டிருந்தார்கள். மிகமிக மென்மையான அந்தக் கயிற்றின் அழுத்தம் புரியவில்லை. ஆனால் இறுக்கம் புரிந்தது.

ஒரு பயங்கரம் அவர்களது கண்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. ஆம். அடர்மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய சிலந்தி. பக்கவாட்டில் இருந்து நகர்ந்து அவர்களுக்கு முன்னால் நின்றது. அதன் வலையில்தான் தனிமாவும் பிடிமாவும் சிக்கியிருந்தார்கள். பார்க்கவே அருவெறுப்பாக இருந்த அந்தச் சிலந்தி எச்சில் ஒழுகும் கோரவாயின் கூரிய பற்களைக் காட்டிக் கொண்டு விரைந்து வந்தது.

கைகால்களை அசைக்க முடியாவிட்டாலும் மனத்தால் எதையும் செய்யும் திறமையுள்ளவர்கள் ஆலோரிகள். மனதால் முறுக்கிக் கண்ணாடிக் கயிறுகளை நெகிழ்த்தினார்கள் தனிமாவும் பிடிமாவும். கயிறு அறுபடுவதைக் கண்டதும் சிலந்து மறுபடியும் கண்ணாடிக்கயிறுகளைக் கக்கியது. இவர்கள் அறுக்க அறுக்க சிலந்தியும் கயிறுகளைக் கக்கிக் கொண்டேயிருந்தது.

இப்படியே சென்று கொண்டிருந்தால் வேலைக்காகது என்பதைத் தனிமா புரிந்து கொண்டாள். மனதிற்குள்ளேயே பிடிமாவுக்குச் செய்தி அனுப்பினாள்.

"பிடிமா.. இந்தச் சிலந்தியை நாம் மனதால் தாக்குவோம். நீ அதன் எட்டு கால்களையும் ஒவ்வொன்றாய் மனதால் உடை. நான் அந்தக் கண்ணாடி கக்கும் வாயைக் கிழிக்கிறேன். இல்லையென்றால் தொடர்ந்து நாம் கட்டப்பட்டுக்கொண்டேயிருப்போம்."

பிடிமாவுக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்தது. மனதால் சிலந்தியின் ஒரு காலைத் தும்பிக்கையால் பிடித்து இழுப்பது போல இழுத்தது. யாருமே இல்லாமல் தன்னுடைய கால் இழுபடுவதை உணர்ந்த சிலந்தி ஆத்திரத்தோடு திரும்பியது. அதே நேரத்தில் சரியாக அதன் வாயில் குத்தினாள் தனிமா.

தன்னுடைய உணவு/எதிரிகள் கண் முன்னே கட்டுப்பட்டுக் கிடக்க தன்னைத் தாக்குவது யாரென்று தெரியாமல் தடுமாறியது சிலந்தி. காய் காய் என்று கத்திக் கொண்டு தன் காலை யாரோ பிடித்திருக்கிறார்கள் என்று நினைத்து....தன் காலைத் தானே கடித்தது. பிடிமாவும் விடாமல் காலைப் பிடித்து முறுக்க முறுக்க சிலந்தியில் அலறல் கூடியது. ஆனால் தொடர்ந்து அலறவும் விடாமல் தனிமா அதன் தாடையிலேயே குத்தினாள். தாடையும் உடைந்து கிழிந்து எச்சிலும் கண்ணாடியிழைக் கூழும் ஒழுகின. யாரும் இல்லாமல் தானே தாக்கப்பட்டுக் கொள்ளும் காட்சி மிகக்கொடூரமாக இருந்தது.

அதற்குள் ஒரு காலை உடைத்து விட்ட பிடிமா அடுத்த காலுக்குத் தாவியது. மிகவிரைவிலேயே இரண்டு மூன்று கால்கள் நொறுங்கின. சிலந்தி நேராக நிற்க முடியாமல் லம்பி ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. வாய் கிழிந்து போனதால் கண்ணாடிக் கயிறுகளை அதனால் பீய்ச்சியடிக்கவும் முடியவில்லை. வலியும் வேதனையும் தாளாமல் தானே விழுந்து புரண்டது. அதுதான் சரியான நேரம் என்று தனிமாவும் பிடிமாவும் தங்களைக் கட்டியிருந்த கண்ணாடிக்கயிறுகளை அறுத்துக் கொண்டார்கள்.

மனதினாலேயே இருவரும் வழிந்திருந்த கண்ணாடியிழைக் கூழால் சிலந்தியை இறுக்கக் கட்டினார்கள். நகரவும் முடியாமல் மூச்சு விடவும் முடியாமல் சிறிது நேரத்திலேயே சிலந்தி விறைத்தது.

பெருமூச்சு விட்டபடியே தங்களைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள் தனிமாவும் பிடிமாவும். ஆளுக்கு இரண்டு காரிசுகளைக் கடித்துத் தின்றார்கள். களைப்பு சற்று நீங்கியது. அப்படியே சிறுது பானிகாவும் குடித்துக் கொண்டார்கள். நா வறட்சியைப் போக்கியதுடன் சிறிது தெம்பும் வந்தது.

நேரம் கடத்த விரும்பாமல் உடனே புறப்பட்டார்கள். அப்பொழுதுதான் ஒரு பெரிய உண்மை இருவருக்குமே புரிந்தது. ஆம். இருவரின் ஆற்றலிலும் பெருமளவு சிலந்திச் சண்டையிலேயே வீணாகிப் போனது. மிச்சமிருக்கும் ஆற்றல் அவர்களை பூமியில் கொண்டு சேர்க்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் முன்னேறுவது என்ற முடிவோடு தொடர்ந்தார்கள். விரைந்து செல்ல முடியாத வகைக்கு ஆற்றல் பெருமளவில் குறைந்து வேகம் மட்டுப்பட்டது. வழியில் அங்காங்குள்ள ஒளிப்பொட்டுகளிலிருந்தும் தொலைதூரத் தாரகைகளில் இருந்தும் ஆற்றலைக் கொஞ்சம் பெற்றுக்கொண்டாலும்....அவையெல்லாம் போதவில்லை. ஒருவழியாக இருவரும் குற்றுயிரோடு தங்களை இழுத்துக் கொண்டு பால்வெளி மண்டலத்திற்குச் சென்றார்கள்.

பால்வெளி மண்டலத்தில் நுழையும் பொழுதுதான் ஆற்றல் முழுவதும் தீர்ந்து மயங்கத் தொடங்கினார்கள். அந்த மயக்கம் தீர வரவேற்றான் கதிரவன். உலகையெல்லாம் தனது ஒளிக்கற்றைகளால் காக்கும் கதிரவனைச் சொல்கிறேன். அந்தக் கதிரவனின் வெள்ளொளியானது தெம்பைக் கொடுத்தாலும் ஏற்கனவே இருந்த ஆற்றலையெல்லாம் வீணடித்து விட்டதால்....இப்பொழுது கிடைக்கும் ஆற்றல் அவர்களை நகர்த்தவும் உயிரோடு வைத்திருக்கவும் மட்டுமே முடிந்தது. பூமியை நெருங்க நெருங்க களைப்புதான் இருவரையும் வாட்டியது.

சரியாகக் காற்று மண்டலத்திற்குள் நுழைந்ததுமே புவியீர்ப்புவிசை அவர்களைப் பற்றி இழுத்தது. ஆனால் அதைத் எதிர்த்துப் பறக்கும் ஆற்றல் இல்லாமலையால் பிடிமா பிடிமானம் இழந்தது. நிலை குலைந்து கீழே விழுந்தாள் தனிமா. இருவரும் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று தரையை நோக்கி இழுக்கப்பட்டார்கள்.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

பி.கு - வழக்கமாக படம் வரைந்து தரும் கிரண் விடுமுறை முடிந்து திரும்பவும் அமெரிக்கா சென்று விட்டதால் அடுத்த வாரத்தில் இருந்து படங்கள் வரும்.

17 comments:

said...

he he! me the firsht-aaa?

//பெண்யானைதான் பிடிமா//
அப்ப ஆண் யாணை களிமா-வா? :-)

//திசைகாட்டியை எடுத்துப் பறக்கும் வழியைச் சரி பார்த்துக் கொண்டாள். விண்வெளியில் வழி மறந்து விட்டால் தொலைந்து போக வேண்டியதுதானே//

அட, GPS எல்லாம் வச்சிருக்குதுங்க! :-)

said...

//அப்படியே சிறுது பானிகாவும் குடித்துக் கொண்டார்கள்.//

பானிகா=பானகம்=ஃபான்டா?

சிலந்திச் சண்டை சூப்பரா இருந்திச்சி!
மஞ்சா சிலந்தி ரொம்ப விஷமாச்சே ஜிரா! எப்படி விஷத்தைத் தூவாம வலைய மட்டும் தூவிக்கிட்டே இருந்துச்சோ! தூக்கக் கலக்கமா இருந்திருக்கும் போல!

சண்டைக்கு சவுண்டு எஃபெக்டு எல்லாம் நாங்களா கொடுத்துக்கணுமா? :-)

said...
This comment has been removed by the author.
said...

குமரன்,
கதை படிச்சா அனுபவிக்கனும் ஆராயக்கூடாதுனு ஜி.ரா நினைச்சிட்டாரு போல ;)

ஜி.ரா,
கதை பட்டையை கிளப்புது... அடுத்த பகுதிக்கு ஆவலுடன்...

said...

ஆகா11
ஒரு வழியா நம்ம ஊருக்கு வந்து சேந்துட்டாங்களா??
அடுத்து என்ன நடக்க போகுதோ!!

////எங்கேயோ இடிக்கிறதே? விண்வெளிப்பயணத்தில் நாட்கணக்கு எப்படி வரும்? பூமியிலிருந்து செல்பவர்கள் பூமிக்கணக்கை வைத்துக் கொள்வார்கள் என்று சொல்லலாம். பூமிக்கு எப்படி நாட்கணக்கு வருகின்றது என்று தெரியும். தட்டையான ஆலோருக்கு எப்படி நாட்கணக்கு வரும்? புரியவில்லையே?
////

விண்வெளியில் ஒரு பறக்கும் யானையை வைத்து பறந்து வர முடியுமா??
விண்வெளியில் எங்கிட்டிருந்து கண்ணாடி இழை கக்கும் மஞ்சள் சிலந்தி வந்தது???
என்ன அண்ணாச்சி!!!

அவரே ஏதோ அடிச்சி விட்டுட்டு இருக்காறு,நீங்க வேற இந்த மாதிரி டவுட்டு எல்லாம் கேக்கறீங்க!! :-)

said...

உங்களுக்கும் யானைன்னா பிடிக்கும்ன்னு சொல்றதுக்காக இப்படியா சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பீங்க. முதல் மூன்று பத்தியில மூணு தடவை பிடிமா பத்தி சொல்லிட்டீங்க. :-)

//நாம் புறப்பட்டு இரண்டு நாட்களாகிவிட்டன. பூமியை அடைய இன்னும் ஒன்றரை நாளாவது ஆகும் என்று தெரிகிறது.//

எங்கேயோ இடிக்கிறதே? விண்வெளிப்பயணத்தில் நாட்கணக்கு எப்படி வரும்? பூமியிலிருந்து செல்பவர்கள் பூமிக்கணக்கை வைத்துக் கொள்வார்கள் என்று சொல்லலாம். பூமிக்கு எப்படி நாட்கணக்கு வருகின்றது என்று தெரியும். தட்டையான ஆலோருக்கு எப்படி நாட்கணக்கு வரும்? புரியவில்லையே?

பானிகா புரியுது. காரிசுன்னா?

பால்வெளி மண்டலத்துல நுழைஞ்சவுடனே கதிரவனா? கதிரவன் பால்வெளியில் இருக்கிற விண்மீன்களில் ஒருவன் தானே?! அவன் ஒளி பால்வெளிக்குள் நுழைந்தவுடனேயே வந்துவிடுமா?

said...

கத நல்லாதான் போகுது.

ஆனா ஆறு சேப்டரையும் படிச்சு முடிச்சுதும் மூச்சு வாங்குதே. ஏன்.

ஒரு வேளை தேமா, புளிமான்னு பத்தாங்கிளாஸ் பாடம் நியாபகம் வந்ததாலயா. சும்மா டமாசுக்கு :)

ஜிரா. இணைய வாண்டுமாமா !!

said...

சூப்பரா போகுதுங்க!!

said...

அதெப்படிங்க ஜிரா....ஒரு சமயம் மரகத தந்தம் அதுவே இன்னொரு தரம் மகரந்த தந்தமாகுது?.... :)

ஒவ்வொரு வாரமும் கரெக்டா சஸ்பென்ஸ் வச்சு முடிக்கிறது ரொம்ப நல்லாயிருக்கு :)

said...

ஜிரா கலக்குறிங்க...நன்றாக போகுது..;))

\\ஜிரா. இணைய வாண்டுமாமா !! \\

ரீப்பிட்டேய்ய்

said...

'சூப்பரா போகுதுங்க'

Same here

//சண்டைக்கு சவுண்டு எஃபெக்டு எல்லாம் நாங்களா கொடுத்துக்கணுமா? :-)//

is it so?

said...

நல்லாக் கொண்டு போறிங்க ராகவன்..வழக்கம் போலவே..

said...

நல்லாருக்கு.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
he he! me the firsht-aaa? //

ஆமா ஆமா நீங்கதான் எப்பவுமே மொதலாச்சே

////பெண்யானைதான் பிடிமா//
அப்ப ஆண் யாணை களிமா-வா? :-) //

ஆண்யானையே கதைல வரலையேய்யா.....


////திசைகாட்டியை எடுத்துப் பறக்கும் வழியைச் சரி பார்த்துக் கொண்டாள். விண்வெளியில் வழி மறந்து விட்டால் தொலைந்து போக வேண்டியதுதானே//

அட, GPS எல்லாம் வச்சிருக்குதுங்க! :-) //

ரவிசங்கரே வெச்சிருக்காரு..அதாவது GPS..ஆலோரிக கிட்ட இருக்காதா?

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அப்படியே சிறுது பானிகாவும் குடித்துக் கொண்டார்கள்.//

பானிகா=பானகம்=ஃபான்டா? //

இல்லைங்க இது ஸ்பெஷல் ஆலோர் வெல்லமும் எலுமிச்சமில்லாத பழச்சாறும் சேத்து செய்றது. ரொம்ப நல்லது. :)


//சிலந்திச் சண்டை சூப்பரா இருந்திச்சி!
மஞ்சா சிலந்தி ரொம்ப விஷமாச்சே ஜிரா! எப்படி விஷத்தைத் தூவாம வலைய மட்டும் தூவிக்கிட்டே இருந்துச்சோ! தூக்கக் கலக்கமா இருந்திருக்கும் போல! //

நீங்க சொல்ற மஞ்சள் வேற. நான் சொல்ற மஞ்சள் வேற. நீங்க சொல்றது மஞ்ச மஞ்சள். நான் சொல்றது பூவரசு மஞ்சள். இதுல வெசம் கெடையாது. அப்படியே ஆளச் சுருட்டி மடக்கி கடிச்சித் தின்னுரும்.

// சண்டைக்கு சவுண்டு எஃபெக்டு எல்லாம் நாங்களா கொடுத்துக்கணுமா? :-) //

அப்ப நீங்கதான் எம்.எஸ்.இனியமானா? :D

said...

// வெட்டிப்பயல் said...
குமரன்,
கதை படிச்சா அனுபவிக்கனும் ஆராயக்கூடாதுனு ஜி.ரா நினைச்சிட்டாரு போல ;) //

ஹி ஹி அதே அதே

// ஜி.ரா,
கதை பட்டையை கிளப்புது... அடுத்த பகுதிக்கு ஆவலுடன்... //

நானுந்தான் :)

// CVR said...
ஆகா11
ஒரு வழியா நம்ம ஊருக்கு வந்து சேந்துட்டாங்களா??
அடுத்து என்ன நடக்க போகுதோ!! //

என்ன நடக்கும்? யானைதான். இவ்ளோ தூரம் பறந்து வந்துருக்குல்ல...

//////எங்கேயோ இடிக்கிறதே? விண்வெளிப்பயணத்தில் நாட்கணக்கு எப்படி வரும்? பூமியிலிருந்து செல்பவர்கள் பூமிக்கணக்கை வைத்துக் கொள்வார்கள் என்று சொல்லலாம். பூமிக்கு எப்படி நாட்கணக்கு வருகின்றது என்று தெரியும். தட்டையான ஆலோருக்கு எப்படி நாட்கணக்கு வரும்? புரியவில்லையே?
////

விண்வெளியில் ஒரு பறக்கும் யானையை வைத்து பறந்து வர முடியுமா??
விண்வெளியில் எங்கிட்டிருந்து கண்ணாடி இழை கக்கும் மஞ்சள் சிலந்தி வந்தது???
என்ன அண்ணாச்சி!!!

அவரே ஏதோ அடிச்சி விட்டுட்டு இருக்காறு,நீங்க வேற இந்த மாதிரி டவுட்டு எல்லாம் கேக்கறீங்க!! :-) //

அதான... சிவியாருக்குப் புரிஞ்சது குமரனுக்குப் புரியலையே... :)

// குமரன் (Kumaran) said...

பானிகா புரியுது. காரிசுன்னா? //

காரிசுன்னா கடிச்சுத் திங்குறது...ஆலோர்ல கிடைக்க மேப்பை மாவும் பன்னீரும் கலந்து செய்றது. ஒன்னு தின்னாலே ரொம்பச் சத்து. :)

// பால்வெளி மண்டலத்துல நுழைஞ்சவுடனே கதிரவனா? கதிரவன் பால்வெளியில் இருக்கிற விண்மீன்களில் ஒருவன் தானே?! அவன் ஒளி பால்வெளிக்குள் நுழைந்தவுடனேயே வந்துவிடுமா? //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்ன குமரன்.. இப்பிட்யெல்லாம் கேக்குறீங்க? என் மேல எதாச்சும் கோவமா? நாம்பாட்டுக்க எதோ கதை திரிக்கிறேன்...

said...

இந்தப்பகுதி ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு.

முந்திப் படிச்ச சிலந்திக்கதை (Charlotte's Web)
ஒண்ணும் நினைவுக்கு வருது.

பிடிமா ஒரு சூப்பர் ஸ்டார்:-)))

said...

பிடிமா சூப்பர்! (எனக்கும் யானை 'பிடி'க்கும்ப்பா :) நல்லா கதை விடறீங்க ராகவரே... ஐ மீன்... நல்லா கதை சொல்லுறீங்கன்னு சொல்ல வந்தேன் :)