Saturday, May 17, 2008

சு-வா? ஜா-வா?

போட்டீன்னு வந்துருச்சுய்யா.... நல்லதோ கெட்டதோ... வந்தாச்சு... அப்ப என்ன செய்யனும்? ரெண்டு பேருக்கு ஒரு வேலையக் குடுத்து யாரு நல்லா செஞ்சாங்கன்னு பாக்கனும். அப்பத்தான ஒரு முடிவுக்கு வர முடியும்? அதுக்குத்தான் இந்தப் பதிவு.

இசையரசிக்கு வலைப்பூ வெச்சிருக்குறதால நான் பி.சுசீலா பாடுன பாட்டு மட்டுந்தான் கேப்பேன்னு நீங்க நெனச்சா அது தப்பு. எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரின்னு தொடங்கி இப்ப இருக்குற ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்னும் கேப்பேன். பிடிக்கனும். அவ்வளவுதான்.

ஆனா இங்க சர்வேசன் கெளப்புன பிரச்சனை பி.சுசீலாவா எஸ்.ஜானகியான்னுதான். ஆகையால மத்தவங்கள விட்டுருவோம். இவங்க ரெண்டு பேரோட நேரம்... நம்மளப் போல ஞானசூனியங்க கிட்டயும் கேள்வி ஞானங்க கிட்டயும் மாட்டனும்னு இருக்கு. என்ன செய்றது.

எஸ்.ஜானகியோட குரல் செயற்கையா இருப்பது போல எனக்கு ஒரு உணர்வு. அதுக்காக எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதோன்னு சந்தேகப்படுற அளவுக்கு எனக்கு ஐயப்பாடு கிடையாது. அவங்க பாடுன பல பாட்டுகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒன்னா ரெண்டா...நெறைய இருக்கு. ஆனா இசையரசியின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். முதலிடம் அவங்களுக்கு. அவ்வளவுதான். அதுனால எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதுன்னு சொல்ல மாட்டேன்.

சரி. பதிவோட மையக்கருத்துக்கு வருவோம். எஸ்.ஜானகியா பி.சுசீலாவான்னு போட்டி வைக்கனும்ல. ரெண்டு பேத்துக்கும் ஒரே பாட்டைக் குடுத்துப் பாட வைப்போமா?

வைதேகி காத்திருந்தாள் படத்துல பி.சுசீலா பாடுன ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாட்டு இங்க இருக்கு.


அதே பாட்டைத் தெலுங்குல எஸ்.ஜானகி பாடியிருக்காங்க. ஜாபில்லிக்கோசம் ஜாபில்லிக்கோசம்னு. அந்தப் பாட்டு இங்க.



ரெண்டையும் கேட்டுப் பாருங்க. உங்க கருத்து என்னனு மட்டும் சொல்லுங்க.

இப்ப ஒரே பாட்டை ரெண்டு பேரையும் பாட விட்டுக் கேட்டோம். ரெண்டு பேரும் ஒரே பாட்டுல பாடுனா? அதுக்கும் இளையராஜா கிட்டயும் எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்டயும் பேசி ஏற்பாடு செஞ்சாச்சு. ஆளுக்கு ஒரு பாட்டு கச்சிதமா போட்டுக் குடுத்துட்டாங்க.

கற்பூர தீபம் படத்துல காலம் காலமாய் பெண்தானே கற்பூர தீபம்னு ரெண்டு பேரும் சேந்து பாடுறாங்க. கேளுங்க. கேட்டுட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க.



அடுத்து யாருய்யா.. ஓ.. எம்.எஸ்.விஸ்வநாதனா? என்ன படங்க? சொல்லத்தான் நினைக்கிறேனா? நினைச்சுக்கிட்டே இருந்தா எப்படி? சொல்லுங்க. ஓ! படத்தோட பேரே அதானா? அந்தப் படத்துல பல்லவி என்று மன்னன் கேட்கப் பாடுவேனடின்னு ரெண்டு பேரும் பாடுறாங்க. கேளுங்க. கேளுங்க.




அட... ஒரு டூயட் பாட்டு வேற இருக்கா. சூப்பர். யாரு கூட டூயட். எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூடயா. அப்பச் சரி. என்ன படம்? கண்ணில் தெரியும் கதைகளா? என்ன பாட்டு? நான் ஒரு பொன்னோவியம் கண்டேன். நல்ல பாட்டு. இந்தப் படத்துல இந்தப் பாட்டுக்கு மட்டும் இளையராஜா இசை. சரி. அந்தப் பாட்டையும் கேட்டுருவோம்.



என்னது கன்னடப் பாட்டு விட்டுப் போயிருச்சா? என்ன பாட்டு? பிரியாங்குற படமா? ஸ்ரீதேவி நடிச்சாங்களே.. ரஜினிகாந்த். ஆமா.. அந்தப் படத்துல டார்லிங் டார்லிங்குன்னு ஒரு பாட்டு பி.சுசீலா பாடியிருக்காங்க. அதுக்கென்ன? ஓ! அந்தப் படத்த கன்னடத்துல டப்பிங் பண்றப்போ அதே பாட்டை எஸ்.ஜானகி பாடியிருக்காங்களா? அப்பச் சரி. அதையும் கேட்டுருவோம்.

எஸ்.ஜானகி பாடியது



பி.சுசீலா பாடியது





என்ன மக்களே...எங்க ஓட்டுப் போடுறதுன்னு பாக்குறீங்களா? இங்க ஓட்டெல்லாம் போட வேண்டாம். கருத்து சொன்னாப் போதும். ஏன்னா இவங்க ரெண்டு பேருமே இசைத்துறையில் நிறைய சாதிச்சவங்க. நம்ம ரசிகர்கள். ஆகையால நம்ம கருத்துகளை மட்டும் சொல்லலாம். அந்த உரிமை நமக்கு இருக்கும். மக்களே ஸ்டார்ட் தி மூசிக் :)

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

24 comments:

said...

சர்வேசா...உன் சர்வே என்ன லேசா? :-)))

பதிவுலகமே பத்திக்கிட்டு எரியப் போகுது!
பத்த வச்ச ஜிராவே ஜெய் ஹனுமான்! :-))

இருங்க
ராசாவே ஒன்ன காணாத நெஞ்சு-ஜாபில்லிக்கோசம் பாட்டை ஒன்னோட ஒன்னு கம்பேர் பண்ண முடியாது!
ரெண்டும் வேற வேற இஷ்டைல், மொழி!

ஜிரா
வேணும்னே தேடிப் புடிச்சி இந்தப் பாட்டை Comparisonக்கு வச்சீங்களா? ய்ப்பா எப்படி எல்லாம் நுண்ணரசியலா சிந்திக்கறாங்கப்பா சாமீ :-)

said...

ஜிரா

இந்தப் பாட்டிலும் சுசீலாம்மா, ஜானகி ரெண்டு பேரும் பாடுவாங்க!
http://youtube.com/watch?v=9dWVTlEVEMo

தாய் மூகாம்பிகை! இசையரசி எந்நாளும் நானே - பாட்டு!

மக்களே, இதையும் கம்பேரிசனுக்கு வச்சிக்குங்க! சுசீலாம்மா மிகவும் கம்பீரமாகப் பாடி நிறுத்த அடுத்து ஜானகி எடுப்பாங்க அவங்க அவதாரத்தை, ஒரே பாட்டில்!

கேளுங்க!
அப்பறம் வந்து உங்க பொன்னான வாக்கைப் போடுங்க!

சர்வேசன் சத்தியமா இப்பிடி ஒரு சர்வேயை எதிர்பார்த்திருக்க மாட்டாரு! :-))

said...

ஆஹா, அடிச்சு ஆட ஆரம்பிச்சிட்டீங்களா? :)

ஜானு ரசிகர்கள் அனைவரும், உங்கள் பேராதரவை அளிக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

சுசீலாவும் எனக்குப் பிடிக்கும். ஆனா, ஜானு மாதிரி வருமா? :)


ஒரு விஷயம் கவனிச்சிருக்கேன். எங்க கும்பல்லையும், கொஞ்சம் வயசானவங்களுக்கு (30+), சுசீலாவ ரொம்ப பிடிக்கும். இளசுகளுக்கு, ஜானு பிடிக்கும்.
திருச்சிற்றம்பலம் :)

said...

ஆமாம், என்னை மட்டும் தமிழ் தெரியுமான்னு கேட்டுட்டு இப்போ இந்த கம்பேரிசனுக்கு மட்டும் எதுக்கு தெலுங்கு/கன்னடமெல்லாம் ?

என்னமோ பெரிசா கொளுத்தி போட்ட மாதிரித்தான் தெரியுது.....ஏதாவது வாணவேடிக்கை பார்க்க கிடக்க்குமான்னு பார்ப்போம்..

நாராயணா, கோவிந்தா (அதென்ன திருச்சிறம்பலம்?):-)

said...

வணக்கம் ராகவன்

உங்கள் கட்சி சார்பில் தேர்தலுக்காகப் போட்ட பிரச்சாரப்பாடல்கள் அருமை ;-)

சர்வே சருக்கு சொன்னது தான் இங்கேயும் சொல்றேன்
தராசு சமநிலையில் தான் இருக்கு, ஆனால் ஏற்கனவே ஒரு பாடலை ஒருவர் பாடிவைத்து அதை நாம் அதிகம் கேட்டபின் இன்னொருவர் பாடும்போது அது யாராக இருந்தாலும் ஏற்கமறுக்கின்றது.

said...

சந்தேகமே இல்லை. ஜாபில்லி கோசம்தான் :)

said...

// கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

உங்கள் கட்சி சார்பில் தேர்தலுக்காகப் போட்ட பிரச்சாரப்பாடல்கள் அருமை ;-)

சர்வே சருக்கு சொன்னது தான் இங்கேயும் சொல்றேன்
தராசு சமநிலையில் தான் இருக்கு, ஆனால் ஏற்கனவே ஒரு பாடலை ஒருவர் பாடிவைத்து அதை நாம் அதிகம் கேட்டபின் இன்னொருவர் பாடும்போது அது யாராக இருந்தாலும் ஏற்கமறுக்கின்றது. //

பிரபா, நான் எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதுன்னு நிரூபிக்க இந்தப் பாட்டுகளைப் போடலை. வெறும் ரசிகனா என்னால பிடிச்சிருக்கு. பிடிக்கலைன்னுதான் சொல்ல முடியும்.அவங்களோட இசைத்திறமையை அளக்கக் கூட என் கிட்ட தராசு கிடையாது.


இந்தப் பாடல்களைக் கொடுத்ததுக்குக் காரணம் ஒன்னுதான். எஸ்.ஜானகி ஏத்துற மெருகை பி.சுசீலா ஏத்தலைன்னு ஒரு கருத்து சொன்னாரு சர்வேசன். எஸ்.ஜானகி பாட்டுதான் ரொம்பப் பிடிக்கும்னு அவரு சொல்லீருந்தா அதை ஏத்துக்கிட்டிருப்பேன். ஏன்னா ஒவ்வொருவர் ரசனையும் ஒருவிதம். ஆனா மெருகேத்தலைங்குறதும் ரைம்ஸ் மாதிரி பாடுறாங்கங்கன்னு சொல்றதும் அதிகப்படியா பட்டது. இளையராஜா எஸ்.ஜானகிக்கு நெறைய பாட்டுகள் குடுத்தும் பி.சுசீலாவிற்கு மிகக் குறைவாகக் குடுத்ததும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அப்படியிருக்குறப்போ தனக்குக் குடுக்க்கப்படாத பாடல்ல எப்படி ஒருவர் திறமையைக் காட்ட முடியும்? அதான் ரெண்டு பேருமே பாடுன பாட்டுகளைத் தேடிக் கண்டுபிடிச்சு.. இப்பச் சொல்லுங்கய்யா...எஸ்.ஜானகி செஞ்சதுல இவங்க என்ன செய்யலை? அல்லது இவங்க ஸ்டைல்ல பாடியிருந்தா அதுல என்ன குறைன்னுதான் நான் கேக்குறேன். மத்தபடி போட்டீன்னு நான் வைக்கலை. :)

ஆகையால நானும் உங்க கட்சிதான்.

said...

ரெண்டும் ரெண்டு கண்ணுதான், ஆனாலும் கடைசிவரைக்கும் பிசிறு தட்டாத குரல்னால, சுசிலாம்மாவுக்குத்தான் ஒரு புள்ளி கூடுதலாய்ப் போகும்..

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இருங்க
ராசாவே ஒன்ன காணாத நெஞ்சு-ஜாபில்லிக்கோசம் பாட்டை ஒன்னோட ஒன்னு கம்பேர் பண்ண முடியாது!
ரெண்டும் வேற வேற இஷ்டைல், மொழி! //

ரவி... வைதேகி காத்திருந்தாளோட தெலுங்கு வடிவம்தான் அந்தப் படம். எல்லாப் பாட்டுகளும் அதே தமிழ்ப் பாட்டுகள்தான். ரெண்டு பேருக்கும் ஒரே பாட்டு கண்டுபிடிக்கிறதே கஷ்டம். அதையும் தேடிப்பிடிச்சு கண்டுபிடிச்சா நுண்ணரசியல் நுனிமூக்கு உரசியல்னு சொல்றீங்களே.. :) அதுனாலதான் வேற சில பாட்டுகளு கொடுத்திருக்கேன். அதுவும் ரெண்டு பேரும் ஒன்னாவே பாடுன பாட்டுகள்.

said...

வந்தேன்..
பார்த்தேன்..
கேட்டேன்..
ரசித்தேன்.. ;)

பாடல்களுக்கு மிக்க நன்றி ;)

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஜிரா

இந்தப் பாட்டிலும் சுசீலாம்மா, ஜானகி ரெண்டு பேரும் பாடுவாங்க!
http://youtube.com/watch?v=9dWVTlEVEMo

தாய் மூகாம்பிகை! இசையரசி எந்நாளும் நானே - பாட்டு! //

ரவி, இந்தப் பாட்டை ஒப்புமைக்கு எடுத்துக்க முடியுமான்னு தெரியலை. ஏன்னா... இருவருமே வெவ்வ்வேற ஆட்களுக்குப் பாடனும். கடவுளே பாடுற மாதிரி பி.சுசீலா பாடனும். கடவுள் அருளால் பாடுற மாதிரி எஸ்.ஜானகி பாடனும். சரி. மக்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.

said...

ஒரு பதிவுக்கு சாதாரணமாக நான் கொடுக்கும் நேரம் 3 முதல் 5 நிமிடங்கள்!

ஆனால், இந்தப் பதிவுக்கு நான் எடுத்துக் கொண்டதுகிட்டத்தட்ட 30 நிமிடங்கள்!

அப்படி என்னைக் கட்டிப் போட்டுவிட்டீர்கள்!

எல்லாவற்றையும் கேட்டபின்னர் என் மனதில் நிற்பது ஜானகியே!

இது ஒரு விதத்தில் அநியாஅயமும் கூட!

ஏனெனில், ஜானகி தன் இளமைக் குரலுடன் சுசீலாவுக்கு இணையாக வர முயற்சித்தபோது, விஸ்வநாதன் அதைச் செய்யத் தவறினார்.

ஒரு சுசீலா மறுத்த கோபத்தில் இளையராஜாவினால் ஜானகிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. நமக்கு ஜானகியின் இசைவளம்!

அந்த நேரத்தில் குரல்வளம் சற்று தேய்ந்த நிலையில், சுசீலா ஈடு கொடுத்துப் பாடிய பாடல்களை வைத்து இவர்களை ஒப்பீடு செய்ய இயலாது.

இருவருமே, நமக்கு கிடைத்த வரங்கள்!

எனக்கு ஜானகியை கொஞ்சம் அதிகமாகப் பிடிக்கும்.

ஜானி படப் பாடல் ஒன்று போதும்!

"காற்றில்"!!!!

said...

// SurveySan said...

ஆஹா, அடிச்சு ஆட ஆரம்பிச்சிட்டீங்களா? :) //

வாங்க அண்ணாச்சி. அடிக்கிறது வழக்கமில்லை. ஆடுறது வேணும்னா வழக்கம்னு வெச்சுக்கோங்களேன். :)

// ஜானு ரசிகர்கள் அனைவரும், உங்கள் பேராதரவை அளிக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். //

ஆமா ஆமா. வருக வருக. பேராதரவைத் தருக என்று கேட்டுக் கொள்கிறேன்.


// சுசீலாவும் எனக்குப் பிடிக்கும். ஆனா, ஜானு மாதிரி வருமா? :) //

பெரியவரே.... திரும்பவும் சொல்றேன். எஸ்.ஜானகி உங்களுக்கு ரொம்பப் பிடிக்குறது எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. எஸ்.ஜானகி எனக்கும் பிடித்த பாடகியே. இசையரசியை ஒரு படி மேல பிடிக்கும். அதுக்காக எஸ்.ஜானகிக்குப் பாட்டு தெரியாதுன்னு நான் சொல்லலை.

இங்க கேள்வியே. இசையரசி பி.சுசீலாவுக்கு நீங்க சொல்ற மெருகேத்துறது வருமான்னுதான். இளையராஜா ரெண்டு பேருக்கும் வெவ்வேறு விதமான பாட்டுகளைக் கொடுத்திருக்காரு. ஆகையால வாய்ப்புகளும் வேற. ஜானகிக்கு நூறு பாட்டுன்னா...சுசீலாவுக்க்கும் அஞ்சு பாட்டு. இதே விஸ்வநாதன் இருந்தப்ப சுசீலாவுக்கு நூறு பாட்டுன்னா எஸ்.ஜானகிக்கு ஒரு பாட்டுதான். அதுனாலதான் இருவருக்கும் வாய்ப்புகள் வந்தது வெவ்வேற இடங்கள்ள இருந்து. ஆகையாலதான் ஒரே பாட்டுகளைத் தேடிப் பிடிச்சிப் போட்டிருக்கு. கேட்டுட்டு.. இந்தப் பாட்டுகள்ள ஜானகி ஏத்துன எந்த மெருகை இவங்க ஏத்தலைன்னு சொல்லுங்க. குரல் பிடிக்கிறதுங்குறது வேற விஷயம். அதுக்கு மேல உங்க பி.சுசீலா இதுல செய்யாம விட்டது எதைன்னு சொல்றீங்க?


// ஒரு விஷயம் கவனிச்சிருக்கேன். எங்க கும்பல்லையும், கொஞ்சம் வயசானவங்களுக்கு (30+), சுசீலாவ ரொம்ப பிடிக்கும். இளசுகளுக்கு, ஜானு பிடிக்கும்.
திருச்சிற்றம்பலம் :) //

இது காமெடி. உங்களுக்கே 40+. இதுல 30+ பத்திக் கமெண்ட்டு...செம காமெடி...சூப்பரப்பு. ;)

said...

//வந்தேன்..
பார்த்தேன்..
கேட்டேன்..
ரசித்தேன்.. ;)

பாடல்களுக்கு மிக்க நன்றி ;)//


ஜஸ்டிஸ் கோபியண்ணனுக்கு ஒரு ரிப்பீட்டு :))

said...

VSK,

//எல்லாவற்றையும் கேட்டபின்னர் என் மனதில் நிற்பது ஜானகியே!//

வெற்றி வெற்றி வெற்றி!

;)

ஜி.ரா,
//இது காமெடி. உங்களுக்கே 40+. இதுல 30+ பத்திக் கமெண்ட்டு...செம காமெடி...சூப்பரப்பு. ;)//

அடப்பாவிகளா, இது என்ன கூத்து?
யாரு கட்டி விட்ட கதை இது? :)

said...

VSK, //ஒரு சுசீலா மறுத்த கோபத்தில் இளையராஜாவினால் ஜானகிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. நமக்கு ஜானகியின் இசைவளம்!//

சுசீலாவா, எல்.ஆர்.ஈஸ்வரியா?

said...

//எஸ்.ஜானகியோட குரல் செயற்கையா இருப்பது போல எனக்கு ஒரு உணர்வு// இதான் பாயின்டு.

எம். எஸ், எம். எல்.வி. ல பொது மக்கள் கிட்ட பெயர் பெற்றது யார்? அது "போல", உண்மையான குரல், உயிருள்ள உணர்வுகள். சுசிலாம்மா "மேல் ஸ்தாயி போனா, காதை கழட்டி வைக்கத் தோணாது" (உ.கு.).

எனக்கு வாணி ஜெயராம் அம்மா தான் ரொம்பவே பிடிக்கும். ஆனா, கேள்வி சு. / ஜா. தானே!? சொன்னாப்ல, இது பர்சனல் சாய்ஸ். ஆனா, போட்டியின்னு வந்திட்டா, நம்ம சைட் பற்றி சொல்ல வேண்டுமல்லவா:‍-)

said...

// கோபிநாத் said...

வந்தேன்..
பார்த்தேன்..
கேட்டேன்..
ரசித்தேன்.. ;)

பாடல்களுக்கு மிக்க நன்றி ;)//


வந்ததுக்கும்
பாத்ததுக்கும்
கேட்டதுக்கும்
ரசித்ததுக்கும்
நன்றி :)

// கப்பி பய said...

ஜஸ்டிஸ் கோபியண்ணனுக்கு ஒரு ரிப்பீட்டு :))//


ஜ்ஸ்டிஸ் கோபியண்ணனுக்குச் சொன்னதையே ஒரு ரிப்பீட்டேய்

said...

ராகவன், ஜானகி அம்மாவைப் பிடித்தாலும் ரொம்பவே ரசித்தாலும் இன்னும் ஈடுபாடு சுசீலா அம்மாவுக்குத்தான். கெக்கேபிக்குணி சொல்கிறமாதிரி ஒரு உணர்வும் ஜானகி குரலில் உண்டு.

குறையில்லை.
என்னைப் பொறுத்தவரையில் இருவரையும் கேட்டது மட்டுமே அனுபவம்.
அதில் சு.அம்மாவை ரசித்து உருகினது கூட இருக்கும்.

நன்றிப்பா.

said...

// ஒரு பதிவுக்கு சாதாரணமாக நான் கொடுக்கும் நேரம் 3 முதல் 5 நிமிடங்கள்!

ஆனால், இந்தப் பதிவுக்கு நான் எடுத்துக் கொண்டதுகிட்டத்தட்ட 30 நிமிடங்கள்!

அப்படி என்னைக் கட்டிப் போட்டுவிட்டீர்கள்! //

அது நான் இல்லைங்க. இரண்டு பெரிய பாடகிகள். அவங்க பாடல்கள் கட்டிப் போட்டிருக்கு.

// எல்லாவற்றையும் கேட்டபின்னர் என் மனதில் நிற்பது ஜானகியே!

இது ஒரு விதத்தில் அநியாஅயமும் கூட!

ஏனெனில், ஜானகி தன் இளமைக் குரலுடன் சுசீலாவுக்கு இணையாக வர முயற்சித்தபோது, விஸ்வநாதன் அதைச் செய்யத் தவறினார்.

ஒரு சுசீலா மறுத்த கோபத்தில் இளையராஜாவினால் ஜானகிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. நமக்கு ஜானகியின் இசைவளம்! //

வி.எஸ்.கே ஐயா, எந்தப் பாடகியைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை இசையமைப்பாளருக்கு உண்டு. அந்த வகையில் எம்.எஸ்.வி மற்றும் இளையராஜா அவர்கள் செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.


// அந்த நேரத்தில் குரல்வளம் சற்று தேய்ந்த நிலையில், சுசீலா ஈடு கொடுத்துப் பாடிய பாடல்களை வைத்து இவர்களை ஒப்பீடு செய்ய இயலாது. //

இருவரையும் ஒப்பிடுவதே கடிது. அந்த அளவுக்கு நமக்குத் தெரிந்தது குறைவு.

// இருவருமே, நமக்கு கிடைத்த வரங்கள்! //

உண்மை. மறுப்பதற்கில்லை.

// எனக்கு ஜானகியை கொஞ்சம் அதிகமாகப் பிடிக்கும். //

அதில் தவறேதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரைக் கூடக் குறைய பிடிக்கும். ஆனால் இங்கு கேள்வியே வேறு.

எஸ்.ஜானகியைப் போல பி.சுசீலாவிற்குப் பாடலில் மெருகேற்றத் தெரியாது என்பது சர்வேசன் வாதம். அது குறித்து உங்கள் கருத்து என்ன? அவருடைய கருத்தை ஒப்புக்கொள்கின்றீர்களா?

said...

ஒப்பிடல் என்பது மிகவும் நுணுக்கமானது

ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி என்பதால் உயிரோட்டமான எதுவொன்றையும் ஒப்பிட இயலாது.

இரண்டு கணிப்பொறிகளை ஒப்பிடலாம், இரண்டு மனித மூளைகளை?


ஏ.ஆர்.இரகுமானுக்கு ஒரு ஸ்டைல் என்றால் இளையராஜாவுக்கு இன்னொரு ஸ்டைல். இருவரையும் ஒப்பிடுவதைக்கூட ஏற்க முடியவில்லை.

காலநேரம், சந்தர்ப்ப சூழல், இறைஅருள் என்கிற அதிர்ஷ்டம் என்று பல காரணிகளால் உச்ச நிலைகள் வேறுபடலாம்.

அதுபோல ஒப்பீடுகளில் ஒருவர் உயர்வதும் மற்றவர் தாழ்வதும் நமது மனதின் சார்புநிலைகள், தலைமுறை இடைவெளிகள், பிரமை மயக்கங்களும் சேர்ந்தே அளப்பதால் தான்.

ஜெமோ - சாருன்னு ஒப்பிடறதில கூட.

எனக்கும் சு தான் பிடிக்கும், ஆனா, "டாடி டாடி ஓ மை டாடி" யை ஜா தான் அருமையா பாடமுடியும்.

said...

சுசீலாவா ஜானகியா என்ற கேள்வி அடிக்கடி எழுந்து கொண்டே தான் இருக்கிறது நாமும் விவாதித்துக்கொண்டே தான் இருக்கிறோம்
இந்த விவாதம் என்றுமோ முற்றுப்பெறாத விவாதம் ஏனெனில் சமமான இருவரைத்தான் நாம் ஒப்பிடுவோம்.. அந்த வகையில் சுசீலாவும் ஜானகியும் சமமானவர்களே அல்ல சுசீலாவையும் லீலாவையும் ஒப்பிடலாம், ஜானகியையுன் வாணிஜெயராமையும் ஒப்பிடலாம் அது தான் சரியான ஒப்பிடுதல் இருந்தாலும் விவாதம் என்று வந்துவிட்டதால் இதோ என் ஒப்பீடு...

ஒரே சூழ‌லுக்கு இருவ‌ரின் குர‌லிலும் பாட‌ல்க‌ளை பார்ப்போம் ஒப்பிடுவோம்

தாலாட்டு இதில் சுசீலாம்மாவுக்கு என்றுமே முதலிடம்
எத்தனை வகையான தாலாட்டுக்கள்

உதாரணத்திற்கு
மிகவும் பிரபலமான அத்தைமடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா . இதில் தான் எத்தனை இனிமை எத்தனை பாவம்.

இதே போல் ஜானகி பாடிய கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் என்ற பாடலும் எம்.எஸ்.வியின் இசையில் மிகவும் பிரபலம் ஆனாலும் இரண்டிலும் எது என்று நீங்களே கேட்டுபாருங்கள் .. விடை உங்களுக்கே தெரியும் .. ஆம் அத்தைமடி மெத்தையடி சற்று கூடுதல் மதிப்பெண் பெறத்தான் செய்கிறது


ராகவன் குறிப்பிட்ட நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே .. இதில் ஒரு இடம் வரும் அனுபவம் அனுபவம் .... அழகர் மடியில் எனது உலகம் என்று நிறுத்தி நானொரு பொன்னோவியம் என சுசீலாம்மா பாடுவதை கவனியுங்கள் அழகோ அழகு மற்றும் கம்பீரம் தெரியும்


இன்னும் எத்தனையோ பாடல்கள். சுசீலாம்மா ஒரு பாட்டில் அதற்கு உண்டான பாவத்தை அந்தந்த இடங்களில் அளவாக அதையும் அழகாக தருவார் என்பது பலபேருக்கும் தெரிந்ததே..

காலமிது காலமிது ‍சித்தி திரையில் ஒலித்த பாடல். தாலாட்டுத்தான் இது அதையே பெண்மைக்கு உறைக்கும் அறிவுரையாக கண்ணதாசன் மாற்ற குரலில் அந்த தாய்மையை எவ்வளவு அழகாக கொண்டுவந்திருப்பார் சுசீலா .. தொடக்கமே அழகு பெண்ணாக பிறந்தவர்க்கு என்று அவர் சொல்லும் விதமே பெண் படும் பாட்டை சொல்லப்போதுமானது

தாலாட்டிலேயே தண்ணீர் பிர‌ச்சனையைப்ப‌ற்றி சொல்வ‌தாக‌ அமைந்த‌ க‌ண்ணான‌ பூம‌க‌னே பாட‌லை கேளுங்க‌ள் . இர‌ண்டே இர‌ண்டு வாத்திய‌ங்க‌ளுட‌ன் குழையும் குர‌ல் இசைய‌ர‌சியினுடைய‌து..


தாலாட்டிலிருந்து காதலுக்கு வருவோம்.. காதல் என்றாலே வெட்கம் நாணம் எல்லாம் சேர்ந்துக்கொள்ளுமே..
காதல் ரசம் சொட்ட எத்தனையோ பாடல்களை சுசீலாம்மா பாடியிருக்க அதிலிருந்து சில துளிகளை இதோ ..

ஒரு நாள் இரவில் கண்ணுறக்கம் பிடிக்கவில்லை
அத்தான் என்னத்தான்
ப‌ருவ‌ம் என‌து பாடல்
என்ன என்ன வார்த்தைகளோ
ஆயிரம் நிலவே வா
மணமேடை மலர்களுடன் தீபம்
எல்லாமே வேறு வேறு சூழலில் அமைந்த காதல் பாடல்கள்

அதே போல் சோகப்பாடல்களில் இசையரசியை மிஞ்ச யாருமில்லை
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடல் ஒன்று போதும் சோகப்பாடல்களில் சுசீலாம்மா பெருமை பாட‌

நெஞ்சம் மறப்பதில்லை
நினைக்கத்தெரிந்த மனமே
என்னை மறந்ததேன் தென்றலே
ஆடாமல் ஆடுகிறேன்
காதல் சிறகை காற்றினில் விரித்தே என சோகப்பட்டியலும் நீளம்

எந்த வகையான பாடலாயினும் இசையரசி அதை அழகுபடுத்தத்தான் செய்திருக்கிறார்

தமிழுக்கும் அமுதென்று பேர்
திங்கள் மாலை வெண்குடையாம்
மார்கழித்திங்கள்
கூத்துப்பாடலான நவராத்திரி பாடல்
மூச்சுவிடாம‌ல் பாடுவ‌தாக அமைந்த‌ வாடிய‌ம்மா வாடி

தெய்வீக‌ப்பாட‌ல்க‌ள் ப‌ல‌ என சொல்லிக்கொண்டே போக‌லாம்
ஓசை கொடுத்த‌ நாய‌கியே என்று ஞான‌க்குழ‌ந்தையில் ஒலிக்கும் பாட‌லில் அவ‌ர‌து குர‌லினிமையும் பாட‌லில் த‌மிழாளுமையையும் கேட்க‌த்திக‌ட்டாத‌ ஒன்று


ப‌ர‌த‌ம் ப‌ற்றிய‌ பாட‌ல்க‌ளில் ம‌ட்டும் இசைய‌ர‌சி குறைவா என்ன‌
ம‌ன்ன‌வ‌ன் வ‌ந்தானடி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, நலந்தானா, அம்பிகை நாடகம் , உன்னை எண்ணி எண்ணி ..என எல்லாமே அழகான பாடல்கள்

குழ‌ந்தைப்பாட‌ல்க‌ளிலும் ச‌ளைத்த‌வ‌ர‌ல்ல‌ .. குழ‌ ந்தைபோல‌ பாடினாரே த‌விர‌ குர‌ல்மாற்றிப்பாட‌ தேவையில்லை
குழ‌ந்தையும் தெய்வ‌மும் , க‌ண்னிழ‌ந்த‌ பிள்ளைக்கு , தோடுடைய செவிய‌ன்


இசைவ‌லிமை நிறைந்த‌ பாட‌ல்க‌ள்
http://www.youtube.com/watch?v=b9H6a3iK9Jg

விர‌க‌ப்பாட‌ல்க‌ளை விரச‌ப்பாட‌லாக்க‌ம‌ல் பாடியவ‌ர் இவ‌ர்
இன்று வ‌ந்த இந்த‌‌ ம‌ய‌க்க‌ம், அத்தானின் முத்த‌ங்க‌ள் என ஏராள‌ம்

இதோ ஒரு க‌ன்ன‌ட‌ விர‌க‌ப்பாட‌ல் ஆனாலும் அழ‌குப்பாடல்
http://www.youtube.com/watch?v=SAK7EIYJ4FQ


http://www.youtube.com/watch?v=VonVLEg9740

இவையெல்லாம் இசைய‌ர‌சியின் வ‌ல்ல‌மைக்கு சில‌ சான்றுக‌ளே
இன்னும் ஆயிர‌ம் ஆயிர‌ம் பாட‌ல்க‌ள் அத்த‌னையும் சொல்ல‌ ஒரு நாள் போதாது

said...

சு-வா? ஜா-வா? என்ற கேள்வியே தேவையில்லாதது; நிச்சயம் சு-தான்.

said...

// கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

எனக்கு வாணி ஜெயராம் அம்மா தான் ரொம்பவே பிடிக்கும். ஆனா, கேள்வி சு. / ஜா. தானே!? சொன்னாப்ல, இது பர்சனல் சாய்ஸ். ஆனா, போட்டியின்னு வந்திட்டா, நம்ம சைட் பற்றி சொல்ல வேண்டுமல்லவா:‍-) //

எனக்கும் வாணி ஜெயராம் ரொம்பப் பிடிக்கும். :) அதுனால நானும் ஒங்க சைடு தான். :)