Sunday, July 13, 2008

கெமிக்கோ பிசிக்கோ (அறிவியல் சிறுகதை)

இந்தச் சிறுகதை சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக.

கெமிக்கோ பிசிக்கோ....

இடம்....... ஐரோப்பாவின் ஒரு ரகசிய ஆய்வுக் கூடம். பொழுது கிருஸ்துமஸ் பிறப்பதற்கு முந்திய வாரயிறுதியின் குளிரும் நடுயிரவு.

விலைமதிப்பில்லாத அந்தக் காரிலிருந்து இறங்கிய பால் ஹெண்டிரிக்சுக்கு அட்ரீனலின் அளவுக்கு அதிகமாகவே எழுபத்திரண்டு வயதில் சுரந்தது. மூக்கிலும் வாயிலும் புகை விட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

இந்த ஒரு பொழுதுக்காக அவர் காத்திருந்தார். அவருக்காக அங்கு விஞ்ஞானி எரிக் உதவியாளர்களோடு காத்திருந்தார். யூரோ யூரோவாக அள்ளி அள்ளிக்
கொடுத்தவர் ஹெண்டிரிக்ஸ் தானே.

"வெல்கம் மிஸ்டர் பால். எல்லாம் தயாரா இருக்கு. நாங்க எல்லாருமே சோதனையை முடிச்சிட்டோம். All set. நீங்களும் ஒரு முறை சோதனை பண்ணீட்டீங்கன்னா இந்தக் கெமிக்கோ பிசிக்கோ தரோம்போ லிம்போசிஸ் வெற்றீன்னு உலகத்துக்குச் சொல்லீரலாம்."

எரிக் சொன்னதைக் கேட்டு ஒயின் குடித்துக் குடித்துச் சிவந்த முகத்தில் இரத்தவோட்டமே தெளிவாகத் தெரியும் வகையில் மலர்ச்சியைக் காட்டினார் பால். "Yes Erik. கண்டிப்பா வெற்றிதான். உங்க மேல நம்பிக்கை இருக்கு. இந்த வெற்றி உங்க ஐம்பது வயதுக் கனவான நோபல் பரிசைக் கண்டிப்பா வாங்கிக் கொடுக்கும். எனக்கோ இழந்த பல இன்பங்களை மீட்டுக் கொடுக்கும். உலகத்தில் புதுப்புரட்சியையே உண்டாக்கும். பொழுதுபோக்குகளின் போக்கே மாறிவிடும்."

சொன்ன பாலின் பேச்சில் மகிழ்ச்சி தெரித்தது. "கெமிக்கோ பிசிக்கோ தரோம்போ லிம்போசிஸ்...." தனக்குள்ளேயே ஒரு முறை சொல்லிக் கொண்டார்.

உள்ளே நுழைந்ததும் தானியங்கிக் கதவுகள் மூடிக் கொண்டன. அந்தப் பெரிய அறை ஒரு பெரிய சோதனைக்காகத் தயாராக இருந்தது.

இரண்டு மூலைகளிலும் ஒரே மாதிரியான இரண்டு கூண்டு அறைகள் இருந்தன. ஒரு கூண்டு அறையிலிருந்து மற்றொன்றைப் பார்க்கக் கூடாத வகையில் நடுவில் ஒரு தடுப்பு. கண்ணாடிக் கதவு. உள்ளே உட்கார நாற்காலி. நம்மைப் போன்ற சாதரணமானவர்களுக்குப் புரியாத பல அறிவியல் பொருட்கள். சரி. அவைகளைப் பற்றி நமக்கென்ன கவலை. கதைதானே முக்கியம்.

செய்யப் போகும் சோதனையைப் பற்றி எரிக் விளக்கினார்.

"These two chambers are identical. ஒவ்வொன்னுலயும் ஒவ்வொருத்தர் உக்காரனும். ஒருத்தர் அதுல transmitter (அனுப்புனர்). இன்னொருத்தர் receiver (பெறுனர்). அதத் தேர்ந்தெடுத்துட்டு switch on பண்ணா கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ் வேலை செய்யத் தொடங்கீரும். இதுல இன்னொரு வசதி இருக்கு. அனுப்புறதையோ பெறுவதையோ கூட்டிக்கவும் குறைச்சிக்கவும் ரெண்டு பக்கமும் வசதி இருக்கு."

"Impressive Mr.Erik. நம்ம காலம் கடத்த வேண்டாம். முயற்சி பண்ணலாமே."

"கண்டிப்பா. ஆனா நீங்க மொதல்ல அமைதியா இருங்க. Being relaxed will help better results. ஏற்கனவே நாங்க எல்லாருமே இந்தச் சோதனையைப் பண்ணிப் பாத்துட்டோம். எல்லாமே பாதுகாப்பானது. கொஞ்சம் அமைதியா தொடங்குனா போதும்."

மூச்சை இரண்டு மூன்று முறை இழுத்து விட்டுக் கொண்டு தன்னை அமைதிப் படுத்திக் கொண்டார் பால். எரிக்கின் உதவியாளர்கள் கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளேயிருந்த நாற்காலியில் பாலை உட்கார வைத்தார்கள். Receiver என்பதைத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு கதவு மூடப் பட்டது.

மற்றொரு அறைக்குள்ளே எரிக் நுழைந்து உட்கார்ந்தார். Transmitter என்பதைத் தேர்ந்தெடுத்தார் அவர். அவருடைய அறையின் கண்ணாடிக் கதவை மூடிக் கொண்டார். திரைப்படங்களில் காட்டுவது போல Start என்று ஒரு பட்டன் இருந்தது. அதைத் அமுக்கினார். கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ் வேலையைத் தொடங்கியது.

எரிக் தன்னுடைய அறையிலிருந்த மின்விசிறியைத் துவக்கினார். சிலுசிலுவென காற்று அந்த அறைக்குள் நிரம்பியது.

முதலில் பால் ஹெண்டிரிக்சுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சாதாரணமாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலத்தான் உட்கார்ந்திருந்தார். திடீரென பிடரியில் லேசாகக் குளிர்ந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குளிர்காற்று அவர் மேல் வீசுவது போல உணர்ந்தார். அப்படியே சாவகாசமாகச் சாய்ந்து உட்கார்ந்து அதை அனுபவித்தார்.

எரிக் உள்ளேயிருந்த ஒரு பெட்டியைத் திறந்தார். அதில் மஸ்டர்டு சாசோடு ஹாட் டாக் இருந்தது. அதிலிருந்த கிளம்பிய வாடை அவர் நாசியில் கம்மென்று நுழைந்தது. அப்படியே அதை எடுத்துக் கடித்தார். சுவைத்துச் சாப்பிட்டார்.

சாய்ந்து உட்கார்ந்து காற்றை அனுபவித்துக் கொண்டிருந்த பாலின் மூக்கில் கடுகு வாடை ஏறியது. என்னடா கடுகு வாடை என்று யோசிக்கும் பொழுதே அதன் காரம் தொண்டையில் இறங்கியது. ஹாட் டாக்.....ஆம். அதனுடைய சுவை என்று புரிந்து போனது. சாப்பிடாமலேயே அந்தச் சுவையை அனுபவித்தார் பால். ஆகா. ஆகா.

பெட்டியிலிருந்து ஒயின் பாட்டிலை எடுத்து வாயில் சிறிது கவிழ்த்துக் கொண்டார் எரிக்.

இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை பாலின் தொண்டையில் கலகலவென இறங்கியது. ஒயின்... ஒயின்... ஒயின்....

கெமிக்கோ பிசிக்கோ தரம்போ லிம்போசிஸ் ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கியது. பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி வெற்றி.

எந்த விஞ்ஞானிக்கும் இருக்கும் நோபல் பரிசு ஆசை எரிக்குக்கும் இருந்தது. எதையாவது மிகப் புதுமையாகச் சாதிக்க வேண்டுமென்று பலப்பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் கிடைத்தது பால் ஹெண்ட்ரிக்சின் நட்பு. இருவருக்கும் வெவ்வேறு தேவைகள். அந்தத் தேவைகளை இணைத்தது கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ்.

இளம் வயதில் ஐரோப்பாவின் அனைத்து நாட்டுப் பெண்களையும் ரசித்து ரசித்து ருசித்தவர் பால் ஹெண்டிரிக்ஸ். முதல் காதலும் முதல் முத்தமும் முதல் உறவும் மறந்து போகும் அளவிற்குத் திகட்டத் திகட்ட அனுபவித்தார். ஆனால் இந்த எழுபத்தியிரண்டு வயதில் பில்லியன் பில்லியனாகப் பணம் இருந்தும் உடம்பு ஒத்துழைக்காமல் ஆசையை மட்டும் சுமந்து கொண்டிருந்தார். வயக்கராவும் வக்கில்லாமல் போனது. வக்கிரம் மட்டும் போகவில்லை.

ஒருவர் பேசுவதை இன்னொரு இடத்தில் கேட்க முடிகிறது. ஒருவர் செய்வதை இன்னொரு இடத்தில் பார்க்க முடிகிறது. ஏன் ஒருவர் உணர்வதை மட்டும் இன்னொரு இடத்தில் உணரமுடியாது? இந்தக் கேள்விதான் விஞ்ஞானி எரிக்கின் உள்ளத்தில் ஊறிக்கிடந்த கேள்வி. பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த பொழுதிலிருந்து உள்ள கேள்வி. சிந்தித்துச் சிந்தித்து யோசித்துப் பலகாலம் செய்த ஆய்வுகளைத் தொடர்ந்து செய்யத் தேவையாக இருந்தது பணம். அந்தப் பணம் பால் ஹெண்டிரிக்சிடம் இருந்தது. பணமும் ஆசையும் சேர்ந்து உழைத்துச் செய்த ஆய்வுகளின் பலனே இந்த கெமிக்கோ பிசிக்கோ தரம்போ லிம்போசிஸ்.

விசிறியில்லாமலே காற்றை அனுபவித்துக் கொண்டும்... ஹாட் டாக் சாப்பிடாமலேயே சுவையை ருசித்துக் கொண்டும்....குடிக்காத ஒயினைச் சுவைத்துக் கொண்டும்...சோதனையை வெற்றியாக்கிக் கொண்டிருந்தார் பால். அடுத்த கட்டச் சோதனை ஒன்று மட்டும் மிச்சம்.

ஒரு சிறிய தள்ளுவண்டியை எரிக் அமர்ந்திருக்கும் அறையின் கண்ணாடிக் கதவின் முன் வைத்தார்கள். அதிலிருந்த லேப்டாப்பில் ஒரு நீலப்படம் தொடங்கியது. அழகான எஸ்பானிய பெண் தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டிருந்தாள். சந்தனத் தோல். தந்த உடம்பு. பார்க்கப் பார்க்க எரிக்கிற்கு ஜிவ்வென்று ஏறியது.

ஹெண்டிரிக்சுக்குத் தொப்புளுக்குள் முதலில் குறுகுறுத்தது. அந்தக் குறுகுறுப்பு பெருகிக் கூடி அடிவயிற்றில் இறங்கியது. முதன்முதலில்...இப்படித்தானே...தடுமாறி விட்டார் ஹெண்டிரிக்ஸ். பிரிகிட்டா கண் முன்னே தெரிந்தாள். முதல் காதலி. பதினான்கு வயதில் அவர் சிறுவன் இல்லை என்று நிரூபித்தவள். அவளது பழுப்புக் கூந்தல் அவர் மேல் கவிழ்ந்து மூடியது. டூலிப் இதழ்களால் முத்தமிட்டாள். "பிரிகீ....." முனகினார். பிரிகிட்டா புன்னகைத்தாள். "இன்னொரு முத்தம் பிரிகீ..." கொடுக்காமல் சிரித்தாள் பிரிகிட்டா. அறைக்குள் இருந்த பெறுவதைக் கூட்டும் வசதியைத் திருகினார் ஹெண்டிரிக்ஸ். அதைக் கூட்டக் கூட்ட பிரிகிட்டா முத்தமிட்டாள். ஹெண்டிரிக்சின் கடைவாயில் எச்சில் ஒழுகியது. "பிரிகீ.... பிரிகீ"... சொர்க்கத்தின் எஸ்கலேட்டர் அவரை உயர உயர அழைத்துச் சென்றது.

நீலப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி எரிக்கை மிதமான நெஞ்சுவலி தாக்கியது.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

46 comments:

said...

விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றி முதன்முதலில் நான் தெரிந்து கொள்ளும்போது கேட்ட கேள்வி இதுதான் 'இதே முறையில் நாசிகளில் ந்றுமனங்களை நுகர இயலுமா'. :-))

கதை நன்றாக இருக்கிறது. நல்ல முடிவு :-)

said...

ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸா?

கதை நன்றாக இருக்கிறது.

said...

\\ஒருத்தர் அதுல transmitor (அனுப்புனர்). இன்னொருத்தர் receiver (பெறுனர்).\\ இதுதான் கொஞ்ச வெவகாரமான விஷயமே!! கெட்டவனை நல்லவனா மாத்த முடியுமா!!
நல்லாருக்கு கதை:)

said...

கதை நன்றாயிருக்கிறது. தீமும்தான்.

வழக்கமான அறிவியல் புனைக் கதை பானியிலியே முடித்து விட்டீர்களே!

said...

ராஜேஷ் குமார் கதை போல இருந்தது...

said...

பிச்சோ உதர்கோ

(பிச்சு உதறீட்டீங்க)

ஆன்மீகத்திலிருந்து அறிவியலிலும் ஒரு கை வச்சிட்டீங்க.

said...

ஜிரா..கதை சூப்பரோ சூப்பர் :))

said...

உங்க கற்பனை வளம் பத்தி கேக்கணுமா :) கதையும் நடையும் அருமை.

said...

அண்ணா எனக்கு பொறமை ரொம்ப வருது :)
எப்படிதான் உங்களால் எல்லாம் இப்படி கதை எழுத முடியுதோ..

said...

ஜிரா,

கதையும் கருவும் நன்றாக வந்திருக்கிறது. போட்டியில் வெல்ல வாழ்த்துகள்.

said...

கதை அட்டகாசம். இன்னும் கொஞ்சம் யோசிச்சி இதை விட சூப்பரா ஒரு முடிவு எழுதியிருக்கலாமோ..

நாட்டாமை தீர்ப்ப மாத்த முடியாதா இப்போ?

said...

nice story g.raa...

said...

சிறில் Transmitter-ல உக்காருங்க!
ஜிரா Receiver-ல உக்காருங்க!
கெமிக்கோ பிசிக்கோ பரிசோ லிம்போசிஸ்!

என்ன புலவரே! (ராகவா) - பரிசு கிடைத்ததா?
(சிவாஜி-நாகேஷ் இஷ்டைலில் படிக்கவும் :-)

கற்பனை சூப்பரோ சூப்பர்!
கதை சூப்பர் ராகவா!

said...

ராகவா
ஒரே ஒரு சந்தேகம்.

//அப்படியே அதை எடுத்துக் கடித்தார். சுவைத்துச் சாப்பிட்டார்.
சாய்ந்து உட்கார்ந்து காற்றை அனுபவித்துக் கொண்டிருந்த பாலின் மூக்கில் கடுகு வாடை ஏறியது//

So, the object has to physically exist in the transmitter, for virtual reality on the receiver!

//அதிலிருந்த லேப்டாப்பில் ஒரு நீலப்படம் தொடங்கியது//

:-)
நீங்க எரிக்-கின் அறையில், நிஜமாலுமே அழகான எஸ்பானிய பெண்ணை அமர்த்தி இருக்க வேண்டும்!

அப்போது தான் "மெய்-நிகர்" (Virtual Reality) ஹெண்டிரிக்சுக்கு நீங்க சொன்னதெல்லாம் தோன்றி இருக்கும்!

//குறுகுறுப்பு பெருகிக் கூடி அடிவயிற்றில் இறங்கியது// எல்லாம் வெறும் படத்தின் மூலமாகவே வந்தது என்பது அவ்வளவு மெய்-நிகராக இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து!

சூப்பரான கற்பனைக்கு, கொடுக்கும் எஃபெக்ட்டும் சூப்பராக இருந்திருக்கலாமே என்பது என் ஆதங்கம்! மத்தபடி கற்பனை ஏ-ஒன்!
பரிசை வெல்ல வாழ்த்துக்கள்!

said...

// Blogger ஸ்ரீதர் நாராயணன் said...

விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றி முதன்முதலில் நான் தெரிந்து கொள்ளும்போது கேட்ட கேள்வி இதுதான் 'இதே முறையில் நாசிகளில் ந்றுமனங்களை நுகர இயலுமா'. :-)) //

உண்மைதான் ஸ்ரீதர். இதெல்லாம் முடியும் பொழுது...அதுவும் கண்டிப்பாக முடியும். ஆனால் இவையெல்லாம் முடியாமல் இருந்து முடியும் ஆனதால். இப்பொழுது முடியாதது நாளைக்கு முடியும் என்று ஆகும் என்று நம்புவோம். :D

// கதை நன்றாக இருக்கிறது. நல்ல முடிவு :-) //

ஆகக்கூடி ஒருத்தனப் போட்டுத்தள்ளுனா நல்ல முடிவுங்குறீங்க ;)

said...

// ambi said...

ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸா? //

இல்லைங்க. இது virtual realityன்னு சொல்றாங்க.

// கதை நன்றாக இருக்கிறது. //

நன்றி அம்பி

// Blogger சின்ன அம்மிணி said...

\\ஒருத்தர் அதுல transmitor (அனுப்புனர்). இன்னொருத்தர் receiver (பெறுனர்).\\ இதுதான் கொஞ்ச வெவகாரமான விஷயமே!! கெட்டவனை நல்லவனா மாத்த முடியுமா!!
நல்லாருக்கு கதை:) //

அது இந்தக் கதையில முடியாது. இந்தக் கதையில உணர்ச்சிகளை இடம் மாத்துறாங்க. வேணும்னா அடுத்த கதையில அறிவை இடம் மாத்துறத எழுதீரலாம். :) சரியா?

said...

// யோசிப்பவர் said...

கதை நன்றாயிருக்கிறது. தீமும்தான்.

வழக்கமான அறிவியல் புனைக் கதை பானியிலியே முடித்து விட்டீர்களே! //

வாங்க யோசிப்பவரே... படிச்சுப் பாராட்டுனதுக்கு நன்றி. அதாவதுங்க.... இந்த மாதிரிக் கதைகள்ள முடிவு எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கனும். அதுக்குத்தான் இப்பிடி முடிச்சிருக்கு.

// Anonymous செந்தழல் ரவி said...

ராஜேஷ் குமார் கதை போல இருந்தது... //

ரவி, இதைப் பாராட்டாத்தானே எடுத்துக்கனும் :D

said...

//ஆகக்கூடி ஒருத்தனப் போட்டுத்தள்ளுனா நல்ல முடிவுங்குறீங்க ;)//

ஒருத்தனையா? இரண்டு பேருக்கு இல்ல ஆப்பு வைக்கறீங்க. எரிக் காப்பாற்றப் பட்டார்னு சொல்லவே இல்லையே. :-))

கண்ணபிரான் ரவி சில 'நேர்' கேள்விகள் கேட்டிருக்கார் :-)

என் பங்குக்கு சில 'அரசியல்' பார்வைகள் (யாரு விட்டா...) :-))

//கிருஸ்துமஸ் பிறப்பதற்கு //

கிறிஸ்து பிறந்ததை ஒட்டி கிருஸ்துமஸ் கொண்டாடப்படுகிற்து. நீங்கள் கிருஸ்துமஸ் 'பிறப்பது' என்று எழுதுவது டான் பிரவுன் சொன்ன காண்ஸ்டண்டைனை முன்னிட்டு வைத்த 'கிறிஸ்துவ மதம்' கட்டமைக்கப்பட்ட முறையை மறைமுகமாக திணிப்பது போல் இருக்கிறதே. உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள் (நாங்க படுத்தியாச்சு. இப்ப நீங்கப் படுத்துங்க)

- 'பால் ஹெண்டிரிக்சுக்கு', விஞ்ஞானி 'எரிக்', ஐரோப்பா - உங்களுடைய ஐரோப்ப அடிவருடித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறதே. ஏன், இந்த மாதிரியான advanced ஆராய்ச்சிகள் செய்ய தமிழகமும், தமிழர்களுக்கும் தகுதி இல்லையா? உடன் பதில் வேண்டும்.

//ஒயின் குடித்துக் குடித்துச் சிவந்த முகத்தில் இரத்தவோட்டமே தெளிவாகத் தெரியும் வகையில் மலர்ச்சியைக் காட்டினார் பால். //

மலர்ச்சியைக் காட்ட நிறத்தை துணைக்கழைக்கும் உங்களுடைய நிறவெறித்தனம்... ம்ம்ம் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.

//ஐம்பது வயதுக் கனவான நோபல் பரிசைக் கண்டிப்பா வாங்கிக் கொடுக்கும்//

இதுல கண்டிப்பா உள்குத்து இருக்கு. நோபல் பரிசை 'வாங்கி' கொடுக்கறதைப் பத்தி 'இப்ப' நீங்க எழுத வேண்டிய அவசியம் என்ன?

//நம்மைப் போன்ற சாதரணமானவர்களுக்குப் புரியாத பல அறிவியல் பொருட்கள்//

உங்க மேட்டிமைத்தனம் எப்படி கோரமாக வெளிப்படுகிறது பாருங்கள். உங்களைப் போன்றவர் சாதாரணமாக இருந்தால் புரியாது. ஆனால் உங்களைப் போன்றவர்கள் சாதாராணமானவர் இல்லை. அதனால் உங்களுக்குப் புரிகிறது. புரிகிறது ஐயா புரிகிறது.

//நோபல் பரிசு ஆசை //

மறுபடி பாருங்கள். :-X

அப்புறம் நிறைய அடல்ட்ஸ் ஒன்லி. அப்படியே ஜம்ப் பண்ணி இறுதி வரியில் என்ன சொல்லியிருக்கீங்கன்னு பாத்தா

//விஞ்ஞானி எரிக்கை மிதமான நெஞ்சுவலி தாக்கியது//

அடுத்தவரின் பணத்தில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்க நினைக்கும் விஞ்ஞானிக்கு 'மிதமான' தண்டனை, தன் சொந்தப் பணத்தை ஆராய்ச்சிக்காக கொடுத்தது மட்டுமல்லாமல், தன்னையே சோதனைக்கு உட்படுத்தும் பால்-க்கு கூட்டப்பட்ட தண்டனை என்ற உங்கள் கற்பனை பற்றி என்ன சொல்ல. இந்தக் கதை ஒரு "*(#$&@, *$(@@)$#W)" என்று மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன். :-))
(அட 'அருமையான அறிவியல் புனைவு'ன்னு சொன்னேங்க)

said...

கலக்கல்!!

said...

// கானா பிரபா said...

பிச்சோ உதர்கோ

(பிச்சு உதறீட்டீங்க)

ஆன்மீகத்திலிருந்து அறிவியலிலும் ஒரு கை வச்சிட்டீங்க. //

வாங்க பிரபா வாங்க.... ஆன்மீகமா....இசையில சுசீலாம்மாவுக்கு ஒரு வலைப்பூ. சாப்பாட்டுக்கு ஒரு வலைப்பூ...மகரந்தம்னு ஒரு வலைப்பூ.... இத்தனையும் இருக்குல்ல :D

நீங்க படிச்சிப் பாராட்டுனது மகிழ்ச்சியைத் தருகிறது.

// Blogger கோபிநாத் said...

ஜிரா..கதை சூப்பரோ சூப்பர் :)) //

நன்றி கோபிநாத். கதையில எது உங்களுக்குப் பிடிக்க்கலைன்னு சரியாச் சொல்லுங்க பாப்போம். :D

// Blogger கவிநயா said...

உங்க கற்பனை வளம் பத்தி கேக்கணுமா :) கதையும் நடையும் அருமை. //

நன்றி கவிநயா. :) நடை அருமைன்னு சொல்லீருக்கீங்க? யாரோட நடை? எப்ப நடக்கும் போது பாத்தீங்க? :D

said...

கதை அருமை!!!

said...

//நடை அருமைன்னு சொல்லீருக்கீங்க? யாரோட நடை? எப்ப நடக்கும் போது பாத்தீங்க? :D //

அட ராகவா! பார்க்காம போறதா இல்ல. அந்த நினைவுல சொல்லிட்டேன்னு வச்சுக்கோங்க.. (உங்ககூட பேசறது என் பையன் கூட பேசற மாதிரியே இருக்கு :)

said...

// Blogger கோவி.கண்ணன் said...

ஜிரா,

கதையும் கருவும் நன்றாக வந்திருக்கிறது. போட்டியில் வெல்ல வாழ்த்துகள். //

நன்றி கோவி. :-) கோவி வாயால் நல்ல கதை பட்டம் கெடைக்கிறதுன்னா சும்மாவா! :D

// Blogger PPattian : புபட்டியன் said...

கதை அட்டகாசம். இன்னும் கொஞ்சம் யோசிச்சி இதை விட சூப்பரா ஒரு முடிவு எழுதியிருக்கலாமோ..

நாட்டாமை தீர்ப்ப மாத்த முடியாதா இப்போ? //

ஹி ஹி எழுதிப் பதிவுல போட்டாச்சுங்களே. இப்பப் போயி திருத்துனா போட்டி விதிகள் படி தப்பாச்சே. :)

// Blogger இரா. வசந்த குமார். said...

nice story g.raa...//

நன்றி வசந்த குமார். :)

said...

கதை நல்லாயிருக்கு... :)

said...

// Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ராகவா
ஒரே ஒரு சந்தேகம்.

//அப்படியே அதை எடுத்துக் கடித்தார். சுவைத்துச் சாப்பிட்டார்.
சாய்ந்து உட்கார்ந்து காற்றை அனுபவித்துக் கொண்டிருந்த பாலின் மூக்கில் கடுகு வாடை ஏறியது//

So, the object has to physically exist in the transmitter, for virtual reality on the receiver! //

இங்க என்னன்னா... ஹாட் டாக்கிலிருந்து கடுகு வாடை அந்தப் பக்கம் போகவில்லை. அந்தக் கடுகு வாடையை எரிக்கின் நாசி உணர்ந்தது. எரிக்கின் நாசி எதை உணர்ந்ததோ அதுதான் அந்தப் பக்கம் சென்றது. ஒருவேளை எரிக்கிற்கு மூக்கடைப்பு என்றால் அந்தப் பக்கம் கடுகுவாடை போகாது. :D

// //அதிலிருந்த லேப்டாப்பில் ஒரு நீலப்படம் தொடங்கியது//

:-)
நீங்க எரிக்-கின் அறையில், நிஜமாலுமே அழகான எஸ்பானிய பெண்ணை அமர்த்தி இருக்க வேண்டும்!

அப்போது தான் "மெய்-நிகர்" (Virtual Reality) ஹெண்டிரிக்சுக்கு நீங்க சொன்னதெல்லாம் தோன்றி இருக்கும்! //

இதை நானும் யோசித்தேன். எஸ்பானியப் பெண்ணை நேர்லயே கொண்டாந்துரலாமான்னு.. அப்புறம் கொஞ்சம் யோசிச்சேன். ஆராச்சி ஆராச்சின்னு அடைஞ்சு கெடந்தவருக்குப் பெண்களே கிடைக்கலை. ஆகையால அவருக்கு ஆதரவு இந்த வீடீயோக்கள்னு தோணிச்சு. அதை அப்படியே எழுதீட்டேன்.

// //குறுகுறுப்பு பெருகிக் கூடி அடிவயிற்றில் இறங்கியது// எல்லாம் வெறும் படத்தின் மூலமாகவே வந்தது என்பது அவ்வளவு மெய்-நிகராக இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து!

சூப்பரான கற்பனைக்கு, கொடுக்கும் எஃபெக்ட்டும் சூப்பராக இருந்திருக்கலாமே என்பது என் ஆதங்கம்! //

கற்றது கைமண்ணளவு ரவி. :) உங்கள் அளவுக்கு இனிமே நானும் யோசிக்க முயற்சிக்கிறேன்.

// மத்தபடி கற்பனை ஏ-ஒன்! //
பரிசை வெல்ல வாழ்த்துக்கள்! //

நன்றிங்க. நல்லா எழுதுனவங்களுக்கே பரிசு கிடைக்கட்டும்.

said...

Romba nalla eruku. Very nice your imagination.

said...

ராகவன்,
உங்களுக்கே உரித்தான கைதேர்ந்த எழுத்து நடையில்.....மிக மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க:))

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!

said...

கதை நல்லா இருக்கு!

said...

// ஸ்ரீதர் நாராயணன் said...

//ஆகக்கூடி ஒருத்தனப் போட்டுத்தள்ளுனா நல்ல முடிவுங்குறீங்க ;)//

ஒருத்தனையா? இரண்டு பேருக்கு இல்ல ஆப்பு வைக்கறீங்க. எரிக் காப்பாற்றப் பட்டார்னு சொல்லவே இல்லையே. :-)) //

ஹி ஹி எரிக்குக்கு மிதமான நெஞ்சுவலிதான... அதுனால பொழச்சிட்டாருன்னு வெச்சுக்கோங்களேன். அவரையும் போட்டுத் தள்ளுனாத்தான் ஒங்களுக்குத் தூக்கம் வரும்னா....அப்படியும் வெச்சுக்கோங்க. :D

// கண்ணபிரான் ரவி சில 'நேர்' கேள்விகள் கேட்டிருக்கார் :-) //

அவரு எப்ப நேர் கேள்விகள் கேட்டிருக்காரு? அவரு கேட்டாரே கூர் கேள்விகள்தான். உஉவ கே.ஆர்.எஸ்னா சும்மாவா? :)

// என் பங்குக்கு சில 'அரசியல்' பார்வைகள் (யாரு விட்டா...) :-)) //

ஆகா..தாராளமா கேளுங்க. தெரிஞ்சதச் சொல்றேன். தெரியலைன்னா கே.ஆர்.எஸ் வந்து வெளக்குவாரு. :)

// //கிருஸ்துமஸ் பிறப்பதற்கு //

கிறிஸ்து பிறந்ததை ஒட்டி கிருஸ்துமஸ் கொண்டாடப்படுகிற்து. நீங்கள் கிருஸ்துமஸ் 'பிறப்பது' என்று எழுதுவது டான் பிரவுன் சொன்ன காண்ஸ்டண்டைனை முன்னிட்டு வைத்த 'கிறிஸ்துவ மதம்' கட்டமைக்கப்பட்ட முறையை மறைமுகமாக திணிப்பது போல் இருக்கிறதே. உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள் (நாங்க படுத்தியாச்சு. இப்ப நீங்கப் படுத்துங்க) //

சூப்பர். இந்த டான் பழுப்பு எழுதுன புத்தகத்தை நானும் படிச்சிருக்கேன். ஏசுநாதரப் பத்தித் தப்பா எழுதுனத ஏன்டா படிக்கிறைன்னு முருகரு வந்து மெரட்டீட்டாருங்கோவ்...

// - 'பால் ஹெண்டிரிக்சுக்கு', விஞ்ஞானி 'எரிக்', ஐரோப்பா - உங்களுடைய ஐரோப்ப அடிவருடித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறதே. ஏன், இந்த மாதிரியான advanced ஆராய்ச்சிகள் செய்ய தமிழகமும், தமிழர்களுக்கும் தகுதி இல்லையா? உடன் பதில் வேண்டும். //

தமிழர்களுக்கு இதை விடவும் சிறப்பான தகுதிகள் இருப்பதாக நான் கருதுகிறேன். நீங்க அப்படி நெனைக்கலை போலத் தெரியுதே :D

// //ஒயின் குடித்துக் குடித்துச் சிவந்த முகத்தில் இரத்தவோட்டமே தெளிவாகத் தெரியும் வகையில் மலர்ச்சியைக் காட்டினார் பால். //

மலர்ச்சியைக் காட்ட நிறத்தை துணைக்கழைக்கும் உங்களுடைய நிறவெறித்தனம்... ம்ம்ம் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.//

ஆமா ஆமா. நிறவெறிக் கொள்கைதான்..கருப்புப் பாலையும் வெள்ளை டிக்காஷனையும்...சேச்சே கொளப்புறேனோ... சரி விடுங்க..

ஆத்தோரம் கருப்புமாரு பச்சப் புல்ல மேஞ்சிக்கிட்டு வெள்ளைப் பாலக் குடுக்குறதப் பாத்தீங்களா? அந்த "வெள்ளைப்" பாலை நீங்க குடிக்கிறதுல இருந்தே ஒங்க நிறவெறிக் கொள்கை தெள்ளத் தெளிவாத் தெரியுதே... :-P

said...

// //ஐம்பது வயதுக் கனவான நோபல் பரிசைக் கண்டிப்பா வாங்கிக் கொடுக்கும்//

இதுல கண்டிப்பா உள்குத்து இருக்கு. நோபல் பரிசை 'வாங்கி' கொடுக்கறதைப் பத்தி 'இப்ப' நீங்க எழுத வேண்டிய அவசியம் என்ன? //

தேசிய விருது....மாநில விருது...கலைமாமாமணி விருது..இதெல்லாம் வாங்கித்தான கொடுக்குறாங்க. அதுவுமில்லாம இந்த வாட்டி அறிவியல் புனைவுக் கதைல பரிசை நீங்கதான் "வாங்கப்" போறதாச் சொல்றாங்களே! அதுக்கு என்ன சொல்றீங்க? :D

// //நம்மைப் போன்ற சாதரணமானவர்களுக்குப் புரியாத பல அறிவியல் பொருட்கள்//

உங்க மேட்டிமைத்தனம் எப்படி கோரமாக வெளிப்படுகிறது பாருங்கள். உங்களைப் போன்றவர் சாதாரணமாக இருந்தால் புரியாது. ஆனால் உங்களைப் போன்றவர்கள் சாதாராணமானவர் இல்லை. அதனால் உங்களுக்குப் புரிகிறது. புரிகிறது ஐயா புரிகிறது. //

ஒங்களுக்குப் புரியுதுன்னு சொல்றீங்களே....அப்ப நீங்க எப்படி? :D


// அப்புறம் நிறைய அடல்ட்ஸ் ஒன்லி. அப்படியே ஜம்ப் பண்ணி இறுதி வரியில் என்ன சொல்லியிருக்கீங்கன்னு பாத்தா //

ஆகா அடல்ட்ஸ் ஒன்லின்னா படிக்க மாட்டீங்களா? ஹாட் டாக் சாப்புடுறதும் ஒயின் குடிக்கிறதும் அடல்ட்ஸ் ஒன்லியா? என்ன கொடுமையிது?

// //விஞ்ஞானி எரிக்கை மிதமான நெஞ்சுவலி தாக்கியது//

அடுத்தவரின் பணத்தில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்க நினைக்கும் விஞ்ஞானிக்கு 'மிதமான' தண்டனை, தன் சொந்தப் பணத்தை ஆராய்ச்சிக்காக கொடுத்தது மட்டுமல்லாமல், தன்னையே சோதனைக்கு உட்படுத்தும் பால்-க்கு கூட்டப்பட்ட தண்டனை என்ற உங்கள் கற்பனை பற்றி என்ன சொல்ல.//

தலையெழுத்தேன்னு சொல்லனும் :D

// இந்தக் கதை ஒரு "*(#$&@, *$(@@)$#W)" என்று மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன். :-)) //

கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை :D

// (அட 'அருமையான அறிவியல் புனைவு'ன்னு சொன்னேங்க) //

பேச்சை மாத்தாதீங்க! :D

said...

//அவரையும் போட்டுத் தள்ளுனாத்தான்//

என்னையத் தூண்டிவிட்டு எரிக்-அ போட்டுதள்றதுல குறியா இருக்கீங்கப் போல. மீ த எஸ்கேப்பு.

said...

//அவரு எப்ப நேர் கேள்விகள் கேட்டிருக்காரு? அவரு கேட்டாரே கூர் கேள்விகள்தான்.//

கேஆர்எஸ் எப்பவும் கோணலா கேட்டு குத்தி கிழிச்சிருவார்னு சொல்றீங்க. எதுக்கும் அவரே வந்து 'வெளக்குமாறு' கேட்டுக்கறேன்.

//ஏசுநாதரப் பத்தித் தப்பா எழுதுனத ஏன்டா படிக்கிறைன்னு முருகரு வந்து மெரட்டீட்டாருங்கோவ்...//

ஆஹா, ஏசுநாதரும் முருகனும் சந்திச்சதா கூட சொல்வீங்கப் போல. பழநி மலை போகர் சித்தர் ஏசுநாதரோட சீடர்ன்னு சொல்றீங்களா அப்ப?

//தமிழர்களுக்கு இதை விடவும் சிறப்பான தகுதிகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.//

அப்படின்னா தமிழர்களை வச்சு கதை எழுத வேண்டிதானே? ஏன் எழுதலை? ஏன் எழுதலை? :-p

//அந்த "வெள்ளைப்" பாலை நீங்க குடிக்கிறதுல //

அதான் தலைவர் வெள்ளையெல்லாம் ஒதுக்கிடுங்கன்னு சொல்லிட்டாரோ :-))

//தேசிய விருது....மாநில விருது...கலைமாமாமணி விருது..இதெல்லாம் வாங்கித்தான கொடுக்குறாங்க//

உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி. இதே வாக்கியம் தகுந்த சமயத்தில் உபயோகப் படுத்தப்படும் என்று தணிவாக 'எச்சரிக்கிறேன்'. (நீங்க விருது 'வாங்காமலா' போய்டுவீங்க)

said...

//ஹாட் டாக் சாப்புடுறதும் ஒயின் குடிக்கிறதும் அடல்ட்ஸ் ஒன்லியா//

அன்புமணி உங்க பிளாக் படிச்சார்னா... ஒரு பெரிய டிஸ்கி போட சொல்வார். ஒயின் குடிக்கிறது அடல்ட்ஸ் கூட பண்ணக் கூடாதாம். தெரியுமா? :-)

//தலையெழுத்தேன்னு சொல்லனும்//

அறிவியல் புனைவு எழுத வந்த நீங்க இப்படி மூட நம்பிக்கைக்கு வக்காலத்து வாங்கறது உங்களோட 'இரட்டை' நிலையை... எவ்வளவு தெளிவாக காட்டுகிறது பாருங்கள்.

/"*(#$&@, *$(@@)$#W)"
...........
கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை :D//

எதை எழுதினாலும் கெட்ட வார்த்தைன்னு சொன்னா... தமிழ்மணத்துல கேட்டுப் பாருங்க. இது மட்டும்தான் 'நல்ல' வார்த்தைன்னு சொல்வாங்க. :-))

said...

//ஆகா..தாராளமா கேளுங்க. தெரிஞ்சதச் சொல்றேன். தெரியலைன்னா கே.ஆர்.எஸ் வந்து வெளக்குவாரு. :)//

சபீனா பவுடர் போட்டா?
விம் பார் போட்டா?
வெளக்குவாராம்-ல வெளக்குவாரு!
அட போங்கப்பா!

said...

//கேஆர்எஸ் எப்பவும் கோணலா கேட்டு குத்தி கிழிச்சிருவார்னு சொல்றீங்க//

ஸ்ரீதர்
உங்கள் பொறுப்பற்ற கேள்விக் கணைகளில் இருந்து என் நண்பன் ராகவனைக் காப்பாற்ற, நான் களத்தில் இறங்கட்டுமா? தேரை ஓட்டட்டுமா? :)

said...

//நான் களத்தில் இறங்கட்டுமா? தேரை ஓட்டட்டுமா? :)//
ஏய்... யாருப்பா அது! இந்த கேஆர்எஸ் ப்ராஜட்க்கு ஒரு 'கிக்-ஆப்பு' கொடுங்கப்பா. மனுசன் தேரை ஓட்டவா, தெருவைக் கூட்டவான்னு சுத்திட்டிருக்கார்.:-)

அண்ணா,

நாம அப்படியாண்ணா பழகியிருக்கோம்? ஹி..ஹி...!

said...

என் கஜேந்திரா...
ச்சே ராகவா....இதோ வந்தேன்!....

//நீங்கள் கிருஸ்துமஸ் 'பிறப்பது' என்று எழுதுவது டான் பிரவுன் சொன்ன காண்ஸ்டண்டைனை முன்னிட்டு வைத்த 'கிறிஸ்துவ மதம்' கட்டமைக்கப்பட்ட முறையை மறைமுகமாக திணிப்பது போல் இருக்கிறதே//

இறைவனை விட அவனைக் கொண்டு வந்த சேர்த்த நாளைத் தான் ஏத்தி மகிழ்கிறார்கள் அடியவர்கள்!
கிருத்திகையே பெரிது! அதை வைத்து அவன் பேரையே மாற்றுவோம்! கார்த்திகேயன் என்று!
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே! அப்புறம் தான் கண்ணன்!
அதே போல் கிறிஸ்துமஸ் பிறப்பது!

ஆம்ஸ்டர்டாம் வாழ் எம் அன்பருக்கு அன்போம்!
மகரந்தப் பதி வாழும் அடியார்க்கும் அடியோம்!

தூய நல்லடியார் வரிசையில் எங்கள் ராகவன் சொன்ன திருநட்சத்திரக் குறிப்பை இங்கு பழித்துச் சொல்வார் எவர்?
அர்ஜூனா! எடு வில்லை! தொடு கணையை!

//(நாங்க படுத்தியாச்சு. இப்ப நீங்கப் படுத்துங்க)//

படுத்தியது போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா??

said...

//நான் களத்தில் இறங்கட்டுமா? தேரை ஓட்டட்டுமா? :)//
//என் கஜேந்திரா...//
//அர்ஜூனா! எடு வில்லை! தொடு கணையை!//

மக்களே,

இங்கே பாருங்கள் ஆணவ செருக்கு ஆட்டம் போடுவதை.

இவர் களத்தில் இறங்குவாராம். தேரையும் ஓட்டுவாராம். தாடி வைத்தவர் எல்லாம் தாகூரா? கண்ணபிரான் என்று பெயர் வைத்தவர் எல்லாம் தேரோட்டியா? தேரை விட்டு களத்தில் இறங்கி அப்புறம் தேரை எப்படி ஓட்டமுடியும் என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாத இவர் எப்படி கண்ணபிரானாக இருக்க முடியும்? இது நிச்சய்ம் போலிதான்.

கஜேந்திரனுக்கு மோட்சம் அருளியது ஆதிமூலம். ஆதியிலிருந்தே மூலையில் முடங்கியிருந்து விட்டு திடீரென்று மூலம் வந்தது போல் ஊளையிடுவதன் பின்னனியை அடுத்த வரி சொல்கிறது பாருங்கள்.

அர்ஜுனனை சொல்வது போல் ராகவனை சொல்கிறாராம் 'எடு வில்லை, தொடு கணையை'. ராகவனுக்கு ஒன்றும் தெரியாது தான்தான் அவருக்கு சொல்லித் தருகிறோம் என்று பிரகடனபடுத்துவது இருக்கட்டும், கணையை தொட்டால் மட்டும் போர் புரிந்த்ததாக அர்த்தம் இல்லை என்று கூட தெரியாத இவர்.... (இருங்க மூச்சு வாங்கிக்கறேன்)... இவர் வந்து சொல்லித்தான் நாங்கள் கிறிஸ்து பிறந்ததினால் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பற்றி தெரிந்த கொள்ள வேண்டுமா?

போங்க.... போங்க... புள்ளக் குட்டிங்களை படிக்க வைங்க சாமி.

said...

//தேரை விட்டு களத்தில் இறங்கி அப்புறம் தேரை எப்படி ஓட்டமுடியும் என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாத இவர் எப்படி கண்ணபிரானாக இருக்க முடியும்?//

தேரோடிக்கிட்டே அதிரடியாகக் களத்தில் இறங்குவதை சினிமாவில் கூடவா பார்த்ததில்லை ஸ்ரீதர் நீங்க?

களத்தில் இறங்குவோம்-னு தான் சொன்னேன்!
குளத்தில் இறங்குவோம்-னு நினச்சிட்டீரா?

களம், உங்க பட்டர்ஃபிளை எஃபெக்ட்டால் குளமாகும் என்று நினைத்தாயோ கொங்கணவா?
ட்ரேகன்ஃபிளை எஃபெக்ட்டால் கூட ஒன்னும் ஆகாது!

ஸ்ரீதரின் ரோட்டிலும் தேர் ஓடும்!
ஸ்ரீ"தார்" ரோட்டிலும் தேரோடும்!
நீர் களத்தை விட்டு ஓடும் வரை ஓடும்! ஓடும்! ஓடிக் கொண்டே இரும்!

said...

//ஆதியிலிருந்தே மூலையில் முடங்கியிருந்து//

ஆதி, அந்தம் என்னும் மூலையில் தான் முடங்கும்!
இதை உங்கள் மூளையிட்டு ஓடுங்கள்! ஊளையிட்டு ஓடுங்கள்! தாளையிட்டு உம்மைத் தாக்கிடும் வேளையில், ஆளையிட்டு வரினும், வேலையிட்டு வெல்வோம்!

//ராகவனுக்கு ஒன்றும் தெரியாது தான் தான் அவருக்கு சொல்லித் தருகிறோம் என்று பிரகடனபடுத்துவது இருக்கட்டும்//

எங்கள் ராகவன் அனைத்தும் அறிவான்! அவன் அறிவான் என்பதை யாமும் அரி-ஓம்! :))

//கணையை தொட்டால் மட்டும் போர் புரிந்த்ததாக அர்த்தம் இல்லை//

கணையைத் தொடுப்பதற்கும் தொடுவதற்கும் கூட வித்தியாசம் தெரியாத நீரா கமலின் குரு! ஐயகோ! பாவம் உலக நாயகன் கமல்!

//(இருங்க மூச்சு வாங்கிக்கறேன்)...//

அட, தொடுவதற்கே மூச்சு வாங்கும் ஸ்ரீதரா இவரு!
அப்ப தொடுப்பதற்கு என்னவெல்லாம் வாங்குமோ இவருக்கு?

said...

கதை நல்லா இருக்கு. ஓல்ட் கான்செப்ட் என்றாலும் நல்ல எழுத்துநடை.

said...

//தாடி வைத்தவர் எல்லாம் தாகூரா?//

தாடி வைத்தவர் எல்லாம் வள்ளுவரா என்று வள்ளுவரின் பேரை உச்சரிக்கக் கூட மனமில்லையோ உங்களுக்கு? :)))

உங்க மேட்டிமைத்தனம் எப்படி கோரமாக வெளிப்படுகிறது பாருங்கள்.

உங்களைப் போன்றவர் சாதாரணமாக இருந்தால் புரியாது. ஆனால் உங்களைப் போன்றவர்கள் சாதாராணமானவர் இல்லை. அதனால் உங்களுக்குப் புரிகிறது. புரிகிறது ஐயா புரிகிறது :)))))

said...

//தாடி வைத்தவர் எல்லாம் வள்ளுவரா//

திருவள்ளுவருக்கு தாடி இருந்ததா? அவர் புனித தோமையாரை சந்தித்தாரா? அவர் சமண மதத்தவரா? இல்லை கிறித்துவ மதத்தவரா? ரஜினிகாந்த் நடிக்கலாமா?

இப்படி பல கேள்விகளை கேட்டு இந்தப் பதிவை திரிக்க நினைக்கும் உங்கள் கயமைத்தனம் தெரிகிறது ஐயா தெரிகிறது.

//நீர் களத்தை விட்டு ஓடும் வரை ஓடும்! ஓடும்! ஓடிக் கொண்டே இரும்!//

இம்புட்டுத்தானே.... நீங்க பாத்திட்டே இருங்க. எப்படி ஓடுறேன்னு. அதில எல்லாம் நாங்க எக்சுபர்ட்டு :-)

said...

//ரஜினிகாந்த் நடிக்கலாமா?//

கமலின் குருவான உங்க ஆழ்மன ஏக்கமா? ஹூம்!

//இப்படி பல கேள்விகளை கேட்டு இந்தப் பதிவை திரிக்க நினைக்கும்//

நண்பனின் அறிவியற் பதிவில் குழப்பம் செய்து அதை அரசியற் பதிவாக்க நினைத்தீர்! "*(#$&@, *$(@@)$#W)" என்றீர்!

திரித்தது நீர்!
திருத்தியது யாம்!

எப்போதெல்லாம் நண்பனுக்கு ஆ-பத்து, ஈ-இருபது ஏற்படுகிறதோ,
அப்போதெல்லாம் மீ தி Sambavami Bloge Bloge!
:)))

said...

எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு. பேரு எல்லாம் நல்ல இருக்கு. சிறுகதை போட்டில வெற்றி பெற வாழ்த்துக்கள்.

(கதை எனக்கு சுத்தமா பிடிக்கல !!)

said...

பேராசை பெருநஷ்டம் :)