Thursday, July 31, 2008

ரஜினி நடிக்கும் மன்னிக்க வேண்டுகிறேன்

ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனால் (ஆகித் தொலைந்தால் என்று படிக்க விரும்புகிறவர்கள்...அப்படியும் படித்துக் கொள்ளலாம்)

முதலமைச்சர் அலுவலகத்தில் (சும்மாக்காச்சுக்கும் கூட செயிண்ட் ஜார்ஜ் கோட்டைன்னு சொல்ல மனசு வரலைங்க) உட்கார்ந்திருக்கிறார்.

"நாராயணா.. நாராயணா..."

ரஜினிகாந்தின் அழைப்பைக் கேட்டு ஓடி வருகிறார் உதவியாளர்.

"என்னங்க சத்தியத்த விட்டுட்டீங்க? நன்ன ஹெசுரு சத்யநாராயணா".

ஸ்டைலாகச் சிரிக்கிறார் ரஜினிகாந்த். "ஹா ஹா ஹா... சத்தியத்தை விட்டாலும் நாராயணனை விட மாட்டேன். ஹா ஹா ஹா"

"நீங்க சத்தியத்தை விடுங்க...சாப்பாட்டையும் விடுங்க...இப்ப அவசரமான பிரச்சனை ஒன்னு வந்திருக்கு. அதப் பாருங்க."

"நாராயணா... என்னைப் பிரச்சனைகளிலிருந்து பார்த்துக் கொள்ளுங்கள்...பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். பிரச்சனையைச் சொல்லு."

"நீங்க காவிரி மினரல் வாட்டர் தமிழ்நாட்டுக்கும் டிஸ்டிரிபியூட் பண்ணனும்னு கோர்ட்ல கேஸ் போட்டீங்களே....அதுக்கு அவங்கள்ளாம் ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே.... அப்பக் கூட நீங்க... ஆர்ப்பாட்டம் பண்றவங்களைப் பாத்து ஏன் ஆர்ப்பாட்டம் பண்றீங்கன்னு கேட்டீங்களே...அது இப்பப் பெரிய பிரச்சனையாயிருச்சு."

"அது நடந்து ஒரு வருஷம் இருக்குமே. இப்ப என்ன பிரச்சனை?"

"ஒங்க குரு தயாரிச்ச துரியோதனன் படத்துல நீங்க முதலமைச்சரா வர்ரீங்களே... அந்தப் படத்த அங்க ரிலீஸ் பண்ணக் கூடாதாம். அதான் பிரச்சனை."

"என்ன அந்யாயம் இது.. படத்த ரிலீஸ் பண்ணலைன்னா எப்படி? எக்கச்சக்கமா குருநாயர் பணம் போட்டிருக்காரே. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்."

அந்த நேரம் பார்த்து "ராஜ்யமா இல்லை இமயமா" என்று ஜெயச்சந்திரன் எப்.எம் ரேடியோவில் கதறுகிறார்.

ரஜினிகாந்திற்கு எரிச்சல் வருகிறது. "நேரம் கெட்ட நேரத்துல இதென்ன பாட்டு. அதான் ராஜ்யம்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சே."

"சரி....பிரச்சனைக்கு என்ன செய்யப் போறீங்க?"

"ஹா ஹா ஹா... அதுக்கு ஒரு வழி இருக்கு. என் வழி....தனீஈஈஈஈ வழி."

சத்யநாராயணா சிரிக்கிறார். "ஓ மன்னிப்புக் கேக்கப் போறீங்களா? அப்ப பிரச்சனை தீந்தது."

"அதே அதே. ஒரு மன்னிப்பு. பிரச்சனை கதம் கதம். ஹா ஹா ஹா"

"கதம்தான். அங்க பிரச்சனை கதம். இங்க புதுப்பிரச்சனை வந்துட்டா..."

"ஹா ஹா ஹா நீ என்னை வாழ வைத்த தய்வங்களாகிய தமிழ் ஜனங்களை சரியா புரிஞ்சிக்கலை. அவங்க அறிவு நல்ல அறிவு. அரசியல் வேற...சினிமா வேற... மினரல்வாட்டர் வேறன்னு நல்லாப் புரிஞ்சி வெச்சிருக்காங்க. அதுனால எந்தப் பிரச்சனையும் வராது." சிகரட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறார்.

"சரி.. எப்ப மன்னிப்புக் கேக்கப் போறீங்க?"

"அதுக்குத்தான் ஐதராபாத் போறேனே. அங்க தேஜா டீவி...ஜெமினி டீவியெல்லாம் வரச்சொல்லி மன்னிப்புக் கேட்டுறலாம். அப்படியே இங்க எதுவும் பிரச்சனை வந்தாலும் ஒரு மாசம் கழிச்சி வந்தாப் போதும். எல்லாரும் மறந்திருவாங்க."

"யாராச்சும் அதுக்கப்புறமும் நெனைவு வெச்சிருந்தா?"

"ஹா ஹா ஹா...நல்ல கேள்வி. எனக்கு இருக்குற அஞ்சு முகத்தைத்தான் எல்லாரும் பாத்திருக்காங்க. ஆறாவது முகத்தை யாரும் பாத்ததில்லையே.."

சத்யநாராயணாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

"ஹா ஹா ஹா மேக்கப் இல்லாம வருவேன்னு சொன்னேன்."

சத்யநாராயணா சிரிக்கிறார். ரஜினியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

"ஹா ஹா ஹா நான் ஒரு முறை மன்னிப்புக் கேட்டா நூறு முறை மன்னிப்புக் கேட்ட மாதிரி"

--------------------------------------------------------------------------------------------------------------------------

இங்க ஆம்ஸ்டர்டாம்ல குசேலன் படம் வருது. போகலாம்னு ஒரு கூட்டம் முடிவு பண்ணோம். இன்னைக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணீட்டோம்.

அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கேட்டாத்தான் அடுத்து எதாச்சும் யோசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டோம். அதுவரைக்கும் ரஜினிகாந்த் படங்களுக்குத் தடா.தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

58 comments:

said...

கருநாடகத்தில் இருக்கும் தமிழர்கள் (இல்லை தமிழ் தய்வங்கள்ன்னு கூடச் சொல்லலாம்) எதுக்குக் கஷ்டப்பட்டாலும் படலாமே தவிர தன்னுடைய படத்தைப் பார்க்க முடியாம படுகஷ்டப்படுவாங்களேன்னு
நினைக்கும்போது நெஞ்சு அப்படியே வெடிச்சுப்போயிரும்போல ஆயிருச்சு. அதுக்குத்தான் இந்த மன்னிப்பு ட்ராமா எல்லாம் (ச்சும்மா உலுலுலுலுலு)

said...

போட்டுத் தாக்குங்க...

தூத்துக்குடி உப்பு நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு போல.... :-)))))

said...

நன்றி!!!!
:)

said...

ஆமோதிக்கிறேன்..

கன்னியாகுமரி உப்பு போட்ட தமிழன்.

said...

அண்ணாச்சி தூத்துக்குடி உப்பு டபுள் ஸ்ட்ராங்கா இருக்கும் போல:)

said...

குசேலனில் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பு நயன்தாரா. குசேலனைப் பாக்கலைன்னா என்ன போச்சு? சத்யத்துல பாத்துர வேண்டியதுதான்.

said...

கோராவுக்கு குறும்புரா :)

said...

நல்ல நக்கல் !

இருந்தாலும் எரிச்சல் அடங்கலபா !
இந்த மனுசன் இப்படி பண்ணிட்டாரே!

said...

//
அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கேட்டாத்தான் அடுத்து எதாச்சும் யோசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டோம். அதுவரைக்கும் ரஜினிகாந்த் படங்களுக்குத் தடா.
//
நெதர்லாந்து ரசிகர்களுக்காக, பெல்ஜியம் சென்று அங்கிருந்து டச்சு மொழியில் ஏதாவது ஒரு நெதர்லாந்து தொலைக்காட்சியில் மன்னிப்புக் கேட்பார்...
:P

said...

//துளசி கோபால் said...
கருநாடகத்தில் இருக்கும் தமிழர்கள் (இல்லை தமிழ் தய்வங்கள்ன்னு கூடச் சொல்லலாம்) எதுக்குக் கஷ்டப்பட்டாலும் படலாமே தவிர தன்னுடைய படத்தைப் பார்க்க முடியாம படுகஷ்டப்படுவாங்களேன்னு
நினைக்கும்போது நெஞ்சு அப்படியே வெடிச்சுப்போயிரும்போல ஆயிருச்சு. அதுக்குத்தான் இந்த மன்னிப்பு ட்ராமா எல்லாம் (ச்சும்மா உலுலுலுலுலு)
//

மறுக்காச்சொல்லேய்....(ரிப்பீட்டை தமிழ் படுத்திட்டோம்)

ஆமா பெங்களூர் தமிழ் ரசிகர்களுக்காகவே தன்மானத்தை(யும்) அடகு வைத்த ரஜினி சார் வாழ்க ! கர்ணன் இவரல்லவா ? !

said...

yen sir
rajini na mattum ivlo vayitherichal ellorukkum.

unga kooda irunthe unga vari panatha kollai adikkira arasiyavathigalai vidava rajini mosam?

annikku hokenakkal pirachinai appa kalaingar pannatha kootha?

maru naale poratttha vaapus vaangala?

sari.. sari verum vaaya melravangalukku aval kidachuduchu..

maari maari yaaraiyachum kurai sonnathane unga blog kku vara count jaasthi aavum.

enna pollappo...

said...

//தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,//

வழிமொழிகிறேன் !!

நானும் தூத்துக்குடிதான்

பல அதி தீவிர ரஜினி ரசிகர்கள் மூகத்தில் துண்டை போட்டு தான் அலைவதாக கேள்வி

said...

என் சற்றே விரிவான கருத்துக்கள் இங்கு உள்ளன

said...

பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் (பூர்வீக அல்ல) எந்த உப்பு சாப்பிடுகிறார்கள்..யாருக்கு நன்றி செலுத்துவார்கள்...

புதசெவி

//தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்//

said...

ரஜினி செய்தது சந்தர்பவாதமேயன்றி..

உப்புக்கும் அதுக்கும் தொடர்பு இருக்கின்றதாக நினைக்கவில்லை..

அப்படி இருந்தால் அமெரிக்காவில் பணிபுரியும் நம்மவர்கள் புஷ்ஷின் செயல்களுக்கு பொறுப்பேற்கனும்... :P

said...

ரஜினி என்ன செய்வார் பாவம். எழுதிக்கொடுத்தால் தான் அவருக்கு வசனம் பேச வரும் போல. இல்லாவிட்டால் இப்படி உளறிக்கொட்டி கொண்டிருப்பார். பஞ்ச் டயலாக்கெல்லாம் படத்துக்கு தான் ஒத்து வரும்.

இனியாவது தமிழக மக்கள், ரஜினி ரசிகர்கள் திருந்துவார்களா பார்ப்போம். குறைந்தபட்சம் நம் பதிவர்களாவது குசேலன் படம் பார்ப்பதை தவிர்ப்பார்களா அல்லது வரிந்துக்கட்டி கொண்டு குசேலன் படத்திற்கு விமர்சனம் எழுதுவதை நிறுத்துவார்களா என்று பார்ப்போம்.

இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தான் கேட்க தோன்றுது

said...

அனானி நண்பரே..முகம் காட்ட தெம்பில்லாமல் அனானி என்ற பெயரில் நீங்கள் வருவதை விட ரஜினி பெரிய தப்பொன்றும் செய்துவிடவில்லைதான்!!

----------

yen sir
rajini na mattum ivlo vayitherichal ellorukkum.

-----

அது வயித்தெரிச்சல் இல்லீங்கோவ்....அவருக்கு இங்க இருக்கிற இமேஜ்க்கும் அவரோட செயல்களுக்கும் சம்பந்தமே இல்லியேங்கிற எரிச்சல்தான் அது..இப்படிப்பட்ட பச்சோந்தி வந்தாதான் நாடு சிறக்கும்னு அலைஞ்சிகிட்டு இருக்கிற இளைஞர் கூட்டத்தை பார்த்து வந்த எரிச்சல்தான் அது!!

-------------

unga kooda irunthe unga vari panatha kollai adikkira arasiyavathigalai vidava rajini mosam?

annikku hokenakkal pirachinai appa kalaingar pannatha kootha?

maru naale poratttha vaapus vaangala?

---------------------

அரசியல்வாதிகளாவது லைசென்ஸ் வாங்கிட்டு திருடறாங்க.....சினிமால நல்லவனா நடிக்கிற ஒருத்தன் உண்மையான அரசியல்லயும் இருப்பான்னு நம்ம முட்டாள் ஜனங்க நம்பறதும் , என்னமோ கன்னடிகாவை அவரே போயி உதைக்க போற ரேஞ்சிக்கு பேசிட்டு ,பிழைப்புன்னு வந்தப்புறம் அவுங்க கால்ல விழறதெல்லாம் நம்மூரு அரசியல்வாதிங்க பண்ணறதை விட கேவலமான விசயமா தெரியலயா உங்களுக்கு??? இப்படி பிழைப்புக்கே மாத்தி மாத்தி பேசற மாதிரியான ஆளுங்க பின்னாடி நம் இளைஞர் பட்டாளம் போகுதே.......அத எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டாமா??? சொல்லப்போனால் நாம் ரஜினிக்கு நன்றி சொல்லியாக வேண்டும்...இதுபோன்றைய செயல்கள் மூலமே இந்த வேசதாரிகளின் வேடம் கலையும்!!!!!

----------------

sari.. sari verum vaaya melravangalukku aval kidachuduchu..

maari maari yaaraiyachum kurai sonnathane unga blog kku vara count jaasthi aavum.

enna pollappo...

-----

இது என்னங்க கூத்து?????யாரையாவது யாராவது குத்தம் சொன்னா நீங்க பதிலுக்கு அத மறுத்துப்பேசுங்க....அத வுட்டுட்டு???

என்ன பொழப்பு அனானி நண்பரே??

said...

நான் சாப்பிடுறதும் தூத்துக்குடி உப்பு தான்... :-)

நல்ல கற்பனை... நானும் இப்படி இன்னைக்கி யோசிச்சிட்டு இருந்தேன்.

said...

சுப்ரமணியபுரத்துல சொன்ன விஷயம் இன்னும் நடந்துக்கிடேதான் இருக்கு இவங்க விஷயத்துல மட்டும்,அதாங்க நம்ம பயலுவ கன்னடக்காரங்களுக்கு தோரணம் கட்டுற விஷயம்.நம்மவங்க திருந்தாததற்கு நாம தாங்க பொறுப்பு.

said...

மானமுள்ள தமிழர் யாவரும் இந்த குசேலன் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணியுங்கள்!.

said...

சென்னை உண்ணாவிரதத்தில் சத்யராஜ் பேசி உசுப்பேற்றியதால் தன்னை தமிழின பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்காக ரஜினி பேசிய ஆவேசப் பேச்சை தமிழ் சமூகம் மறந்திருக்காது.

அந்தச் சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய கல்லாப் பெட்டியை நிரப்புவதற்காக கன்னடர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த தமிழகமே புனிதமடைந்து விடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் செய்திருக்கும் இந்த ஒரு சின்ன விஷயமே

அவர் எப்படிப்பட்ட கை தேர்ந்த அரசியல்வாதி

said...

1930 -1940 தேவதாஸின் பாகவதரே சரணம் என்று இருந்த முதல் தலைமுறையினர்(முப்பாட்டன்)


1950-70 எங்கவீட்டுப் பிள்ளை mgr ஐ தெய்வம் என் தொழுத 2ம் தலைமுறையினர்(பாட்டன்)

1970-1990 பாட்சா ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்த 3ம் தலை முறையினர்(தந்தை)

1990-2000 விஜய் தான் அடுத்த முதல்வர் என் கொடி பிடிக்கும் 4ம் தலைமுறையினர்(மூத்த மகன்)

2000-2010 மீண்டும் ரஜினி -இரண்டாம் -தனுசின் 25 நாள் பிறந்தநாளை கொண்டாடி மகிழும்
4 a. தலைமுறையினர்(இளைய மகன்)


இதனால் ஒரு படம் 100 நாள் ஓடியதும் முதல்வர் கனவு தொடங்கிவிடுகிறது.

said...

நன்றி!!!!
:)

said...

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

;-)

said...

ரஜினி வாலுக

said...

//கருநாடகத்தில் இருக்கும் தமிழர்கள் (இல்லை தமிழ் தய்வங்கள்ன்னு கூடச் சொல்லலாம்) எதுக்குக் கஷ்டப்பட்டாலும் படலாமே தவிர தன்னுடைய படத்தைப் பார்க்க முடியாம படுகஷ்டப்படுவாங்களேன்னு
நினைக்கும்போது நெஞ்சு அப்படியே வெடிச்சுப்போயிரும்போல ஆயிருச்சு. அதுக்குத்தான் இந்த மன்னிப்பு ட்ராமா எல்லாம்//

இதை அப்படியே கன்னாபின்னான்னு வழிமொழியறேன்.

said...

நானும் தூத்துக்குடி மருமகந்தான்.

ஆனா ஒன்னுங்க. யார் இந்த ரஜினி? அவருக்கு போயி இத்தனை முக்கியத்துவம் தறீங்க?

அவர மாதிரி அட்டைக் கத்தி வீரர்களிடமிருந்து இதை விட என்ன எதிர்பார்க்க முடியும்னு நினைக்கீங்க?

இதோ இன்னொரு அ.க. வீரர் மார்பை தட்டிக்கொண்டு அலைகிறார். அவருக்கும் கூட்டம் அலைமோதத்தானே செய்கிறது!

ஆனா அதுக்காக அவரோட படத்தை புறக்கணிப்போம்கறது.... கொஞ்சம் ஓவர்ங்க.

அவர் ஒரு நடிகர். எனக்கும் அவருடைய சேஷ்டைகள் (திரையில் மட்டும்) பிடிக்கும். அதற்காக நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன். அவரை நடிகராக மட்டுமே பார்ப்பதால் அவர் சொல்வதைப் பற்றியெல்லாம் (அதாவது திரைக்கு வெளியில்) கவலையே படுவதில்லை.

said...

உங்க முடிவ மாத்திகிட்டு படம் பாக்க சண்டே வந்தீங்கனா நம்ப பாக்கலாம்.

said...

நரி வேஷம் களைஞ்சு போச்… டும்..டும்..டும்

காட்டை விட்டே ஓடிப் போச்…டும்..டும்..ம்..ம்.

:-((. இன்னும் வரும்! இது காலத்தின் கட்டாயம்!! சத்யம் பேசணும்!!!

நாங்க எப்போதும் கணக்காத்தான் இருக்கோம், நீங்க புரிஞ்சிக்கலேன்னா அதுக்கு நாங்க பொறுப்பா...?

said...

கடைசி போனி ஆஜர் ஸார்..
(நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்))

said...

நல்ல நையாண்டிப் பதிவு! ஹீரோவைச் ஜோக்கராக்கியது அருமை.

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

//TBCD said...
பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் (பூர்வீக அல்ல) எந்த உப்பு சாப்பிடுகிறார்கள்//

ஜிரா
டிபிசிடி அண்ணாச்சி கேள்விக்கு சீக்கிரம் புதசெவி பண்ணுங்க! :)
அவரு நீங்க பதிவு போட்டதில் இருந்து சாப்பிடாம இருக்காராம்! :)))

said...

//ஹா ஹா ஹா... சத்தியத்தை விட்டாலும் நாராயணனை விட மாட்டேன். ஹா ஹா ஹா//

Confessions of Gira??
Ha Ha Ha! :)))

said...

//தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்//

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்!
உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்!
என்ற ரஜினி பாட்டை இனி எல்லாரும் ட்யூன் மாற்றிப் பாடுங்கள்!

ஜிரா, நல்ல ட்யூனா நீங்களே போட்டுத் தாங்க! :)

said...

இங்கே பின்னூட்டமிட மறந்துவிட்டேனோ?மன்னிச்சிடுங்கய்யா பாவம்.

said...

//எனக்கு இருக்குற அஞ்சு முகத்தைத்தான் எல்லாரும் பாத்திருக்காங்க. ஆறாவது முகத்தை யாரும் பாத்ததில்லையே//

ஜிராவின் உ.குத்து எனக்கு நல்லாப் புரிகிறது :))

நான் மேலும் விரும்பி ரசித்த உ.கு-கள்: (யாராச்சும் இடம் சுட்டி பொருள் கூட வெளக்கலாம் :)
//எக்கச்சக்கமா குருநாயர் பணம் போட்டிருக்காரே//
//ராஜ்யமா இல்லை இமயமா" என்று ஜெயச்சந்திரன் எப்.எம் ரேடியோவில் கதறுகிறார்//
// சிகரட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறார்//
//"சரி.. எப்ப மன்னிப்புக் கேக்கப் போறீங்க?"//
//அதுக்குத்தான் ஐதராபாத் போறேனே.//

ஜிரா...நீங்க தான் கமலின் அடுத்த படத்துக்கு வசனம்! :))

said...

//அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கேட்டாத்தான் அடுத்து எதாச்சும் யோசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டோம். அதுவரைக்கும் ரஜினிகாந்த் படங்களுக்குத் தடா//

குருவிக்கு உலகமெங்கும் கால ஒடிச்சது கப்பி!
குசேலனுக்கு உலகமெங்கும் கால ஒடிச்சது எங்க ஜிரா!

திரையுலகே, பதிவுலகைக் கொறைச்சு மதிப்பிடாதே! :)

said...

// Blogger துளசி கோபால் said...

கருநாடகத்தில் இருக்கும் தமிழர்கள் (இல்லை தமிழ் தய்வங்கள்ன்னு கூடச் சொல்லலாம்) எதுக்குக் கஷ்டப்பட்டாலும் படலாமே தவிர தன்னுடைய படத்தைப் பார்க்க முடியாம படுகஷ்டப்படுவாங்களேன்னு
நினைக்கும்போது நெஞ்சு அப்படியே வெடிச்சுப்போயிரும்போல ஆயிருச்சு. அதுக்குத்தான் இந்த மன்னிப்பு ட்ராமா எல்லாம் (ச்சும்மா உலுலுலுலுலு) //

வாங்க டீச்சர். உண்மையிலேயே உலுலுலுதான். இவரு நடிகரா மட்டும் இருந்திருக்கக் கூடாது. சிங்கிளா வருவாருன்னு சொன்னாங்க...இப்பச் சிங்கிச் சத்தந்தான் கேக்குது!!!

// Blogger ச்சின்னப் பையன் said...

போட்டுத் தாக்குங்க...

தூத்துக்குடி உப்பு நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு போல.... :-))))) //

பொறந்தூர் உப்பாச்சே.... அப்படித்தான் இருக்கும் :)

// Blogger ஜெகதீசன் said...

நன்றி!!!!
:) //

நீங்க நன்றி சொல்றீங்க. அவரு மன்னிப்புல்ல கேக்காரு. ம்ம்ம்.. ஒரு பதிவுக்கே நன்றி சொல்ற நீங்கதாங்க உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் :D

said...

// TBCD said...

பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் (பூர்வீக அல்ல) எந்த உப்பு சாப்பிடுகிறார்கள்..யாருக்கு நன்றி செலுத்துவார்கள்...

புதசெவி

//தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்// //

டிபிசிடி... நீங்க கேட்ட கேள்வி நல்ல கேள்வி. ஜிராவே பெங்களூர்லதான் வேலை. அங்க இருந்துதானே இப்ப நெதர்லாந்து அனுப்பீருக்காங்க.

ஒரு விஷயம் நல்லாப் புரிஞ்சிக்கனும். பொழைக்கப் போன எடத்துல அரசியல் பண்ணனும்னு அங்க போன எல்லாரும் விரும்பலை. செய்றதில்லை. பொதுவாழ்க்கைல இருக்குறதுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைல இருக்குறதுக்கும் வித்தியாசம் ரொம்பவே இருக்கு.

ரஜினி தனிப்பட்ட வாழ்க்கைலயா இருக்காரு? அவரைத் தலைவர்னே எத்தன பேரு இங்க கூப்புடுறாங்க. அவர் கன்னடத்துல வீட்டுல பேசட்டும். நண்பர்கள் கிட்ட பேசட்டும். அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. நம்மாளுங்க வெளிநாடு போனாலும் தமிழ் பேசுறோம்ல. அது மாதிரிதான்.

ஆனா பொதுவாழ்க்கைன்னு வந்தப்புறம்...எப்ப பேசுறோம்..என்ன பேசுறோம்னு ஒரு நிதானம் இருக்கனும். மொதல்ல ஒதைக்கனும்னு பேசுனதே வன்முறையத் தூண்டுறது. அன்னைக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசுனதுல ஒரு நல்லதும் நடக்கலை. அப்படி நல்லது நடக்குற மாதிரியாச்சும் பேசுறாரா!!! அதாங்க அவரக் கும்ம வேண்டியதாப் போச்சு. அவரோட நெலமைக்கு அவரேதான் காரணம். அவரோட ரசிகர்கள்தான் காரணம்ம்.

said...

// ஜோ / Joe said...

ஆமோதிக்கிறேன்..

கன்னியாகுமரி உப்பு போட்ட தமிழன்.//

என்ன இருந்தாலும் நம்மள்ளாம் கடலோரந்தானே அண்ணாச்சி.... மீன் சாப்டு வளந்தவகதானே :)

// Blogger நிஜமா நல்லவன் said...

அண்ணாச்சி தூத்துக்குடி உப்பு டபுள் ஸ்ட்ராங்கா இருக்கும் போல:)//

கல்லுப்பு பொடியுப்புன்னு ரெண்டுருக்கு. மாங்கா நெல்லிக்கா திங்கனும்னாக் கூடச் சின்னப்புள்ளைல கல்லுப்பு வெச்சித்தான் திம்போம். அதோட விளைவுதான் இது போல :D

//Anonymous Anonymous said...

குசேலனில் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பு நயன்தாரா. குசேலனைப் பாக்கலைன்னா என்ன போச்சு? சத்யத்துல பாத்துர வேண்டியதுதான்.//

அப்படிச் சொல்லுங்க. இதென்ன நயந்தாராவுக்குக் கடைசிப் படமா? மர்மயோகில கூட இருக்காராமே. அப்புறமென்ன.. கமலுக்குத் தெரியாததா! :D

// Blogger கவிநயா said...

கோராவுக்கு குறும்புரா :)//

கோராவா ஜிராவா :D

said...

குமு(த்)தத்துலே இந்தப் படத்துக்கு 'நன்று'ன்னு ரேட்டிங் போட்டுருக்கு:-)))))))

said...

// Anonymous said...

நல்ல நக்கல் !

இருந்தாலும் எரிச்சல் அடங்கலபா !
இந்த மனுசன் இப்படி பண்ணிட்டாரே! //

இவரும் இப்பப் பதவீல எதிர்க்கட்சியில இருக்குற அரசியல்வியாதிகளைப் போலத்தான்னு நிரூபிச்சாருன்னு நெனைக்கிறேன். இனிமே சினிமாலயாச்சும் ஹீரோயிசம் காட்டுறத நிறுத்துவாரா?

// Blogger ஜெகதீசன் said...

நெதர்லாந்து ரசிகர்களுக்காக, பெல்ஜியம் சென்று அங்கிருந்து டச்சு மொழியில் ஏதாவது ஒரு நெதர்லாந்து தொலைக்காட்சியில் மன்னிப்புக் கேட்பார்... :P //

ஹெ ஹெ இது சூப்பர் காமெடி. ஆனா ஒன்னு. நீங்க சொன்னது நடக்காதுன்னு சொல்ற துணிச்சல் எனக்கில்லை. :D

// Blogger கோவி.கண்ணன் said...
மறுக்காச்சொல்லேய்....(ரிப்பீட்டை தமிழ் படுத்திட்டோம்) //

முந்தி... இன்னோரு முறை சொல்லுங்கன்னு வந்துச்சு...அதைச் சுருக்க மறுக்காச் சொல்லேய்னு சொல்றதும் நல்லாருக்கு கோவி. திருப்பிச் சொல்லுன்னும் சொல்லலாமோ?

// ஆமா பெங்களூர் தமிழ் ரசிகர்களுக்காகவே தன்மானத்தை(யும்) அடகு வைத்த ரஜினி சார் வாழ்க ! கர்ணன் இவரல்லவா ? ! //

வாழ்க வாழ்க :) என்னதான் கொழப்படிச்சாலும் விஜயகாந்துகிட்ட இருக்குற உறுதி இவர் கிட்ட இல்லையே கோவி. ;) என்ன சொல்றீங்க?

said...

துத்துக்குடி உப்பு அது இதுன்னு என்ன பேசிட்டு இருக்கீங்க...அந்த ஆளு தான் வெள்ளையா இருக்கற எதுவுமே சாப்பிட மாட்டேன்னு சொல்லி இருக்காரே.... :-)

said...

//துளசி கோபால் said...
குமு(த்)தத்துலே இந்தப் படத்துக்கு 'நன்று'ன்னு ரேட்டிங் போட்டுருக்கு:-)))))))//

டீச்சர் வாங்குன கவருக்கு அது கூட எழுதலனா எப்படி :-)

said...

ஜிரா,

இந்த நாடகம் அந்த மேடையில் எப்பவுமே நடக்கும்.இது எப்பவுமே நடக்கும்.:)

said...

ஒரு நடிகனை நடிகனா பார்க்கணும் சார்? தெய்வமா பார்த்தா?

said...

cuck00mas
ஜிரா
உங்க பதிவு நல்லா இருக்கு.

அதோட அந்த அனானிக்கு மதிபாலா எழுதின பதிலும் நல்லா இருக்கு.

மதிபாலாவின் பதிலுக்கு ...
மறுக்காச்சொல்லேய்....(நன்றி கோவிக)

said...

sariyaaga sonneergal ragavan....

aannaa entha comedy karuththukku pathila oru kandanamum ezhuthungalean.....

natpudan,
nilavan

http://eerththathil.blogspot.com

said...

என்னது குசேலன் படம் வந்துடுச்சா :D
இதுக்கூட தெரியாம இருக்கேன் :))
எப்படி இருந்தாலும் படம் பார்பதாக இல்லை..நீங்களும் நானும் ஒரே கட்சி அண்ணா :))

said...

நல்லாத்த்தத்தான் தாக்குறீங்கபா.. இந்த மறுமொழிகளை ரஜினி படிச்சாருன்னாருன்னா போதும் இதுக்காகவே ஒரு பேட்டி தந்துடுவார் போல.. ஹி.. ஹி.. ஹி...

said...

என்ன ஜிரா சார்...இப்படி ரஜினியை தாக்கியிருக்கீங்க....ரொம்ப வருத்தமா இருக்கு...உலகத் தமிழ் மக்களின் அதிக பட்ச அன்பை பெற்ற ஒரு நடிகரை, சமுதாயத்தில் மதிக்கப்படுகின்ற ஒரு நல்ல மனிதரை இப்படி விமர்சிக்கலாமா????

said...

Where is Unsetteled Woman?

said...

Geeraa, nanum unga katchi than. thiruttu VCDla kuda Kuselan padam pakkarathillanu sathiyapiramanam eduthiruken

said...

// அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கேட்டாத்தான் அடுத்து எதாச்சும் யோசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டோம். அதுவரைக்கும் ரஜினிகாந்த் படங்களுக்குத் தடா.//

நானும் ஜார்ஜ் புஷ் ஈராக் படையெடுப்பின் துவக்கத்தில் இப்படித்தான் பெப்சிக்குத் தடா.ஓசுல சாப்பிட்ட KFC னாலே என்னோட விரதமே கலைஞ்சு போச்சு:)

said...

நான் எங்கே போனாலும் இந்த ச்சின்னப் பையன் ஏன் துப்பாக்கிய வச்சுகிட்டு துரத்துறாரு:)?

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

சினிமாவை பொழுது போக்குக்காகவும், நடிகர்களை நம்மை மாதிரி சாதாரண மனிதர்களாகவும் என்னிக்குப் பாக்கப் பழகுறோமோ அன்னிக்குத்தான் நமக்கு விடிவுகாலம். அடிமையாக ரொம்ப வருடங்கள் இருந்ததனாலோ என்னவோ, யாருக்காவது அடிமையாக இல்லைன்னா நமக்கு தூக்கம் வர மாட்டேங்குது.

நல்லா எழுதி இருக்கீங்க, ஜிரா.

said...

மிகவும் தாமதமான பின்னூட்டம் தான். இருந்தாலும் இணைய வேண்டிய உள் உந்துதல்.

உங்கள் உணர்வு பூர்வமான வேகம் பலருடைய மனங்களிலும் இருந்திருக்கிறது என்பது அந்தப்படத்தின் "மாபெரும்" வெற்றியிலிருந்தே தெரிந்து விட்டது.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்; உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்" என்று அவர் பாடியதே இங்கே தான் சுரணையற்றவர்கள் மத்தியில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்கிற பொருளில் தானே!