Monday, September 29, 2008

சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள்

அரசியல்வாதிகள் நிலம் திருடுவது ஒன்றும் புதிதில்லை. பழைய ஜெயலலிதா ஆட்சியில் பல பணக்காரர்கள் நடுயிரவில் வீட்டை விட்டு வெளியே போனதெல்லாம் நாம் நாளிதழ்களிலும் படித்ததுதான். திமுகவினரும் அதை எல்லாருக்கும் எடுத்துச் சொன்னதும் தெரிந்ததுதான்.

இப்பொழுது காட்சிகளும் கோலங்களும் ஆட்சிகளும் மாறியிருக்கிறதும் தெரிந்ததுதானே. சமீபத்தில் சென்னையில் இருக்கும் இடங்களை மதுரையின் முக்கிய அரசியல் மையத்தின் மகனும்... அவருடைய சகோதர உறவுடைய மறைந்த நடிகரின் மகனும் வளைப்பதாகத் தெரிகிறது.

என்னுடைய உறவினர்கள் ஒரு இடம் வாங்கியிருந்தார்கள். சமீபத்தில் அங்கு புதிதாக ஒரு போர்டு போடப்பட்டு சுற்றிலும் தட்டியும் போட்டிருக்கிறார்கள். அதாவது அவர்கள் இடம் மட்டுமல்லாது .. சுற்றியுள்ள இடங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் நிலத்தை வளைத்திருக்கிறார்கள்.

சினிமாவில் வருவது போல.. ஒரு குடிசை.. ஒரு மாருதி வேன். கொஞ்சம் அடியாட்கள் (மதுரையிலிருந்தாம்)....இப்பிடி இருக்கிறதாம் காட்சி.

காவல்துறையில் புகார் கொடுக்கப் போனாலும் அவர்கள் எந்தப் புகாரையும் ஏற்க மறுக்கிறார்களாம். தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மகன் இந்த விஷயத்தில் இருப்பதால் புகார் வேண்டாம் என்று காவல் துறையினரே "நல்லது" சொல்லி அனுப்புகிறார்களாம்.

அந்த ஆட்சியில்தான் இப்பிடியென்றால்... இந்த ஆட்சியிலுமா! இப்பொழுது இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டால்... மற்ற அரசியல் பதிவுகளுக்கு எது ஆதாரமோ...அதேதான் ஆதாரம். கும்முகின்றவர்கள் கும்முக. பம்முகின்றவர்கள் பம்முக.

16 comments:

said...

மறைந்த நடிகர்?

said...

What are the areas where these things are happening? What does the board say? Very scary news.

said...

// Blogger வெட்டிப்பயல் said...

மறைந்த நடிகர்? //

இவர் கிட்டதான் "மூன்றுதமிழ் தோன்றியதோ...மூவேந்தவர் வழிவந்த மன்னவனோ" என்று எம்.ஜி.ஆர் கவிஞர் வாலியைக் கேட்டாராம். :)

said...

//G.Ragavan said...
// Blogger வெட்டிப்பயல் said...

மறைந்த நடிகர்? //

இவர் கிட்டதான் "மூன்றுதமிழ் தோன்றியதோ...மூவேந்தவர் வழிவந்த மன்னவனோ" என்று எம்.ஜி.ஆர் கவிஞர் வாலியைக் கேட்டாராம். :)
//

ந.தி?

said...

யாரந்த மறைந்த நடிகர்?? முத்தானவர் இன்னும் இருப்பதாக தான் தெரிகிறது. அஞ்சாத நெஞ்சம் கொண்டவருக்கு வேறு யார் சகோதரர் முறை??

மத்தபடி, அவிய்ங்க ஆக்ரமிப்பு பண்றதெல்லாம் நியூசே இல்ல. பண்ணாம இருந்தா தான் நியூசு. ம‌க்க‌ள் சொத்தை த‌ன் சொத்தாக‌ நினைக்கும் ப‌ர‌ம்ப‌ரை...ரொம்ப ஏழை குடும்பம் வேற..அத‌னால் குடிசை போட்டுவிட்டார்க‌ள்!

said...

ஜி.ராஆஆஆஆஆஆ
அந்த முன்னாள் நடிகர் உயிரோட இருக்காரு. இப்ப தான் சமீபத்துல அவருக்கு பிறந்த நாள் கூட கொண்டாடினாங்க...

said...

தினகரனில் செய்தியாக கொடுக்கலாம்.ஜெயா டிவியில் செய்தியாக கொடுக்கலாம்.

அம்மா வாழ்க்

said...

அட்லீஸ்ஸ் ஜூ.வி. ரிப்போர்ட்டருக்கு தகவல் அனுப்பவும்...

எதையாவது செய்யனும் பாஸு !!!

said...

விவரங்களை தனிப்பதிவா போட்டு, ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுங்க.

ரவி சொன்ன மாதிரி, ஜூவி, நக்கீரன், ndtv, tehelka இவங்களுக்கெல்லாம் ஒரு காப்பி ப்ரிண்ட் போட்டு அனுப்பி வைங்க.

நல்லது நடக்கும்.

அடிக்கடி இதைப் பத்தி பதிவு போடுங்க. ஆற விடாதீங்க.

said...

பதற வேண்டிய விஷயம். ஆனால் எக்காரணம் கொண்டும் ஜெயாடிவி, தினகரன் என்று போய் விட வேண்டாம். மதுரையில் தெரிந்தவர் ஒருவர், பத்துலட்சம் பெறுமானமுள்ள இடத்தை அதிமுககாரர் இரண்டு லட்சத்திற்கு வளைக்கப் பார்க்கிறார் என்கிற மிரட்டலுக்காக 'அண்ணனி'டம் சென்றதன் விளைவு, அதிமுககாரரிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தை அண்ணன் ஆட்களிடம் நான்குலட்சத்திற்குக் கொடுக்க வேண்டியதாகியது.

said...

என்னென்னமோ நடக்குது ..
மர்மமா இருக்குது ..

said...

ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் நடத்தும் அராஜகம் நமக்கொன்றும் புதிது இல்லை.. பத்திரிகைகளிடம் செல்லாமல் இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க முடியாது.. உடனே செல்லுங்கள்..

பை தி பை

எதிர்க்கட்சியினர் மூலம் வெளிப்படுத்தலாம் என எண்ணாதீர்கள். நீங்கள் சொல்கிற இடங்களில் எதிர்க்கட்சித் தரப்பில் இரண்டாமிடத்தில் இருப்பவரும் தனது குடும்பத்தினர் மூலம் இதே மிரட்டல், அடாவடி, அராஜகத்தை செய்து கொண்டிருக்கிறார். அதுவும் ஒரு நாளைக்கு வெளியாகத்தான் போகிறது..

பத்திரிகைகள் மூலம் வெளிக்கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை..

said...

// வெட்டிப்பயல் said...
ஜி.ராஆஆஆஆஆஆ
அந்த முன்னாள் நடிகர் உயிரோட இருக்காரு. இப்ப தான் சமீபத்துல அவருக்கு பிறந்த நாள் கூட கொண்டாடினாங்க... //

oh! innum irukara? thappana thagaval. veetuku poi thiruthirrean :) avar maraindhu vittar endru chonnathal pun patta nenjagalidam mannipu kaettu kolgirean.

said...

பதற வேண்டிய விஷயம். ஆனால் எக்காரணம் கொண்டும் ஜெயாடிவி, தினகரன் என்று போய் விட வேண்டாம். மதுரையில் தெரிந்தவர் ஒருவர், பத்துலட்சம் பெறுமானமுள்ள இடத்தை அதிமுககாரர் இரண்டு லட்சத்திற்கு வளைக்கப் பார்க்கிறார் என்கிற மிரட்டலுக்காக 'அண்ணனி'டம் சென்றதன் விளைவு, அதிமுககாரரிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தை அண்ணன் ஆட்களிடம் நான்குலட்சத்திற்குக் கொடுக்க வேண்டியதாகியது.
Dont publish but note content
Such a development as above is
also possible. You cant know
the relationship between politicians in these matters.
Cutting across party lines
many of them are crooks.
If your relatives have contacts in police or in other power centres try to use that influence to protect your interest.
These enroachers are capable of creating false records and
disposing off property to
another party without the owner
knowing it. So ask your relatives
to keep an eye and check in the
sub-registrar's office once in a while. At times this enroachment could be an attempt to 'buy' at very low price.
Approaching media has its own
positive and negative effects.
So think about those before approaching the media.

said...

Look this from Kumudam, please send a letter even though it won't help much..

http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-23/pg3.php

என் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும், அவர்களால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை தங்களுக்கு அருகில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவும். மேலும் மு.க. அழகிரி, 25இ, சத்யசாயி நகர், மதுரை - 625003 என்ற எனது முகவரிக்கு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு என்னுடைய நேரடி கவனத்துக்குக் கொண்டு வருமாறு வேண்டுகிறேன்'' என அதிரடியாக இருந்தது அந்த அறிக்கை.

Kuzhali

said...

இதை முதலில் செய்யுங்க... ஒரு எதிர்கட்சி சார்பான வக்கீலை பிடித்து ஒரு கேஸ் மட்டும் கொடுக்க சொல்லுங்க .. அடுத்து இது விசயமாய் ஒன்றும் இப்போதைகு நடவடிக்கை எடுக்கவேண்டாம் நேரடியாக!! காரணம் ஒரு வழக்கானது குறிப்பிட்ட நீதிமன்றத்தில் இருக்கும் போது அவர்கள் என்ன செய்தாலும் நாளை ஆட்சி மாறும்பொழுது தோண்ட வசதியாக இருக்கும்! ஆனலும் இது போன்ற விசயங்கள் .. திமுக தலைவர் கையில் இல்லை என்பதையே காட்டுகிறது. காட்சிகள் மாறும்பொழுது பலரும் மாட்டுவார்கள். விசயகாந்தை பெரிய ஆளாக மாற்றாமல் கலைஞரும் செயலலிதாவும் அடங்கமாட்டார்களோ என்றே தோன்றுகிறது!