பிரியாணி போட்டு ரொம்ப நாளாச்சுல்ல. அதான் இப்பக் கிண்டியாச்சு. மொதல்ல கொஞ்சம் அறிவியல் பச்சடி போடுவோம்.
இந்த கடவுள் நுண்துகள்...அல்லது பெருவெடிப்பு ஆராய்ச்சியப் பத்தித்தான் இப்ப எங்க பாத்தாலும் பேச்சு. அது சரியா...தப்பா... நல்லதா... கெட்டதா...இப்பிடி நூறு கேள்விகள்...விவாதங்கள். அட.. நமக்கு அவ்வளவு அறிவியல் தெரியாதுன்னு வெச்சுக்கோங்களேன். ஆகையால நல்லது கெட்டது சொல்ல முடியாது. ஆனா இங்க நெதர்லாந்துல இருக்குறவங்களுக்குள்ள ஒரு பேச்சு. அதாவது இங்க எங்கூட வேலை செய்ற இந்திய நண்பர்களுக்குள்ள.
இந்தச் சோதனைக்காக 27 கிலோமீட்டருக்கு சுரங்கப்பாதை போட்டிருக்காங்களாம். அதாவது சுவிட்சர்லாந்துல தொடங்கி பிரான்சு வரைக்கும் போகுது இந்தச் சுரங்கம். ஐய்யா...ஆராய்ச்சி நல்லவிதமா முடிஞ்சிருச்சுன்னு வெச்சுக்கோங்களேன்....எல்லாருக்கும் சந்தோசம். ஆனா ஒவ்வொருவரு பயமுறுத்துறாப்புல கருந்துளைன்னு ஒன்னு உண்டாயிருச்சுன்னா...அதுக்குள்ள எல்லாம் போயி ஒன்னுமில்லாம ஆயிருமாம்ல. அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா.....? பிரான்சுக்கு மேலதான நெதர்லாந்து... ரொம்பப் பக்கமாச்சேய்யா.....அதான் இப்பதையப் பேச்சு. எந்தத் தேதீல இந்தப் பெருவெடிப்ப உண்டாக்குறாங்கன்னு சொல்லீட்டாங்கன்னா...இல்ல ஒங்களுக்குத் தெரிஞ்சா நீங்களும் சொல்லுங்க. அந்தத் தேதி வாக்குல ஒரு வாரமோ ரெண்டு வாரமோ லீவக் கீவப் போட்டு இந்தியாவுல குடும்பத்தோட இருக்கலாம் பாருங்க. தேதி தெரிஞ்சாச் சொல்லுங்கய்யா... பிரான்சு சுவிட்சர்லாந்துல இருக்குற நம்மூர்க்காரகளப் பாத்து ஆறுதல் பட்டுக்கிட்டாலும்....பலருக்கு இங்க அடிவயிறு ஜிலீர்ங்குதாங்கோய்.
---------------------------------------------------------------------------
அடுத்து ஒரு கேள்வி. இந்தியாவுல மருத்துவம் பாக்கலாமா? பாக்கக் கூடாதா? இன்னும் குறிப்பாச் சொல்லனும்னா......வெளிநாட்டுல இருக்குற இந்தியர்கள் இந்தியாவுல மருத்துவம் பாக்கலாமா கூடாதா? ஏன் இந்தக் கேள்வின்னா...ஒரு மெயில் வந்துச்சு. இங்கிலாந்துல இருக்குற ஒரு தமிழர் அனுப்புன மெயில்தான். எனக்கு நேரடியா அவரைத் தெரியாதுன்னு வெச்சுக்கோங்களேன். ஆனாலும் மெயில்னு ஒன்னு வந்துருச்சே. அவரோட மனைவிய இழந்துட்டாராம் இந்தியாவுல. அவங்களுக்கு ஹெர்னியா இருந்திருக்கு. இங்கிலாந்துல மருத்துவம் பாத்திருக்காங்க. அவங்களும் இது ஒன்னும் பிரச்சனையே கெடையாது. அவசரப் பிரச்சனையும் கெடையாது. ஓய்வா இருக்குறப்போ சொல்லுங்க...இப்பத்தான கொழந்தை பிறந்து ரெண்டு மாசம் ஆகுது.. ஆகையால கொஞ்ச நாள் கழிச்சி....அறுவை சிகிச்சை செஞ்சிக்கிறலாம்னு சொன்னாங்களாம். இவங்களும் இந்தியாவுக்கு லீவுல போறோமே...அங்க நம்மூரு டாக்டருங்க நல்லா பாத்துச் சொல்வாங்கள்ளன்னு வந்திருக்காங்க. வந்த அன்னைக்கே டாக்டர் கிட்ட அப்பாயிண்டுமெண்டு. பெருங்குடி பக்கத்துல இருக்குதே லைப்லைன் மருத்துவமனை. அங்க இருக்குற டாக்டர்.ராஜ்குமார் கிட்ட. அவரு சொன்னாராம்...அடுத்த நாளே அறுவை சிகிச்சை வெச்சிக்கலாம்னு.
அடுத்த நாள் அறுவை சிகிச்சையும் நடந்தது. ஆனா அதுக்கப்புறம் ஒன்னு மேல ஒன்னா பிரச்சனைகள் வந்து கடைசியில் மனைவியை வெறும் உடலாத்தான் வீட்டுக்குத் தூக்கீட்டுப் போக முடிஞ்சதாம். அந்த அபாய நிகழ்வுகளை மின்னஞ்சலில் தொகுத்து அனுப்பியிருக்காரு. இதுல எவ்வளவு உண்மை பொய்னு தெரியலை. ஆனாலும் படிக்கிறப்போ நமக்கே பயமாயிருக்குங்க. அந்தக் குறிப்பிட்ட மருத்துவரைப் பத்தியோ மருத்துவமனையைப் பத்தியோ குறை சொல்லனுங்குறது என்னோட எண்ணம் இல்ல. ஆனா வந்த மின்னஞ்சலில் சாராம்சத்தைப் பகிர்ந்துக்கனுங்குறதால சொன்னேன். இந்த மின்னஞ்சல் வேணுங்குறவங்க...எனக்கு gragavan@gmail.comக்கு மின்னஞ்சல் அனுப்புங்க. நான் ஒங்களுக்கு அனுப்புறேன்.
அதுவுமில்லாம...சமீபத்துல என்னுடைய மாமாவும் மருத்துவமனையில் இருந்தாரு. அவங்க அவரைப் பாத்துக்கிட்ட விதத்தப் பாக்குறப்போ இந்திய மருத்துவர்கள் வியாபாரிகளாகிப் போயிட்டாங்களோன்னுதான் தோணுச்சு. விதிவிலக்குகள் இருக்கலாம். எல்லாரும் அப்படித்தான்னு இல்லை. ஆனாலும் அந்த மருத்துவர்ங்குறது போய் மருத்துவ வியாபாரிங்குற எண்ணம் எழுந்தது உண்மைதான். இங்க நெதர்லாந்துல கூட வேலை பாக்குற பொண்ணுக்கு ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு. மருத்துவமனைல பத்து நாளு இருந்துட்டு அப்புறம் இந்தியாவுக்குப் போயிட்டா. ஆனா அந்தப் பத்து நாளும் அருமையா பாத்துக்கிட்டாங்க. நெறைய சோதனைகள் செஞ்சாங்க. ஆனா மருந்தோ எதுவுமோ படக்குன்னு குடுத்துறலை. அதே மாதிரி அந்தப் பொண்ணு இந்தியா போனப்பிறகும் நல்ல மருத்துவர் கிட்ட பாத்து சரியாப் போச்சு. அதுவும் உண்மைதான். முன்னமே சொன்னாப்புல நெறைய மருத்துவ வியாபாரிகள்..சில மருத்துவர்கள். இதுதான் இந்தியாவின் நிலையோ!!!!!
---------------------------------------------------------------------------
அடுத்து எதாச்சும் ஜாலியா பாப்போமா! ஒரு ஜாலியான பாட்டு. ஆனா தெலுங்குல. தமிழ்லயும் இந்தப் படத்தப் பாத்திருப்பீங்க. பாட்டையும் கேட்டுருப்பீங்க. வாழ்வே மாயம்னு தமிழ்ல வந்துச்சுல்ல. அது பிரேமாபிஷேகம்னு மொதல்ல தெலுங்குல வந்துச்சு. படம் குண்டக்க மண்டக்க ஓடுனதால அதைக் கமலை வெச்சு தமிழ்ல எடுத்தாங்க. பில்லா கிருஷ்ணமூர்த்திதான் இயக்கம். தமிழில் இசை கங்கையமரன். எல்லாப் பாட்டையும் புதுசாப் போட்டாலும் இந்தப் பாட்டை அப்படியே தெலுங்குல சக்கரவர்த்தி இசைல இருந்து சுட்டுட்டாரு. பாட்டைக் கேளுங்க. பாருங்க. விழுந்து விழுந்து சிரிச்சு ஒடம்பைப் புண்ணாக்கிக்கிறாதீங்க.
அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்
Sunday, September 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
அண்ணாஆஆஆஆஆஆஆ நான் வந்துட்டேன்(சிங்கப்பூரிலிருந்து echo)
எனக்கும் இங்கிருக்கும் மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் மேல நீங்க சொல்லியிருக்கற மாதிரியான உணர்வுதான் ஜிரா. அதுவும் பெரிய பேனர்-ல இருக்கும் ஆஸ்பத்திரிகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
விஷயம் நம்பர் 1)
அண்ணா நீங்க இருக்குறதுனால நெதர்லாந்துக்கு ஒன்னுமே ஆகாது.ஏனென்றால்...............................நீங்க..............
ரொம்பாஆஆஆஆஆஆஆஆ
நல்லவர் :)))))
விஷயம் நம்பர் 2)
எங்கும் வியாபாரம் எதிலும் வியாபாரம் :)
அதுல இது மட்டும் விட்டு போயிடுமா என்ன?எல்லாம் ஊரிலும் இதே பிரச்சனைதான் அண்ணா.ஆனா எல்லாம் மருத்துவமனைகளும் இப்படி இல்லைதான்...ஆகவே என்ன சொல்லுறதுன்னு தெரியல
//விழுந்து விழுந்து சிரிச்சு ஒடம்பைப் புண்ணாக்கிக்கிறாதீங்க.//
உடம்பு எல்லாம் புண்ணாகவில்லை.ஆனா சிரிச்சு சிரிச்சு முகம் எல்லாம் வலிக்கிது :D
இப்படி லாப்டாப் முன்னாடி சிரிச்சுட்டு இருந்தால் எங்க அண்ணாச்சிக்கு சந்தேகம் வந்துடும்.ஆகவே நான் எஸ்கேப் :)
பெருவெடிப்பு ஏற்படும்போது மட்டும் இந்தியாவா???
ஹிஹிஹி ( மரணச்சிரிப்பு )
அப்படி பெருவேடிப்பு ஏற்படுத்த கொஞ்ச நாளாகும் ( 1-2 வருடங்கள்)
அதுலயும் அத கொஞ்சநாளுக்கு அப்படியே சுத்த வைப்பஙை்களாம்.
அப்பதா வெடிப்ஆபாட உச்சக்கட்டம் வரும். அதுக்கு 1-2 வருடங்களானலாம், 1-2 மாதங்களும் ஆகலாம்.
அது தோல்வியடைஞசி எல்லாம் உள்ள போயிரும்னா, முழு உலகமும் இதுக்குள்ள போயிடும். சோ நீங்க எங்க இருக்கீங்கறது பிரச்சனையே இல்ல. நியுசிலாந்து பக்கமா போயிருந்தா எப்படி உள்ள போகுமென்று லைவாக பாத்தபிறகு நாமளும் உள்ள டிக்கட் உடுக்கலாம்இ ஹிஹிஹி
ம்ம்ம் எதுக்கும் இது அனேகமா 2012ம் வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி நடக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா மாயன் எனும் பழங்குடியினரின் கணக்குப்படி அன்னிக்குதா உலகம் அழியுதாம். ஞ டியுபில பாருங்க.
( உங்களுக்கு இன்னிக்கு நித்திரை வராவிட்டால் அதுக்கு நா பொறுப்பில்லைங்கறத பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன் )
:)
//பிரான்சுக்கு மேலதான நெதர்லாந்து... ரொம்பப் பக்கமாச்சேய்யா//
:))))
என்ன ஜிரா நீங்க...இதுக்கெல்லாம் பயப்படலாமா?
பிரான்சின் மையப் பகுதிக்கே வந்து, சிங்கத்தை அதன் குகையிலேயே ஐ மீன் Tunnelலியே சந்திக்கப் போற வீரரை நினைச்சிப் பெருமைப்படுங்க!
//:))))
என்ன ஜிரா நீங்க...இதுக்கெல்லாம் பயப்படலாமா?
பிரான்சின் மையப் பகுதிக்கே வந்து, சிங்கத்தை அதன் குகையிலேயே ஐ மீன் Tunnelலியே சந்திக்கப் போற வீரரை நினைச்சிப் பெருமைப்படுங்க!///
excuse me ragavan anna..intha tunnel ellam NYC pakkama poga chances ethuvume illaiya :D
பிரியாணி கலக்கல், கோழிக்காலைச் சாப்பிடும் போது கடைசி வீடியோ பார்த்து புரைக்கேறிப் போச்சு ;)
இந்தப் பாட்டை தமிழில் எப்படிப் படமாக்கி இருக்காங்க? அதையும் போடுங்க!
மருத்துவர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான் போல...
இன்னும் நல்லா சிரிக்கணும்னா mute-ல போட்டுட்டு பாடலைப் பார்க்கலாம் :)
என்னது !! சிங்கத்தைச் சந்திக்க்கப் போறாரா:)
தெரியாத நியூஸா இருக்கே ரவி!!
ராகவன் , சில பேரைத்தவிர அநேகமாக 80% மரூத்துவ வியாபாரிகள் தான்:(
ரொம்ப நாளாச்சுப்பா இந்த மாதிரி இழுத்துக்கோ பிடீச்ச்க்கோ பாட்டைப் பார்த்து:)
பிரியாணி சூப்பர் ;))
அதுவும் அந்த பாடல் கலக்கல் ;)))
// Blogger துர்கா said...
அண்ணாஆஆஆஆஆஆஆ நான் வந்துட்டேன்(சிங்கப்பூரிலிருந்து echo) //
வாம்மா வா... நீ நல்லாவே எக்கோ விடற...சூப்பரு. அண்ணக்கு ஆதரவு தங்கச்சிதான்னு நிரூபிச்சிட்ட...
// துர்கா said...
விஷயம் நம்பர் 1)
அண்ணா நீங்க இருக்குறதுனால நெதர்லாந்துக்கு ஒன்னுமே ஆகாது.ஏனென்றால்...............................நீங்க..............
ரொம்பாஆஆஆஆஆஆஆஆ
நல்லவர் :))))) //
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.........சகோதரி... நம்ம பாசமலர் வாசம் இப்பிடி மணம் பரப்பும்னு ஊருக்கு இன்னைக்குத் தெரிஞ்சிருச்சும்மா. தெரிஞ்சிருச்சு.
இந்தப்பாட்டு மழைக்கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது தானே. அது சரி, யார் அந்த தெலுங்கு ஹீரோ. நமக்கு தெலுங்கு சினிமா பொது அறிவு லேது
// Blogger சுபாஷ் said...
பெருவெடிப்பு ஏற்படும்போது மட்டும் இந்தியாவா???
ஹிஹிஹி ( மரணச்சிரிப்பு )
அப்படி பெருவேடிப்பு ஏற்படுத்த கொஞ்ச நாளாகும் ( 1-2 வருடங்கள்)
அதுலயும் அத கொஞ்சநாளுக்கு அப்படியே சுத்த வைப்பஙை்களாம்.
அப்பதா வெடிப்ஆபாட உச்சக்கட்டம் வரும். அதுக்கு 1-2 வருடங்களானலாம், 1-2 மாதங்களும் ஆகலாம்.
அது தோல்வியடைஞசி எல்லாம் உள்ள போயிரும்னா, முழு உலகமும் இதுக்குள்ள போயிடும். சோ நீங்க எங்க இருக்கீங்கறது பிரச்சனையே இல்ல. நியுசிலாந்து பக்கமா போயிருந்தா எப்படி உள்ள போகுமென்று லைவாக பாத்தபிறகு நாமளும் உள்ள டிக்கட் உடுக்கலாம்இ ஹிஹிஹி
ம்ம்ம் எதுக்கும் இது அனேகமா 2012ம் வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி நடக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா மாயன் எனும் பழங்குடியினரின் கணக்குப்படி அன்னிக்குதா உலகம் அழியுதாம். ஞ டியுபில பாருங்க.
( உங்களுக்கு இன்னிக்கு நித்திரை வராவிட்டால் அதுக்கு நா பொறுப்பில்லைங்கறத பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன் )
:) //
ஹா ஹா சுபாஷ்... எனக்குப் பயமெல்லாம் இல்லை. என்ன அந்தக் கருந்துளை உண்டாகுறப்போ உறவுகளோடு இருக்கலாமேன்னுதான்.
ஆக.. 12-12-12க்கு உலகம் அழியுமா.... இன்னும் நாலு வருசம் இருக்கும் போல
//விழுந்து விழுந்து சிரிச்சு ஒடம்பைப் புண்ணாக்கிக்கிறாதீங்க.//
முடியல.... அவரு ஆடுறதுக்கு பேருதான் டான்ஸ்'ஆ??? :))
பிரியாணி சூப்பர் ;))
அதுவும் அந்த பாடல் கலக்கல் ;)))
// Blogger மதுரையம்பதி said...
எனக்கும் இங்கிருக்கும் மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் மேல நீங்க சொல்லியிருக்கற மாதிரியான உணர்வுதான் ஜிரா. அதுவும் பெரிய பேனர்-ல இருக்கும் ஆஸ்பத்திரிகள் பற்றி கேட்கவே வேண்டாம். //
உண்மைதான் அண்ணா. இது மிகவும் வருத்தத்திற்குரிய மாற்றம். இந்த மனநிலையோடு மருத்துவம் படித்தால் எப்படி?!?! தூத்துக்குடியில் பிரின்ஸ் வேதராஜ் என்று ஒரு டாக்டர். இப்பொழுது மிகவும் வயதாகி விட்டது. சிறுவயதில் அவரிடம் என்னை உடல்நலக் குறைவென்றால் அழைத்துச் செல்வார்கள். அவரைப் பார்த்தாலே பாதி நோய் போய்விடும். அவருடைய சிரித்த முகம் இன்னமும் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.
//நியுசிலாந்து பக்கமா போயிருந்தா எப்படி உள்ள போகுமென்று லைவாக பாத்தபிறகு நாமளும் உள்ள டிக்கட் உடுக்கலாம்இ ஹிஹிஹி//
அப்படியா சேதி?
அப்ப வாங்க. பதிவர் மாநாடு நடத்துப்புட்டே போயிறலாம்:-))))
நீங்க இந்திய மருத்துவமனைகளைப் பற்றி சொன்னீர்கள்.
என்னுடைய உறவினர் (மலேசிய இந்தியர்) நுரையீரல் புற்று நோயால் பீடிக்கப்பட்டு மலேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சுமார் ஆறு மாதங்களில் பல லட்சங்களை இழந்தார். ஒன்றும் பயனளிக்கவில்லை. நான் கேள்விப்பட்டு அவருடைய மருத்துவ அறிக்கையை பெற்று இங்கு இரண்டு பெரிய மருத்துவமனைகளில் காண்பிக்க இருவருமே இது டெர்மினல் ஸ்டேஜ்ல இருக்கறதுனால எந்த மருத்துவமும் பலனளிக்காது. அவரை நிம்மதியாய் விட்டுவிடுங்கள். இருக்கும் வரையிலும் இருக்கட்டும் என்றார்கள். என்றாலும் பிளளைகள் கேட்கவில்லை. மேலும் சில லட்சங்கள்.. உடல் உபாதைகள்... பலனில்லாமல் கடந்த மாதம் மரித்துப்போனார்.
அதுபோன்று நம்முடைய ஜெமினி கணேசனின் மகளுடைய மருத்துவமனையில் உலகெங்கும் உள்ள தமிழ் பெண்கள் பல வருடங்களாக மகப்பேறு இல்லாமல் இருந்து பலத்த எதிர்பார்ப்புகளுடன் வந்திருப்பதை நேரில் கண்டிருக்கிறேன். அவர்களில் 75 விழுக்காடு பேர் வெற்றிகரமாக பிள்ளைப் பேறு கிடைக்கப்பெற்றதாக சான்றுகளுடன் மருத்துவமனை அறிக்கை கூறுகிறது.
ஆகவே இந்திய மருத்துவர்கள் அவர்களுக்குள்ள குறைந்த வசதிகளுடன் மிகச் சிறப்பாகவே வைத்தியம் செய்கின்றனர் என்பது உண்மை. அதுபோலவே உலகெங்கும்முள்ள மருத்துவர்களைப் போலவே இங்கும் சில திறமையற்ற, நேர்மையற்ற மருத்துவர்களும் மருத்துவமனைகளும் உண்டென்பதும் உண்மை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போறும் என்பது இந்த விஷயத்தில் சரியாகாது.
பிரபஞ்ச ரகசியமும், பெருவெடிப்புச் சோதனையும்!
''பூகம்பம் ஏற்படப்போகிறது,சுனாமி தாக்கப்போகிறது, உலகமே அழியப்போகிறது'' என்று ஆளாளுக்கு பயமுறுத்தி வந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட அந்த அணுவெடிப்பு சோதனை வெற்றிகரமாகத் தொடங்கி விட்டது. நாம் அனைவரும் இன்னும்கூட உயிரோடுதான் இருக்கிறோம். பூகம்பமும் வரவில்லை; சுனாமியும் தாக்கவில்லை. மீன் பிடிப்பதில்கூட எந்தப் பிரச்னையும் எழவில்லை. எல்லாம் வழக்கம்போல் நடந்து கொண்டிருக்கிறது.
ஃபிரான்ஸ் நாட்டுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே ஜெனீவாவுக்கு அருகில்தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற அடிப்படையான கேள்வி உள்பட இதுவரை அறிவியலால் தீர்க்கப்படாத சில கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்காகத்தான் விஞ்ஞானிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சோதனை நடந்து வருகிறது. செர்ன் (cern) என சுருக்கமாக அழைக்கப்படும் அணுசக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்புதான் இதை மேற்கொண்டிருக்கிறது. இதில் எண்பது நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்று இருக்கிறார்கள். 'லார்ஜ் ஹெட்ரோன் கொல்லிடர்' (LHC) என்ற கருவியில், ஏறத்தாழ ஒளியின் வேகத்துக்கு புரோட்டான்களை எதிர்எதிர் திசையில் செலுத்தி அவற்றை மோதச்செய்வதன்மூலம் பிரபஞ்சம் உருவானபோது ஏற்பட்டதாகக் கருதப்படும் பெருவெடிப்பினை (Big Bang) செயற்கையாக நடத்திப் பார்ப்பதற்குத்தான் இந்தச் சோதனை செய்யப்படுகிறது. பூமியின் அடியில் சுமார் 175 மீட்டர் ஆழத்தில் இருபத்தேழு கிலோமீட்டர் நீளம்கொண்ட சுரங்கக் குழாய்ப் பாதையை அமைத்து அதில்தான் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பெரும்வெடிப்பில் இருந்துதான் இந்தப் பிரபஞ்சம் தோன்றியிருக்கவேண்டும் என்ற அறிவியல் கோட் பாட்டைப் பெரும்பாலான விஞ்ஞானிகள் இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பெரும்வெடிப்புக்குப் பிறகு பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தபடி இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கூற்றாகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கோட்பாட்டையட்டியே இந்த அறிவியல் கொள்கை உருவானது. இப்படி விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம் ஒருகட்டத்தில் அதன் உச்சபட்ச அளவை எட்டியதும் புதிய விளைவுகள் உண்டாகும். இந்தப் பிரபஞ்சம் உருவானபோது எந்த அளவு உஷ்ணம் இருந்ததோ அந்த அளவுக்கு வெப்பம் அப்போதும் வெளிப்படும் என்பது சில விஞ்ஞானிகளின் யூகமாகும்.
'பிரபஞ்சம் உருவானது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது? அந்தப் பிரச்னையை ஆன்மிகவாதிகளிடம் விட்டுவிடவேண்டியதுதானே' என சிலர் எண்ணக்கூடும். ஆனால், இது வெறும்
தத்துவம் சார்ந்த பிரச்னை அல்ல. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அணு என்பது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களால் ஆனது என்று விஞ்ஞானிகள் நினைத்தார்கள். ஆனால், அவற்றைத் தவிர மேலும் பல துகள்கள் அணுவுக்குள் இருக்கின்றன என்பதைப் பிறகுதான் கண்டறிந்தார்கள். ஒரு பருப்பொருளுக்கு நிறை (Mass) எப்படி உருவாகிறது என்பதை இதுவரை விஞ்ஞானிகள் கண்டறியவில்லை. அதுபோலவே, ஈர்ப்பு சக்தியின் (Gravity) ரகசியமும் இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. பருப்பொருளுக்கு நிறையைத் தருகிற இதுவரை அறியப்படாத அந்தத் துகளை 'கடவுள் துகள்' என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இதை முதன்முதலில் எடுத்துரைத்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவரின் பெயரால் இது 'ஹிக்ஸ் போசோன்' எனவும் அழைக்கப்படுகிறது.
அப்படி ஒரு துகள் அணுவுக்குள் இருக்கிறதா என்பதை இப்போது நடத்தப்பட்டுள்ள இந்தச் சோதனை வெளிப்படுத்தி விடும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்ப்பார்ப்பு.
செர்னில் நடத்தப்படும் இந்தச் சோதனை வெற்றிபெற்றால் தனக்கு நோபல் பரிசு நிச்சயம் என்று உலகப்புகழ் பெற்ற இயற்பியல் துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கிண்டலாகக் கூறிவந்தார். இந்தச் சோதனையில் 'கடவுள் துகளை' கண்டு பிடிக்க முடியாது என்பது அவரது வாதம். ஒருவேளை அது கண்டுபிடிக்கப்படாமலே போனாலும்கூட விஞ்ஞானத்துக்கு வேறு நன்மைகள் இருக்கும். இந்த எல்.ஹெச்.சி. கருவி மூலம் நடத்தப் படுகின்ற 'செயற்கை பெருவெடிப்பு' பல புதிய துகள்களை நமக்கு அறிமுகப்படுத்தப்போகிறது. அது பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி நமக்கு மேலும் தெளிவை ஏற்படுத்துவது நிச்சயம் என்று ஹாக்கிங் கூறியிருக்கிறார்.
இந்தச் சோதனையால் உடனடியாக ஏற்படப் போகும் லாபம் என்ன என்று சிலர் கேட்கிறார்கள். வரலாறு முழுவதும் மனித குலம் பல்வேறு அறிவியல் ஆய்வுகளைச் செய்து வந்திருக்கிறது. பிரபஞ்சத்தின் ரகசியத்தை கண்டறிவதற்கான அந்த ஆய்வுகள் உடனடி லாப நஷ்டங்களை கவனத்தில் கொண்டதில்லை. ஆனால் அந்த ஆய்வுகளின் விளைவாகச் செய்யப் பட்ட கண்டுபிடிப்புகள்தான் இன்று மனிதர் களுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தந்து கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால் 'இன்டர்நெட்' பயன்பாடு இப்படித்தான் கண்டறியப்பட்டது. எனவே, இந்த ஆராய்ச்சியின் உடனடி லாபத்தைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது என்பதே விஞ்ஞானிகளின் கருத்து. ஆனால், இதன் விளைவாகக் கண்டறியப்படும் தகவல்கள் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சியில் நேரடியாக ஈடுபட்டுள்ள இரண்டாயிரம் விஞ்ஞானிகளில் சுமார் இருநூறு பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய விஷயமாகும். இந்த ஆராய்ச்சிக்காக இந்தியா சுமார் 1,125 கோடி ரூபாயை அளித்திருக்கிறது. அந்த சுரங்கப்பாதையை கட்டுவதற்கான பொருட்களில் சிலவற்றையும் இந்தியா வழங்கியிருக்கிறது. மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமன்டல் ரிசர்ச், பாபா அணு ஆராய்ச்சி மையம், கொல்கத்தாவில் உள்ள அணு இயற்பியல் ஆய்வு நிறுவனம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி, ஜெய்ப்பூர், பஞ்சாப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள்.
செப்டம்பர் பத்தாம் தேதி தொடங்கப்பட்ட இந்த அணு வெடிப்புச் சோதனை அத்துடன் முடிந்துவிடவில்லை. நொடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் எதிர் எதிர் திசைகளில் இருந்து செலுத்தப்படும் புரோட்டான்கள் அக்டோபர் இருபத்தொன்றாம் தேதிதான் மோதிக்கொள்ள இருக்கின்றன. அப்போதுதான் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 'செயற்கை பெருவெடிப்பு' நிகழப்போகிறது.
இந்தச் செயற்கை பெருவெடிப்பு மூலமாக என்ன நடக்கிறது என்ற விவரங்கள் உலகமெங்கும் ஐம்பது நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் கம்ப்யூட்டர்கள் மூலமாகத் தொகுக்கப்பட உள்ளன. ஆண்டுக்கு சுமார் பதினைந்து 'பெடாபைட்' அளவுக்குத் தகவல்கள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவும் இந்தத் தொகுப்புப் பணியில் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செர்னில் நடக்கவுள்ள இந்த செயற்கைப் பெரு வெடிப்பு உலகை அழித்துவிடும் என்று பாமரர்கள் மட்டுமின்றி சில விஞ்ஞானிகளும் கூறிவந்தனர். அந்தச் சோதனையின்போது உருவாகும் கருந்துளை (Black Hole) பூமியை உள்ளே இழுத்துக்கொண்டுவிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக் கிறார்கள். ஆனால் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளோ அதை மறுக்கிறார்கள். பிரபஞ்சத்தில் கணந்தோறும் இதைவிட அதிகமான ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படியான மோதல்கள் எண்ணற்ற அளவில் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும், பிரபஞ்சம் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆராய்ச்சியில் கருந்துளை உருவானாலும்கூட அது மிகமிகச் சிறியதாக உடனே அழிந்துவிடக்கூடியதாகத்தான் இருக்கும் என்று அவர்கள் சமாதானம் சொல்கிறார்கள்.
பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய இந்த ஆராய்ச்சி பிரபஞ்சத்தின் முடிவாக இருந்துவிடுமோ என்ற அச்சம் தேவையற்றது. இந்தப் பிரபஞ்சம் இப்போது இருப்பதுபோல் என்றும் இருந்ததில்லை. இது சுமார் பதினைந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரபஞ்ச விஞ்ஞானமும் ஓரளவுக்கு கோட்பாட்டளவில் இதை உறுதி செய்திருக்கிறது. இதைப்பற்றி முக்கியமான கருத்துக்களை முன் வைத்துள்ள விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு பேச்சில் குறிப் பிட்டதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்&
''அறிவியல் ஆதாரங்கள் யாவும், பிரபஞ்சமானது சுமார் பதினைந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகி இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. ஆனால், இந்தப் பிரபஞ்சம் ஒருநாள் அழிந்துவிடுமா என்பதை நாம் உறுதியாகச் சொல்லமுடியாது. ஒருமுறை ஜப்பானில் நான் உரைநிகழ்த்தியபோது அங்கிருந்தவர்கள் 'பிரபஞ்சம் அழிந்துவிடும் என்று சொல்லாதீர்கள்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். ஏனென்றால் அப்படிச் சொன்னால் அது பங்குச்சந்தை வர்த்தகத்தை பாதித்துவிடுமாம்! பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் ஒருவேளை இந்த பயம் காரணமாக தமது பங்குகளை விற்கவேண்டும் என நினைத்தால்... அது தேவையற்றது. பிரபஞ்சம் அழியப் போவது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும்கூட, அதற்கு இன்னும் இருபது பில்லியன் ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் 'காட்' ஒப்பந்தம்கூட நடைமுறைக்கு வந்துவிடக்கூடும்'' என்று ஸ்டீபன் ஹாக்கிங் வேடிக்கையாக அப்போது குறிப்பிட்டிருந்தார்.
உலகம் அழிந்துவிடும் என்று சமயத்துக்குச் சமயம் புரளி கிளப்புபவர்கள் இதை ஒருமுறை படித்துக்கொண்டால் நல்லது!
___________________________________-
..... முத்தமிழ் குழுமத்துல சுட்டது... :)
...
// SanJai said...
... //
சஞ்சய்..விளையாட்டாக் கேட்ட விஷயதுக்கு விவரமா விளக்கம் குடுத்திருக்கீங்க. ஆக அடுத்த மாசந்தான் புரோட்டான் மோதல் நடக்கப் போகுது. சூப்பர். அப்ப நெதர்லாந்துதான். என்ன நடக்குதுன்னு பாத்துருவம்யா... ஒலகம் நம்மளோடது. இப்பிடி தைரியஞ் சொல்றப்போதானே தெம்பா இருக்குது. நன்றிங்கோவ். :)
அதாவது சுவிட்சர்லாந்துல தொடங்கி பிரான்சு வரைக்கும் போகுது இந்தச் சுரங்கம். ஐய்யா...ஆராய்ச்சி நல்லவிதமா முடிஞ்சிருச்சுன்னு வெச்சுக்கோங்களேன்....எல்லாருக்கும் சந்தோசம். ஆனா ஒவ்வொருவரு பயமுறுத்துறாப்புல கருந்துளைன்னு ஒன்னு உண்டாயிருச்சுன்னா...அதுக்குள்ள எல்லாம் போயி ஒன்னுமில்லாம ஆயிருமாம்ல. அப்படி ஏதாச்சும் //
அடடா!! ராகவன் என்னப்பா இதைச் சரியாப் படிக்காம விட்டேனே.
வேணும்கறவங்கள்ளாம் ஸ்விஸ்ல, நெதர்லாந்தில:0)!!
யாராவது சொன்னாத் தேவலையே.
ராகவன் இன்று உங்கள் பதிவுக்கு வந்து இரண்டு நல்ல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
சஞ்சயும்,டி.பி.ஆர் அவர்களும் அழகாக விளக்கியுள்ளார்கள்.
என்னதான் பிக்பாங்க் பற்றி ஆங்கிலத்தில் படித்தாலும், இப்போது புரிந்தது போல் அப்போது விளங்கவில்லை. மிகவும் நன்றி சஞ்சய்.
பெயர் தப்பாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.
Premabhishekam is a milestone not only in the career of ANR, but also in the history of Telugu cinema. This film was produced by Nagarjuna Akkineni and Venkat Akkineni on Annapurna banner with ANR as hero in the direction of Dasari. Shooting of this film was started on the birthday of ANR (20th September) and was released on marriage day of ANR (18th February 1980). This film completed 100 days on 28th of May, which happens to be the birthday of NTR.
Here is the list of centers of Premabhishekam
Gudiwada-Bhaskar 427 Days
(50 days with 4 shows and remaining days with noon show)
Guntur-Vijaya Talkies 380 Days ( A silasasanam was established in Vijaya Talkies to mark this occasion)
Nellore-Kiran 317 Days
Visakhapatnam-Venkateswara 310 Days
Vijayawada-Annapurna 302 Days
Tenali-Venus 300 Days
Hyderabad-Various 75 weeks (with shift) - Platinum Jubilee
Vijayawada-Various 75 weeks (with shift) - Platinum Jubilee
Bangalore-Movie Land 90 weeks (630 days with noon Show)- Platinum Jubilee
Post a Comment