Wednesday, June 22, 2005

இன்னுமொரு பிரபல சந்திப்பு

டி.ராஜேந்தரைச் சந்திச்சது பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன். அதுக்கப்புறம் நடந்த இன்னொரு தற்செயல் சந்திப்பு இது.

அக்டோபரு ஒம்பதாந் தேதி சனிக்கெழம காலைல பெங்களூரு இந்திரா நகருல இருக்குற ஸ்டேட் பேங்க் ஆ·ப் இந்தியாவுக்குப் போனேன். ஒரு ஒம்பதர இருக்கும். உள்ள போயி பாஸ்புக்க குடுத்துட்டு நின்னுக்கிட்டிருந்தேன். உள்ள வரிசையா நாற்காலி போட்டிருக்கும். நிக்காம சொகுசா உக்காந்துக்கிறத்தான். வாடிக்கையாளர் சேவையாம். இங்க பெங்களூர்ல ரயில்வே டிக்கட்டு எடுக்குற எடத்துலயும் வரிசைல நிக்க முடியாது. வரிசைல உக்காந்துக்கலாம். நல்ல வசதி.

சரி. கதைக்கு வருவம். அந்த வரிசைல கூட்டமில்ல. அங்கொருத்தரு இங்கொருத்தருன்னு உக்காந்திருந்தாங்க. அதுல ஒரு அம்மா, வயசானவங்க, கூட மக வயசுப் பொண்ணோட உக்காந்திருந்தாங்க. அவங்களப் பாத்ததுமே எனக்குச் சந்தேகம். "இவங்க அவங்களா? அவங்க எங்க இங்க வந்தாங்க?" போய்க் கேட்டுருவமான்னு யோசிச்சேன். எப்பிடிக் கேக்குறது. அவங்க இல்லைன்னா என்ன நெனப்பாங்க. சரின்னு பேங்கு வேலய முடிச்சிட்டு அவங்ககிட்ட போனேன். நீங்க அவங்கதான்னு கேட்டேன். அவங்க மொகத்துல மலர்ச்சி. ஆமாம்னு சொன்னதும் எனக்கும் சந்தோசம்.

அட அவங்க யாருன்னு சொல்லலையே! அவங்க ஒரு பின்னனிப் பாடகி. ஆதி மனிதன் காதலுக்கு அடுத்த காதலுக்குப் பாடிய பாடகி.

கண்டுபிடிச்சிருப்பீங்களே! பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகி ஜமுனாராணிதான் அவங்க. ரொம்ப வயசாத் தெரிஞ்சாங்க. நானும் அவங்களக் கண்டு பிடிச்சதுல அவுங்களுக்கு ரொம்பச் சந்தோசம். எப்பிடிக் கண்டுபிடிச்சேன்னு ஆச்சிரியமாக் கேட்டாங்க. டிவில பாத்துருக்கேன்னு சொன்னேன். அவுங்க மருமகளோட வந்திருந்தாங்க. இப்ப இங்க வந்துட்டாங்களாம். கச்சேரின்னு கூப்புட்டா சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் போறாங்களாம். அவங்க பதிமூனு பதினாலு வயசுல பாடவந்தாங்களாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாப்பது அஞ்சுல. அவங்க பாட வந்தே அறுவது வருசம் ஆயிப்போச்சு. அவுங்க தாய்மொழி தெலுங்காம். இருந்தும் உச்சரிப்பு நல்லாயிருந்துச்சேன்னு கேட்டேன். சென்னையில பொறந்து வளந்ததால தமிழு நல்ல பழக்கமாம். பேச்சுவாக்குல சுசீலா, ஜானகி, லீலா மாதிரிப் பாடகிகள நெனவு வச்சிருந்து சொன்னாங்க. அப்புறம் அவங்க பாட்டுகள் செலதச் சொல்லி நல்லா பாடியிருந்தாங்கன்னு சொன்னேன். அவங்க அத ரொம்பச் சந்தோசமா கேட்டுக்கிட்டாங்க. இன்னைக்குப் பாட்டுகளப் பத்திப் பேசுனோம். உச்சரிப்பு பத்தி கொஞ்சம் வருத்தமாச் சொன்னாங்க.

இந்த வாட்டியும் கையில ஆட்டோகிரா·பு வாங்க எந்தப் புத்தகமும் இல்ல. டெலிபோன் பில்லு கட்டுன ரசீது இருந்திச்சி. அதுல பின்னாடி வாழ்த்திக் கையெழுத்துப் போட்டுக் குடுத்தாங்க. இங்லீசுல போட்டுக் குடுத்தாங்க. அப்புறம் அவங்களுக்கு நன்றி சொல்லீட்டு பொறப்பட்டுட்டேன். அம்புட்டுதேங்.

அன்புடன்,
கோ.இராகவன்

2 comments:

said...

இராகவன், ஜமூனா., 'ஏடு கொண்டானடி தில்லையிலே' ந்னு பாடியிருக்காங்களே., குணாவில கூட நடிச்சுருக்காங்க அவங்க பேர் மறந்து போச் அவங்களும் தெலுங்குதான். ஆனா என்ன அருமையான தமிழ் உச்சரிப்பு. இவங்க இரண்டு பேர் பாட்டைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

said...

அவங்க வரலட்சுமி. நல்ல கணீர் குரல். அவங்களும் தெலுங்குதான். ஆனால் தமிழ் உச்சரிப்பு எந்தக் குறையும் சொல்ல முடியாது. அவ்வளவு சிறப்பு.