Tuesday, January 24, 2006

நட்சத்திரக் குமரனுக்கு ஒரு வாழ்த்து

நமது குமரன் கொடுத்த பொறுப்பு மிகப் பெரிய பொறுப்புதான். பின்னே ஒரு செய்யுளை எழுதி அதில் அவரது கதையைச் சொல்லி அதற்கு என்னையும் விளக்கம் சொல்லச் சொன்னால் அது மிகப் பெரிய பொறுப்புதானே. அதையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு என்னால் முடிந்ததை மயிலாரோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். மயிலார் யாரென்று எல்லாருக்கும் தெரியும்தானே! சரி. முதலில் கவிதையைப் பார்ப்போம்.

நான்மாடக் கூடலாம்
மதுரையம்பதியினில்
நாயகனின் திருவருளினால்
நானன்றுத் தோன்றினேன்
நலமுடைக் குமரனெனும்
நல்லபெயர் தனை அருளினான்!

அகவையோ மூவாறுப்
பதினைந்து அழகுடைய
அகமுடையாள் மனைமாட்சியாம்!
மகிழ்ச்சியுறத் தேசு பெறும்
மகளுடையேன் மனைமுழுதும்
மன்னன் மகள் அவளாட்சியாம்!

வாழ்வதுவோ அமேரிக்க
மினசோட்டா மாகாணம்
வாழ்க தமிழ்! வாழ்க தமிழே!
வாழ்வுபெற நானும் வந்தேன்

மயிலார் : இதென்ன கவிதையா செய்யுளா?

நான் : இது செய்யுள் மாதிரி இருக்குற கவிதை. தமிழ் இலக்கியத்தில் புது வடிவம் என்று சொல்லலாம். மரபுக் கவிதை மாதிரி இருக்கும். ஆனா மரபுக் கவிதை கெடையாது. கவிதை மாதிரி இருக்காது. ஆனா கவிதை.

மயிலார் : அப்ப நீ சொல்லப் போற விளக்கத்துல விஷயம் இருக்குற மாதிரி இருக்கும். ஆனா இருக்காது. ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கும். ஆனா ஏதாவது புரியும்.

நான் : (வழிந்த படி). சரி. சரி. குமரன் கோவிச்சுக்கப் போறாரு. நம்ம செய்யுளுக்கு வருவோம்.

மயிலார் : கவிதைக்கு வருவோம்னு சொல்லு.

நான் : (இன்னும் வழிந்தபடி) ஆமாமா. கவிதைக்கு வருவோம். இந்தக் கவிதைல மூனு பத்திகள் இருக்கு. ஒவ்வொரு பத்தியும் குமரனோட வாழ்க்கைல ஒவ்வொரு பகுதியச் சொல்லுது.

முதல் பத்தி குமரன் பிறந்ததையும் அவருக்குப் பேரு வெச்சதையும் சொல்லுது. இரண்டாவது பத்தி அவரோட திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு எல்லாம் சொல்லுது. மூன்றாம் பத்தி அவர் இப்போ இருக்குற இடத்தைப் பத்தியும் தமிழ் வாழ்த்தும் சொல்லுது.

மயிலார் : ஒவ்வொரு பத்தியும் அவரோட பொறப்பப் பத்தியும் வாழ்க்கையைப் பத்தியும் இருப்பைப் பத்தியும் சொல்லுதா! அப்ப நாலு பத்தி.

நான் : (அவசர அவசரமாக) இல்ல மூனு பத்தி.

மயிலார் : ஏற்கனவே மூனு பத்தி. அந்த மூனும் அவரப் பத்தி சொல்றதால நாலு பத்தீன்னு சொன்னேன். அவசரக்குடுக்கையா இருக்கையே! சரி ஒவ்வொரு பத்தியப் பத்தியும் சொல்லு. கேட்டுக்கிறேன்.

நான் : சரி. சரி. "நான்மாடக் கூடலாம் மதுரையம் பதியில்." அதாவது நான்கு மாடங்களை உடைய கூடங்களை உடைய மதுரையம்பதியில்....

மயிலார் : இரு இரு....ஏன் இப்படி மாடத்தையும் கூடத்தையும் உடைக்கிற?

(எனக்கு ஆத்திரத்தில் கண்ண இருட்டிக்கிட்டு வருது. அத அடக்கீட்டு தொடர்ரேன்.)

நான் : சரி. நான்கு மாடங்களைக் கொண்டு எழுப்பப்பட்ட கூடங்கள் நிறைந்த ஊர் பாண்டி நாட்டு மதுரையம்பதி. அந்த மதுரையம்பதியில் "நாயகனின் திருவளினால் நானன்று தோன்றினேன்" என்கிறார் குமரன். இங்க நாயகன்னா முருகப் பெருமான்.

(முருகன் பெயரைச் சொன்னதுமே மயிலார் உணர்ச்சி வசப்பட்டு படக்கென்று தோகையை விரிக்கிறார். அந்தத் தோகை இடித்து மேசையிலிருந்த எவர்சில்வர் டம்ளர் தரையில் உருளுகிறது.)

நான் : நாயகன்னா இங்க முருகப் பெருமான். முருகப் பெருமானுக்குரிய பங்குனி மாதத்து உத்திரத் திருநாளில் பிறந்தவர். அதுனால அவருக்கு முருகன் பெயரான குமரனையே வெச்சிட்டாங்க. இதைத்தான் சுருக்கமா "நாயகனின் திருவருளினால் நானன்று தோன்றினேன். நலமுடைக் குமரனெனும் நல்ல பெயர்தனை அருளினான்" அப்படீன்னு குமரன் சொல்லீருக்காரு.

இதுல சிறப்பம்சன் என்னன்னா....நல்ல பெயர்தனை வைத்தனர்னு சொல்லலை. அப்படிச் சொல்லீருந்த அது பெத்தவங்களும் பெரியவங்களும் வெச்சதா இருந்திருக்கும். அருளினான்னு சொல்றதால, அது முருகப் பெருமானே பெத்தவங்க வழியா வைத்து அருளினான்னு பொருள் கொள்ளனும்.

(மயிலார் ரொம்பவே பக்தியா கேட்டுக்கிட்டு இருக்காரு.)

நான் : இப்ப ரெண்டாவது பத்திக்குப் போவோம்.

மயிலார் : அது எங்க பக்கத்தூர்லயா இருக்கு?

நான் : (திடுக்கிட்டு) என்ன...பக்கத்தூரா?

மயிலார் : ஆமா. நீதான் பத்திக்குப் போவோம்னு சொன்னியே.

நான் : (எரிச்சலுடன்...ஆனால் காட்டாமல்.) அதாவது பார்ப்போமுன்னு பொருள். இப்ப குமரனுக்கு என்ன வயசுன்னு மொதல்ல சொல்றாரு. முப்பத்து மூனு வயசாகுதாம். அதை நேரடியா சொல்லாம ஒரு கணக்கு வழியா சொல்றாரு. "அகவையோ மூவாறு பதினைந்து". (மயிலாரைப் பார்த்து) மூன்று ஆறும் பதினைந்தும் சேந்தா என்ன வரும்?

மயிலார் : (நக்கலுடன்) மூனு ஆறும் பதினைந்தும் சேந்தா வெள்ள நிவாரண நிதி வரும்.

நான் : (சற்றுக் கடுகடுப்புடன்). மயிலார். இது குமரனோட வாழ்க்கைச் செய்யுள்...இல்ல...கவிதை. இத இப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது. அவரு நொந்து போயிருவாரு. அதுனால கொஞ்சம் முனைப்பா கவிதையப் பாக்கலாம்.

(கொண்டை அழகாக அசையுமாறு மயிலார் தலையை ஆட்டுகிறார்.)

நான் : மூவாறு என்றால் பதினெட்டு. பதினெட்டும் பதினைந்தும் சேர்ந்தால் முப்பத்து மூன்று அதுதான் அவர் வயது. அடுத்து வீட்டுல அவரோட துணைவியார்தான் எல்லாம் பாத்துக்கிறார்னு சொல்றாரு. (மெல்லிசா மதுரைன்னு மயிலார் கமெண்ட் அடிக்கிறார்). அழகுடைய அகமுடையாள் மனைமாட்சியாம். இங்க புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் தரலை. அகத்தின் அழகுதான் பெருசூன்னு சொல்றாரு. அழகும் அறிவும் உடைய திருமதி குமரன்தான் வீட்டை ஒழுங்காக பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறாராம். அடுத்து மகளப் பத்திச் சொல்றாரு.

மயிலார் : (குறுக்கிட்டு) குழந்த தேஜஸ்வினியப் பத்தியா....அடடா! அவளோட பெயர்க்காரணம் தெரியுமா ஒனக்கு. அடடா! முருகா!

நான் : (சற்றுக் கடுப்புடன்) நான் இண்டெர்நெட் படிக்கும் போது எட்டிப் பாக்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லீருக்கேன்.

மயிலார் : (முணுமுணுப்புடன்) பெரிய இண்டெநெட். எட்டிப் பாத்துட்டாலும். எனக்குத் தெரியாத சமாச்சாரமா! சரஞ்சரமா எடுத்து விடுவேன்.

நான் : "மகிழ்ச்சியுறத் தேசு பெறும் மகளுடையேன்." தேசுன்னா ஒளி பொருந்திய அழகு. அதான் தேஜஸ்வினி. அதுதான் தனது மகளின் பெயர்னு சொல்றாரு. "மனைமுழுதும் மன்னன் மகள் அவளாட்சியாம்." வீடு முழுக்க குழந்தை தேஜஸ்வினியோட ஆட்சிதானாம். மண்வீடு மட்டுமல்ல மனவீடுமுன்னு சொல்றாரு குமரன். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே அல்லவா.

மயிலார் : ஆமாமா. கொண்டாடும் இடத்துலதான். குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம். சரி. அடுத்த பத்தியப் படிச்சுச் சொல்லு.

நான் : இப்ப அவர் எங்க இருக்காருன்னு இங்க சொல்றாரு. அமெரிக்க நாட்டிலே மீனாசோட்டா மாகாணத்திலே....

மயிலார் : நிறுத்து நிறுத்து. அது மீனாசோட்டா இல்ல. மினசோட்டா. இதுக்கு மேல நீ விளக்கம் சொல்ல வேண்டாம். நானே சொல்றேன். அமெரிக்க நாட்டின் ஐம்பது மாகாணங்களில் ஒன்றான மினசோட்டா மாகாணத்திலே கணிப்பொறியில் மெலாளராகப் பணிபுரிந்து அங்கேயே குடும்பத்துடன் குமரன் இன்பமாக வசித்து வருகிறார். "வாழ்க தமிழ்! வாழ்க தமிழே! வாழ்வு பெற நானும் வந்தேனே" என்று முடித்திருக்கிறார். தமிழ் மீது அவர் கொண்ட அன்பு தெரிகிறது. அந்தத் தமிழும் நீடு வாழ்ந்து அந்தத் தமிழால் தானும் நீடு வாழ விரும்புவதை தெளிவுபடுத்தியிருக்கிறார். தமிழ்க்கடவுளின் சார்பாக குமரனையும் அவர்தம் குடும்பத்தாரையும் நீடு நிலைத்து இன்புற்று வாழ நான் வாழ்த்துகிறேன்.

நான் : நானும் வாழ்த்துகிறேன். (கூட்டத்தோட கோவிந்தா.)

அன்புடன்,
கோ.இராகவன்

25 comments:

said...

நல்லாத்தான் இருக்கு விளக்கம்..

//மூனு ஆறும் பதினைந்தும் சேந்தா வெள்ள நிவாரண நிதி வரும்.
//
வாய்விட்டு சிரிச்சிட்டேன்.

அதுசரி, அதென்ன 'சண்டைய அங்க வந்து தொடருங்கன்னு' ஒரு வரி. இங்கயும் மூன்னூறு கண்ட வெற்றிப் பதிவர் ஆக ஆசை வந்திடுச்சா? அநியாயமா, புகழ்ற மாதிரி புகழ்ந்துட்டு குமரனின் பதிவில் இருந்து பின்னூட்ட ஹைஜாக் செய்ய பாக்கறீங்களே! :))

அப்புறம் மினசோட்டாவ மீனாசோட்டானு 'மறந்து' போயி கூப்பிட ஸ்பெஷல் காரணமேதேனும் இருக்குமோன்னு மயிலாரத்தான் கேக்கணும். :)

said...

//மூனு ஆறும் பதினைந்தும் சேந்தா வெள்ள நிவாரண நிதி வரும்.
//

:)

ரசித்தேன்... உங்கள் பதிப்பை படிக்கத்துவங்கினால் முடிக்கும்வரை மூட முடிவதில்லை. அருமையான, எளிய நடை.

said...

ஹோமர் குமாரனுக்கு ஒரு வாழ்த்து !!

இதுக்கும் பொருள் உரை ??

said...

ராகவன்
மூவாறும் பதினைந்தும் சேர்ந்தால்
3*6+15=33 என எனக்கு விளக்கும் கொடுத்துள்ளார்.

said...

இராகவன், மயிலாரோடு சேர்ந்து அற்புதமா விளக்கம் கொடுத்துட்டீங்க ரொம்ப நன்றி. ஆரம்பமே அமர்க்களம். செய்யுள் மாதிரிக் கவிதை; விஷயம் இருக்கும், இருக்காது; புரியும் புரியாது என்று தொடக்கம் ரொம்ப நல்லா இருக்கு. இன்னொரு தடவை தமிழ்மண விண்மீனாய் ஆக்கப் படுவதற்கு சிபாரிசு செய்கிறேன். :-)

அடுத்து நாலு பத்திகளைப் பத்தி பேசறப்ப எனக்குப் பத்திக்கிட்டு வந்துச்சு. எங்கடா தப்பித்தவறி இந்தப் பதிவைப் படிக்க வர்றவங்களை பத்திவிட்டுருவாங்களோன்னு :-)

அடுத்து மாடங்களையும் கூடங்களையும் உடைக்கிறது சூப்பர். :-)

நாயகன்னா முருகன்னு நான் நினைக்கலை. ஆனாலும் முருகன்னு சொன்னாத் தப்பில்லை. ஒருவனே தேவன்.

முருகன்னு சொன்னதும் மயிலார் தோகையை விரிக்கிறதும் அது பட்டு மேசை டம்ளர் விழுறதும் அடுத்தச் சூப்பர். :-)

உண்மை. பங்குனி உத்திரத்துலப் பிறந்ததாலத் தான் குமரன்னு பேரை வச்சாங்க எனக்கு.

அருளினானுக்கு நான் நினைத்த சரியான பொருள்.

அடுத்து ரெண்டாவது பத்திக்கு பக்கத்தூர் போவது தான் சிரிப்பை அடக்க முடியாமல் செய்துவிட்டது :-)))))))))

எல்லாருக்கும் பிடித்த மூனு ஆறும் பதினைந்தும் சேர்ந்தா வெள்ள நிவாரணம் வரும் எனக்கும் பிடித்தது :-)

கொண்டை அழகாக அசையுமாறு மயிலார் தலையை ஆட்டுறது தான் இதுல எல்லாம் டாப். சூப்பரோ சூப்பர் :-)

அடுத்து வரும் விளக்கங்கள் எல்லாம் மிகப் பொருத்தம்.

இராகவன், எனக்கு இந்தப் பாட்டை (கவிதையை, செய்யுளை) எழுத பத்து நிமிடமானது. உங்களுக்கு விளக்கம் சொல்ல எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும். இல்லையா? மிக்க நன்றி சொன்னவண்ணம் செய்த பெருமாள்!

said...

இராமநாதன், நீங்களும் செல்வனும் குடுக்குற தொல்லை தாங்காம நான் தான் இராகவன் கிட்ட அப்படி ஒரு பின்னூட்டம் போடச் சொன்னேன். அவரைக் கோவிச்சுக்காதீங்க. :-)

இராகவன், நீங்க ஒன்னும் கண்டுக்காதீங்க. எல்லாம் வயசுக் கோளாறு. அது தான் நீங்க தப்பா மீனாசோட்டா சொன்னாலும் இராமநாதனுக்கு வேற என்னென்னமோ தோணுது. இன்னும் அந்த 'நேத்து ராத்திரி அம்மா' எபெக்ட் போகலைன்னு நெனைக்கிறேன். :-)

said...

//ரசித்தேன்... உங்கள் பதிப்பை படிக்கத்துவங்கினால் முடிக்கும்வரை மூட முடிவதில்லை. அருமையான, எளிய நடை.
//

இது வழிமொழிதல் பின்னூட்டம்.

நானும் இந்தக் கருத்தை வழிமொழிகிறேன்.

said...

இராகவன்,

சின்னவருக்கு இடம் குடுக்காதீங்கன்னு எச்சரிக்கை செய்கிறேன் :-) இடத்தை குடுத்தா மடத்தைப் பிடுங்கற ஆளு. :-)

said...

//
சின்னவருக்கு இடம் குடுக்காதீங்கன்னு எச்சரிக்கை செய்கிறேன் :-)
//

குமரரே
நான் என்னய்யா செய்தேன் ?
:-(

said...

மயிலார் யாருன்னு சொல்லுங்க ராகவன். எனக்கு தெரியாது

said...

அருமையான செய்யுள் (கவிதை) அதற்கு விளக்கம் அருமை ஆனால் மயிலாரின் கமெண்ட்தான் மிக மிக அருமை (யார் அந்த மயிலு?)

said...

// வாய்விட்டு சிரிச்சிட்டேன். //

நன்றி இராமநாதன். சிரிச்சு முடிச்சதும் விட்ட வாயப் புடிச்சிட்டீங்கதானே. :-))

// அதுசரி, அதென்ன 'சண்டைய அங்க வந்து தொடருங்கன்னு' ஒரு வரி. இங்கயும் மூன்னூறு கண்ட வெற்றிப் பதிவர் ஆக ஆசை வந்திடுச்சா? அநியாயமா, புகழ்ற மாதிரி புகழ்ந்துட்டு குமரனின் பதிவில் இருந்து பின்னூட்ட ஹைஜாக் செய்ய பாக்கறீங்களே! :)) //

ஆண்டவனே! அந்தப் பக்கம் வந்து எட்டிப் பாருங்கன்னு கூப்பிட்டது குமரனோட பதிவுக்காக. ம்ம்ம்ம்...நீங்க இங்க சண்ட போடக்கூடாதுன்னு சொன்னா...கேக்கவா போறீங்க....அது மாதிரி போடுங்கன்னு சொன்னாலும் கேக்கவா போறீங்க.....சரி. சரி ஓடாதீங்க...எங்க போறீங்க?

// அப்புறம் மினசோட்டாவ மீனாசோட்டானு 'மறந்து' போயி கூப்பிட ஸ்பெஷல் காரணமேதேனும் இருக்குமோன்னு மயிலாரத்தான் கேக்கணும். :) //

மயிலார் : ராகவன் திங்குற மீன நெனச்சிருப்பான். வீட்டுல மீன் எடுத்து ஒரு வாரம் ஆச்சு. எனக்குத் தர்ரது என்னவோ ரெண்டொரு துண்டுதான். இதுனாலயே நான் அப்பப்ப ஃபிரிஜ்ஜ தொறக்க வேண்டியிருக்கு.

said...

// ரசித்தேன்... உங்கள் பதிப்பை படிக்கத்துவங்கினால் முடிக்கும்வரை மூட முடிவதில்லை. அருமையான, எளிய நடை. //

நன்றி அலெக்ஸ். அடிக்கடி நம்ம வீட்டுப் பக்கம் வாங்க.

said...

// ஹோமர் குமாரனுக்கு ஒரு வாழ்த்து !!

இதுக்கும் பொருள் உரை ?? //

சின்னவரே..கொஞ்சம் டைம் குடுங்க. இன்னைக்கு ஊருக்குக் கிளம்புறேன். தருமிகு சென்னைக்குதான். வந்து போடுறேன்.

said...

// ராகவன்
மூவாறும் பதினைந்தும் சேர்ந்தால்
3*6+15=33 என எனக்கு விளக்கும் கொடுத்துள்ளார். //

ரொம்பச் சரியாச் சொன்னீங்க என்னார். மயிலார் பண்ற தொல்லை தாங்க முடியலை.

இப்பக்கூட என்னார் என்ன சொன்னார்-னு கிண்டல் அடிக்கிறாரு.

நான் என்னார் வம்பு பண்ணார்-னு சொன்னேன்.

அதுக்கு மயிலாரும் விடாம என்னார் எதுவும் தவறாக எண்ணார்-னு சொல்லீட்டு லேசா ஆட்டம் போடுறாரு. என்ன பண்ணச் சொல்றீங்க?

said...

// இராகவன், மயிலாரோடு சேர்ந்து அற்புதமா விளக்கம் கொடுத்துட்டீங்க ரொம்ப நன்றி. ஆரம்பமே அமர்க்களம். செய்யுள் மாதிரிக் கவிதை; விஷயம் இருக்கும், இருக்காது; புரியும் புரியாது என்று தொடக்கம் ரொம்ப நல்லா இருக்கு. இன்னொரு தடவை தமிழ்மண விண்மீனாய் ஆக்கப் படுவதற்கு சிபாரிசு செய்கிறேன். :-) //

இன்னொரு விண்மீனா.....அதுக்குள்ளயா! வேண்டாம். நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு ஒருமுறையேனும் போக வேண்டியிருக்கிறது.

// அடுத்து நாலு பத்திகளைப் பத்தி பேசறப்ப எனக்குப் பத்திக்கிட்டு வந்துச்சு. எங்கடா தப்பித்தவறி இந்தப் பதிவைப் படிக்க வர்றவங்களை பத்திவிட்டுருவாங்களோன்னு :-) //

பயப்படாதீங்க. நடுவுல கொஞ்சம் முன்னப்பின்னதான் இருக்கும். நடுத்தோசை உப்பித்தான இருக்கும்.

// அடுத்து மாடங்களையும் கூடங்களையும் உடைக்கிறது சூப்பர். :-) //

ஆமாம் அதுவும் உடனடியா வந்ததுதான். எழுதனுமுன்னு எழுதலை.

// நாயகன்னா முருகன்னு நான் நினைக்கலை. ஆனாலும் முருகன்னு சொன்னாத் தப்பில்லை. ஒருவனே தேவன். //

அதே அதே

// முருகன்னு சொன்னதும் மயிலார் தோகையை விரிக்கிறதும் அது பட்டு மேசை டம்ளர் விழுறதும் அடுத்தச் சூப்பர். :-) //

அதே ஏன் கேக்குறீங்க. தரையெல்லாம் தண்ணி கொட்டி.....டைல்ஸ் தரையெல்லாம் வழுக்குச்சு...துணியப் போட்டு வெச்சுருக்கேன். சாந்தரம் போயி தொடைக்கனும்.

// உண்மை. பங்குனி உத்திரத்துலப் பிறந்ததாலத் தான் குமரன்னு பேரை வச்சாங்க எனக்கு. //

அதான் பாருங்க...அந்த சமயத்துல மயிலார் வம்பு செய்யாம இருந்தாரு.

// அருளினானுக்கு நான் நினைத்த சரியான பொருள். //

அப்பாடி வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி

// அடுத்து ரெண்டாவது பத்திக்கு பக்கத்தூர் போவது தான் சிரிப்பை அடக்க முடியாமல் செய்துவிட்டது :-))))))))) //

ஒங்களுக்குச் சிரிப்பு வருது. அவரு குண்டக்க மண்டக்க பேசுறது எனக்குத்தான தெரியும். அப்பா....இப்பிடித்தான் ஒரு வாட்டி...பைக்க தள்ளிக்கிட்டு...வேண்டாம்...அதே வேறொரு பொழுது சொல்றேன்.

// எல்லாருக்கும் பிடித்த மூனு ஆறும் பதினைந்தும் சேர்ந்தா வெள்ள நிவாரணம் வரும் எனக்கும் பிடித்தது :-) //

எனக்கும் கூட. அதுனாலதான் லேசா கடுப்பான மாதிரி காட்டுனாலும் நானும் உள்ளுக்குள் ரசிச்சேன். இத மயிலார் கிட்ட சொல்லீராதீங்க. ஆனாலும் அவருக்கு எல்லாந் தெரியுது.

// கொண்டை அழகாக அசையுமாறு மயிலார் தலையை ஆட்டுறது தான் இதுல எல்லாம் டாப். சூப்பரோ சூப்பர் :-) //

அதெல்லாம் நல்லாச் செய்வாரு. அதுல ஒரு கொறையும் இல்லை. ஒரு மயில் றெக்கை கேட்டா குடுக்க மாட்டாரு. கேக்குறப்ப மொகத்த வெடுக்குன்னு திருப்பிக்கிட்டு எட்டு வெச்சி நடந்து போவாரு...

// அடுத்து வரும் விளக்கங்கள் எல்லாம் மிகப் பொருத்தம். //

அத நான் எங்க சொன்னேன். மயிலார்தான முடிச்சு வச்சாரு. இதெல்லாம் பிரமாதமா செய்வாரு.

// இராகவன், எனக்கு இந்தப் பாட்டை (கவிதையை, செய்யுளை) எழுத பத்து நிமிடமானது. உங்களுக்கு விளக்கம் சொல்ல எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும். இல்லையா? மிக்க நன்றி சொன்னவண்ணம் செய்த பெருமாள்! //

ஆமாம் சரியாக ஒரு மணி நேரம் ஆயிற்று. :-) நன்றியனைத்தும் முருகனுக்கு. அன்பும் ஆதரவும் மட்டும் எனக்கு.

said...

// மயிலார் யாருன்னு சொல்லுங்க ராகவன். எனக்கு தெரியாது //

கைப்புள்ள கீழ இருக்குற லிங்குக்குப் போங்க. மயிலாரோட வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறும்.
http://gragavan.blogspot.com/2006/01/blog-post.html

said...

// சின்னவருக்கு இடம் குடுக்காதீங்கன்னு எச்சரிக்கை செய்கிறேன் :-) இடத்தை குடுத்தா மடத்தைப் பிடுங்கற ஆளு. :-) //

புரியிற மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் குமரன். நானும் தெரிஞ்சிக்கிறேன்.

said...

// குமரரே
நான் என்னய்யா செய்தேன் ?
:-( //

சின்னவரே....டென்ஷன் ஆகாதீங்க. less tenstion more work. more tension less work. குமரனப் பத்தித் தெரியும். விளக்கம் எழுதியாச்சு. ஒங்க கதைய கொஞ்சம் எடுத்து விடுங்களேன். தெரிஞ்சுக்கிறேன்.

said...

// அருமையான செய்யுள் (கவிதை) அதற்கு விளக்கம் அருமை ஆனால் மயிலாரின் கமெண்ட்தான் மிக மிக அருமை (யார் அந்த மயிலு?) //

வாங்க அனுசுயா. ஒங்களுக்கும் தெரியாதா...நீங்களும் இந்த லிங்குல போய்ப் பாருங்க.

http://gragavan.blogspot.com/2006/01/blog-post.html

said...

பாடலும் அழகு, உங்கள் பொழிப்புரையும் அழகு, மயிலாரின் காமென்ட்ஸும் அழகு.
comments என்ன தமிழ்ச்சொல் சரி ?
எதிர்கருத்து ? குறுங்கருத்து ?உடன்மொழி ?

said...

// பாடலும் அழகு, உங்கள் பொழிப்புரையும் அழகு, மயிலாரின் காமென்ட்ஸும் அழகு.
comments என்ன தமிழ்ச்சொல் சரி ?
எதிர்கருத்து ? குறுங்கருத்து ?உடன்மொழி ? //

நன்றி மணியன். கமெண்ட்சுக்குத் தமிழ்ச்சொல் என்று சொல்ல முடியாது. கருத்து என்ற பொதுச்சொல்லைப் பயன்படுத்தலாம். ஆனால் கருத்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளில் வருவதால் தமிழில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சொல் உண்டு. இந்த இடத்தில் மயிலாரின் கிண்டல் என்று சொல்லலாம்.

said...

ராகவன் உங்கல் எல்லோருடைய பின்னுட்டங்களையும் கிரமத்தான் சென்னை எல்.ஐ.சி பார்த்ததுபோல் பார்க்கிறேன். தி. ரா ச

said...

படித்துப் பாராட்டிய TRC மற்றும் ஆர்த்திக்கு நன்றி பல.

// மக்கா யாருக்காவது சல்லிசா சோப்பு வேனுமின்னா இங்க வாங்கப்பு நெறய சோப்பு ஸ்டாக்கிஸ்ட் இங்கன இருக்காக...:-) //

சதயம்...ஒங்களுக்கு எத்தன லோடு வேணும்? கூச்சப்படாம கேட்டு வாங்கிக்கிருங்க.

// அப்பா சாமிகளா...ஆள விடுங்க தல சுத்துது...//

இதுக்குன்னே தனிச் சோப்பு இருக்கு....சொன்னீங்கன்னா லோடு கொண்டாந்து எறக்கீர்ரோம். குடோனு எங்க இருக்கு?

said...

ராகவன்,
அருமையா எழுதியிருக்கீங்க.
அப்புறம், COXATME புதிருக்கு விடை போட்டாச்சு. வந்து பாருங்க.