Friday, June 23, 2006

சிறிய விபத்து

நண்பர்களே. இன்று மாலை அலுவலத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் சிறிய விபத்து. குண்டும் குழியுமான சாலையில் பைக் சறுக்கித் தடுமாறி விழுந்து விட்டேன். பெரிய அடி அதுவுமில்லை. அணிந்திருந்த ஹெல்மெட் தன்னுடைய கடமையை மிகச்சரியாகச் செய்தது என்றால் மிகையில்லை. வலது தோள்ப்பட்டையில் வலி இருக்கிறது. எலும்பு முறிவு இல்லை.ஆனாலும் ஏதோ தசை முறிவு இருக்கலாம் என்று கருதி தொட்டில் கட்டியிருக்கிறார்கள். ரெண்டு மூனு வாரம் அப்படித்தான் இருக்க வேண்டுமாம். உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பகிர்ந்து கொண்டேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

71 comments:

said...

ஜிரா,

பார்த்துப் போகவேண்டாமா? முடிந்தவரை இரு சக்கர வாகனத்தில் செல்லாதீர்கள். கூடிய சீக்கிரம் ஒரு கார் வாங்கி விடுங்கள்.

நல்ல படியாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். உம்மை முருகன் சீக்கிரம் சரி செய்து விடுவார்.

said...

விரைவில் குணமாக முருகனை வேண்டுகிறேன்!

said...

தொட்டில் கட்டும் அளவுக்கு ஆய்டுச்சா? சென்னையை விட்டுப் போக வேண்டாம் என்று உங்கள் கையைப் பிடித்து இழுக்கிறது..

பார்த்து ஓட்டுங்க..

said...

விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள்.

இது ஒரு நகைமுரண்ல.. அதாவது ஆபீஸ்போகாம வீட்லேர்ந்து எழுதலாம் ஆனா அடி கையில பட்டிருக்கே.. :)

take care Ragavan.

said...

என்னப்பு, மெதுவாக செல்ல கூடாதா?
குண்டும் குழியுமாக இருந்தால் Half clutch பிடித்து மெதுவாக செல்லவும்.
கொத்துஸ் சொன்ன மாதிரி சீக்கிரம் கார் வாங்கு அப்பு.
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

said...

ப்ளாகர் சதி செய்கிறது..
முந்தைய பின்னூட்டம் கிடைத்ததா?

இல்லையென்றால் மீண்டுமொருமுறை.
"விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள்"

அவர் இருக்க கவலை ஏன்?

said...

// இலவசக்கொத்தனார் said...
ஜிரா,

பார்த்துப் போகவேண்டாமா? முடிந்தவரை இரு சக்கர வாகனத்தில் செல்லாதீர்கள். கூடிய சீக்கிரம் ஒரு கார் வாங்கி விடுங்கள். //

பாத்துத்தான் போனேன். இருட்டு வேளை. லைட்டும் ஒழுங்கா இல்லை. பழைய மகாபலிபுரம் ரோடு மகா மட்டம். நானும் கொஞ்சம் வேகம்தான்.

// நல்ல படியாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். உம்மை முருகன் சீக்கிரம் சரி செய்து விடுவார். //

செஞ்சிட்டானே. ஹெல்மெட் மட்டும் இல்லைன்னா...அப்பப்பா...நினைக்கவே திக்குன்னு இருக்கு. அதுவுமில்லாம நான் விழுந்ததும் தலையில இருந்து நாலஞ்சு இஞ்ச்சு தள்ளி பஸ் போச்சாம். கூட்டத்துல சொன்னாங்க.

said...

ஜிரா, விரைவிஅ குணமாக அப்பன் முருகனை வேண்டுகிறேன்

said...

// SK said...
விரைவில் குணமாக முருகனை வேண்டுகிறேன்! //

நன்றி SK. முருகன் திருவருளன்றி வேறேது.

said...

விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..பார்த்து கவனமாக செல்லுங்கள்..

said...

பார்த்து இராகவன்.... இதுக்கு மேல நினைக்கிறதை எப்படி சொல்றதுன்னு தெரியலை.... உடம்பைப் பாத்துக்கோங்க... :-((

said...

யோவ் ராகவன்,

உமக்குச் சரி! பின்னால் உட்கார்ந்திருந்த ஃபிகருக்கு என்ன ஆச்சு!?

(இப்படி ஏதாவது உம்ம வீட்டுல பத்தவைச்சா உமக்கும் ரெண்டுவாரம் பொழுதுபோகும் இல்லையா?! ஹிஹி... )

said...

// பொன்ஸ் said...
தொட்டில் கட்டும் அளவுக்கு ஆய்டுச்சா? சென்னையை விட்டுப் போக வேண்டாம் என்று உங்கள் கையைப் பிடித்து இழுக்கிறது..

பார்த்து ஓட்டுங்க.. //

ஆமாம் பொன்ஸ். அந்த ரோடு எப்படீன்னு ஒங்களுக்குத் தெரியுமே. நல்லவேள மயிலார் இருந்தாரோ...நான் தப்பிச்சேன். பக்கத்துல ஒரு ஹாஸ்பிட்டல் இருந்தது. மழை வேற தூறுச்சு. உள்ள போய் கிழிஞ்ச கார்ட்ராய் பேண்டோட நின்னேன். ரெண்டு ஊசியப் போட்டு (இடுப்புலதான்) புண்ணுகளத் தொடச்சு...மருந்தெல்லாம் போட்டாங்க. அதுக்குள்ள அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க. நேரா மலருக்குப் போயி ஆர்த்தோவப் பாத்துட்டோம்.

said...

ராகவன்,

உங்கள் கை விரைவில் நலமாக இறைவனை வேண்டுகிறேன். நன்றாக ஓய்வு எடுத்து எண்ணங்களைப் புதுப்பித்துக் கொண்டு பணியில் சிறக்க வாழ்த்துக்கள். அப்படியே வலைப்பதிவிலும் எழுத நிறைய சிந்தியுங்கள்.

அப்படியே, சீக்கிரமாக கார் வாங்கி விடுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

// Cyril அலெக்ஸ் said...
விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள். //

நன்றி சிறில்

// இது ஒரு நகைமுரண்ல.. அதாவது ஆபீஸ்போகாம வீட்லேர்ந்து எழுதலாம் ஆனா அடி கையில பட்டிருக்கே.. :)//

ரெண்டு நாள் பாத்துட்டு ஆபீஸ் போலாம்னு பாக்குறேன். பஸ்சுலதான். ஆபீஸ் பஸ்சுலதான். ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி எழுதலாம். கண்ணகித்தாய் பற்றி ரொம்ப நாளா எழுதி எழுதி முன்னேற்றம் இல்லாம வெச்சிருக்கேன். அதுக்கு ஏதாவது பண்ணலாம். ஆனா தொட்டில் கட்டியிருக்கிறதால.. கொஞ்சம் கஷ்டமாயிரூக்கு. பழகிரும்னு நெனைக்கிறேன்.

// take care Ragavan. //

அது முருகனோட வேலை. ஒழுங்காப் பாப்பான்னு நம்புறேன்.

said...

// Cyril அலெக்ஸ் said...
விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள். //

நன்றி சிறில்

// இது ஒரு நகைமுரண்ல.. அதாவது ஆபீஸ்போகாம வீட்லேர்ந்து எழுதலாம் ஆனா அடி கையில பட்டிருக்கே.. :)//

ரெண்டு நாள் பாத்துட்டு ஆபீஸ் போலாம்னு பாக்குறேன். பஸ்சுலதான். ஆபீஸ் பஸ்சுலதான். ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி எழுதலாம். கண்ணகித்தாய் பற்றி ரொம்ப நாளா எழுதி எழுதி முன்னேற்றம் இல்லாம வெச்சிருக்கேன். அதுக்கு ஏதாவது பண்ணலாம். ஆனா தொட்டில் கட்டியிருக்கிறதால.. கொஞ்சம் கஷ்டமாயிரூக்கு. பழகிரும்னு நெனைக்கிறேன்.

// take care Ragavan. //

அது முருகனோட வேலை. ஒழுங்காப் பாப்பான்னு நம்புறேன்.

said...

// நாகை சிவா said...
என்னப்பு, மெதுவாக செல்ல கூடாதா?
குண்டும் குழியுமாக இருந்தால் Half clutch பிடித்து மெதுவாக செல்லவும்.
கொத்துஸ் சொன்ன மாதிரி சீக்கிரம் கார் வாங்கு அப்பு.
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். //

நன்றி சிவா. வழக்கமாப் போற வழிதான். என்னவோ...அப்படியாயிச்சு. காரா? ம்ம்ம்...அடுத்த வருசம் யோசிக்க வேண்டிய விசயம் இது.

said...

வணக்கம் ராகவன்!

ம்ம் ஓல்டு மகா"பலி"புரம் சாலை பேருக்கு ஏத்தா போல பலி வாங்க பார்க்குது,பார்த்து போங்க ராகவன்.ஒரு வருஷத்திற்கு மேல ஐ.டி காரிடார் சாலை அமைக்குரேனு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டு பள்ளம் வெட்டிக்கிட்டே இருக்காங்க என்னிக்கு தான் சரி ஆகுமே.அதும் இந்த ஜைன் காலேஜ் பக்கம் லாம் சரியாவே இருக்காது ரோட்.

said...

ராகவன்
விரைவில் குணமடைய என் பிராத்தனைகள்.
நல்லா ஓய்வெடுங்க.

அன்புடன்
வீ.கே

said...

ராகவன்

இதுக்குத்தான் வீலிங்லாம் பண்ணி ரொம்ப வித்தை காட்டக் கூடாதுங்கறது. பகல்லயே கவனமா ஓட்டணும். ராத்திரி நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனப் பயணத்தைக் கூடுமானவரை தவிர்ப்பது மிகவும் நல்லது. நாம் ஒழுங்காக ஓட்டினாலும் அரைபாடி லாரிகளும் மற்ற வாகனங்களும் தாறுமாறான வேகத்தில் கட்டுப்பாடின்றி சென்று பல விபத்துகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆகையால் கூடுதல் கவனமாக இருங்கள்.

அவ்வப்போது ஆண்டவன் இம்மாதிரி ஏதாவது நடத்தி வைத்து ஒரு எச்சரிக்கை மணியை அடித்துவிடுவான். இதுவே உங்களை இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இனிமேல் இருக்கச் செய்யும்.

விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

said...

விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.

said...

விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

said...

ராகவன்,

இப்போ வலி கொறைஞ்சுருக்கா?

பத்திரம். கவனமா இருங்க. பஸ் பத்திப் படிச்சதும் பகீர்னு ஆயிருச்சுப்பா.

நம்மூர்லே ரோடே போடாம போட்டொமுன்னு காமிச்சுக் காசு வாங்கியிருப்பாங்களெ அதுலே ஒண்ணுதான் இந்த மகா 'பலி' புரம் சாலை.

பத்திரம்ப்பா பத்திரம்.

said...

ராகவன்,

வலி இப்பக் கொறைஞ்சுருக்கா?

பத்திரம். கவனமா இருங்க. அதுவும் பஸ் பத்திப் படிச்சதும் பகீர்னு ஆயிருச்சு.

நம்ம ஊர்லே ரோடு போடாமயே, போட்டோமுன்னு சொல்லிக் காசை வாங்கியிருப்பாங்களே
அதுலே ஒண்ணுதான் இந்த மகா 'பலி' புரம் ரோடு.

கவனமா இருங்க.

said...

ராகவன், பத்திரமாக இருங்க. வலி ப்ரமாதமாக இருக்குமே.அந்த ரோடு கரடுமரடஆக இருக்கும்.இத்தோடு போச்சே.
பக்கத்திலேயெ பத்மனாபசாமி கோவிலும் மருந்தீச்வரரும் இருக்காங்க.
பார்த்துப்பாங்க.நலம் பெற வாழ்த்துகள்.

said...

அண்ணா,

இப்போ தான் தேன்கூட்டில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

நல்லவேளை முருகன் பெரிய அளவில் அடிபடாமல் காப்பாற்றினார். விரைவில் குணமடைய இறைவன் அருள்புரிவார்.

இனிமேல் பார்த்து செல்லுங்கள். மற்ற நண்பர்களும் கவனமாக இருங்கள்.

- பரஞ்சோதி

said...

take care..take rest rakhi

said...

// Calgary சிவா said...
ஜிரா, விரைவிஅ குணமாக அப்பன் முருகனை வேண்டுகிறேன் //

நன்றி சிவா. மலர் மருத்துவமனைக்குத் தோள்ப்பட்டையையே தூக்க முடியாத வலியோடு சென்றேன். அங்கே இன்னொருவரும் விழுந்து எழுந்து வந்திருந்தார். ஆனால் அவருக்குக் காலில் வெறும் சிராய்ப்புகள் மட்டும். நமக்கு இப்படி வலிக்கிறதே என்று திரும்பினால் லாரியில் அடிபட்ட ஒருவரைப் பக்கத்துப் படுக்கையில் போட்டார்கள். அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அப்பப்பா.....என் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. முருகா! அவரைக் காப்பாத்து என்று மட்டும்தான் வேண்ட முடிந்தது. நிலையாமை என்றால் என்ன என்று உண்மையிலேயே புரிந்தது.

said...

// மனதின் ஓசை said...
விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..பார்த்து கவனமாக செல்லுங்கள்.. //

நன்றி ஓசை. இனிமேல் கவனத்தோடு ஓட்டுகிறேன்.

said...

// குமரன் (Kumaran) said...
பார்த்து இராகவன்.... இதுக்கு மேல நினைக்கிறதை எப்படி சொல்றதுன்னு தெரியலை.... உடம்பைப் பாத்துக்கோங்க... :-((

11:21 AM //

வருந்தற்க குமரன். இறைவன் இருக்கிறான். நல்லதே நடக்கும்.

said...

// பாட்டுக் கச்சேரி said...
ராகவன்
விரைவில் குணமடைய என் பிராத்தனைகள்.
நல்லா ஓய்வெடுங்க.

அன்புடன்
வீ.கே //

நன்றி வீ.கே. இப்பொழுது ஓய்வில்தான் இருக்கிறேன். வீட்டில் இருப்பதால் இணையம் உதவுகிறது.

said...

// இளவஞ்சி said...
யோவ் ராகவன்,

உமக்குச் சரி! பின்னால் உட்கார்ந்திருந்த ஃபிகருக்கு என்ன ஆச்சு!?

(இப்படி ஏதாவது உம்ம வீட்டுல பத்தவைச்சா உமக்கும் ரெண்டுவாரம் பொழுதுபோகும் இல்லையா?! ஹிஹி... )

11:21 AM //

நல்லவேள இளவஞ்சி, விழுந்தப்போ நான் மட்டுந்தான் இருந்தேன். ஹி ஹி பின்னாடி ஆள் இருந்தா நான் கொஞ்சம் மெதுவாப் போறதுதான் வழக்கம்.

said...

விரைவில் குணமடைய மயில்வாகனன் அருள் புரிவாறாக.

said...

// மா சிவகுமார் said...
ராகவன்,

உங்கள் கை விரைவில் நலமாக இறைவனை வேண்டுகிறேன். நன்றாக ஓய்வு எடுத்து எண்ணங்களைப் புதுப்பித்துக் கொண்டு பணியில் சிறக்க வாழ்த்துக்கள். அப்படியே வலைப்பதிவிலும் எழுத நிறைய சிந்தியுங்கள்.

அப்படியே, சீக்கிரமாக கார் வாங்கி விடுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார் //

நன்றி சிவகுமார். காரா? வாங்கலாம்...இரண்டு மாதங்களில் பெங்களூர் திரும்பி விடுவேன். அதற்குப் பிறகுதான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

said...

// சுந்தர் said...
ராகவன்

இதுக்குத்தான் வீலிங்லாம் பண்ணி ரொம்ப வித்தை காட்டக் கூடாதுங்கறது.//

வீலிங்கா? சுந்தர்...சத்தியமாச் சொல்றேன். நான் இதுவரைக்கும் வீலிங் செஞ்சதேயில்லை. பெங்களூரில் ஒரு சின்னப் பையன் ஸ்கூட்டீல வீலிங் பண்ணிக்கிட்டு இருந்தான். பிடிச்சு திட்டி விட்டுட்டேன்.

// பகல்லயே கவனமா ஓட்டணும். ராத்திரி நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனப் பயணத்தைக் கூடுமானவரை தவிர்ப்பது மிகவும் நல்லது. நாம் ஒழுங்காக ஓட்டினாலும் அரைபாடி லாரிகளும் மற்ற வாகனங்களும் தாறுமாறான வேகத்தில் கட்டுப்பாடின்றி சென்று பல விபத்துகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆகையால் கூடுதல் கவனமாக இருங்கள். //

உண்மைதான் சுந்தர். அது நெடுஞ்சாலை அல்ல. கொடுஞ்சாலை. நானும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்.

// அவ்வப்போது ஆண்டவன் இம்மாதிரி ஏதாவது நடத்தி வைத்து ஒரு எச்சரிக்கை மணியை அடித்துவிடுவான். இதுவே உங்களை இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இனிமேல் இருக்கச் செய்யும்.//

உண்மைதான். அதுதான் அவனது கடமை. புரிந்து கொண்டால் பிழைக்கும் நமது உடமை.
விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

said...

// வவ்வால் said...
வணக்கம் ராகவன்!

ம்ம் ஓல்டு மகா"பலி"புரம் சாலை பேருக்கு ஏத்தா போல பலி வாங்க பார்க்குது,பார்த்து போங்க ராகவன்.ஒரு வருஷத்திற்கு மேல ஐ.டி காரிடார் சாலை அமைக்குரேனு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டு பள்ளம் வெட்டிக்கிட்டே இருக்காங்க என்னிக்கு தான் சரி ஆகுமே.அதும் இந்த ஜைன் காலேஜ் பக்கம் லாம் சரியாவே இருக்காது ரோட். //

உண்மைதாங்க. ரோடு போட்டுக்கிட்டேயிருக்காங்க. கர்நாடகத்தை விட தமிழகத்தை ஐ.டியில முன்னேத்தப் போறாங்களாம்...ஐயா...கொஞ்சம் ரோடுகளைப் பாருங்க. வாரத்துக்கு ரெண்டு மூனு ஆக்சிடெண்ட் பாத்துட்டுப் போய் ஆஃபீஸ்ல சொல்லுவேன். இந்த வாரம் நான்.

said...

ராகவன் ,
இவ்வளவு அக்கரையாக நலம் விசாரிக்கும்
நட்புகளைப் பெற்றது பாக்கியம்

விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.

said...

// துளசி கோபால் said...
ராகவன்,

வலி இப்பக் கொறைஞ்சுருக்கா? //

நேத்து இருந்ததுக்கு இன்னைக்குத் தேவலை. ஆனா வலி இருக்கு. வலது கையை முடிஞ்ச வரைக்கும் அசையாம வெச்சிருக்கேன்.

// பத்திரம். கவனமா இருங்க. அதுவும் பஸ் பத்திப் படிச்சதும் பகீர்னு ஆயிருச்சு.//

எனக்கும்தான் டீச்சர். விழுந்தப்புறம் என்னையச் சுத்திக் கூட்டம். யாரும் தூக்கலை. ஆளாளுக்கு என்னவோ சொல்றாங்க. கொஞ்ச நேரங் கழிச்சி யாரோ உதவி செஞ்சாங்க. அவர் பேரு மணி. விப்ரோவுல வேலை பாக்குறாராம். அந்த மனநிலைல நம்பர் கூட வாங்கலை. மணி, நீங்க பிளாக் படிச்சா....தொடர்பு கொள்ளுங்களேன்.

//நம்ம ஊர்லே ரோடு போடாமயே, போட்டோமுன்னு சொல்லிக் காசை வாங்கியிருப்பாங்களே
அதுலே ஒண்ணுதான் இந்த மகா 'பலி' புரம் ரோடு.

கவனமா இருங்க. //

சரி டீச்சர்.

said...

இராகவன் இப்பதான் இந்த பதிவை பார்த்தேன்,

வலி இப்பக் கொறைஞ்சுருக்கா?

முருகன் அருளால் விரைவில் குணமடைவீர்கள்.

said...

// செல்வராஜ் (R. Selvaraj) said...
விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.

12:39 PM //

நன்றி செல்வராஜ்.

said...

// kekkE PikkuNi said...
விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். //

நன்றி கெக்கே பிக்குணி. இந்தப் பேரை விளக்குங்களேன். வித்தியாசமா இருக்கே....

said...

// manu said...
ராகவன், பத்திரமாக இருங்க. வலி ப்ரமாதமாக இருக்குமே.அந்த ரோடு கரடுமரடஆக இருக்கும்.இத்தோடு போச்சே.
பக்கத்திலேயெ பத்மனாபசாமி கோவிலும் மருந்தீச்வரரும் இருக்காங்க.
பார்த்துப்பாங்க.நலம் பெற வாழ்த்துகள்.

8:16 PM //

நன்றி மனு. கரடு முரடா.....every where ppl ride on the left of the road and in Old Mahabalipuram Road, ppl ride on what is left on the road.

said...

// பரஞ்சோதி said...
அண்ணா,

இப்போ தான் தேன்கூட்டில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

நல்லவேளை முருகன் பெரிய அளவில் அடிபடாமல் காப்பாற்றினார். விரைவில் குணமடைய இறைவன் அருள்புரிவார்.

இனிமேல் பார்த்து செல்லுங்கள். மற்ற நண்பர்களும் கவனமாக இருங்கள்.

- பரஞ்சோதி

10:04 PM //

நிச்சயமாக பரஞ்சோதி. இது ஒரு பாடம். நல்லதே நடக்கும்.

said...

// முத்து ( தமிழினி) said...
take care..take rest rakhi //

நன்றி முத்து.ராக்கி என்ன எனக்குப் புதுப் பெயரா?

said...

// நன்மனம் said...
விரைவில் குணமடைய மயில்வாகனன் அருள் புரிவாறாக. //

நன்றி நன்மனம். நிச்சயம் அருள் புரிவான் வடிவேலன். வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்தவர்க்குத் துன்பம் ஏது?

said...

சீக்கிரம் குணமடைய விரும்புகிறேன்....

said...

// கார்திக்வேலு said...
ராகவன் ,
இவ்வளவு அக்கரையாக நலம் விசாரிக்கும்
நட்புகளைப் பெற்றது பாக்கியம்

விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள். //

நியாயமான பேச்சு கார்த்திக். நான் நினைத்து மகிழ்வதும் அதைத்தான். இன்பத்தை விடுங்கள். துன்பத்தில் ஆறுதல் தருகின்றவர்கள் இறைவனின் கொடை. அது தடையின்றி இருப்பது அவனருள்.

said...

// சிவமுருகன் said...
இராகவன் இப்பதான் இந்த பதிவை பார்த்தேன்,

வலி இப்பக் கொறைஞ்சுருக்கா?

முருகன் அருளால் விரைவில் குணமடைவீர்கள். //

நன்றி சிவமுருகன். வலி இருக்கு. ஆனா நேத்து இருந்த அதிர்ச்சி இல்லை. அதுனால வலி குறைஞ்ச மாதிரி தெரியுது.

said...

சீக்கிரம் குணமாகி திரும்பி வர எல்லாம் வல்ல இறை அருள் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்.

said...

//ஹி ஹி பின்னாடி ஆள் இருந்தா நான் கொஞ்சம் மெதுவாப் போறதுதான் வழக்கம்.//
ஹி ஹி... அப்ப சீக்கிரமா சொல்லி ஏற்பாடு பண்ணிடுவோம் ராகவன்

கவனமாக உடல்நிலைய பார்த்துக் கொள்ளுங்கள். நன்கு ஓய்வெடுங்கள். விரைவில் பூரண குணம் பெற வாழ்த்துகள்.

said...

சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். நம் இருவருக்கும். சிலவிஷயங்கலில் என்னை பின்பற்றகூடாது. சந்திப்போம். அன்பன் தி ரா ச

said...

ராகவன்!
நலம் பெற வாழத்துக்கள். இறையருள் துணை நிற்கட்டும்

said...

இராகவன்,விரைவில் நலம் பெற இறையருள் வேண்டுகிறேன். உங்கள் மொட்டைத்தலையை காப்பாற்றிய ஹெல்மெட்டிற்கும் முருகனுக்கும் நன்றி.

தொட்டில் இடது தோளிலா, வலதிலா? காயப்பட்ட தசைகளுக்கு தட்டச்சி தொந்திரவு செய்யாதீர்கள்.

said...

ராகவா,
விரைவில் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

said...

ராகவன்,

நன்றே ஓய்வெடுத்து நலமுடன் இருக்க ஆண்டவனை இறைஞ்சுகின்றேன்.

அன்புடன்
கானா.பிரபா

said...

விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்!!

said...

இராகவன்,

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!!

said...

விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்

said...

Get Well soon GRaa. Hope you rest a lot :-)

said...

Get well soon Gira.

நீங்கள் சென்ற போது மழைபெய்து இருந்ததா என்ன?

said...

இராகவன்,
உங்களின் இப் பதிவு இப்போதுதான் கண்ணில்பட்டது. பார்த்ததும் பதை பதைத்துப் போனேன். விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மிக்க நன்றி.

said...

பொறுமையா போகக்கூடாதா ?? பிரேக் பிடிக்கும்போது இரண்டு பிரேக்கையும் பிடிக்கவும்....

சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்...

said...

ராகவா நீங்கள் விரைவில் குணமடைய
எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்.

said...

Take Care!

Ranga.

said...

எனக்காக வாழ்த்திய வணங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றி பல. வழக்கம் போல ஒவ்வொருவருக்கும் பின்னூட்டம் இட வேண்டும் என்றுதான் ஆசை. கைவலியினால் முடியவில்லை.

இப்பொழுது கைப்புண்கள் ஆறிக்கொண்டிருப்பதால் குரங்கு போல கட்டை நானே பிரித்து விட்டேன். இன்று மாலை சென்று வேறொரு கட்டு போட வேண்டும். கைத்தொட்டிலை இன்னும் இரண்டு வாரங்கள் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி எல்லாம் வழக்கம் போல நன்றாகச் செல்கிறது. (அதாங்க...சாப்புட்டுச் சாப்புட்டுத் தூங்குறது)

சென்னையில் நடக்கும் வலைப்பதிவர் கூட்டத்திற்குச் செல்ல ஆசைதான். கோட்டூர் வழியா காருல போறவங்க இருந்தா நானும் வழியில தொத்திக்கிறேன். இல்லைன்னா கஷ்டந்தான்.

said...

குணமடைய வாழ்த்துக்கள்.
தலைக் கவசம் அணிந்து தானே மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறீர்கள்? அது மிகவும் அவசியமானது.

said...

அன்பு ராகவா!
தங்கள் நலத்துக்குப் வேண்டுகிறேன்;
காக்கக் காக்க கனகவேல் காக்க!
யோகன் பாரிஸ்

said...

ராகவன்,
இன்னிக்குத் தான் இந்தப் பதிவைப் பார்த்தேன். இந்நேரம் நீங்கள் குணமடைந்திருக்க வேண்டும் என வேண்டுகிறேன். சென்னை சாலைகளில் சற்று கவனமாகவே இருங்கள்.

said...

விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.

said...

சாரி ராகவன் இத எப்படியோ நான் மிஸ் பண்ணிட்டேன்..

நேத்து ஒங்கள பாத்ததும்தான் எனக்கு தெரிஞ்சது..

நான் நேத்து சொன்னா மாதிரி ஒங்க ஓல்ட் மகாபலிபுடம் ரோடு பகல்லயே கால வாரிவிடும்.. ராத்திரில கேக்கணுமா..

ஆமா ஒங்க கம்பெனி பஸ்தான் சென்னை முழுசும் ஓடுதே.. அதுலயே போங்க.. அதான் நல்லது..

said...

உடல்நிலை எப்படி இருக்கிறது இராகவரே!?

மிகத் தாமதமாய்க் கேட்கிறேனோ?

எல்லாம் வல்ல எம்பெருமான் ஆறுமுகனின் திருவருளால் நலமாய் இருப்பீர்கள் என்று பலமாய் நம்புகிறேன்..(நம்ம பாஸும் அவர் தானுங்கோ.. பழனிப் பாதயாத்திரை ஒரு 12 வருஷம் சென்றிருக்கிறேன் என் தந்தை, தமையனோடு.. சென்னை வந்தால் வடபழனி விசிட் நிச்சயம்)

அதுவும் சரிதான்.. மற்ற நண்பர்கள் சொன்னது போல் கார் வாங்குங்களேன்... அல்லது சற்று கவனமாக இருங்கள் தோழா.

கார்திக்வேலு சொன்ன மாதிரி (அவர் பெயரை அவர் அப்படித்தான் குறிப்பிட்டிருந்தாருங்கோ...) நல்ல நண்பர்கள் பட்டாளத்தைச் சேர்த்திருப்பதற்குச் சிறப்பு வாழ்த்துக்கள்..

என்ன இது நான் வாழ்த்திக் கொண்டே தான் இருக்க வேண்டும் போல.. கலக்குங்க சார்...