Monday, November 26, 2007

காதல் குளிர் - 10

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்

"என்னது ப்ரகாஷாவைக் காணமா? என்ன சொல்ற?" தூக்கக் கலக்கத்திலும் கடுகடுத்தான் சப்யா.

"ஹலோ...என்ன கடுகடுப்பு? காணம்னு சொல்றேன்." பதில் கடுகடுப்பு சித்ராவிடமிருந்து.

"சரி... மொபைல்ல கூப்புடு. வெளிய வாக்கிங் போயிருப்பான்."

"அதான் இங்க இருக்கே. நேத்து அவன் மெடிக்கல் ஷாப் போனப்புறம் பாத்தேன். டேபிள்ளயே வெச்சிட்டுப் போய்ட்டான். அது அங்கயே இருக்கு. எனக்கென்னவோ அவன் திரும்பி வந்தானோன்னே தெரியலை. பயமாருக்கு சப்யா?"

சப்யாவையும் கவலை கொஞ்சம் கட்டிப்பிடித்தது. "ரம்யா கிட்ட சொல்லீட்டுப் போயிருப்பானோ? அவ கிட்ட கேப்போமே"

"ம்ம்ம்ம்... கேக்கலாம். இரு நானே கேக்குறேன்." லேசாகத் திறந்திருந்த கதவைத் தள்ளியவள் அப்படியே திரும்பவும் மூடிவிட்டு வந்தாள்.

"என்னது கேக்காம... கதவ மூடீட்டு வந்துட்ட? தூங்குறாளா இன்னும்?"

சத்தம் போடாதே என்று சைகை காட்டி விட்டு சப்யாவின் கையைப் பிடித்து கிச்சனுக்குள் கூட்டிச் சென்றாள் சித்ரா. கிசுகிசுக்குரலில் சொன்னாள்.

"ப்ரகாஷாவும் உள்ளதான் தூங்குறான். அதான் கதவை திரும்பவும் மூடீட்டேன்."

"ஓ உள்ளதான் தூங்குறானா? அதுக்கு ஏன் இந்த கிசுகிசுப்பு?"

"ஐயோ...மெதுவாத்தான் பேசேன். தூங்குறான்னா....தூங்குறான். புரிஞ்சிக்கோடா மரமண்டை."

நறுக்கென்று கொட்டினான். "மண்டு....ஒடனே அதான் நெனப்பா ஒனக்கு....நம்மள மாதிரியே எல்லாரையும் நெனச்சா எப்படி? உள்ள சும்மா தொணைக்குப் படுத்திருப்பான்."

சப்யாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு காதருகில் சொன்னாள். "ஆமாமா....சும்மா தொணைக்குப் படுத்திருக்கிறவந்தான் சட்டையக் கழட்டீட்டுப் படுத்திருக்கான். அவன் நெஞ்சுல தலைய வெச்சு இவளும் கட்டிப் புடிச்சிக்கிட்டு தூங்குறாளா? ஜீன்ஸ் ஏன் தரைல இருக்கு? ரம்யாவோட டாப்சும்தான். வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா? இந்த விஷயத்துல என்னையவே நம்ப மாட்டேன். ரம்யாவையும் ப்ரகாஷாவை மட்டும் நம்பீருவேனா?"

சித்ராவை அணைத்துக் கொண்டான் சப்யா. நினைக்கும் பொழுதே அவனும் காதல் டிரெயினுக்கு டிக்கெட் எடுத்தான். "அப்படியா சொல்ற. இருக்கும். இருக்கும்." சித்ராவின் நெற்றியை எச்சில் படுத்தினான். "சரி.. இப்ப என்ன செய்யலாம்?"

"அட...ஒன்னுமே தெரியாதோ என்னோட ஷோனோர் பங்ளா ராஜாவுக்கு. அவங்களா வெளிய வரட்டும். கடைக்குப் போகனும்னு நீ ப்ரகாஷாவை வெளிய கூட்டீட்டுப் போ. அவனே ஏதாச்சும் சொல்வான். எங்கிட்ட காட்டுன பேச்சுத் திறமைல கொஞ்சத்த அவன் கிட்ட காட்டு. சரியா? நான் ரம்யாவை ஒரு வழி பண்றேன்."

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ப்ரகாஷா வெளியில் வந்தான். எதுவும் நடந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. சித்ரா குடுத்த டீயைக் குடித்தான்.

"சப்யா, என்னோட பிரஷ் காணோம். ஹொசா பிரஷ் வாங்கனும். வர்ரியா கடைக்குப் போகலாம்?" அவனே சப்யாவைக் கேட்டான்.

"புது பிரஷ்ஷா...வீட்டுலயே இருக்கே. எப்பவுமே ரெண்டு ஸ்பேர் பிரஷ் வெச்சிருப்போம். இரு எடுத்துட்டு வர்ரேன்." பெருமிதத்தோடு எழுந்தான் சப்யா.

பெட்ரூமுக்குள் நுழையப் போனவனை முறைப்போடு தடுத்தாள் சித்ரா. "அந்த பிரஷ் அன்னைக்கு ஒங்க காக்கா வந்தப்ப குடுத்துட்டேனே. புது பிரஷ் வீட்டுல இல்ல." புரிந்து கொண்டு வழிந்தான் சப்யா. "ஆமா ப்ரகாஷா...அன்னைக்கு சித்தப்பா வந்தப்போ சித்ரா எடுத்துக் குடுத்துட்டா. வா..கடைக்குப் போகலாம்."

சொல்லி வைத்த மாதிரி அவர்கள் வெளியே சென்றதும் ரம்யா வெளியே வந்தாள். அவள் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத மகிழ்ச்சி அவள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்து போனது. மறைக்க மறைக்க வெளியே தெரிந்தது.

"என்னடி...இப்ப ஒடம்பு எப்படியிருக்கு?"

கேட்ட சித்ராவை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டாள். "ஏய்...நான் சித்ரா. ப்ரகாஷா இல்ல." சிரித்துக் கொண்டே சொன்னாள் சித்ரா.

"ஆமா....என்னடி இது? நேத்து சாந்தரந்தான் அவ்ளோ பேசுன? என்னென்னவோ கேட்ட. கதையப் படிச்சவங்கள்ளாம் ஒன்னைய பெரிய அறிவாளின்னு வேற பாராட்டீட்டாங்க. பாத்தா அன்னைக்கு ராத்திரியே இப்பிடி? என்னாச்சு? எல்லாமே முடிஞ்சிருச்சா?"

தலையை ஆட்டி ஆமாம் என்றாள் ரம்யா.

"அடிப்பாவி. வெச்சாக் குடுமி...செரச்சா மொட்டையா? இப்ப அவங்க அம்மா அழ மாட்டாங்களா? அழுதா என்ன செய்வ?"

ரம்யாவின் வெட்கப் பனி விலகியது. "நீ கேக்குறது சரிதான். நேத்து அவன் எலக்ட்ரால் கொண்டு வந்து குடுத்தான். குடிச்சப்புறம் பக்கதுல கொஞ்ச நேரம் உக்காந்திருந்துட்டுத்தான் வெளிய போனான். போனவனை நாந்தான் போக விடலை. எனக்கு ரொம்ப பயமாயிருந்தது. அவனையும் உள்ளயே இருக்கச் சொன்னேன். அவன் இருக்குறது பாதுகாப்பா இருந்துச்சு. அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்.....எப்படி தொடங்குச்சுன்னு தெரியலை. ஆனா நடந்துருச்சு."

"நடந்ததெல்லாம் சரிதான். எந்த நம்பிக்கைல இப்பிடி செஞ்ச? அவன் விட்டுட்டுப் போய்ட்டான்னா?"

"போக மாட்டான்" ரம்யாவின் குரல் பெல்ஜியன் வைரமானது.

"எப்படிச் சொல்ற?"

"தெரியாதுடி. அவனை நான் நம்புறேன். நேத்து சாந்தரம் அவனை என்னால நம்ப முடியலை. ஆனா இப்ப முடியுது. நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனா இதுக்கு நானே பொறுப்பு. என்னோட ப்ரகாஷா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு."

"என்னது....உன்னோட ப்ரகாஷாவா? ம்ம்ம்ம்...நல்லாரு தாயே." சிரித்துக்கொண்டே ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தொடரும்....

இதுவரை கதையைப் படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் அடுத்த பகுதியில் கதை முடியும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுவரை படித்துப் பாராட்டி நிறைகுறைகளை எடுத்துச் சொன்ன நீங்கள் அடுத்த பகுதியையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

பின் குறிப்பு

ரம்யாவின் காதில் ப்ரகாஷா சொன்ன கன்னடக் கவிதை. மொழி மாற்றப்பட்டு உங்களுக்காக.

சர்க்கரை நோயாளிக்கும் பரிந்துரைப்பேன்
முத்தத்தை விருந்தென
தித்தித்தாலும் மருந்தென

- மொழிபெயர்ப்பாளர் (ப்ரகாஷாவின் ரம்யா)

25 comments:

said...

:-D!!
enna solradhunne therila!!

en nanbargal irandu peru onnu searndhaa maari oru sandhosham!!!

kadhaila nadaiyum nakkalum kurumbum superu!!!!!

i really loved this part!!! ha ha ha :-D

said...

ஆகா. இந்த கதையை இதுவரை படித்தவர்கள் எல்லாம் கட்டாயம் படிக்க வேண்டிய இன்னொரு பதிவு இருக்கு. அது இது தான்.

http://inbame.blogspot.com/

:-)

said...

ப்ரகாஷா தெய்வமின்னு சொன்னது இதுதான் அர்த்தமா??? :(

ஹிம் என்னனாமோ சொல்ல தோணுது..... சொன்னா உதை விழுமின்னும் தெரியுது, ஹி ஹி அதுனாலே இந்த பாகம் நல்லா வந்திருக்குன்னு சொல்லிட்டு எஸ் ஆகிக்கீறேன்..... :)

said...

வெளிய போனான். எப்போ திரும்பி வந்தான், என்ன ஆச்சு? ஒரே குழப்பமா இருக்கே....

என்னமோ நல்லதா நடந்தா சரி.

said...

பெல்ஜியம் வைரம்?

பிடிச்சிருக்கு:-))))

said...

ரம்யாவின் பாத்திரம் "தெளிவா யோசிக்கிற புத்திசாலி" மாதிரி இருந்தது, ஆனா இப்போ கொஞ்சம் சொதப்பிடுச்சுனு நினைக்கிறேன். "யோசிக்காம காதல்ல இறங்குனா உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்"னு பேசுன பொண்ணு, இப்படி ஒரே ராத்திரில matter வரைக்கும் போய்ட்டானு சொல்லறது நம்பமுடியவில்லை. கதை தமிழ் படம் மாதிரி மாறிடுச்சே :(
ஒரு வேளை எனக்கு மட்டும்தான் பிடிக்கலையோ...

said...

:))))....

G.Ra.. confirm panniyaatchu.. pannittaanga... ini puthu blog onnu aarambitchu athoda mukkiyamaana author neengathaannu board maatida vendiyathuthaan :)))

said...

உங்க கதையில எல்லாமே "இப்படி" நடந்துருமோ,...? என்னவோ ஓய்... அடுத்த பாகம் சுபம்னு போட்டா கொலை விழும்.

said...

//வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா?//

இந்தப் பகுதியைப் படிக்கிறப்ப வாழைப்பழம் சாப்புட்டுக்கிட்டு இருந்தேன். இந்த வரியைப் படிச்சவுடனே தொடர்ந்து வாழைப்பழம் சாப்புடறதா வேண்டாமான்னு ஒரு தயக்கம் வந்திருச்சு. :-)

இனிமே வாழைபழம் சாப்புடறப்ப எல்லாம் இந்த உவமை நினைவுக்கு வருமோ?

said...

//இதுவரை கதையைப் படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் அடுத்த பகுதியில் கதை முடியும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.//

//அடுத்த பாகம் சுபம்னு போட்டா கொலை விழும்.
//

இளா. பாவம் இராகவன். விட்டிருங்க.

said...

// CVR said...
:-D!!
enna solradhunne therila!!

en nanbargal irandu peru onnu searndhaa maari oru sandhosham!!!

kadhaila nadaiyum nakkalum kurumbum superu!!!!!

i really loved this part!!! ha ha ha :-D //

:) இராமநாதன் இன்னமும் பதிவைப் படிக்கலைன்னு நெனைக்கிறேன். படிச்சிருந்தா இப்பிடி தங்கிலீசு பின்னூட்டம் போட்டதுக்குக் கிழிச்சிருப்பாரு.

// குமரன் (Kumaran) said...
ஆகா. இந்த கதையை இதுவரை படித்தவர்கள் எல்லாம் கட்டாயம் படிக்க வேண்டிய இன்னொரு பதிவு இருக்கு. அது இது தான்.

http://inbame.blogspot.com/

:-) //

இன்பமே உந்தன் பேர் பெண்மையோன்னு வள்ளுவர் வாத்சாயனாரா மாறுனதச் சொல்ற வலைப்பூதான...வந்துருவோம்.

said...

gira...

//ஆமாமா....சும்மா தொணைக்குப் படுத்திருக்கிறவந்தான் சட்டையக் கழட்டீட்டுப் படுத்திருக்கான்//
friends rendu perum avanga family-oda tour pona, ithu maathiri
appappa nadakkum! :-)
appappa vazhivaanga :-)
intha vazhisal, oru maasam kazhichi phone-la yum thodarum :-)

kathai mudiya pogutha?
ippo thaane serndhaanga! innum konjam kurumbu kurukuruppu ellam kodukaama mudicha eppadi? :-)

said...

//வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா?//

kumaranukku aana nilamai thaan enakkum!
Hospital intha kathaiya padichikitte pazham saaptu kittu irunden!
Ithai padicha vudan, muzhu pazhathaiyum ore muzhungu! :-)

said...

\\கதையப் படிச்சவங்கள்ளாம் ஒன்னைய பெரிய அறிவாளின்னு வேற பாராட்டீட்டாங்க. பாத்தா அன்னைக்கு ராத்திரியே இப்பிடி\\

\\ போனவனை நாந்தான் போக விடலை. எனக்கு ரொம்ப பயமாயிருந்தது. \\


உணர்ச்சிகளுக்கு அடிமைபடாத அறிவாளின்னு நினைத்தேன் ரம்யாவை, இப்படி சொதப்பிட்டாளே!

முந்தைய பகுதிகளில், அவர்களது நெருக்கத்தை காதலுடன் கொஞ்சம் அதிகமாகவே சேர்த்திருந்தீர்கள், ஆனால்.........இப்படி அவசரப்படுவாங்கன்னு எதிர்பார்க்கவில்லை,

அடுத்த பகுதி ட்ரஜிடியா முடிச்சிருவீங்களோன்ன்னு தோனுது, வெயிட் பண்ணிபார்க்கிறேன் அடுத்த பகுதியை!

கன்னடக் கவிதையின் தமிழாக்கம் அருமை!

said...

:-)))) - இது இந்தப் பதிவுக்கு!!!

அடுத்தப்பதிவுல :-((( இப்படி போட வச்சிடாதீங்க!

said...

என்னங்க இப்படி பண்ணிட்டீங்க....ஏதோ தெளிவான பொண்ணுன்னு ரம்யாவ காமிச்சு, கடைசில ரொம்ப சாதாரணமாக்கிட்டீங்க....இப்படி டைல்யூட் பண்ண இன்னும் கொஞ்சம் டயம் (1-2 பதிவு) எடுத்து காரக்டரை மாத்தியிருந்தாலும் பரவாயில்லையோன்னு தோணுது.

said...

EXPECT THE UNEXPECTED அப்படின்னு சொல்ல வர்றீங்களா ஜி.ரா?

said...

அடுத்த பகுதி வரும் வரையில் ராகவன் அண்ணாவை நம்ப போவது இல்லை ;)

said...

hey...kadhai la ipdi oru romantic twist a????prakasha va kanom na udane ennavo yedho nu nenacha kadasila ipdi oru surprise...

it does happen in practicality..but this has weakened their character build up...

kashta pattu kadhaya vithiyasama kondu poveenga nu paatha ipdi tanil cinema madhiri kondu poiteengale...

said...

நானும் இந்த பகுதியை படிச்சிட்டேன்...(இப்படி இருக்குமுன்னு எதிர்பார்க்கல) அம்புட்டு தான்...;)

அடுத்த பகுதியில அதான் சாப்பிட்டாச்சி இல்ல அவ்வளவு தான்னு சொல்லிடாதிங்க..;)

said...

//அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்.....எப்படி தொடங்குச்சுன்னு தெரியலை. ஆனா நடந்துருச்சு.//

இது மட்டும்தான் புரியவில்லை... ;)

இந்த பாகம் நல்லா வந்திருக்கு... அவசரத்தில் முடிப்பதுபோல் இருக்கே...!!!

said...

// இலவசக்கொத்தனார் said...
வெளிய போனான். எப்போ திரும்பி வந்தான், என்ன ஆச்சு? ஒரே குழப்பமா இருக்கே....

என்னமோ நல்லதா நடந்தா சரி. //

என்ன கொத்ஸ்...கதைய முழுசாப் படிக்கலையா....எலக்ட்ரால் கொண்டு வந்து தந்தான்னு ரம்யா சொல்றாளே. அதான் குழந்தை அழுகுதுன்னு உள்ள தூங்கப் போனாங்க சப்யா சித்ரா...நீங்களும் தூங்கீட்டீங்களா? :)

// துளசி கோபால் said...
பெல்ஜியம் வைரம்?

பிடிச்சிருக்கு:-))))//

கரெக்ட்டாப் பிடிச்சீங்க பாருங்க. அடடா. அப்ப பெல்ஜியம் வைரத்தைத் தவிர எதுவும் பிடிக்கலைன்னு சொல்றீங்களா டீச்சர்? ;)

said...

// Mani RKM said...
ரம்யாவின் பாத்திரம் "தெளிவா யோசிக்கிற புத்திசாலி" மாதிரி இருந்தது, ஆனா இப்போ கொஞ்சம் சொதப்பிடுச்சுனு நினைக்கிறேன். "யோசிக்காம காதல்ல இறங்குனா உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்"னு பேசுன பொண்ணு, இப்படி ஒரே ராத்திரில matter வரைக்கும் போய்ட்டானு சொல்லறது நம்பமுடியவில்லை. கதை தமிழ் படம் மாதிரி மாறிடுச்சே :(
ஒரு வேளை எனக்கு மட்டும்தான் பிடிக்கலையோ... //

அட...அதை ஏங்க மேட்டர்னு சொல்றீங்க. கூடல்னு தமிழ்ல அழகா ஒரு சொல் இருக்குல்ல. காதலர் இருவர் கருத்தொருமித்துன்னுன்னு சொல்றாங்கள்ள. :)

// ஜி said...
:))))....

G.Ra.. confirm panniyaatchu.. pannittaanga... ini puthu blog onnu aarambitchu athoda mukkiyamaana author neengathaannu board maatida vendiyathuthaan :))) //

ஆகா....என்ன வலைப்பூ அது? வெளக்கமாச் சொல்லு.

// ILA(a)இளா said...
உங்க கதையில எல்லாமே "இப்படி" நடந்துருமோ,...? //

என்ன இளா இப்பிடிக் கேட்டீங்க....எல்லாரோட வாழ்க்கைலயும் நடக்குறதுதான...அது இல்லைன்னா வாழ்க்கையே என்னத்துக்காறது? கதைல இருந்தாத் தப்பா என்ன?

// என்னவோ ஓய்... அடுத்த பாகம் சுபம்னு போட்டா கொலை விழும். //

சுபம் போட்டா கொலை விழுமா? என்ன சொல்றீங்க. ஒன்னு நான் கொலைகாரன் ஆகனும்..இல்லைன்னா நீங்க கொலைகாரன் ஆகனும்னு சொல்றீங்களா?

said...

Bear with my english reply.
I was impressed by the initial level-headed characterization of the Ramya. When such a character's action was contradicting its own image, I was disappointed. Still a gud romantic story :).


(Koodal - poruththamaana sol.
matter or Koodal, A rose by any name is still a rose :) )

said...

சார்.. ரொம்ப லேட்டு நானு.. மன்னிச்சுக்கோங்க..

இதுல தித்திப்பு கூடிருச்சு..ஆனாலும் நான் இப்பிடி ஒரு 'திருப்பம்' வரும்னு எதிர்பார்க்கவே இல்லீங்கோ..

ஆனாலும் ஒத்துக்கொள்கிற மாதிரி இருந்தது நலம்!

அவங்க 'கலந்துரையாடல்' இந்த அளவுக்கு வர்ணிச்சிருக்கீங்க!! :)

அடுத்த பகுதியை இப்போவே படிச்சுட்டா நல்லது! :)

சுபம் போடற பதிவு இல்ல அது? இதோ வர்றேன்..