Monday, November 19, 2007

காதல் குளிர் - 9

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

பக்கத்தூர் என்பது ஏதோ பெரிய ஊர் என்று எண்ணிவிட வேண்டாம். பட்டிக்காட்டிலிருந்து பட்டிக்காட்டிற்கு வந்தார்கள். அங்கும் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. இருட்டும் குளிரும் மட்டுமே கூடியது. என்ன செய்வதென்று யாருக்கும் தோன்றவில்லை. பெராவை வைத்துக் கொண்டும் பயந்து போயிருக்கும் ரம்யாவை வைத்துக் கொண்டும் விழித்தார்கள். தங்குவதற்கு ஒரு விடுதியும் இல்லை.

அப்பொழுதுதான் ப்ரகாஷாவிற்கு அந்தத் திட்டம் தோன்றியது. அவர்கள் வந்த ஆட்டோவிடம் போனான். மதுராவிற்கு ஆட்டோ வருமா என்று கேட்டான். ஒப்புக்கொள்ளாத டிரைவரிடம் பேசிச் சரிக்கட்டினான். அறுபது கிலோமீட்டர் தொலைவு. முந்நூற்று ஐம்பது ரூபாய்களுக்குப் பேரம் பேசி ஆட்டோவை மதுராவுக்குத் திருப்பினான்.

விதி...அல்லது கடவுள்...எப்படி விளையாடுகின்றார் பார்த்தீர்களா? நான்கு மணி வாக்கில் ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார விரும்பாமல் முன்னால் சென்று உட்கார்ந்தாள் ரம்யா. ஆனால் இப்பொழுது கிடுகிடு ஆட்டோவின் பின்னால் பிரகாஷாவை ஒட்டிக்கொண்டு...சாய்ந்து கொண்டு...கட்டிக்கொண்டு....அட. அதே ரம்யாதான். அப்பொழுது நொந்து பாடிக்கொண்டிருந்த ப்ரகாஷாவின் உள்ளம் இப்பொழுது காதற் சிந்து பாடிக் கொண்டிருந்தது.

ரம்யாவின் நிலையோ வேறுவிதம். படபடப்பும் பயமும் அடங்காமல் அவன் அணைப்பிலே அடங்கியிருந்தாள். இதே நெருக்கத்தில் அவள் இதற்கு முன்பும் உட்கார்ந்திருக்கிறாள். ஆனால்...இன்றைய நெருக்கத்தில் வேறு எதையோ உணர்ந்தாள். சரி. எதையோ உணர்ந்தார்கள். அதுக்குப் பேர் காதல்தானா!

ஆட்டோ ஜக்கடிஜக்கடியென ஒருவழியாக மதுராவிற்குள் நுழைந்தது. பெரிய பட்டிக்காடு அது. கோயில் உள்ள ஊர். புகழ் பெற்ற ஊர். ஆனால் பட்டிக்காடு போல இருந்தது. பெட்டிக்கடைகளும் மஞ்சள் பல்புகளும் அழுது வடிந்து கொண்டிருந்தன. பேருந்து நிலையம் என்பது நான்கே பேருந்துகள் நிற்கக் கூடிய இடமாகவே இருந்தது. அதிலும் இருந்தது ஒரே ஒரு பேருந்து. பெரிய வேன் என்று சொல்லலாம். அதுவும் வேறொரு ஊருக்கு. டெல்லிக்கோ நொய்டாவிற்கோ எதுவும் இருப்பது போலவே தெரியவில்லை.

"ரம்யா இல்லே இரு. பத்து நிமிசத்துல வர்ரேன். சப்யா பாத்துக்கோ" சொல்லிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் எதையோ சொல்லி அழைத்துச் சென்றான். சரியாகப் பத்து நிமிடத்தில் ஒரு ஜீப்போடு வந்தான். இரண்டாயிரம் ரூபாய்க்குப் பேசி முடித்திருந்தான். ஏனென்றால் வேறு ஒரு வண்டியும் இல்லை. அதுவுமில்லாமல் ஏற்கனவே எட்டரை மணியாகியிருந்தது. தங்க நல்ல இடமும் இல்லை. ஆகையால் எப்படியாவது நொய்டா போவதுதான் நல்லது என்று முடிவு செய்தான் ப்ரகாஷா. அதனால்தான் வண்டியைப் பிடித்து வந்தான்.

வண்டியில் பிரகாஷாவின் மடியில் படுத்துக் கொண்டாள் ரம்யா. அப்பொழுதுதான் சித்ரா கேட்டாள்.

"ஏய்....எங்கடி நீ வாங்குன தாஜ்மகால்? அந்தப் பைய மட்டும் காணோமே. மித்ததெல்லாம் இருக்கே."

"அத ஆட்டோலயே விட்டுட்டேண்டி."

"ஆட்டோலயா?"

"ஆமா. அத வாங்குனதுனாலதான் இப்படியெல்லாம் ஆச்சோன்னு தோணிச்சு. அதான் ஆட்டோலயே விட்டுட்டேன். என்ன இருந்தாலும் அது காதல் கல்லறை....அதுனால எனக்குப் பிடிக்கலை. அந்தத் தாஜ்மகால் எனக்கு வேண்டாம். அதுனாலதான் ஆட்டோலயே வெச்சிட்டேன்."

சொல்லி விட்டு தூங்கிவிட்டாள் ரம்யா. படபடப்பு லேசாகக் குறைந்தது போல இருந்தது. தலைவலி மட்டும் லேசாக இருந்தது. ஒருவழியாக நொய்டா வந்து சேர்ந்தார்கள். அதுவும் பதினொன்னரை மணிக்கு. வெளியே குளிர் கும்மியடித்துக் கொண்டிருந்தது. சப்யா ஹீட்டர்களைத் துவக்கினான்.

ரம்யா தொண்டையத் தடவிக்கொண்டு எதுக்களித்தாள். "என்னடி மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு?"

"வாந்தி வர்ர மாதிரி இருக்கு." லேசாக உமட்டினாள்

அந்நேரம் பெரா அழத் தொடங்கினான். தூக்கத்திற்குத்தான். ப்ரகாஷாவிடம் சொன்னாள் சித்ரா. "டேய். பக்கத்துத் தெருவுல மெடிக்கல் ஷாப் இருக்கு. எலக்ட்ராலும் அவாமினும் வாங்கீட்டு வா. போக ரெண்டு நிமிஷம். வர ரெண்டு நிமிஷம். பட்டுன்னு வந்துரு. இந்தா சாவி." வீட்டுச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே போனான் அவன். பெராவின் அழுகை கூடியது.

சித்ராவை ரம்யா அழைத்தாள். "ஏய். நீங்க போய்ப் படுங்க. எனக்கு இப்பத் தேவலை. அவன் வந்ததும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கிறேன். இப்ப உள்ள போய்ப் படுக்கிறேன்.

ரம்யா அவள் அறைக்குச் சென்று கதவைச் சும்மா மூடிக்கொண்டு படுத்தாள். சித்ராவும் சப்யாவும் பெராவைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்கள்.

தூங்கிக் காலையில் எழுந்த சித்ராவிற்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. சப்யாவை எழுப்பினாள். "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."

-----------------------------------------------------
பின்குறிப்பு

சித்ரா எப்பொழுதோ மனதில் எழுதி மறந்து போன கவிதை

விடிவது என்றால் என்ன?
உனது நிழல்
என் மீது படிவதுதான்
இல்லையென்றால் மடிவதுதான்


தொடரும்

24 comments:

said...

நான் Guess பண்ணினது சரியாதான் போச்சு.... :(((

said...

ஜிரா,

இன்றும் நான் தான் முதல் ஆளா?

நடுவுல அவங்க ஆட்டோவில வர்ற சித்தரிப்பு போன பகுதியிலேயே வந்திருக்க வேண்டியது.

ஆனால் நடைமுறை வாழ்வில் ஒத்துக்கொள்ளக் கூடிய விஷயம் தான்.

என்னங்க திடீருன்னு என்னமோ ஒரு முட்டுச் சந்துல நிறுத்திட்டீங்க? பட்டுனு ஒரு திருப்பம் ஆனா ஒண்ணுமே புரியல..

கவிதையும் கைகொடுக்காத மாதிரி தோணுது. எனக்குப் புரியல கவிதையின் சொருகல் இங்கே.

குழப்பத்தோடு அடுத்த பகுதிக்காக வழக்கம் போல வெயிட்டிங்க்க்க்க்க்.....

said...

//விடிவது என்றால் என்ன?
படிவது தான்
மடிவது தான்//

ஜிரா
கடி படுவது தான்!
அடி படுவது தான்!
யோவ் ஜிரா! என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீரு? எப்பா பாரு ப்ரகாஷாவை அடிச்சிக்கிட்டே இருக்கீரு! எங்கய்யா போனான்?

மொதல்ல மாத்திரை வாங்கியாறப் போனவன் நல்லபடியா வந்து சேர்ந்தானா? அதச் சொல்லவே இல்லையே! திடீர்-னு காலங்காத்தால காணோம்-னா?

said...

:(

said...

பாவம்ப்பா அந்தப் பையன் ப்ரகாஷா.

நல்லபடி வந்துருவாந்தானெ?

said...

// இராம்/Raam said...
நான் Guess பண்ணினது சரியாதான் போச்சு.... :((( //

ஆகா...ராமு....என்னத்த அப்படி guess பண்ண.... அதுக்கு ஏன் இப்பிடி அழுகுற. பிரகாஷா தெய்வம்ப்பா..

// Raghavan alias Saravanan M said...
ஜிரா,

இன்றும் நான் தான் முதல் ஆளா? //

இல்லையே. நீங்க ரெண்டாவது. ராம் முந்திக்கிட்டான்.

// நடுவுல அவங்க ஆட்டோவில வர்ற சித்தரிப்பு போன பகுதியிலேயே வந்திருக்க வேண்டியது.

ஆனால் நடைமுறை வாழ்வில் ஒத்துக்கொள்ளக் கூடிய விஷயம் தான்.//

:) எப்ப வந்தா என்ன...வந்துருச்சுல்ல.

// என்னங்க திடீருன்னு என்னமோ ஒரு முட்டுச் சந்துல நிறுத்திட்டீங்க? பட்டுனு ஒரு திருப்பம் ஆனா ஒண்ணுமே புரியல..//

ஒன்னும் புரியலையா...சரி...அடுத்த பகுதியிலையாவது புரியுறாப்புல எழுதுறேன். :)

// கவிதையும் கைகொடுக்காத மாதிரி தோணுது. எனக்குப் புரியல கவிதையின் சொருகல் இங்கே.

குழப்பத்தோடு அடுத்த பகுதிக்காக வழக்கம் போல வெயிட்டிங்க்க்க்க்க்.....//

குழப்பங்கள் தீர்ந்துரும்னு நம்பீரலாம். தீர்ந்துருச்சுன்னா குழப்பம் தீந்துரும்.

said...

//குழப்பங்கள் தீர்ந்துரும்னு நம்பீரலாம்.
"தீர்ந்துருச்சுன்னா" குழப்பம் தீந்துரும்//

:-)
appadiye arul vaakku kodukkura maariye irukke!
ethu theerndhuchunnaa kuzhappam theerum?
ippadi ul-ul-kuthu vachi kathai sonna eppadi gira? :-)

said...

\\"சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."//

என்னாச்சு, எங்கே போனான்.......நொய்டாவிற்கே பத்திரமாக எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துட்டான், மாத்திரை வாங்கிட்டு வராமல் என்கே போய்ட்டான்....???

சீக்கிரன் அடுத்த பாகம் போடுங்க, வெயிட்டிங்க்ஸ்!!!!!!!!!

said...

//.ப்ரகாஷாவைக் காணோம்."//

பெனாத்தலார் பதிவு படிச்சு இருப்பாரு. அதனால அவரு அப்ஸ்காண்ட் ஆகி இருப்பாரு போல!!

said...

என்னாச்சு பிரகாஷாவிற்கு!!
நல்ல பையன் !!

பாக்கலாம்!
i hope he is safe and fine!! :-)

said...

ஆஹா எங்கே போனான் ப்ரகாஷா ஒருவேலை வழில ஏதாவது அழகான மல்லு கேர்ள பாத்துட்டு பின்னாடியே போயிட்டாரோ என்னவோ பாவம் ரம்யா :)

said...

எதோ தப்பு நடந்துப் போச்சுன்னு தெரியுது.. என்னத் தப்புன்னு சீக்கிரம் சொல்லுங்கய்யா :((

said...

\\ "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."\\\

நல்லா போட்டிங்க இடைவேளையை...அலைபாயுதே படம் மாதிரி ஆகிடுமோ !?

said...

ஆஹா என்ன ஆச்சு ஹீரோவுக்கு.அந்த வில்லன் KRS ஏதாச்சும் பண்ணிட்டாரா?KRS வேண்டும்ன்னா கதையில நல்ல அடிவாங்க வைச்சுகோங்க.ஆனால் நல்ல பையன் ப்ராகஷாவை ஒன்னும் பண்ணிடாத்தீங்க.

said...

//அதுக்கு ஏன் இப்பிடி அழுகுற. பிரகாஷா தெய்வம்ப்பா.//

அண்ணா பிரகாஷாவை கொன்னுட்டீங்களா?தெய்வம் எல்லாம் சொல்லுறீங்களே

said...

ஒரு சஸ்பென்ஸோட பிராகாஷாவ காணோம்னு போட்டுட்டு அவன் தாஜ்மகால எடுத்துட்டு வரதான் போனானு அடுத்தவாரம் எதாவது கத விடமாட்டீங்கனு நம்பறேன்

said...

// ILA(a)இளா said...
:( //

என்னாச்சு இளா...அழாதீங்க. நடக்குறதெல்லாம் நல்லதுக்கேன்னு நெனப்போம். :)

// துளசி கோபால் said...
பாவம்ப்பா அந்தப் பையன் ப்ரகாஷா.

நல்லபடி வந்துருவாந்தானெ? //

என்ன சொல்றது டீச்சர். விதி வலியது. என்னைய இப்பிடியெல்லாம் எழுத வைக்குது.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//குழப்பங்கள் தீர்ந்துரும்னு நம்பீரலாம்.
"தீர்ந்துருச்சுன்னா" குழப்பம் தீந்துரும்//

:-)
appadiye arul vaakku kodukkura maariye irukke!
ethu theerndhuchunnaa kuzhappam theerum?
ippadi ul-ul-kuthu vachi kathai sonna eppadi gira? :-) //

:) தீருதல் தீராமை இலான் அடி தீரின் தீரும் தீரப்பட வேண்டியவை.

said...

hmmmm... poravu enna aatchu??

said...

// Divya said...
என்னாச்சு, எங்கே போனான்.......நொய்டாவிற்கே பத்திரமாக எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துட்டான், மாத்திரை வாங்கிட்டு வராமல் என்கே போய்ட்டான்....??? //

திவ்யா, ஏணி தோணி அண்ணாவி நாரத்தைன்னு சொல்வாங்க. தெரியுமா ஒங்களுக்கு?


// இலவசக்கொத்தனார் said...
//.ப்ரகாஷாவைக் காணோம்."//

பெனாத்தலார் பதிவு படிச்சு இருப்பாரு. அதனால அவரு அப்ஸ்காண்ட் ஆகி இருப்பாரு போல!! //

ஹெ ஹெ இருக்கும். அப்ப பிரகாஷுவுக்கு லிங்கு கொடுத்து காணாமப் போக்குனது நீங்கதானா? :)

// CVR said...
என்னாச்சு பிரகாஷாவிற்கு!!
நல்ல பையன் !!

பாக்கலாம்!
i hope he is safe and fine!! :-)//

ம்ம்ம்ம்.....பாக்கலாம். முருகா..என்னைய இப்படியெல்லாம் எழுத வைக்கிறது நீ. நீ. நீ மட்டுமே.

said...

// அனுசுயா said...
ஆஹா எங்கே போனான் ப்ரகாஷா ஒருவேலை வழில ஏதாவது அழகான மல்லு கேர்ள பாத்துட்டு பின்னாடியே போயிட்டாரோ என்னவோ பாவம் ரம்யா :) //

டெல்லீல பஞ்சாபி போட்ட பஞ்சாபிப் பிள்ளைங்க நெறைய இருக்கும்ல...அப்புறம் எதுக்கு மல்லு கேர்ளு?

// தேவ் | Dev said...
எதோ தப்பு நடந்துப் போச்சுன்னு தெரியுது.. என்னத் தப்புன்னு சீக்கிரம் சொல்லுங்கய்யா :(( //

நடந்த தப்பு என்னன்னு அடுத்த திங்கள் தெரிஞ்சிக்கலாம் தேவ். :(

// கோபிநாத் said...
\\ "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."\\\

நல்லா போட்டிங்க இடைவேளையை...அலைபாயுதே படம் மாதிரி ஆகிடுமோ !? //

ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்....யோசிக்கிறேன். என்ன சொல்றதுன்னு...

said...

என்னங்க ஜிரா, இப்படி சஸ்பேன்ஸ் ஒருவாரத்துக்கு நீட்டியிருக்கீங்க....

ஆமா, காணாம போனான்னு முடிச்சுட்டு, பின்னூட்டத்துல தெய்வம்ன்னு சொல்லுறது ஞாயமா...அவன வாழ விடுங்கப்பா...

said...

// துர்கா|thurgah said...
ஆஹா என்ன ஆச்சு ஹீரோவுக்கு.அந்த வில்லன் KRS ஏதாச்சும் பண்ணிட்டாரா?KRS வேண்டும்ன்னா கதையில நல்ல அடிவாங்க வைச்சுகோங்க.ஆனால் நல்ல பையன் ப்ராகஷாவை ஒன்னும் பண்ணிடாத்தீங்க. //

:)

// துர்கா|thurgah said...
//அதுக்கு ஏன் இப்பிடி அழுகுற. பிரகாஷா தெய்வம்ப்பா.//

அண்ணா பிரகாஷாவை கொன்னுட்டீங்களா?தெய்வம் எல்லாம் சொல்லுறீங்களே //

எல்லாரையும் காப்பாத்தி வீட்டுக்கு கொண்டு வந்து சேத்திருக்கான். அவன் தெய்வமில்லாம என்ன?

// அருட்பெருங்கோ said...
ஒரு சஸ்பென்ஸோட பிராகாஷாவ காணோம்னு போட்டுட்டு அவன் தாஜ்மகால எடுத்துட்டு வரதான் போனானு அடுத்தவாரம் எதாவது கத விடமாட்டீங்கனு நம்பறேன் //

ஹா ஹா ஹா நல்லாவே யோசிக்கிற. இந்த யோசனையெல்லாம் காதல் மன்னனுக்கு வருது. எனக்கு வரலையே கோ. :) ஆனா நீ சொன்ன கதையும் எனக்குப் பிடிச்சிருக்கு.

said...

Status: அடுத்த பாகத்திற்கு காத்திருத்தல்.

said...

அட்டகாசம்... அருமை... superb......

வார்த்தை கிடைக்க மாட்டென்றது ஜி.ரா :)))

எல்லா பகுதியும் ஒரே மூச்சுல உக்காந்து படிச்சிட்டேன். expecting the next part soon :)))