Sunday, November 18, 2007

பாட்டு கண்டுபிடிங்க பாக்கலாம்?

ரெண்டு பாட்டு தர்ரேன். கேளுங்க. ஆனா தெலுங்குல உந்தி. அந்தத் தெலுங்குப் பாட்டுகள் தமிழ்லயும் உந்தி. அது என்னென்ன பாட்டுன்னு கண்டுபிடிங்க பாக்கலாம். ஆனா போட்டி அவ்ளோ லேசாவா இருக்கும். 1975லிருந்து 1980க்குள் வந்த பாட்டுகள் ஒங்களுக்குத் தெரியும்னா இந்த ரெண்டு பாட்டடயுமே கண்டுபிடிச்சிரலாம். ஒன்னு பெரிய நடிகரோட படம். இன்னோன்னு பெரிய இயக்குனரோட படம்.

இப்ப மொதப் பாட்டு. இது எல்.ஆர்.ஈஸ்வரியும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடியிருக்காங்க தெலுங்குல. தமிழ்லயும் பாலு உண்டு. ஆனா ஈஸ்வரி கிடையாது. இன்னொரு பிரபல ஆண் பாடகர். தமிழில் ஒரு போட்டிப் பாட்டு இது.


அடுத்தது இந்தப் பாட்டு. இசையரசியும் பாலுவும் பாடியிருக்காங்க தெலுங்குல. தமிழ்ல இசையரசி இல்லை. பாலுவின் தனிக்காட்டு ராஜாங்கம். இந்தப் பாட்ட லேசாக் கண்டுபிடிச்சிருவீங்கன்னு நெனைக்கிறேன்.


இங்க குடுத்துருக்குற ரெண்டு பாட்டுமே...தெலுங்குல ஒரே படத்துல வருது. சிம்ஹ பாலுடு அப்படீங்குற படம். என்.டி.ராமாராவ் நடிச்சது.

ரெடி. ஸ்டார்ட்...1...2....3

அன்புடன்,
கோ.இராகவன்

15 comments:

said...

1.)??????
:-ஸ்
கேட்க ஆரம்பிச்ச போது "கங்கை, யமுனை,இங்குதான்,சங்கமம்...." மாதிரி இருந்துச்சு!!
ஆனா பாட்டு ஆரம்பிச்ச ஆப்புறம் கொஞ்ச்ச்ச்சம் வித்தியாசமா போகுது


2.)வான் நிலா நிலா அல்ல,உன் வாலிபம் நிலா

said...

தம்பி சிவிஆர், மொதப் பாட்டு ரொம்பக் கிட்டக்க வந்துட்ட....நல்லா கவனிச்சிருக்க. நல்ல பாட்டுதான் அதுவும்.

ரெண்டாவது பாட்டு சரியான விடை :)

said...

எந்த பாட்டு கேட்டாலும் ஸ்ரேயா கோஷல் பாடிய சீனி கம் சீனி கம்.. பாட்டு மட்டும் தான் என் காதில் விழுது அதனால் இந்த போட்டிக்கு நான் வரவில்லை.

said...

இரண்டாவது ஈசியாக இருந்தது :

'வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா'

முதல் பாட்டு தெரியலை, கூகுளில் தேடினால், இந்தப் பதிவே திரும்பி வருது, ரொம்ப கஷ்டமுங்க! :-)

said...

ஜீவா, ரெண்டாவது பாட்டு சரி. பட்டுன்னு கண்டுபிடிச்சிட்டீங்க.

மொதப்பாட்டு கஷ்டந்தான். ஒரு குறிப்பு குடுக்குறேன். அது எஸ்.பி.பி, டி.எம்.எஸ் பாடிய பாட்டு. போட்டிப்பாட்டு.

said...

// குசும்பன் said...
எந்த பாட்டு கேட்டாலும் ஸ்ரேயா கோஷல் பாடிய சீனி கம் சீனி கம்.. பாட்டு மட்டும் தான் என் காதில் விழுது அதனால் இந்த போட்டிக்கு நான் வரவில்லை. //

ஹி ஹி நானும் ஷ்ரேயா கோஷல் ரசிகரு. வாங்க கோஷலுக்காக கோஷம் போடுவோம். ஹி ஹி. அவங்க பாடுனாலே சீனி ஜாதா? எப்படி சீனி கம்முன்னு சொல்லலாம்? :)

said...

2.

வா நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவி என் நிலா
நீ இல்லாத நாள் எல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா.....

காலங் கார்த்தால, இப்படி ஒரு அருமையான லவ் சாங்கைக் கொடுத்து....மயக்கம் ஏத்தி எந்த வேலையும் செய்ய விடாமல் திட்டமிடும் ஜிராவை வ"ண்"மையாகக் கண்டிக்கிறேன்!

SPB-MSV-பட்டினப் பிரவேசம்

said...

ஆகா...சண்மதச் செல்வர். ஆன்மீகத் தென்றல். அரியடியார் திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்கள் ஒரு விடையைத் தந்துள்ளார்கள். இரண்டாவது பாடலுக்கு. அது சரியான வடையே. அதுவும் வடையைத் துவையலோடு கொடுத்துள்ளார். முதல் வடையையும் அவர் சுட்டால் நன்று.

said...

2)பட்டினப்ப்ரவேசம் - வான் நிலா நிலா

said...

ஓய்ய்ய்ய்ய்ய்...கண்டுபுடிச்சாச்சே
இமயம் படம் தானே?
பொதிகை-ல பார்த்தேன், போன முறை ஊருக்குப் போன போது....
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் - அந்தப் பாட்டைப் போட்டிருக்கக் கூடாதா? வாணி ஜெயராம்....ஹூம்...

சரி இந்தாங்க....
1. சக்தி என்னடா, உன் புத்தி என்னடா?

said...

1) சக்தி என்னடா - இமயம்
[இந்த விடைய சொன்னவரு கூகிளாண்டவர். நான் இந்த பாட்ட கேட்டதில்ல. யாருக்காவது பாட்டு எங்க இருக்குன்னு தெரிஞ்சா லிங்க் அனுப்புங்க :)]

2) வான் நிலா நிலா அல்ல [இது அநியாயத்துக்கு ஈஸியா இருந்துது :)]

said...

சுதர்சன கோபால ஓமப்பொடியார் ரெண்டாவது பாட்டுக்குச் சரியான வடையைச் சுட்டிருக்கிறார். ஆனால் துவையல் பொடி எதுவுமே உடன் வைக்கவில்லை.

ஆகா...இரண்டு பேர் இரண்டு பாட்டுகளையும் கண்டுபிடித்து விட்டார்கள்.

ஒருவர் சண்மதச் செல்வர் கே.ஆர்.எஸ். மற்றொருவர் சென்னைச் செல்வி காயத்ரி அவர்கள். :) இருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். :) மானத்தக் காப்பாத்தீட்டீங்கள்ள. :)

said...

விடை சொல்லும் நிலையில் இல்லை.

வடையை மட்டும் துவையலோடு அனுப்பி வைக்கவும்:-)

said...

தல வீட்டுக்கு போய் தான் கேட்கனும்!

said...

அடுத்த பதிவுல தமிழ்ப் பாட்டோட குவிஸ் வைங்க... வர்ட்டா :-)