Sunday, May 28, 2006

10. சாப்பாட்டுச் சண்டையும் சாயிபு பிரியாணியும்

ஏற்கனவே நான் சங்கரங்கோயில் பிரியாணி பத்திச் சொல்லியிருந்தேன். அதுனால அதச் சாப்பிடனும்னு குறியா இருந்தேன். மொதல்ல இருந்தே நண்பர்கள் கிட்ட அதப் பத்திச் சொல்லியிருந்தேன்.

ஆனா எங்க குளுவுல சைவமும் அசைவமும் சரி பாதி. அதுல ஒரு அசைவக்காரனும் கோயில் கோயிலாப் போறதால சைவமாயிருந்தான். யார் வர்ராங்களோ வரலையோ நான் போறதா முடிவு கட்டீருந்தேன்.

அதுனால வண்டிய நேரா பிரியாணி ஓட்டலுக்கு ஓட்டச் சொன்னேன். டிரைவர் கோயில்பட்டிக்காரர். அவருக்குக் கடை நல்லாத் தெரிஞ்சிருந்தது. ஆனா எல்லாரும் வண்டிய அங்க விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எல்லாரும் சாப்பிடுற மாதிரி ஓட்டலுக்குப் போகனும்னு சொன்னாங்க.

சங்கரங்கோயில்ல சைவச் சாப்பாடு அவ்வளவு நல்லாயிருக்காது. அரமணி பொறுத்துக்கோங்க. திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கித்தர்ரேன். ஒரு அஞ்சு நிமிசம் கொடுத்தா நான் பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறமா நேரா திருநெல்வேலி போலாம்னு சொன்னேன்.

கேட்டாத்தானே. அதெப்படி. இவ்வளவு பெரிய கோயில் இருக்கு. இங்க சைவச் சாப்பாடு கிடைக்காதான்னு ஒருத்தன் கேட்டான்.

கிடைக்கும். ஆனா அவ்வளவு நல்லாயிருக்காது. திருநெல்வேலிக்குப் போயிரலாம்னு சொன்னா அவனுக்குப் புரியலை.

கோயிலுக்கு வந்துருக்குறப்ப ஏன்டா இதெல்லாம்....நாளைக்கு மொட்டையெல்லாம் போட்டுட்டு அப்புறமா சாப்பிடலாம். இன்னைக்கே இன்னொரு கோயிலுக்குப் போகனும்னு இன்னொருத்தன் சொன்னான்.

"ஒங்கள நான் சாப்பிடச் சொல்லல. அதே வேளைல என்னோட சாப்பாடு வழக்கத்துல யாரும் தலையிடாதீங்க. நான் இங்க நேரமாக்க மாட்டேன். அஞ்சே நிமிசம். பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறம் நேராத் திருநெல்வேலிதான். அங்க நல்ல ஓட்டலுக்கு ஒங்களக் கூட்டீட்டுப் போறேன்"னு சொன்னேன். ஒருத்தனும் கேக்கலை.

இன்னொருத்தன் வேற மாதிரி ஆரம்பிச்சான். "ராகவா! நீனு பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா! (ராகவா நீ வரலைன்னா எங்களுக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம். நாங்க எதுவும் திங்க மாட்டோம்.)"

நானும் விடலை. "சரி. நீவேனு தின பேடா. நானு தின பேக்கு. நீவெல்லா இல்லிரி. நானு ஹோகி பர்த்தினி. (சரி. நீங்க ஒன்னும் திங்க வேண்டாம். நான் திங்கனும். நீங்கள்ளாம் இங்கயே இருங்க. நான் போயிட்டு வர்ரேன்.)"

இதென்னடா வம்பாப் போச்சுன்னு எல்லாரும் முழிக்கிறாங்க. சரீன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அவங்கள அங்கயே ஒரு சைவ ஓட்டல்ல எறக்கி விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் பிரியாணி திங்கப் போறதுன்னு.

ஒரு ரொம்பச் சுமாரான ஓட்டல் (அதுதான் அங்க ரொம்பப் பிரமாதம்) ஒன்னுல அவங்கள விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் போயி பிரியாணிய வெட்டுனோம். திருப்தியா முடிச்சிட்டு வந்தா இங்க ஒவ்வொருத்தனும் பேருக்குத் தின்னு வெச்சிருக்கானுக. ஒன்னும் சரியில்லை போல. எல்லாரும் ஒரு அர மணி நேரம் பொறுத்திருந்தா திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்திருப்பேன். எல்லாம் தலையெழுத்து. சாப்பாடு சரியில்லைன்னு ஒரே புலம்பல். அவங்கள எல்லாரையும் திருநெல்வேலீல மொதல்ல நல்ல எடத்துக்குக் கூட்டீட்டுப் போறேன்னு உறுதி சொன்னேன்.

அப்புறம் நேரா வண்டீல ஏறித் திருநெல்வேலி போனோம். வழியில நெறைய காற்றாலைகள். எக்கச் சக்கமா சுத்திக்கிட்டு இருந்தது. அதையெல்லாம் பாத்துக்கிட்டே திருநெல்வேலி ஜங்சன் வந்து சேந்தோம். நேரா எல்லாரையும் அரசனுக்குக் கூட்டீட்டுப் போயி ஐஸ்கிரீம், மில்க் ஷேக் எல்லாம் வாங்கிக் கொடுத்து சாந்தி பண்ணியாச்சு. நான் நண்பர்களோட பலமுறை போன கடை அரசன். ஐஸ்கிரீம் மில்க் ஷேக் எல்லாம் அங்க கிடைக்கும். நண்பர்களோட வந்த பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கிட்டேன்.

அப்புறம் ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனேன். சும்மா நான் ரெண்டு துண்டு வாங்கலாம்னுதான் நெனச்சு உள்ள போனேன். வந்தவங்களும் சும்மா பாக்கலாம்னுதான் வந்தாங்க. ஆனா......

தொடரும்....

அன்புடன்,
கோ.இராகவன்

25 comments:

said...

//சரி. நீங்க ஒன்னும் திங்க வேண்டாம். நான் திங்கனும். நீங்கள்ளாம் இங்கயே இருங்க. நான் போயிட்டு வரேன்//
இது தாங்க சூப்பர்.. சாப்பாடெல்லாம் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது :)
சரி, நான் கூட ஒரு சமையற்குறிப்புப் பதிவு போட்டிருக்கேன்.. பார்த்தீங்களா?

said...

அதானே, காத்திருந்து காத்திருந்து வந்த வாய்ப்பை நழுவ விடலாமா?

ஆமாம். பிரியாணி நல்லா இருந்துச்சா? என்ன பிரியாணி? கோழியா இல்லே ஆடா?

ச்சும்மாக் கேட்டுக்கத்தான்.

said...

என்ன நெல்லை அல்வாவா ?

said...

//ஒரு அசைவக்காரனும் கோயில் கோயிலாப் போறதால சைவமாயிருந்தான்//

இப்படியும் பலர்.

//கேட்டாத்தானே. அதெப்படி. இவ்வளவு பெரிய கோயில் இருக்கு. இங்க சைவச் சாப்பாடு கிடைக்காதான்னு ஒருத்தன் கேட்டான்.//

அனுபவபடாம கேட்கமாட்டாங்க, அனுபவஸ்தன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோனும், இல்லாட்டி பட்டு தெரிஞ்சிக்கோனும்ன்னு சும்மாவா சொன்னாங்க.

// நீனு பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா!//
இது கன்னடமா?

said...

// பொன்ஸ் said...
//சரி. நீங்க ஒன்னும் திங்க வேண்டாம். நான் திங்கனும். நீங்கள்ளாம் இங்கயே இருங்க. நான் போயிட்டு வரேன்//
இது தாங்க சூப்பர்.. சாப்பாடெல்லாம் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது :) //

அதே அதே பொன்ஸ்......எதுக்கு விட்டுக் குடுக்கனும்...நானும் முடிஞ்ச வரைக்கு ரெண்டு மூனு ஆப்ஷன்ஸ் குடுத்தேனே.

// சரி, நான் கூட ஒரு சமையற்குறிப்புப் பதிவு போட்டிருக்கேன்.. பார்த்தீங்களா? //

இதோ இப்பவே பாக்குறேன்.

said...

// துளசி கோபால் said...
அதானே, காத்திருந்து காத்திருந்து வந்த வாய்ப்பை நழுவ விடலாமா?

ஆமாம். பிரியாணி நல்லா இருந்துச்சா? என்ன பிரியாணி? கோழியா இல்லே ஆடா?

ச்சும்மாக் கேட்டுக்கத்தான். //

அதுல என்ன இருக்கு டீச்சர்....ஆடுதான்...ஆனா கூட கோழி வறுவலும் வாங்கிக்கிட்டோம். :-) பிரியாணியும் நல்லா இருந்துச்சு...வறுவலும் நல்லாயிருந்துச்சு...ஆனா ஒறப்பு கொஞ்சம் கூட....நானு ரொம்ப ஒறப்பெல்லாம் சாப்பிடறதில்லை....சின்ன வயசுல சண்டாளச் சட்டினி சாப்பிடதெல்லாம் உண்மைதான். ஆனா இப்ப முடிஞ்சவரை உப்பும் ஒறப்பும் கொறச்சிருக்கேன்.

said...

அடடா...
சங்கரங்கோயிலு பிரியாணியா? கோழி பிரியாணி நல்லா இருக்கும். ஆனா மட்டன் பிரியாணிதான் சூப்பரோ சூப்பருன்னு சாப்புட்டவுக சப்புக் கொட்டுவாக...
இருட்டுக்கடை அல்வாதானே அடுத்து?

said...

சங்கரன்கோவில் பிரியானி, அரசன் ஐஸ்க்ரீம்னு எல்லாம் சொல்லி என்ன உடனே ஊருக்கு போகதுக்கு தூண்டி விடுதீரு வே நீரு... எவ்வளவு நாள் ஆச்சு இருட்டுக் கடை, சாந்தி ஸ்வீட்ஸ், அரசன் பக்கமெல்லாம் போயி...

said...

// மணியன் said...
என்ன நெல்லை அல்வாவா ? //

அதுவுந்தான்..........

said...

// சிவமுருகன் said...
//ஒரு அசைவக்காரனும் கோயில் கோயிலாப் போறதால சைவமாயிருந்தான்//

இப்படியும் பலர். //

ஆமாம். ஞாயித்துக்கெழம ராத்திரிக்கு கறி வாங்கிக் குடுக்கனும்னு மொதல்லயே கேட்டுக்கிட்டான். மூனு நாளும் பல்லக் கடிச்சிக்கிட்டு சைவமா இருந்ததுக்குத் தூத்துக்குடீல நல்ல கறியும் மீனுமா வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கிட்டான்.

// //கேட்டாத்தானே. அதெப்படி. இவ்வளவு பெரிய கோயில் இருக்கு. இங்க சைவச் சாப்பாடு கிடைக்காதான்னு ஒருத்தன் கேட்டான்.//

அனுபவபடாம கேட்கமாட்டாங்க, அனுபவஸ்தன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோனும், இல்லாட்டி பட்டு தெரிஞ்சிக்கோனும்ன்னு சும்மாவா சொன்னாங்க. //

முடிஞ்ச வரைக்கும் சொன்னேன். அரமணி பொறுத்துக்கோங்க...திருநெல்வேலில வாங்கித்தர்ரேன். எனக்கு இங்க பார்சல் மட்டும் கட்டிக்கிறேன்னு சொன்னேன். கேக்கலையே...........

// // நீனு பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா!//
இது கன்னடமா? //

ஆமா சிவமுருகன்..கன்னடந்தான்.

said...

"ராகவன்!!சங்கரன்கோயில் பால்கோவாவும் ஃபேமஸ்தான்
தெரியுமா??????"

said...

மட்டன் பிரியாணி தெரியும், சிக்கன் பிரியாணி தெரியும்!
அது என்னங்க சாயிபு பிரியாணி, சங்கரன் கோவில் பிரியாணி!

//ஆடுதான்...ஆனா கூட கோழி வறுவலும் வாங்கிக்கிட்டோம். //

பாத்து ராகவன், ஆடு குளிர்ச்சி, கோழி சூடு!
அதுனால கோழிய சூடு ஆறுனதுக்கப்புறமும், ஆட்டை சூடாவும் சாப்டனும்!!
ஒன்னும் பிரச்சின வராது!

:-)))

said...

//அப்புறம் ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனேன். சும்மா நான் ரெண்டு துண்டு வாங்கலாம்னுதான் நெனச்சு உள்ள போனேன். வந்தவங்களும் சும்மா பாக்கலாம்னுதான் வந்தாங்க. ஆனா......//

இருட்டுக்கடை அல்வா தானே, சீக்கிரம் எழுதுங்க. இப்போவே நாக்குல ஊறுது.

said...

// பிரதீப் said...
அடடா...
சங்கரங்கோயிலு பிரியாணியா? கோழி பிரியாணி நல்லா இருக்கும். ஆனா மட்டன் பிரியாணிதான் சூப்பரோ சூப்பருன்னு சாப்புட்டவுக சப்புக் கொட்டுவாக...
இருட்டுக்கடை அல்வாதானே அடுத்து? //

அடுத்த வாட்டி...ஒங்களயும் கூட்டிக்கிட்டுப் போயிர வேண்டியதுதான். பிரியாணி பிரமாதம். பாசுமதி அரிசி போடாம....சீரகச் சம்பாவப் போட்டு செஞ்சிருந்தாங்க...அந்த மணமே...மணம்.

said...

// நெல்லைகிறுக்கன் said...
சங்கரன்கோவில் பிரியானி, அரசன் ஐஸ்க்ரீம்னு எல்லாம் சொல்லி என்ன உடனே ஊருக்கு போகதுக்கு தூண்டி விடுதீரு வே நீரு... எவ்வளவு நாள் ஆச்சு இருட்டுக் கடை, சாந்தி ஸ்வீட்ஸ், அரசன் பக்கமெல்லாம் போயி... //

என்ன செய்ய....ஊர்ப்பக்கம் ஒருதாட்டிப் போயிட்டு வந்துருலமாமுல்ல...இருட்டுக்கடை இன்னமும் இருக்குல்லா....சாந்தி ஸ்வீட்சுல இன்னமுங் கூட்டந்தான் நெரிசல்தான்....

said...

(ராகவா நீ வரலைன்னா எங்களுக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம். நாங்க எதுவும் திங்க மாட்டோம்.)"//

அடடா.. இதுதாங்க நட்பு.. நீங்க என்னடான்னா... பிரியாணியிலயே குறியாயிருந்திருக்கீங்க:)

said...

// Agent 8860336 ஞான்ஸ் said...
மட்டன் பிரியாணி தெரியும், சிக்கன் பிரியாணி தெரியும்!
அது என்னங்க சாயிபு பிரியாணி, சங்கரன் கோவில் பிரியாணி! //

என்ன ஞான்ஸ்....சாயிபு பிரியாணின்னா சாயிபுவ பிரியாணி போடுறதா? மூக்கத் தட்டுனா மூக்குப் பொடி..பல்லத் தட்டுனா பல்பொடியா? சாயிபு போடுற பிரியாணி. சங்கரங்கோயில் ரொம்ப பேமசு.

// //ஆடுதான்...ஆனா கூட கோழி வறுவலும் வாங்கிக்கிட்டோம். //

பாத்து ராகவன், ஆடு குளிர்ச்சி, கோழி சூடு!
அதுனால கோழிய சூடு ஆறுனதுக்கப்புறமும், ஆட்டை சூடாவும் சாப்டனும்!!
ஒன்னும் பிரச்சின வராது!

:-))) //

இப்பிடி வேற இருக்கா.....இது தெரியாமப் போச்சே...நான் ரெண்டையும் வெதுவெதுன்னு சாப்பிட்டு வெச்சேனே........இப்ப ஒன்னும் ஆயிறாதே....

said...

// Raja said...
"ராகவன்!!சங்கரன்கோயில் பால்கோவாவும் ஃபேமஸ்தான்
தெரியுமா??????" //

அப்படியா ராஜா...யாரும் சொல்லலையே....வழக்கமா ஸ்ரீவில்லிபுத்தூரு பால்கோவாதான் சொல்வாங்க...சங்கரங்கோயில்லயும் இருக்கா என்ன?

said...

// KVR said...
//அப்புறம் ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனேன். சும்மா நான் ரெண்டு துண்டு வாங்கலாம்னுதான் நெனச்சு உள்ள போனேன். வந்தவங்களும் சும்மா பாக்கலாம்னுதான் வந்தாங்க. ஆனா......//

இருட்டுக்கடை அல்வா தானே, சீக்கிரம் எழுதுங்க. இப்போவே நாக்குல ஊறுது. //

ஊறனுமே....திருநவேலிக்குப் போனவங்களுக்கும்..திருநவேலீல இருந்தவங்களுக்கும் நல்லாத் தெரிஞ்சிருக்குமே.....அடடா!

said...

///"அப்படியா ராஜா...யாரும் சொல்லலையே....வழக்கமா ஸ்ரீவில்லிபுத்தூரு பால்கோவாதான் சொல்வாங்க...சங்கரங்கோயில்லயும் இருக்கா என்ன?"///

ஆமா ராகவன்!!!நெல்லை என்றாலே
அல்வாவும்,அரிவாவும் மட்டும்தான்
பலர் நினைவிற்கு வருகிறது.ரொட்டி
சால்னா,மஸ்கோத்து அல்வா,
கோவில்பட்டி கடலை மிட்டாய்,
கல்லிடைகுறிச்சி அப்பளம்,கடம்பூர்
போளி,திருச்செந்தூர் சில்லுகருப்பட்டி..
ம்ம்ம்ம்ம்!!!!இன்னும் எவ்வளவோ
இருக்கிறது.

said...

அண்ணா,

எல்லாம் சரி,

நம்ம பாய் கடை பிரியாணியை எப்போ போட போறீங்க. பசியா இருக்கேன் :)

said...

// Raja said...
///"அப்படியா ராஜா...யாரும் சொல்லலையே....வழக்கமா ஸ்ரீவில்லிபுத்தூரு பால்கோவாதான் சொல்வாங்க...சங்கரங்கோயில்லயும் இருக்கா என்ன?"///

ஆமா ராகவன்!!!நெல்லை என்றாலே
அல்வாவும்,அரிவாவும் மட்டும்தான்
பலர் நினைவிற்கு வருகிறது.ரொட்டி
சால்னா,மஸ்கோத்து அல்வா,
கோவில்பட்டி கடலை மிட்டாய்,
கல்லிடைகுறிச்சி அப்பளம்,கடம்பூர்
போளி,திருச்செந்தூர் சில்லுகருப்பட்டி..
ம்ம்ம்ம்ம்!!!!இன்னும் எவ்வளவோ
இருக்கிறது. //

அதுவும் உண்மைதான். அப்படியே இந்தப் பக்கம் வந்தா தூத்துக்குடி மக்ரூனு...அத விட்டுட்டீங்களே ராஜா...தூத்துக்குடியில இன்னொரு ஐட்டம் தேங்காபன். அடடா! அடடடடா!

said...

// பரஞ்சோதி said...
அண்ணா,

எல்லாம் சரி,

நம்ம பாய் கடை பிரியாணியை எப்போ போட போறீங்க. பசியா இருக்கேன் :) //

வாய்யா பரஞ்சோதி....பாய் கட பிரியாணியா வேணும்...ம்ம்ம்...இந்தியாவுக்கு வா...போட்டுறலாம்.

said...

// tbr.joseph said...
(ராகவா நீ வரலைன்னா எங்களுக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம். நாங்க எதுவும் திங்க மாட்டோம்.)"//

அடடா.. இதுதாங்க நட்பு.. நீங்க என்னடான்னா... பிரியாணியிலயே குறியாயிருந்திருக்கீங்க:) //

நட்போ நட்பு....நல்ல நண்பர்கள்தான். ஆனா அதச் சொன்னவன் நான் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் புடி பிடிச்சுட்டுத்தான் நல்லால்லைன்னான். என்னைய மடக்குறதுக்காகச் சொன்னானாம்.

said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன். சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டாங்க.

உள்ளேன் ஐயா.