Monday, May 29, 2006

11. பட்டுச் சேலைக் காத்தாட

திருநெல்வேலி டவுண்ல நடுவுல இருக்கிறது நெல்லையப்பர் கோயில்னா....அதச் சுத்தி இருக்குற வீதிகள்ள ரொம்பப் பிரபலமா இருக்குறது குறிப்பா மூனு கடைகள். அல்வாவுக்குப் பேர் போன இருட்டுக்கடை ஒன்னு. துணிமணிகளுக்குப் பேர் போன போத்தீஸும் ஆரெம்கேவியும். இப்ப இவங்க சென்னைலயும் பெரிய கடைகளைத் தொறந்து பெட்டிய நெரப்புறது எல்லாருக்கும் தெரியும்.

அதுல போத்தீஸ்ல போயி மொட்ட போடுற வேளைக்கு வேணும்னு ரெண்டு துண்டு வாங்க உள்ள போனேன். நெல்லையப்பர் கோயில் நடை நாலு மணிக்குத்தான் தொறக்கும். இருட்டுக்கடையும் அஞ்சு மணிக்கு மேலதான் தொறக்கும். அதுனால நடுவுல் இருக்குற பொழுத ஓட்ட போத்தீஸ்தான் சரியான இடம்னு உள்ள போனோம். ஒருத்தன் வேட்டி வாங்கனுங்கறது நெனவுக்கு வந்தது.

சரீன்னு மொதல்ல அவனுக்கு வேட்டி வாங்க அதுக்கான எடத்துக்குப் போனோம். அவனுக்குத் தமிழ் தெரியாதுங்கறதால அவன் கன்னடத்துல சொல்றதத் தமிழ்ல மாத்திச் சொல்லியும் கடைக்காரர் தமிழ்ல சொல்றத அவனுக்குக் கன்னடத்துல மாத்திச் சொல்லியும் மொழிச்சேவை செஞ்சேன். அப்பத்தான் இன்னொருத்தனுக்கு வேற ஏதாவது பாக்கலாம்னு தோணிச்சு. அவன் ஒரு பக்கமா போனான். இன்னொருத்தன் இந்தப் பக்கம். இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.

மொதல்ல வாங்க வேண்டிய துண்டையும் வேட்டியையும் வாங்கிக்கிட்டோம். அதுக்குள்ள ஒருத்தன் பட்டுச்சேலை பாக்கனும்னு சொன்னான். அவனக் கூட்டீட்டுப் போய் அந்தப் பகுதீல விட்டாச்சு. அவன் அதப் பெரட்டீட்டு இருக்கும் போது இன்னொருத்தன் பிரிண்டேட் சில்க்ஸ் அவனோட அம்மாவுக்கு வாங்கனும்னு விரும்புனான். அந்தப் பகுதிக்கு அவனோட ஓடு. ஒவ்வொன்னா பாக்கும் போது தாமரைச் செவப்புல ஒரு சேலை. பிரிண்டேட் சில்க்தான். நல்லாயிருந்தது. செந்தாமரை பாத்திருப்பீங்களே. ரொம்பப் பளீருன்னும் இருக்காது. ரொம்பக் கம்மலாவும் இருக்காது. அந்த நெறத்துல அழகான கருப்புப் பிரிண்ட் போட்ட சேலை. கொஞ்ச நேரம் அப்படி இப்பிடி யோசிச்சி அம்மாவுக்கு வாங்கீட்டேன். கூட இருந்தவன் அவனோட அம்மாவுக்குப் பொருத்தமா ஒரு பட்டுச்சேலை எடுத்துக்கிட்டான்.

அதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான். அள்ளல் நெறையா இருந்ததும் கொஞ்சம் தள்ளுபடியும் கிடைச்சது. பிக் ஷாப்பர்னு சொல்ற சணல் பைகள ஒவ்வொருத்தரும் தூக்கீட்டு வந்தோம். அட! சொல்ல மறந்துட்டேன். தூத்துகுடீல இருக்குற அத்தைக்கு ஒரு காட்டன் சேலையும் எடுத்துக்கிட்டேன்.

ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்களச் சொல்லிக் குத்தமில்லை.

வெளிய வந்ததும் பைகள வண்டீல வெச்சிட்டுக் கோயிலுக்குப் போனோம். நெல்லையப்பர் கோயில். பழைய கோயில். இன்னொரு தகவல் சொல்றேன். குறிச்சிக்கோங்க. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.

இசைத்தூண்கள். நெல்லையப்பர் சந்நிதி நுழைவில இருக்கு. தட்டிப் பாத்தேன். நல்ல இசை வந்துச்சு. இதையே இசை தெரிஞ்சவங்க தட்டுனா! ம்ம்ம்...அது சரி...தூணைத் தட்டுனவனும் இசை தெரிஞ்சவனாத்தானே இருக்கனும். கல்லுச சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே!

காந்திமதியம்மன், முருகன் எல்லாருக்கும் வணக்கம் போட்டுட்டு வந்தோம். கோயிலுக்குள்ள அன்னைக்கு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி வாக்குல வெளிய வந்தோம். வந்ததும் நேராப் போனது இருட்டுக்கடைக்குதான்.

ஆளுக்கு நூறுகிராம் கைல மொதல்ல வாங்கிக்கிட்டோம். அப்புறம் ஒவ்வொருத்தனும் அரக்கிலோ காக்கிலோன்னு பாக்கெட் பாக்கெட்டா வாங்கிக்கிட்டாங்க. கொண்டு போய் பெங்களூர்ல உள்ளவங்களுக்குக் குடுக்கதான். ரொம்ப நேரம் அங்கயே இருக்காம திருச்செந்தூருக்குக் கெளம்ப முடிவு செஞ்சோம்.

முந்தி எல்லா பஸ்சும் ஜங்சன்ல இருந்துதாம் பொறப்படும். இப்ப இன்னொரு பஸ்டாண்டு இருக்கு. அதுவும் பாளையங்கோட்ட தாண்டி...தள்ளிப் போகனும்...அங்க போய் வண்டிய கோயில்பட்டிக்குத் திருப்பி அனுப்பீட்டு திருச்செந்தூர் பஸ்சப் பிடிச்சோம்.

திருநெல்வேலி எனக்குப் புது ஊர் கிடையாது. தூத்துக்குடீல இருந்துன்னாலும் கோயில்பட்டீல இருந்துன்னாலும் முக்கா மணி நேரந்தான். அதுவுமில்லாம என்னோட நெருங்கிய நண்பனின் ஊரும் திருநெல்வேலி. ரொம்ப நெருங்கிய நண்பந்தான். ஆனா இப்ப நாளாவட்டத்துல தொடர்பு கொறஞ்சு போச்சு. அமெரிக்காவுல இருக்கான். ஆனா பேச்சு வழக்கே இல்லைன்னு சொல்லலாம். எப்பவாச்சும் இந்தியாவுக்கு வந்தா ஃபோன் பண்ணுவான். பெங்களூருக்கு வந்தா சந்திப்போம். அதுவும் ஒரு வாட்டிதான். இன்னைக்கு அவனும் நல்ல நெலமைல இருக்கான். நானும் முருகன் புண்ணியத்துல நல்லாயிருக்கேன். அதுதான் உண்மை.

தொடரும்....

அன்புடன்,
கோ.இராகவன்

56 comments:

said...

என்ன ஜிரா இது? கோயிலுக்கு ஒரு பதிவு, அல்வாவிற்கு ஒரு பதிவுன்னு எங்க நெல்லைக்கு தனி மரியாதை கொடுப்பீங்கன்னு பார்த்தா, இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே.

எதோ முழுமையா இல்லாத மாதிரி ஒரு உணர்வு. ஹூம்.

//மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு.//
சொல்லிட்டீங்க இல்ல. இப்போ பாருங்க. குமரன் வந்து சண்டை போட போறாரு. ஐ! ஜாலி!

said...

நெல்லைய்ப்பர் கோயில் பெரிய கோயிலு தான் ஆனா பராமரிப்பு சரியில்லவே.. தென்காசி கோபுரம் மொட்ட கோபுரமா ஒரு காலத்துல இருந்து இப்போ எப்பிடி ஆயிட்டுது பாத்தீரா.. அந்த அளவு கூட பராமரிப்பு இல்ல நெல்லைய்ப்பர் கோயில்ல. சிவபெருமான் ஆடின சபைகள்ள நம்ம நெல்லைய்ப்பர் கோயில் தாமிர சபையும் ஒன்னு...

அப்புறம் ஜவுளிக் கடைகளப் பத்தி சொல்லிருந்திரூ. மொத மொதல்ல ஆடிக் கழிவுன்னு ஒன்னக் கொண்டு வந்ததே நம்ம ஆளுக தான். மதுரயிலருந்து - திருவணந்தபுரம் வரைக்கும் ஜவுளி போட நம்ம ஊருக்குத் தானவே வருவாக.. மூகூர்த்தப் பட்ட நம்ம ஊருல எடுத்தா ராசின்னு மெட்ராஸ்காரவுகளே நினப்பாக...

said...

என்ன நண்பா..பழைய ஞாபகங்களை கிளறிட்டியே..

நல்ல ஞாபகமூட்டல்..தொடருங்கள்..

said...

ரொம்ப நல்ல போகுது தொடர்.
//
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.
//
அடுததடவை போகனும்ன்னு நினைத்துள்ளேன். எங்க போறதே 3 நாள் நெல்லைக்கு ஒரு தடவை தான் போயிருக்கேன், போகனும், போயிதான் பாப்போமே.

//கல்லுல சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே!//

கட்டாயம் இருப்பாங்க, தில்லி முருகன் கோவில்ல கூட இசை தூண்கள் சிற்பகலா மண்டபத்திலுள்ளது.

said...

// இலவசக்கொத்தனார் said...
என்ன ஜிரா இது? கோயிலுக்கு ஒரு பதிவு, அல்வாவிற்கு ஒரு பதிவுன்னு எங்க நெல்லைக்கு தனி மரியாதை கொடுப்பீங்கன்னு பார்த்தா, இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே.

எதோ முழுமையா இல்லாத மாதிரி ஒரு உணர்வு. ஹூம். //

உண்மைதான் கொத்ஸ். நெறைய எழுதத்தான் இருந்தேன். ஆனா நேரமும் சொல்ல வந்த விஷயமும் தள்ளிப் போகுதேன்னுதான் கொஞ்சம் வேகவேகமா...வேகவேகமா.........

////மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு.//
சொல்லிட்டீங்க இல்ல. இப்போ பாருங்க. குமரன் வந்து சண்டை போட போறாரு. ஐ! ஜாலி! //

அவரு சண்டையப் போட்டா என்ன சட்டையப் போட்டா என்ன? எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் மீனாட்சியம்மன் கோயிலை விட காந்திமதியம்மன் கோயில் பெருசு. அளந்து பாத்து நிரூபிக்கிறவங்க நிரூபிக்கலாம்.

said...

// நெல்லைகிறுக்கன் said...
நெல்லைய்ப்பர் கோயில் பெரிய கோயிலு தான் ஆனா பராமரிப்பு சரியில்லவே..//

அதுவுஞ் சரிதேன். ஆள் அரவமில்லாமக் கெடக்குத் தாமிர சபை. நாந்தான் எட்டிப் பாத்தேன். நேரா கோயிலுக்குப் போறது..கும்புடு போடுறது...திரும்பி வர்ரதுன்னு செஞ்சிருக்கிட்டிருக்கு மக்கள் கூட்டம்.

// தென்காசி கோபுரம் மொட்ட கோபுரமா ஒரு காலத்துல இருந்து இப்போ எப்பிடி ஆயிட்டுது பாத்தீரா.. அந்த அளவு கூட பராமரிப்பு இல்ல நெல்லைய்ப்பர் கோயில்ல. //

உண்மையோ உண்மை...ஆனா அந்தத் தேரோட்டம் இருக்கே...ஆகா...என்னோட வாழ்க்கைல மறக்கவே முடியாது. பக்கத்துலயே நண்பன் வீட்டுல படுத்துத் தூங்கீட்டு விடியக்காலைல எந்திரிச்சி தேரிழுவை பாத்துட்டு....

// சிவபெருமான் ஆடின சபைகள்ள நம்ம நெல்லைய்ப்பர் கோயில் தாமிர சபையும் ஒன்னு...//

ஆமாம்...தாமிர சபையும் முறையான பராமரிப்பில்லாம இருக்கு.

// அப்புறம் ஜவுளிக் கடைகளப் பத்தி சொல்லிருந்திரூ. மொத மொதல்ல ஆடிக் கழிவுன்னு ஒன்னக் கொண்டு வந்ததே நம்ம ஆளுக தான். மதுரயிலருந்து - திருவணந்தபுரம் வரைக்கும் ஜவுளி போட நம்ம ஊருக்குத் தானவே வருவாக.. மூகூர்த்தப் பட்ட நம்ம ஊருல எடுத்தா ராசின்னு மெட்ராஸ்காரவுகளே நினப்பாக... //

அதச் சொல்லுங்க....இப்ப சென்னைல இவுக வந்தப்புறந்தான் ஜவுளி மறுமலர்ச்சியே வந்திருக்கு.

said...

// நிலவு நண்பன் said...
என்ன நண்பா..பழைய ஞாபகங்களை கிளறிட்டியே..

நல்ல ஞாபகமூட்டல்..தொடருங்கள்.. //

வாங்க ரசிகவ். ரொம்ப நாக்களிச்சி நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க. வாங்க. வாங்க.

நீங்க படிச்ச ஊருல்லா...நெனவு வரனும்லா....நீங்களும் ஊரப் பத்திச் சொல்லலாமுல்ல....

said...

//இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.
//

கரூரு!!! :)

அம்மாவுக்கும் அத்தைக்கும் எடுத்த அந்த ரெண்டு சேலைக சரி! மூன்றாவதா 10000 கலர் சேலை ஒன்னு எடுத்தீங்களே! அது யாருக்குன்னு சொல்லவேல்ல!!! :))))

said...

ஜி.ரா. இந்தா போன் டிசம்பர் மாசம் நம்ம பிரண்டு கூட்டத்தோட குத்தாலம் போயிட்டு அப்படியே மேலே தென்மலைப் போயிட்டு பாபநாசம் டேம் எல்லாம் பாத்துட்டு வந்தேன். டவுண்ல்ல ஜங்க்ஷன் பக்கம் அல்வாக் கடை திறக்கக் காத்துக் கிடந்த ஞாபகம் எல்லாம் வந்துருச்சு...என்னமோப் போங்க ஊர் நியாகபம் வந்துருச்சு... அடுத்து தூத்துக்குடி அப்டேட் உண்டுலா?

said...

ராகவன்,
திருநெல்வேலி அல்வான்ற பெயருலே கண்டதையும் தின்னுவச்சிருக்கேனே
தவிர இந்த 'இருட்டுக்கடை அல்வா'வைத் தின்னதில்லையேப்பா.

முந்தி ஒருக்கா அங்கே போனப்பவும் இந்த விவரம்
தெரியாததாலே கோட்டை வுட்டுருக்கேன்(-:

அது ஆச்சு 35 வருசம்.

பட்டுப் புடவை( சரி ப்யூர் ஸில்க்) அருமையா இருக்கு.

பாவம்ப்பா, இந்த ஆரெம்கேவி ஆக்ஸிடெண்டுலே போயிட்டார்(-:

said...

நல்ல பதிவு இராகவன்.

- சட்டையுடன் குமரன் :-)

said...

// இளவஞ்சி said...
//இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.
//

கரூரு!!! :) //

கரூரா........அங்க இப்பிடித்தான் சொல்வாங்களா....ஊருராப் போயி படிச்சதால என்னோட தமிழே ஒரு கதம்பமா இருக்கும். அங்குட்டு இங்குட்டுன்னு கரூர்ப் பக்கமும் சொல்வாங்களோ!

// அம்மாவுக்கும் அத்தைக்கும் எடுத்த அந்த ரெண்டு சேலைக சரி! மூன்றாவதா 10000 கலர் சேலை ஒன்னு எடுத்தீங்களே! அது யாருக்குன்னு சொல்லவேல்ல!!! :)))) //

பத்தாயிரங் கலர் சேலையா? கலருக்கு ஒரு ரூவான்னாலும் வெல எங்கயோ போகுதே....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...நினைக்கைலயே பக்குங்குது.....

said...

// Dev said...
ஜி.ரா. இந்தா போன் டிசம்பர் மாசம் நம்ம பிரண்டு கூட்டத்தோட குத்தாலம் போயிட்டு அப்படியே மேலே தென்மலைப் போயிட்டு பாபநாசம் டேம் எல்லாம் பாத்துட்டு வந்தேன். டவுண்ல்ல ஜங்க்ஷன் பக்கம் அல்வாக் கடை திறக்கக் காத்துக் கிடந்த ஞாபகம் எல்லாம் வந்துருச்சு...என்னமோப் போங்க ஊர் நியாகபம் வந்துருச்சு... அடுத்து தூத்துக்குடி அப்டேட் உண்டுலா? //

குத்தாலமா....இப்பச் சாரல் தொடங்கீருச்சு...நல்லா தண்ணி விழுகுது....

சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாதான....அப்படி லேசே அள்ளி வாயில போட்டா....களுக்குன்னு தொண்டையில வழுக்கிக்கிட்டு போகுமே...அடடா! பல்லில்லாதவங்க கூட பத்துப்படி கேப்பாங்களே!

தூத்துக்குடி பத்தி ரொம்ப சொல்லப் போறதில்ல தேவ். தூத்துக்குடி பத்தி ஒரு தனிப்பதிவே போடனும். ஆனா இந்தப் பயணக் கட்டுரைல இல்ல.

said...

// துளசி கோபால் said...
ராகவன்,
திருநெல்வேலி அல்வான்ற பெயருலே கண்டதையும் தின்னுவச்சிருக்கேனே
தவிர இந்த 'இருட்டுக்கடை அல்வா'வைத் தின்னதில்லையேப்பா.

முந்தி ஒருக்கா அங்கே போனப்பவும் இந்த விவரம்
தெரியாததாலே கோட்டை வுட்டுருக்கேன்(-: //

ஆகா...உண்மையிலேயே கோட்ட விட்டுட்டீங்க டீச்சர். இருட்டுக்கடை இல்லைன்னா சாந்தி ஸ்வீட்ஸ்....நாலு நாளைக்கு முன்னாடி ஊருல இருந்து அப்பாவப் பாக்க வந்தவங்க அரக்கிலோ இருட்டுக்கடை அல்வாவை வாங்கீட்டு வந்திருந்தாங்க...அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்தது போக...மிச்சத்த எல்லாம் வேற வழியே இல்லாம நானே திங்க வேண்டியதாப் போச்சு. :-)

// அது ஆச்சு 35 வருசம். //

ஓ அப்பவா...இருட்டுக்கடை கோயிலுக்கு எதுத்த மாதிரிதான் இருக்கு. அஞ்சரைக்குத்தான் தெறக்கும். ஏழு மணிக்கெல்லாம் மூடிரும். ஏன்னா அல்வா தீந்து போயிருக்கும். திரும்ப அடுத்த நாள்தான்.

// பட்டுப் புடவை( சரி ப்யூர் ஸில்க்) அருமையா இருக்கு. //

ஆமாம் டீச்சர். செந்தாமரை நிறத்துல பிரிண்டேட் சில்க். நல்லாருக்கு.

// பாவம்ப்பா, இந்த ஆரெம்கேவி ஆக்ஸிடெண்டுலே போயிட்டார்(-: //

அடடா! இது எப்போ!

said...

// குமரன் (Kumaran) said...
நல்ல பதிவு இராகவன்.

- சட்டையுடன் குமரன் :-) //

நல்ல பதிவா? இது குமரனோட பின்னூட்டந்தானா? சட்டையோட மட்டும் வரும் போதே சந்தேகந்தான். நீங்க போலி குமரன் தானே?

said...

ராகவன்! நம்ம ஊரு பக்கமே சுத்து சுத்துன்னு சுத்தி நெறைய எழுதறீங்க. நல்லா இருக்கு. ஊருக்கு வந்தவுடன் உம்ம கிட்ட ஊர் சுத்த ஐடியா கேக்கணும்.

ஆமாம்! எல்லோருக்கும் அல்வா கொடுத்தாச்சா? :)

said...

எங்க நெல்லைய பத்தி எவ்வளவு எழுதினாலும் சலிக்காது.அதுவும்
நெல்லையப்பர் கோயில் பிரமாண்டம் காண கண்கோடி வேண்டும்.

ராகவன்!அப்படியே ஜவுளிகடையெல்லாம் தாண்டி இடக்கை பக்கம் திரும்புனா,
(சரியாகசொன்னால் கோயில்பின்வீதி)
சின்னதும்,பெருசுமா வரிசையா நகைகடைங்க தான்.தெரியும்லா!!.

கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளும் பாத்திரக்கடைகள்,ஜவுளி
கடைகள்,காய்கறிகடைகள்,நகைகடைகள் என எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும்.

ஒரு பெரிய கல்யாணத்துக்குவேண்டிய சகல சீர்வரிசைகளும் அரைநாளில், கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வாங்கிவிடலாம்.

said...

10000 கலர் புடைவையொட விலை,25000 ருபா.RmKV உரிமையாளர் விஸ்வநாதன், ஜனவரியில் நெல்லைக்கு வரும் போது,ஒரு விபத்தில் இறந்துவிட்டார் .(குலதெய்வம் கோவிலுக்கு போகும்பொது).மிகவும் நல்லவர்.2 தடவை அவர் கூட பேசி இருக்கேன்.

said...

அதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான்.//

ஐய்யோ பாவம்.. பெண்டாட்டிக்கு எடுத்தது அம்மாவுக்கு புடிச்சிருக்கும்.. தங்கைக்கு எடுத்தது பெண்டாட்டிக்கு புடிச்சிருக்கும்..

என்ன அவஸ்தைப் பட்டாரோ தெரியலையே.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்..


அல்வாவிற்கு ஒரு பதிவுன்னு எங்க நெல்லைக்கு தனி மரியாதை கொடுப்பீங்கன்னு பார்த்தா, இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே. இ.கொ//

அதானே.. நானும் சேலை காத்தாடற தலைப்ப பார்த்துட்டு ஏதோ கலர்ஃபுல்லா சொல்லா போறார்னு பாத்தேன்.. ஹும்..

ராகவன் ஒங்க வயசுக்கேத்தா மாதிரி ஒரு பதிவாச்சும் ஜில்லுன்னு எழுதுங்களேன்.. ப்ளீஸ்..

said...

// Raja said...
எங்க நெல்லைய பத்தி எவ்வளவு எழுதினாலும் சலிக்காது.அதுவும்
நெல்லையப்பர் கோயில் பிரமாண்டம் காண கண்கோடி வேண்டும். //

உண்மைதான். நுழைவாயில்ல இருக்குற சிற்ப நுணுக்கங்கள் எல்லாம் பிரமாதம். ஒழுங்கா பராமரிக்க மாட்டேங்குறாங்கங்குற ஒரே வருத்தம்தான்.

// ராகவன்!அப்படியே ஜவுளிகடையெல்லாம் தாண்டி இடக்கை பக்கம் திரும்புனா,
(சரியாகசொன்னால் கோயில்பின்வீதி)
சின்னதும்,பெருசுமா வரிசையா நகைகடைங்க தான்.தெரியும்லா!!. //

ஆமா ஆமா...அந்த வீதியிலதான் தேர் சுத்துறது. அத வீட்டு மாடிகள்ள இருந்து பாக்குற அழகு இருக்கே...அடடா! திருநவேலீல இருந்தவங்க வேற எந்த ஊரையும் ஊருன்னே ஒத்துக்க மாட்டாங்க.

// கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளும் பாத்திரக்கடைகள்,ஜவுளி
கடைகள்,காய்கறிகடைகள்,நகைகடைகள் என எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும்.

ஒரு பெரிய கல்யாணத்துக்குவேண்டிய சகல சீர்வரிசைகளும் அரைநாளில், கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வாங்கிவிடலாம். //

உண்மைதான் ராஜா. டவுணுக்குள் வந்தாலே எல்லாம் வாங்கி விடலாம் என்பது உண்மைதான். அல்வால இருந்து அருகாமனை வரைக்கும்.

said...

// சிவா said...
ராகவன்! நம்ம ஊரு பக்கமே சுத்து சுத்துன்னு சுத்தி நெறைய எழுதறீங்க. நல்லா இருக்கு. ஊருக்கு வந்தவுடன் உம்ம கிட்ட ஊர் சுத்த ஐடியா கேக்கணும்.

ஆமாம்! எல்லோருக்கும் அல்வா கொடுத்தாச்சா? :) //

எங்க சுத்துறது. மூனே நாளுதான சுத்துனது. அதுலயும் மொதநாளு கோயமுத்தூரு.

அல்வா கொடுக்க வேண்டியவங்களுக்கெல்லாம் கொடுத்தாச்சு சிவா. இப்ப நீங்கதான் எனக்குக் குடுக்குறீங்க. எப்ப எனக்குப் பிடிச்ச பாட்டுகள எப்பப் போடப் போறீங்க?

said...

// MeenaArun said...
10000 கலர் புடைவையொட விலை,25000 ருபா.RmKV உரிமையாளர் விஸ்வநாதன், ஜனவரியில் நெல்லைக்கு வரும் போது,ஒரு விபத்தில் இறந்துவிட்டார் .(குலதெய்வம் கோவிலுக்கு போகும்பொது).மிகவும் நல்லவர்.2 தடவை அவர் கூட பேசி இருக்கேன். //

என்னது 25000க்குச் சேலையா? அடடா! இவ்வளவு வெலைல சேலையா....இத எப்படிக் கட்டுவாங்க....ஏதோ வெல கூடுனத கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி uneasyயா இருக்கும்.

said...

// tbr.joseph said...
அதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான்.//

ஐய்யோ பாவம்.. பெண்டாட்டிக்கு எடுத்தது அம்மாவுக்கு புடிச்சிருக்கும்.. தங்கைக்கு எடுத்தது பெண்டாட்டிக்கு புடிச்சிருக்கும்..

என்ன அவஸ்தைப் பட்டாரோ தெரியலையே.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.. //

கரெக்ட்டா பாயிண்ட பிடிச்சீங்க சார். அம்மா, தங்கை, மனைவி மூனு பேரும் ஒத்துப் போயிட்டாங்க. பிரச்சனையிருக்கல. ஆனா அவனோட சிக்கம்மாதான் (சித்தி) கோவிச்சிக்கிட்டாங்களாம். இவ்வளவு நல்ல சேலையா வாங்கீட்டு வந்திருக்கியே. எனக்கும் ஒன்னு வாங்கீட்டு வரக்கூடாதான்னு....ரொம்ப பாசமா இருக்குற சிக்கம்மாவாம். இவனே மறந்து போயிட்டோமேன்னு வருத்தப்பட்டான். அப்புறமா அவன் போத்தீசுக்குப் போன் போட்டு என்னவோ கேட்டுக்கிட்டிருந்தான்.

// அல்வாவிற்கு ஒரு பதிவுன்னு எங்க நெல்லைக்கு தனி மரியாதை கொடுப்பீங்கன்னு பார்த்தா, இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே. இ.கொ//

அதானே.. நானும் சேலை காத்தாடற தலைப்ப பார்த்துட்டு ஏதோ கலர்ஃபுல்லா சொல்லா போறார்னு பாத்தேன்.. ஹும்..

ராகவன் ஒங்க வயசுக்கேத்தா மாதிரி ஒரு பதிவாச்சும் ஜில்லுன்னு எழுதுங்களேன்.. ப்ளீஸ்.. //

கிழிஞ்சது போங்க....ஜில்லுன்னு என் வயசுக்குத் தக்க எழுதனுமா? ம்ம்ம்ம்ம்...முயற்சி செய்றேன். இந்தப் பயணக் கட்டுரை முடியட்டும். இன்னும் மூனே மூனு பாகந்தான் இருக்கு.

said...

//உண்மைதான் ராஜா. டவுணுக்குள் வந்தாலே எல்லாம் வாங்கி விடலாம் என்பது உண்மைதான். அல்வால இருந்து அருகாமனை வரைக்கும்.//

நன்றி ராகவன்!இப்போ பஸ்லலாம்
'டவுண்'-நெல்லை மாநகரம்னும்,
'ஜங்ஷன்'-நெல்லை சந்திப்புன்னும்
தமிழ்படுத்தி போர்டு போட்டாச்சு
தெரியுமா!!இருந்தாலும் தொட்டில்
பழக்கம்கிறதுனால,நம்மநாக்கு டவுண்
ஜங்ஷன்னுதான் சொல்லுது!!!!!!.

said...

theme sareesன்னு சொல்லபடும் புடவைகள்,50000,60000 ஆகும்.அத்தனையும் அசல் வெள்ளி ஜரிகை,தங்க முலாம் பூசியது.வாங்கற்துக்கும் ஆளுங்க இருக்காங்க.ஒரு தபா ,மெட்ராஸ் RmKV போய் பாருங்க.நாம் எந்த உலகத்தில இருக்கிர்ரோம்னெ தெரியாது.

said...

//ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். //

மொத்தமா எவ்வளவு நேரம் ஆச்சு??

போத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் நெல்லையிலிருந்து வந்ததா? நான் கோவைன்னு நினைச்சேன்

said...

என்னங்க இராகவன். சட்டையோட வந்தா (சட்டையோட 'மட்டும்' வரலை; எல்லா உடையும் போட்டுக்கிட்டுத் தான் வந்தேன்) உள்ளே விடமாட்டீங்களோ? ஏன் தான் இப்படி சண்டைக்கு அலையறீங்களோ?

ஹூம்... தெரியாத் தனமா ஒரே ஒரு தடவை (சரி. ரெண்டு தடவை) சண்டை போட்டுட்டேன். என்னை சண்டைக்காரன்னே முடிவு பண்ணிட்டீங்களா? :-( போங்கப்பு வேலையப் பாத்துக்கிட்டு... வந்துட்டாய்ங்க...

said...

அங்கிட்டு இங்கிட்டு எல்லாம் எங்க ஊருல பேசறது. ஒழப்புறது தான் கரூர்ன்னு நெனைக்கேன்.

said...

// Raja said...
//உண்மைதான் ராஜா. டவுணுக்குள் வந்தாலே எல்லாம் வாங்கி விடலாம் என்பது உண்மைதான். அல்வால இருந்து அருகாமனை வரைக்கும்.//

நன்றி ராகவன்!இப்போ பஸ்லலாம்
'டவுண்'-நெல்லை மாநகரம்னும்,
'ஜங்ஷன்'-நெல்லை சந்திப்புன்னும்
தமிழ்படுத்தி போர்டு போட்டாச்சு
தெரியுமா!!இருந்தாலும் தொட்டில்
பழக்கம்கிறதுனால,நம்மநாக்கு டவுண்
ஜங்ஷன்னுதான் சொல்லுது!!!!!!. //

ஓ டவுணையும் ஜங்சனையும் தமிழ்ப்படுத்தீட்டாங்களா....இத நாங் கவனிக்கலையே.....

said...

// MeenaArun said...
theme sareesன்னு சொல்லபடும் புடவைகள்,50000,60000 ஆகும்.அத்தனையும் அசல் வெள்ளி ஜரிகை,தங்க முலாம் பூசியது.வாங்கற்துக்கும் ஆளுங்க இருக்காங்க.ஒரு தபா ,மெட்ராஸ் RmKV போய் பாருங்க.நாம் எந்த உலகத்தில இருக்கிர்ரோம்னெ தெரியாது. //

அடேங்கப்பா....சேலையில இத்தன சாமாச்சாரம் இருக்கா...

ஐயா ஆம்பிளைகளே...என்னைக்காவது உங்களுக்கு ஆயிரத்துக்கு மேல துணி எடுத்திருக்கீங்களா? அதுலயும் பெரும்பாலும் சேல்ஸ்ல போய் ஒன்னு எடுத்தா ஒன்னு ஃபிரீன்னு வாங்குறது. நமக்கும் இப்பிடிச் செலவு வைக்க டிரெஸ் வரமாட்டேங்குதேப்பா...வந்தாலும் வாங்க நெனைக்கைல கண்ணக் கட்டுது. கோட்டு சூட்டெல்லாம் வெல கூடத்தான. அதையும் வாங்குறவக இருக்கத்தான செய்றாக.

said...

அது யாருங்க, கரூர் கரூர்னு நான் 'அவதரித்த' ஊரைப் போட்டு ஒளப்பிக்கிட்டு இருக்கறது?

ராகவன்,
மீனா சொன்னதுபோல வெள்ளி சரிகையிலே தங்க முலாம் போட்ட சேலைகள் சொந்தத் தறியிலே நமக்குத் தெரிஞ்சவர் நெய்யறார். எல்லாம் டிஸைனர் புடவைகள்.

வேணுமுன்னா சொல்லுங்க. அட்ரெஸ் தாரேன். அருமையா இருக்கு. விலைதான் கொஞ்சம் கூட.
ஆனா, அதுக்குப் பார்த்தா முடியுமா?

நானும் நாலே நாலுதான் வச்சிருக்கேன்(-:

said...

ஏன் சொல்ல மாட்டீங்க,அதே RmKvல,உங்களுக்கு கோட் சூட் ,35000,45000ன்னு இருக்கு,உங்க் கல்யாணதுக்கு,எடுத்துடுங்க.அப்ப்ற்ம் பேச மாட்டீங்க.

said...

நீங்க சொல்லுத 50000, 60000 பட்டுச் சேலையெல்லாம் நம்ம ஊருல சும்மா உடுமாத்துக்கு வாங்க மாட்டாவ, ஏதாவது கல்யாணங் காச்சினாத்தான் வாங்குவாவ. அம்புட்டு வெல குடுத்து வாங்குதது பெருசில்ல அதப் பத்திரமா பராமரிக்கிறது தான் முக்கியம்.

அப்புறம் திருநெவேலில இந்த பேரு மாத்தம் போன தி.மு.க ஆட்சி அப்ப அமைச்சரா இருந்த திரு. தமிழ்குடிமகன் பண்ணினது. சங்சனுக்கு நெல்லை சந்திப்பு, டவுனுக்கு நெல்லை நகரம், ஹைகிரவுண்டுக்கு பாளை மேட்டுத்திடல், NGO colonyக்கு அரசு அலுவலர் குடியிருப்புன்னு மாத்தி 6 வருசம் இருக்குமுன்னு நெனக்கேன்.

Rmkv விஸ்வநாத பிள்ளை அவர்கள் இறந்தது ஒரு பெரிய அதிர்ச்சி. அவரு இறந்தப்போ ரெண்டு நாளு மொத்த திருநெல்வேலியும் துக்கத்துல இருந்துது. வருசா வருசம், தை மாசம், நெல்லையப்பர் கோயில்ல Rmkv குடும்பத்துக்கு ஒரு நாள் கட்டளை இருக்கு. அதுக்கு வரும்போது தான் கோயில்பட்டி கிட்ட இந்த விபத்து நடந்து போச்சு

கிட்டத்தட்ட 80 வருசமா திருநெவேலி மக்களோட குடும்பத்துல ஒரு அங்கமா Rmkv இருந்துகிட்டு இருக்குங்கறத யாராலயும் மறுக்க முடியாது. விஸ்வநாத பிள்ளைய மாதிரி ஒரு நல்ல மனுசன பாக்குதது இந்த காலத்துல அபூர்வம். அவரப் பத்தி, அவரு பண்ணியிருக்கிற நல்ல காரியங்கள பத்தி கூடிய சீக்கிரம் நெல்லைக் கிறுக்கன்ல ஒரு பதிவு போடுவேன்.

தேரோட்டம்னா அது திருநெல்வேலித் தேரோட்டந்தான்யா. முன்னால எல்லாம் தேரு இழுக்க ஆரம்பிச்சா நிலைக்கு வந்து சேர 2, 3 நாள் ஆகும். இப்போ ஒரே நாள்ல நிலைக்கு வந்துருது. வேற ஏதோ ஒரு ஊருக்கு (மதுரயா, சிதம்பரமான்னு தெரியல) தெரு அழகு, திருநெல்வேலித் தேர் அழகுன்னு ஒரு பழமொழி கூட உண்டு.

said...

// துளசி கோபால் said...
அது யாருங்க, கரூர் கரூர்னு நான் 'அவதரித்த' ஊரைப் போட்டு ஒளப்பிக்கிட்டு இருக்கறது? //

அது நானு, இளவஞ்சி, குமரன்...ஆகிய மூனு பேருங்கோவ்.

// ராகவன்,
மீனா சொன்னதுபோல வெள்ளி சரிகையிலே தங்க முலாம் போட்ட சேலைகள் சொந்தத் தறியிலே நமக்குத் தெரிஞ்சவர் நெய்யறார். எல்லாம் டிஸைனர் புடவைகள்.

வேணுமுன்னா சொல்லுங்க. அட்ரெஸ் தாரேன். அருமையா இருக்கு. விலைதான் கொஞ்சம் கூட.
ஆனா, அதுக்குப் பார்த்தா முடியுமா? //

ஆகா..டீச்சர்...எனக்கு இப்பவே மயக்கம் வர்ராப்புல இருக்கே. இத நம்ம அம்மாவோ ஒடன்பிறப்புகளோ படிக்கக் கூடாதே.......

// நானும் நாலே நாலுதான் வச்சிருக்கேன்(-: //

நாலா!!!!!!!!!!!!!! O<-<

said...

// MeenaArun said...
ஏன் சொல்ல மாட்டீங்க,அதே RmKvல,உங்களுக்கு கோட் சூட் ,35000,45000ன்னு இருக்கு,உங்க் கல்யாணதுக்கு,எடுத்துடுங்க.அப்ப்ற்ம் பேச மாட்டீங்க. //

இவ்வளவு வெலைக்கா? நீங்க வேற...நான் துணிமணின்னா ஆஃபரு போடுறப்போ ஒன்னுக்கு ஒன்னு எலவசத்துல எடுக்குற ஆளு....

said...

// நெல்லைகிறுக்கன் said...
நீங்க சொல்லுத 50000, 60000 பட்டுச் சேலையெல்லாம் நம்ம ஊருல சும்மா உடுமாத்துக்கு வாங்க மாட்டாவ, ஏதாவது கல்யாணங் காச்சினாத்தான் வாங்குவாவ. அம்புட்டு வெல குடுத்து வாங்குதது பெருசில்ல அதப் பத்திரமா பராமரிக்கிறது தான் முக்கியம். //

இன்னைக்குக் காலைல அப்பாவும் அம்மாவும் பேசும் போது உடுமாத்துன்னு ரெண்டு மூனு வாட்டி சொன்னாங்க. இங்க நீங்களும் சொல்றீங்க. இந்த சொற்கள் இன்னமும் இருக்குறது சந்தோஷமா இருக்கு.

// அப்புறம் திருநெவேலில இந்த பேரு மாத்தம் போன தி.மு.க ஆட்சி அப்ப அமைச்சரா இருந்த திரு. தமிழ்குடிமகன் பண்ணினது. சங்சனுக்கு நெல்லை சந்திப்பு, டவுனுக்கு நெல்லை நகரம், ஹைகிரவுண்டுக்கு பாளை மேட்டுத்திடல், NGO colonyக்கு அரசு அலுவலர் குடியிருப்புன்னு மாத்தி 6 வருசம் இருக்குமுன்னு நெனக்கேன். //

அடடே! அப்படியா. இது தெரியாத விஷயம்.

// Rmkv விஸ்வநாத பிள்ளை அவர்கள் இறந்தது ஒரு பெரிய அதிர்ச்சி. அவரு இறந்தப்போ ரெண்டு நாளு மொத்த திருநெல்வேலியும் துக்கத்துல இருந்துது. வருசா வருசம், தை மாசம், நெல்லையப்பர் கோயில்ல Rmkv குடும்பத்துக்கு ஒரு நாள் கட்டளை இருக்கு. அதுக்கு வரும்போது தான் கோயில்பட்டி கிட்ட இந்த விபத்து நடந்து போச்சு

கிட்டத்தட்ட 80 வருசமா திருநெவேலி மக்களோட குடும்பத்துல ஒரு அங்கமா Rmkv இருந்துகிட்டு இருக்குங்கறத யாராலயும் மறுக்க முடியாது. விஸ்வநாத பிள்ளைய மாதிரி ஒரு நல்ல மனுசன பாக்குதது இந்த காலத்துல அபூர்வம். அவரப் பத்தி, அவரு பண்ணியிருக்கிற நல்ல காரியங்கள பத்தி கூடிய சீக்கிரம் நெல்லைக் கிறுக்கன்ல ஒரு பதிவு போடுவேன். //

போடுங்க. போடுங்க. காத்திருக்கோம்.

// தேரோட்டம்னா அது திருநெல்வேலித் தேரோட்டந்தான்யா. முன்னால எல்லாம் தேரு இழுக்க ஆரம்பிச்சா நிலைக்கு வந்து சேர 2, 3 நாள் ஆகும். இப்போ ஒரே நாள்ல நிலைக்கு வந்துருது. வேற ஏதோ ஒரு ஊருக்கு (மதுரயா, சிதம்பரமான்னு தெரியல) தெரு அழகு, திருநெல்வேலித் தேர் அழகுன்னு ஒரு பழமொழி கூட உண்டு. //

மதுரதாங்க அது. திருநவேலித்தேர்...இன்னமும் கண் முன்ன இருக்குய்யா....மறக்கத்தான் நினைக்கிறேன்...மறக்க முடியவில்லை....

said...

அண்ணே, திருநெல்வேலிய சொல்லி என்னோட காலேஜ் ஞாபகத்த கிளறிட்டீங்க....

அப்பல்லாம் ரெண்டாம் ஆட்டம் சினிமா முடிஞ்சதும் பிரண்ட்சோட பேசிட்டே, சென்ட்ரல்லேந்து பாளை ஜெயில தாண்டி engg. காலேஜுக்கு நடந்து போகுற சுகம் எங்கும் வராது...

திருநெல்வேலி... திருநெல்வேலிதான்யா!

said...

நான் கேட்டிருந்த 'அறிவுப் பூர்வமான' ரெண்டு கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தாலோ என்னவோ, அவற்றைத் தாண்டி வந்து கரூரையும் கோட்டு சூட்டையும் பத்தி பேசும் ராகவனுக்கு என் கண்டனங்கள்!!!

வ.வா. சங்கம் மொத்தமும் (துபாய் ராஜா நீங்கலாக) அவர் மீது கோபமாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொல்.. கொள்கிறேன் !!

said...

நான் கேட்டிருந்த 'அறிவுப் பூர்வமான' ரெண்டு கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தாலோ என்னவோ, அவற்றைத் தாண்டி வந்து கரூரையும் கோட்டு சூட்டையும் பத்தி பேசும் ராகவனுக்கு என் கண்டனங்கள்!!!

வ.வா. சங்கம் மொத்தமும் (துபாய் ராஜா நீங்கலாக) அவர் மீது கோபமாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொல்.. கொள்கிறேன் !!

இருந்தாலும் நீங்க கேட்ட ஒரு "பொது அறிவு"க் கேள்விக்கு எனக்குப் பதில் தெரிஞ்சதால:

"ஐயா ஆம்பிளைகளே... என்னைக்காவது உங்களுக்கு ஆயிரத்துக்கு மேல துணி எடுத்திருக்கீங்களா?"

ஜி.ரா, உங்களுக்கும் தெரிஞ்ச என்னோட நண்பர், 1500 ரூபாய்க்கு ஜீன்ஸ் எல்லாம் எடுப்பாரு.. பொதுவா ரெடிமேட்ல நல்ல பான்ட் எடுத்தாலே 1000 கிட்ட வந்திராது?

said...

//எப்ப எனக்குப் பிடிச்ச பாட்டுகள எப்பப் போடப் போறீங்க// முருகன் பாட்டுக்களை கேக்கறீங்களா..நானும் இன்னைக்கு தான் யோசித்தேன்..இப்படி ஒரு பேச்சு சொன்னோமே என்று :-)). யோசிச்சி சீக்கிரம் கொடுத்தறேன்..அல்வா இல்ல..பாடல் தான் :-))

said...

// பொன்ஸ் said...
//ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். //

மொத்தமா எவ்வளவு நேரம் ஆச்சு??

போத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் நெல்லையிலிருந்து வந்ததா? நான் கோவைன்னு நினைச்சேன் //

ஆத்தா பொன்னரசி...கோவிச்சுக்கிறாதம்மா. இதோ கேள்விகளுக்கான விடைகள்.

1. கிட்டத்தட்ட ரெண்டேகால் மணி நேரம் ஆச்சு. இந்த ரெண்டே கால் மணி நேரத்துல ஆறு பேரு சேந்து ஆறு சேலைகள் (ஒன்னு காட்டன்), ஒரு வேட்டி, ரெண்டு துண்டுகள், ஒரு குர்த்தா மெட்டீரியல் எடுத்தோம்.

1. ஆரெம்கேவி, போத்தீஸ் எல்லாம் திருநெல்வேலில இருந்து வந்தது. கோவை அல்ல. கோவைலயும் திருச்சீலயும் சாரதாஸ்தான் பாப்புலர்னு நினைக்கிறேன். திருச்சி தைலா சில்க்ஸையும் சொல்லனும். மதுரைல என்ன? மறந்து போச்சே. சின்ன வயசுல பாத்திருக்கேன். மறந்து போச்சு.

said...

// ஜி.ரா, உங்களுக்கும் தெரிஞ்ச என்னோட நண்பர், 1500 ரூபாய்க்கு ஜீன்ஸ் எல்லாம் எடுப்பாரு.. பொதுவா ரெடிமேட்ல நல்ல பான்ட் எடுத்தாலே 1000 கிட்ட வந்திராது? //

உண்மைதான் பொன்ஸ். அதுக்குதான சென்னைக்கு வந்து துணி எடுக்குறது. அதுவும் பேண்டலூன் சேல்ஸ் போட்டிருக்குறப்ப. ஒன்னு எடுத்தா ஒன்னோ. ரெண்டு எடுத்தா மூனோ இலவசமாக் கிடைக்கும். :-)

said...

// சிவா said...
//எப்ப எனக்குப் பிடிச்ச பாட்டுகள எப்பப் போடப் போறீங்க// முருகன் பாட்டுக்களை கேக்கறீங்களா..நானும் இன்னைக்கு தான் யோசித்தேன்..இப்படி ஒரு பேச்சு சொன்னோமே என்று :-)). யோசிச்சி சீக்கிரம் கொடுத்தறேன்..அல்வா இல்ல..பாடல் தான் :-)) //

சரி. காத்திருக்கிறேன் சிவா. அல்வாவுக்கு இல்ல. பாட்டுக்கு.

said...

//இவ்வளவு வெலைக்கா? நீங்க வேற...நான் துணிமணின்னா ஆஃபரு போடுறப்போ ஒன்னுக்கு ஒன்னு எலவசத்துல எடுக்குற ஆளு....//


ஆஹா,இதே வசனத்தை நானும் எத்தனை தபா கேட்டிருக்கேன்,அந்த நேரத்தில,என்ன இது gentsக்கு செல்க்ஷ்னே இல்லை.ஒண்னே ஒண்ணு எடுக்கறது நல்லதா எடுக்கனும்னு என்னா காஸ்ட்லிய எடுப்பிங்க தெரியுமா?
இது என்னுடய அனுபவதில சொல்றேன்.

said...

துணி எடுக்க சென்னைய விட மாரத்தஹள்ளியல ஃபாக்ட்ரி அவுட்லெட் ரொம்ப விலை கம்மி.என் தம்பி அங்க தான் வாங்குவான்.துணி மட்டும் இல்லை,shoes,bags எல்லாமே அங்கதான்.யாராவது துணி எடுக்க சென்னை வருவாங்களா.சுதர்சன் சார் சொன்னாப்பல் ஏதோ மேட்டர் இருக்குது.என்ன துளசிம்மா ,நா சொல்லற்து சரிதானே

said...

நானும் இதைத்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் மீனா.

said...

// MeenaArun said...
துணி எடுக்க சென்னைய விட மாரத்தஹள்ளியல ஃபாக்ட்ரி அவுட்லெட் ரொம்ப விலை கம்மி.என் தம்பி அங்க தான் வாங்குவான்.துணி மட்டும் இல்லை,shoes,bags எல்லாமே அங்கதான்.யாராவது துணி எடுக்க சென்னை வருவாங்களா.சுதர்சன் சார் சொன்னாப்பல் ஏதோ மேட்டர் இருக்குது.என்ன துளசிம்மா ,நா சொல்லற்து சரிதானே //

மீனா, மார்த்தள்ளி என்னோட வீட்டுல இருந்து நாலஞ்சு கிலோ மீட்டர்தான். நேர் ரோடு வேற. அங்கயும் துணி நெறைய எடுத்திருக்கிறேன். இல்லைன்னு சொல்லல. ஷுவெல்லாம் நான் அங்க வாங்க மாட்டேன். பேகும் கூட. அதுக்கெல்லாம் இன்னும் நல்ல கடைக இருக்கு.

நானும் மொதல்ல மார்த்தள்ளீல எல்லாம் வாங்கீட்டு இருந்தவந்தான். ஆனால் சென்னை அடையார்லயும் டி.நகர்லயும் பேண்டலூர் அவுட்லெட்ஸ் பத்திக் கேள்விப்பட்ட பிறகு அங்கதான் முடிஞ்ச வரைக்கும் எடுக்குறது. நல்ல வெலைல நல்ல துணிக கெடைக்குது. சென்னை மக்களே...எந்திருச்சி வந்து சென்னை மானத்தக் காப்பாந்துங்கப்பா.

அதே மாதிரி நேவிகேட்டர்னு ஒரு கடை.மொதல்ல ஸ்பென்சர்ஸ்ல மட்டும் இருந்தது. நல்ல சட்டைகள் குறைஞ்ச விலைக்குக் கிடைக்கும். அவங்க பிராண்டேடு கம்பெனிகளுக்கு துணி தச்சித் தர்ரவங்க. surplus துணிகள்ள நேவிகேட்டர்னு இவங்க பேரப் போட்டு குறைஞ்ச விலைக்கு வித்துக்கிட்டு இருந்தாங்க. அதுவே பாப்புலர் ஆகி, அவங்களே இப்ப ஒரு பிராண்டு ஆகி, சென்னையில சில கிளைகளும் பெங்களூருல சில கிளைகளும் தொறந்துட்டாங்க. இதையெல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.

said...

ஐயோ நானும் சென்னைதாங்க.எனக்கு பாண்டி பஜார்ல ஷாப்பிங் பண்ணாதான் த்ருப்தி.நீங்க ஷாப்பிங்காக் சென்னை வரிங்களா இலலை வேறே எதுக்காகவோ வரிங்களா !!ன்னுதான் அப்பட் கேட்டேன்.சென்னையில பேண்டலூம் அவுட்லெட்ஸ் தவிர இன்னும் நல்ல கடைங்கள்ளாம் இருக்கு.அட்ரஸ் வேணும்ணா தரேன்.சீப் & பெஸ்டா இருக்கும்

said...

ராகவன், இது பொன்சு கேட்டதற்காக,

1.//"போத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் நெல்லையிலிருந்து வந்ததா? நான் கோவைன்னு நினைச்சேன்."//

பொன்சு!,'நெல்லைகிறுக்கன்' கூறியது
போல் கடந்த ஒரு நூற்றாண்டாக தென்மாவட்ட மக்களது வாழ்வில்
'போத்தீஸ்','ஆரெம்கெவி' இரண்டும் கலந்துவிட்டன.

பெயர்காரணம்:
"ஆரெம்கெவி"-நிறுவனர்'விஸ்வநாத பிள்ளை'பெயரால் அழைக்கப்ப்டுகிறது.(நிறுவனர்-இப்போது இறந்தவரின்
'தாத்தா').
"போத்தீஸ்"-குடும்பத்தில் வயதான பெரியவர்களை 'போத்தி' என நெல்லையில் அழைப்போம்.அதையே பெயராக "போத்தீஸ்" என வைத்துவிட்டார்கள்.

நெல்லையில்'போத்தீஸ்''ஆரெம்கெவி' இரண்டும் சென்னையைப்போல் ஒரே கடையாக இல்லை.ஒரே வீதியில் குழந்தைகள் பிரிவு,ஆடவர் பிரிவு,பட்டுச்சேலை பிரிவு,சுரிதார் பிரிவு என தனித்தனி கடைகளாக இருக்கின்றன.எனவே கூட்ட நெருக்கடி இல்லாமல் பொறுமையாக தேர்வு செய்யலாம்.

இருவருமே சொந்த நிறுவனங்கள் மூலம் 'ரெடிமேடு' ஆடைகளை தயாரிக்கிறார்கள்.

2.//"வ.வா. சங்கம் மொத்தமும் (துபாய் ராஜா நீங்கலாக) அவர் மீது கோபமாக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொல்..கொள்கிறேன்."//

நெல்லைக்காரன் என்பதால்தானே என்னை அடைப்புக்குறிக்குள் இட்டீர்கள் பொன்சு!!!.

அன்புடன்,
துபாய்(ராஜா).

said...

//நெல்லைக்காரன் என்பதால்தானே என்னை அடைப்புக்குறிக்குள் இட்டீர்கள் பொன்சு!!!.
//
அதே அதே.. நீங்க தான் நெல்லைன்ன உடனேயே விழுந்துட்டீங்களே..என்னத்த சொல்றது!!!

said...

நெல்லை பதிவுக்கு நாந்தான் 50ஆவது பின்னூட்டமா. போட்டுடறேன்.

வாழ்த்துக்கள் ஜிரா.

said...

// MeenaArun said...
ஐயோ நானும் சென்னைதாங்க.எனக்கு பாண்டி பஜார்ல ஷாப்பிங் பண்ணாதான் த்ருப்தி.நீங்க ஷாப்பிங்காக் சென்னை வரிங்களா இலலை வேறே எதுக்காகவோ வரிங்களா !!ன்னுதான் அப்பட் கேட்டேன்.சென்னையில பேண்டலூம் அவுட்லெட்ஸ் தவிர இன்னும் நல்ல கடைங்கள்ளாம் இருக்கு.அட்ரஸ் வேணும்ணா தரேன்.சீப் & பெஸ்டா இருக்கும் //

குடுங்க குடுங்க...காத்திருக்கேன்.

said...

// இலவசக்கொத்தனார் said...
நெல்லை பதிவுக்கு நாந்தான் 50ஆவது பின்னூட்டமா. போட்டுடறேன்.

வாழ்த்துக்கள் ஜிரா. //

அது உம்ம ஊர்ப் பதிவுக்கு உமக்குச் சிறப்பு செஞ்சிருக்கோம். அதான். :-) திருநவேலியப் பத்தி நெறைய எழுத வேண்டியதுதான.

said...

//நெல்லைக்காரன் என்பதால்தானே என்னை அடைப்புக்குறிக்குள் இட்டீர்கள் பொன்சு!!!.//

//"அதே அதே.. நீங்க தான் நெல்லைன்ன உடனேயே விழுந்துட்டீங்களே..என்னத்த சொல்றது!!!"//

ஆத்தா பொன்சு!என்னம்மா பண்றது!!!
ஊர்ப்'பாசம்''வழுக்கி'விட்டுட்டுமா!!!!

ஆமா!!கொத்தனாரே!!உங்களுக்கு
நெல்லையில எங்க?கல்லிடையா???.
அம்பையா????.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

said...

அருமையான பதிவு.இது எங்க அப்பா ஊராக்கும்.

said...

கோடம்பாக்கம்.லிபர்டி ஹோட்டல் பக்கத்தில தேவி கார்மெண்ட்ஸ்ன்னு ஒரு கடை உண்டு.அங்க ஜீன்ஸ்,டிராக் பேண்ட்,வீட்டுக்கு ,டிராவல்க்கு போட்ற டைப் சட்டைங்க(அதை எங்க வீட்டில ஆபிஸ்க்கே போடுவாரு)நல்ல விலையில கிடைக்கும்.இஸ்பானி செண்ட்ர்ல டைடானிக்னு ஒரு கடை.நீங்க சொன்ன நேவிகேட்டர் டைப்.அம்மாவுக்கோ,இல்லை மத்தவ்ங்க்ளுக்கோ,பாரிஸ் (கார்னர்)ல்ல,மிண்ட் ஸ்ரிட்ல உள்ள வர்தமான் காம்ளெக்ஸ் உள்ள எந்த கடையிலையும் 500-600 ரூபாய் புடவை,150-250க்குள்ள கிடைக்கும்.சூரிதார் வகைகளும் அப்படியே.டெர்பில சேல் போடும்போது ந்ல்லா பாத்து வாங்க்லாம்