Monday, May 08, 2006

7. கதிரேசன் கோயில்

கோயில்பட்டீல எங்க சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு ஃபோன் போட்டு ஒரு நல்ல லாட்ஜுல ரூம் போடச் சொன்னோம். காலைல எறங்கிக் குளிச்சிட்டு எட்டு மணிக்கு மேல கோயில்பட்டிக் கதிரேசன் கோயில், அப்புறம் கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலிய முடிக்கிறதாத் திட்டம். அதுக்கு ஒரு வண்டியும் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தேன்.

எல்லாம் குளிச்சிக் கெளம்புற வேளைல அவங்க வீட்டுல காலைல டிஃபனுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதுக்கு முந்துன ராத்திரிதான் நாங்க கோயமுத்தூர்ல தாக்கப்பட்டிருந்தோம். அதோட தொடர்ச்சி கோயில்பட்டியிலயும் தொடந்துச்சு. தகதகன்னு மஞ்சமஞ்சேர்னு கேசரி. ஒரே அளவா இட்டிலிகள் (அதெப்படி ஊத்துறாங்களோ!). காய்கறியெல்லாம் போட்டுக் கிண்டுன உப்புமா. வீட்டுல சுட்ட மெத்துத் தோசை. இதுகள்ளாம் தனியாப் போகக் கூடாதுன்னு தொணைக்குத் தொவையலு, சாம்பாரு, பொடின்னு ஒரு கூட்டம். முடிஞ்சதும் ஆளுக்கொரு வாழப்பழமும் டீயும். ஒரு வயிறுதான இருக்குன்னு வருத்தப்படத்தான் முடிஞ்சது. அன்னைக்கு முழுக்கவே சாப்பிடத் தேவையில்லைன்னு எல்லாரும் முடிவு கட்டுனாங்க....ஆனா நா மட்டும் இல்ல....மதியம் சங்கரங்கோயில்ல சாப்பிடுவேன்னு உறுதியாச் சொன்னேன் (சங்கரங்கோயில்காரங்க இங்க இருந்தா நான் என்ன சொல்ல வர்ரேன்னு தெரிஞ்சிருக்கும்,)

வீட்டு மாடீக்குப் போனோம். லட்சுமி மில்ஸ் காம்பவுண்டுல மரங்க நெறைய இருந்துச்சு. அதுல அங்கங்க மயில்கள். இந்தப் பக்கந் திரும்புனா மல மேல கதிரேசன் கோயில். கோயில்பட்டீல இருக்குற பழைய கோயில் கதிரேசன் கோயில். அதுவும் ஒரு சின்ன மலை மேல. பாழடஞ்சி போயி ஆளும் பேரும் போகாம சிதஞ்சு போய் இருந்துச்சு. அந்தக் கோயிலச் செம்ம பண்ணி நல்ல படியா ஆக்கனும்னு அப்பவே எனக்கு ஆசை. என்னைக்காவது ஒரு நாள் செய்யனும்னு நெனப்பேன். அப்புறம் படிச்சி முடிச்சி வேலைன்னு வந்தப்புறமும் ஆசை அப்பப்ப எட்டிப் பாக்கும்.

மலைல ஏற்ற படியெல்லாம் செதஞ்சு போய் மண்ணாகி அதுல இருட்டு வேளைல நெறையப் பேரு அசிங்கஞ் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. என்னையப் போலவே நெறையப் பேரு நெனச்சிருப்பாங்க போல. அந்தக் கோயிலுக்கும் ஒரு விடிவு காலம் வந்துருச்சு. இப்ப பழைய சிதைவுகளைத் தட்டி விட்டுட்டு புதுக் கோயில் கட்டியிருக்காங்க. உள்ள முருகன் சிலை கெடையாது. வேல்தான். கதிர்காமத்துலயும் செல கிடையாது. கதிரேசன் கோயில்லயும் செல கெடையாது. இப்பக் கோயில்ல புதுசா பெரிய வேல்தான் நட்டீருக்காங்க. அதே போல மலைவலம் வர்ரவங்களுக்கு நல்ல தார்ச்சாலையும் போட்டிருக்காங்க. ஏற மாட்டாதவங்களுக்காக வண்டிய நேரடியா மேல கொண்டு போற வசதியும் உண்டு.

எல்லாரும் ஜீப்புல போக, நானும் ஒரு நண்பனும் நடந்தே ஏறுனோம். சாமி கும்பிடுறப்பத்தான் அந்த ஐயரக் கவனிச்சேன். ஒரு பரிவும் பச்சாதாபமும் வந்தது. அதுக்குக் காரணம் அவரோட ஒடம்புல இருந்த வெள்ளிப் புள்ளிகள். சொரியாசிஸ்னு பேரு. சொறிஞ்சா செதில் செதிலா வரும். அதுக்கு மருந்தே இல்லையாம். ஒட்டுவாரொட்டியும் இல்லையாம். அதாவது ஒட்டுவார் ஒட்டி. ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போகாது. ஆனால் ஜீன்கள் வழியாப் போகும். வழிவழியாப் போகுமாம்.

என்ன கொடுமை பாத்தீங்களா! அதுவுமில்லாம இது ஏன் வருதுன்னு கூடக் கண்டு பிடிக்கலையாம். மன அழுத்தம் அது இதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் நோய் ஊக்கிகள் தானாம். நோய் ஜீனுக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காம். மன அழுத்தமோ வேலைப்பளுவோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ கொடுமைப் படுத்தும் போது இது வெளிய வந்துருமாம். சொறிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுனாலதானோ என்னவோ இங்கிலீஷ்ல பேரு வெக்கும் போது கூட சொரியாசிஸ்னு வெச்சிருக்கான்.

பொதுவா இது தலையில தொடங்குமாம். எல்லாரும் பொடுகு நெனச்சு மொதல்ல கண்டுக்காம விட்டுருவாங்க. ஏதாவது டீவீல காட்டுற ஷாம்புகளைப் போட்டுக் குளிச்சிட்டு ஒன்னும் கேக்கலையே டாக்டர் கிட்ட போனா அவரு குண்டத் தூக்கிப் போடுவாரு. இது வந்து தோற்றத்தைப் பாதிக்கிற ஒரு நோய். தொழுநோயோ வெண்குட்டமோ மொதல்லயே தெரிஞ்சிட்டாப் போயிரும். ஆனா இது அப்படியில்லை. போனாலும் திரும்பத் திரும்ப வரும். தோற்றம் பாதிக்கப்படும் போது அவங்க மனம் ரொம்பப் பாதிக்கப் படும். மத்தவங்களோட ஒழுங்கா பழக முடியாது. கூட இருக்கிறவங்களும் ஒரு மாதிரி அருவெறுப்பு இருக்கும். இதுனால ஒடிஞ்சி நொடிஞ்சி போனவங்க நெறையப் பேரு. அவங்களுக்குக் கவுன்சிலிங் பண்ணக் கூட ஒழுங்கா ஒரு வசதி கிடையாது. பாவம்.

அந்த ஐயர், அதையெல்லாம் பெருசு பண்ணாம தீபாராதனை காட்டித் திருநீறு குடுத்தாரு. வாங்கிப் பூசிக்கிட்டேன். கோயில விட்டு வெளிய வந்து பாத்தாக் கோயில்பட்டி ஊர் முழுக்கப் பாக்கலாம். ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி. நீளமாக் கோடு போட்ட மாதிரி தேசிய நெடுஞ்சாலை. பச்சைப் பெயிண்ட் அடிச்ச மேம்பாலம். எல்லாத்தையும் பாத்துட்டு தெரிஞ்சவங்களுக்குப் போயிட்டு வர்ரேன்னு சொல்லீட்டுக் கழுகுமலைக்கு வண்டிய விட்டோம்.

தொடரும்

23 comments:

said...

என்னங்க.. எல்லாரும் சாப்பாடு பதிவாவே கண்ல படுது இன்னிக்கி!!! கொத்ஸு பரோட்டா, துளசி அக்காவோட சிற்றுண்டி சிவராத்திரி,.. கால்காரி சிவாவோட சால்னா.

ம்ஹும்.. இன்னிக்கு வேலை செஞ்சாப்ல தான்.. வீட்டுக்குப் போய் அம்மா என்ன செஞ்சிருக்காங்கன்னு பாக்கணும்.. ம்ம்ம்..

said...

இந்த காலத்து பசங்க ஜாலியா ஊட்டி கொடைக்கானல்னு சுத்துவாங்கன்னு நினைச்சேன்.

நீங்க என்னடான்னா கோயில் கோயிலா சுத்தறீங்க? ஹும்!

இளம் வயசுல கொஞ்சம் ஜாலியாவும் இருங்க.. அப்புறம் சன்னியாசத்துல ஆசை வந்துறப்போவுது..:)

said...

கோயில்பட்டியில் செண்பகவல்லி தாயாரை பார்த்தீங்களா?

said...

ராகவன்,

அழகான ஊரா இருக்கே. படங்களும் அருமையா இருக்கு.
தகதகன்னு கேசரியா? பேஷ் பேஷ்...

பழமுதிர்ச்சோலையில் கூட முந்தி 'வேல்' மட்டும்தாங்க இருந்துச்சு. இப்பப் பார்த்தாச் சிலை வச்சுட்டாங்க.

சொரியாஸிஸ் பத்தி எழுதுனது உண்மைதாங்க. நண்பர் ஒருத்தருக்கு இப்படி வந்து குடும்பமே
மனசொடைஞ்சு இருக்காங்க. தோற்றம் வேற பாதிக்கப்படும்னு தெரிஞ்சதுலே இருந்து.................
என்னாத்தை சொல்றது போங்க.

நம்ம இன்னொரு நண்பர் வயசுலெ சின்னவர்தான் (பிள்ளைங்க 7 வயசும், 4 வயசும்) ஜாலியா டூர் போங்கன்னா
குடும்பமே கோயில் கோயிலாப் போகுது. பிள்ளைங்களும் கோயிலுக்குப் போலாம் கோயிலுக்குப் போலாம்னு
கூத்தாடுதுங்க.

said...

// பொன்ஸ் said...
என்னங்க.. எல்லாரும் சாப்பாடு பதிவாவே கண்ல படுது இன்னிக்கி!!! கொத்ஸு பரோட்டா, துளசி அக்காவோட சிற்றுண்டி சிவராத்திரி,.. கால்காரி சிவாவோட சால்னா. //

என்ன பொன்ஸ் இது. கதிரேசன் கோயில்ல தொடங்கி சொரியாசிஸ்ல முடிச்ச சீரியஸ் பதிவுதானே இது. அதெல்லாம் தெரியல. சாப்பாடு மட்டும் தெரிஞ்சிருக்கு...ம்ம்ம்ம்ம்ம்

// ம்ஹும்.. இன்னிக்கு வேலை செஞ்சாப்ல தான்.. வீட்டுக்குப் போய் அம்மா என்ன செஞ்சிருக்காங்கன்னு பாக்கணும்.. ம்ம்ம்.. //

இன்னைக்கு மட்டுமல்ல. என்னைக்குமே இப்பிடித்தான்னு கேள்விப்பட்டோம். :-))

said...

// tbr.joseph said...
இந்த காலத்து பசங்க ஜாலியா ஊட்டி கொடைக்கானல்னு சுத்துவாங்கன்னு நினைச்சேன்.

நீங்க என்னடான்னா கோயில் கோயிலா சுத்தறீங்க? ஹும்! //

ஜோசப் சார். இது எனக்கு மொட்ட போடனும்னு முடிவு செஞ்சப்புறம் பிளான் பண்ணுன டிரிப். மொதநா நாகர்கோயில் போறதா இருந்துச்சு...அதுதான் வண்டிய கோயமுத்தூர் பக்கம் திருப்பீருச்சே......

// இளம் வயசுல கொஞ்சம் ஜாலியாவும் இருங்க.. அப்புறம் சன்னியாசத்துல ஆசை வந்துறப்போவுது..:) //

இப்பத்தான் முத்து பிஞ்சுலயே பழுத்ததுன்னு சொல்றாரு...நீங்க என்னடான்னா இப்பிடிச் சொல்றீங்க :-)))))

said...

// தயா said...
கோயில்பட்டியில் செண்பகவல்லி தாயாரை பார்த்தீங்களா? //

இல்லை தயா. செண்பகவல்லியம்மனைப் பார்க்கவில்லை. நேரம் காரணமாக கோயிலுக்குப் போகவில்லை. ஆனால் நான் பலமுறை செண்பகவல்லியம்மனைத் தரிசித்திருக்கிறேன்.

said...

// துளசி கோபால் said...
ராகவன்,

அழகான ஊரா இருக்கே. படங்களும் அருமையா இருக்கு. //

இந்த வருசம் நல்ல மழைன்னு சொன்னாங்க. அதான் டீச்சர்.

// தகதகன்னு கேசரியா? பேஷ் பேஷ்... //

தகதகன்னு சொல்லும் போதே கேசரியோட மினுமினுப்பும் ஜொலிஜொலிப்பும் தித்திப்பும் தெரிஞ்சி போகுது பாருங்க......

// பழமுதிர்ச்சோலையில் கூட முந்தி 'வேல்' மட்டும்தாங்க இருந்துச்சு. இப்பப் பார்த்தாச் சிலை வச்சுட்டாங்க. //

டீச்சர், இங்க மட்டுமில்லை. கதிர்காமத்துலயும் வேல்தான். இப்பத்தான் செல வெக்கிறாங்களாம். முருகன் செலையில்லை. புத்தர் செலை. அப்படீன்னு சொல்றாங்க.

// சொரியாஸிஸ் பத்தி எழுதுனது உண்மைதாங்க. நண்பர் ஒருத்தருக்கு இப்படி வந்து குடும்பமே
மனசொடைஞ்சு இருக்காங்க. தோற்றம் வேற பாதிக்கப்படும்னு தெரிஞ்சதுலே இருந்து.................
என்னாத்தை சொல்றது போங்க. //

உண்மைதான் டீச்சர். சொரியாசிஸ் தோற்றத்தைப் பாதிக்கிறதுதான் பெருங்கொடுமை. அந்த நண்பரை மனம் வருத்தப் பட வேண்டாம் என்று சொல்லுங்கள். அவருக்கு இப்பொழுது வேண்டியது நல்ல ஆறுதலும் அன்பும். ரொம்ப வருத்தப்பட்ட இது ரொம்பக் கூடும். ஏத்துக்கிட்டோமுன்னா...ரொம்பக் கஷ்டப்படுத்தாது. இதுக்கு நான் எதுவும் உதவி செய்யவா?

// நம்ம இன்னொரு நண்பர் வயசுலெ சின்னவர்தான் (பிள்ளைங்க 7 வயசும், 4 வயசும்) ஜாலியா டூர் போங்கன்னா
குடும்பமே கோயில் கோயிலாப் போகுது. பிள்ளைங்களும் கோயிலுக்குப் போலாம் கோயிலுக்குப் போலாம்னு
கூத்தாடுதுங்க. //

அட அப்படியா! நல்லதொரு குடும்பம். பல்கலைக் கழகம்.

said...

ராகவன்,

ரெம்ப நன்றி. ஏன்னா எங்க ஊர் பத்தி எழுதினதுக்கு.

கதிரேசன் கோயில்ல, புலி குகை பார்கலையா? புலி குகைல இருந்து செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு சுரங்க பாதை இருக்குன்னு சொல்லுவாங்க.

//ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி//

அது பெண்கள் கல்லூரி இல்லங்க. கோ-எட் தாங்க(K.R Arts & Science college).

பாலா.ஆர்

said...

//இன்னைக்கு மட்டுமல்ல. என்னைக்குமே இப்பிடித்தான்னு கேள்விப்பட்டோம். :-))//

கொத்ஸுக்கு சொன்ன பதில் தாங்க உங்களுக்கும்.. ரங்கமணி வந்ததுக்கு அப்புறம் இதெல்லாம் விட்ருவேன்.. அப்புறம் அதே வாக்கியம் தான்.. அம்மாங்கற எடத்துல '-----' அவங்க பேர் போட்டுக்க வேண்டியது தான் :)

said...

ராகவன்...

உண்மையிலேயே இப்பொழுது கதிரேசன் கோயில் அழகா இருக்கு....நீங்க சொன்ன அத்தனையும் மாறிப்போய் புதுப்பொலிவுடன் இருக்கிறது...

ஆனா அதெப்படிங்க...எங்க போனாலும் உங்க "அடுப்படி"க்கு விஷயங்களைச் சேகரிச்சிக்கிறீங்க... சரி நீங்க வர்றீங்கன்னு ஃபோன் பண்ணிச்சொல்லக் கூடாதா...உங்களைச் சந்தித்திருப்பேனே....

அப்புறம் கோயில்பட்டியில் மகளிர் கல்லூரியா சொல்லவே இல்லை????!!!!!!!!!!!!!!

// Bala.R said...
ராகவன்,

ரெம்ப நன்றி. ஏன்னா எங்க ஊர் பத்தி எழுதினதுக்கு. //

ரொம்ப சந்தோசம் பாலா. இன்னும் கூட எழுதீருக்கலாம். ஆனா அன்னைக்கு அங்க இருந்தது காலைல நாலரை மணியில இருந்து பத்தரை மணி வரைக்குந்தான். இல்லைன்னா இன்னும் எழுதீருப்பேன். கோயில்பட்டீல ஒரு நாயனக்காரரு இருந்தாரே...நெனவிருக்கா? அவருக்கு ஜெமினியும் சாவித்திரியும் செல தெறந்தாங்களே...அது தெரியுமா?

// கதிரேசன் கோயில்ல, புலி குகை பார்கலையா? புலி குகைல இருந்து செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு சுரங்க பாதை இருக்குன்னு சொல்லுவாங்க. //

புலிக்குகைக்கு நான் போனதில்லை. அன்னைக்கும் போகலை. அது நெனவுக்கே வரலை. வந்துருந்தா ஒரு எட்டு போய்ப் பாத்திருப்போம்.

////ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி//

அது பெண்கள் கல்லூரி இல்லங்க. கோ-எட் தாங்க(K.R Arts & Science college). //

ஓ அது பெண்கள் கல்லூரி இல்லியா..அப்படீன்னு நான் நெனச்சிட்டேன். ஹி ஹி...இதத்தான் கோ.கணேஷும் கேட்டிருக்காரு.

said...

// பொன்ஸ் said...
//இன்னைக்கு மட்டுமல்ல. என்னைக்குமே இப்பிடித்தான்னு கேள்விப்பட்டோம். :-))//

கொத்ஸுக்கு சொன்ன பதில் தாங்க உங்களுக்கும்.. ரங்கமணி வந்ததுக்கு அப்புறம் இதெல்லாம் விட்ருவேன்.. அப்புறம் அதே வாக்கியம் தான்.. அம்மாங்கற எடத்துல '-----' அவங்க பேர் போட்டுக்க வேண்டியது தான் :) //

ஆகா! இப்பிடி வேறையா? தங்கமணி ரங்கமணி வா மா நீ
வெள்ளிமணி வைரமணி பூ மேனி

யாரும்மா இந்த ரங்கமணி? எந்த ஊர் மணி?

said...

// Go.Ganesh said...
ராகவன்...
//

கணேஷ். நாலு கமெண்ட் இருந்தது. அது அத்தனையும் பப்ளிஷ் பண்ணீட்டேன். ரொம்ப நாளா நீங்க நம்ம வலைப்பூவுக்கே வரலையே...அதான்... :-)

// உண்மையிலேயே இப்பொழுது கதிரேசன் கோயில் அழகா இருக்கு....நீங்க சொன்ன அத்தனையும் மாறிப்போய் புதுப்பொலிவுடன் இருக்கிறது... //

உண்மைதான். எனக்கும் இந்தப் புதுப் பொலிவில் மகிழ்ச்சிதான். கண்டிப்பா போய்ப் பாருங்க.

// ஆனா அதெப்படிங்க...எங்க போனாலும் உங்க "அடுப்படி"க்கு விஷயங்களைச் சேகரிச்சிக்கிறீங்க...//

அடுப்படிக்கு மட்டுமா இந்தப் பதிவுல விஷயம் இருக்கு? அடுப்படி, கோயில், மருத்துவம்...எல்லாம் இருக்கு பாருங்க...நமக்குக் கண்ணுல படுறத எழுதீருவோம். அவ்வளவுதான்.

// சரி நீங்க வர்றீங்கன்னு ஃபோன் பண்ணிச்சொல்லக் கூடாதா...உங்களைச் சந்தித்திருப்பேனே.... //

எங்கய்யா இப்ப இருக்கீரு? சென்னைப் பட்டணம்னு சொல்றாங்க எல்லாரும். நானும் மூனு மாசத்துக்கு சென்னைலதான் இருக்கப் போறேன். ஒம்ம மயிலை அனுப்பவும். நானும் பதில் மயில் அனுப்புறேன்.

// அப்புறம் கோயில்பட்டியில் மகளிர் கல்லூரியா சொல்லவே இல்லை????!!!!!!!!!!!!!! //

தெரியாமச் சொல்லீட்டேனய்யா... பாலா வந்து அது தப்பூன்னு திருத்தீட்டாரு. அது ஆண்-பெண் கல்லூரிதானாம்.

said...

நல்ல பதிவு இராகவன். எழுதுன எல்லா சங்கதியும் மனதைத் தைத்தது.

said...

கோ. கணேஷ் வந்திருக்காரு. சென்னைக்கு வந்தாச்சுன்னு ஒரு பதிவுல சொன்னாரு. அப்புறம் ஆளைக் காணலை. இப்ப அவங்க ஊரைப்பத்திச் சொன்னவுடனே திரும்ப வந்திருக்காரு. என்ன ஐயா? என்ன செய்றீங்க? எப்படி இருக்கீங்க? பாத்து ரொம்ப நாளாச்சு? புது ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க.. வந்து உங்களை அறிமுகம் செஞ்சுக்கோங்க.

said...

அந்தக் கோயிலச் செம்ம பண்ணி நல்ல படியா ஆக்கனும்னு அப்பவே எனக்கு ஆசை. என்னைக்காவது ஒரு நாள் செய்யனும்னு நெனப்பேன். அப்புறம் படிச்சி முடிச்சி வேலைன்னு வந்தப்புறமும் ஆசை அப்பப்ப எட்டிப் பாக்கும்.

நல்ல ஆசை தான்.

said...

புலிக்குகை படம் ஏதாவது இருந்தா அனுப்புங்க, என்னோட அடுத்த அசை பதிவு புலிக்குகை பத்தி தான்.நன்றி.