Tuesday, March 06, 2007

8ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பாகம் இங்கே.

அலுவலகத்தில் சந்தியாவிடம் அன்று பேசியவர்கள் எல்லாரும் காயங்களோடு திரும்பினார்கள். அந்த அளவிற்குக் கடித்து வைத்திருந்தாள். விமான நிலையத்தில் இருந்து நேராக அலுவலகத்திற்கு எதிலும் மோதாமல் அவள் வந்து சேர்ந்ததே அதிசயந்தான். பெருமாள்சாமி அவளை வீட்டிற்கு அழைத்ததற்கு மறுப்புத் தெரிவித்து விட்டு அவள் அலுவலகம் புறப்பட்டாள். சரவணன் அவளுக்கு விடை கொடுத்து விட்டு பிறகு ஃபோன் செய்வதாகச் சொல்லியிருந்தான்.

அதெல்லாம் அவளுக்கு ஒன்றுமில்லை. ஆனால் சரவணனுக்கு நல்ல வரன் பார்த்திருப்பதாகச் சொன்னதுதான் அவளைக் காக்கை போல கொத்திக் கொண்டிருந்தது. ஒரு செயலை எப்பொழுது செய்வோம்? துணிச்சல் இருந்தால்தானே? அந்தத் துணிச்சல் தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று பல பெயர்களில் கிடைக்கும். ஆனால் சந்தியாவிற்கு அந்தத் துணிச்சல் வருவதே சரவணனிடமிருந்துதான். அது இனிமேல் இல்லாமல் போகுமென்றால்? ஒருவேளை அவனுக்கு திருமணம் ஆகி விட்டால்? அவளது நிலை? அவளும் திருமணம் செய்து கொள்வதா? அது நடக்குமா? அவன் ஆண். இவளோ பெண். அதிலும் குழந்தை பெற்றவள்? அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. யோசித்ததையும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

தேன்மொழியைத் தொலைபேசியில் அழைத்தாள். ஆனால் அடுத்த வாரம் இருக்கும் புத்தக வெளியீட்டு வேலையாக அவள் இருப்பதால் இரவில் அழைப்பதாகச் சொல்லி விட்டாள். அடுத்த வார புதனன்று சென்னையில் காமராஜ் மெமோரியல் ஹாலில் வெளீயீடு. பிரபல திரைப்படப் பாடலாசிரியர் என்பதால் பல பிரபலமானவர்கள் வருவார்கள். ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் இருப்பதால் அவரும் வருகிறார். அதுவுமில்லாமல் தேன்மொழியின் ரசிகர்கள் வேறு. அதற்கு அடுத்த நாள் லேண்ட்மார்க்கில் ரசிகர் சந்திப்பு. புத்தகம் வாங்குகின்றவர்களுக்குக் கையெழுத்திட்டுக் கொடுக்கும் விழா. அத்தனைக்குமான ஏற்பாடுகள் ஓடிக் கொண்டிருந்தன. அதனால்தான் அவள் சந்தியாவுடன் சரியாகப் பேச முடியவில்லை.

தேன் மட்டுமா? சரவணனும்தான். ஃபோன் செய்வதாகச் சொன்னவன்...காலையரும்பி பகலெல்லாம் போதாகி மாலையில் மலர்ந்த மலர் இரவில் வாடிய பின்னும் அழைக்கவில்லை. ஒரு குறுஞ்செய்தி கூட இல்லை. அவனை அழைக்கவும் செய்தி அனுப்பவும் சந்தியாவின் மனநிலையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவள் என்ன மிதமா? அதே போலத் தேன்மொழியும் சொன்னபடி இரவில் அழைக்கவில்லை. காத்திருந்த சந்தியா எப்படியோ ஒரு வழியாகத் தூங்கிப் போனாள்.

ஆனால் விடியல் அவளுக்கு விடியலாகத்தான் இருந்தது. அவளை எழுப்பியதே சரவணனின் குறுஞ்செய்திதான். "de word sweet is obsolete 4m now and further sandhya is what we have to use :-) good morning. vil cal at 10. hv a gud day" படித்ததும் சந்தியாவின் முகத்தில் புன்னகை. படபடவென அவள் கிளம்பி அலுவலகம் வந்து விட்டாள். ஆனால் பத்து மணிதான் வழக்கம் போல வந்தது. அதுவும் சரவணனின் தொலைபேசி அழைப்போடு.

"ஏ! சந்தி! சாரிடா. நேத்து பயங்கர பிசி." மொபைல் வழியாக தேவனின் திருச்சபைச் செய்தி கேட்டுப் பரவசமடைந்தாள்.

"நல்லாயிருக்கேன். இன்னைக்கு நீ என்ன பண்ற? லஞ்சுக்கு இங்க வர்ரியா?"

"லஞ்சுக்கு முடியாது. ஆனா நாலு மணிக்கு மேல ஒன்னால முடியும்னா ஈ.சி.ஆர் ரிசார்ட் போலாம். சரியா?" உண்மையிலேயே சந்தியாவிற்கு அது திருச்செய்திதான். ஒப்புக்கொண்டாள். அதே போல நாலு மணிக்கு இருவரும் சென்றார்கள். Fishermen's Cove என்ற அந்த நட்சத்திர விடுதியின் கடலைப் பார்த்த ஃபிரெஞ்சு ஜன்னல் அறை அவர்களுக்கு உதவியது.

வழியெல்லாம் வெட்டிக் கதை பேசிக் கொண்டு வந்தவர்கள். அறைக்குள் வந்ததும்...கதவை மூடியதும்....ஒருவரையொருவர் மூடிக் கொண்டனர். ஏதோ கின்னசில் முத்த சாதனையெல்லாம் இருக்கிறதாமே...அவையெல்லாம் புறமுதுகிட்டு ஓடின. "பொருத்தம் உடலிலும் வேண்டும். புரிந்தவன் துணையாக வேண்டும்" என்று கண்ணதாசன் சொல்லியிருக்கின்றாரே. அதுதான் அங்கு நடந்தது. எல்லா விரல்களுக்கும் வீணை நாதம் கொடுக்காது. வீணையின் நெளிவு சுளிவுகள் விரலுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மீட்டும் விரலுக்குத் தக்க ஒலியை வீணையும் கொடுக்க வேண்டும். அதுதான் அங்கு நடந்தது. எத்தனையோ விரல் மீட்டிய வீணைதான். ஆனால் அப்பொழுதெல்லாம் ஓசையை உண்டாக்கியது இப்பொழுது இசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அந்த இசைதான் விரலுக்குள் ஒளிந்திருக்கும் திறமையையெல்லாம் வெளிக்கொண்டு வந்தது.

இருவரையும் ஒன்றாகக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஷவரும் அந்தக் குளியலறையும் அதிலிருந்த பெரிய கண்ணாடியும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தன.

"சந்தி....இதெப்படிடா?"

"எது?"

"உங்கிட்ட மட்டும் ஒன்னு இருக்கே"

"உங்கிட்டயும்தான் ஒன்னு இருக்கு"

"ஏய்ய்ய்ய்ய்ய்ய்...."

"பின்னே என்னவாம்....i love u soooooooooooooooooooo much!" பச்.

"i too da sandhy. நான் முழுமையான நானா இருந்ததும் இருக்குறதும் ஒங்கிட்ட மட்டுந்தான். தெரியுமா?"

"சரி. இருக்கப் போறது?"

"அதுவும் அப்படித்தான். no change at any circumstance." பச்.

"உனக்குக் கல்யாணம் ஆனாக் கூடவா? ம்ம்ம்..."

"எனக்கா? என்ன சந்தி? நீயா இப்பிடிக் கேக்குற?"

"இல்லடா. ஏதோ வரனெல்லாம் வந்திருக்காமே."

"oh myyyyy god. அதையேங் கேக்குற? எல்லாத்தையும் ஒதுக்கியாச்சு. அதுனாலதான் நேத்து ஒனக்கு ஃபோன் பண்ண முடியலை."

"நெஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா? promise?"

"bra miss...oooopppps...promise" பச்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று சொன்னால் இந்தக் கதையை மஞ்சள் பத்திரிகையில்தான் போட வேண்டும். ஏழு மணிக்கு இருவரும் கடற்கரை ஓரத்தில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசியதைக் கவனிப்போம்.

"அம்மா அப்பா நல்லாயிருக்காங்களா சந்தி? போன தடவ வந்தப்போ பாத்தது. கண்ணனுக்குக் கல்யாணம் ஆயிருச்சுல்ல. எதுவும் விசேஷம்?"

"எல்லாரும் நல்லாயிருக்காங்க. கண்ணனும் நல்லாயிருக்கான். ஒரு பையன் அவனுக்கு. அரவிந்துன்னு பேரு. ஆனா இப்போ டி.நகர் வீட்டுல இருக்கான். அவனோட மாமியார் இப்ப கூடதான் இருக்காங்க. அதுனாலயும் அவங்க வீட்டுக்காரங்க வரப்போக இருக்குறதால டி.நகர் வீடுதான் சரீன்னு முடிவு செஞ்சோம்."

"அதுவும் நல்லதுதான். அவனையும் ஒரு வாட்டி பாக்கனும். போன வாட்டி எப்படியோ முடியாமப் போயிருச்சு. சரி. ஒன்னோட சினிமா ஃபிரண்டு எப்படியிருக்கா?"

"ஹலோ...அதென்ன சினிமாக்கார ஃபிரண்டு. தேன்மொழி ஒனக்கும் தெரியுந்தானே. அவளைப் பேரைச் சொல்லி யாரும் கூப்பிடுறதில்லை. கவிப்பூ தேன்மொழின்னுதான் கூப்புடுறாங்க. அதுவுமில்லாம அவ கள்ளியிலும் பால்னு ஒரு கவிதைத் தொகுப்பு போடுறா. புதங்கிழமை புத்தகவெளியீடு. அதுக்காகக் குழந்தையத் தூங்க வெச்சிட்டு அவளும் அவ வீட்டுக்காரனும் வேலை பாக்குறாங்க." சொல்லி விட்டுக் கிண்டலாகச் சிரித்தாள்.

போலியாகக் கெஞ்சினான் சரவணன். "ஆத்தா! மகமாயி. மன்னிசுரும்மா...அவ உன்னோட ஃபிரண்டாவே இருக்கட்டும். நமக்கும் கவிதைக்கும் ரொம்பத்த்த்த்தூரம். அது இருக்கட்டும். அப்பா அம்மாவைப் பாக்க எப்ப வீட்டுக்கு வரட்டும்?"

"வீட்டுக்கா? நாளைக்கு வாடா. ஆறு மணிக்கு மேல வா. அப்பத்தான் நானும் ஆபீஸ் முடிச்சிட்டு வரச் சரியா இருக்கும். ஒன்னு பண்ணு. நைட் சாப்பாடு வீட்டுலதான். சரியா?"

"நீ சொன்னா சரிதான்."

"அடடே! நான் என்ன சொன்னாலும் சரியா?"

"ஆமாம் மேடம். நீங்க என்ன சொன்னாலும் அது சரியில்லை. ஹா ஹா ஹா"

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். வீட்டிற்கு அவன் காற்றில் ஏறிப் போனான். அவள் மேகத்தில் வந்தாள். வந்து சுந்தரைப் பார்த்ததும்தான் அவளுக்குப் பக்கென்றது. நாளை இரவு உணவிற்கு அவனை வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கின்றாளே!!!!!!!!!!!

தொடரும்.....

14 comments:

said...

இந்தப் பகுதி கிளுகிளுப்பு ஸ்பெஷல் ... மத்தப் படி வெயிட்டீங் பார் நெக்ஸ்ட் எபிசோட்..:-)

said...

தேவ் சொன்னதை வழி மொழிகின்றேன்:-)))

said...

அடி சக்கை,

திடீர்னு சுந்தரைக் கொண்டு வந்து திருப்பம் போடலாம்னு நெனச்சா.. அதுக்கும் ஒரு வழியை சந்தியா யோசிக்காமயா போயிடுவா?

திருப்பங்களால திரும்பித் திரும்பி இப்போல்லாம் நேரா போனாத்தான் புதுசா வித்தியாசமாத் தோணுது ;-)

இந்தப் பகுதியில் கொஞ்சம் கிளுகிளுப்பைக் கூடவே அள்ளித் தெளிச்சுட்டீங்களே.. ஜி.ரா..

சரி..சரி.. அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரணுமில்லே அப்பு -ன்னு நீங்க சொல்றது என் காதுல உழுது...

அதனால, இத்தோட முடிச்சுக்கிட்டு, அடுத்த பகுதிக்கு நானும் வெயிட்டிங்க்க்க்க்....

பி.கு.. நேத்து மட்டும் ஒரு பத்துத்தரம் (இரவு பத்து மணி வரை) எட்டாம் பகுதி கள்ளியிலும் பால்-ஐ எதிர்பார்த்து ஏமாந்துட்டேங்ணா......

said...

// தேவ் | Dev said...
இந்தப் பகுதி கிளுகிளுப்பு ஸ்பெஷல் ... மத்தப் படி வெயிட்டீங் பார் நெக்ஸ்ட் எபிசோட்..:-) //

ஆமாங்க தேவ். கொஞ்சம் கிளுகிளுப்பு கூடீருச்சு. ஆனா அவங்களுக்குள்ள இருக்குற உண்மையான நெருக்கத்தைச் சொல்றதுக்காக மட்டும் அது சேர்க்கப்பட்டது. இந்தக் கிளுகிளுப்பு தொடராது.

// துளசி கோபால் said...
தேவ் சொன்னதை வழி மொழிகின்றேன்:-))) //

:-) புரியுது டீச்சர். தேவுக்குச் சொன்ன பதில்தான் ஒங்களுக்கும். :-)

said...

// Raghs said...
அடி சக்கை,

திடீர்னு சுந்தரைக் கொண்டு வந்து திருப்பம் போடலாம்னு நெனச்சா.. அதுக்கும் ஒரு வழியை சந்தியா யோசிக்காமயா போயிடுவா? //

சந்தியா என்ன டிவி சீரியல் கதாநாயகியா? பிரச்சனைகளைப் புதுசு புதுசா தீக்க. நல்ல அறிவாளி. படிப்பாளி. ஆனா வாழ்க்கை விஷயத்துல நம்மளப் போல இன்னமும் கத்துக்குட்டிதாங்க.

// திருப்பங்களால திரும்பித் திரும்பி இப்போல்லாம் நேரா போனாத்தான் புதுசா வித்தியாசமாத் தோணுது ;-) //

உண்மைதாங்க. :-)

// இந்தப் பகுதியில் கொஞ்சம் கிளுகிளுப்பைக் கூடவே அள்ளித் தெளிச்சுட்டீங்களே.. ஜி.ரா..

சரி..சரி.. அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரணுமில்லே அப்பு -ன்னு நீங்க சொல்றது என் காதுல உழுது... //

இல்லையில்லை. அப்படியில்லை. அவங்க நெருக்கத்தைச் சொன்னாத்தான் பின்னாடி அதுனால வரப்போற பிரச்சனைகளைச் சொல்ல வசதியா இருக்கும். அடடே! எதோ ஒளறீட்டேன் போல இருக்கே!

// அதனால, இத்தோட முடிச்சுக்கிட்டு, அடுத்த பகுதிக்கு நானும் வெயிட்டிங்க்க்க்க்.... //

வியாழக்கிழமை :-)

// பி.கு.. நேத்து மட்டும் ஒரு பத்துத்தரம் (இரவு பத்து மணி வரை) எட்டாம் பகுதி கள்ளியிலும் பால்-ஐ எதிர்பார்த்து ஏமாந்துட்டேங்ணா...... //

மன்னிக்கோங்க. நானும் எப்படியாவது போட்டுறலாம்னு முயற்சி செஞ்சேன். ஆனா லேட்டாயிருச்சு. அதான் காலைல போட்டாச்சு.

said...

அய்யே... இப்படியெல்லாமா கத எழுதுவாங்க??? :)))))

ம்ம்ம்.. நல்லா இருக்குது... அடுத்தது வியாழந்தானே???

said...

// ஜி - Z said...
அய்யே... இப்படியெல்லாமா கத எழுதுவாங்க??? :))))) //

ஏங்க? இப்படி எழுதக் கூடாதா? :-)

// ம்ம்ம்.. நல்லா இருக்குது... அடுத்தது வியாழந்தானே??? //

ஆமாங்க.

said...

உள்ளேன் அய்யா :)

// ஒரு செயலை எப்பொழுது செய்வோம்? துணிச்சல் இருந்தால்தானே? அந்தத் துணிச்சல் தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று பல பெயர்களில் கிடைக்கும். ஆனால் சந்தியாவிற்கு அந்தத் துணிச்சல் வருவதே சரவணனிடமிருந்துதான். //

The profoundly thoughtful line of this episode!

said...

ம்ம்ம்…ஹைதராபாத்ல வெயில் கொளுத்துதுங்கறதுக்காக இப்படியா குளுகுளுன்னு சாரி கிளுகிளுப்பா எழுதுவாங்க… ;)

இதுக்கெல்லாம் சேர்த்து அடுத்தப் பகுதியில சுடப் போகுதுன்னு மட்டும் தெரியுது!!!

வெயிட்டிங் ஃபார் தெ நெக்ஸ்ட் பார்ட்… (ரொம்ப லேட் பண்ணா உங்க சிஸ்டத்துல வந்து எட்டிப் பாத்துடுவேன்… ;-) )

said...

// Madura said...
உள்ளேன் அய்யா :) //

வாங்க வாங்க

//// ஒரு செயலை எப்பொழுது செய்வோம்? துணிச்சல் இருந்தால்தானே? அந்தத் துணிச்சல் தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று பல பெயர்களில் கிடைக்கும். ஆனால் சந்தியாவிற்கு அந்தத் துணிச்சல் வருவதே சரவணனிடமிருந்துதான். //

The profoundly thoughtful line of this episode! //

நன்றி மதுரா. இந்த விஷயத்துல நம்ம எல்லாரும் சந்தியாக்கள்தான். நாம செய்ற ஒவ்வொரு செயலையும் ஏன் செய்றோம்னு யோசிச்சுப் பாத்தா ஏதாவது ஒரு துணிச்சல் கொடுப்பாளி இருப்பார்.

said...

// அருட்பெருங்கோ said...
ம்ம்ம்…ஹைதராபாத்ல வெயில் கொளுத்துதுங்கறதுக்காக இப்படியா குளுகுளுன்னு சாரி கிளுகிளுப்பா எழுதுவாங்க… ;) //

அடடா! இது ஐதராபாத் வரும் முன்னாடியே எழுதியாச்சு. அப்படி குளுகுளுன்னு எழுதுனதுக்குப் பலன்....ம்ம்ம்ம்..

// இதுக்கெல்லாம் சேர்த்து அடுத்தப் பகுதியில சுடப் போகுதுன்னு மட்டும் தெரியுது!!!
வெயிட்டிங் ஃபார் தெ நெக்ஸ்ட் பார்ட்… (ரொம்ப லேட் பண்ணா உங்க சிஸ்டத்துல வந்து எட்டிப் பாத்துடுவேன்… ;-) ) //

நோ நோ தேட் இஸ் பேட்

said...

ஓண்ணும் விசேஷ்மா இல்லை. அடுத்த பகுதியில் சரவணன் வீட்டுக்கு வருவானா? குழந்தையைப் பார்ப்பானா? மெகா சீரியல் விதிப்படி அவங்க அப்பா அம்மா அவனைக் கூட்டிக்கிட்டு டி.நகர் போகணும். அதான் நடக்கப் போகுதா?

said...

ஆஹா...ஜில்லுன்னு இருந்தது...

இந்த பகுதி எல்லாரும் சொல்லுவதை போல கிளுகிளுப்பு இருக்கு...ஆனா அதை நீங்க சொன்னாவிதம் அருமை... இந்த கிளுகிளுப்பு கதைக்கு தேவைதான்னு நினைக்குறேன்...

அடுத்த பகுதியும் படிச்சுட்டு வர்றேன்….

said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)