Tuesday, March 20, 2007

12ம் (இறுதிப்) பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"ஆமா...எப்ப நெதர்லாந்துக்குக் கெளம்புற? விசா எல்லாம் கெடைச்சிருச்சா? அதுக்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா?" இந்தக் கேள்வியைக் கேட்ட தேன்மொழியின் ஆர்வம் நமக்கு மட்டும் இல்லாமலா போகும்? சரவணனையும் சந்தியாவையும் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்திருந்தாள் தேன்மொழி. சரவணன் தேன்மொழியின் கணவனோடு பேசிக்கொண்டிருக்கையில் சந்தியாவும் தேன்மொழியும் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர்.

"நெதர்லாந்துக்கா? நானா? நான் ஏண்டி அங்க போகனும்? எல்லாரும் இதத்தான் கேக்குறாங்கன்னா...நீயுமா? ஒனக்குக்குத்தான் என்னையப் பத்தித் தெரியுமே."

"தெரியும். தெரியும். ஆனாலும் கல்யாணம் செஞ்சாச்சு. நான் அன்னைக்கே சொன்னேன். சரவணன் கேட்டதும் நீ ஒத்துக்குவன்னு. அதான் நடந்தது. அதே மாதிரி அவன் பின்னாடி குடுகுடுன்னு ஓடத்தான் போற." கண்ணைச் சிமிட்டிச் சொன்னாள் தேன்மொழி.

"ஆகா....உலகமகா ஜோசியக்காரி. சினிமாவுக்குப் பாட்டெழுதுறத விட்டுட்டு நீ ஜோசியம் பாக்கப் போகலாம். கல்யாணம் ஏன் செஞ்சோம்? எனக்கா? இல்ல அவனுக்கா? கண்டிப்பா இல்ல. எங்களுக்கு வேணுங்குறதும் எங்கயும் கிடைக்கும். ஆனா சுந்தருக்கு? அவனுக்காகத்தான் கல்யாணம்."

"சுந்தருக்கா? அம்மா முரண்பாடுகளின் மொத்த உருவமே! தனியா அவனை வளர்க்க முடியும்னுதானே குழந்தையே பெத்துக்கிட்ட. அப்புறம் எதுக்கு கல்யாணம். திடீர்னு பயம் வந்திருச்சா?"

"இல்லடீ. இல்ல. No பயம். பிரச்சனை என்னன்னா? யாரோ தெரியாத donorனா பிரச்சனையே இல்லை. ஆனா இங்க...சரவணன். அவன் கிட்ட ரொம்ப நாள் மறைக்கவும் முடியலை. என்னோட கொழந்தைதான...எனக்கும் பங்கு உண்டுன்னு அவன் கேக்கும் போது மறுக்குறது சரியில்லைன்னு தோணுச்சு. அதான். அந்த ஒரு காரணந்தான். மத்தபடி இந்த கல்யாணத்தாலதான் எனக்கும் சரவணனுக்கும் எந்த உறவும் உருவாகனும்னு இல்ல. புரிஞ்சதா? அதுனால......."

"அதுனால?"

"நானும் சுந்தரும் சென்னையில என்னோட அப்பார்ட்மெண்டுல இருப்போம். எனக்கும் வேலை இருக்கு. எனக்கும் அம்மா அப்பா இருக்காங்க. அதுனால சரவணனோட வீட்டுலயும் இருக்க மாட்டேன். அப்பப்போ போய்ப் பாத்துக்கலாம். அவ்வளவுதான். ஆகையால சரவணன் மட்டும் நெதர்லாந்து கெளம்பிப் போறான். அடுத்த வாரம். தன்ன்ன்னியா!"

அந்த அடுத்த வாரம் விரைவிலேயே வந்தது. சென்னை விமான நிலையத்தில் அவனை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டிற்குப் போனார்கள் அனைவரும். வழக்கமாக தனிமையில் கட்டிக்கொள்ளும் சரவணனும் சந்தியாவும்..அன்று அனைவரின் முன்னிலையிலும் கட்டிக் கொண்டு பிரிந்தார்கள். சந்தியா அன்று அலுவலகத்திற்கு விடுப்பு. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். மாலை நான்கு மணி இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு.

"Hi Sandhya, itz Jaideep here. how are you doing?"

ஓ! அந்த சினிமாக்காரனா! "Hey Jaideep! how are you? i am doing very fine. whatz up?"

"Me fine. Today I saw you in the airport. And from that time.....something is bubbling in my stomach. how about evening? can you come to GRT grand? i am there in 2047. It will be nice if you can make it around 6."

ஏண்டா...அன்னைக்கு அந்த நடிகன் பின்னாடி ஓடுனியே...இன்னைக்கு என்ன...நான்? anyway....you are good...i know..சரி. ஒத்துக்கலாம். "Oh sure Jai. Itz treat to me....I will be there at 6. 2047, right?"

அந்த 2047ல் சரியாக ஆறு மணிக்கு இருந்தாள் சந்தியா. உள்ளே வெறும் ஷார்ட்சோடு காத்துக்கொண்டிருந்தான் ஜெய்தீப். வேறொரு இளைஞன் ஒருவனும் அங்கிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். சந்தியாவின் கண்கள் அவனையும் நோட்டம் விடத் தவறவில்லை. வந்த சந்தியாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்றான் ஜெய். "Hey Sandhya...meet my friend sukh. Please have a small talk. I will take bath and come fast." குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான் ஜெய்.

சுக்கின் விரல் சந்தியாவெங்கும் ஓடி....எவைகளையெல்லாம் களைய வேண்டுமோ...அவைகளையெல்லாம் களைந்தன. சந்தியாவிற்கு மட்டும் களையெடுக்கத் தெரியாதா என்ன? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்தார். வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்தார். விழலுக்கும் நீர் பாய்ச்சி மாய மாட்டார்.

"வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே" சந்தியாவின் அலைபேசி பாடியது. எரிச்சல். "Wait Sukh. let me check whoze that?" அவசரமாக அலைபேசியை எடுத்தாள், "ஹலோ?"

"ஹே சந்தி! சரவணன் பேசுறேன். எப்படி இருக்க. இப்பதான் வந்து சேந்தேன்."

"One sec Sukh." சுக்கிடம் இருந்து தன்னை எடுத்துக் கொண்டு விலகினாள். "நல்லாயிருக்கோம். நீ எப்படி இருக்க? ஃபிளைட் வசதியா இருந்ததா?"

"நல்லாயிருந்தது. இப்பதான் வீட்டுக்குள்ள நொழைஞ்சேன். வழியெல்லாம் உன்னையும் சுந்தரையுந்தான் நெனச்சுக்கிட்டேயிருந்தேன். அதான் வந்ததும் கூப்டாச்சு. வீட்ல இருக்கியா? இன்னைக்கு ஆபீசுக்குப் போகலைன்னு சொன்னியே. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?"

"ஆமா. வீட்டுலதான்..நல்லா தூங்கீட்டிருந்தேன். நீ கூப்டதும்தான் எந்திரிச்சேன். அதான் குரல்..."

"சரி. சரி. நீ தூங்கு. எனக்கும் தூக்கம் வருது. எட்டு மணிக்கு ஃபோன் பண்ணு. சரியா? Take care. Bye."

அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு யோசித்தாள்.

"Whoz that Sandhya? What are you contemplating?" எழுந்து வந்து சந்தியாவோடு உரசினான் சுக். குளித்து முடித்திருந்த ஜெய்தீப் குளியலறையிருந்து வெளியே வந்தான். "hey! what happened? I was expecting a visual treat 'when i come out. I opened the door expecting you both in action...but!"

"Hey Jai. We started. But Sandhya got a call and she in to thoughts. What happened Sandhya?" வாயால்தான் கேட்டான் சுக். ஆனால் கையும் பேசியது.

"From home. Some problem. Need to go immediately." ஏதோ யோசனையோடு சொன்னாள்.

"What? leaving now? just another 10 minutes Sandhya? please......." சுக் கெஞ்சினான்.

"No Sukh. I have to. something serious....now I really cant. Please understand. Anyway Jai is here. You still have option...I will join tomorrow." சுக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டு உடைகளை மாட்டிக் கொண்டு கிளம்பினாள். அணைத்து முத்தமிட்டு வழி அனுப்பினார்கள். ஆனால் வரும் பொழுது சந்தியாவின் அணைப்பிலிருந்த இறுக்கம் இப்பொழுது இல்லாமல் இருந்தது அவர்களால் உணர முடிந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

19 comments:

said...

என்னாத்தைச் சொல்வேனுங்கோ..?

படித்தேன்.

said...

சந்தியா உண்மைய சொல்லிருக்கலாமே ஃபோன்லன்னு அவசரக் குடுக்கையா கேள்வி தோணினாலும், ... சீரியசா பேசி போர் அடிக்க விரும்பல ...

அது சரி சிவமேன்னு இருந்தாங்க சந்தியான்னு பாத்தா, இந்த பதிவுல "சிவ சிவ"ன்னு இருக்கே !!! :)
அம்பலத்தில நின்னு இப்படி பேசுறனே நான், யாராச்சும் எனக்கு ஒரு தேவாரம் பாடிறப் போறாங்க ...

ராகவன், கடைசி அத்யாயத்தில நீங்க இப்படி எங்க எல்லார் நிலமையையும் சொர்க்கத்துக்கு போன தருமரா ஆக்கிட்டு போயிட்டீங்களே ;) ...

வாழ்த்துக்கள் திருசிற்றம்பலம் (!) பேசத் துணிவுடைய புதிய சிந்தையாளருக்கு எழுத்துலகில் பேரம்பலம் காண, பின்னூட்டம் போற்றி போற்றி பாடி ... :)

அய்யோ ரொம்ப பேர் (தொழுதுண்டு பின் செல்வார்!)அடிக்க வர்றாங்க ... ஐ ஆம் தி எஸ்கேப்பு.

said...

ஜி.ரா கடந்த சில வாரங்களாக நல்ல ஒரு தொடரை வாசிக்கும் வாய்ப்பினை கொடுத்தீர்கள் நன்றி.. கதைப் பற்றிய விம்ரசனம் விளக்கமாய் சொல்கிறேன்..

said...

// துளசி கோபால் said...
என்னாத்தைச் சொல்வேனுங்கோ..?

படித்தேன். //

டீச்சருக்குப் பிடிக்கலைன்னு நெனைக்கிறேன். என்ன செய்றது டீச்சர். கதைன்னு வந்துருச்சே. அதான்.

said...

// Madura said...
சந்தியா உண்மைய சொல்லிருக்கலாமே ஃபோன்லன்னு அவசரக் குடுக்கையா கேள்வி தோணினாலும், ... சீரியசா பேசி போர் அடிக்க விரும்பல ... //

உண்மையச் சொல்லீருக்கலாம். ஆனா சொல்லலையே. ஏன் சொல்லலைங்குற வாசகர்கள் எளிதாகக் கண்டுபிடிச்சிரலாம்னு நெனைக்கிறேன்.

// அது சரி சிவமேன்னு இருந்தாங்க சந்தியான்னு பாத்தா, இந்த பதிவுல "சிவ சிவ"ன்னு இருக்கே !!! :)
அம்பலத்தில நின்னு இப்படி பேசுறனே நான், யாராச்சும் எனக்கு ஒரு தேவாரம் பாடிறப் போறாங்க ... //

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாச் சொன்னீங்க. :-)

// ராகவன், கடைசி அத்யாயத்தில நீங்க இப்படி எங்க எல்லார் நிலமையையும் சொர்க்கத்துக்கு போன தருமரா ஆக்கிட்டு போயிட்டீங்களே ;) ... //

புரியலையே மதுரா. சொர்கத்துக்குப் போனவரு நல்லவருங்குற மாதிரி எல்லாரையும் நல்லவங்களா மாத்தீட்டேன்னு சொல்றீங்களா? அப்ப இதுவரைக்கும் அவங்க கெட்டவங்களா இருந்தாங்களா என்ன? இல்ல..ஒவ்வொருத்தரையும் அங்கங்க அப்படியே விட்டுட்டுப் போயிட்டேன்னு சொல்றீங்களா?

// வாழ்த்துக்கள் திருசிற்றம்பலம் (!) பேசத் துணிவுடைய புதிய சிந்தையாளருக்கு எழுத்துலகில் பேரம்பலம் காண, பின்னூட்டம் போற்றி போற்றி பாடி ... :) //

நன்றி நன்றி எழும்புகழ் எல்லாம் திருப்புகழாக விரும்புகிறேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.

// அய்யோ ரொம்ப பேர் (தொழுதுண்டு பின் செல்வார்!)அடிக்க வர்றாங்க ... ஐ ஆம் தி எஸ்கேப்பு. //

:-)

said...

சுத்தம். ஒண்ணியும் பிரியலை. என்னவோ போங்க. இந்த பகுய்ஹி ரொம்பவே சொதப்பிடிச்சுன்னு நினைக்கறேன்.

said...

//சொர்க்கத்துக்கு போன தருமரா //
அது உங்க பதிவுல படிச்சு தெரிஞ்சுகிட்ட கதைய வச்சுதான் :)

தருமர் த்ரௌபதிய "நித்ய கன்னி"யா சொர்க்கத்தில பாத்து "ஏன், எதுக்கு, எப்படி, எது தர்மம், எது தெய்வீகம்" அப்படின்னு குழம்புன மாதிரி, வாசகர்கள் கலங்கிருப்பாங்கன்னு சொன்னேன் :)

நீங்களும் கடைசியில சுந்தர் அழ நாலு மணிக்கு எந்திரிச்ச சந்தியா, "அடப்பாவமே என்னவொரு கனவு" அப்படின்னு சொன்னானு முடிச்சிருந்தீங்கன்னா ... வியாசர் மாதிரி நாட்டுல நல்லவங்க நாலுந்தெரிஞ்சவங்க எல்லாரையும் கவர் பண்ணியிருக்கலாம் :) ஆனா துணிவோட விட்டுட்டீங்க நிஜமான முரணோட.

Kudos to your brave heart!

said...

// தேவ் | Dev said...
ஜி.ரா கடந்த சில வாரங்களாக நல்ல ஒரு தொடரை வாசிக்கும் வாய்ப்பினை கொடுத்தீர்கள் நன்றி.. கதைப் பற்றிய விம்ரசனம் விளக்கமாய் சொல்கிறேன்.. //

கருத்துகளுக்குக் காத்திருக்கிறேன் தேவ்.

// இலவசக்கொத்தனார் said...
சுத்தம். ஒண்ணியும் பிரியலை. என்னவோ போங்க. இந்த பகுய்ஹி ரொம்பவே சொதப்பிடிச்சுன்னு நினைக்கறேன். //

என்ன கொத்தனார்..இப்பிடிச் சொல்லீட்டீங்க! இந்தப் பகுதியிலதான் ரொம்பவுமே தெளிவாச் சொல்லீருக்கறதா நெனச்சேன். ஆனா அப்படியில்லை போலத் தெரியுதே! சரி. என்னென்ன புரியலைன்னு சொல்லுங்க. விளக்குறேன்.

said...

ராகவன் சார்...

ஒரு வித்தியாசமான, விறுவிறுப்பு நிறைந்த தொடரை தந்தற்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

சில கேள்விகள் இருக்கின்றது அதனை பின்பு கேட்கிறேன்.

(என் மெயில் கிடைத்ததா? அப்படி இல்லை எனில் என் பதிவுக்கு வாருங்கள்)

said...

திகிலழகியா சந்தியா.?
உண்மைதான் ராகவன். உண்மை சுடத்தான் செய்கிறது.
பாகவதம்,கலி எல்லாம் ஞாபகத்துக்கு வருது.

said...

கலாச்சார காவலர்கள் வெகுண்டெழும் ஒரு கதைகளத்தை விறுவிறுப்போடும், சில பல கிலுகிலுப்போடும் கொண்டு சென்றீர்கள்.

கதையில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பதிவுலகில் அதிகமான மதிப்புடைய நீங்கள் இந்தக் கருவை தைரியமாக எடுத்து அதனை சலிப்புத் தட்டாமல் எடுத்துச் சென்றது பாராட்டப்பட வேண்டியதுதான்... :))))

நான் உங்கள இந்தியால சந்திக்கிறேன் :)))

said...

அட நீங்க வேற. விமரிசனம் சொல்றதுக்குத் தெரியலைன்னு சொல்ல வந்தேன்.

said...

ஜி.ரா...
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. கத முடிஞ்சிருச்ச்சா இல்லியா?

ஓ... புதுமைகளின் தொகுப்பா... முற்றும் போடாமலேயே முடிச்சிட்டீங்களா?

அப்டீன்னா, கடைசிப் பத்தியில சொல்லியிருக்கிற சந்தியாவின் மனநிலையில் இருக்கிற மாற்றங்கள் வரவேற்கத் தகுந்தவை..

அதுக்கான காரணத்தினை ஊகிக்கும் வசதியை வாசகர்களிடமே விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. சரியா?

சில வாரங்களாக எதிர்பார்த்த விறுவிறுப்பு குறைந்து காணப்படுவது உண்மை.. அதாவது ஆரம்பகாலத்துல இருந்து ஒரு திடீர்த் திருப்பம், த்ரில் இப்படி அயிட்டங்கள் மிஸ்ஸிங்..

எனினும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்தமைக்கும், நல்ல முறையில் வழிநடத்திச் சென்றமைக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ராகவன்.

said...

// வல்லிசிம்ஹன் said...
திகிலழகியா சந்தியா.?
உண்மைதான் ராகவன். உண்மை சுடத்தான் செய்கிறது.
பாகவதம்,கலி எல்லாம் ஞாபகத்துக்கு வருது. //

என்னங்க இது! சந்தியாவுக்கு திகிலழகி பட்டமா? ம்ம்ம்ம்...சரி. பாகவதத்துலயும் கலியிலயும் என்ன சொல்லீருக்காங்க சந்தியாவைப் (மாதிரி பெண்களைப்) பத்தி? சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கிறேன். ஏன்னா நான் ரெண்டையுமே படிச்சதில்லை.

said...

// ஜி - Z said...
கலாச்சார காவலர்கள் வெகுண்டெழும் ஒரு கதைகளத்தை விறுவிறுப்போடும், சில பல கிலுகிலுப்போடும் கொண்டு சென்றீர்கள். //

:-) ஆமாம் ஜி. இந்த மாதிரி கருவில் கொஞ்சம் கூடக் கிளுகிளுப்பு இல்லாமல் கொண்டு போக முடியாது என்று நினைக்கிறேன்.

// கதையில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பதிவுலகில் அதிகமான மதிப்புடைய நீங்கள் இந்தக் கருவை தைரியமாக எடுத்து அதனை சலிப்புத் தட்டாமல் எடுத்துச் சென்றது பாராட்டப்பட வேண்டியதுதான்... :)))) //

கதையில் நமக்கு உடன்பாடு இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அல்லது கதையில் சொல்வதை கதாசிரியர் நல்லது என நினைக்கிறார்...அல்லது அவர் அப்படித்தான் என்று கொள்ள வேண்டியதில்லை. எழுதிய கதையை வைத்து கதாசிரியரை விமர்சனம் செய்தால் நான் இந்நேரம் முருகன், மனநலம் குன்றிய குழந்தையின் தந்தை, ஆண்டாளின் தந்தை, காரைக்கால் அம்மையார், குருட்டுக் காதலன்...என்று எத்தனையோ பாத்திரங்களில் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒரு பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை. இது சரியா தவறா என்பதை அவரவர் கருத்துக்கு விட்டு விடுகிறேன். பொதுவில் நமது கருத்தை அடுத்தவர் மீது திணிக்கக்கூடாது என்பது என் கருத்து. நம் கருத்து நமக்கு எப்படி சரியோ...அதே வகையில் அடுத்தவர் கருத்து அவருக்கு.

// நான் உங்கள இந்தியால சந்திக்கிறேன் :))) //

வாங்கய்யா வாங்க. பெங்களூர்ல பெரிய வரவேற்பு ஏற்பாடு செஞ்சிருவோம். என்னைக்கு வர்ரீரு?

said...

// துளசி கோபால் said...
அட நீங்க வேற. விமரிசனம் சொல்றதுக்குத் தெரியலைன்னு சொல்ல வந்தேன். //

டீச்சருக்கே விமர்சனம் செய்யத் தெரியலைன்னா...மாணவர்கள் என்ன செய்றது :-(

said...

// Raghs said...
ஜி.ரா...
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. கத முடிஞ்சிருச்ச்சா இல்லியா?

ஓ... புதுமைகளின் தொகுப்பா... முற்றும் போடாமலேயே முடிச்சிட்டீங்களா? //

கதை முடிஞ்சிருச்சுங்க. வழக்கமா தொடரும் போடுவேன். இந்த வாட்டி போடலையே! முற்றும் போட்டாத்தான் முற்றுமா? :-)

// அப்டீன்னா, கடைசிப் பத்தியில சொல்லியிருக்கிற சந்தியாவின் மனநிலையில் இருக்கிற மாற்றங்கள் வரவேற்கத் தகுந்தவை..//

உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். சந்தியாவும் மதிப்பார் என்று நினைக்கிறேன்.

// அதுக்கான காரணத்தினை ஊகிக்கும் வசதியை வாசகர்களிடமே விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. சரியா? //

ஆமாம். எல்லா உணர்ச்சிகளையும் எழுத்தில் கொண்டு வர முடியாது. செயலைச் சொன்னால்...ஏன் அப்படித் செய்தார் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

// சில வாரங்களாக எதிர்பார்த்த விறுவிறுப்பு குறைந்து காணப்படுவது உண்மை.. அதாவது ஆரம்பகாலத்துல இருந்து ஒரு திடீர்த் திருப்பம், த்ரில் இப்படி அயிட்டங்கள் மிஸ்ஸிங்.. //

திடீர்த் திருப்பங்கள் எல்லாம் என்ன நடந்தது என்று தெரியும் வரைக்குதான். அதற்குப் பிறகு முடிக்க வேண்டியது. ஆகையால் திருப்பங்கள் இல்லை. நேர்வழிதான்.

// எனினும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்தமைக்கும், நல்ல முறையில் வழிநடத்திச் சென்றமைக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ராகவன். //

நன்றி ராக்ஸ்.

said...

மிக வித்தியாசமான கதை அமைப்பு.

உங்கள் கருத்துக்களை தெளிவாக வசனங்களில் தெரிவித்திருந்தாலும் கதையினால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. சந்தியாவின் திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்பது எனக்கு புரிந்ததை விட வேறு ஏதோ "subtle point" இருக்கிறது என்று பின்னூட்டங்களை பார்த்தால் தெரிகிறது.அது என்ன என்று எனக்கு தெரியவில்லை.
ஒரு வித்தியாசமான மற்றும் தைரியமான கதைகளத்தை உருவாக்கியதற்காக உங்கள் கற்பனையை பாராட்டுவதை தவிர எனக்கு வேறு ஒன்றும் சொல்ல தோன்ற வில்லை.
வாழ்த்துக்கள்!! :-)

said...

//மிக வித்தியாசமான கதை அமைப்பு.

உங்கள் கருத்துக்களை தெளிவாக வசனங்களில் தெரிவித்திருந்தாலும் கதையினால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. சந்தியாவின் திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்பது எனக்கு புரிந்ததை விட வேறு ஏதோ "subtle point" இருக்கிறது என்று பின்னூட்டங்களை பார்த்தால் தெரிகிறது.அது என்ன என்று எனக்கு தெரியவில்லை.
ஒரு வித்தியாசமான மற்றும் தைரியமான கதைகளத்தை உருவாக்கியதற்காக உங்கள் கற்பனையை பாராட்டுவதை தவிர எனக்கு வேறு ஒன்றும் சொல்ல தோன்ற வில்லை.
வாழ்த்துக்கள்!! :-) //

இதை அப்படியே ரிப்பீட்டுங்க...

வாழ்த்துக்கள்