Tuesday, March 20, 2007

நான் கொஞ்சம் weird

இப்ப வலைப்பூக்கள்ள எல்லாரும் அஞ்சு அஞ்சுன்னு சொல்றாங்களே. அதுக்காக அஞ்சாமலும் இருக்க முடியுமா? அஞ்சுவது அஞ்சாமை பேதமையாச்சே. நம்ம கோபிநாத்தும் சிறிலும் அவங்க எந்த வகையில வித்தியாசமானவங்கன்னு பதிவு போட்டுட்டு...அதுல நம்மளையும் கோத்து விட்டுட்டாங்க. நன்றி நண்பர்களே. ஆகையால என்னைப் பத்திய அஞ்சு குண்டக்க மண்டக்க தகவல்களைச் சொல்லியிருக்கேன். அஞ்சீராதீக.

1. எதையோ நெனச்சிக்கிட்டிருந்தா அதுவாவே ஆயிருவோமாமே! அது மாதிரி...சமயங்கள்ள சில நெனைப்புகள் வரும். ஏதோ ஒரு பாட்டு திடீர்னு நெனைவுக்கு வரும். பாத்தா ரெண்டொரு நாள்ள அதே பாட்டு பாக்கக் கிடைக்கும். இதே மாதிரி ஏதோ படத்தப் பத்தித் தோணும். கொஞ்ச நாள்ளயே அந்தப் படமும் பாக்கக் கிடைக்கும். பாட்டு படம்னு மட்டுமல்ல....பல விஷயங்கள்ள இப்பிடி நடக்குது. என்னோட வாழ்க்கைல நெறைய நிகழ்ச்சிகள். இது வெறும் தற்செயல் நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம். ஆனா அடிக்கடி நடக்குது. நல்லதுகளும் எக்கச்சக்கமா நடந்திருக்கு. பல கெட்டதுகளும் நடந்தது. அதெல்லாம் மத்தவங்க தொடர்பான செய்திகள். ஆகையால எல்லாத்தையும் விவரமாச் சொல்ல விரும்பல.

2. சாப்பாட்டுலயும் நமக்குக் கொஞ்சம் குண்டக்க மண்டக்க ஆசைகள் உண்டு. இடியாப்பத்துக்குப் பூண்டுக் குழம்புல தொடங்குவோம். சர்க்கரைப் பொங்கலுக்குத் தேங்காச் சட்டினியும் மொச்சைக் கொழம்பும் முயற்சி செஞ்சிருக்கீங்களா? சரி. அத விடுங்க....மீன் துண்டுகளைப் பொரிகடலை மாவுல பெரட்டிப் பொரிச்சிச் சாப்பிட்டதுண்டோ? இத கோழிக்கும் செய்யலாம். ஆரஞ்சு சிக்கன் தெரியுமா? ஓட்ஸ்ல பிஸி-ஓட்ஸ்பாத் செஞ்சு சாப்புடுறதும்....கோதுமை ரவை தோசை சுடுறதும்....பூசணியையும் கோழியையும் சேத்துச் சமைக்கிறதும்..மீனைப் பொரிச்சிக் கொத்துமல்லி+புதினா+பச்சை மிளகாய்க் கூழ்ல சமைக்கிறதும்..இப்பிடி பல கண்டுபிடிப்புகள். இப்பிடி எதையாவது செஞ்சு சாப்பிட்டாத்தான் நாக்கு ஒத்துக்குது. முந்தியெல்லாம் புளி+மிளகாய்+உப்பு மட்டும் வெச்சு அரைச்சச் சண்டாளத் தொவையல பிடிபிடிச்ச நாக்கு இப்பல்லாம் ஒறைப்பையே ஏத்துக்குறதில்லை. எனக்குப் பிடிச்ச மாதிரி ரெண்டு பேராலதான் தொடர்ந்து வகைவகையா சமைக்க முடியும். ஒன்னு அம்மா. இன்னொன்னு நானு.

3. பொதுவா எல்லாரும் வேலைய நல்லா செஞ்சிக்கிட்டிருக்கும் பொழுது நான் அமைதியா இருப்பேன். ஏதோன்னு செஞ்சிக்கிட்டிருப்பேன். ஆனா எதாவது பிரச்சனைன்னா மட்டும் மூளை நல்லா வேலை செய்யும். உக்காந்து தெளிவா யோசிக்கும். இத ஒரு வாட்டி...ரெண்டு வாட்டி இல்ல...பல வாட்டி பாத்திருக்கேன். என்னவோ போங்க...ஊரோட ஒத்து வேலை செய்ற தெறமை இல்லையோன்னு நெனைச்சுக்குவேன். ஆனாலும் பிரச்சனை வந்தாலாவது மூளை வேலை செய்யுதேன்னு திருப்தி பட்டுக்கிறுவேன். அத்தோட சொல் பேச்சுக் கேளாமை வேற. பொதுவா யாராவது சொன்னா...அதக் கேட்டு நடக்கிறதில்லை. சொல் பேச்சுக் கேளாதவன் அப்படீங்குற பேர் எனக்கு வீட்டுல ரொம்ப உண்டு. அது உண்மையும் கூட.

4. கனவுகள். அதுல என்ன weirdனு கேக்குறீங்களா? முந்தியெல்லாம் பல கனவுகள் நெனைவுல இருக்கும். என்ன வந்ததுன்னு அடுத்த நாள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன். ஒரு கட்டத்துல என்ன ஆச்சுன்னா...கனவு கண்டுக்கிட்டிருக்கும் போதே "இது கனவு..இத நாளைக்கு நெனைவு வெச்சிருந்து மெயில் அனுப்பனும்னு தோணும்". பல சமயங்கள்ள கதைகள் கனவுல வந்திருக்கு. ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கனவில் வந்து சொல்லியதுதான் பெண்ணைப் பெற்றவன் அப்படீங்குற கதை.

5. இது காலேஜ்ல படிக்கைல நடந்தது. ஒரு குறிப்பிட்ட பேண்டும் சட்டையும் போட்டுட்டுப் போனா நல்லா எழுதி நல்ல மதிப்பெண் கிடைக்குங்குற நம்பிக்கை. அதுலயும் தேர்வு நாள்கள்ள மஞ்சப்பைதான். துணிக்கடைகள்ள முந்தி குடுத்துக்கிட்டிருந்தாங்களே! அந்த மஞ்சப்பைதான். அதுவுமில்லாமா ஒரு குறிப்பிட்ட எடம் இருக்கு. அந்த எடத்துல போய்தான் மொதல்ல உக்காருவேன். அங்க உக்காந்திருந்துட்டு சரியா தேர்வு நேரத்துல மட்டுந்தான் தேர்வறைக்குள்ள போவேன். ஆனா இதெல்லாம் வேலை செஞ்சிருக்கு. யார் கண்டா நானே ஒரளவுக்குப் படிச்சிருக்கலாம். ஆனால் இன்னமும் அந்த சட்டை இன்னும் இருக்கு. அது எனக்கு ரொம்பவும் பிடிச்ச சட்டை. ஒரு மாதிரி கருப்புச் சட்டை. லேசா ஊதா நிறத்துலயும் பழுப்பு நிறத்திலயும் பளபளன்னும் கொசகொசன்னு ஓவியங்கள் உள்ள சட்டை.

இப்ப நம்ம அஞ்சு பேரக் கூப்பிடனும்ல. விட முடியுமா? மாட்டிக்கிட்டீங்களா?
1. காபி
2. தேவ்
3. வல்லிசிம்ஹன்
4. ஓமப்பொடியார்
5. கோவி.கண்ணன்

அன்புடன்,
கோ.இராகவன்

35 comments:

said...
This comment has been removed by the author.
said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்கய்யா...

இன்னைக்கே எழுதுறேன் தல!!

எனக்கு ஒரு 5 நல்ல ப்ளாக் நண்பர்கள் இருகாங்கன்னு பீத்திக்க ஒரு வாய்ப்பு தந்த 'கள்ளினும் பால்'(எந்த உள்குத்தும் இல்ல : ) )ராகவன் ஜிக்கு நன்றி

said...

அப்ப ஏன் இன்னும் ஹைபர்-லிங்க் பதிவு போடாமல் இருக்கீங்க?

weired தமிழில் எப்படி சொல்வது?

said...

//. சொல் பேச்சுக் கேளாதவன் ....//

அதான் சொல்லின் செல்வராயிட்டீங்களா?

said...

// கார்த்திக் பிரபு said...
ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்கய்யா...

இன்னைக்கே எழுதுறேன் தல!!

எனக்கு ஒரு 5 நல்ல ப்ளாக் நண்பர்கள் இருகாங்கன்னு பீத்திக்க ஒரு வாய்ப்பு தந்த 'கள்ளினும் பால்'(எந்த உள்குத்தும் இல்ல : ) )ராகவன் ஜிக்கு நன்றி //

வா காபி வா. நீ எழுதுறதுக்குக் காத்திருக்கிறேன். என்னது? கள்ளியிலும் பாலா? நல்ல பேருதான். பெண்ணைப் பெற்றவன், சுபா, திருச்செந்தூரின் கடலோரத்தில், பொற்சிலையும் சொற்குவையும் எழுதுனப்போ குடுக்காத பேரை இப்பக் குடுக்கிறயா?

said...

// sivagnanamji(#16342789) said...
அப்ப ஏன் இன்னும் ஹைபர்-லிங்க் பதிவு போடாமல் இருக்கீங்க? //

வாங்க சிவஞானம் ஐயா. ஹைபர் லிங்க் பதிவுகள்னா என்னங்க? அது தெரியாதே!

// weird தமிழில் எப்படி சொல்வது? //

நல்ல கேள்வி. நல்ல கேள்வி. நல்ல கேள்வி. கோக்குமாக்கு என்று சொல்லலாமா ஐயா?

// துளசி கோபால் said...
//. சொல் பேச்சுக் கேளாதவன் ....//

அதான் சொல்லின் செல்வராயிட்டீங்களா? //

டீச்சர் வாயால் பாராட்டு. ரொம்ப நன்றி டீச்சர். சொல்லின் செல்வரா பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. விரைவில் ஒரு பதிவு போடனும்.

said...

என் அழைப்பையும் ஏற்றதற்கு நன்றி ;-))

நினைக்குறது தானே நடக்கும்...... எனக்கும் அப்படி நடந்திருக்கு.

சாரி சாப்பாட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம், ஆனா நீங்க ரொம்ப அருமையா சமைப்பிங்க போல. இதற்காவே உங்களை கண்டிப்பா பார்க்கனும்.

உங்க கனவு weird சூப்பர்.....நல்ல கனவுகள் அடிக்கடி வந்து எங்களுக்கு நல்ல, விறுவிறுப்பான கதைகள் கிடைக்க வேண்டும்.

இந்த 5வது எனக்கும் ஓத்து போகும்ன்னு தோணுது ;-))

said...

ஜி.ரா..

வித்தியாசமான பதிவு.. நீங்கள் உண்மையாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பது தெளிவாக விளங்குகிறது.

கோபிநாத் சொன்னது மாதிரி, 5வது வகை எனக்கும் ஒத்துப்போகும்.. நானும் அதுமாதிரி இருந்ததுண்டு சில வருடங்களுக்கு முன்பு வரை.. பெரும்பாலும் மக்களிடம் இந்தப் பண்பு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

சமையலில் நீங்க ரொம்பக் கைதேர்ந்தவரா? நம்மளத் திருப்திப்படுத்தணும்னா ரெண்டே பேரு.. ஒண்ணு அம்மா, ரெண்டாவது நான் - சூப்பரப்பு.....

said...

அழைப்புக்கு நன்றி.. ஆட்டத்தை முடிந்த வரையில் இன்றே வைக்கிறேன்..

said...

// கோபிநாத் said...
என் அழைப்பையும் ஏற்றதற்கு நன்றி ;-)) //

நன்றி. நன்றி. அதுசரி. ஒங்க பெயருக்கு என்ன பொருள்னு தெரியுமா?

// நினைக்குறது தானே நடக்கும்...... எனக்கும் அப்படி நடந்திருக்கு. //

பாத்தீங்களா...அதுனாலதான் நினைக்கிறதெல்லாம் நல்லதாவே நினைக்கனும்னு சொல்றாங்க. நினைக்க முயற்சிப்போம்.

// சாரி சாப்பாட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம், ஆனா நீங்க ரொம்ப அருமையா சமைப்பிங்க போல. இதற்காவே உங்களை கண்டிப்பா பார்க்கனும். //

கண்டிப்பா. நீங்க பெங்களூர் வரும் போது சொல்லுங்க.

// உங்க கனவு weird சூப்பர்.....நல்ல கனவுகள் அடிக்கடி வந்து எங்களுக்கு நல்ல, விறுவிறுப்பான கதைகள் கிடைக்க வேண்டும். //

:) கண்டிப்பாக. இனிமே நிறைய கனவு காண்றேன்.

// இந்த 5வது எனக்கும் ஓத்து போகும்ன்னு தோணுது ;-)) //

ஒங்களுக்குமா? அந்த சட்டையோ பேண்டோ இன்னும் இருக்குதா? இந்த கருப்புச் சட்டை மாதிரியே வெளிரூதா நிறத்துல இன்னொரு சட்டை. அதுல இண்டர்வியூ போனா வெற்றீன்னு இன்னும் ஒரு நம்பிக்கை. :-)

said...

// Raghs said...
ஜி.ரா..

வித்தியாசமான பதிவு.. நீங்கள் உண்மையாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பது தெளிவாக விளங்குகிறது. //

ஆமாங்க. மனசறிஞ்சு உண்மையத்தான் இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.

// கோபிநாத் சொன்னது மாதிரி, 5வது வகை எனக்கும் ஒத்துப்போகும்.. நானும் அதுமாதிரி இருந்ததுண்டு சில வருடங்களுக்கு முன்பு வரை.. பெரும்பாலும் மக்களிடம் இந்தப் பண்பு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..//

உண்மைதான். ஒருத்தருக்குப் பேனா. ஒருத்தருக்கு பைக். ஒருத்தருக்கு புக்கு. ஆனா இந்த ராசி விடாது போல இருக்கு.

// சமையலில் நீங்க ரொம்பக் கைதேர்ந்தவரா? நம்மளத் திருப்திப்படுத்தணும்னா ரெண்டே பேரு.. ஒண்ணு அம்மா, ரெண்டாவது நான் - சூப்பரப்பு..... //

:-) கை தேர்ந்தவரான்னு தெரியாது. ஆனா எங்க விட்டாலும் எதையாவது செஞ்சு தின்னு பொழைச்சுக்குவேன். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.

said...

// தேவ் | Dev said...
அழைப்புக்கு நன்றி.. ஆட்டத்தை முடிந்த வரையில் இன்றே வைக்கிறேன்.. //

படக்குன்னு தேவ். ஒங்களைப் போலவங்கள்ளாம் புகுந்து விளையாடுற தலைப்பு. காத்திருக்கோம்.

said...

//கோக்குமாக்கு என்று சொல்லலாமா?//

பேச்சுவழக்கில் பயன்படுத்தலாம்...
எழுதும்பொழுது..?

முயற்சி செய்யுங்க

said...

நன்றி, ராகவன். weird ஆக இருப்பதில் எனக்கு சங்கடமே கிடையது.
:-)
என் சுயரூபமே அதுதான் என் பசங்களைக் கேட்டால் சொல்லுவாங்க.
என் நினைப்பு எல்லாம் நீங்க எழுதிட்டீங்க. சமையலைத் தவிர.
சரி பார்க்கலாம்.
இப்படிப் பதிவுலக ஜாம்பவான் களோடு இந்தச் சிறுமுயலைக் கருத்து சொல்லக் கூப்பிட்ட உங்க வீரத்தை என்ன சொல்லறது!!!
முடிந்தால் இன்னிக்கே போட்டுடரேன்.

said...

ஜிரா,

சுய விமர்சனம், நன்றாக இருக்கிறது. உங்களைப் போலவே நானும் ஒளிவு மறைவின்றி எழுத முயல்கிறேன்.

பாராட்டுக்கள்

said...

// sivagnanamji(#16342789) said...
//கோக்குமாக்கு என்று சொல்லலாமா?//

பேச்சுவழக்கில் பயன்படுத்தலாம்...
எழுதும்பொழுது..?

முயற்சி செய்யுங்க //

ஆகா! இப்பிடி மாட்டி விட்டுட்டீங்களே! நண்பர்களே..உதவிக்கு வாங்க.

said...

// வல்லிசிம்ஹன் said...
நன்றி, ராகவன். weird ஆக இருப்பதில் எனக்கு சங்கடமே கிடையது.
:-)
என் சுயரூபமே அதுதான் என் பசங்களைக் கேட்டால் சொல்லுவாங்க.
என் நினைப்பு எல்லாம் நீங்க எழுதிட்டீங்க. சமையலைத் தவிர.
சரி பார்க்கலாம்.
இப்படிப் பதிவுலக ஜாம்பவான் களோடு இந்தச் சிறுமுயலைக் கருத்து சொல்லக் கூப்பிட்ட உங்க வீரத்தை என்ன சொல்லறது!!!
முடிந்தால் இன்னிக்கே போட்டுடரேன். //

சிறுமுயல்னு சொன்னீங்க..ஆனா புலிப்பாய்ச்சல் பாஞ்சு படக்குன்னு பதிவு போட்டுட்டீங்களே! இப்ப நீங்களும் ஜோதியில் ஐக்கியம். :-)

said...

// கோவி.கண்ணன் said...
ஜிரா,

சுய விமர்சனம், நன்றாக இருக்கிறது. உங்களைப் போலவே நானும் ஒளிவு மறைவின்றி எழுத முயல்கிறேன்.

பாராட்டுக்கள் //

நன்றி கோவி. உங்க பதிவையும் படிச்சேன். நல்ல கலக்கல். சரியான அஞ்சு பேரை அழைச்சிருக்கீங்க. சூப்பர்.

said...

அட.. சாப்பாட்டுல இவ்வளவு ஐட்டமா?? பெங்களூருக்கு வர்றேன்ல.. அப்ப ஒரு வேளை உங்க வீட்ல முகாம் போட்டுட வேண்டியதுதான் ;))))

said...

//
//அதான் சொல்லின் செல்வராயிட்டீங்களா? //

டீச்சர் வாயால் பாராட்டு. ரொம்ப நன்றி டீச்சர். சொல்லின் செல்வரா பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. விரைவில் ஒரு பதிவு போடனும்.

//

துளடி டீச்சர்,
சொல்லின் செல்வன்னு ஏதோ ஒரு கதைல யாரையோ சொல்வாங்களே :-/
யார் அது???

ஜி.ராவிற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்...

இதற்கு ஜி.ரா பதில் சொல்ல கூடாது :-)

said...

. //சாப்பாட்டுலயும் நமக்குக் கொஞ்சம் குண்டக்க மண்டக்க ஆசைகள் உண்டு. இடியாப்பத்துக்குப் பூண்டுக் குழம்புல தொடங்குவோம். சர்க்கரைப் பொங்கலுக்குத் தேங்காச்//

சில பேர் பாயசத்துல பொரிச்ச அப்பளத்தை போட்டு பிசஞ்சு சாப்புடுவாங்க..அத பாத்தாலே எனக்கு உவ்வேன்னு வரும்...நீங்க இவ்வளோ permutation combination சொல்லிருகீங்களே??! உங்களுக்கு வர போர பொண்ணு கிட்ட கொஞசம் முன்னாடியே உங்க creative mind அ பத்தி சொல்லி வச்சிருங்க சரியா ?? !!!:):)

said...

//துளடி டீச்சர்,//

அதென்ன டீச்சரை அடி பிடின்னு சொல்றது?
பெயில் மார்க் வேணுமா? :-))))

said...

// துளசி கோபால் said...

//துளடி டீச்சர்,//

அதென்ன டீச்சரை அடி பிடின்னு சொல்றது?
பெயில் மார்க் வேணுமா? :-)))) //

டீச்சர் தெரியாம எழுத்து பிழை வந்துடுச்சி...

என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே???

said...

சொல்லின் செல்வன்னு நான்கூடத்தான் 'கதை' எழுதுவேன்!!!

அது இல்லை இப்பப் பிரச்சனை. யாரோ எழுதுனதையெல்லாம் நான் படிச்சிருக்க
வாய்ப்பிருக்கா என்ன?

நான் சொல்ல வந்தது நம்ம ராகவனோட (கூட்டுப்பதிவு) சொல் ஒரு சொல் பதிவுலே
அவருக்கு யாரோ ( இந்த யாரோ வந்து இன்னொரு வேற யாரோ) கொடுத்த
பட்டத்தைப் பற்றி.

இதென்ன வெட்டிப்பயல் இவ்வளோ வியர்டா? இந்தக் கேள்வியைப் பிடிச்சுக்கிட்டு
ஆடற காரணம் என்னன்னு இப்ப எனக்குத்தெரிஞ்சாகணும்.
( the ball is in your side of the court now)

said...

:-))))))))))))))))

இதைப்போட மறந்தேனே.
ராகவா இதையும் சேர்த்துக்கோப்பா.

said...

கொடுத்த வாக்கை நிறைவேத்திட்டோம் இல்ல.. வந்து ஒரு எட்டுப் பாத்துட்டுச் சொல்லுங்க..

http://chennaicutchery.blogspot.com/2007/03/5.html

said...

G.Ragavan said...
// கோபிநாத் said...
என் அழைப்பையும் ஏற்றதற்கு நன்றி ;-)) //

நன்றி. நன்றி. அதுசரி. ஒங்க பெயருக்கு என்ன பொருள்னு தெரியுமா?\\

ஆகா....இது ரொம்ப நல்லாயிருக்கே.....எனக்கு தெரியாது ராகவன் சார்......நீங்களே சொல்லுங்கள் ;-)))

ஆவலுடன் இருக்கிறேன்.

said...

//அது இல்லை இப்பப் பிரச்சனை. யாரோ எழுதுனதையெல்லாம் நான் படிச்சிருக்க
வாய்ப்பிருக்கா என்ன? //

யாரோ எழுதினதா???

சொல்லின் செல்வர்னு கம்பர் எழுதின கதைல யாரையோ சொல்வாங்க. அதனால தான் பெரியவங்க உங்ககிட்ட நான் கேட்டேன் டீச்சர். அது தப்பா???

அவருக்கும் ராகவனுக்கும் என்ன தொடர்புனு ஏன் கேக்கறனு பார்க்கறீங்களா???

ஜி.ராக்கு பிடிக்காத நம்பர் ஒன் அவர் தான் :-) (May be number 2)

நம்பர் ஒன் அவர் பெயரிலே இருக்குனு நினைக்கிறேன்.

இப்படி அவருக்கு பிடிக்காத பெயர்களையே வைத்தால் அவர் வருத்தப்படமாட்டாரானு தான் அப்படி திரும்ப திரும்ப கேட்கிறேன்...

said...

//இதென்ன வெட்டிப்பயல் இவ்வளோ வியர்டா? இந்தக் கேள்வியைப் பிடிச்சுக்கிட்டு
ஆடற காரணம் என்னன்னு இப்ப எனக்குத்தெரிஞ்சாகணும்.//

டீச்சர்,
அது உள்குத்து பின்னூட்டம். அதையே இப்படி விளக்க வெச்சிட்டீங்களே :-))

said...

அட ராகவா!!!!!

கம்பர் எழுதுன 'கதை'யா? சரியாப்போச்சு.
எப்ப எழுதுனார்? எனக்குச் சொல்லாம? :-)))

வரவர ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் மிஞ்சிட்டாங்கப்பா!!!

வெட்டி, சும்மாச் சொல்லக்கூடாதய்யா........... நல்லா புடிச்சீர்!!!!

said...

//மீன் துண்டுகளைப் பொரிகடலை மாவுல பெரட்டிப் பொரிச்சிச் சாப்பிட்டதுண்டோ? //

பாண்டிச்சேரியில ஒரு பார்ல தண்ணியடிக்கும்போது மொதோ தடவையா சாப்டது.. என்னடா இது வித்தியாசமா நல்லா இருக்கேன்னு 2/3 பிளேட் ஆர்டர் பன்ன அயிட்டம் இது.. அப்புரம் அதிகம் சாப்பிட சான்ஸ் கிடைக்கல.

//ஆனா எதாவது பிரச்சனைன்னா மட்டும் மூளை நல்லா வேலை செய்யும். //

ம்ம்.. நமக்கும் அதே கததான்.. அடுத்தவன் கோட்ல தப்ப கண்டுபிடிச்சி சரி பண்றது மட்டும் நல்லா வரும்.கொஞ்ச காலத்துக்கு முன்னால debugger சொல்லுவாங்க..

said...

அந்தச் சாப்பாட்டு மேட்டர் ம்ம்ம் சப்புக் கொட்ட வைச்சிட்டீங்களே....:-)

said...

Hi ji.Raa,
First time to ur blog through karthik prabhu's...
Hmmm neenga potturukkaradhu yellaamae vidhiyaasamana vishyamaathaan irukkunga...


The blog heading "Magarandham" and ur explanation for that..Simply superb:)

said...

என்ன ராகவன் முதல் கமெண்டே டெலீட் ஆயிருக்கு.. ஏதாச்சும் வில்லங்கமா எழுதிட்டாங்களா?

நீங்க சொன்னா எல்லா கிறுக்குத்தனமும் நல்லாருக்கு..

கொஞ்சம் வித்தியாசமா..

ஊரோட ஒத்துப்போகாம இருக்கறததான weirdனு சொல்றோம்..

said...

indha kanavu problem enakkum undu..
naanum neraiya full length story paapen kanavula..

glad that its not just me raghavan!!