சென்ற பகுதி இங்கே
ஏன் கத்தினாள் ரம்யா? அப்படியென்ன நடந்தது? இதுதானே உங்கள் கேள்வி. இதோ சொல்கிறேன்.
காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாலும் கே.ஆர்.எஸ்சின் கவனம் ரம்யா மேல் இருந்தது. வடக்கத்திய ஆலூ சாட்டுகளையும் வெளிநாட்டு பர்கர்களையுமே பார்த்திருந்த அவனுக்குத் தென்னாட்டுத் தேங்காய்ச்சாதம் புதுமையாகத் தெரிந்தது. அந்தப் பார்வையில் காரோட்டுவதில் இருந்த கவனம் சிதறியது.
அவனுடைய கெட்ட நேரம்...சட்டென்று ஒரு மொபெட் குறுக்கே..........அந்த மொபெட்டின் பின்னால் பெரிய கேனில் பெட்ரோல் வேறு. அந்த மொபெட் குறுக்கே வருவதைப் பார்த்துதான் கத்தினாள் ரம்யா. கே.ஆர்.எஸ் சுதாரித்து பிரேக்கை அழுத்தினான். அந்தப் பெரிய சாலையில் அந்த வேகத்தில் கீஈஈஈஈஈச்சென்று கருப்புக்கோடுகளைத் தேய்த்தது கார். சத்தத்திலும் பரபரப்பிலும் அரைத்தூக்கத்தில் இருந்த சப்யா, சித்ரா, ப்ரகாஷாவும் எழுந்து விட்டார்கள்.
ஆனாலும் நடந்ததைத் தடுக்க முடியவில்லை. கார் மொபெட்டில் பின்னால் இடிப்பதைப் பார்த்தாள் ரம்யா. அடுத்த நொடியில் மொபெட் சாய்ந்தது. ஓட்டிக்கொண்டிருந்த முகம் தெரியாதவர் மேலே தூக்கி வீசப் பட்டார். கீழே விழுந்த மொபெட் காருக்கடியில் சிக்கிக்கொண்டு காரின் வேகத்தைத் தடுத்தது. அதற்குள் தூக்கி வீசப்பட்ட நபர் காருக்குப் பின்னால் சென்று சொத்தென்று விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. சாலையைப் பெட்ரோல் கழுவியது.
கே.ஆர்.எஸ் காரை வேகமாக ஓட்டித் தப்பிக்க நினைத்தான். ஆனால் காரில் சிக்கிக்கொண்ட மொபெட் காரை நகரவிடவில்லை. அதற்குள் பெருங்கூட்டம் கூடி காரை மறித்தார்கள். வேறு வழியேயில்லாமல் கார் மண்ணில் ஒதுங்கியது.
போத்தீஸ் ஆடித்தள்ளுபடிக் கூட்டம் போல காரைச் சுற்றிக் கூட்டம். ஒருவன் படக்கென்று கதவைத் திறந்து ரம்யாவை வெளியே இழுத்தான். ஆனால் காரை அவள் ஓட்டவில்லை என்று தெரிந்ததும் இரண்டு மூன்று பேர் கே.ஆர்.எஸ்சை வெளியே பிடித்து இழுத்தார்கள். குனிய வைத்து தரும அடிகளை அள்ளி வழங்கினார்கள் அந்தக் கலியுக வள்ளல்கள்.
ரம்யா இழுபடுவதைப் பார்த்ததும் ப்ரகாஷா படக்கென்று இறங்கி வந்தான். ரம்யா ஓடிப் போய் அவனிடம் ஒட்டிக்கொண்டாள். அவள் தன்னிலையிலேயே இல்லை என்று சொல்லலாம். அவள் கண் முன்னால் மொபெட்டில் இருந்தவர் தூக்கி வீசப்பட்டு விழுந்த காட்சியே திரும்பத் திரும்ப வந்தது. பயம். உடம்பு வெடவெடவென நடுங்கியது.
அதற்குள் சப்யாவும் சித்ராவும் ஃபெராவைத் தூக்கிக்கொண்டு இறங்கினார்கள். அவர்கள் பைகள் அனைத்தையும் இறங்கினார்கள்.
ஆனால் இவர்களை யாரும் கவனித்தது போலத் தெரியவில்லை. செமையாக கவனிப்பதற்குக் கே.ஆர்.எஸ் இருக்கும் பொழுது இவர்களைக் கவனித்து என்ன செய்ய! அதற்குள் ஒருவர் கார்ச்சாவியை கே.ஆர்.எஸ்சிடமிருந்து பிடுங்கி காரில் ஏறினார். கே.ஆர்.எஸ்சையும் உள்ளே ஏற்றினார்கள். கீழே விழுந்திருந்தவரையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு ஓட்டினார்கள்.
ரோட்டில் இருந்த ரத்தத்தைப் பார்த்ததும் ரம்யாவிற்குக் கண்ணைக் கட்டியது. ப்ரகாஷாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மறுகையில் இருவருடைய பைகள் வேறு.
"ஒங்க காரா இது? எங்கயிருந்து வர்ரீங்க?" இந்தியில் கேட்டார் ஒருவர். ப்ரகாஷாதான் இந்தியில் பேசினான். "அது வாடகைக்காரு. நொய்டால இருந்து வர்ரோம். இப்ப கார எங்க கொண்டு போயிருக்காங்க?"
"ஆஸ்பித்திரிக்கு. ஒங்க கார் இல்லையா அது? வாடகையா? அப்ப நீங்க கெளம்பீருங்க. டிரைவரத்தான் பிடிச்சாச்சுல்ல."
அதற்குள் அதே ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர்...பெட்ரோல் வழுக்கி விழுந்தார். "அடடா...இது சபிக்கப்பட்ட ரோடு போல இருக்கே. ஏய்...எல்லாரும் மண்ண அள்ளிப் போடுங்கடா" என்று ஒருவர் குரல் குடுக்க..அனைவரும் மண்ணை அள்ளிப் போட்டனர்.
இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய ப்ரகாஷா, சப்யாவையும் சித்ராவையும் அழைத்தான். கூட வரச்சொன்னான். ரம்யாவையும் கூட்டிக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் நடந்தார்கள்.
எந்த ஊரென்று தெரியவில்லை. பேரும் தெரியவில்லை. ஏதோ பட்டிக்காடு என்று மட்டும் புரிந்தது. ஆக்ராவிலிருந்து வருகின்ற பேருந்துகள் எல்லாம் அப்படித்தானே வர வேண்டும். வந்தன. ஆனால் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் குளிரத் தொடங்கிவிடும். பெரா வேறு நசநசக்கத் தொடங்கியிருந்தான்.
அங்கிருந்த ஒருவரிடம் ப்ரகாஷா டெல்லி செல்ல பஸ் கிடைக்குமா என்று கேட்டான். அவர் சிரித்து விட்டு, "இங்க எங்க பஸ்சு? அதோ ஆட்டோ இருக்கு பாருங்க. ஷேர் ஆட்டோ. அதான எங்களுக்கு பஸ்சு. அதுல போனா பக்கத்தூரு போகும். அங்க பஸ்சுக நிக்கும்."
அவரிடம் நன்றி சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினான். அது ஷேர் ஆட்டோ. உள்ளே கொஞ்ச பேர் உட்காரலம். வெளியே பின்னாடி பார்த்துக் கொண்டும் கொஞ்ச பேர்...டிரைவருக்குப் பக்கத்திலும் கொஞ்ச பேர் உட்காரலாம். ஒருவழியாக எல்லாரும் உட்கார்ந்து கொண்டார்கள். தடதடவென ஆடிக்கொண்டே ஆட்டோ பக்கத்தூருக்குக் கிளம்பியது. ப்ரகாஷாவை இறுகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் ரம்யா. கொஞ்சம் பேதலித்த நிலை. வெறும் பயம்தான்.
வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருள் வரத் தொடங்கியிருந்தது. பேர் தெரியாத ஊரிலிருந்து பேர் தெரியாத ஊருக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார்கள். நொய்டா போனார்களா?
பின்குறிப்பு
ப்ரகாஷாவின் டையில் இருந்து திருடப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட காதல் கவிதை...அதாவது ப்ரேம கவிதே...எதுவும் புரிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.
வானில் நிலவு
நிலவில் காதல்
கைகளில் நீளமில்லை
தொடரும்...
Monday, November 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ஜிரா..
நான் தான் முதல் ஆளா..
சரிங்க.. சஸ்பென்ஸ் பெருசா இருக்குமுன்னு எதிர்பார்த்தேன்.. ஆனா கொஞ்சம் சப்புன்னு தான் இருந்துச்சு!
ஆரம்பத்துலயே நீங்க கே.ஆர்.எஸ். மேல ஒரு கண் வைக்கச் சொன்னதனால் நம்ம ஆளு இப்படித்தான் கோக்குமாக்கா எதாவது பண்ணுவான்னு எதிர்பார்ப்பு இருந்துச்சு. சரியாப் போச்சு. நல்லவேளை வேறு மாதிரியா வில்லங்கம் ஏதும் நடக்கல..
பிரேம கவிதே முதல் தவணை படித்ததும் புரியல.. ஆனா ரெண்டாவது தவணையில் சூப்பரா புரிஞ்சது.
பிரகாஷாவோட மனநிலமையை சரியாச் சொல்லியிருக்கீங்க..
அது என்ன 'டை'யிலிருந்து திருடினதுன்னு எழுதி இருக்கீங்க? அது 'டைரி' யா என்ன?
எனக்கு பழைய பாடல் வரி ஒன்று நினைவுக்கு வருகிறது..
'நீ நிலவோ ஏன் தொலைவோ'ன்னு.
இந்த வாரம் ஒண்ணும் அவ்ளோ விறுவிறுப்பு இல்லீங்களே.. சரி.. வழக்கம் போல நெக்ஸ்ட் எபிஸொட்ட்க்கு வெயிட்டிங்க்க்க்க்....
cooool!!
waiting for the next part!! :-)
Eager to see what happens next! :-)
\\ப்ரகாஷா படக்கென்று இறங்கி வந்தான். ரம்யா ஓடிப் போய் அவனிடம் ஒட்டிக்கொண்டாள்.\\
\\ப்ரகாஷாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். \\
\\ஆடிக்கொண்டே ஆட்டோ பக்கத்தூருக்குக் கிளம்பியது. ப்ரகாஷாவை இறுகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் ரம்யா.\\
ராகவன், கதை நல்லா நகர்த்திட்டு போறீங்க,
ஆங்காங்கே ரம்யா ,ப்ரகாஷவின் நெருக்கத்தை வெளிப்படுதுவது உங்கள் கதைநடைக்கு அழகு சேர்க்கிறது!
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க ராகவன்!
ரவி ரோட்டைப் பார்த்து வண்டியோட்டப்பான்னு அந்த புது மாப்பிள்ளையை வெச்சுக்கிட்டு நீ வந்த பொழுதே சொன்னேன். இப்போ பாரு இன்னும் மாப்பிளையாகவே ஆகாத ப்ரகாஷாவிற்கு உன்னால பிரச்சனை. ஆனா உன்னால இன்னும் பெரிய பிரச்சனை வருமுன்னு நினைச்சேன்..எதோ இந்த மட்டோட போச்சே!
கே ஆர் எஸ் மேலே ஏங்க இந்தக் கொலை வெறி????
மொப்பெட் ஆளு என்ன ஆனாரு?
பாவம்.....
//வடக்கத்திய ஆலூ சாட்டுகளையும் வெளிநாட்டு பர்கர்களையுமே பார்த்திருந்த அவனுக்குத் தென்னாட்டுத் தேங்காய்ச்சாதம் புதுமையாகத் தெரிந்தது//
ச்ச்சே...என்ன ஜிரா இது!
தேங்காய்ச் சாதம் வர்ணனை சரியே இல்ல போங்க!
//இரண்டு மூன்று பேர் கே.ஆர்.எஸ்சை வெளியே பிடித்து இழுத்தார்கள். குனிய வைத்து தரும அடிகளை அள்ளி வழங்கினார்கள் அந்தக் கலியுக வள்ளல்கள்//
அடா அடா அடா
அடி மனத்து ஆசை எப்படி எல்லாம் பரிணமிக்கிறது பாருங்க! :-)
அந்த இரண்டு மூன்று பேர் யாரு?
ஜி.இராகவன், ஜிரா, கோ.இராகவனா? :-)))
//வானில் நிலவு
நிலவில் காதல்
கைகளில் நீளமில்லை//
ப்ரேம கவி, நோடி சந்தோஷா ஆகிதே!
பிரகாஷா -
கைகளின் நீளம் யாருக்கும் இல்லை!
கண்களின் நீளம் நீஏன் காண வில்லை?
நல்ல விறுவிறுப்பு..
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)
ஜிரா..
இந்தவாரம் சற்று சுருக்கமாக முடித்தது போல் இருக்கிறது...
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்...
காதல் குளிர் க்ரைம் குளிரா மாறிடும் போலிருக்கே !!!
//போத்தீஸ் ஆடித்தள்ளுபடிக் கூட்டம் போல காரைச் சுற்றிக் கூட்டம்//
எப்டி இப்படி சிறப்பா உதாரணம் காட்டறீங்க. :)
கடைசில கே.ஆர்.எஸ் இவ்ளோதான் பண்ணுனாரா? வில்லன் சரியில்லீங்க :)
கவிஜ எனக்கு ஒன்னும் புரியல. சரி புரியாம இருக்கறதால இது புது கவிதைனு வெச்ச்க்கலாம் :)
// Raghavan alias Saravanan M said...
ஜிரா..
நான் தான் முதல் ஆளா..//
வாங்க ராகவரே வாங்க
// சரிங்க.. சஸ்பென்ஸ் பெருசா இருக்குமுன்னு எதிர்பார்த்தேன்.. ஆனா கொஞ்சம் சப்புன்னு தான் இருந்துச்சு!
ஆரம்பத்துலயே நீங்க கே.ஆர்.எஸ். மேல ஒரு கண் வைக்கச் சொன்னதனால் நம்ம ஆளு இப்படித்தான் கோக்குமாக்கா எதாவது பண்ணுவான்னு எதிர்பார்ப்பு இருந்துச்சு. சரியாப் போச்சு. நல்லவேளை வேறு மாதிரியா வில்லங்கம் ஏதும் நடக்கல.. //
வில்லங்கம்னா என்னங்க? தெரிஞ்சா சொல்லுங்க... அதையும் கதைல சேப்போம். ;)
// பிரேம கவிதே முதல் தவணை படித்ததும் புரியல.. ஆனா ரெண்டாவது தவணையில் சூப்பரா புரிஞ்சது.
பிரகாஷாவோட மனநிலமையை சரியாச் சொல்லியிருக்கீங்க..
அது என்ன 'டை'யிலிருந்து திருடினதுன்னு எழுதி இருக்கீங்க? அது 'டைரி' யா என்ன? //
ஆமாங்க டைரிதான். ரி விட்டுப் போச்சு :)
// எனக்கு பழைய பாடல் வரி ஒன்று நினைவுக்கு வருகிறது..
'நீ நிலவோ ஏன் தொலைவோ'ன்னு. //
இது யாரு எழுதுனதுங்க?
// இந்த வாரம் ஒண்ணும் அவ்ளோ விறுவிறுப்பு இல்லீங்களே.. சரி.. வழக்கம் போல நெக்ஸ்ட் எபிஸொட்ட்க்கு வெயிட்டிங்க்க்க்க்.... //
அதெல்லாம் காரணமாத்தான். ;)
//வில்லங்கம்னா என்னங்க? தெரிஞ்சா சொல்லுங்க... அதையும் கதைல சேப்போம். ;)
//
ஆஹா.. இது என்னப்பு இது? உங்களுக்குத் தெரியாததா? அதை நான் சொல்றதா? :)
//இது யாரு எழுதுனதுங்க?//
மு. மேத்தா. அவருடைய ஒரு புத்தகத்தில் படித்தேன். அதில் அவர் இசைஞானி இளையராஜாவுக்கு உள்ளே ஒளிந்திருந்த கவிஞரின் ஆற்றலைச் சொல்வதற்காக இதை மேற்கோள் காட்டியிருப்பார்.
அவர் முதலில்,
"ஏன் தொலைவோ நீ நிலவோ" ன்னு தான் எழுதினாராம்.
இசையமைக்கும் போது இளையராஜா அவர்கள் பார்த்து விட்டு, "இதை இப்படி மாற்றி அமைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்குமே" ன்னு சொல்லி இப்படி மாற்றி அமைச்சாராம்.
"நீ நிலவோ ஏன் தொலைவோ" ன்னு.
அந்தப் புத்தகம் பெங்களூரில் இருக்கிறது. பின்னர் இதைப் பற்றிய முழு விபரத்தைத் தருகிறேன் நீங்கள் விருப்பப்பட்டால்.
//அதெல்லாம் காரணமாத்தான். ;)//
ரைட்டேய்.....
hurray KRS ku sema addiya... :))
அதானே அந்த ஸ்கூட்டர் காரர் என்ன ஆனாரோ.
கேஆர் எஸ் இந்தப் பாடுபட வேண்டாம்:))
விட்டுப்போன மூணு பதிவுகளை இன்னிக்குத்தான் படித்தேன்....சீக்கீரமா அடுத்த பதிவ போடுங்க சாரே..
இன்னிக்குத்தான் எல்லா பாகத்தையும் முழுசா படிச்சு முடிச்சேன்.
கதை நல்லாப்போகுது.
இருந்தாலும் courtshipஅ என்னமோ டெஸ்ட் மேட்ச் அளவுக்கு கொண்டு போறீங்க.
பிரகாஷா (கே.பி தான் இப்படியில்லாம் பேரு வப்பாரு :)) நேரடியா 'எங்கம்மா அப்பாகிட்ட பேசவேண்டியது என் பொறுப்பு. ரம்யா, நீ உறுதியா கமிட்மெண்ட் கொடுத்தா, அவங்கள நான் பாத்துக்கறேன்'னு சொல்லிருந்தா இன்னும் ஒரு எபிசோட் குறையுமோ? :P
அப்புறம் கே.ஆர்.எஸ்னு வில்லன வச்சுகிட்டு என்ன வெறும் சாலைவிபத்து பண்ண வச்சுட்டீங்க???? :P
//பேர் தெரியாத ஊரிலிருந்து பேர் தெரியாத ஊருக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார்கள். நொய்டா போனார்களா?//
இல்ல திரும்ப வந்து கே.ஆர்.எஸ் வில்லத்தனம் செய்வாரா? வெயிட்டிங்.
// கோபிநாத் said...
நல்ல விறுவிறுப்பு..
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;) //
நன்றி கோபி. நெஜமாத்தான் சொல்றீங்களா? :)
// NiMaL said...
ஜிரா..
இந்தவாரம் சற்று சுருக்கமாக முடித்தது போல் இருக்கிறது...
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்...//
நானுந்தாங்க. :)
// தேவ் | Dev said...
காதல் குளிர் க்ரைம் குளிரா மாறிடும் போலிருக்கே !!! //
ஹா ஹா...கிரைமா மாத்தலாமா வேண்டாமா? நீங்களே சொல்லுங்க.
"வடக்கத்திய ஆலூ சாட்டுகளையும் வெளிநாட்டு பர்கர்களையுமே பார்த்திருந்த அவனுக்குத் தென்னாட்டுத் தேங்காய்ச்சாதம் புதுமையாகத் தெரிந்தது"
"சாலையைப் பெட்ரோல் கழுவியது".
-----புதுமையான வரிகள் - தொடரட்டும்
Post a Comment