Sunday, August 27, 2006

1. லம்பயீ கரியோ லொவீயா - பாகம் ஒன்னு

வெயிலும் வெக்கையும் கொளுத்தும் ஒரு நல்ல ஞாயிற்றுக் கிழமையிலே சென்னையிலே பல திட்டங்கள் போட்டு ஒன்றும் நடக்காமல் என்னென்னவோ நடக்கக் கண்ட உத்தம பொழுதினிலே வலைப்பதிவர் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விதித்திருந்த தலையெழுத்திலே மாட்டிக் கொண்டு முழிக்கக் கண்டார் ஜி.ரா என்று அன்போடு(!) நண்பர்களால் அழைக்கப்படும் கோ.இராகவன். அதாவது ஆகஸ்டு 20ம் தேதி.

காலையிலிருந்து பல வேலைகளில் மாட்டிக் கொண்டு ஜிரா பிழிந்து எடுக்கப் பட்ட கரும்பு போல இருந்த ஜி.ரா பைக்கை எடுத்துக் கொண்டு நுங்கம்பாக்கம் விரைய வேண்டியதாயிற்று. கூடவே படபடவென றெக்கையை அடித்துக் கொண்டு தோகையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மயிலாரும் பறந்தார்.

ஒன்வே டூவேக்களிலெல்லாம் நுழைந்து திருப்பங்களில் நெளிந்து பன்றிமலைச் சித்தர் ஆசிரமம் வழியாகச் சென்று சடக்கென்று நுழைந்த இடம் Alliance Francaise. தமிழை விட ஃபிரெஞ்ச்சை ஒழுங்காகத் தமிழர்கள் பலர் உச்சரிக்கும் கலைவளர்க்கும் புண்ணிய பூமி அது. தீடீரென்று பாரீசுக்குள் நுழைந்தது போல இருந்தது என்று பொய் சொல்ல மனமில்லாததால் நேரடியாக சொல்ல வந்ததிற்கு வருகிறேன்.

போண்டாவும் பாசந்தியும் இல்லாமல் வலைப்பதிவர்கள் சந்திக்க முடியுமா என்று பட்டி மன்றம் வைக்க வேண்டியிதில்லை என்று நிருபிக்கவோ என்னவோ எஸ்.பாலபாரதியும், அருளும், ப்ரியனும், ஜி.ராவும் AF வாசலில் கூடினார்கள். கூடவே சாட்சியாக மயிலார்.

யார் யார் யார் என்று தெரியாமல் அரிமுகமாக இருக்காமல் படக்கென்று அறிமுகம் செய்து கொண்டார்கள். ஆடு கிடைக்குப் போகும். இல்லையென்றால் பிரியாணியாக கடைக்குப் போகும். இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? இதில் மாபெரும் சதி இருக்கும் என்று எல்லாரும் நினைப்பதற்கு வாய்ப்பிருப்பதால் அப்படியே அனைவரும் நினைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பின் நவீனத்துவத்திலிருந்து எக்ஸிஸ்டென்ஷியலிசம் வழியாக மரபுக்கவிதைக் காவியங்களுக்குள் நுழையும் வழிமுறைகளைப் பற்றியெல்லாம் பேசத் தெரியாயதாலோ என்னவோ நேராக அனைவரும் டீ குடிக்கப் போனார்கள். டீ என்பது தமிழா என்று கேட்கும் அறிவு அதி ஜி.ராவுக்கு அந்நேரம் இல்லாததால் அனைவரும் நிம்மதியாக டீ குடித்தார்கள்.

இவர்கள் டீ குடித்த வேளையில் மயிலார் ஜி.ராவின் காதில் போய் "நேரமாச்சு. வர்ரியா...நான் போகட்டுமா? நீ வேணா இவங்க கிட்ட வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இரு" என்று மெதுவாகக் கேட்டது எல்லார் காதிலும் விழுந்து தொலைத்தது. பாபா(அதாங்க பாலபாரதி)வும் அப்படியே சமாளித்துக் கொண்டு "ஓ! போலாமே...நேரமாச்சு" என்று சமாளித்தார். அந்த அவசரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒழுங்காக வரவில்லை. ஆனாலும் கொடுக்கிறேன். யாரையாவது கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே எல்லார் கையிலும் நுழைவுச் சீட்டை வைத்துக் கொண்டு நுழைய இடம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேளையில் சிகப்பு நிற போஸ்டரைப் பார்த்துக் கொண்டே இரண்டு மாடிகளைத் தாண்டி அரங்கத்துக்குள் நுழைந்தோம். நூறு பேருக்கு மேல் யாரும் நுழைந்தால் எல்லாரும் வெளியே வந்து விட வேண்டிய அளவுக்கு ஒரு அரங்கம். ஆனால் வசதியாக இருந்தது. மேலே ஏறியிருப்பது மேடை என்பதைப் பொய்யாக்கி மேடையை கீழே வைத்திருந்தார்கள். பார்வையாளர்கள் மாடிப் படியில் உட்கார்ந்து கொண்டு கீழே பார்ப்பது போல ஒரு அமைப்பு.

ஆளாளுக்கு இருந்த இடத்தில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் அடித்துப் பிடித்து அமர்ந்தோம். குற்றம் காணின் அதை உரக்கச் சொல்வோம் என்பது போல "எனக்கு மறைக்குது...ஒனக்கு இடிக்குது" என்று குரலெழுப்பிக் கொண்டனர் சிலர். ஆனாலும் நாகரீகத்தில் உச்சியில் இருக்கும் நாம் மறைக்கிறது என்று சொல்லிக் கொள்ளக் கூச்சப்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தனர் பலர். மயிலார் தோகையை நன்றாக விரித்துக் கொண்டு வசதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் மட்டும் யாரும் மறைக்கிறது தோகையை மடக்குங்கள் என்று சொல்லவேயில்லை.

சரி. என்னதான் நடக்கப் போகிறது. நாடகம்தான். வேறென்ன. உலகமே ஒரு நாடகமேடையாம். அப்படியானால் இது நாடகத்தில் நாடகமா? கதைக்குள் கதை மாதிரி.

தொடரும்....

(படம் போடுறதுல சின்ன பிரச்சனை....சாந்தரம் வீட்டுக்குப் போயி படத்தப் போடுறேன்)

16 comments:

said...

சந்திச்சதெல்லாம் சரி ஜீ.ரா.. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பை ஏற்பாடு செய்த (பிஸியான) நபரைப் பற்றிச் சொல்லாமயே விட்டுட்டீங்களே!!

said...

// பொன்ஸ் said...
சந்திச்சதெல்லாம் சரி ஜீ.ரா.. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பை ஏற்பாடு செய்த (பிஸியான) நபரைப் பற்றிச் சொல்லாமயே விட்டுட்டீங்களே!! //

ஏணி தோணி அன்னாவி நாரத்தை பொன்ஸ் :-)

said...

///
லம்பயீ கரியோ லொவீயா
///

என்ன அர்த்தங்க இதுக்கு?

said...

தலைவா,

சுறுசுறுப்பாக எழுத்து நகர்கிறது. சுவையாகவும்.

மயிலார் என்ன சாப்பிட்டார் என்று தெரிந்துகொள்ள ஆசை. தங்களுடன் வந்தது பெண் மயிலா?

அதெல்லாம் சரி. "லம்பயீ கரியோ லொவீயா" என்பதற்கு என்ன அர்த்தம்?

said...

பாரீஸ்லே ஃப்ரெஞ்சு நாடகம் பார்த்தது நினைவுக்கு வந்துச்சா? :-)

said...

//என்னென்னவோ நடக்கக் கண்ட உத்தம பொழுதினிலே வலைப்பதிவர் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விதித்திருந்த தலையெழுத்திலே//

சம்திங்...சம்திங் ;-}

அப்பால இன்னா ஆச்சி???

said...

நூறு பேருக்கு மேல் யாரும் நுழைந்தால் எல்லாரும் வெளியே வந்து விட வேண்டிய அளவுக்கு ஒரு அரங்கம்.//

என்ன ராகவன், இதுக்கு என்ன அர்த்தம்?

அதாவது நூறுக்கு மேல போன அரங்கம் யாரையும் வச்சிக்காதா:)

said...

லம்பயீ கரியோ லொவீயா,
கக கழு கதை பாட்டு. என்.எஸ்.கே பாட்டு போட்டதுக்கு நன்றி.
நிறைய வயசாயிட்டதினாலே மத்தது புரியலை.
ரொம்ப அவசரம், மைசூர்பாகு,போண்டா சந்திப்பில் உண்டா?

said...

// குமரன் எண்ணம் said...
///
லம்பயீ கரியோ லொவீயா
///

என்ன அர்த்தங்க இதுக்கு? //

குமரன் எண்ணம், நீங்க கொஞ்சம் பொறுத்திருக்கனும். ஆனாலும் இந்த வரிகள் எங்கருந்து வந்ததுன்னு வள்ளி மேல சொல்லியிருக்காங்க பாருங்க.

said...

// Muse (# 5279076) said...
தலைவா,

சுறுசுறுப்பாக எழுத்து நகர்கிறது. சுவையாகவும். //

நன்றி ம்யூஸ்.

// மயிலார் என்ன சாப்பிட்டார் என்று தெரிந்துகொள்ள ஆசை. தங்களுடன் வந்தது பெண் மயிலா? //

மயிலார் ஒன்னும் சாப்பிடலை. மயிலார் பத்தி ஒங்களுக்குத் தெரியலைன்னு நெனைக்கிறேன். தேசிகனோட விக்கிரமாதித்தனோட இருக்குற வேதாளம் போல நமக்கு மயிலார்.

// அதெல்லாம் சரி. "லம்பயீ கரியோ லொவீயா" என்பதற்கு என்ன அர்த்தம்? //

ஹி ஹி....அடுத்த பதிவு வரைக்கும் பொறுமையா இருக்கனுமே!

said...

// துளசி கோபால் said...
பாரீஸ்லே ஃப்ரெஞ்சு நாடகம் பார்த்தது நினைவுக்கு வந்துச்சா? :-) //

டீச்சர், பாரீசுல போயி நாடகத்தையா பாத்தேன்... :-)

// சுதர்சன்.கோபால் said...
//என்னென்னவோ நடக்கக் கண்ட உத்தம பொழுதினிலே வலைப்பதிவர் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விதித்திருந்த தலையெழுத்திலே//

சம்திங்...சம்திங் ;-}

அப்பால இன்னா ஆச்சி??? //

அது வந்துங்க...அது வந்துங்க...அது வந்துங்க....லம்பயீ கரியோ லொவீயா...

said...

// tbr.joseph said...
நூறு பேருக்கு மேல் யாரும் நுழைந்தால் எல்லாரும் வெளியே வந்து விட வேண்டிய அளவுக்கு ஒரு அரங்கம்.//

என்ன ராகவன், இதுக்கு என்ன அர்த்தம்?

அதாவது நூறுக்கு மேல போன அரங்கம் யாரையும் வச்சிக்காதா:) //

ஜோசப் சார்....நீங்க டெக்னிகலா கேள்வி கேக்குறீங்க. டயர்ல இவ்வளவு காத்து இருக்கும்னு ஒரு வரமுறை இருக்கு. அதுக்கு மேல காத்து உள்ள போனா என்னாகும்? எல்லாக் காத்தும் வெளிய வந்துதான ஆகனும்?

said...

// valli said...
லம்பயீ கரியோ லொவீயா,
கக கழு கதை பாட்டு. என்.எஸ்.கே பாட்டு போட்டதுக்கு நன்றி.
நிறைய வயசாயிட்டதினாலே மத்தது புரியலை.
ரொம்ப அவசரம், மைசூர்பாகு,போண்டா சந்திப்பில் உண்டா? //

வாங்க வாங்க ரொம்பச் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க...என்.எஸ்.கிருஷ்ணன் பாட்டுத்தான். அதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன தொடர்புன்னு அடுத்த பதிவுல தெரிஞ்சிக்கலாம்.

மைசூர்பாகு, போண்டா எல்லாம் உண்டு. ஆனா சந்திப்பில் இல்லை.

said...

ராகவா கலக்கறயே தம்பி.

அப்படியே நாடகத்தைப் பத்தியும் கொஞ்சம் எடுத்துவுடறது தானே...

said...

ராகவன்,
//ஏணி தோணி அன்னாவி நாரத்தை பொன்ஸ் //
பொன்ஸ் அப்படி என்ன கேட்டுட்டாங்கன்னு இப்படி திட்டறீங்க?! :)

said...

// அருள் குமார் said...
ராகவன்,
//ஏணி தோணி அன்னாவி நாரத்தை பொன்ஸ் //
பொன்ஸ் அப்படி என்ன கேட்டுட்டாங்கன்னு இப்படி திட்டறீங்க?! :) //

அவசரப்படாதீங்க அருள்...பொன்ஸ் வந்து படிக்கட்டும்....எதுவும் புரியலைன்னா அப்புறமா அக்கு வேற ஆணி வேற விளக்குவோம். சரியா?

// மஞ்சூர் ராசா said...
ராகவா கலக்கறயே தம்பி.

அப்படியே நாடகத்தைப் பத்தியும் கொஞ்சம் எடுத்துவுடறது தானே... //

கண்டிப்பாங்க...அடுத்த பதிவு வராமலாப் போயிரும்...கண்டிப்பா நாடகத்தப் பத்திச் சொல்லீருவோம்.