Monday, February 06, 2006

ணின் பின்புறத்தில் ஓங்காரம்

என்ன தலைப்பு தப்பா இருக்குன்னு தோணுதா? அப்ப "பெண்"னுங்குற சொல்ல முன்னாடி போட்டுக்கோங்க. அதிர்ச்சியாகாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா விஷயத்துக்கு வருவோம்.

இது நடந்து சரியா அஞ்சு வருசம் ஆச்சு. நடந்தது பெல்ஜியத்துல. அப்ப பெல்ஜியத்தோட ஆண்ட்வெர்ப் நகரத்துல தங்கீருந்தோம். நான் இருந்த நகரங்கள்ளயே எனக்கு ரொம்பப் பிடிச்ச நகரம் அதுதான். வசதிக்கு வசதி. சுத்தத்துக்குச் சுத்தம்.

வார நாட்கள்ள வேல. சனி-ஞாயிறுன்னா ஊரு சுத்த வேண்டியதுதான. அப்படி அந்த வாரக்கடைசீல ஹண்சூர் லெஸ்ஸே (Han-Sur-Lese) போலான்னு முடிவு செஞ்சோம். ஊர்ப் பேரு நினைவிருக்கு. ஆனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் இருக்கலாம்.

முதலில் ஜெமிலி என்ற இடத்துக்கு ரயிலில் போய் அங்கிருந்து ஹண்சூர் லெஸ்ஸேக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். ஹண்சூர் லெஸ்ஸேயில் அழகான சுண்ணக் குகைகள் இருக்கின்றன. உள்ளேயே படகிலும் போக முடியும். வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரங்களும் செய்திருப்பார்கள். ஐரோப்பாவில் இருப்பவர்கள் ஒருமுறையேனும் போக வேண்டும். மழைக் காலத்தில் போகக் கூடாது. ஏனென்றால் குகைக்குள் தண்ணீர் வரத்து அதிகாம இருக்கும். உள்ளே நுழைவதே கடினம்.

சரி. விஷயத்துக்கு வருவோம். ஹண்சூரப் பாத்துட்டு திரும்பி வந்து ஜெமிலியில ரயிலப் பிடிக்கக் காத்திருந்தோம். இன்னும் ஒன்னர மணி நேரம் இருக்கு. ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள கதகதன்னு இருக்கு. ஜம்முன்னு உக்காந்திருந்தோம்.

அப்போ பக்கத்துல கொஞ்சம் தள்ளி உக்காந்திருந்த ஒரு பெரிய அக்காவுக்கு கோக்கு குடிக்கிற ஆச வந்து எந்திருச்சு நடந்தாங்க. கோக்கு மெஷின் எங்களுக்கு முன்னாடிதான் இருந்தது. அந்த அக்கா கோக்கு மெஷின்ல ஃபிராங்க்ஸ்கள தள்ளும் போதுதான் அதக் கவனிச்சோம்.

அந்தக்கா போட்டிருந்தது ஒரு பாவாடையும் தொளதொளன்னு ஒரு சட்டை மாதிரியும். அந்தப் பாவாடையோட டிசைன் என்ன தெரியுமா? தமிழ் எழுத்துகள். உயிரெழுத்து உயிர்மெய்யெழுத்துன்னு எதையும் விடலை. ஆயுத எழுத்தும் இருந்தது. எங்கன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா....நமக்கு முக்கியம் குடிலைதான்.

குடிலைன்னா ஓம். ஓங்காரத்துக்குத்தான் குடிலைன்னு பேரு. இந்தக் குடிலை அந்தப் பெண்ணோட பின்புறத்துல நட்ட நடுவுல இருந்தது.

இத மொதல்ல நான் கவனிக்கலை. அலஞ்ச அலுப்புல லேசா அசந்தாப்புல இருந்தேன். கூட இருந்த மலையாளி நண்பன் தான் இதப் பாத்து எனக்குச் சொன்னான். எனக்கு அலுப்பெல்லாம் போச்சு.

இந்தப் பாவாடைய எங்க வாங்கீருப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தேன். ஒன்னும் தோணலை. நம்மூர்ல நெஞ்ச பாவாடையாக்கூட இருக்கலாம். இல்லைன்ன டிசைனரு வேருன்னு யாராவது புது டிசைனரு, இந்த ஐடியா மூளைல உதிக்கவும் நெஞ்சதா இருக்கலாம்.

எதுவா இருந்தா என்ன? ஓங்காரங்குறது இறை தத்துவம். அதப் பின்னாடி வைக்கிறதான்னு மொதல்ல ரத்தம் கொதிச்சது. சைவ சித்தாந்தத்துல என்னதான் முருகா சிவனேன்னு இருந்தாலும் கடைசீல எல்லாம் ஓங்காரந்தான்.

சேவல் ஓங்காரத்தோட ஒலி வடிவம். மயில் ஒளி வடிவம். அதுதான் நாத விந்து. நாதம் சேவல். விந்து மயில். மயில்தோகை விந்து வடிவத்துலதான இருக்கு. இப்பிடி இன்னும் நெறைய அதப் பத்திச் சொல்லலாம்.

எப்பிடிக் கும்பிட்டாலும் எல்லாம் கடைசீல ஓங்காரத்தான். அந்த ஓங்காரத்தைப் பாவாடைல...அதும் பின்னாடியா?

சரி. கழுத. இதென்ன வெறும் குறியீடுதான. இதப் பாவாடைல போட்டதால என்ன கொறஞ்சு போச்சு! அங்க இருக்குறதால இதோட மதிப்புக் கொறஞ்சு போகுமா! கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! இப்பிடியெல்லாம் சொல்லிக் கண்டுக்காம விட்டுட்டேன்.

"தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"னு படிச்சது நினைவுக்கு வந்தது. அட! தாய் தடுத்தாத்தான! நம்ம தாய்தான் ஊருக இருக்காங்களே. தடுக்கலைலன்னு பேசாம விட்டுட்டேன்.

அடுத்த வாட்டி "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது"ன்னு ஓதும் போது அந்த அக்காவோட பின்புறமோ அந்த ஓங்காரமோ நினைவுக்கு வரலை. மறந்தே போச்சு.

சரி. இத எதுக்கு இப்ப சொல்றேன்னு கேக்குறீங்களா! என்னவோ தெரியலை. சொல்லமுன்னு தோணிச்சு. நேத்து ராத்திரி ஒரு விஷயத்தை யோசிக்கும் போது இது நினைவுக்கு வந்தது. அதான் சொல்றேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

50 comments:

இலவசக்கொத்தனார் said...

//சரி. கழுத. இதென்ன வெறும் குறியீடுதான. இதப் பாவாடைல போட்டதால என்ன கொறஞ்சு போச்சு! அங்க இருக்குறதால இதோட மதிப்புக் கொறஞ்சு போகுமா! கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! இப்பிடியெல்லாம் சொல்லிக் கண்டுக்காம விட்டுட்டேன்.//

வெறும் குறியீடுகளுக்காக இன்று எவ்வளவு சண்டைகள். எல்லோருக்கும் இதைப்போல விட்டுவிடும் மனப்பான்மை இருந்தால் உலகில் சமாதானமே கொடிகட்டி பறக்கும்.

ஆமாம். நேத்து ராத்திரி என்ன யோசிக்கும் போது இந்த பெண்ணின் பின்புறம் ஞாபகத்திற்கு வந்தது? அதைச் சொல்லவே இல்லையே. ;)

கைப்புள்ள said...

ராகவன்,
நீங்க பேசாம வந்தது தான் எனக்கும் சரினு படுது. சரி...சுண்ணக் குகைன்னீங்களே அங்கே தானே இந்த ஸ்டாலக்டைட்(Stalactite), ஸ்டாலக்மைட்(Stalagmite) இதெல்லாம் இருக்கும்...கரெக்டா?

மேலும் உங்க புண்ணியத்துல ஓங்காரத்தைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன் இன்னிக்கு.

ஏஜண்ட் NJ said...

//ஆயுத எழுத்தும் இருந்தது. எங்கன்னு நான் சொல்ல மாட்டேன்.

இந்தக் குடிலை அந்தப் பெண்ணோட பின்புறத்துல நட்ட நடுவுல இருந்தது.

//

அ(ட)ப்பாவி ராகவா...!!

பதிவு எழுத ஒமக்கு எங்கெங்கோயொ இருந்து மேட்டர் கெடக்குதுப்பா..!!!



//இத எதுக்கு இப்ப சொல்றேன்னு கேக்குறீங்களா! என்னவோ தெரியலை. சொல்லமுன்னு தோணிச்சு.//

Understood!!
;-)


//ஓங்காரங்குறது இறை தத்துவம். அதப் பின்னாடி வைக்கிறதான்னு மொதல்ல ரத்தம் கொதிச்சது. //

நல்ல வேள... ச்சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், நீர் மட்டும் ஆத்திரத்துல ஓடிப்போயி... அந்த ஓங்காரத்த பறிச்சு வீசி இருந்திருந்தா.... முருகா! முருகா!!!

Unknown said...

ராகவன்,

ம்ம் பெண்ணின் பின்புறம் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கு.

எது எப்படி இருந்தாலும் நீங்க உங்கக் கருத்தை அவங்க கிட்ட உரத்துச் சொல்லியிருக்கணும்ங்கறது என் கருத்து

G.Ragavan said...

// வெறும் குறியீடுகளுக்காக இன்று எவ்வளவு சண்டைகள். எல்லோருக்கும் இதைப்போல விட்டுவிடும் மனப்பான்மை இருந்தால் உலகில் சமாதானமே கொடிகட்டி பறக்கும். //

ஆமாம். சமாதானம் பெரியதுதான். அதை உருவாக்குவது மிகக் கடினம்.

// ஆமாம். நேத்து ராத்திரி என்ன யோசிக்கும் போது இந்த பெண்ணின் பின்புறம் ஞாபகத்திற்கு வந்தது? அதைச் சொல்லவே இல்லையே. ;) //

அதெயெல்லாம் சொல்ல முடியுமா? அது ரகசியம். பரம ரகசியம். நீங்களா ஏதும் நெனச்சுக்கனும்னா நெனச்சுக்கோங்க.

G.Ragavan said...

// ராகவன்,
நீங்க பேசாம வந்தது தான் எனக்கும் சரினு படுது. சரி...சுண்ணக் குகைன்னீங்களே அங்கே தானே இந்த ஸ்டாலக்டைட்(Stalactite), ஸ்டாலக்மைட்(Stalagmite) இதெல்லாம் இருக்கும்...கரெக்டா? //

அதே அதே...கைப்புள்ளன்னு பேரு வெச்சுக்கிட்டு பெரிய புள்ளத்தனமா கேக்குறதப் பாருங்கடோய்! எட்டாப்புப் புத்தகத்துல இதெல்லாம் வருதா? ;-)

// மேலும் உங்க புண்ணியத்துல ஓங்காரத்தைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன் இன்னிக்கு. //

நான் சொன்னது ரொம்பக் கொஞ்சம். கொஞ்சத்துலயும் கொஞ்சம். கந்தர் அநுபூதி தொடர படிச்சிக்கிட்டு வாங்க. அங்க இன்னும் கொஞ்சம் கூடச் சொல்வேன்.

ஏஜண்ட் NJ said...

//பெண்ணின் பின்புறம் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கு.// - Dev said.


Dev ;-)

கலை said...

நாங்களும் போன வருட கோடை விடுமுறைக்கு பெல்ஜியம் போனபோது, அங்கே ஒரு சுண்ண குகைக்குப் போனோம். மிகவும் அருமையான ஒரு இடம்தான்.

Pavals said...

//நேத்து ராத்திரி ஒரு விஷயத்தை யோசிக்கும் போது இது நினைவுக்கு வந்தது. //

அப்படியென்னத்தை யோசிச்சீங்க.. ஓம்'காரமும், ஆய்த எழுத்து'ம் ஞாபகம் வர்ற மாதிரி ;-)

G.Ragavan said...

// அ(ட)ப்பாவி ராகவா...!!

பதிவு எழுத ஒமக்கு எங்கெங்கோயொ இருந்து மேட்டர் கெடக்குதுப்பா..!!! //

என்ன ஞான்ஸ்....எல்லாம் பார்க்குறது கேக்குறது கொள்றது வெச்சுத்தான். புதுசு புதுசா ஊற நம்ம மண்ட என்ன ஆத்துச் சொனையா! சந்தடி சாக்குல நம்மள அடப்பாவீன்னுடீரு...சரி. உண்மையத்தான சொல்லீருக்கீரு.


////இத எதுக்கு இப்ப சொல்றேன்னு கேக்குறீங்களா! என்னவோ தெரியலை. சொல்லமுன்னு தோணிச்சு.//

Understood!!
;-) //

அட புரிஞ்சு போச்சா....!

////ஓங்காரங்குறது இறை தத்துவம். அதப் பின்னாடி வைக்கிறதான்னு மொதல்ல ரத்தம் கொதிச்சது. //

நல்ல வேள... ச்சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், நீர் மட்டும் ஆத்திரத்துல ஓடிப்போயி... அந்த ஓங்காரத்த பறிச்சு வீசி இருந்திருந்தா.... முருகா! முருகா!!! //

அதச் சொல்லுங்க....அப்புறம் பாவாடை எரிப்புப் போராட்டம் நடந்திருக்குமோ இல்லையோ....அந்தக்கா என்னைய டொமேட்டோ சாஸாப் பிதுக்கியிருப்பாங்க. அதுவுமில்லாம அப்பத்தான் நானும் ஐடி இண்டஸ்டிரீல கொஞ்சம் முன்னேறத் தொடங்கியிருந்த சமயம். வெளிநாடெல்லாம் மொத வாட்டிப் பாக்குறேன் வேற.

G.Ragavan said...

// ராகவன்,

ம்ம் பெண்ணின் பின்புறம் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கு.

எது எப்படி இருந்தாலும் நீங்க உங்கக் கருத்தை அவங்க கிட்ட உரத்துச் சொல்லியிருக்கணும்ங்கறது என் கருத்து //

இப்பச் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னுதான். கண்டிப்பா பயந்து போய் இல்ல. இதெல்லாம் ஒரு மேட்டரான்னுதான்.

G.Ragavan said...

// நாங்களும் போன வருட கோடை விடுமுறைக்கு பெல்ஜியம் போனபோது, அங்கே ஒரு சுண்ண குகைக்குப் போனோம். மிகவும் அருமையான ஒரு இடம்தான். //

கலை, அந்த எடத்தோட பேரு ஞாபகம் இருக்கா?

மொதல்ல ரயில்ல குகை வாசலுக்குக் கூட்டீட்டுப் போவாங்க. அங்கயிருந்து குகைக்குள்ள கொஞ்ச தூரம் நடக்கனும். கடைசீல படகுலதான் கொகைக்கு வெளிய வரனும். அந்த இடந்தானா?

உள்ள ஒருத்தரு உயரத்துல இருந்து தீப்பந்தம் பிடிச்சிக்கிட்டே இருட்டுல ஓடி வருவாரே....அதெல்லாம் பாத்தீங்களா?

கைப்புள்ள said...

//அதே அதே...கைப்புள்ளன்னு பேரு வெச்சுக்கிட்டு பெரிய புள்ளத்தனமா கேக்குறதப் பாருங்கடோய்! எட்டாப்புப் புத்தகத்துல இதெல்லாம் வருதா? ;-)
//

எட்டாப்பு புத்தகத்துல இல்லீங்க...உதை வாங்குன நேரம் போக மீதி இருக்குற நேரத்துல கைப்பு(தேவ் வச்ச பேர்) டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்ப்பாரு இல்ல?அப்புறம் உங்கள மாதிரி சான்றோர் சொல் கேக்கறது தான் கைப்புள்ளக்கும் ஸ்டாலக்டைட் எல்லாம் கொஞ்சமா தெரிஞ்சிருக்கு.

குமரன் (Kumaran) said...

//நான் சொன்னது ரொம்பக் கொஞ்சம். கொஞ்சத்துலயும் கொஞ்சம். கந்தர் அநுபூதி தொடர படிச்சிக்கிட்டு வாங்க. அங்க இன்னும் கொஞ்சம் கூடச் சொல்வேன்.
//

ஆஹா...சந்தடி சாக்குல அப்புடியே கந்தரனுபூதிக்கும் விளம்பரமா? இராகவன், பின்னூட்டக் கலையை நல்லா ஃபாலோ பண்ணத் தொடங்கிட்டீங்க....வாழ்த்துக்கள்.

ramachandranusha(உஷா) said...

தேவுடா தேவுடா
ஏழுமல தேவுடா
சூடுடா சூடுடா
இந்த பசங்கள
சூடுடா!

G.Ragavan said...

// அப்படியென்னத்தை யோசிச்சீங்க.. ஓம்'காரமும், ஆய்த எழுத்து'ம் ஞாபகம் வர்ற மாதிரி ;-) //

நிச்சயமா மாதேவா சம்போ கந்தா இல்லை. (மாதே வா சம்போகந் தா இல்லைன்னு சொல்ல வந்தேன். புரிஞ்சதா ராசா?)

G.Ragavan said...

// எட்டாப்பு புத்தகத்துல இல்லீங்க...உதை வாங்குன நேரம் போக மீதி இருக்குற நேரத்துல கைப்பு(தேவ் வச்ச பேர்) டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்ப்பாரு இல்ல?அப்புறம் உங்கள மாதிரி சான்றோர் சொல் கேக்கறது தான் கைப்புள்ளக்கும் ஸ்டாலக்டைட் எல்லாம் கொஞ்சமா தெரிஞ்சிருக்கு. //

கைப்பு (நானும் புதுப்பேரத் தெரிஞ்சிக்கிட்டேனே) வைப்பெல்லாம் பிரமாதமா இருக்கும் போதே நெனச்சேன். நம்மளப் போன்ற சான்றோர் சொல்லத்தான் கேட்டுருக்கனுமுன்னு. ம்ம்ம்ம்ம்...சான்றோர் ஆக்கிப்புட்டீரு....இப்ப பொய் கூடச் சொல்ல முடியாதே! (சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு). இனிமே நல்லா வெளக்க வேண்டியதுதான் மிச்சம். பாத்திரத்தச் சொன்னேய்யா!

G.Ragavan said...

// ஆஹா...சந்தடி சாக்குல அப்புடியே கந்தரனுபூதிக்கும் விளம்பரமா? இராகவன், பின்னூட்டக் கலையை நல்லா ஃபாலோ பண்ணத் தொடங்கிட்டீங்க....வாழ்த்துக்கள். //

கலையே என் வாழ்க்கையின் நிலை மாற்றினாய்....

குமரன் சொல்லுக்கு மறு சொல் உண்டோ! (நடிகர் திலகம் சொல்ற மாதிரி நெனச்சுக்கோங்க.)

ஆமா. நீங்க என்னோட எடத்துல இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? அதச் சொல்லுங்க குமரன்.

G.Ragavan said...

// தேவுடா தேவுடா
ஏழுமல தேவுடா
சூடுடா சூடுடா
இந்த பசங்கள
சூடுடா! //

என்ன உஷா....பாட்டாவே பாடீட்டீங்களா? சுடுடான்னு எழுத வந்து சூடுடான்னு எழுதீரலையே.....எதாவது தப்பா எழுதீருந்தேன்னா சொல்லீருங்க.

ENNAR said...

பெண் பின் பார்க்கக் கூடாது

rv said...

ஜிரா,
:)

உமக்கு அரசியல் தேவையா? அதுவும் பின்புற அரசியல். விட்டுட்டு சும்மா வந்தது நல்லதுதான்.

இலவசக்கொத்தனார் said...

//நிச்சயமா மாதேவா சம்போ கந்தா இல்லை. (மாதே வா சம்போகந் தா இல்லைன்னு சொல்ல வந்தேன். புரிஞ்சதா ராசா?)//

பிடியுங்க பட்டத்தை. நீங்கள் இனி 'வார்த்தை சித்தர்' என்றே உலகெங்கும் போற்றப்படுவீர்.

குமரன் (Kumaran) said...

//ஆமா. நீங்க என்னோட எடத்துல இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? அதச் சொல்லுங்க குமரன்.
//

செஞ்சிருப்பீங்க எல்லாம் இல்லை. செஞ்சிருக்கேன். அதை சொல்றேன். அம்முணி பக்கத்துல போயி, அம்முணி அம்முணி ஒரு பத்து நிமிஷம் உங்களோட பேசலாமான்னு கேட்டு, இந்து மதம்னா கேள்விப் பட்டிருக்கீங்களா? எங்க சாமி படம் (காயத்ரி தேவி படம் போட்டுருந்தது) எல்லாம் இந்த மாதிரி எடத்துல வர்ற மாதிரி போட்டுக்கினா எங்களுக்கு வருத்தமா இருக்காதா? உங்க மதம் என்னா? ஏசுநாதரையும் மேரி மாதாவையும் அந்த எடத்துல வர்றா மாதிரி நாங்க போட்டுக்குனா உங்களுக்கு வருத்தமா இருக்காதா? அப்படின்னெல்லாம் பக்குவமா சொல்லப் போயி அந்தம்மா உடனே ரெஸ்ட் ரூம் (அதாங்க நம்ம ஊருல டாய்லட் பாத்ரூம்ன்னு சொல்வாங்களே அதே தான்) போயி ட்ரஸ் மாத்திக்கிட்டு வந்துட்டாங்க. அதுக்கப்பறம் அந்த ட்ரஸ் போட்டாங்களா இல்லையான்னு தெரியாது. ஆனா அந்த மாதிரி ட்ரஸ் வாங்குறதுக்கு முன்னால இனிமே யோசிப்பாங்களே.

சிறில் அலெக்ஸ் said...

தெசியக்கொடியில ஜட்டி செஞ்சு போடுற பயலுக இவனுகளுக்கு ஓம்காரம் பத்தி என்ன தெரியப் போவுது.

சிக்காக்கோ ஏர்போர்ட்டில், கழிவறையில் ஒன்றுக்குப் போகும் கிண்ணத்தில் மூத்திரம் சிதறுவதைத்தடுக்க் இடப்பட்டிருக்கும் சிறிய matஐ அமெரிக்க அரசின் முத்திரை போல வடிவமைத்திருந்தார்கள்.

அந்தப் பெண்ணின் பின்புறம் ஓங்காரமில்லைன்னா பார்த்திருக்க மாட்டீங்க போலிருக்கிறதே?

ஓம் என்பதை 'அவும்' என்பதுபோன்று ஓதுவது ஒரு மூச்சுப் பயிற்சி. சோர்வு நேரும்போது கண்ணை மூடிக்கொண்டு, (அமைதியாக) செய்வது வழக்கம்.

இதைப்பத்தி ஏதாவது தகவலுண்டா?

சிறில் அலெக்ஸ் said...

//நிச்சயமா மாதேவா சம்போ கந்தா இல்லை. (மாதே வா சம்போகந் தா இல்லைன்னு சொல்ல வந்தேன். புரிஞ்சதா ராசா?)//

ஆஹாஹ ஹாஹா.

G.Ragavan said...

// பெண் பின் பார்க்கக் கூடாது //

என்னார். என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரியலையே....கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

G.Ragavan said...

// ஜிரா,
:) //

:-)

// உமக்கு அரசியல் தேவையா? அதுவும் பின்புற அரசியல். விட்டுட்டு சும்மா வந்தது நல்லதுதான். //

இராமநாதன், எனக்கெதுக்கு அரசியல். எனக்கு நல்லாத் தெரிஞ்ச ரெண்டு இயல் பொரியியலும் அவியியலும்தான். ரெண்டுலயும் இகர குறுக்கும் போட்டா பொரியலும் அவியலும் வரும். அதுதான் நல்லாத் தெரியும். :-)

G.Ragavan said...

// பிடியுங்க பட்டத்தை. நீங்கள் இனி 'வார்த்தை சித்தர்' என்றே உலகெங்கும் போற்றப்படுவீர். //

கொத்தனார்...கொஞ்சம் பொறுங்க..பட்டத்தை எனக்கு அவசரப்பட்டுக் குடுத்துறாதீங்க. அதுக்கு நான் தகுதியானவன் இல்லை.

இது வாரியார் எங்கேயோ எப்பொழுதோ சொல்லிப் படித்தது. எங்கே எப்பொழுது என்றுதான் தெரியவில்லை. ஆனால் வாரியார் சொன்னது என்று மட்டும் நினைவில் இருக்கிறது.

அவரைப் போன்ற தமிழ்மாமணிகள்தான் தமிழில் இவ்வளவு அழகாக விளையாட முடியும்.

G.Ragavan said...

// போயி ட்ரஸ் மாத்திக்கிட்டு வந்துட்டாங்க. அதுக்கப்பறம் அந்த ட்ரஸ் போட்டாங்களா இல்லையான்னு தெரியாது. ஆனா அந்த மாதிரி ட்ரஸ் வாங்குறதுக்கு முன்னால இனிமே யோசிப்பாங்களே. //

குமரன் என்ன சொல்றதுன்னு தெரியலை. பாராட்டவா..இல்லை..வேண்டாமான்னு ரொம்பக் குழப்பமா இருக்கு. அதுனால ஒன்னுமே சொல்லாம இங்கேயே நிப்பாட்டிக்கிறேன்.

G.Ragavan said...

// தெசியக்கொடியில ஜட்டி செஞ்சு போடுற பயலுக இவனுகளுக்கு ஓம்காரம் பத்தி என்ன தெரியப் போவுது. //

உண்மைதான் சிறில். ஒருவருக்கு நஞ்சு. இன்னொருவருக்கு அமுதம்னு சொல்லமலா சொல்லீருக்காங்க.

// சிக்காக்கோ ஏர்போர்ட்டில், கழிவறையில் ஒன்றுக்குப் போகும் கிண்ணத்தில் மூத்திரம் சிதறுவதைத்தடுக்க் இடப்பட்டிருக்கும் சிறிய matஐ அமெரிக்க அரசின் முத்திரை போல வடிவமைத்திருந்தார்கள். //

அடடா! அங்கேயாவது நாட்டப் பத்தித் தெரிஞ்சுக்கோங்கடான்னு வெச்சாங்களோ என்னவோ!

// அந்தப் பெண்ணின் பின்புறம் ஓங்காரமில்லைன்னா பார்த்திருக்க மாட்டீங்க போலிருக்கிறதே? //

நான் மொதல்ல பாக்கலைங்க. அங்க வெதுவெதுன்னு இருந்ததால...லேசா அலுப்புல சாஞ்சிருந்தேன். கூட வந்த நண்பந்தான் என்னைய தட்டி எழுப்பிக் காட்டுனான். அப்புறம் பாக்காம எப்படி இருக்க? நானே முழிச்சிருந்தாலும் கண்டிப்பா பாத்திருப்பேன். :-)

G.Ragavan said...

// ஓம் என்பதை 'அவும்' என்பதுபோன்று ஓதுவது ஒரு மூச்சுப் பயிற்சி. சோர்வு நேரும்போது கண்ணை மூடிக்கொண்டு, (அமைதியாக) செய்வது வழக்கம்.
இதைப்பத்தி ஏதாவது தகவலுண்டா? //

சிறில், ஓங்காரம் என்னும் குடிலையைப் பற்றி நிறையச் சொல்லலாம். எனக்குத் தெரிந்ததே கொஞ்சம். அதில் கொஞ்சத்தை இங்கு தருகிறேன்.

தமிழில் இறைவனை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் கடைசியில் அது ஓங்காரந்தான். ஓங்கார ரூபினி என்றுதான் அன்னைக்கும் பெயர். முருகனும் ஓங்கார வடிவானவந்தான். அவன் அப்பனும் அப்படித்தான்.

இந்த ஓங்காரந்தான் உலகத் தோற்றத்திற்கு ஆதாரம். ஒன்றுமில்லாமல் இருந்து எல்லாம் வந்தது உலகம். சைவ சித்தாந்தத்தில் உலகம் படக்கென்று வந்திடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வந்தது.

ஆனால் அப்படி கொஞ்சம் கொஞ்சமாக வருவதற்குத் தேவையான நிகழ்ச்சி படக்கென்று நடந்தது. கிட்டத்தட்ட big bang theory மாதிரி இருக்குல்ல.

முன்னமே சொன்ன மாதிரி ஒன்னுமில்லாம இருந்து எல்லாம் வந்ததுக்கு வருவோம்.

ஓம் அப்படீங்கறது இரண்டு எதிர் நிலைகளின் கலப்பு. ஓசையின்மையும் பெருத்த ஓசையும் கலந்தால் ஓங்காரம். இந்த ஓசையின்மையும் ஓசையும் கூடுமிடத்தில் ஓங்காரம் எழும்.

உங்க காத கையால மூடிக்கோங்க. ம்ம்ம்ம்ம்ம்னு சத்தம் வருதா. அது ஓங்காரத்தோட ஒருவகை. ஏன்னா அங்க காதுக்கு வெளிய இருக்குற அமைதியின்மையும் காதுல இருக்குற அமைதியும் கலக்குது. இதுல இரண்டுமே சீரிய நிலமைக்குப் போனால் ஓங்காரம் தெளிவாகக் கிடைக்கும்.

திருச்செந்தூர் கோயில் சுவத்துல ஒரு சிறிய பொந்து உண்டு. அந்தப் பக்கம் கடல். எப்பவும் கத்தும் கடலோசை. இந்தப் பக்கம் உட்பிரகாரம். அமைதியா இருக்கும். (இருக்கனும். ஆனா இப்ப இல்லை.) அந்தப் பொந்துல காது வெச்சாலே ஓம்னு தெளிவா கேக்கும். இப்ப கோயிலுக்கு உள்ளேயும் கூட்டம் பெருத்து ஓங்காரம் குறைச்சலாக் கேக்குது.

இன்னும் நிறையா சொல்லலாம். இப்ப இத்தோட நிப்பாட்டிக்கிறேன்.

கலை said...

//கலை, அந்த எடத்தோட பேரு ஞாபகம் இருக்கா?

மொதல்ல ரயில்ல குகை வாசலுக்குக் கூட்டீட்டுப் போவாங்க. அங்கயிருந்து குகைக்குள்ள கொஞ்ச தூரம் நடக்கனும். கடைசீல படகுலதான் கொகைக்கு வெளிய வரனும். அந்த இடந்தானா?

உள்ள ஒருத்தரு உயரத்துல இருந்து தீப்பந்தம் பிடிச்சிக்கிட்டே இருட்டுல ஓடி வருவாரே....அதெல்லாம் பாத்தீங்களா?//

முதலில் எழுதியபோது சட்டென்று இடம் ஞாபகத்தில் வரவில்லை. அது Han cave தான். நீங்கள் சொல்லியிருக்கும் அதே இடம்தான். குட்டி ரயில் (tram), குகைக்குள் நடை, அப்புறம் படகு எல்லாமே சரிதான்.

நாங்கள் போன அன்று அந்த tram க்கு 100 வயது பிறந்த நாள். ஆமாம், அங்கே சொன்னார்கள் அந்த tram 1905 ஆம் ஆண்டு அந்த நாளில்தான் ஓடத் தொடங்கியதாம். அதனால் அன்று குகைக்குள்ளே, சின்ன ஹரிக்கேன் விளக்குகள் வைத்து நமக்கெல்லாம் ஜூஸ் தந்தார்கள். குகைக்குள் ஒரு மேடையில் வாணவேடிக்கை காட்டுவார்களாமே. அன்று அது இல்லை, பதிலாக பிறந்தநாள் விருந்து. :)). அப்புறம் அந்த தீப்பந்த மனிதன் அந்த வழுக்கும் இடத்தில் என்ன வேகமாக ஓடி வந்தார். :) Really it was a very nice place.

கலை said...

http://anjalisplace.blogspot.com/2005_08_15_anjalisplace_archive.html

இங்க விடுமுறை 2 இல இருக்கிற படங்களை பாருங்க. நீங்க சொல்லி இருக்கிற இடமும் இருக்கு.

Unknown said...

இராகவரே (ரகரமும் டகரமும் மொழிமுதற் வாரா)...இது மாதிரி விஷயமெல்லாம் "முன் பின்னாகத்தான்" இருக்கும். கண்டுக்காதேம்மா....

ilavanji said...

ராகவன்!

இதனால் அறியப்படும் நீதி:
எங்கே இருந்தாலும் சந்தனம் மணக்கும்!

இதனால் அறியப்படும் தகவல்:
மயிலார் கூட இல்லைன்னா உமக்கெல்லாம் குளிர்விட்டுபோயிருது!!!

:)

G.Ragavan said...

// நாங்கள் போன அன்று அந்த tram க்கு 100 வயது பிறந்த நாள். ஆமாம், அங்கே சொன்னார்கள் அந்த tram 1905 ஆம் ஆண்டு அந்த நாளில்தான் ஓடத் தொடங்கியதாம். அதனால் அன்று குகைக்குள்ளே, சின்ன ஹரிக்கேன் விளக்குகள் வைத்து நமக்கெல்லாம் ஜூஸ் தந்தார்கள். குகைக்குள் ஒரு மேடையில் வாணவேடிக்கை காட்டுவார்களாமே. அன்று அது இல்லை, பதிலாக பிறந்தநாள் விருந்து. :)). அப்புறம் அந்த தீப்பந்த மனிதன் அந்த வழுக்கும் இடத்தில் என்ன வேகமாக ஓடி வந்தார். :) Really it was a very nice place. //

அதே அதே கலை. அஞ்சலி கூட அங்க எடுத்த போட்டோவுக்கான லிங்க்கை கீழ கொடுத்திருக்காங்க பாருங்க.

அந்த வண்ண வேடிக்கையை நான் பார்த்தேன். கண்கவரும் காட்சி அது. மிகச் சிறப்பு. வெளியே வந்து பசி வயிற்றைக் கிள்ளியது. எல்லாம் மாட்டுக்கறியா இருந்ததுன்னு ஃபிரெஞ்சு பிரைஸ் வாங்கித் தின்னோம். அப்புறம் பாத்தா அதையே மாட்டுக் கொழுப்புலதான் பொரிச்சிருந்திருக்காங்க. ஹா ஹா ஹா

G.Ragavan said...

// http://anjalisplace.blogspot.com/2005_08_15_anjalisplace_archive.html

இங்க விடுமுறை 2 இல இருக்கிற படங்களை பாருங்க. நீங்க சொல்லி இருக்கிற இடமும் இருக்கு. //

நன்றி அஞ்சலி. அந்தப் படங்கள பாத்தேன். நல்லா இருக்கு. நீயும் நெறைய எடங்கள் சுத்திப் பாத்திருக்க. எல்லா பதிவுகளையும் படிச்சேன்.

கலை said...

//அஞ்சலி கூட அங்க எடுத்த போட்டோவுக்கான லிங்க்கை கீழ கொடுத்திருக்காங்க பாருங்க.//

பார்த்தேனே. நான் பார்க்காமல் அது அங்கே வருமா என்ன? :) அது சரி, குட்டியின் தோட்டத்தை முழுவதுமா சுத்திப் பாத்தீங்களா?

சிங். செயகுமார். said...

புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் கணக்கா தலைப்பு இருக்கேன்னு வந்தா தமிழ் ,ஆன்மீகம்னு நம்ம கலாச்சாரம் வெளி நட்டுல கொடி கட்டி பறக்குதா! வாழ்க தமிழ்!

U.P.Tharsan said...

//"தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"னு படிச்சது நினைவுக்கு வந்தது. அட! தாய் தடுத்தாத்தான! நம்ம தாய்தான் ஊருக இருக்காங்களே. தடுக்கலைலன்னு பேசாம விட்டுட்டேன்.//

நல்லாயிருக்கு

G.Ragavan said...

// இராகவரே (ரகரமும் டகரமும் மொழிமுதற் வாரா)...இது மாதிரி விஷயமெல்லாம் "முன் பின்னாகத்தான்" இருக்கும். கண்டுக்காதேம்மா.... //

ஹரிஹரன்....நல்ல விளக்கந்தான். :-))

G.Ragavan said...

// ராகவன்! இதனால் அறியப்படும் நீதி:
எங்கே இருந்தாலும் சந்தனம் மணக்கும்! //

இளவஞ்சி....என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுற மாதிரி இருக்கு. ஆனா ஒன்னும் புரியலையே...கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கய்யா....சந்தனம் எது?

// இதனால் அறியப்படும் தகவல்:
மயிலார் கூட இல்லைன்னா உமக்கெல்லாம் குளிர்விட்டுபோயிருது!!! :) //

இது சரியா அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்தது. அதான். இப்பன்னா இப்பிடியா நடக்கும்....

G.Ragavan said...

// பார்த்தேனே. நான் பார்க்காமல் அது அங்கே வருமா என்ன? :) அது சரி, குட்டியின் தோட்டத்தை முழுவதுமா சுத்திப் பாத்தீங்களா? //

அட! அதுவும் அப்படியா! எனக்குத் தெரியாமப் போயிருச்சே.. அதான் இப்பத் தெரிஞ்சிருச்சே கலை.

முழுசா சுத்திப் பாக்கலை. அங்கங்க பாத்தேன். ஒரு பின்னூட்டம் போட்டேன். இன்னும் மத்ததையும் தெளிவாப் பாக்கனும்.

G.Ragavan said...

// புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் கணக்கா தலைப்பு இருக்கேன்னு வந்தா தமிழ் ,ஆன்மீகம்னு நம்ம கலாச்சாரம் வெளி நட்டுல கொடி கட்டி பறக்குதா! வாழ்க தமிழ்! //

செயகுமார்.....கொடியா கட்டிப் பறக்குது...குசும்புய்யா உமக்கு...சிங்கைக் குசும்பர் பட்டம் குடுத்துறலாமா?

G.Ragavan said...

////"தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"னு படிச்சது நினைவுக்கு வந்தது. அட! தாய் தடுத்தாத்தான! நம்ம தாய்தான் ஊருக இருக்காங்களே. தடுக்கலைலன்னு பேசாம விட்டுட்டேன்.//
நல்லாயிருக்கு //

படித்துப் பாராட்டியமைக்கு நன்றி தர்சன்.

Anonymous said...

Raghavan.. you felt bad for displaying OM in back.. see yday same way I left my comment, but Kaipullai didnt display.. you too said it all fun.. see.. it is not fun or frolic.. when we compare our God with other religion.. You make fun within ourselves.. not with other religion GOD. You too said what is the bigdeal.. But think whether Muslim or Christian will allow this.. but we only mock ourselves.. I damn sure that dress would have designed by Hindu fellow.. See what happened when Prophet caricature released.. it was total chaos in France, Netherlands, Denmark... horrible violence..

You can reply to
gvjana@yahoo.com

பூங்குழலி said...

இராகவன்,

என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்,

இந்துக்களாகிய நாம் அறியாமலேயே(அந்நிலையை அடையாமலேயே) நெற்றியில் ஓங்கார நாதனின் குறியை போட்டுக்கொள்கிறோம்.

"குண்டலினி for Dummys" என்ற ஏட்டைப் படித்துவிட்டு ஆரம்பத்தில் இருந்து தொடங்கும் அவரை, இப்படி கருதி விட்டீர்களே(?)....

என்னத்தைச் சொல்ல?

G.Ragavan said...

// Raghavan.. you felt bad for displaying OM in back.. see yday same way I left my comment, but Kaipullai didnt display.. you too said it all fun.. see.. it is not fun or frolic.. when we compare our God with other religion.. You make fun within ourselves.. not with other religion GOD. You too said what is the bigdeal.. But think whether Muslim or Christian will allow this.. but we only mock ourselves.. I damn sure that dress would have designed by Hindu fellow.. See what happened when Prophet caricature released.. it was total chaos in France, Netherlands, Denmark... horrible violence.. //

ஜனா, உங்கள் கருத்துக்கு நன்றி. என்னுடைய வலைத்தளத்திற்கு முதன்முதலாக வந்திருக்கின்றீர்கள் என நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் வருக.

மற்றவர்கள் செய்வதற்காக நாம் ஒன்றைச் செய்யக் கூடாது. அது நமக்கே சரியென்று தோன்ற வேண்டும்.

குறீயீடுகளும் வடிவங்களும் உருவங்களும் நிறைய உள்ள நமது பண்பாட்டில்தான் அந்தக் குறியீடுகளையும் வடிவங்களையும் உருவங்களையும் தாண்டியும் சிந்திக்கிறோம். மற்ற இடங்களில் இதற்கு எதிர்மாறான நிலையைக் காண்பதுதானே நடக்கிறது.

நாம் நம்முடைய பண்பாட்டை இழிவு செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. சில விஷயங்களை அதன் போக்கில் விட்டாலே போதும். இப்பொழுது எத்தனை பேர் அந்த மாதிரி பாவாடை அணிகிறார்கள்?

எதிர்ப்பு வீணெதிர்ப்பு என்று இரண்டுண்டு. இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமைதான் எங்கும் காணக்கிடைக்கிறது. கடிக்கின்ற நாயைக் கடிக்க விழைகின்றவன், அந்த நாயினும் கீழாவது உண்மைதானே.

G.Ragavan said...

இராகவன்,

// என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்,

இந்துக்களாகிய நாம் அறியாமலேயே(அந்நிலையை அடையாமலேயே) நெற்றியில் ஓங்கார நாதனின் குறியை போட்டுக்கொள்கிறோம்.//

உண்மைதான் பூங்குழலி.

// "குண்டலினி for Dummys" என்ற ஏட்டைப் படித்துவிட்டு ஆரம்பத்தில் இருந்து தொடங்கும் அவரை, இப்படி கருதி விட்டீர்களே(?)....

என்னத்தைச் சொல்ல? //

ஒருவேளை நீங்கள் சொல்வது போலவும் இருக்குமோ! இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

மக்களே! இது எப்பிடி இருக்கு?

தி. ரா. ச.(T.R.C.) said...

அதுசரி ஜிரா அந்தப்பெண் பின் புத்தியாகயில்லாமல் இருந்து மின் புத்தியாக எழுதியிருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? தி. ரா. ச