Monday, July 17, 2006

சென்னை - பிளாக் ஸ்பாட் - பி.எஸ்.என்.எல் - டமால்

சென்னையில் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் வைத்திருக்கும் என்னாலும் இன்று மாலை முதல் பிளாக் ஸ்பாட் பிளாகுகளைப் பார்க்க முடியவில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏன் இப்படியொரு முடிவோ! இனி என்னுடைய வலைப்பூவை நானே பார்க்க முடியாது.

வருத்தத்துடன்,
கோ.இராகவன்

16 comments:

said...

ஓகோ அதான் விசயமா, அதுதான் நீங்கள் எனக்கு இன்று பின்னூட்டம் போடவில்லையா ?
:))))))))))))))

said...

ராகவன், கவலை வேண்டாம். இதில் ஏதும் காரணம் இருக்கும். சிறிது நாளில் சரியாகி விடும் என்று எண்ணுகின்றேன். அதுவரை ரமணி சொல்வது போல செய்து பாருங்களேன்.

said...

இது தயாநிதியின் சதி!
உங்களைப் பிடிக்காததால் செய்யப்பட்டிருக்கிறது!
பேரணி திரட்டலாமா?

said...

இந்தப் பதிவு எப்படி?

said...

ராகவன் பின்னூட்டம் போடுவதற்கு இதை வெட்டி ஒட்டுங்கள். பிளாக்கர் பிராபளம் இல்லை, ப்ளாக்ஸ்பாட்டு தான் ப்ராபளம்

http://www.blogger.com/comment.g?blogID=12995079&postID=115314839163033283

said...

//இனி என்னுடைய வலைப்பூவை நானே பார்க்க முடியாது.//

அட பிளாக்கர்.காம் போயி எடிட் போஸ்ட் மெனுவில் பார்க்கலாமே. அத விடுங்க.

நம்ம போஸ்டுல வந்து பின்னூட்டம் எப்படி போட போறீங்க? (என் கவலை எனக்கு)

said...

Raghavan,

use this.


http://www.anniyalogam.com/scripts/freedomviewer.php"

said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கு நன்றி. (ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நன்றி சொல்வேனே. இன்னைக்கு மொத்தமாச் சொல்ல வேண்டியதாப் போச்சே......)

கோவி, பதிவுகளையே படிக்க முடியலை. அன்னியலோகம் வந்திருக்கு. அதுல பாதி பிளாக் படிக்க முடியுது. பி.எஸ்.என்.எல்லில் blogspot மட்டும் தடை. Airtelல் bloggerக்கும் தடை என நினைக்கிறேன்.

நாகை சிவா, கவலை வேண்டான்னு சொல்லீட்டீங்க..ம்ம்ம்...ஆனா முடியலையேப்பா (சிவாஜியா ரஜினி நடிக்கிறாருன்னு சொன்னாங்க. ஆனா நான் நடிக்கிறேனே)

SK, நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு என்னோடு coffee worldல் காப்பி சாப்பிட விரும்பினார் மாறன். நான் மறுத்து விட்டதால் அவர் செய்த சதியிது. இதற்குப் பதில் தண்டனையாக அவரோடு டீ குடிக்கவும் மறுத்து விடுவதுதான் இப்போதைக்குச் சரியாக இருக்கும்.

வாங்க மதி, நிம்மதி தரும் செய்தி இது. மிக்க நன்றி.

said...

நாகை சிவா, மதி ரெண்டு பேரும் எனக்கு முன்னாடியே இங்கே என் கருவியைப்பற்றி சொல்லிட்டாங்க. உங்களுக்கு ப்ளாக்கர் பார்க்கமுடியும் என்பதால் பின்னூட்டமும் இடலாம்.

said...

இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? கலங்காதீர்கள். தீர்வு வரும்.

said...

வெங்கட்ரமணி பக்கத்தை உபயோகப்படுத்துங்க...

:))

said...

ராகவன்,

இதுக்கு ஒரு சொலுஷன் இருக்கு.

http://mail.google.com/mail/?view=att&disp=attd&attid=0.1&th=10c8549887db476f

இது மதி குடுத்த லிங்கவிட நல்லாருக்கு.

இந்த எச்.டி.எம்.எல் பேஜ டெஸ்க்டாப்ல சேவ் பண்ணிட்டு எந்த ப்ளாக்ஸ்பாட் பதிவையும் பாக்கலாம்.

இன்றைய என்னோட பதிவிலயும் லிங்க் குடுத்திருக்கேன்..

நான் நேத்துலருந்தே எந்த சிரமமுமில்லாம பார்த்துக்கிட்டுத்தானிருக்கேன்.

said...

ராகவன்,
இப்போ எப்படி? சரியாகிருச்சா? மாறனோட டிபன் சாப்பிடப் போகிறீங்களா? ;)

said...

Not related to this post...

R u Raghavan Gopalsamy from EPTS, Infy???
u can identify me in Orkut EPTS community. Do scrap me If I am right...

said...

இன்னோரு தரம் கானாட் ப்ஃஐண்ட் சர்வர் என்று பார்த்தால் பைத்தியம் பிடிக்கிற லெவலுக்குப் போன பிறகு அன்னியலோகம்,மற்றும்
பிகே ப்லாGஸ் பார்த்ததும் கொஞ்சம் சமாதானமாயிற்று. தேவையானு இந்த சோதனை?

said...

இராகவன்,

இப்போ சரியாகிவிட்டதே. இப்பதான் உயிரே வந்த மதிரி இருக்கு.