Tuesday, March 25, 2008

பூப்பறிச்சு மாலை கட்டி - சுருளி வில்லுப்பாட்டு

சுருளிராஜன் நகைச்சுவை 70களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும் மிகவும் பிரபலம். அப்பொழுது இரண்டு திரைப்படங்களில் வந்த இரண்டு பாடல்கள் மிகவும் பிரபலம். ஒன்று "உப்புமா கிண்டி வையடி" என்ற பாடல். இதில் மலேசியா வாசுதேவன் சுருளிக்கும் வசந்தா சச்சுவிற்கும் பாடியிருப்பார்கள். நடுவில் சுருளியும் சச்சுவும் பேசியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் இசை. படத்தின் பெயரும் தெரியவில்லை. பாடலும் கிடைக்கவில்லை. கிடைத்தால் கொடுக்கவும்.

ஆனால் இன்னொரு பாடலின் வீடியோவே கிடைத்து விட்டது. ஹிட்லர் உமாநாத் படத்தில் இடம் பெற்ற இந்த வில்லுப்பாட்டுதான். இதிலும் சுருளிக்கு மலேசியா வாசுதேவனே பாடியிருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. மிகவும் அருமையான நகைச்சுவை வில்லுப்பாட்டு. கேட்டு ரசியுங்கள்.



அன்புடன்,
கோ.இராகவன்

7 comments:

குமரன் (Kumaran) said...

பணியிடத்துல இருந்து கேட்டதால (பாக்கலை. ஓடவிட்டுட்டுக் காதுல காதணியை மாட்டிக்கிட்டுக் கேட்டேன்) நடுநடுவுல வந்த சிரிப்பு வெடிகளை மட்டும் இரசித்தேன். ரொம்ப்ப்ப நல்லா இருந்தது. நன்றிகள்.

Dreamzz said...

nalla thaan irukku annatha :)

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
பணியிடத்துல இருந்து கேட்டதால (பாக்கலை. ஓடவிட்டுட்டுக் காதுல காதணியை மாட்டிக்கிட்டுக் கேட்டேன்) நடுநடுவுல வந்த சிரிப்பு வெடிகளை மட்டும் இரசித்தேன். ரொம்ப்ப்ப நல்லா இருந்தது. நன்றிகள்.//

நன்றி குமரன். மிகவும் நகைச்சுவையான பாட்டு. படத்தின் கதை தெரிந்தால் இன்னும் ருசிக்கும்.

// Dreamzz said...
nalla thaan irukku annatha :) //

ஆமா ஆமா :)

NewBee said...

Hi,

i just came across this post....

this has brought my memories back.... my dad has an audio collection of all oldies (more than 100)...i use to hear them long time back...

this one is my favourite...seeing the video itself brought my smile back.... thnx.. :-)..Good one..

சுருளி: மஹாத்மா காந்தி என்ன சொன்னார்?
குரூப் :என்ன சொன்னார்?
சுருளி: மஹாத்மா காந்தி என்ன சொன்னார்?
குரூப் :என்ன சொன்னார்?
சுருளி: (குரூப்பிடம் ..'என்னடா சொன்னார்?)
குரூப்: எனக்குத் தெரியாது?
சுருளி: அட! ஏண்டா?
............................

கொரட்ட விட்ட அது கேதாரம்...கும்பகர்ணனே அதுக்கு ஆதாரம்?...

i am loving it...thx again :-)
ha...ha...ha...

TBR. JOSPEH said...

எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்களுள் சுருளியும் ஒருவர். நான் தேனாம்பேட்டையில் வசித்தபோது அவருடைய வீடும் அருகில்தான் இருந்தது. தினமும் அவர் இருசக்கர வாகனத்தில் செல்வதைப் பார்ப்பேன். எப்போதும் சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். இளம் வயதிலேயே அகாலமாய் மரித்தது திரையுலகுக்கு பேரிழப்புதான். அவரும் மனோரமா, தேங்காய் சீனிவாசன் இணைந்து அடித்த லூட்டிகளை மறக்க முடியுமா?

கானா பிரபா said...

முன்னர் இலங்கை வானொலியில் அடிக்கடி இப்பாடலை ஒலிபரப்புவார்கள், நீண்ட நாட்களுக்குப் பின் கண்டேன், நன்றி ;-)

சுருளிக்கு இதே போல் எங்கெங்கும் கண்டேனம்மா பாட்டும் கிடைச்சிருக்கு.

முரளிகண்ணன் said...

அருமை. மிக்க நன்றி ராகவன்