Wednesday, March 29, 2006

1. நிங்ஙள் எவிடே போகுன்னு

வேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை

1. நிங்ஙள் எவிடே போகுன்னு

"சரி. சரி. அவரு ஸ்டேசனுக்கு வந்துருவாரா....அப்பச் சரி.....ஓட்டலுக்கு அவரே கூட்டீட்டுப் போயிருவாரா....சரி. சரி. அப்ப...அங்க போயிட்டு ஒங்களுக்குப் ஃபோன் போடுறேன். சரிதானாய்யா! சரி. பாக்கலாம்." நண்பர் பெஞ்சமின் கிட்டதான் பேசுனது. நாகர்கோயில் போய் எறங்குனதும் கார் ஏற்பாடு செஞ்சி தங்க ஓட்டலும் ஏற்பாடு செஞ்சிருக்காரே.

நாங்க நண்பர்கள் ஆறு பேரு. தமிழ்நாட்டுத் தமிழர் ரெண்டு பேரு. பெங்களூர்த் தமிழன் ஒருத்தன். கன்னட கவுடா ஒருத்தன். பெங்களூர்த் தெலுங்கன் ஒருத்தன். ஒரிசாக்காரன் ஒருத்தன்னு ஆறு பேர் மொத்தம். ஆனை, குதிரை, பூனை, சிங்கம், புலி, ஆடு ஏல்லாத்தையும் ஒரு தேருல கட்டுன மாதிரி பயணத் திட்டம்.

போன வருசம் மூனு பேரு சேந்து தஞ்சைப் பக்கமா போய்ட்டு வந்தோம். அந்த மூனு இந்த வருசம் ஆறாகிப் பயணமும் தெக்க திரும்புச்சு. வெள்ளி, சனி, ஞாயிறுன்னு மூனு நாளுக்கும் பயணத் திட்டம். வெள்ளிக்கெழம நாகர்கோயில். சனிக்கிழமை திருநெல்வேலி, சங்கரங்கோயில், கழுகுமலை, கோயில்பட்டி. ஞாயிறு திருச்செந்தூர்னு பெரிய திட்டமே போட்டாச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நாகர்கோயில் ஏற்பாடை நண்பர் பெஞ்சமின் கிட்டயும் கோயில்பட்டி ஏற்பாட்டை என்னுடைய உறவினர் கிட்டயும் விட்டாச்சு.

திட்டப்படி காலைல பதினோரு மணிக்கு நாகர்கோயிலுக்கு வண்டி சேரனும். நேரா ஓட்டலுக்குப் போயி குளிச்சிட்டு பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, குமாரகோயில், சுசீந்திரமுன்னு திட்டம். அருவியில குளிக்க வேண்டிய துணிமணிகளையும் எடுத்து வெச்சுக்கிட்டாச்சு.

கன்னட கவுடா மொதல்ல வர்ரதாவே இல்லை. பெங்களூர் மராட்டி ஒருத்தன் வர்ரதாத்தான் இருந்துச்சு. ஆனா அவன் கடைசி நேரத்துல கால வாரி விட்டுட்டான். அதுனால அவனுக்கு மாத்தா இந்த பெங்களூர் கவுடா உள்ள வந்தான். ஆறு பேர் கணக்கு சரியாப் போச்சு.

இதுல நான் திருச்செந்தூர்ல மொட்ட போடப் போறதா இன்னொரு திட்டம். கர்நாடகாவுல இருக்குற காட்டி சுப்பிரமணியாவுல போட வேண்டியது. தள்ளிக்கிட்டே போனதால....திருச்செந்தூருல போடுறதா முடிவு செஞ்சாச்சு. அதுனால என்ன...அடுத்த வருசம் காட்டி சுப்பிரமணியாவுல போட்டாப் போச்சு.

நாங்க ஆறு பேரும் ஆறு வெவ்வேறு ஆபீசுல வேல பாக்குறோம். அத்தன பேரும் வீட்டுக்குப் போயி கெளம்பி ஸ்டேஷனுக்கு வந்துரனும்னு திட்டம். அதே போல சரியான நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம் பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.

வண்டில பட்டியல் பாத்தோம். அதுல ஒரு நண்பனுக்கு அடுத்து ஆரியாதேவி வயசு 58ன்னு போட்டிருந்தது. அத வெச்சி அந்த நண்பனைக் கொஞ்ச நேரம் கிண்டலடிச்சோம். பெறகு கொஞ்சங் கொஞ்சமா வண்டியில கூட்டம் ஏறி நெரம்புச்சு. நெறைய மலையாளிகள் இருந்தாங்க. நாங்க யாரையும் கண்டுக்காம UNO அப்படீங்குற விளையாட்டை ஆடுனோம். ரொம்பச் சுவாரசியமாப் போச்சு.

ஆரியாதேவின்னு மொதல்ல சொன்னேனே....அவங்க வீட்டுக்காரரோட வந்திருந்தாங்க. அவருக்கு ஒரு அறுவத்திச் சொச்சம் இருக்கும். பத்தரை மணிக்கெல்லாம் அவங்களுக்குத் தூக்கம் வந்துருச்சு. படுக்கனும்னு சைகைல சொன்னாங்க. சரீன்னு பெர்த்துகளை மாட்டினோம். அவங்க எங்க போறாங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆவல் வந்துச்சு. மலையாளத்துலயே கேட்டேன். "நிங்ஙள் எவிடே போகுன்னு?"

அவரும் ஒடனே சொன்னாரு...."ஞங்ஙள்.....திருவனந்தபுரம்....."

என்னது திருவனந்தபுரமா! எனக்குத் தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்தது. திருவனந்தபுரம் வழியாப் போகுதா அல்லது நாகர்கோயில் வழியா திருவனந்தபுரம் போகுதான்னு ஒரு சந்தேகம். ஆனா வண்டியோ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். அப்புறம் எப்படி திருவனந்தபுரம் போகும்!

பிடி டீ.டீ.ஆரை. அவர்கிட்ட வெளக்கமா கேட்டதுக்கு அப்புறந்தான் ஒரு விஷயம் புரிஞ்சது. நான் இண்டர்நெட்ல பாத்துச் சொன்ன கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. என்னோட நண்பன் டிக்கெட் பதிஞ்ச கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. நான் பாத்தது வாரத்துக்கு மூனு நாளுதான் போகுது. அதுதான் பதினோரு மணிக்கு நாகர்கோயில் போகும். இது சாந்தரம் அஞ்சு மணிக்கு மேலதான் நாகர்கோயில் போகுது. என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை. ஒரு நா முழுக்க ரயில்ல இருக்கனும். கேரளா முழுக்க ரயில்லயே பாத்திரலாம். ஆனா அது சரியா? நண்பர் பெஞ்சமினுக்கு ஒரு ஃபோன் போட்டுப் பேசினேன். அவரும் கொஞ்ச ஐடியாக்கள் குடுத்தாரு. அவரு கிட்ட பேசீட்டு சைடு பெர்த்துல ஜன்னலோரமா கால நீட்டீட்டு உக்காந்து யோசிச்சேன். பட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. ஒடனே எல்லார் கிட்டயும் சொன்னேன். சொன்னதும் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க.

தொடரும்...

21 comments:

said...

ஆஹா.நடத்துமய்யா.நடத்தும்....

said...

நல்லா இருக்கே ஸ்டார்டிங். :-) அப்ப திருவனந்தபுரம் போனீங்களா இல்லையா?

said...

அதென்ன ஐடியா ??

ஜீவா

said...

ராகவன்,
நாகர்கோவில்வர போயிட்டு முட்டம் போகலைன்னா எப்படி?

அலைகள் பாறைகள் எழுதினதுக்கு பலனே இல்ல போலிருக்கு.

said...

ராகவன்,

வாங்க. ஆரம்பமே அமர்க்களம். நன்னாயிட்டு வரட்டே. மங்களாஸம்சகள்
//.....நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம்
பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.//

இபெல்லாம் ஒவ்வொரு ரயிலுக்கும் ஒவ்வொரு ஸ்டேஷனாமே! அப்படியா? :-))))) ச்சும்மா.

said...

// ஆஹா.நடத்துமய்யா.நடத்தும்.... //

நடத்துறேன். நடத்துறேன். நல்லா நடத்துறேன்......நீங்களும் கூடச் சேந்து நடங்க....

said...

// நல்லா இருக்கே ஸ்டார்டிங். :-) அப்ப திருவனந்தபுரம் போனீங்களா இல்லையா? //

நாகர்கோயிலுக்கு அஞ்சு மணிக்கு மேல போகும்னா...திருவனந்தபுரத்துக்கு நாலு மணிக்குத்தான் வண்டி போகும். அப்படியும் ஒரு நாள் வீண்தான். அதுனால திருவனந்தபுரம் போகவில்லை குமரன். :-)

said...

// அதென்ன ஐடியா ??

ஜீவா //

ஜீவா....அடுத்த பதிவு எழுதி முடிக்கிற வரைக்கும் பொறுக்கனும். :-) அதுல தெரிஞ்சி போகும்.

said...

// ராகவன்,
நாகர்கோவில்வர போயிட்டு முட்டம் போகலைன்னா எப்படி?

அலைகள் பாறைகள் எழுதினதுக்கு பலனே இல்ல போலிருக்கு. //

சிறில்.....நாகர்கோயிலே போகலை....போனாத்தானே முட்டத்துல முட்ட முடியும். :-) திட்டமே மாறிப்போச்சு.....

said...

ராகவன்,

//// வாங்க. ஆரம்பமே அமர்க்களம். நன்னாயிட்டு வரட்டே. மங்களாஸம்சகள்
//.....நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம்
பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.//

இபெல்லாம் ஒவ்வொரு ரயிலுக்கும் ஒவ்வொரு ஸ்டேஷனாமே! அப்படியா? :-))))) ச்சும்மா. //

நன்னி டீச்சர். இவிடே ரெண்டு ஸ்டேஷன் உண்டு. பழையதும் புதியதுமாய். புதிய ஸ்டேஷனில் மாத்ரம் நந்தினி பால் கிட்டும். (ஆனாலும் நான் சொல்ல வந்தது பிளாட்பார்ம். அதாவது நடைமேடை)

said...

// nagercoil poneengala...illiya..//

டினா, நாகர்கோயில் போகல்ல...

// can u clear some info in ukkarai recipe..do i've to soak the rice and moong dal for some time and grind them or just wash and grind them..sorr for silly ???? new to cooking.. //

டினா உக்காரை குறிப்பு செஞ்சி பாக்க வேண்டாம். அதுல பின்னூட்டத்துல சரியான சமையல் குறிப்பை ஜெயஸ்ரீ குடுத்திருக்காங்க. அதுபடி செஞ்சி பாருங்க.......

said...

ஓபனிங்கே சூப்பரா இருக்கே! சீக்கிரம் மேல எழுதுங்க...ஞங்களுக்கு வளர இண்டரெஸ்ட் உண்டாயி!

said...

// ஓபனிங்கே சூப்பரா இருக்கே! சீக்கிரம் மேல எழுதுங்க...ஞங்களுக்கு வளர இண்டரெஸ்ட் உண்டாயி! //

வாங்க கைப்புள்ள. இண்ட்ரெஸ்ட் வந்தல்லோ! இனி அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க. நானும் கொஞ்ச நாளா உங்க வீட்டுப் பக்கம் வரலை. அதையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டிருக்காம மரியாத செஞ்சிருக்கீங்க....ரொம்பப் பெரிய மனசு ஒங்களுக்கு. :-))

said...

என்னா இராகவஜி, மொட்டை போட்டீங்களா? யாருக்கு?.. :-)))

said...

நான் இண்டர்நெட்ல பாத்துச் சொன்ன கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. என்னோட நண்பன் டிக்கெட் பதிஞ்ச கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற//

ராகவன், நான் என்னோட http://mytimepass.blogspot.com ல IT Effectனு ஒரு தமாஷ் சீரியல் எழுதறேன். நீங்க இப்ப சொன்னீங்களே அந்த மாதிரியான சமாச்சாரம். இந்த ஐ.டி. நம்ம லைஃப்ல எப்படியெல்லாம் விளையாடுது பாருங்க. இருந்தாலும் கேரளா பாக்கவேண்டிய ஊர்தான்.

said...

டிக்கட் பதிவு செஞ்ச நண்பனுக்கு லட்சார்ச்சனை கிடையாதா?

என்ன ப்ளானா இருக்கும்? நேரா திருவனந்தபுரம் போய் ஆரியதேவியம்மாவோட இறங்கி, அங்கேர்ந்து வண்டிபிடிச்சு நடுவுல கோவளம், பத்மநாபபுரமெல்லாம் பாத்துட்டு, தொன்னூறு கி.மி தானே, புதுசா லிஸ்ட்ல கன்யாகுமரியையும் சேத்துட்டீங்க? சரியா? :))

said...

// என்னா இராகவஜி, மொட்டை போட்டீங்களா? யாருக்கு?.. :-))) //

ஹரியண்ணா...நம்ம மொட்ட போட்டா அது முருகனுக்குத்தான். ஹா ஹா...முருகனுக்கு மொட்ட போட்ட இராகவன்னு என்னோட புகழைப் பரப்ப வேண்டாம்னு கேட்டுக்கிறேன். :-)

said...

// ராகவன், நான் என்னோட http://mytimepass.blogspot.com ல IT Effectனு ஒரு தமாஷ் சீரியல் எழுதறேன். நீங்க இப்ப சொன்னீங்களே அந்த மாதிரியான சமாச்சாரம். இந்த ஐ.டி. நம்ம லைஃப்ல எப்படியெல்லாம் விளையாடுது பாருங்க. இருந்தாலும் கேரளா பாக்கவேண்டிய ஊர்தான். //

ஜோசப் சார்...இந்தக் கதையே இப்பவே போய்ப் பாக்குறேன்.....

said...

// டிக்கட் பதிவு செஞ்ச நண்பனுக்கு லட்சார்ச்சனை கிடையாதா? //

அது எப்படீங்க? தப்பு நடந்து போச்சு. அடுத்து அதச் சரி செய்ய என்ன பண்ணனுமோ அதுலதான மூளை ஓடும். அவனை எதுக்குத் திட்டனும். பாவம். அதுவும் கெளம்பும் போதே. என்னோட தப்பும் கலந்திருக்கே.

// என்ன ப்ளானா இருக்கும்? நேரா திருவனந்தபுரம் போய் ஆரியதேவியம்மாவோட இறங்கி, அங்கேர்ந்து வண்டிபிடிச்சு நடுவுல கோவளம், பத்மநாபபுரமெல்லாம் பாத்துட்டு, தொன்னூறு கி.மி தானே, புதுசா லிஸ்ட்ல கன்யாகுமரியையும் சேத்துட்டீங்க? சரியா? :)) //

இல்லை இல்லை இல்லை....ஒழுங்கான நேரத்துக்குப் போனாலே நாலரை மணிக்குதான் திருவனந்தபுரம் போகுமாம்....இதுல கன்னியாகுமரிய எங்க சேக்குறது? அடுத்த பதிவு போட்டாச்சே...பாக்கலையா?

said...

ஆஹா! தொடருக்கு நல்லா மேட்டர் கெடச்சிருக்கு போல..சுவாரஸ்யமா தான் போகுது..
என்ன ஐடியா..இடைல எறங்கி எங்கையாவது பஸ்ஸ புடிச்சி போனீங்களா.? இப்படி தொடருக்கு ஒரு சஸ்பென்ஸ் இருக்கும் போல..நடத்துங்க..நடத்துங்க. :-))

அடுத்த பதிவு இனி தான் பார்க்கணும்.. :-)

said...

// ஆஹா! தொடருக்கு நல்லா மேட்டர் கெடச்சிருக்கு போல..சுவாரஸ்யமா தான் போகுது..
என்ன ஐடியா..இடைல எறங்கி எங்கையாவது பஸ்ஸ புடிச்சி போனீங்களா.? இப்படி தொடருக்கு ஒரு சஸ்பென்ஸ் இருக்கும் போல..நடத்துங்க..நடத்துங்க. :-)) //

எங்க எறங்குறது. எங்களுக்கு விஷயம் தெரிஞ்சப்போ நாங்க பெங்களூரத் தாண்டி ஒயிட் ஃபீல்டத் தாண்டி ஓடிக்கிட்டிருந்தது. அங்க எறங்குறதும் ஒன்னுதான். அந்த வண்டியிலேயே ஜக்கடா ஜக்கடான்னு நாகர்கோயில் போறதும் ஒன்னுதான்.

// அடுத்த பதிவு இனி தான் பார்க்கணும்.. :-) //

படிங்க படிங்க...வெள்ளிக்கெழம மூனாவது பதிவும் வருது.