Thursday, March 02, 2006

சுபா

இப்ப என்னோட கைல இருக்குறது சுபா கொடுத்த கிரீட்டிங் கார்டு. அது மேலதான் இப்ப என்னொட வெரலு ஓடுது. மெத்துன்னு அதுல ஒரு சின்னப் பூ. வெரல் வழியா அப்படியே கரண்ட்டு பாஞ்ச மாதிரி இருக்கு. சுபா கொடுத்த எதத் தொட்டாலும் கரண்டு பாயுது. அதுவும் சந்தோஷம்.

அடடா! சுபா யாருன்னே ஒங்ககிட்ட சொல்லலையே! சுபா என்னோட காதலி. ஐயோ! உங்க கிட்ட சொல்லும் போதே எனக்கு லேசா வெக்கம் வருது.

காலேஜ்ல எங்கூட படிக்கிற பொண்ணுதான் சுபா. அப்பிடியோ இப்பிடியோ எப்பிடியோ எங்களுக்கும் காதல் வந்துருச்சி. ஐயோ! மறுபடியும் எனக்கு வெக்கம் வந்துருச்சி. இந்தப் புன்னகையக் கூட என்னால அடக்க முடியல. சுபா பத்தி பேசுனாலே நா வெக்கப்படுறேன்னு எல்லாரும் சொல்றாங்க. இந்த வெக்கத்தக் கொறைக்கனும். சரி. இப்பிடி வெக்கப் பட்டுக்கிட்டேயிருந்தா எப்படி? என்னோட காதல ஓங்ககிட்டச் சொல்ல வேண்டாமா!

கொஞ்சம்....ம்ஹூம்...ரொம்பவே பெரிய இடத்துப் பொண்ணு அவ. ரொம்பச் செல்லம் வீட்டுல. நானோ நடுத்தரக் குடும்பம். ஆனாலும் பாருங்க காதல் வந்துருச்சி. தெனமும் கார்லதான் வருவா. அதே காரு சாந்தரமும் வந்து அவளக் கூட்டீட்டுப் போகும். அப்பிடி ஒரு சொகுசு. நமக்கெல்லாம் பஸ்தான். ஆனாலும் அந்தப் பணக்காரத்தனமெல்லாம் அவளுக்குக் கிடையாது. எல்லார் கிட்டயும் நல்லாப் பழகுவா. அதே மாதிரி எல்லாரும் அவகிட்ட நல்லாப் பழகுவாங்க. அவ்ளோ நல்ல கொணம்.

அவ பாட்டுத் தெறமையப் பத்திச் சொல்லாம விட முடியுமா! அடேங்கப்பா! என்ன உணர்ச்சிப்பூர்வமாப் பாடுவா தெரியுமா! பழைய பாட்டு, புதுப்பாட்டு அத்தனையும் பாடுவா. நாள் பூராவும் அலுக்காம கேட்டுக்கிட்டேயிருக்கலாம். அப்பிடி ஒரு பாவம். எல்லாங் கேள்வி ஞானந்தான். இருந்தாலும் அப்பிடி அமைஞ்ச குரல்.

எனக்குப் பி.சுசீலா பாடுன பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் சுபா பாடுனா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். பெஸ்ட் ஆஃப் சுபான்னு என்கிட்ட கேட்டா படகோட்டிப் பாட்டத்தான் சொல்வேன்.
"பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்பாயோ!
துள்ளி வரும் வெள்ளலையே நீ தூது செல்ல மாட்டாயோ!"
இந்தப் பாட்ட பி.சுசீலா பாடுன அதே பாவமும் ராகமும் மாறாமப் பாடுவா. ஆனாலும் அதுல சுபாவோட டச் இருக்கும். எது எப்பிடியோ! கடைசில இந்தப் பாட்டெல்லாம் கேட்டுக் கேட்டு பைத்தியமா இருக்குறது நாந்தான்.

காலேஜ்ல தொடங்கி வளந்ததுதான் எங்க காதல். பலாப்பழத்தை மூடி வெக்க முடியுமா? ரெண்டு பேர் வீட்டுலயும் விஷயம் தெரிஞ்சி போச்சு. சினிமாவுல நாவல்ல பல பேரோட நெஜ வாழ்க்கைல நடக்குற மாதிரி இல்லாம ரெண்டு வீட்டுலயும் எங்க காதல மறுப்பு சொல்லாம ஏத்துக்கிட்டாங்க. கல்யாணமும் முடிவு பண்ணீட்டாங்க. நிச்சயமும் ஆகி தேதியும் குறிச்சாச்சு. ஆச்சரியமா இருக்குல்ல. ஆனா அதுதான் உண்மை. இன்னும் ஆறு மாசம் இருக்கு.

ஆஆஆஆஆஆஆறு மாசம். அதுக்குப் பெறகு சுபாவுக்கு நான். எனக்குச் சுபா. அதுவும் எல்லாரும் ஒத்துக்கிட்டு. பட்டுன்னு ஆறு மாசமும் ஆறு நொடியாப் பறந்துறக் கூடாதான்னு ஆசையா இருக்கு. ஆனா அது நடக்காதில்லயா! சரி. காத்திருக்க வேண்டியதுதான்.

அடடா! பேச்சு மும்மூரத்துல ஒங்ககிட்ட இன்னொரு விஷயத்தச் சொல்லவே மறந்துட்டேன். இன்னைக்கு எங்க வாழ்க்கைல மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள். ஆமா. ஏ.ஆர்.ரகுமான் இசைல பாடுறதுக்கு சுபாவுக்கு வாய்ப்புக் கெடச்சிருக்கு. அவ குரலுக்குத் தகுதியான வாய்ப்புதான் அது.

எந்த நாட்டு இசையா இருக்கட்டுமே. ஒரு வாட்டிக் கேட்டாப் போதும். அப்பிடியே அச்சுப் பெசகாமப் பாடுவா. அன்னைக்கு இப்பிடித்தான் எங்க காலேஜுக்கு அயர்லாண்டுல இருந்து ஒரு பாடகரு வந்தாரு. அவங்க நாட்டுப் பாரம்பரியப் பாட்டு ஒன்ன ஆலாபனை பண்ணுற மாதிரி பாடுனாரு. அத அப்பிடியே ஜம்முன்னு பாடிக் காட்டி அசத்தீட்டா சுபா. அவரும் பிரமிச்சுப் போயிட்டாரு. அவள இன்னும் ரெண்டு மூனு மெட்டு பாடச் சொல்லி சாம்பிள் மாதிரி ரெக்கார்டு பண்ணிக்கிட்டாரு. அவரு என்னவோ ஆல்பம் போடப் போறாராம். அதுக்குத் தேவப்பட்டா இவளும் போக வேண்டியிருக்குமாம்.

சுபா கொஞ்சம் அசடு. நானுங் கூட வந்தாத்தான் வெளிநாடு போவாளாம். வீட்டுல ஒத்துக்குவாங்களா? கல்யாணம் முடிஞ்சிட்டாலும் போகலாம். அதுக்கு முன்னாடியே வரச்சொல்லிக் கூப்புட்டா? நல்லவேளை. இதுவரைக்கும் அந்தாளு கூப்புடலை. அவரு என்னவோ இசையாராய்ச்சி செய்றாராம். அந்த ஆராய்ச்சி முடிவுகள வெச்சித்தான் ஆல்பமோ ஆப்பமோ போடப் போறாராம். ஆராய்ச்சிதான் மொதல்ல முடியனுமாம். மெதுவா முடியட்டுமே. எனக்கொன்னும் அவசரமில்ல.

அட! ஒன்னச் சொல்லும் போதே இன்னொன்னுக்குத் தாவுறேன். ஏ.ஆர்.ரகுமான் ரெக்கார்டிங் பத்தித்தான சொல்லிக்கிட்டு இருந்தேன். நேத்து ராத்திரி பத்து மணிக்கெல்லாம் பொறப்பட்டுப் போனவா இன்னைக்குக் காலைலதான் திரும்ப வந்தாளாம். என்னையும் ரெக்கார்டிங்குக்கு கூப்புட்டா. நாந்தான் போக முடியல. வீட்டுல சின்ன விசேஷம். அதான்.

ரெக்கார்டிங் முடிச்சுக் காலைல திரும்ப வந்ததும் எனக்குப் ஃபோன் பண்ணீட்டா. அங்க நடந்ததெல்லாம் ஒன்னு விடாம சொன்ன பெறகுதான் அவளுக்கு நிம்மதி. இப்பிடித்தான் எதையெடுத்தாலும் எங்கிட்ட வந்து ஒப்பிச்சிருவா. மண்டு மண்டுன்னு எத்தன தடவ திட்டுனாலும் கேக்க மாட்டா.

இப்பக் காலேஜ்ல அவளுக்காக காத்திருக்கேன். வந்ததும் அங்க என்ன பாடுனாளோ அதப் பாடச் சொல்லனும். ஊருல ஒலகத்துல எல்லாரும் கேக்குறதுக்கு முன்னாடியே அவ பாட்ட நான் கேக்கனும். கேக்கக் கூடாதா? அந்த ஆசை எனக்கிருக்கக் கூடாதா? நீங்களே சொல்லுங்க!

சரி. அத விடுங்க. இந்த வாய்ப்பு எப்படிக் கெடச்சதுன்னு சொல்லவே இல்லையே. அவளோட அண்ணனுக்கு வேண்டப்பட்டவங்க வழியாக் கெடச்ச வாய்ப்பு. யார் வழியா வந்தா என்ன! கடவுள் வழியா வந்ததுதான். சுபா ஒரு பெரிய பாடகியா வரனும். அந்த வளர்ச்சிதான் எனக்கு முக்கியம். பெருமை. மேல மேல ஏத்தி விட்டு தாங்குற தூணா நா இருக்கனும். எங்க சுத்துனாலும் எங்கிட்ட வர்ரவளுக்கு இது கூடவா செய்யக் கூடாது. செய்வேன். கண்டிப்பாச் செய்வேன். நீங்களும் அதப் பாக்கத்தான் போறீங்க.

அது கெடக்கட்டும். இந்த கிரீட்டிங் கார்டு எப்படி வந்துச்சுன்னு சொல்லவேயில்லையே! நேத்து எனக்குப் பொறந்த நாளு. அதுக்கு சுபா தந்ததுதான் இந்தக் கார்டு. அதத்தான் இப்ப கைல கதை பேசிக்கிட்டு இருக்குறது. என்னோட பொறந்த நாளன்னைக்கு அவளுக்கு ரெக்கார்டிங் இருந்தது அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.

"சுந்தர்........................." வேற யாரு? சுபாதான். என்னோட பேரக் கத்திக் கிட்டேதான் வருவா. போகும் போதும் அப்பிடித்தான். பேரச் சொல்லிக் கத்தக் கூடாதுன்னு எத்தன வாட்டி திட்டினாலும் கேக்க மாட்டா. அதுவுமில்லாம அந்தக் கத்தல் எனக்கும் பிடிக்கும். என்னோட பேரச் சொல்லிக் கத்துறதே ஒரு பாட்டாக் கேக்கும்.

பாருங்க....இப்பிடித்தான் வந்ததும் என்னோட கையப் பிடிச்சுக்குவா! இப்பிடியெல்லாம் நடந்துதான் எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் விஷயம் சீக்கிரமே தெரிஞ்சு போச்சு. அப்புறம் நடந்ததெல்லாம் ஒங்களுக்குச் சொன்னேன்.

"என்னடா! நான் கொடுத்த கார்டத் தடவிப் பாத்துக்கிட்டு இருக்க! நானும் தடவிப் பாக்குறேன்!" அவதான் கேக்குறது.

"அட மண்டு. கார்ட நம்மால தடவத்தான முடியும். பாக்க முடியாதுல்ல." நான் சொல்லி வாய மூடல. என்னோட கன்னத்தத் தடிவித் தேடி முத்தம் குடுத்தா சுபா.

அன்புடன்,
கோ.இராகவன்

(இது கதைதான். கதைதான். கதைதான்.)

41 comments:

said...

//(இது கதைதான். கதைதான். கதைதான்.) //

ரொம்பத்தான்

said...

மோகன்தாஸ், இப்பிடித்தான் முந்தி ஒரு கதை எழுதிப் போட்டா அது என்னோட வாழ்க்கைன்னு நெனச்சுட்டாங்க. அதுல வர்ர பாத்திரத்திற்கு ரகுன்னு பேரு. என்னோட பேரச் சுருக்கிச் சொல்லியிருக்கேன்னு நெனச்சுக்கிட்டாங்க. இந்தக் கதையப் பதியும் போதுதான் கவனிச்சேன். இதுலயும் பேரு ரகுன்னு இருந்தது. படக்குன்னு சுந்தர்னு மாத்தீட்டேன்.

said...

நல்லா நினைவிலிருக்கு இராகவன். அப்புறம் சொல்ல மறந்துட்டனே. உங்கக் கதை நல்லாயிருந்தது.

said...

//காலேஜ்ல எங்கூட படிக்கிற பொண்ணுதான் சுபா. அப்பிடியோ இப்பிடியோ எப்பிடியோ எங்களுக்கும் காதல் வந்துருச்சி. ஐயோ! மறுபடியும் எனக்கு வெக்கம் வந்துருச்சி// இதப்படிச்சதுமே புரிஞ்சது இது கதைதான்னு

//பலாப்பழத்தை மூடி வெக்க முடியுமா? // அடடா வாசனை ஊரையே தூக்குமே..

//நானும் தடவிப் பாக்குறேன்!"
"அட மண்டு. கார்ட நம்மால தடவத்தான முடியும். பாக்க முடியாதுல்ல."//

நல்லாயிருக்கு

ராகவன்,

எனக்குத் தெரிஞ்சு பார்க்க இயலாத யாரும் தங்களுக்கு அப்படி ஒரு குறை இருக்குனு காட்டிக்க விரும்ப மாட்டாங்க. ஒரு பச்சாதாபத்தை எதிர்பார்க்க மாட்டாங்க.

எனக்கு ஒருவரைத் தெரியும். கோமகன்னு பெயர்.. ராகப்பிரியா என்ற இசைக்குழு அமைத்து மேடைக்கச்சேரி நடத்திவருகிறார் (ஆட்டோகிராப்) அவரின் துணைவியாரும் கூட பார்வையிலாதவர்.. இசைக்குழுவும் அப்படியே.. ஆனால் அவர் எங்க அலுவலகத்துக்கு வந்தபோது.. தொலைபேசி எடுத்துக்கொடுக்கச் சொல்லி தானே டயல் செய்தார்.. செய்து கொடுக்க சொல்லவில்லை.. மற்ற எல்லா விஷயங்களூம் அப்படியே.. ஆச்சர்யமா இருந்தது..

இங்க பகிர்ந்துக்கணுமின்னு தோனிச்சு..

அன்புட்ன
கீதா

said...

கதை நல்லாயிருக்கு. கொஞ்சம் எதிர்பார்த்தேன். ஆனா ரகுவிற்கு, அட சட், சுந்தருக்கு மட்டும்தான் எதிர் பார்த்தேன். நீங்க என்னடான்னா இதயத்தை திருடாதே மாதிரி ரெண்டு பேருக்கும்ன்னே சொல்லிட்டீங்க.

said...

//(இது கதைதான். கதைதான். கதைதான்.)//
கதை டக்குன்னு முடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு.... நல்லாயிருக்கு

said...

ரொம்ப டச்சிங்கா முடிச்சிருக்கீங்க ராகவன்..

குட்..

said...

ராகவன்! புரிஞ்ச மாதிரி இருந்தது..புரியாத மாதிரியும் இருந்தது..காலங்க்காத்தால இப்படி மண்டை காய வுட்டூட்டீங்களே..ஜோசப் சார் வேற முடிவு ரொம்ப டச்சிங்கா இருக்குன்னு சொல்லிட்டாரா..மறுமடியும் படிச்சி பார்த்தேன்..அப்புறம் தான் புரிஞ்சது ராகவன்..ரொம்ப நல்ல கதை..வாழ்த்துக்கள்.

said...

ராகவன் சார் .கத சூப்பருங்க!எப்பொ கண்ணாலம்!

said...

«Õ¨ÁÂ¡É ¸¨¾. ±ýÉ ƒ£Ã¡ º¡÷ ¬Éó¾ Å¢¸¼ýÄ ¦ÅÇ¢Â¡É ´Õ ¯ñ¨Á ºõÀÅò§¾¡¼ À¡¾¢ôÒ §À¡Ä ¦¾Ã¢Ô§¾.

said...

//கல்யாணமும் முடிவு பண்ணீட்டாங்க. நிச்சயமும் ஆகி தேதியும் குறிச்சாச்சு. ஆச்சரியமா இருக்குல்ல. ஆனா அதுதான் உண்மை. இன்னும் ஆறு மாசம் இருக்கு.//


இந்த வரிகளைக் கண்டதும் அட்வான்ஸ் கங்ராட்ஸ் பார் யுவர் வெட்டிங் என பீன்னூட்டம் தயாரித்துவிட்டு முழுவதும் படித்தபிற்கு தெரிகிறது இது கதைதான். கதைதான். கதைதான்

said...

இராகவன். உண்மையைச் சொல்லுங்கள். யாரையாவது காதலிக்கிறீர்களா இப்போது? இல்லையேல் இப்படி எழுத வராதே. மூன்று நாட்கள் முயன்று எழுதிய கதை என்பது மிக நன்றாகத் தெரிகிறது. பேருந்தில் வரும் போது படித்தேன். படிக்கும் போது பலவிதமான கேள்விகளும் யோசனைகளும் உணர்ச்சிகளும் எழுந்தன. அவற்றை தனிமடலில் அனுப்புகிறேன்.

கதை அருமை. தடவிப் பார்ப்பதை ஏன் இப்படித் திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று ஒரு கேள்வி வந்தது. ஆனால் கதையின் முடிவில் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது தெரியவில்லை அப்போது. :-)

said...

// //காலேஜ்ல எங்கூட படிக்கிற பொண்ணுதான் சுபா. அப்பிடியோ இப்பிடியோ எப்பிடியோ எங்களுக்கும் காதல் வந்துருச்சி. ஐயோ! மறுபடியும் எனக்கு வெக்கம் வந்துருச்சி// இதப்படிச்சதுமே புரிஞ்சது இது கதைதான்னு //

ஏன் கீதா என்னை வெக்கமில்லாதவன்னு நெனச்சிட்டீங்களா :-)))

// எனக்குத் தெரிஞ்சு பார்க்க இயலாத யாரும் தங்களுக்கு அப்படி ஒரு குறை இருக்குனு காட்டிக்க விரும்ப மாட்டாங்க. ஒரு பச்சாதாபத்தை எதிர்பார்க்க மாட்டாங்க. //

நிச்சயமாக....தன்னம்பிக்கை வாழ வைக்கும். அந்த மனவுறுதிதான் கடவுள். அதைத்தான் வள்ளுவர் "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்று சொல்கிறார் வள்ளுவர். நம்முடைய வேலைகளை நாமே செய்து கொள்ள வேண்டும். முடிந்த வரையில் ஒவ்வொருவரும் இதற்குகுப் பழகிக் கொள்ள வேண்டும்.

// எனக்கு ஒருவரைத் தெரியும். கோமகன்னு பெயர்.. ராகப்பிரியா என்ற இசைக்குழு அமைத்து மேடைக்கச்சேரி நடத்திவருகிறார் (ஆட்டோகிராப்) அவரின் துணைவியாரும் கூட பார்வையிலாதவர்.. இசைக்குழுவும் அப்படியே.. ஆனால் அவர் எங்க அலுவலகத்துக்கு வந்தபோது.. தொலைபேசி எடுத்துக்கொடுக்கச் சொல்லி தானே டயல் செய்தார்.. செய்து கொடுக்க சொல்லவில்லை.. மற்ற எல்லா விஷயங்களூம் அப்படியே.. ஆச்சர்யமா இருந்தது..

இங்க பகிர்ந்துக்கணுமின்னு தோனிச்சு.. //

நல்ல பகிர்வு கீதா. இது போன்ற நிகழ்வுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

said...

// நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். //

நன்றி சங்கர்.

// ரொம்ப டச்சிங்கா முடிச்சிருக்கீங்க ராகவன்..
குட்.. //

நன்றி ஜோசப் சார். இந்தக் கதையின் மொத்த எடையும் அந்த கடைசி இரண்டு வரிகளில் மட்டுமே. அந்த வரிகளுக்கு அழுத்தம் ஏற்றவே அதற்கு முன்பு சொல்லப்பட்ட முழுவதும்.

said...

// கதை நல்லாயிருக்கு. கொஞ்சம் எதிர்பார்த்தேன். ஆனா ரகுவிற்கு, அட சட், சுந்தருக்கு மட்டும்தான் எதிர் பார்த்தேன். நீங்க என்னடான்னா இதயத்தை திருடாதே மாதிரி ரெண்டு பேருக்கும்ன்னே சொல்லிட்டீங்க. //

ரொம்ப எதிர்பார்க்காதீங்க கொத்தனாரே...ஏதோ தெரிஞ்சத எழுதிக்கிட்டு இருக்கேன்.

அந்த ரெண்டு பேருக்கும்தான் அப்படீங்கறது புரியிற நேரத்துலதான் அவங்க எங்க படிக்கிறாங்க, அவங்க வீட்டுல ஏன் கலியாணத்துக்கு ஒடனே சம்மதிச்சாங்கன்னு பல கேள்விகளுக்கு விடை தெரியும்.

said...

// கதை டக்குன்னு முடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு.... நல்லாயிருக்கு //

இருக்கலாம் தேவ். சொல்ல வந்த விஷயம் முடிஞ்சதுல்ல...அதுக்கப்புறம் என்ன சொன்னாலும் அலுக்கும். அதுனாலதான் அங்கேயே முடிக்க வேண்டியதாப் போச்சு.

said...

// கதை நல்லாருக்கு ராகவன். நல்லா எழுதியிருக்கீங்க. அழுத்தமான முடிவை வைத்துக் கொண்டு அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதை. //

ஆமாம் பாரதி. உண்மைதான். அந்த அழுத்தம் எல்லாருக்கும் புரிந்திருந்தால் அதுவே நன்று.

// ராகவன் சார் .கத சூப்பருங்க!எப்பொ கண்ணாலம்! //

நன்றி சிங்கு....அந்த விஷயத்துக்கெல்லாம் பதிவு போடாமலா நடத்தப் போறோம்....

said...

// அருமையான கதை. என்ன ஜீரா சார். ஆனந்த விகடன்ல வெளியான ஒரு உண்மை சம்பவத்தோட பாதிப்பு போல தெரியுதே //

அனுசுயா, நீங்க எழுதுனத யுனிகோடுல மாத்தியிருக்கேன்.

ஆனந்த விகடன்ல இப்படி ஒரு சம்பவம் பத்திப் போட்டிருந்தாங்களா....பாக்கலையே...ஆனா நடந்திருக்க வாய்ப்பிருக்கு.

said...

// இந்த வரிகளைக் கண்டதும் அட்வான்ஸ் கங்ராட்ஸ் பார் யுவர் வெட்டிங் என பீன்னூட்டம் தயாரித்துவிட்டு முழுவதும் படித்தபிற்கு தெரிகிறது இது கதைதான். கதைதான். கதைதான் //

ஆமாம் கால்காரி சிவா. இது கதைதான். :-)

// ராகவன்! புரிஞ்ச மாதிரி இருந்தது..புரியாத மாதிரியும் இருந்தது..காலங்க்காத்தால இப்படி மண்டை காய வுட்டூட்டீங்களே..ஜோசப் சார் வேற முடிவு ரொம்ப டச்சிங்கா இருக்குன்னு சொல்லிட்டாரா..மறுமடியும் படிச்சி பார்த்தேன்..அப்புறம் தான் புரிஞ்சது ராகவன்..ரொம்ப நல்ல கதை..வாழ்த்துக்கள். //

:-))) என்ன சிவா...கதை ரொம்ப லேசா இருந்ததுல்ல மொதல்ல. கதை முழுக்க இருக்க வேண்டிய கனத்தை கடைசீல மட்டும் வெச்சிருந்தேன். அது புரிஞ்சிட்டா...அவ்வளவுதான். கதை முடிஞ்சி போச்சு. புரியலைன்னா கதையே இல்லை. நல்ல வேளை ஜோசப் சார் பின்னூட்டம் போட்டாரு.

said...

// இராகவன். உண்மையைச் சொல்லுங்கள். யாரையாவது காதலிக்கிறீர்களா இப்போது? இல்லையேல் இப்படி எழுத வராதே. //

என்ன குமரன்...கொலைக்கதை எழுதினால் கொலை செய்தீர்களா என்று கேட்பீர்கள் போல. ஹா ஹா ஹா கதை எழுதும் பொழுது பாத்திரம் நாமாக இருந்து காதலித்தான் எப்படி இருக்கும் என்று நினைத்து எழுதியதுதான் இந்தக் கதையின் நிலை.

// மூன்று நாட்கள் முயன்று எழுதிய கதை என்பது மிக நன்றாகத் தெரிகிறது. //

அதென்ன மூன்று நாட்கள்? எதை வைத்துச் சொல்கின்றீர்கள்? எனக்கே மறந்து விட்டது. இதை எழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கும். பதியும் பொழுது நான் செய்த மாற்றம் ரகு என்ற பெயரைச் சுந்தர் என்று மாற்றியது.

// பேருந்தில் வரும் போது படித்தேன். படிக்கும் போது பலவிதமான கேள்விகளும் யோசனைகளும் உணர்ச்சிகளும் எழுந்தன. அவற்றை தனிமடலில் அனுப்புகிறேன். //

அனுப்புங்க. அனுப்புங்க.

// கதை அருமை. தடவிப் பார்ப்பதை ஏன் இப்படித் திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று ஒரு கேள்வி வந்தது. ஆனால் கதையின் முடிவில் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது தெரியவில்லை அப்போது. :-) //

:-) ம்ம்ம்ம்....போன முறை முருகனை வைத்து முடிவை ஊகித்தீர்கள். இந்த முறை வெற்றி என் எழுத்துக்கு. :-)

said...

//இதை எழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கும்//

அப்ப இரண்டு மூன்று நாட்களாக முயன்று கொண்டிருப்க்கும் பதிவு இனிமேல் வருமா?

said...

இராகவன்,
நல்லா இருக்கிறது இந்த சுபா கதை. கடைசி வரியில் ஒரு குத்து (punch). ரொஆல்ட் டால் (Roald Dahl), ஓ ஹென்றி கதைகள் படித்த ஒரு அனுபவம் கிடைத்தது...Good show.

said...

ராகவன்,

ஒரு வழியா புடிச்சி படிச்சிட்டேன்!

//சுபா ஒரு பெரிய பாடகியா வரனும். அந்த வளர்ச்சிதான் எனக்கு முக்கியம். பெருமை. மேல மேல ஏத்தி விட்டு தாங்குற தூணா நா இருக்கனும். எங்க சுத்துனாலும் எங்கிட்ட வர்ரவளுக்கு இது கூடவா செய்யக் கூடாது. செய்வேன். கண்டிப்பாச் செய்வேன். //

தடவிங்க்கற வார்த்தைய ரெண்டாவது தடவை படிக்கும் போதே ஊகிக்க முடிந்தாலும்... , எனக்கு பிடிச்சது இந்த வரிகள்...

said...

// இராகவன்,
நல்லா இருக்கிறது இந்த சுபா கதை. கடைசி வரியில் ஒரு குத்து (punch). ரொஆல்ட் டால் (Roald Dahl), ஓ ஹென்றி கதைகள் படித்த ஒரு அனுபவம் கிடைத்தது...Good show. //

நன்றி ஹரியண்ணா. O Henry தெரியும். ஆனா இந்த Roald Dahl கேள்விப்பட்டதில்லை. பெரிய எழுத்தாளரா இருக்கனும். ஏதாவது ரெண்டு புத்தகம் சொல்லுங்களேன்.

said...

// ராகவன்,

ஒரு வழியா புடிச்சி படிச்சிட்டேன்! //

அப்பாடி....படிச்சிட்டீங்களா. :-)

////சுபா ஒரு பெரிய பாடகியா வரனும். அந்த வளர்ச்சிதான் எனக்கு முக்கியம். பெருமை. மேல மேல ஏத்தி விட்டு தாங்குற தூணா நா இருக்கனும். எங்க சுத்துனாலும் எங்கிட்ட வர்ரவளுக்கு இது கூடவா செய்யக் கூடாது. செய்வேன். கண்டிப்பாச் செய்வேன். //

தடவிங்க்கற வார்த்தைய ரெண்டாவது தடவை படிக்கும் போதே ஊகிக்க முடிந்தாலும்... , எனக்கு பிடிச்சது இந்த வரிகள்... //

உண்மைதான் இளவஞ்சி. சுந்தர் உண்மையான ஆம்பிளை. அதான் அப்படி.

said...

மனசைத் தொடும்படியாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.
எதிர் பாராத முடிவு.

said...

ஹூம்.கதை பத்தி என்ன சொல்ல.?? நல்லாவே இருக்கு ஓய்.
கொஞ்சம் அடிக்கடித் தான் எழுதுமேன்.

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்பில...

said...

// மனசைத் தொடும்படியாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.
எதிர் பாராத முடிவு. //

நன்றி சந்திரவதனா. நீண்ட நாட்களுக்குப் பின் எனது வலைப்பூவிற்கு வந்துள்ளீர்கள். அடிக்கடி வாருங்கள்.

said...

// ஹூம்.கதை பத்தி என்ன சொல்ல.?? நல்லாவே இருக்கு ஓய்.
கொஞ்சம் அடிக்கடித் தான் எழுதுமேன். //

நன்றி சுதர்சன். அடிக்கடியா...ம்ம்...ரொம்பவும் மக்களை அரட்டக்கூடாது பாருங்க...

// தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்பில... //

ஓ! சரியான பாட்டாவே பாடீட்டீங்களா!

said...

சிறில் அலெக்ஸ் said...

ராகவன்,
அழகான கதை. கதைக்குள் கொஞ்சம் வந்தவுடனேயே எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.

முடிவு அருமை, திடீரென வந்ந்ஹது. இரண்டுமுரை படித்து புரிந்து கொண்டேன். கல்லூரியில் பார்வையில்லாத சில நன்பர்களுடன் பழகிய ஞாபகம் வந்தது.

நானும் பார்வையில்லாதவர்களின் காதலைப் பார்த்து ஒருவன் திருந்தியது போல ஒரு கதை பண்ணினேன், கல்லூரியில்.

தொடருங்கள் உங்கள் கதைகளை.,

said...

// ராகவன்,
அழகான கதை. கதைக்குள் கொஞ்சம் வந்தவுடனேயே எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது. //

நன்றி சிறில்

// முடிவு அருமை, திடீரென வந்ந்ஹது. இரண்டுமுரை படித்து புரிந்து கொண்டேன். கல்லூரியில் பார்வையில்லாத சில நன்பர்களுடன் பழகிய ஞாபகம் வந்தது. //

ஆமாம். திடீர் முடிவுதான். அதற்கு மேல் என்ன எழுதினாலும் அறுவையாகப் போய்விடும்.

// நானும் பார்வையில்லாதவர்களின் காதலைப் பார்த்து ஒருவன் திருந்தியது போல ஒரு கதை பண்ணினேன், கல்லூரியில். //

அந்தக் கதைய இப்ப எழுதி இங்க போடுறது.

// தொடருங்கள் உங்கள் கதைகளை., //

கண்டிப்பாக சிறில். நிச்சயமாக.

said...

very nice story Ragavan.

said...

// ராகவன்..
கதை சூப்பர்..
என்னடா என்னமோ சொல்லிட்டே வராரே..எப்படி முடிக்கப் போறாரோன்னு நெனச்சேன்..
நல்ல உணர்ச்சிபூர்வமான முடிவு.. //

நன்றி மதி. இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. கதையின் இறுதியில் தெரிய வரும் விஷயத்தை கதையில் சொல்லப்படும் ஒவ்வொன்றிற்கும் பொருத்தினால் ஒவ்வொரு நிகழ்ச்சியின் பரிமாணமும் விளங்கும். எ-டு...ஏன் இருவர் வீட்டிலும் பிரச்சனை இல்லாமல் உடனே திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.

said...

// very nice story Ragavan. //

நன்றி மோகன். அடிக்கடி நம்ம வலைப்பூக்களின் பக்கம் வாங்க.

said...

நீங்க கதை எல்லாமும் எழுதுவீங்களா.. இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேனே.. ரொம்ப சூப்பர்ங்க இந்தக் கதை. மத்ததும் படிச்சிட்டு சொல்றேன்.

said...

ராகவன்,

இந்தக் கதையை முந்தியே ( அதாவது பதிவு போட்ட மறுநாள்) படிச்சுட்டேனே தவிர 'ஊட்டம்' போடலை. இப்ப ஞாபகம்
வந்துருச்சு.

சூப்பர் கதை போங்க. ஷார்ட் அண்டு ஸ்வீட். மனசைத் தொட்டுருச்சு.

நல்லா இருங்க.

said...

// நீங்க கதை எல்லாமும் எழுதுவீங்களா.. இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேனே.. ரொம்ப சூப்பர்ங்க இந்தக் கதை. மத்ததும் படிச்சிட்டு சொல்றேன். //

ஆமாம் பொன்ஸ்....அப்பப்ப எழுதுவேன். மத்ததெல்லாம் படிச்சீங்களா? எப்படி இருந்தது?

said...

// இந்தக் கதையை முந்தியே ( அதாவது பதிவு போட்ட மறுநாள்) படிச்சுட்டேனே தவிர 'ஊட்டம்' போடலை. இப்ப ஞாபகம்
வந்துருச்சு. //

எப்பப் படிச்சா என்ன டீச்சர். பிடிச்சா போதும். :-)

// சூப்பர் கதை போங்க. ஷார்ட் அண்டு ஸ்வீட். மனசைத் தொட்டுருச்சு. //

நன்றி டீச்சர்.

// நல்லா இருங்க. //

ரொம்ப நன்றி டீச்சர். எல்லாம் உங்களைப் போன்ற well wishers ஆசீர்வாதம்.

said...

டோண்டுவையும் ராகவனையும் குழப்பி ஒரு வழியாய் துளசிதளத்தில் ராகவனை கண்டு இங்கே வந்து சேர்ந்து "சுபா" வை படித்தால்:

சுந்தர் என பெயரை படிக்கும் வரையில் உண்மையிலேயே அது ராகவனை பற்றி என நினைத்தேன் கொஞ்சம் சந்தேகம் தோன்றினாலும். இப்படி ஒரு காதலியா என கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது :)

இது கதை தான்! என சொல்லும்போதே ஏனோ திரைப்படங்களில் இது யாரையும் குறிப்பிடுவது அல்ல என வரும் disclaimer மாதிரி உண்மை தான் போல என தோன்றியது.

பின்னூட்டங்களை படிக்கும் வரையில் சுந்தர் கண் பார்வை தெரியாதவர் என புரியவில்லை. சுபாவும் கூட.

காதல் எல்லோருக்கும் வரும் தானே. வரவேண்டும். உங்கள் காதலி(?!) கொடுத்து வைத்தவர் என புரிகிறது. கதைக்காக என்றாலும் கூட உன் வளர்ச்சியில் நான் பெருமை கொள்வேன் என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல.

வாலன்டைஸ் டேயின் போது சிவப்பு கலர் கட்டியிருக்கும் ராகவன் profile-ல் விவேகானந்தர் போல இருக்கும் மர்மம் என்னவோ? :)

said...

// டோண்டுவையும் ராகவனையும் குழப்பி ஒரு வழியாய் துளசிதளத்தில் ராகவனை கண்டு இங்கே வந்து சேர்ந்து "சுபா" வை படித்தால்: //

ரொம்பக் குழப்பிக்காதீங்க. மக்களே ஏற்கனவே கொழம்பிப் போயிருக்காங்க.

வாங்க தயா. அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க.

// சுந்தர் என பெயரை படிக்கும் வரையில் உண்மையிலேயே அது ராகவனை பற்றி என நினைத்தேன் கொஞ்சம் சந்தேகம் தோன்றினாலும். இப்படி ஒரு காதலியா என கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது :) //

அதுதான் சுபா. அதே போல பெண்களும் இப்பிடி ஒரு காதலனான்னு ஏங்கனும். அதுதான் சுந்தர்.

// இது கதை தான்! என சொல்லும்போதே ஏனோ திரைப்படங்களில் இது யாரையும் குறிப்பிடுவது அல்ல என வரும் disclaimer மாதிரி உண்மை தான் போல என தோன்றியது. //

அது ஒரு பெரிய கதைங்க..... :-)

// பின்னூட்டங்களை படிக்கும் வரையில் சுந்தர் கண் பார்வை தெரியாதவர் என புரியவில்லை. சுபாவும் கூட. //

என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க. சரி. அப்புறமாவது புரிஞ்சிருச்சே. :-)

// காதல் எல்லோருக்கும் வரும் தானே. வரவேண்டும். உங்கள் காதலி(?!) கொடுத்து வைத்தவர் என புரிகிறது. கதைக்காக என்றாலும் கூட உன் வளர்ச்சியில் நான் பெருமை கொள்வேன் என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. //

நிச்சயமாக எல்லாருக்கும் சாத்தியமில்லை. ஆனால் உண்மையான ஆணுக்குச் சாத்தியமாகலாம். நம்மோடு நடமாடும் சிறந்த எடுத்துக்காட்டுகள் உண்டு. வாணி ஜெயராம் பெரிய பாடகி என்று எல்லாருக்கும் தெரியும். அவருடைய கணவர் பெரிய வேலையில் இருந்தவர்தான். மனைவி புகழ் பெறத் தொடங்கியதும் மனைவிக்காக எல்லாமுமாய் இருந்தார்.

// வாலன்டைஸ் டேயின் போது சிவப்பு கலர் கட்டியிருக்கும் ராகவன் profile-ல் விவேகானந்தர் போல இருக்கும் மர்மம் என்னவோ? :) //

சரி. போட்டோவ மாத்தீர்ரேன். சரிதானா?

said...

//என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க. சரி. அப்புறமாவது புரிஞ்சிருச்சே. :-)//
நான் அவ்வளவாக கதைகள் படிப்பதில்லை. தலையணை சைஸ் நாவல்களும் ஆர்வமில்லை. சிவகாமியின் சபதம் என்ற ஓரு நாவலை வாங்கி 4 பாடம் படித்ததற்கே மூச்சு முட்டி தூர வைத்துவிட்டேன். அதனால் கூட இருக்கலாம்.

//அது ஒரு பெரிய கதைங்க..... :-)//
அந்த உண்மைக்கதையை சீக்கிரம் எழுதுங்க. ரொம்ப ஆவலா இருக்கு :)
-----------------------------------
எம்.எஸ்
எஸ்.ஜானகி
பாம்பே ஜெயSri
சுதா ரகுநாதன்
என இந்த வெற்றி பாடகிகளுக்கு பின்னாலும் அந்த நல்ல கணவர்கள் இரு(ந்தார்கள்)க்கிறார்கள்.

வேறு துறைகளிலும் இருப்பார்கள்.