Monday, September 18, 2006

பெங்களூரில் ராகவனைச் சந்தித்தேன்

ஆமா...சென்னையிலேயே சந்திச்சிருக்க வேண்டியது. எப்படியோ தட்டிப் போயிருச்சு. பெங்களூர் வந்தப்புறம் சந்திக்க வாய்புக் கிடைச்சது. அதாவது சனிக்கிழமை செப்டம்பர் 16ம் தேதி இரவு. அதுவும் நண்பர்களோட. எங்கன்னு கேக்குறீங்களா? PVR Cinemasலதான். வேட்டையாடு விளையாடு படத்தச் சென்னையில இருக்கும் போதே பாத்திருக்க வேண்டியது. எப்படியோ நேரமில்லாமத் தள்ளிப் போச்சு. இங்க பெங்களூர்ல போன வாரம் முயற்சி செய்து முடியாமல் இந்த வாரம் சனிக்கிழமை இரவுக் காட்சிக்குப் போக முடிந்தது.

டி.சி.பி ராகவன் பாத்திரத்தில் கமல். படம் தொடங்கும் போதே ராகவன் தொல்லை தாங்க முடியலைன்னு ஒருத்தர் சொல்ற மாதிரிதான் தொடங்குது. வலைப்பூவுல இருந்து யாரும் வசனம் எழுதீருக்கீங்களா என்ன? ஹா ஹா ஹா! பொதுவாவே ராகவன்னு பேரெல்லாம் தமிழ்ப் படத்துல பாக்க முடியாது. ராஜாதான் நெறைய பயன்படுத்துன பேர்னு நெனைக்கிறேன். ஆகையால படம் பாக்கும் பொழுது என்னையுமறியாம ராகவன் பாத்திரத்தோட கொஞ்சம் ஒன்றீட்டேன்னுதான் சொல்லனும். அதுலயும் கூட வந்தவங்க செஞ்ச வம்பு இருக்கே! அப்பப்பா! :-)

டி.சி.பி ராகவன் வீட்டுலயும் வாரம் ஒரு வாட்டி கறி எடுக்குறாங்க. ஹி ஹி. நம்ம வீட்டுலயுந்தான். எவ்வளவு பெரிய ஒத்துமை. அத விட அவரு வீட்டுல பூஜையறையில நடுநாயகமா முருகன் படம். அதுவும் வள்ளி தெய்வானையோட நிக்குற பெரிய படம். :-) நான் கவனிச்சதது போலவே கூட இருந்த நண்பர்களும் பாத்துட்டு எங்கிட்ட சொன்னாங்க. புல்லரிச்சுப் போச்சுங்க எனக்கு. :-)

டி.சி.பியும் அமெரிக்காவுக்கு ஒரு வாட்டிதான் போயிருக்காரு. நானும் அப்படித்தான். நல்ல வேளையா நமக்கு அமெரிக்காவுல அடிகிடி படலை. அதுல பாருங்க டி.சி.பி ராகவன் கையில தொட்டில் கட்டியிருக்கிற காட்சியில எனக்குக் கண்ணுல தண்ணி வந்துருச்சு. சென்னையில இருந்தப்போ நான் கட்டிக்கிட்டிருந்தேனே! அந்த நெனப்புதான்.

சவால்லாம் பயங்கரமா விட்டுச் சண்டை போடுறாரு டி.சி.பி. நமக்கு அதெல்லாம் ஆகாதுங்க. என்னத்தச் சண்ட போட்டு....ஆனா ஒன்னு....Raghavan's Instinctன்னு சொல்றாரு பாருங்க....அது நமக்கு அப்பிடியே பொருந்தும். என்னோட வாழ்க்கையில பலவாட்டி நான் அனுபவிச்சதுதான் அது. அதெல்லாம் சொல்லலாந்தான். ஆனா அடுத்தவங்களும் தொடர்புள்ள நிகழ்ச்சிகள். அதுனால சொல்ல விரும்பலை. அதுனால டி.சி.பி ராகவனுக்கு அந்த instinct வேலை செய்ற காட்சிகள்ள எனக்கு ஒரு மாதிரி ஈரப்படுக்கையில படுத்திருந்த மாதிரி இருந்தது. ஆனா நேரா கருத்துக்கு வர்ர அவருடைய வழக்கம் எனக்கும் உண்டு. எல்லாருக்கும் உண்டுன்னு எல்லாரும் சொல்வாங்கன்னு நெனைக்கிறேன்.

இன்னொரு ஒத்துமை. எனக்குக் கயல்விழிங்குற பேரு ரொம்பப் பிடிக்கும். தமிழில் பிடிச்ச பேர்கள்ள அதுதான் முதலிடம்னே சொல்லலாம். ஒரு பெண்குழந்தையக் குடுத்துப் பேர் வெக்கச் சொன்னா மொதல்ல அந்தப் பேரத்தான் வெப்பேன்.

நமக்கும் டிசிபிக்கும் கொஞ்சம் வேறுபாடுகளும் இருக்குது. அவருக்கு மீசை இருக்குது. என்னைய விட பெரிய தொப்பை வெச்சிருக்காரு. போலீஸ் பாத்திரம்னு அப்படி இருந்திருக்கலாம். காரு ஜீப்பு ஓட்டுறாரு. எனக்குத் தெரியாதே. பைக்குதான் தெரியும். கதவையெல்லாம் என்னால மோதி ஒடைக்க முடியும்னு தோணலை. அதே போல கழுத்தத் திரிகிக் கொல்ல முடியுமான்னும் தெரியலை. கறி கோழி திம்பேன்னாலும் ஒரு கோழியக் குடுத்து வெட்டுன்னு சொன்னா இன்னைக்கு இருக்குற ஜிராவால செய்ய முடியும்னு தோணலை.

படத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு மிகச் சிறப்பு. அவர் இருக்கும் காட்சியில் ராகவன் இருப்பதே தெரியவில்லை. ஜோதிகாவும் ராகவனை பன்னுக்குள் சாசேஜை வைத்து ஹாட் டாக் போல கபலபக்கி விடுகிறார். கமலும் ராகவன் என்ற பெயரினாலோ என்னவோ அடக்கி வாசித்திருக்கிறார் போல. :-) ஆனால் அதுவும் அழகாய்த்தான் இருக்கிறது. வெள்ளை ரோஜா படத்தில் போலீஸ் சிவாஜி மனோரமாவை விசாரணைக்கு அழைத்து வரச் சொல்வார். அந்தக் காட்சியில் மனோரமாவின் அரசாங்கந்தான். சிவாஜி அமைதியாக இருந்து மனோரமாவிற்கு பெயர் வாங்கிக் கொடுப்பார். அந்த மாதிரி நடித்திருந்தார் டி.சி.பி.

வில்லன்களைச் சொல்லாமல் விட முடியுமா? ஒரு வில்லனைக் கொஞ்சமும் யோசிக்காமல் கதாநாயகனாகவே போடலாம். அவ்வளவு நன்றாக இருக்கிறார். நடிக்கிறார். நல்ல வாய்ப்பு கிடைக்க எனது வாழ்த்துகள். நான் இளாவைத்தான் சொல்கிறேன். அமுதன் கொஞ்சம் அளவுக்கு மீறிய சேட்டை. பார்க்கும் பொழுதே எரிச்சல் வருகிறது. அதுதான் அந்தப் பாத்திரத்திற்குத் தேவை என்று நினைக்கிறேன். இரண்டு bi-sexual ஆண்களை வில்லனாகப் போட்டுப் படமெடுப்பது தமிழுக்குப் புதிது.

கமலினி....கமல் இனி வாய்ப்புக் குடுப்பாரா என்று தெரியவில்லை. பின்னே....முத்தக் காட்சியே படத்தில் இல்லையே! ஆனாலும் அழகாய்த் தோன்றி அடக்கமாய் நடித்து படக்கென்று போய் விடுகிறார். அதனால்தானோ என்னவோ கதாநாயகியின் மொத்த எடையையும் ஜோதிகா வாங்கிக் கொண்டு மிகச் சிறப்பாய் செய்திருக்கிறார். இனிமெல் திரைப்படத்தில் நடிக்க மாட்டாராம். நல்லது. அது அப்படியே இருக்க இறைவனை வேண்டுகிறேன். அதுதான் அவரது குடும்ப வாழ்க்கைக்கு நல்லது.

பாடல்கள் எல்லாமே நன்றாக எழுதப் பட்டிருக்கிறது. தாமரை! உங்களைத் தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று வருந்தாதீர்கள். நல்ல குலாப்ஜாமூன் எப்பொழுதாவது ஒருமுறை கிடைத்தாலும் நாவிலும் நெஞ்சிலும் நிற்கும். ஆனால் உங்களின் பாடல் ஒன்று வடக்கத்திப் பாடகர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருக்கிறது. கேட்கும் பொழுது வருத்தமாக இருந்தது.

ஹாரிஸ் ஜெயராஜ். வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவெ.....சூப்பரப்பு! ஆனாலும் நீங்கள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது. வாழ்த்துகள்.

கடைசியாக கௌதமுக்கு சில வரிகள். நல்ல முயற்சி கௌதம். படம் வெற்றிப்படம்தான். ஐயமில்லை. படத்தை நானும் ரசித்தேன். ஆனால் எப்படி UA கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. A+ கொடுத்திருக்க வேண்டும். அந்த அளவு வன்முறை. பலகாட்சிகளில் திரையிலிருந்து கண்களை விலக்க வேண்டியிருந்தது. படத்தில் ஜோதிகாவைக் கொன்று விடுவீர்களோ என நினைத்தேன். நல்லவேளை...என்னுடைய சாபத்திலிருந்து தப்பினீர்கள். :-)

வெண்ணிலவே பாடலைத் திரையில் மிகவும் ரசித்தேன். அந்த வெள்ளைக்கார மாணவர்கள் தமிழில் பாடுவது ரொம்பவும் இயல்பாகவும அழகாகவும் இருந்தது. அந்தப் பாடலின் முடிவில் தன்னையுமறியாமல் டி.சி.பி ராகவன் ஆராதனாவை (ஜோதிகாவை) உள்ளத்தில் ஈர்த்துக் கொள்வது மிகவும் அழகாக படமாக்கப்பட்டிருந்தது. ரசித்தேன்.

அதே போல டி.சி.பி தன்னுடைய காதலை ஆராதனாவிடம் சொல்லும் காட்சியும் மிக அழகு. தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு செல்லும் ஆராதனாவின் முகபாவங்களும் நடிப்பும் புதுமை. இனிமை. ஆராதனா வெளிப்படுத்திய காதலின் எடை கயல்விழி காட்டும் காதலை விட மிக இயல்பாக வந்திருக்கிறது. அதிலும் ஆராதனா தன்னுடைய தங்கையிடம் ராகவனுடன் நடத்திய உரையாடலை விவரிக்கும் கட்டம். அப்பப்பா! நமக்குள் திக்திக்தான்.

கௌதம், படம் முடிகையில் எனக்கு ஒன்று தோன்றியது. எல்லாரும் இந்தப் படத்தைக் காக்க காக்க -2 என்று சொல்கிறார்கள். அது தப்பு. இதுதான் காக்க காக்க - 1. காக்க காக்கவிற்கு முன்னோடி. இதன் தொடர்ச்சிதான் காக்க காக்க கதை. ஏன் இப்படி நினைக்கிறேன் தெரியுமா? படத்தில் ஜோதிகாவின் மகளின் பெயர் மாயா. அந்த மாயாதான் காக்க காக்கவில் வரும் மாயா டீச்சர். ஜோதிகாவின் மகள் ஜோதிகாவைப் போலவே இருப்பதும் சரிதானே! இது குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லையோ!

அன்புடன்,
கோ.இராகவன்

37 comments:

said...

//படத்தில் ஜோதிகாவின் மகளின் பெயர் மாயா. அந்த மாயாதான் காக்க காக்கவில் வரும் மாயா டீச்சர். ஜோதிகாவின் மகள் ஜோதிகாவைப் போலவே இருப்பதும் சரிதானே! இது குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லையோ!
//
எப்படி இதெல்லாம்??? கலக்கிட்டீங்க போங்க ;)


//டி.சி.பி ராகவன் வீட்டுலயும் வாரம் ஒரு வாட்டி கறி எடுக்குறாங்க. ஹி ஹி. நம்ம வீட்டுலயுந்தான்//
புரட்டாசி மாசம் வந்துடுச்சாமே! இல்லனா நம்ம வீட்லயும் அப்படித்தான்.


//டி.சி.பியும் அமெரிக்காவுக்கு ஒரு வாட்டிதான் போயிருக்காரு. நானும் அப்படித்தான். நல்ல வேளையா நமக்கு அமெரிக்காவுல அடிகிடி படலை.//
அமெரிக்காவுல இருந்து தனியா வந்தீங்களானு சொல்லவே இல்லையே!

said...

அப்பாடா. வந்தாச்சா. எங்கடா ஆளைக் காணோம்ன்னு தேடிக்கிட்டு இருந்தேன். :-)

நான் இந்தப் படத்தை முதல் காட்சியிலேயே பாத்துட்டு வந்தாச்சு. மக தான் கொஞ்சம் பயந்துட்டா. இனிமே திரையரங்குக்குப் படம் பாக்க வருவாளான்னு தெரியலை. :-)

said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா போட்டிருக்கீங்க. காக்க காக்க -1; நல்ல லாஜிக்.

எனக்கு படத்தில் ரெம்ப அதிக வயலன்ஸ் இருந்தது ரசிக்க முடியல. கமலிசம் குறைந்திருந்தது ரசிக்க வைத்தது. புலனாய்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அமெரிக்காவில் பல சீரியல்கள்ள இதுமாதிரி ப்ளாட் தினம் தினம் காண்பிக்கிறாங்க. அதுல ஒண்ன எடுத்து வுட்டாலே சூப்பராயிருந்திருக்கும்.

said...

//பெங்களூரில் ராகவனைச் சந்தித்தேன் //

:))
போலி கிட்டேர்ந்து தப்பிச்சிங்க !

said...

கலக்கிட்டெ அப்பூ, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டெயே.......

நடக்கட்டும். நடக்கட்டும்

said...

//கமலும் ராகவன் என்ற பெயரினாலோ என்னவோ அடக்கி வாசித்திருக்கிறார் போல. :-)//

அட, எப்பிடி ஜிரா இப்படி பிட்டை போடறீங்க?

//எனக்குக் கயல்விழிங்குற பேரு ரொம்பப் பிடிக்கும்//

இது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்! என் நண்பன் ஒருவன் இப்படித் தான் அவங்க அம்மா கிட்ட மெதுவா விஷயத்த ஆரம்பிச்சான் :-)

said...

ராகவன்,
உங்க விமரிசனத்தை எதிர்பார்த்திருந்தேன் .ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க .படத்தை ரசிச்சு பார்த்திருக்கீங்கன்னு தெரியுது.

said...

சொல்ல வ-த திகில் கதைக்கு சற்றும் ஒட்டாத காதலைத் திணித்து, குறிப்பாக கடைசிக் காட்சிகளின் போது, ஜவ்வு மாதிரி இழுக்க வைத்து, [ரசிகர்கள், திரையரங்கில் 'படத்த ஓட்டுய்யா, இவங்க ரெண்டு பேரும் இப்ப காதலிச்சா என்ன, காதலிக்காட்டி என்ன' போன்ற பொறுமையிழந்த குரல்கள்!] விஞ்ஞானம் முன்னேறிய இந்நாளில் இப்படி ஒரு புலனாய்வைச் செய்த ராகவனைக் கண்டுக்காம விட்டது கூட....
அதே ராகவன் இன்ட்யுஷன் தானா.... ராகவன்!!

எல்லாம் பேர் ராசிப்பா!! :))

காக்க காக்க - 1 லாஜிக்.... சூப்பர்!

said...

ராகவன்!

அந்த ராகவனுக்கும், இந்த ராகவனுக்கும், உள்ளஒற்றுமை வரிசையில, கமலினி மாதிரி, ஜோதிகா மாதிரி, உண்டான்னு சொல்லவேயில்லை...:))

said...

:-)

/ A+ கொடுத்திருக்க வேண்டும்./

A+++ கொடுத்திருக்க வேண்டும்.

said...

//டி.சி.பியும் அமெரிக்காவுக்கு ஒரு வாட்டிதான் போயிருக்காரு. நானும் அப்படித்தான். நல்ல வேளையா நமக்கு அமெரிக்காவுல அடிகிடி படலை.//

சூப்பர்....

எவ்ளோ நேரம் உக்காந்த்து யோசிச்சீங்க இது எல்லாத்தையும் எழுதறதுக்கு

மங்கை

said...

Grags,
naan unga posts ellam word doc-la copy paste panni leisure-la padikalaamna paatha, word-la tamil fonts vara maatengudhey. Any suggestion for which font to install in my pc to make Word read tamil?

Adhu seri, enna innum adhey 'punishment' photova vechirukeenga? Continuous-a dhavam seira maari saamiya yemaathareengala? :)

said...

i loved your piece of writing!..sarcasm too! very relaxing to read. thanks!

அன்புடன்...
இணைய நாடோடி ...
ஓசை செல்லா

said...

தலைப்பைப் பார்த்துவிட்டு வேற யாரையோ சந்திச்சீங்களோன்னு நினைச்சேன் :)

படத்தை நீங்க பாராட்டி இருப்பதெல்லாம் தான் ராகவன் ஒத்துக்க முடியலை.. மத்தபடி திட்டியதெல்லாம் சரிதான்..

வெண்ணிலவே நல்ல பாட்டு. ஆனா கமலினி வருவாங்களே, அந்த "பார்த்த முதல் நாளே" அது கூட நல்லாத்தானே இருந்தது?! அதைச் சொல்லாம விட்டுட்டீங்களே?!! காட்சியமைப்பு கொடுமை.. ஆனா, பாட்டுக்கள் நல்லா இருந்தது..

//படத்தில் ஜோதிகாவின் மகளின் பெயர் மாயா. அந்த மாயாதான் காக்க காக்கவில் வரும் மாயா டீச்சர். //
முருகா.. காப்பாத்து!! இது தாங்கலை.. கௌதம் படமே தேவலாம் என்பது மாதிரி இருக்கு இந்த லாஜிக் :)

// காக்க காக்க -2 //- அதுக்கு அர்த்தம் பார்ட் டூ இல்லீங்க, காக்க காக்க மைனஸ் டூ : அதாவது, காக்க காக்கவில் வரும் போலீஸ் வாழ்க்கையின் யதார்த்தமும் (ஜோ-சூர்யா) காதல் கெமிஸ்ட்ரியும் மிஸ்ஸிங், ஆக, காக்க காக்க - 2 = வேட்டையாடு விளையாடு :)

said...

// வெட்டிப்பயல் said...
//படத்தில் ஜோதிகாவின் மகளின் பெயர் மாயா. அந்த மாயாதான் காக்க காக்கவில் வரும் மாயா டீச்சர். ஜோதிகாவின் மகள் ஜோதிகாவைப் போலவே இருப்பதும் சரிதானே! இது குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லையோ!
//
எப்படி இதெல்லாம்??? கலக்கிட்டீங்க போங்க ;) //

பின்னே....நாங்கள்ளாம் ஒரு படம் பாத்தம்னா அதுக்குள்ள முங்கி முத்தெடுக்குறவங்களாச்சே! நாங்க உங்களப் போல பேருல காட்டிக்கிறலைன்னாலும் செயல்ல காட்டுற செயல் வீரர்களாச்சே!

// //டி.சி.பி ராகவன் வீட்டுலயும் வாரம் ஒரு வாட்டி கறி எடுக்குறாங்க. ஹி ஹி. நம்ம வீட்டுலயுந்தான்//
புரட்டாசி மாசம் வந்துடுச்சாமே! இல்லனா நம்ம வீட்லயும் அப்படித்தான். //

வந்தா வரட்டும். நாம வேண்டாம்னா சொன்னோம். புரட்டாசி...அடுத்து ஐப்பசி...கார்த்திகைன்னு வந்துக்கிட்டேதான் இருக்கும்...அதுக்காக?

// //டி.சி.பியும் அமெரிக்காவுக்கு ஒரு வாட்டிதான் போயிருக்காரு. நானும் அப்படித்தான். நல்ல வேளையா நமக்கு அமெரிக்காவுல அடிகிடி படலை.//
அமெரிக்காவுல இருந்து தனியா வந்தீங்களானு சொல்லவே இல்லையே! //

ம்ம்ம்....இதுல இன்னொன்னு சொல்லலும். டி.சி.பி ராகவன் அமெரிக்காவுல எறங்குற ஏர்போர்ட் வாஷிங்டன் டிசி ஏர்ப்போர்ட். பாத்ததும் கண்டுபிடிச்சிட்டேன். ஏன்னா...நான் எறங்குனதும் அந்த ஏர்ப்போர்ட்தானே. (ஆனா படத்துல அவரு நியூயார்க்குல எறங்குனாருன்னு சொல்வாங்க). இன்னொரு ஒத்துமை.

said...

// குமரன் (Kumaran) said...
அப்பாடா. வந்தாச்சா. எங்கடா ஆளைக் காணோம்ன்னு தேடிக்கிட்டு இருந்தேன். :-) //

தேடினேன் வந்ததுன்னு பாட்டுப் பாடி ஆடப் போறீங்களா? இல்லதானே! :-))

// நான் இந்தப் படத்தை முதல் காட்சியிலேயே பாத்துட்டு வந்தாச்சு. மக தான் கொஞ்சம் பயந்துட்டா. இனிமே திரையரங்குக்குப் படம் பாக்க வருவாளான்னு தெரியலை. :-) //

படத்தில் வன்முறை குறைந்திருக்கலாம். மிஸ்டர் அண்டு மிஸஸ் ஐயரில் ஒரு துளி ரத்தம் கூடக் காட்டாமலே அப்பர்ணா சென் வன்முறையின் தாக்கத்தை மிக அழகாக காட்டியிருப்பார். அந்த அளவிற்குக் காட்டினால் நம்மவர்களுக்குப் புரியுமோ புரியாதோ!

கார்ஃபீல்டு-2 படத்திற்கு சிவக்கொழுந்தை அழைத்துச் செல்லுங்கள். பிறகு திரையரங்குகளுக்கு வரத் தயங்க மாட்டாள்.

said...

// சிறில் அலெக்ஸ் said...
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா போட்டிருக்கீங்க. காக்க காக்க -1; நல்ல லாஜிக். //

:-) நல்லாருக்குல்ல லாஜிக். கௌதம நேருல பாத்தா கேக்கனும். ஆனா எங்க பாக்குறது.

// எனக்கு படத்தில் ரெம்ப அதிக வயலன்ஸ் இருந்தது ரசிக்க முடியல. கமலிசம் குறைந்திருந்தது ரசிக்க வைத்தது. புலனாய்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அமெரிக்காவில் பல சீரியல்கள்ள இதுமாதிரி ப்ளாட் தினம் தினம் காண்பிக்கிறாங்க. அதுல ஒண்ன எடுத்து வுட்டாலே சூப்பராயிருந்திருக்கும். //

உண்மைதான் சிறில். அதிலும் சில குளோசப் காட்சிகள் குமட்டல். Nightmare in Elm Street பாத்தது போல இருந்தது.

புலனாய்வுன்னு ஒன்னுமே இல்லை. கடைசியில கூட கொலகாரன் தானா வந்துதான் மாட்டிக்கிறான். அதுலயும் ராகவரு ஏதோ திட்டம் போட்டிருக்கேன்...அவங்க வெளியில வந்துருவாங்கன்னு சொல்லிச் சீண்டிப் பேட்டி கொடுக்குறாங்க. அதுக்கப்புறந்தான் ஆறு கொலைகள் நடக்குது. வயித்தெரிச்சல்.

கமல்-ஜோதிகா காதல் படத்தைக் காப்பாத்துதுன்னே சொல்லலாம்.

said...

// கோவி.கண்ணன் [GK] said...
//பெங்களூரில் ராகவனைச் சந்தித்தேன் //

:))
போலி கிட்டேர்ந்து தப்பிச்சிங்க ! //

போலியா போளியா! ரெண்டுலயும் பலவகைகள் உண்டு. போளிகள்ள
தேங்கப்போளி, பருப்புப் போளி, கடலைப் போளி, நெய்ப்போளி, உருளைக்கிழங்கு போளி, காரப் போளின்னு அத்தனை வகையும் எனக்குப் பிடிக்கும். ;-)

said...

// மஞ்சூர் ராசா said...
கலக்கிட்டெ அப்பூ, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டெயே.......

நடக்கட்டும். நடக்கட்டும் //

நன்றி மஞ்சூரு ராசா! எல்லாம் ஒங்களப் போன்றவங்க ஊக்குவிப்புத்தான். :-)

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கமலும் ராகவன் என்ற பெயரினாலோ என்னவோ அடக்கி வாசித்திருக்கிறார் போல. :-)//

அட, எப்பிடி ஜிரா இப்படி பிட்டை போடறீங்க? //

ஹி ஹி இதெல்லாம் அப்படியே ஆகி வர்ரது...நம்ம கிட்ட என்ன இருக்கு!

// //எனக்குக் கயல்விழிங்குற பேரு ரொம்பப் பிடிக்கும்//

இது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்! என் நண்பன் ஒருவன் இப்படித் தான் அவங்க அம்மா கிட்ட மெதுவா விஷயத்த ஆரம்பிச்சான் :-) //

ஆரமிச்சாச்சா! அப்பச் சரி..இனிமே வண்டி வேகம் பிடிச்சிரும். உங்க நண்பருக்கு என்னோட வாழ்த்துகள்.

said...

// ஜோ / Joe said...
ராகவன்,
உங்க விமரிசனத்தை எதிர்பார்த்திருந்தேன் .ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க .படத்தை ரசிச்சு பார்த்திருக்கீங்கன்னு தெரியுது. //

ஜோ, ஒரு படம் பாத்தா மொதல்ல இருந்து கடைசி வரைக்கும் ஒழுங்கா பாக்கனும். குறுக்க யாரும் பேசுனாலும் பிடிக்காது. அதான் இப்பிடி. உங்க விமர்சனமும் படிச்சேன். அதுல நீங்க சொல்லீருக்குறதுல பெரும்பாலானதுக்கு நான் ஒத்துப் போறேனா இல்லையா!

said...

// SK said...
சொல்ல வ-த திகில் கதைக்கு சற்றும் ஒட்டாத காதலைத் திணித்து, குறிப்பாக கடைசிக் காட்சிகளின் போது, ஜவ்வு மாதிரி இழுக்க வைத்து, [ரசிகர்கள், திரையரங்கில் 'படத்த ஓட்டுய்யா, இவங்க ரெண்டு பேரும் இப்ப காதலிச்சா என்ன, காதலிக்காட்டி என்ன' போன்ற பொறுமையிழந்த குரல்கள்!] //

அப்படியா சொல்றீங்க? எனக்கென்னவோ அந்தக் காதல் காட்சிகள்தான் படத்தக் காப்பாத்துதுன்னு தோணுது.

// விஞ்ஞானம் முன்னேறிய இந்நாளில் இப்படி ஒரு புலனாய்வைச் செய்த ராகவனைக் கண்டுக்காம விட்டது கூட....
அதே ராகவன் இன்ட்யுஷன் தானா.... ராகவன்!! //

ஓ! படத்துல புலனாய்வு இருக்குதா என்ன? அப்படி ஒன்னுமே வரலையே...இவரு அமெரிக்கா போறாரு....காதலிக்கிறாரு...காப்பாத்துறாரு....பொணத்தக் கண்டுபிடிக்கிறாரு....அடி வாங்குறாரு...இந்தியாவுக்கு வர்ராரு...இப்படித்தான போகுது. இல்லாத புலனாய்வப் பத்தி ஏன் சொல்லனும்.

// எல்லாம் பேர் ராசிப்பா!! :)) //

செம உள்குத்து :-))))

// காக்க காக்க - 1 லாஜிக்.... சூப்பர்! //

ஹி ஹி...ஆமாங்க...

said...

// மலைநாடான் said...
ராகவன்!

அந்த ராகவனுக்கும், இந்த ராகவனுக்கும், உள்ளஒற்றுமை வரிசையில, கமலினி மாதிரி, ஜோதிகா மாதிரி, உண்டான்னு சொல்லவேயில்லை...:)) //

அது வந்து....அது வந்து....வந்து...வந்து............


// குறும்பன் said...
:-)

/ A+ கொடுத்திருக்க வேண்டும்./

A+++ கொடுத்திருக்க வேண்டும். //

குடுக்கலாம் குடுக்கலாம். கண்டிப்பாக் குடுக்கலாம்.

// எவ்ளோ நேரம் உக்காந்த்து யோசிச்சீங்க இது எல்லாத்தையும் எழுதறதுக்கு

மங்கை //

மங்கை, இத எழுத அர மணி நேரத்துல இருந்து முக்கா மணி நேரத்துக்குள்ள ஆயிருக்கும். நான் ரொம்ப யோசிச்சு எழுதுற பதிவுகளுக்கெல்லாம் அவ்வளவா வரவேற்பு இருக்கிறதில்லை. ஆனா எழுதும் போது யோசிச்சு எழுதுறோமா இல்லையான்னு தெரியாது. சில பதிவுகளை நான் திரும்பத் திரும்பப் படிச்சித் திருத்திப் போட்டிருக்கேன். இந்தப் பதிவு..எழுதி ஒரு வாட்டி படிச்சிட்டு அப்படியே போட்டது.

said...

// The Talkative Man said...
Grags,
naan unga posts ellam word doc-la copy paste panni leisure-la padikalaamna paatha, word-la tamil fonts vara maatengudhey. Any suggestion for which font to install in my pc to make Word read tamil? //

Hi Talkative Man, dont use word. use wordpad. If it is not showing correctly, select the font Latha. Wordpad supports.

// Adhu seri, enna innum adhey 'punishment' photova vechirukeenga? Continuous-a dhavam seira maari saamiya yemaathareengala? :) //

அப்படியெல்லாம் இல்லீங்க...போட்டோ எடுக்கனும்..எடுத்துப் போடனும். போட்டாப் போச்சு.


// chella said...
i loved your piece of writing!..sarcasm too! very relaxing to read. thanks!

அன்புடன்...
இணைய நாடோடி ...
ஓசை செல்லா //

நன்றி ஓசை செல்லா

said...

//ஆகையால படம் பாக்கும் பொழுது என்னையுமறியாம ராகவன் பாத்திரத்தோட கொஞ்சம் ஒன்றீட்டேன்னுதான் சொல்லனும். அதுலயும் கூட வந்தவங்க செஞ்ச வம்பு இருக்கே! அப்பப்பா! :-)//

அது சரி....

//டி.சி.பி ராகவன் கையில தொட்டில் கட்டியிருக்கிற காட்சியில எனக்குக் கண்ணுல தண்ணி வந்துருச்சு. சென்னையில இருந்தப்போ நான் கட்டிக்கிட்டிருந்தேனே! அந்த நெனப்புதான்.//

நெனப்புதான் பொழப்பைக் கெடுக்குதாம்.

//Raghavan's Intutionன்னு சொல்றாரு பாருங்க//

அது இன்ஸ்டிங்ட் இல்லே??

//கறி கோழி திம்பேன்னாலும் ஒரு கோழியக் குடுத்து வெட்டுன்னு சொன்னா இன்னைக்கு இருக்குற ஜிராவால செய்ய முடியும்னு தோணலை.//

ந..ம்...பீ...ட்...டோ...ம்...

said...

ராகவன்,

எனக்கு படத்த பார்த்து முடிச்சதும் ரொம்ப கடுப்பா இருந்தது. ஏன்னு தெரியல. ஒருவேளை கொஞ்சம் அதிகமாவே எதிர்பார்த்து போனதால வந்த விளைவோ என்னவோ. நானும் என் குடும்பத்தில் அனைவருமே நடிகர் திலகத்திற்குப் பிறகு கமல் ரசிகர்கள்தான். ஆனால் இம்முறை என் மனைவி, மகள் யாருக்குமே வே.வி. பிடிக்கவில்லை. வந்தவுடனே ஒரு சூடா பதிவு போட்டா என்னன்னு கூட தோனிச்சி. ஆனா ஜோவோட பதிவ படிச்சதும் எதுக்கு வீணா வம்ப விலைக்கி வாங்கறதுன்னு விட்டுட்டேன்..

ஒரு சூரியா-ஜோதிகா படத்த பார்த்த திருப்திகூட இதில் கிடைக்கவில்லை..

said...

vithtiyasamana thalaipil bore adikamal eludhi ungalukku en paartaukkal

said...

பகிர்ந்து உண்! அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு! சினிமாவுக்கு கூட இது பொருந்தும். GGRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR

said...

//ஆனா ஜோவோட பதிவ படிச்சதும் எதுக்கு வீணா வம்ப விலைக்கி வாங்கறதுன்னு விட்டுட்டேன்..//

ஆகா! ஜோசப் சார்!சினிமாவுல ரசனை வேறுபாடு ரொம்ப சகஜம் .அதிலும் இந்த படம் ஒரு கமல் ரசிகனாக எனக்கும் முழுத் திருப்தி தரவில்லை .தமிழில் வரும் மற்ற படங்களுக்கு இது தேவலை என்ரு தான் நானும் சொல்லியிருக்கிறேன் .இதில் நீங்கள் வேறுபடலாம்

said...

ஹ்ம்ம்... அலசித் துவைத்துப் பிழிஞ்சு காயப் போட்டுட்டீங்க...
அங்கங்க உள்குத்துகளை நீங்களே குத்திக்கிட்டீங்க போல... நீங்க பாட்டுக்கு ரொம்ப நல்லாருக்குன்னு சொன்ன மாதிரி நான் நினைச்ச மாதிரி எல்லாரும் நினைச்சுட்டாங்கன்னா என்ன செய்யிறதுன்னு பயந்து போயி நானும் ஒரு பதிவு போட்டுட்டேன்...

அதையும் ஒரு பார்வை பாத்துருங்க.
http://pradeepkt.blogspot.com/2006/09/blog-post.html

said...

"Intution" should actually be "Intuition"

said...

நான் தியேட்டரில் படம் பார்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

said...

// நிர்மல் said...
காக்க காக்க படத்தில் மாயாவுக்கு பாண்டிச்சேரியில் அக்கா உண்டு என்று நினைக்கிறேன் //

ஆகா நிர்மல்...வாங்க வாங்க....காக்க காக்க படத்துல மாயாவோட அக்கா சொந்த அக்காவா? இல்ல சொந்தக்கார அக்காவா? தெரிஞ்சிக்கிறத்தாங்க கேக்குறேன்.

said...

// tbr.joseph said...
ராகவன்,

எனக்கு படத்த பார்த்து முடிச்சதும் ரொம்ப கடுப்பா இருந்தது. ஏன்னு தெரியல. ஒருவேளை கொஞ்சம் அதிகமாவே எதிர்பார்த்து போனதால வந்த விளைவோ என்னவோ. நானும் என் குடும்பத்தில் அனைவருமே நடிகர் திலகத்திற்குப் பிறகு கமல் ரசிகர்கள்தான். ஆனால் இம்முறை என் மனைவி, மகள் யாருக்குமே வே.வி. பிடிக்கவில்லை. வந்தவுடனே ஒரு சூடா பதிவு போட்டா என்னன்னு கூட தோனிச்சி. ஆனா ஜோவோட பதிவ படிச்சதும் எதுக்கு வீணா வம்ப விலைக்கி வாங்கறதுன்னு விட்டுட்டேன்.. //

என்ன சார்....பாருங்க ஜோ வந்து எவ்வளவு பதமாச் சொல்லியிருக்காருன்னு...அவரு கோவிச்சுக்கிற மாட்டாரு சார். அதுக்கெல்லாம் வேற ஆளுங்க இருக்காங்க.

// ஒரு சூரியா-ஜோதிகா படத்த பார்த்த திருப்திகூட இதில் கிடைக்கவில்லை.. //

என்ன சார் இப்படி சொல்லீட்டீங்க.... சூரியா ஜோதிகா படம்னா மெதமா?

said...

// கார்த்திக் பிரபு said...
vithtiyasamana thalaipil bore adikamal eludhi ungalukku en paartaukkal //

நன்றி கார்த்திக் பிரபு.

// ILA(a)இளா said...
பகிர்ந்து உண்! அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு! சினிமாவுக்கு கூட இது பொருந்தும். GGRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR //

இளா....படத்துல ராகவன் கிட்ட வாங்குனது பத்தாதா :-)))))))) இங்கயும் கோவப்படுறீங்களே...நல்லதுக்கில்லை. :-)

// enRenRum-anbudan.BALA said...
"Intution" should actually be "Intuition" //

ஆமாம் பாலா....அதுவுமில்லாம அது instinct வேற. விமர்சனத்தைத் திருத்தீட்டேன். :-) சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

said...

// Babble said...
ரொம்பவும் ஏமாற்றம் அளித்த படம். இதுக்கு இணையத்துல இவ்வளவு பதிவுகள் வந்தது ஆச்சரியமா இருக்கு. டைரக்டர் தன் வேலைய ஒழுங்கா செய்யவே இல்லை. படத்துல யாரோட நடிப்பும் சொல்லும்படியா இல்லை. கமலோட நடிப்பு ரொம்ப செயற்கை. டைரக்டர் மூணு மணி நேரத்தில சொல்ல நினைச்சது 15 நிமிட கதை. இதுக்கு பதிலா CSI, CSI-NY பார்த்திருக்கலாம், காச வீணாக்கிட்டோமேன்னு நெனைக்க வச்சிடுச்சி. //

வாங்க பேபல். படம் சுமார்தான் ஒத்துக்கிறேன். ஆனால் யாரோட நடிப்பும் சொல்லிக்கும்படி இல்லைன்னு சொல்ல முடியாதுன்னு நெனைக்கிறேன். கமல் அடக்கி வாசித்திருக்காரு. ஆனா பிரகாஷ்ராஜும் ஜோதிகாவும் ரொம்ப நல்லாவே நடிச்சிருக்காங்க.


// ENNAR said...
நான் தியேட்டரில் படம் பார்து பல வருடங்கள் ஆகிவிட்டது. //

அடடா! ஏங்க? அப்ப படமே பாக்குறதில்லையா? இல்ல......

said...

ராகவன்,
பலருக்கு இந்த படம் பிடிக்கல்லன்னு நினைக்குறேன் .ஆனா வசூல் ரீதியா இந்த படம் இதுவரை 23 கோடி வசூல் செய்திருப்பதா தெரியுது .சென்னையை பொறுத்தவரை முதல் இரண்டு வார வசூல் ஒரு புதிய சாதனையாம் .இங்கே இணையத்தில் அன்பே சிவம் படத்தை ஆகா ஓகோவென்று எல்லோரும் புகழ்ந்தார்கள் .ஆனால் அது படு தோல்வி .வேட்டையாடு விளையாடு பலருக்கு பிடிக்கவில்லை .ஆனால் வசூல் சாதனை..அப்போ யார் தான் படம் பாக்குறாங்க? .பாமர மக்கள் வேட்டையாடு விளையாடு படத்தை விரும்புறாங்கன்னு சொல்லிடாதீங்க .இந்த படம் பரவலான கருத்தின் அடிப்படையில் பார்த்தால் கருத்துக்கும் வசூலுக்கும் சம்பந்தமில்லை.

said...

kalakeeteenga, thanks for the simple suggestion :-))