Wednesday, November 22, 2006

பிச்சாலஜி அல்லது பவதி பிச்சாந் தேவி

நான் காலைல வந்த டைம்ஸ் ஆஃப் இண்டியாவைப் பாத்துக்கிட்டிருந்தேன். அதுல வந்த ஒரு செய்தி ரொம்பவும் ஆச்சரியமா இருந்ததால சொல்லலாம்னு மயிலாரக் கூப்பிட்டேன். "மயிலாரே....ஒரு சேதி தெரியுமா?"

"ஓ தெரியுமே!" எந்த விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இல்லாம பதில் வருது. எனக்குன்னா கடுப்பு. விட்டுற முடியுமா?

"என்ன தெரியுமே! நான் என்ன சொல்லப் போறேன்னு ஒங்களுக்குத் தெரியுமோ?"

"தெரியுந் தெரியும். பிச்சாலஜி பத்தித்தான சொல்லப் போற"

அடடா! இவருக்கு எல்லாம் தெரிஞ்சி போகுது. அது சரி..எனக்கு முன்னாடியே பேப்பரப் படிச்சிருப்பாரு.

"அப்ப ராகவா! நீ யாரு? எந்த ஊரு? இப்ப என்ன நெனைக்கிற...எப்பப்ப எப்படியெப்படி முழிய மாத்துவங்குறதெல்லாம் தெரியும். அதுனால நேரடியா வழிக்கு வா! எனக்கு விவரம் தெரியும்னாலும் ஒன்னோட வாயல சொல்லு! ரொம்ப இழுத்து அறுக்காம...சுருக்கமா தெளிவாச் சொல்லனும். புரிஞ்சதா?"

இனி என்னதான் செய்ய முடியும். நானும் தொடங்குனேன். "இந்த பிச்சாலஜி (bitchology) ரொம்பப் புதுமையா இருக்கே. ரஷ்யாவுல அதுக்குப் பள்ளிக்கூடமெல்லாம் தொடங்கீருக்காங்களாமே!"

"ஆமாமா...இப்பப் பொண்ணுங்க தங்களுக்கு சூரியா மாதிரி ஆரியா மாதிரி வாழ்க்கைத் துணை வேணும்னு நெனைக்கிறாங்கள்ள. அப்படி நினைக்கிறப்போ...நெனச்ச மாதிரி உள்ளவங்களையே பார்க்கவோ பழகவோ நேர்ந்ததுன்னா.....அப்ப அவங்களோட ஈடுபாட்டத் தன் மேல கொண்டு வர்ரதுங்குறதுதான் பிச்சாலஜி (bitchology). சிலருக்கு அது தானா வருது. சிலருக்குத் தெரியிறதில்ல. அப்படித் தெரியாதவங்களுக்குத்தான் இந்தப் பள்ளிக்கூடம்."

"ஆமாம் மயிலாரே. பேப்பருலயும் அப்படித்தான் போட்டிருக்கு. ரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம். அதுனால இருக்குற நல்ல பசங்கள எப்படிக் கவர்ந்து அவங்களை தங்களையே கலியாணம் செய்ய வெக்கிறதுன்னு அந்தப் பள்ளிக்கூடத்துல சொல்லித் தர்ராங்களாம்.

விளாடிமிர் ரக்கோவ்ஸ்கி(Vladimir Rakovsky)ங்குறவரும் அவரோட மனைவியான யெவ்ஜெனியா(yevjenia)வும் இந்தப் பள்ளிக்கூடத்த தொடங்கீருக்காங்களாம். இவங்க பேரச் சொல்லும் போதே வாய்க்குள்ள வெண்ணெய்ய திணிச்சாப்புல இருக்குதே!"

மயிலார் சொய்ங்குன்னு பறந்து வந்து பக்கத்துல உக்காந்தாரு. "அடுத்து நானே சொல்றேன். வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டுந்தான் வகுப்பு. அதுவும் இரவுப் பாடசாலைதான். இதுனால ரொம்பப் பேரு பலனடைஞ்சிருக்காங்க."

"நீங்க சொல்றதப் பாத்தா ஒங்க மேலேயே எனக்குச் சந்தேகமா இருக்கு. மயிலாருக்குத்தான் பாஸ்போர்ட்டு விசாவே தேவையில்லையே. ராத்திரியோட ராத்திரியா ரஷ்யாவுக்கு ஷண்ட்டிங் அடிக்கிறீங்களா" எனக்கு இவரு மேல சந்தேகந்தான் எப்பவும். சடசடன்னு றெக்கைய அடிச்சிக்கிறாரு. உண்மையச் சொன்னா ஒடம்பு சிலுக்குது போல.

"இந்தப் பள்ளிக்கூடத்தைப் பத்தி யாரும் தப்பாச் சொல்லக் கூடாதுன்னு விளாடிமிர் சொல்றாரு. ஆண்களைக் கவர்ரது எப்படீங்குறதுல உள்ள புத்தம்புதிய பல வழிமுறைகளை அவங்க சொல்லித் தர்ராங்களாம். இந்த விவரங்கள் தெரியாம பெண்கள் வீணாகப் போயி தொந்தியும் தொப்பையுமா உள்ளவங்களொட வாழ வேண்டி வந்துருமேன்னு வருத்தப்பட்டுதான் இந்த மாதிரி பள்ளிக்கூடம் இருக்குதாம்.

அதுவுமில்லாம ஒரு பெண் சிறந்த பிச்சாகுறதுக்கு (bitch) மிகுந்த தன்னம்பிக்கையும், நடத்தையும் அறிவும் வேணுமாம். ஒரு ஸ்மார்ட்டான பொண்ணுதான் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையானதப் பெற முடியுமாம்."

சொல்லீட்டு எங்கயோ கெளம்புனாரு. "எங்க போறீங்க?"

"போகும் போதே கேட்டுட்டியா? சரி. இதெல்லாம் நமக்கு ஒன்னும் பண்ண முடியாது. சரி. சொல்றேன். கேட்டுக்கோ. ரஷ்யாவுல இந்தப் பள்ளிக்கூடத்துல படிச்சவங்களுக்கு தேர்வு வெப்பாங்கள்ள...அதுல தியரி முடிஞ்சதாம். பிராக்டிகர் பரிச்சைக்கு நான் தேர்வாளராப் போகனும். அவ்வளவுதான்...வரட்டா?"

ஆகா...இவரு மேல சந்தேகப் பட்டது சரியாத்தான் இருக்கும் போல. நல்லாயிருந்தாச் சரிதான். ரஷ்யாவுல என்னவெல்லாம் நடக்குது. நம்மூர்லயும் ரெண்டு பள்ளிக்கூடம் இருந்தா எவ்வளவு வசதியா இருக்கும்.

"என்ன முனுமுனுக்குற?"

"ஒன்னுமில்லைய்யா...பொம்பளப் புள்ளைகளுக்கு எத்தனையெத்தனையோ பள்ளிக்கூடங்க...ஆம்பளப் பசங்களுக்கும் அப்படியே........................"

(மக்களே...செய்தியை இந்தச் சுட்டியில் படித்துக் கொள்ளுங்கள்.)

அன்புடன்,
கோ.இராகவன்

22 comments:

said...

அட ராகவா.. :(

said...

இதற்குக் கூடவா பள்ளிக் கூடம்?
அடக் கடவுளே!

said...

vladimir rakovsky யவே ரெண்டு முறை டைப்பிங் செய்றீங்க-
என்னா விசெஷம்?
பெண் பெயர டைப் பண்ண பிடிக்காதா?
male chauvinism?

said...

:-))

said...

அப்படியே மயிலாரை நம்ம விக்கிபசங்களுக்கு ஒரு பதிவு எழுதித்தரச் சொல்லுங்க. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படின்னு நம்ம மக்களும் தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதானே.

said...

// மலைநாடான் said...
அட ராகவா.. :( //

என்னாச்சு மலைநாடாரே...இப்படி வருத்தப்படுறீங்க...ரஷ்யாவுக்குப் போக முடியலையேன்னா?

// நாமக்கல் சிபி @15516963 said...
இதற்குக் கூடவா பள்ளிக் கூடம்?
அடக் கடவுளே! //

தேவைப்படுதாமே சிபியாரே. விவரம் தெரியாத புள்ளைங்க ரஷ்யாவுல நெறைய போல. வைத்தியர் இராமநாதனைக் கேட்டா தெரியும்.

said...

// sivagnanamji(#16342789) said...
vladimir rakovsky யவே ரெண்டு முறை டைப்பிங் செய்றீங்க-
என்னா விசெஷம்?
பெண் பெயர டைப் பண்ண பிடிக்காதா?
male chauvinism? //

ஐயையோ! சிவஞானம்ஜி...அந்தப் பத்திரிகைல வந்த அப்படியே பின்பற்றி எழுதுனது. இதுக்கு இப்படியெல்லாம் பொருள் எடுத்துக்க முடியும்னு தெரியாமப் போச்சே. மன்னிச்சுக்கிருங்கய்யா.

said...

// குமரன் (Kumaran) said...
:-)) //

குமரன் புன்னகைத்தால் நூறு பொருள் என்று குமரிப் பெண்கள் எல்லாரும் கொண்டாடக் காண்பதே பேரின்பம் என்று சொல்ல வருகிறீர்களா குமரன்? ;-)

// இலவசக்கொத்தனார் said...
அப்படியே மயிலாரை நம்ம விக்கிபசங்களுக்கு ஒரு பதிவு எழுதித்தரச் சொல்லுங்க. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படின்னு நம்ம மக்களும் தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதானே. //

கொத்சு...யார நம்புனாலும் இந்த மயிலார மட்டும் நம்பாதீங்க. அவரு ஒங்களையே கவுத்துருவாரு. அவரு நல்லவரு. வல்லவரு. இப்ப நான் இப்படி டைப் பண்றேன். ஆனா நடுவுல நான் டைப் பண்ணாமலே அவரு நல்லவரு வல்லவருன்னு வந்தாலும் வரும். அவர் வேலைதான் எல்லாம். மயிலார் வாழ்க. மயிலார் புகழ் ஓங்குக.

said...

ரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம். //

என்ன நம்ம ருஷ்ய இராமனாதன் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாரு?

vladimir rakovsky யவே ரெண்டு முறை டைப்பிங் செய்றீங்க-//

நம்ம சி.ஜி எத்தனெ பசங்க பேப்பர கரெக்ட் செஞ்சிருப்பாரு? கரெக்டா புடிச்சிட்டார் பாருங்க..

போடுங்க தோப்புக் கரணம்.. ஒன்னு, ரெண்டு, மூனு.. நூறு.. போறும் ஜி.ரா:)

said...

ஆனா ஒன்னு ராகவன்,

இதுக்கெல்லாம் போயி கல்லூரி வேணுமாக்கும்.. நம்ம நாட்டுக்கு வரச்சொல்லுங்க.. ஒவ்வொரு வீட்லயும் ரெண்டு நாள் இருந்தாப் போறும்.. பிட்சிங் (நான் சொல்ற பிட்சிங்கும் நீங்க சொல்ற பிட்சிங்கும் ஒன்னாத்தான் இருக்கணும்) டாக்டரேட்டே வாங்கிரலாமே..

said...

இன்னமும் யெவ்ஜெனியா (vladimir rakovsky)னுதான் வச்சிருக்கிங்க
அவங்க நேம் பிடிக்கலியா?
இம்போஸிஷன் எழுதனுமா?

said...

இராகவன்,

இப்பதிவிற்கும் பவதி பிட்சாந்தேகி என்ற பதத்திற்கு தொடர்பு உண்டா?
:))

// நம்ம நாட்டுக்கு வரச்சொல்லுங்க.. //

அய்யா..
இங்கே வெந்நீர் வைக்கவே சிரமமாய் இருக்கிறது..
நம்ம நாட்டுக்கு வரச் சொல்கிறீர்கள்..

:(

said...

ஹிம் வயசாயிடுச்சே கலியபெருமாள்னு மணிவண்ணன் காதல் கோட்டை ல பேசின டயலாக் ஞாபகத்தில வந்து தொலைக்குது:-)

said...

இந்தப் பள்ளிக்கூடத்தில் கட் அடிக்கவே மாட்டாங்கன்னு சொல்லுங்க!
:-))))

யாரங்கே? மருத்துவர் ரஷ்ய ராமநாதர் இன்னுமா வரவில்லை!:-)

said...

//இப்பப் பொண்ணுங்க தங்களுக்கு சூரியா மாதிரி ஆரியா மாதிரி வாழ்க்கைத் துணை வேணும்னு நெனைக்கிறாங்கள்ள//

நல்ல ஆராய்ச்சி

// நம்மூர்லயும் ரெண்டு பள்ளிக்கூடம் இருந்தா எவ்வளவு வசதியா இருக்கும்//

கானா பிரபா
///ஹிம் வயசாயிடுச்சே கலியபெருமாள்னு மணிவண்ணன் காதல் கோட்டை ல பேசின டயலாக் ஞாபகத்தில வந்து தொலைக்குது//



நல்லா இருந்த பசங்ககெல்லாம் இப்படி ஆயிட்டாங்களே... முருகா நீ தான் காப்பாத்தனும்...

said...

நல்ல பசங்களுக்கு குறைனா அப்படியே இந்தியாக்கு வர வேண்டியதுதானே...

இதுக்கு போய் கஷ்டப்பட்டு பள்ளிக்கூடமெல்லாம் போய் படிக்கணுமா?

said...

// tbr.joseph said...
ரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம். //

என்ன நம்ம ருஷ்ய இராமனாதன் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாரு? //

அதான ஜோசப் சார். வண்டவாளம் தண்டவாளத்துல ஏற வேண்டாம்னு பயந்து நடுங்கி ஒடுங்கி அடங்கி இருக்காருன்னு நெனைக்கிறேன். :-))))))))))))))

// vladimir rakovsky யவே ரெண்டு முறை டைப்பிங் செய்றீங்க-

நம்ம சி.ஜி எத்தனெ பசங்க பேப்பர கரெக்ட் செஞ்சிருப்பாரு? கரெக்டா புடிச்சிட்டார் பாருங்க..//

ஆமாங்க. தப்பாப் போயிருச்சு. சிவஞானம்ஜி ரெண்டாவது வாட்டி மெரட்டுனதுமே திருத்தீட்டேன் :-)

// போடுங்க தோப்புக் கரணம்.. ஒன்னு, ரெண்டு, மூனு.. நூறு.. போறும் ஜி.ரா:) //

ஆச்சு......இப்ப காலெல்லாம் வலிக்குதே!!!!!!!!!!

said...

// sivagnanamji(#16342789) said...
இன்னமும் யெவ்ஜெனியா (vladimir rakovsky)னுதான் வச்சிருக்கிங்க
அவங்க நேம் பிடிக்கலியா?
இம்போஸிஷன் எழுதனுமா? //

ஐயா மாத்தீட்டேனய்யா...மாத்தீட்டேன். மன்னிச்சிக்கிருங்க. தெரியாம தப்பு நடந்து போச்சுங்க. :-)

said...

// பூங்குழலி said...
இராகவன்,

இப்பதிவிற்கும் பவதி பிட்சாந்தேகி என்ற பதத்திற்கு தொடர்பு உண்டா?
:)) //

அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. சும்மா ஒரு கில்பான்சுக்கு வெச்சது. ஆனா பாருங்க...நீங்க சொன்னதும் தொடர்புக்கு விளக்கங்கள் அடிச்சிக்கிட்டு வருது :-))))))))))))))))

// // நம்ம நாட்டுக்கு வரச்சொல்லுங்க.. //

அய்யா..
இங்கே வெந்நீர் வைக்கவே சிரமமாய் இருக்கிறது..
நம்ம நாட்டுக்கு வரச் சொல்கிறீர்கள்..

:( //

புரியலையே சாமி! கொஞ்சம் விளக்கம் குடுங்க.

said...

// கானா பிரபா said...
ஹிம் வயசாயிடுச்சே கலியபெருமாள்னு மணிவண்ணன் காதல் கோட்டை ல பேசின டயலாக் ஞாபகத்தில வந்து தொலைக்குது:-) //

பிரபா....நீங்களுமா? :-)))))

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இந்தப் பள்ளிக்கூடத்தில் கட் அடிக்கவே மாட்டாங்கன்னு சொல்லுங்க!
:-)))) //

ரவி, இதுவரைக்கும் யாரும் கட் அடிச்சது இல்லையாம். பகல்லயும் ஸ்பெஷல் கிளாஸ் வெக்கனும்னு சொல்றாங்களாம்.

// யாரங்கே? மருத்துவர் ரஷ்ய ராமநாதர் இன்னுமா வரவில்லை!:-) //

எப்படி வருவாரு? அஞ்சித் தஞ்சித் துஞ்சிக் கொண்டிருக்கின்றவர் எப்படி வருவார்?

said...

ஹி ஹி.. இதுல நான் கமெண்ட் வேற போடணுமாக்கும்.

//ரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம்.//
அதான் இந்தியா வந்துட்டோம்ல. நான் சொன்னா யாரும் நம்பல நான் நல்ல பையன்னுட்டு. இப்ப பாருங்க, டைம்ஸ் ஆப் இந்தியாலேயே வந்திருச்சு.

வேற எதப்பத்தியும் இப்போதைக்கு சொல்றதா இல்ல! ;)

said...

ராகவன்,

வெள்ளிவிழா நடக்குதே அங்கப்போலாம்ல??? எதுக்கு இந்த வெட்டி(?) ஆராய்ச்சி? ;))