Thursday, December 07, 2006

04. புதுக்கிராமம்

முந்தைய பதிவு

தூத்துக்குடியில புதுக்கிராமம்னு சொன்னா எத்தன பேருக்குத் தெரியுமோ இல்லையோ New Colonyன்னு சொன்னா பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். பழைய பஸ்டாண்டுக்கு ரொம்பப் பக்கம். மொத்தத்துல ஊருக்கு நடுவுல இருக்குற இருக்குற ஒரு தெரு. அந்தத் தெருவுக்குப் பக்கத்துல இருக்குறது சுப்பையா வித்யாலயப் பள்ளிக்கூடங்க இருக்கு. பள்ளிக்கூடங்கன்ன...மூனு பள்ளிக்கூட்டம் அந்த எடத்துல இருக்கு. ஒன்னு பெண்களுக்கானது. இன்னொன்னு ஆண்களுக்கானது. இன்னொன்னு சின்னப் பசங்களுக்கானது.

இதுல பொண்ணுங்க பள்ளிக்கூடம் மட்டும் இப்பவும் நல்லா போய்க்கிட்டு இருக்கு. அதுல அப்ப பேபி கிளாஸ் இருந்துச்சு. சின்னப்பசங்களுக்கு bun fun runன்னு சொல்லிக் குடுக்குற எடம். அதுக்கு நான் தெனமும் ரிச்சாவுல போயிட்டிருந்தேன். காலைல கொஞ்சம் படிப்பு. சாப்பாடு. அப்புறம் தூக்கம். மாலையில் உடற்பயிற்சி. அப்புறம் வீட்டுக்குப் போயிர வேண்டியதுதான். ஒரு நாள் வழக்கமா வர்ர ரிச்சா வரலை. சண்முகவேல்னு ஒரு ரிச்சாக்காரர் இருந்தாரு. அவருதான் அப்பக் குடும்ப ரிச்சாக்காரர். அவரக் கூப்புட்டு அத்த சுப்பையா வித்யாலயத்துல என்னைய எறக்கி விடச் சொன்னாங்க. அவரும் எறக்கி விட்டாரு. ஆனா சாந்தரமா வழக்கமா வர்ர ரிச்சாவுல நான் வீட்டுக்கு வரலை. கேட்டா நான் பள்ளிக்கூடத்துலயே இல்லைன்னு ரிச்சாக்காரர் சொல்லீட்டாரு. அத்த பதறியடிச்சிக்கிட்டு சண்முகவேல் கிட்ட ஓடீருக்காங்க. அவரும் பள்ளிக்கூடத்துலதான் விட்டேன்னு அழுத்திச் சொல்லவும் ரிச்சாவ பள்ளிக்கூடத்துக்கு விடச் சொன்னாங்க.

சண்முகவேல் ரிச்சாவ சின்னப்பசங்க பள்ளிக்கூடத்துக்குக் கூட்டீட்டுப் போயிருக்காரு. அங்க என்னைய யாருன்னு தெரியாம கண்டுபிடிக்க முடியாம...விழாமேடைல ஏத்தி உக்கார வெச்சிருந்திருக்காங்க. நானும் பேசாம டிபன் பாக்ஸ்ல இருந்ததச் சாப்பிட்டு ஜம்முன்னு தூங்கி எந்திரிச்சி முழிச்சிக்கிட்டு உக்காந்திருக்கேன். அப்பத்தான் அத்தைக்கு உயிரே திரும்ப வந்திருக்கு. பொம்பளப் பிள்ளைங்க பள்ளிக்கூடத்துல பேபி கிளாஸ் இருக்குன்னு சண்முகவேலுக்குத் தெரியலை. இப்ப அந்த பேபி கிளாஸ் இல்ல.
Photobucket - Video and Image Hosting
இப்படியெல்லாம் நடந்த புதுக்கிராமம் முக்குதான் புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். புதுக்கிராமத்துல ரெண்டு பஸ்ஸ்டாப். ஒன்னு பெருமாள் கோயில் ஸ்டாப். அடுத்தது புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். பெருமாள் கோயிலு வீட்டுப் பக்கத்துல. அதுல பஸ் ஏறி சேவியர்ஸ் பள்ளிக்கூடம் போகனும். நாப்பது காசு டிக்கெட்டு. ஆனா புத்துக்கிராம முக்குக்குப் போனா முப்பது காசுதான். பத்துகாசு மிச்சம் பிடிக்க முக்கு வரைக்கும் நடந்து போவேன். அப்ப 3A பஸ்சும் கட்டபொம்மன் பஸ்சுந்தான் வரும். 3A தனியார் பஸ். கட்டபொம்மன் செவப்பு பஸ்சு.

அந்த பஸ்ஸ்டாப்புலதான் ராதாக்காவும் ஏறுவாங்க. எனக்கு கணக்குப் பாடம் ஒழுங்கா வரலைன்னு அவங்க சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க வீட்டுல இருந்து நைட்டு கெளம்புறப்போ மணி பாக்கச் சொன்னாங்க. எனக்கு நின்ன எடத்துல இருந்து கண்ணு சரியாத் தெரியலை. ஆனாலும் தெரியலைன்னு சொல்லக் கூடாதுன்னு என்னவோ ஒளறுனேன். ஒடனே அவங்க என்னைய இன்னமும் ரெண்டு மூனு படிக்கச் சொன்னாங்க. அப்புறம் என்னோட கண்ணுல பவர் இருக்கு...அதுனாலதான் ஒழுங்கா படிக்க முடியலைன்னு சொன்னாங்க. நம்மதான் அறிவாளியாச்சே. பவர் இருந்தா நல்லா தெரியனுமேன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்டேன்.

இப்படியெல்லாம் கேக்குற அறிவைக் குடுத்த புதுக்கிராமத்துல பையத் தூக்கீட்டு நடக்குறப்போ மொதல்ல கண்ணுல பட்டது சிவசாமி கடை. அந்தக் கடையில ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டான டீச்சராம். அவங்களப் பாத்தாலே பயங்க பயப்படுவாங்களாம். எனக்கும் பயம்தான். கடையில இருந்த பலகைல என்னைய அத்த ஏத்தி உக்கார வெச்சிருந்தாங்க. அப்ப அந்த ஆண்டாள் டீச்சரும் கடைக்கு வந்து, "என்ன ராகவா எப்படியிருக்க"ன்னு கேட்டாங்க. எனக்கு என்ன தோணுச்சோ தெரியலை....பட்டுன்னு அவங்க கன்னத்துல அடிச்சிட்டேன். அவங்களுக்குக் கண்டிப்பா அதிர்ச்சியாத்தான் இருந்திருக்கனும். ஆனா காட்டிக்கலை. நல்லவேளை அத்தை அதுக்குக் கோவிச்சுக்கலை.

எங்களுக்கு சொந்தமில்லைன்னாலும் வேண்டப்பட்டவங்க அந்தத் தெருவுல இருந்தாங்க. அவங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் அடிக்கடி பண்டமாற்று நடக்கும். நாந்தான் தூதுவர். எப்படிப் போவேன் தெரியுமா? வீட்டுக்குப் கொஞ்சம் பக்கத்துலயே பிள்ளையார் கோயில். அப்புறம் தள்ளிப் போனா எண்ணக் கட. அங்கிருந்து கொஞ்ச தூரத்துல அவங்க வீடு. நான் வீட்டிலிருந்து பிள்ளையார் கோயில் வரைக்கும் மெதுவாப் போவேன். பிள்ளையார் கோயில்ல இருந்து எண்ணக் கட வரைக்கும் நடுத்தர வேகம். எண்ணக் கடையில இருந்து அவங்க வீடு வரைக்கும் படுவேகம். ஏன் தெரியுமா?

அப்பல்லாம் தூத்துக்குடியில இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னைக்குப் போகும். தூத்துக்குடியிலிருந்து கரி எஞ்சின். மணியாச்சி வரைக்கும். அங்க தூத்துக்குடி பெட்டிகளையும் திருநவேலி பெட்டிகளையும் இணைச்சு டீசல் எஞ்சின் போடுவாங்க. அடுத்து விழுப்புரத்துல மின்சார எஞ்சின் மாத்துவாங்க. சென்னை வரைக்கும் அது சர்ர்ர்ருன்னு ஓடும். இதத்தாங்க நான் அவங்க வீட்டுக்குப் போறப்பச் செய்றது. திரும்பி வரும் போது...போனதுக்கு நேர்மாறா வருவேன். மொதல்ல வேகம். அப்புறம் நடுத்தரம். அப்புறம் மெதுவா!

அன்புடன்,
கோ.இராகவன்

21 comments:

said...

\அப்பல்லாம் தூத்துக்குடியில இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னைக்குப் போகும். தூத்துக்குடியிலிருந்து கரி எஞ்சின். மணியாச்சி வரைக்கும். அங்க தூத்துக்குடி பெட்டிகளையும் திருநவேலி பெட்டிகளையும் இணைச்சு டீசல் எஞ்சின் போடுவாங்க"\"


ட்ரெயின் மாதிரி சவுண்டும் கொடுத்துட்டே ஓடி போவீங்களா ராகவன்??
சுவாரசியமா இருந்தது உங்கள் பதிவு.

said...

கடைசி பாரா சூப்பருங்க! எங்க தெரு கடைசியில் இருக்கும் கடைக்கு நான் போகும் போது டவுண் பஸ், அதுனால யாரு கூப்பிட்டாலும் நிற்பேன். திரும்பி வரும் போது 366 மதுரை வண்டி, மொபஸல் வண்டி. யார் கூப்பிட்டாலும் நிற்காது.

(வாய் நிறையா தேங்காய் பத்தை இருப்பதால் நின்றாலும் பேச முடியாது என்பது வேறு விஷயம். கடைக்குப் போய் வருவதற்கு அந்த நாலணா தேங்காய் பத்தையோ அல்லது தேன் முட்டாயோதான் சம்பளம்!)

அந்த ஞாபகம்தான் வந்துச்சு. :-D

said...

Good one, Ragavan.

said...

கிராமத்துக்கதை அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது.

ஆமாம். ஆண்டாளை எதுக்கு அடிக்கணும்? (-:

said...

ராகவன்...இந்த பெண்கள் பள்ளிக்கூடம்
C.M.School???... பஸ் ஸ்டாப் பக்கத்தில தான இருக்கு...

//"என்ன ராகவா எப்படியிருக்க"ன்னு கேட்டாங்க. எனக்கு என்ன தோணுச்சோ தெரியலை....பட்டுன்னு அவங்க கன்னத்துல அடிச்சிட்டேன்//

ஐயோ, நல்லா இருக்கியான்னு கேட்டதுக்கேவா????

நல்ல வேளை சொன்னீங்க.. இனிமேல் ஜாக்ரதையா பேசலாம் இல்ல..:-))

said...

நல்லதொரு பதிவு ராகவன், புதுக்கிராமத்துக்குப் பதில் புதுகுடியிருப்பு என்று சொன்னால் புரியுமா தெரியவில்லை. நம்மூரில் புதுக்குடியிருப்பு என்ற பிரதேசம் உள்ளது.

said...

அந்த நாள் ஞாபகங்களை சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.
Colony என்ற சொல்லுக்கு ஈழத்தில் குடியிருப்பு என்ற சொல்லைப் புழங்குவார்கள்.
நன்றி.

said...

// Divya said...
ட்ரெயின் மாதிரி சவுண்டும் கொடுத்துட்டே ஓடி போவீங்களா ராகவன்??
சுவாரசியமா இருந்தது உங்கள் பதிவு. //

என்ன திவ்யா இப்பிடிக் கேட்டுட்டீங்க? கரி எஞ்சின் ஓடுறப்போ கூஊஊகுசுக்குசுக்குசுக்...டீசல் எஞ்சின்னா ஜகஜகஜகஜக....கரண்டுன்னா பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅம்...

said...

// இலவசக்கொத்தனார் said...
கடைசி பாரா சூப்பருங்க! எங்க தெரு கடைசியில் இருக்கும் கடைக்கு நான் போகும் போது டவுண் பஸ், அதுனால யாரு கூப்பிட்டாலும் நிற்பேன். திரும்பி வரும் போது 366 மதுரை வண்டி, மொபஸல் வண்டி. யார் கூப்பிட்டாலும் நிற்காது. //

நீங்களும் இப்பிடித்தானா!!!!!! :-))))))))

//(வாய் நிறையா தேங்காய் பத்தை இருப்பதால் நின்றாலும் பேச முடியாது என்பது வேறு விஷயம். கடைக்குப் போய் வருவதற்கு அந்த நாலணா தேங்காய் பத்தையோ அல்லது தேன் முட்டாயோதான் சம்பளம்!)

அந்த ஞாபகம்தான் வந்துச்சு. :-D //

இந்தத் தேன் மிட்டாய்னு சொன்னீங்களே...அது ஒரு சுவையான சமாச்சாரம். சின்னது பெருசுன்னு ரெண்டு வகை. உள்ள தேன் இருக்காது. ஜீனிப்பாகுதான். ஆனாலும் அத ஜொள்ளுன்னு சாப்புடுற சுகமிருக்கே. ரெண்டு நாளைக்கு முன்னாடி வீட்டுப் பக்கத்துக் கடையில அதப் பாத்தேன். வாங்கனும்னு நெனச்சேன். ஆனா என்னவோ வந்து தடுத்திருச்சு.

said...

// Srina said...
Good one, Ragavan. //

நன்றி ஸ்ரீனா. உங்க பேர எப்படிச் சொல்றது?

// துளசி கோபால் said...
கிராமத்துக்கதை அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது.

ஆமாம். ஆண்டாளை எதுக்கு அடிக்கணும்? (-: //

தெரியலையே டீச்சர். என்னவோ அந்நேரம் தோணிச்சு. அடிச்சிட்டேன். நாலு வயசுல ஏன் எதுக்குன்னா தெரியுது. செஞ்சது நினைவிருக்கு. ஆனா ஏன்னு நினைவில்லையே.

said...

// மங்கை said...
ராகவன்...இந்த பெண்கள் பள்ளிக்கூடம்
C.M.School???... பஸ் ஸ்டாப் பக்கத்தில தான இருக்கு... //

மங்கை C.Mன்னு என்ன சொல்றீங்கன்னு தெரியலையே. பழைய பஸ்டாண்டுல இருந்து புதுக்கிராமத்துக்கோ போல்டன்புரத்துக்கோ வர்ர வழி. பாரதி ஸ்டோர்சுக்குப் பின்னாடி இருக்கு. பெரிய சுவரு. அதுக்கு எதுத்த மாதிரி தேங்காண்ண மில் கூட இருக்கு. அதுதான் சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளி. பேபி கிளாஸ் நடந்த அந்தச் சின்னக் கட்டிடம் இன்னும் இருக்கு. ஆனா பேபி கிளாஸ் மட்டும் இல்லை. அந்தப் படம் ஊருல இருக்கு. அடுத்த வாட்டிப் போகைல ஸ்கேன் பண்ணிக் கொண்டு வாரேன்.

////"என்ன ராகவா எப்படியிருக்க"ன்னு கேட்டாங்க. எனக்கு என்ன தோணுச்சோ தெரியலை....பட்டுன்னு அவங்க கன்னத்துல அடிச்சிட்டேன்//

ஐயோ, நல்லா இருக்கியான்னு கேட்டதுக்கேவா????

நல்ல வேளை சொன்னீங்க.. இனிமேல் ஜாக்ரதையா பேசலாம் இல்ல..:-)) //

பதறாதீங்க மங்கை. அப்ப சின்னப் பையன். இப்போ பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய ஆளு. அதுனால இப்பல்லாம் அடிக்க மாட்டேன். அப்படிப் பண்ற பையன் மாதிரியா தெரியுது. :-(

said...

// கானா பிரபா said...
நல்லதொரு பதிவு ராகவன், புதுக்கிராமத்துக்குப் பதில் புதுகுடியிருப்பு என்று சொன்னால் புரியுமா தெரியவில்லை. நம்மூரில் புதுக்குடியிருப்பு என்ற பிரதேசம் உள்ளது. //

பிரபா எனக்கும் இந்தப் பெயரில் மூலகாரணம் தெரியாது. புதுக்கிராமம் என்றிருந்து பின்னால் நியூகாலனி என்று ஆங்கிலத்தில் ஆகியிருக்குமோ என்று நினைக்கிறேன். புதுக்குடியிருப்பு என்று சொன்னால் தூத்துக்குடிக்காரர்களுக்குத் தெரியாது. ஈழத்தில் திருநெல்வேலி உண்டாமே. தூத்துக்குடி உண்டா? :-)

said...

திருநெல்வேலி, நல்லூர், காரைக்கால், புத்தூர், போன்ற தமிழகத்துக்குப் பொதுவான ஊர்கள் நம் தாயகத்தில் உண்டு. புதுச்சேரி கிடையாது:-)

said...

//இந்தத் தேன் மிட்டாய்னு சொன்னீங்களே...அது ஒரு சுவையான சமாச்சாரம். //

நல்லா படியுங்க. நான் தேன் மிட்டாய்ன்னு சொல்லவேயில்லையே. தேன் 'முட்டாய்' அப்படின்னு இல்லை சொல்லி இருக்கேன்!! அதானே நம்ம ஊரு பளக்க வளக்கம். :))

//ப்ப சின்னப் பையன். இப்போ பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய ஆளு. அதுனால இப்பல்லாம் அடிக்க மாட்டேன்.//

சரி என்ன செய்வீங்க, சொன்னா அதுக்கேத்த படி மருந்து மாத்திரை வாங்கி வெச்சுக்குவோமில்ல. :))

said...

கலக்குங்க ராகவன்..
/ஈழத்தில் திருநெல்வேலி உண்டாமே. தூத்துக்குடி உண்டா? :-)/

தூத்துக்குடி இருக்கிறா மாதிரி தெரியல..ஆனா தூத்துக்குடி இருக்கிற ஒரு பகுதியின் பெயர் ஈழ்த்திலும் உண்டு..மட்டகிள்ப்பு..சின்ன வயதில் சிலோன் ரேடியோ கேட்கும் பொழுது அவர்கள் மட்டகிளப்பு என்று சொல்லும் போது நான் தூடி மட்டகிளப்பு என்று நினைத்துக் கொள்வேன்..

/இந்தத் தேன் மிட்டாய்னு சொன்னீங்களே...அது ஒரு சுவையான சமாச்சாரம். /
இந்த அனுபவம் என்க்கும் உண்டு..இது மடுமல்ல..கல்கோனா என்ற ஒரு கல் உருண்டை..சவ்வு மிட்டாய்,இலந்தைப் பழம்..ம்ம்ம்ம்


/C.M.School??... பஸ் ஸ்டாப் பக்கத்தில தான இருக்கு... //
மொத்தம் இரண்டு CMS Schools உண்டு..ஒன்று தெப்பக்குள்த்தெரு வில் உள்ள்து.இதை பெரிய CMS என்று அழைப்பார்கள்...இன்னொன்று வடக்கு ரத வீதியீல் உள்ளது..இது சின்ன CMS..

/ துளசி கோபால் said...
கிராமத்துக்கதை அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது./
என்ன ராகவன் நம்ம டீச்சர் 'புதுக்'கிராம்னு' பெயரை வச்சு 'கிராமத்துக் கதை' ந்னு சொல்லீட்டாங்களே...டீச்சர் எங்க ஊர் கிராமம் இல்லை..air port கூட இருக்கு ..

அப்புறம் ராகவன் நம்ம ஊருக்கு 'திருமந்திர நகர்' ஒரு பெயர் இருக்கு ..உங்களுக்கும் தெரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்..

இன்னும் எழுதுங்க..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

said...

அப்பவே ஆண்டாள் மேல உங்களுக்கு ஒரு வெறுப்பு இருந்திருக்கு ;)

said...

//இதுல பொண்ணுங்க பள்ளிக்கூடம் மட்டும் இப்பவும் நல்லா போய்க்கிட்டு இருக்கு.//

ஏன்னா நீங்க அதுல படிக்கல ;)

said...

ராகவன் சார்
அருமையான பதிவு, அப்படியே உங்க கூடவே புதுக்கிராமத்தை பார்த்தார் போல் உள்ளது. கலக்குங்க...

\\இந்தத் தேன் மிட்டாய்னு சொன்னீங்களே...அது ஒரு சுவையான சமாச்சாரம். சின்னது பெருசுன்னு ரெண்டு வகை. உள்ள தேன் இருக்காது. ஜீனிப்பாகுதான். ஆனாலும் அத ஜொள்ளுன்னு சாப்புடுற சுகமிருக்கே.\\

அய்யோ வாய்யொல்லாம் உறுதே....

said...

It's sri + na as in naan

Trying to learn to type in Tamil.

said...

உங்களின் இளம் அனுபவங்களை பகிர்ந்தது இனிமையாகவும் சுய நினைவுகளை கிளறுவதாகவும் அமைந்தது. நன்றி.

said...

Excellent Ragavan. Am also from New Colony only. Ramasamypuram 1st Street. Opposite street to Selva Vinayagar koil. I studied my school from Charless Midle school. Now am working for a Software co at chennai. That oil store, Thyagarajan Kadai, Perumal Koil Thair Saadha Prasaadham, Margali month Bajanai all not a forgetable one my life. Krishnaraj, 9840068624, krishnaraj_indian@yahoo.co.in