Monday, December 18, 2006

நூர்ஜஹானூர்

எல்லாரும் படம் காட்டுறாங்க. நான் காட்டக் கூடாதா? இதோ...போன வாரத்துக்கு முந்துன வாரம்...அதாங்க டிசம்பர் 2ம் 3ம் நொய்டா ஆக்ரான்னு சுத்துனப்ப எடுத்த படங்கள் இங்க.

Photobucket - Video and Image Hosting
நூர்ஜஹான் தனது தந்தை தாயாரோடு தூங்குமிடம். தாஜ்மஹாலை விட மிகவும் அழகானது.

Photobucket - Video and Image Hosting
பளிங்கினால் ஒரு மாளிகை...அதில் பளிங்கினால் ஒரு பலகனி. பளிங்கைக் குடைந்து செய்திருக்கிறார்கள்.

Photobucket - Video and Image Hosting
நூர்ஜஹானோட கல்லறைக்கு உள்ளே இருந்து வெளியே எடுத்தது...

Photobucket - Video and Image Hosting
நாந்தான். ரொம்ப அமைதியா இருந்த இந்த இடம் ரொம்பப் பிடிச்சிருந்தது.

Photobucket - Video and Image Hosting
மிகச் சிறப்பான கலை வேலைப்பாடுகள். நானூறு ஆண்டுகள் பழமையானவை. வெள்ளைக்கல்லில் பலநிறக் கற்களைப் பதித்த அழகுப் படங்கள்.

Photobucket - Video and Image Hosting
அதே வேலைப்பாடுதான். ஆனால் ஒரு செடி. என்ன அழகு! இது ஓவியமல்ல. கல்லில் கல்லைப் பதித்தது.

Photobucket - Video and Image Hosting
அலுக்காமல் சலிக்காமல் இன்னொன்று

Photobucket - Video and Image Hosting
ஒளி ஓவியம்னு சொல்றாங்கள்ள...அது இதுதான். :-)

Photobucket - Video and Image Hosting
யமுனையில ஒட்டகம். இன்னொரு ஒளி ஓவியம். ஒரு காலத்தில் காதலின் சின்னமான யமுனை இப்பொழுது கூவம் போலத்தான் இருக்கிறது.

Photobucket - Video and Image Hosting
நொய்டாவில் ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் வீடு...அடடே! அரண்மனை. இவரு ஆக்ராவுக்கு அடிக்கடி போயிருப்பாரு போல. எல்லாம் பளிங்குக் கல்லாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

20 comments:

இலவசக்கொத்தனார் said...

படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. எப்ப நொய்டா ஷிப்ட் ஆக போறீங்க? வீடு எல்லாம் கூட கட்ட ஆரம்பிச்சாச்சா? பேஷ் பேஷ்! :)

சிறில் அலெக்ஸ் said...

அடடா .. நான் இந்தியாவில் போக விரும்பும் ஒரு இடம் ஆக்ரா. ஸ்மார்ட்டா இருக்கீங்க ராகவன்.

கல் கலை வேலைப்படுகளை ரெம்ப நல்லா படம் பிடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

நல்ல படங்கள் இராகவன்.

G.Ragavan said...

// இலவசக்கொத்தனார் said...
படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. எப்ப நொய்டா ஷிப்ட் ஆக போறீங்க? வீடு எல்லாம் கூட கட்ட ஆரம்பிச்சாச்சா? பேஷ் பேஷ்! :) //

கொத்தனார்னா கொத்து அனார்னு பாராட்டுனதுக்கு இப்படி ஒரு கொத்தா! நொய்டாவுல எல்லாம் ரொம்பக் கஷ்டங்க....ரொம்பக் குளிருது....இல்லைன்னா ரொம்ப வேகுது....ஆசைக்குத் தமிழ் பேச....ம்ஹூம்..இங்கிலீஷ் பேசக்கூட ஆள் கிடைக்கிறது கஷ்ட்டமாயிருக்கு.

இப்படியொரு வீட்ட நான் கட்டுறேனா! நல்லா ஒரு வாட்டி அந்த வீட்டை உத்துப்பாருமய்யா! அமெரிக்க டாலர்ல கட்டுன வீடு மாதிரி இருக்குதே! ;-)

நண்பன் சொன்னான்..இதெல்லாம் பெரிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கருப்புப்பணத்துல கட்டுன வீடுகள்னு சொன்னான். இது மாதிரி இன்னும் நெறைய வீடுக இருக்கு. காசக் கொட்டிக் கட்டுறாங்க. ஆனா டிசைன் எதுவுமே சரியில்லை.

G.Ragavan said...

// நிர்மல் said...
ராகவன்,

நல்ல படங்கள். //

நன்றி நிர்மல்

// யமுனையாய் இருக்கட்டும், கங்கையாய் இருக்கட்டும் மாசுப் பொருள்களை கலந்து விடறதுல நமக்கு குறையே இருக்கறதில்லை.

மாசுக் கட்டுப்பாடு ஏட்டளவில்தான் இருக்கிறது. //

முழுக்க முழுக்க உண்மைதான். தாஜ்மகாலைக் காப்பாற்ற ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் எரிபொருள் வண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம். எல்லாரும் நடந்தோ, ஒட்டக, குதிரை வண்டிகளில் சென்றோ, பாட்டரி வண்டிகளில் சென்றோ பார்க்கிறார்கள். ஆனால்....தாஜ்மகாலை ஒட்டி ஒரு குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அவர்கள் பைக்குகளில் கார்களில்தான் போகிறார்கள். யாரும் கேட்பதில்லை.

G.Ragavan said...

// சிறில் அலெக்ஸ் said...
அடடா .. நான் இந்தியாவில் போக விரும்பும் ஒரு இடம் ஆக்ரா. ஸ்மார்ட்டா இருக்கீங்க ராகவன்.//

ஆக்ரா போகனும் சிறில். ஊரெல்லாம் ரொம்ப அழுக்கா புளுதியா இருக்கும். சாப்பிடக்கூட ரோட்டோர ஓட்டல்கள்தான். பெஞ்சுல உக்காந்துதான் சாப்பிடனும். ஆனா முகலாயர்களோட தலைநகரா பல ஆண்டுகள் இருந்ததால நெறைய கட்டிடங்கள். அக்பரின் கல்லறை, நூர்ஜஹான் மற்றும் அவரது பெற்றோர்களின் கல்லறை, ஆக்ரா கோட்டை, தாஜ்மகால் என்று நிறைய இருக்கிறது.

// கல் கலை வேலைப்படுகளை ரெம்ப நல்லா படம் பிடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள் //

இன்னும் நெறையா பிடிச்சிருக்கனும். ஆனா படம் பிடிச்சிக்கிட்டேயிருந்தா எதையும் பார்க்க முடியாதேன்னு கொஞ்சமா பிடிச்சது.

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
நல்ல படங்கள் இராகவன். //

நன்றி குமரன்.

மணியன் said...

ஆக்ராவின் வித்தியாசமான படங்கள்.

மதுமிதா said...

படங்களும் வர்ணனைகளும் அருமை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜீரா

rv said...

ஜிரா,
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

உங்களை மாதிரி ஆட்களும் படங்காட்ட ஆரமிச்சாச்சுன்னா அப்புறமா நாங்களெல்லாம் எங்க போறது?

அதுசரி, எல்லாத்தையும்விட முக்கியமான கேள்வி. படத்துல இருக்கற மொட்டை வில்லன் யாரு?????

ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கறேன். நாளைக்கு எனக்கு பிள்ளை பொறந்துச்சுன்னா பூச்சாண்டி காமிச்சு பயமுறுத்த வசதியா இருக்கும்!! படத்த மாத்துமய்யா சீக்கிரம்!

Unknown said...

எல்லாப் படங்களும் அருமை...

முக்கியமா கருப்பு ராகவன் நல்லாருக்காரு ;)

Anonymous said...

ராகவன்,

Picsலாம் சூப்பர். ச்சூம்மா பி.சி.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு கலக்கியிருக்கீங்க ;)

அதுசரி அந்த தேன்மிட்டாய் Pic எங்கே???

--Vicky

siva gnanamji(#18100882083107547329) said...

அருமையாக உள்ளது!
அடிக்கடி பயணம் செல்லுங்களேன்;
அருமையான பதிவுகள் கிடைக்குமே...

G.Ragavan said...

// மணியன் said...
ஆக்ராவின் வித்தியாசமான படங்கள். //

உண்மைதான் மணியன். அழுக்கான ஆக்ராவில் அற்புதமான கட்டிடங்கள் உள்ளன. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். இன்னும் படங்கள் இருக்கின்றன. ஆக்ரா கோட்டை, தாஜ்மகால் என்று. அவைகளையும் விரைவில் எடுத்து விடுகிறேன்.

// மதுமிதா said...
படங்களும் வர்ணனைகளும் அருமை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜீரா //

நன்றி மதுமிதா.

G.Ragavan said...

// இராமநாதன் said...
ஜிரா,
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

உங்களை மாதிரி ஆட்களும் படங்காட்ட ஆரமிச்சாச்சுன்னா அப்புறமா நாங்களெல்லாம் எங்க போறது? //

என்ன செய்றது இராமநாதன். காலத்துக்குத் தக்க மாற வேண்டியிருக்குல்ல. :-)

// அதுசரி, எல்லாத்தையும்விட முக்கியமான கேள்வி. படத்துல இருக்கற மொட்டை வில்லன் யாரு?????

ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கறேன். நாளைக்கு எனக்கு பிள்ளை பொறந்துச்சுன்னா பூச்சாண்டி காமிச்சு பயமுறுத்த வசதியா இருக்கும்!! படத்த மாத்துமய்யா சீக்கிரம்! //

ஹி ஹி...இனிமே இந்த கெட்டப்பை தொடரலாம்னு நெனைக்கிறேன். அப்பத்தான் ஜோசப் சார்...அவர் படத்துல வில்லன் வாய்ப்பு குடுப்பாரு.

G.Ragavan said...

// அருட்பெருங்கோ said...
எல்லாப் படங்களும் அருமை...

முக்கியமா கருப்பு ராகவன் நல்லாருக்காரு ;) //

என்னது கருப்பு ராகவனா? ஐயா சாமி...என்னய்யா சொல்ற...நீ சொல்றத மக்கள் வேற மாதிரி புரிஞ்சிக்கப் போறாங்க.

// Vicky said...
ராகவன்,

Picsலாம் சூப்பர். ச்சூம்மா பி.சி.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு கலக்கியிருக்கீங்க ;) //

நன்றி நன்றி

// அதுசரி அந்த தேன்மிட்டாய் Pic எங்கே??? //

மறக்கலையா நீங்க அத :-) வருது வருது விரைவில் வருது

// sivagnanamji(#16342789) said...
அருமையாக உள்ளது!
அடிக்கடி பயணம் செல்லுங்களேன்;
அருமையான பதிவுகள் கிடைக்குமே... //

கண்டிப்பா ஹெட்மாஸ்டர் சார். நிச்சயமாக. இன்னும் நிறைய படங்கள் இருக்கு. வரும். வரும். ரும்...ரும்...ரும்..ம்ம்ம்ம்ம்

குமரன் (Kumaran) said...

அருட்பெருங்கோ. எனக்கும் அந்த ஐயம் ரொம்ப நாளா இருக்கு. நீங்க உறுதிப் படுத்திட்டீங்க. ரொம்ப நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

இராகவன். ச்ச்சும்மா.... :-)

கோபிநாத் said...

ஜிரா சார்
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது (உங்க படமும் தான்)
ஆக்ரா, யமுனைன்னு படம் புடுச்சி கலக்கிட்டிங்க.
உங்க புண்ணியத்தில இது எல்லாம் பார்த்தேன் நன்றி. அப்புறம் எந்த "camera"ரவில் எடுத்திங்க.

\\ஹி ஹி...இனிமே இந்த கெட்டப்பை தொடரலாம்னு நெனைக்கிறேன். அப்பத்தான் ஜோசப் சார்...அவர் படத்துல வில்லன் வாய்ப்பு குடுப்பாரு.\\

ஆஹா...முதல்லா "வில்லன்" அப்புறம் "நாயகனா"
சூப்பர் ஜடியா..... கலக்குங்க

வெற்றி said...

கோ.இராகவன்,
படங்கள் மிகவும் அருமை.

எல்லாப் படங்களும் அருமை...

/* முக்கியமா கருப்பு ராகவன் நல்லாருக்காரு ;) //

என்னது கருப்பு ராகவனா? ஐயா சாமி...என்னய்யா சொல்ற...நீ சொல்றத மக்கள் வேற மாதிரி புரிஞ்சிக்கப் போறாங்க. */

ஆகா! இராகவன் நீங்களா அவர்!!:))
சும்மா. அருட்பெருங்கோவிற்கான உங்களின் பின்னூட்டத்தை வாசித்து வாய்விட்டுச் சிரித்தேன்.