Friday, August 03, 2007

பூங்கா - கவிதை

கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன. பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான். ஆகையால்தான் கவிதை எழுத நான் முயற்சிப்பதில்லை. இன்று தன்னைத்தானே என் வழியே பிரசவித்துக் கொண்டது ஒரு கவிதை. அந்தக் கவிதை இங்கே.



பூங்காவைச் சுற்றிச் சுற்றி
நான் பறக்கிறேன்
எனது பூங்கா
வரப்பில்லாதது
பொறுப்பில்லாதது
நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது
பழுதாகிக் கொண்டிருக்கிறது
வானமோ வெகுதொலைவில்
பூங்காவைச் சுற்றிச் சுற்றி
நான் பறக்கிறேன்


தாயுமானவனாக,
கோ.இராகவன்

30 comments:

said...

me the firshtu?????????????? :-)

//பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது//

இது கூடக் கவிதை போல் தான் இருக்கு ஜிரா!

//நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது
பழுதாகிக் கொண்டிருக்கிறது
வானமோ வெகுதொலைவில்
//

ஹூம்!
நிலம் பழுது, உழுது உழைத்தால் தீராதா ஜிரா?

said...

ராகவன் ,

நல்லக்கவிதை... இந்த கவிதைக்கு சப் - கான்டெக்ஸ்ட் என்னமொ இருக்கா போல தெரியுதே

said...

என்ன சொல்ல வறீங்கனே புரியல...

அப்ப அது கவிதை தான் :-)

said...

கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன.
பிரசவத் தேதியைக் கூட
கவிதைக் குழந்தைதான்
முடிவு செய்கிறது
என்று நம்புகிறவன் நான். ஆகையால்தான் கவிதை
எழுத நான் முயற்சிப்பதில்லை.
இன்று தன்னைத்தானே
என் வழியே
பிரசவித்துக் கொண்டது
ஒரு கவிதை.

அந்தக் கவிதை இங்கே.

இப்படி எழுதியிருந்தா ரெண்டு கவிதையாயிருக்கும் :-)

said...

//நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது
பழுதாகிக் கொண்டிருக்கிறது
//

இதைப் படிக்கும் போது நீங்கள் சம்பந்தப்பட்ட இன்னொன்றை நினைத்து வயிற்றில் ஒரு பெரும் கலக்கம். :-(

said...

ஒரு வேளை பூங்காவுக்கு வரப்பு என்று ஒன்று இருந்தால்,பொறுப்பு கூடுமோ??

கவிதையும்,படமும் மிக அழகு...

said...

//பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான்//
முன்னுரையே கவிதையாக..

//பூங்காவைச் சுற்றிச் சுற்றி//
My Life it getting too materialised, hell with it.
அதே இயந்திரத்தினுள் இருந்து கொண்டு இப்படி சொல்லி சொல்லிதான் நாம வாழ்க்கைய ஓட்டுகிறோம். ஆனால், வாழ்க்கை வட்டம்தான், திரும்ப திரும்ப அதேயும் வரலாம், வராமலும் போகலாம். இலக்கு என்பது நமக்கு வருவதும் இல்லை, கிடைப்பதும் இல்லை.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
me the firshtu?????????????? :-) //

ஆமா...நீங்கதான் பர்ஸ்ட்டு... :)

////நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது
பழுதாகிக் கொண்டிருக்கிறது
வானமோ வெகுதொலைவில்
//

ஹூம்!
நிலம் பழுது, உழுது உழைத்தால் தீராதா ஜிரா? //

தீரலாம்.

said...

// வவ்வால் said...
ராகவன் ,

நல்லக்கவிதை... இந்த கவிதைக்கு சப் - கான்டெக்ஸ்ட் என்னமொ இருக்கா போல தெரியுதே //

வாங்க வவ்வால். காண்டக்ஸ்ட் இல்லாம கவிதை எழுத முடியுமா? :) எழுதுனாலும் கவிதையாகுமா? :) கவிதையை என்னோட பொருத்தாதீங்க. என்னுடைய கவிதை நானல்ல. பாக்குறவங்க முகம் தெரிஞ்சாதான் கண்ணாடி...படிக்கிறவங்க மனசு தெரிஞ்சாதான் கவிதை. :) நல்லாக் கொழப்பீட்டேன்ல.

// வெட்டிப்பயல் said...
என்ன சொல்ல வறீங்கனே புரியல...

அப்ப அது கவிதை தான் :-) //

ஹி ஹி..கவிதைன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.

said...

// குமரன் (Kumaran) said...
//நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது
பழுதாகிக் கொண்டிருக்கிறது
//

இதைப் படிக்கும் போது நீங்கள் சம்பந்தப்பட்ட இன்னொன்றை நினைத்து வயிற்றில் ஒரு பெரும் கலக்கம். :-( //

:) குமரன், முருகன் எனக்கு எந்தக் கையைக் கொடுத்திருந்தாலும் அதற்கு மேலாக நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறான். அந்தக் கையைப் பிடித்துக் கொண்டே நான் நடந்து கடந்து வந்துவிடுவேன். :)

// சுதர்சன்.கோபால் said...
ஒரு வேளை பூங்காவுக்கு வரப்பு என்று ஒன்று இருந்தால்,பொறுப்பு கூடுமோ?? //

ஓமப்பொடியாரே....நீங்க ஏதோ இருபொருள் படும்படிப் பேசுற மாதிரித் தெரியுது...ஒருவேள..பக்கத்து எலைக்குப் பாயாசம் கேக்குறீங்களோ? ;)

said...

// ILA(a)இளா said...
//பூங்காவைச் சுற்றிச் சுற்றி//
My Life it getting too materialised, hell with it.
அதே இயந்திரத்தினுள் இருந்து கொண்டு இப்படி சொல்லி சொல்லிதான் நாம வாழ்க்கைய ஓட்டுகிறோம். ஆனால், வாழ்க்கை வட்டம்தான், திரும்ப திரும்ப அதேயும் வரலாம், வராமலும் போகலாம். இலக்கு என்பது நமக்கு வருவதும் இல்லை, கிடைப்பதும் இல்லை. //

அடடா! என்ன அழகா வெளக்கம் சொல்லீருக்கீங்க இளா. பிரமாதம். ஒரு நட்சத்திரமே வந்து வெளக்கம் சொல்லீருக்கீங்க. ஆகா!

said...

என்ன ஆச்சு அண்ணா???

இது தவிர எனக்கு வேற எதுவும் கேக்க புரியல!! :-(

said...

ரைட் ரைட் என்னமோ நடக்குது :)

said...

//சுதர்சன்.கோபால் said...

ஒரு வேளை பூங்காவுக்கு வரப்பு என்று ஒன்று இருந்தால்,பொறுப்பு கூடுமோ??

கவிதையும்,படமும் மிக அழகு... //

ஓ இப்ப பிரியுது...

said...

//கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன//

இது இது ....இதுதான் கவிதை !

கவிவுலகில் பிறப்பெடுத்த ஜிராவை வருக கவிப்பூக்கள் தருக என வரவேற்கிறேன்.

:)

said...

இராகவன்,
கன்னிக் கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

said...

பூங்கா பேரிலே கடிதம் போட்டால் பதிலுக்கு முடியும் முடியாதென்று சொன்னால் இன்னும் பொறுப்பு வருமோ?

said...

\கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன. பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான். ஆகையால்தான் கவிதை எழுத நான் முயற்சிப்பதில்லை.\\

இதுவே கவிதை தான் ;-)


\\நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது
பழுதாகிக் கொண்டிருக்கிறது
வானமோ வெகுதொலைவில்\\

எல்லா நாளும் ஒரே நாளா? எல்லாம் சரியாகும் சார்.

said...

//பாக்குறவங்க முகம் தெரிஞ்சாதான் கண்ணாடி...படிக்கிறவங்க மனசு தெரிஞ்சாதான் கவிதை.//
இதுவும் நல்லாருக்கு! :)

said...

எனக்கு புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு :(

said...

// CVR said...
என்ன ஆச்சு அண்ணா???

இது தவிர எனக்கு வேற எதுவும் கேக்க புரியல!! :-( //

படிச்சதும் லேசா ஒரு சோகம் கவ்வுதுல்ல...அப்ப கவிதை பார்டர் பாஸ் :)

// அனுசுயா said...
ரைட் ரைட் என்னமோ நடக்குது :) //

வாங்க அனுசுயா. எல்லாமே நடந்துக்கிட்டுதான இருக்கு....இதுல என்னவோ மட்டும் நடக்குதுன்னா எப்படி? :)

// கோவி.கண்ணன் said...
//கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன//

இது இது ....இதுதான் கவிதை !

கவிவுலகில் பிறப்பெடுத்த ஜிராவை வருக கவிப்பூக்கள் தருக என வரவேற்கிறேன்.

:) //

வாங்க கோவி. உங்க வரவேற்புக்கு நன்றி. :) வந்துட்டோம்ல...

said...

// வெற்றி said...
இராகவன்,
கன்னிக் கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள். //

வாங்க வெற்றி. முந்தியும் கவிதை எழுதீருக்கேன். அப்பல்லாம் எழுதீருக்கேன். அதுனாலதானோ என்னவோ செய்யுள் மாதிரியே வரும். :) இப்பக் கொஞ்சம் தாவலை.

//Anonymous said...
பூங்கா பேரிலே கடிதம் போட்டால் பதிலுக்கு முடியும் முடியாதென்று சொன்னால் இன்னும் பொறுப்பு வருமோ? //

அனானி, நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை. கவிதையை என்னோட பொருத்திப் பாக்குறீங்களோன்னு நெனைக்கிறேன். அதுதான் தேவையில்லைன்னு சொல்றேன். என்னுடைய கவிதை நானல்ல.

// கோபிநாத் said...
எல்லா நாளும் ஒரே நாளா? எல்லாம் சரியாகும் சார். //

ஆமாங்க கோபிநாத். எல்லா நாளும் ஒரே நாளா? மாறும். கண்டிப்பாக.

said...

// Madura said...
//பாக்குறவங்க முகம் தெரிஞ்சாதான் கண்ணாடி...படிக்கிறவங்க மனசு தெரிஞ்சாதான் கவிதை.//
இதுவும் நல்லாருக்கு! :) //

வாங்க மதுரா, ஆகக்கூடி....கவிதையை விட முன்னுரையும் பின்னுரையும் எல்லாருக்கும் நல்லா புரிஞ்சிருக்கு :))))))))))

எப்படியிருக்கீங்க? பாத்து ரொம்ப நாளாச்சு?

// அருட்பெருங்கோ said...
எனக்கு புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு :( //

அப்பா கோ, நீயெல்லாம் கவிஞரு....ஒனக்கே புரியலைன்னா இந்தக் கவிதைல டப்பா டான்ஸ் ஆடுத்துன்னு பொருள் :))

said...

//பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான். /
மீ த செகண்ட் திஸ்! என்னுடைய எண்ணமும் இதுவே!

said...

kavithai, short and super!

said...

25?

said...

//கவிதையை என்னோட பொருத்திப் பாக்குறீங்களோன்னு நெனைக்கிறேன். அதுதான் தேவையில்லைன்னு சொல்றேன். என்னுடைய கவிதை நானல்ல.//

கோரா, நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை.

said...

ஜிரா,
கவிதையை உங்களுடன் பொறுத்திப் பார்க்க்கலை.
சின்னவர்களுக்கூச் சோகம் கூடாது.
கூடவும் கூடாது.
இதுவும் கடக்கும் இல்லையா ராகவன்.
நிலம் பழுதே இல்ல்லை. புதிய உரம்,செம்மையான கவனிப்பு
நிச்சயம் உயிர் துளிக்கும்.
பூங்காவில் மலர்கள் கனிகள் என்று
வயதான மரங்கள் ,நிழல்கள் என்றூ
கவிதை ஒன்றை எழுதுங்கள்.

said...

ஜிரா, யூ டூ?!! இப்படி கவுஜ எழுதிக் கட்சி மாறிட்டீங்களே!! வெட்டி சொன்ன மாதிரி ஒண்ணும் புரியலை.

said...

நல்லதொரு முயற்சி!!