Sunday, July 22, 2007

ஹாரி பாட்டரும் இனவெறியும்



ஹாரிபாட்டர் கதையில என்னதான் இருக்கு?
ஏன் இப்பிடி பைத்தியமா அலையிறாங்க?
நடுநிசில கட வாசல்ல வரிசைல நின்னு வாங்கித்தான் ஆகனுமா?
விடியிற வரைக்கும் கூடப் பொறுக்க முடியலையா?
சிறுசு பெருசுன்னு வயசு பாக்காம எல்லாரையும் மயக்க எந்த ஊர் சொக்குப்பொடியத் தூவி கதை எழுதீருக்காங்க?

இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியலையா? அப்ப நீங்க இந்தப் பதிவைப் படிக்கனும். விடை தெரியும்னாலும் இந்தப் பதிவைப் படிச்சு நான் சொன்னது சரிதான்னு சொல்லனும். பதிவுக்குப் போவோமா?

என்னடா ஹாரி பாட்டர்ல இனவெறின்னு பாக்குறீங்களா? ஆமா. கதைக்கும் அதுக்கும் தொடர்பு இருக்கு. விளக்கமாச் சொல்றேன்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி மொதப் புத்தகம் வந்துச்சு. ஒன்னு...ரெண்டு..மூனுன்னு...இப்பக் கடைசிப் புத்தகம் ஏழாவது பாகமா வந்திருக்கு. ஜே.கே.ரௌலிங் அப்படீங்குற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதுன கதைதான் இது.

கதையோட மையக்கருத்தே இனவெறிக்கு எதிராகப் போராடுறதுதான். ஆமா. அதப் படிக்கிறவங்களுக்கு இந்த உலகத்துல நடந்த நடக்குற இனவெறிப் படுகொலைகள் கண்டிப்பா நினைவுக்கு வரும். நல்லாக் கவனமாக் கேளுங்க. கதைச் சுருக்கத்தத் தெளிவாச் சொல்றேன்.

நம்மள்ளாம் சாதாரண மனிதர்கள்தானே. இதுல நம்மளப் போல மனிதர்கள் சிலருக்கு மந்திரஜாலமெல்லாம் தெரிஞ்சிருக்கு. அவங்களால நெறைய ஜாலங்கள் செய்ய முடியும். இப்ப ரெண்டு இனம் இருக்குதா? மந்திரம் தெரிஞ்ச இனம். தெரியாத இனம். தெரிஞ்ச இனத்துக்கு wizard communityன்னு பேரு. தெரியாதவங்களுக்கு mugglesனு பேரு.

இந்த mugglesஐ விட wizardsக்கு நெறைய சக்தி இருக்குதான. அந்தச் சக்தியை சாதாரண மனிதர்களுக்கு எதிராப் பயன்படுத்தாம அமைதியா வாழனும்னு wizard communityல ஒரு கூட்டம் நெனைக்குது. அதுவுமில்லாம muggles இனத்தோட கலப்புத் திருமணமும் செஞ்சுக்கலாம்னும் அவங்க நெனைக்குறாங்க.

ஆனா இன்னொரு கூட்டம் இருக்கு. அவங்களுக்கு இனவெறி. wizard ரத்தம் எப்படிச் சாதாரண ரத்தத்தோட கலக்கலாம்னு நெனைக்கிறவங்க அவங்க. muggles எல்லாம் கீழானவங்க. அவங்க இருந்தா என்ன..இல்லைன்னா என்னனு இவங்க நெனைக்கிறாங்க. அவங்கள அப்பப்ப கொல்றது..கொடுமைப் படுத்துறதுன்னு இருக்காங்க. அதுவுமில்லாம கலப்புத் திருமணம் செஞ்சவங்க கொழந்தைங்களும் wizard/witchஆ இருந்தா அவங்களையும் வெறுக்குறாங்க. தங்களை Pure Blood அப்படீன்னு அழைக்கிறாங்க. அப்படிச் சுத்த ரத்தக் கல்யாணத்துல பொறக்காத wizard/witch குழந்தைகளை Mud Bloodன்னு கேவலமாச் சொல்வாங்க.

இப்பிடி wizard community ரெண்டா பிரிஞ்சிருக்குறப்போ நடக்குறதுதான் ஹாரி பாட்டர் கதை. ஒரு கெட்டவன் வோல்டேமார்ட்(Voldemort). தன்னை Pure Bloodன்னு சொல்லிப் பெரிய ஆளா வர்ரான். ஒரு கூட்டத்தச் சேத்துக்கிட்டு கொடுமைகளச் செய்றான்.

ஹோக்வர்ட்ஸ் (Hogwards) பள்ளிக்கூடத்துல இந்தப் பிள்ளைங்க படிக்கனும். மொத்தம் ஏழாண்டுப் படிப்பு. சரியா பதினோரு வயசுல சேந்து பதினெட்டு வயசுல படிச்சு முடிச்சு வெளிய வருவாங்க. அந்தப் பள்ளிக்கூடத்துல தலைமையாசிரியரா ஒரு நல்லவர் இருக்காரு. டம்பிள்டோர் (Dumbledore)னு பேரு. அவரு கெட்டவனுக்கு எதுராப் போராட ஒரு கூட்டத்த உருவாக்குறாரு. அதுல ரெண்டு பேரு ஜேம்ஸ் மற்றும் லில்லி. அவங்களுக்கு ஒரு குழந்தைதான் ஹாரி பாட்டர்.

நம்மூர்ல ஜாதகம் எழுதுறாப்புல அவங்க Prophecy எழுதுறாங்க. அதாவது இந்தக் குழந்தை என்னாகும்னு. அதுல இந்தக் கொழந்தையால வோல்டேமார்ட்டுக்குக் கெடுதீன்னு சொல்லுது. இதத் தெரிஞ்சிக்கிட்டு அவன் இவங்களக் கொல்ல வர்ரான். ஜேம்சையும் லில்லியையும் கொன்னுட்டு பாட்டரைக் கொல்லப் போறான். அப்பத்தான் அந்த அதிசயம் நடக்குது. ஆமா. அந்தக் கொழந்தை தப்பிச்சிருது. ஆனா வோல்டேமார்ட் சக்தியெல்லாம் இழந்து ஒன்னுமில்லாமப் போயிர்ரான். கதை தொடங்குறதே அங்கதான்.

அந்த அனாதைக் குழந்தை இப்ப ரொம்பப் பிரபலமாயிருது. டம்பிள்டோர் அத லில்லியோட அக்கா வீட்டுல வளர்க்க விட்டுர்ராரு. அவனுக்குப் பதினோரு வயசு ஆகைல ஹாக்வோர்ட்ஸ் பள்ளிக்கூடத்துல படிக்கப் போறான். மொத்தம் ஏழு வருசம்னு சொன்னேனே. ஒவ்வொரு வருசத்துல நடக்குறதும் ஒவ்வொரு புத்தகம். இப்ப ஜூலை 21 2007ல வந்தது ஏழாவது புத்தகம்.

அந்தப் பள்ளிக்கூடத்துல ரான் (Ron) மற்றும் ஹெர்மயானி(Hermione) அப்படீன்னு ரெண்டு நண்பர்கள் கிடைக்குறாங்க. சக்தியெல்லாம் இழந்த வோல்டேமார்ட் திரும்பவும் சக்தி பெற்று உருவம் பெற்று ஹாரிபாட்டரைக் கொன்னுரனும்னு விரும்புறான். மொத மூனு புத்தகத்துலயும் மூனு விதமா முயற்சி செய்றான். ஆனா தோல்விதான். ஆனா நாலாவது புத்தகத்துல அவனுக்கு வெற்றி. முழு உருவம் வந்துருது. அஞ்சுல அவன் திரும்ப வந்தத மக்கள் நம்ப மாட்டேங்குறாங்குறாங்க. ஆனா அந்தப் புத்தகம் முடியுறப்போ மக்களுக்கு உண்மை தெரிஞ்சிருது. ஆறாவது புத்தகத்துலயும் ஏழாவது புத்தகத்துலயும் கடுமையான சண்டைகள். உயிரிழப்புகள். அப்பப்பா! கடைசில நல்லவன் வெற்றி பெறுவதுதான் கதை.

அட இவ்வளவுதானான்னு நெனச்சிராதீங்க. இத ஏழு புத்தகத்துல சொல்லனுமே. எத்தனை பாத்திரங்கள் அதுக்குத் தேவை. எவ்வளவு விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தேவை. மாயாஜாலம்னு முடிவெடுத்தாச்சு. சொன்னதையே திரும்பச் சொல்லாம எவ்வளவு சொல்லனும். இதையெல்லாம் நல்லா செஞ்சிருக்காங்க ஜே.கே.ரௌலிங்.

இனவெறிக் கொடுமைகளை அவங்க விவரிக்கும் பொழுது இரண்டாம் உலகப் போர் சமயத்துல நாஜிகள் செஞ்ச வம்புகள் நினைவுக்கு வரும். அத வெச்சுத்தான் எழுதீருப்பாங்கன்னு நெனைக்கிறேன். ஏழாவது புத்தகத்துல வோல்டேமார்ட் ஆளுங்க எல்லாத்தையும் பிடிச்சிருவாங்க. அப்ப Pure Blood இல்லாதவங்கள்ளாம் அரசாங்கத்துக்கிட்ட பதிவு செய்யனும். அவங்களுக்கு மந்திரதந்திரம் தெரிஞ்சாலும் சொல்லக் கூடாது. பயன்படுத்தக்கூடாது. மீறிப் பயன்படுத்துனா கொல்றது. இந்த மாதிரியெல்லாம் படிக்கும் போது நம்ம நாட்டுலயும் வெளிநாடுகளிலும் நடந்த/நடக்குற கொடுமைகள் நினைவுக்கு வரும்.

புத்தகத்தோட வெலை கூடதான். ஒத்துக்க வேண்டியதுதான். அதே நேரத்துல புத்தகம் வந்ததுமே அதோட மின்பதிப்பும் கிடைச்சிருது. Technology has improve soooooooooo much. :))) ஆகையால வாங்குற கூட்டம் கொடுத்த காசு போதும். மத்தவங்க டௌன்லோடு பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன்.

ஆனா புத்தகத்தைப் படிக்க முயற்சி செஞ்சு பாருங்க. அப்பத்தான் அதுல இருக்குறது புரியும். படம் பாருங்க. ஆனா புத்தகத்தோட ஒப்பிடும் போது படம் ஒன்னுமேயில்லை. படிச்சா விட முடியாது. அந்த அளவுக்கு ஈர்க்கும். சனிக்கிழமை காலைல ஒம்பது மணிக்கு புத்தகத்த வாங்குனேன். ராத்திரி கொஞ்ச நேரம் மட்டும் தூங்கீட்டு புத்தகத்தப் படிச்சு முடிச்சாச்சு. அந்த அளவுக்கு புத்தகம் என்னை மட்டுமில்ல...ரொம்பப் பேரை ஆட்டுவிச்சிருக்கு. படிக்காமலேயே அதுல என்ன இருக்குன்னு கேட்டீங்கன்னா....ஒன்னுமில்லை...போய் சாப்புடுங்கன்னு சொல்வேன்.

ஏழாவது புத்தகத்தப் பத்தி இந்தச் சுட்டியில பாருங்க. அதுல பல சுட்டிகள் இருக்கு. ஒவ்வொன்னும் நெறைய தகவல்கள் தரும். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆறாவது புத்தகம் வந்த பொழுது நான் எழுதிய பதிவு இங்கே.

இந்தக் கதைய எழுதுனாங்களே...அவங்க சோத்துக்குக் கஷ்டப்பட்டவங்க. இந்தக் கதையால இன்னைக்கு இவ்வளவு தூரம் முன்னேறியிருக்காங்க. எழுத்துக்கு இருக்குற வலிமை அவ்வளவு. வாங்க...ஹாரி பாட்டர் படிக்கலாம்.









அன்புடன்,
கோ.இராகவன்

54 comments:

said...

ஜி.ரா. ஹாரி பார்ட்டர்ல்ல அப்படி என்ன இருக்குன்னுங்கற கேள்வி எனக்கும் இருந்துச்சு.. உங்கப் பதிவு அந்தக் கேள்விக்கு விடைத் தருவதாய் உள்ளது நன்றி ஜி.ரா

said...

எங்களைப் போன்ற mugglesக்கு பதிவெழுதிய உங்களுக்கு மிக மிக நன்றிங்க!
கொஞ்சமாவது தலைமுடி மிஞ்சும் :)

said...

// தேவ் | Dev said...
ஜி.ரா. ஹாரி பார்ட்டர்ல்ல அப்படி என்ன இருக்குன்னுங்கற கேள்வி எனக்கும் இருந்துச்சு.. உங்கப் பதிவு அந்தக் கேள்விக்கு விடைத் தருவதாய் உள்ளது நன்றி ஜி.ரா //

என்ன தேவ் இது! இடிச்சாத்தான் ஒரைக்கும் சுக்கும் மிளகும். படிச்சாத்தான் பிடிக்கும் ஹாரிபாட்டரும் லார்டு ஆஃப் தி ரிங்ஸ்-சும்னு.....தூத்துக்குடியில ஒரு கெழவி சின்ன வயசுல சொல்லிக் கேட்டிருக்கேன். படிக்கத் தொடங்கீருங்க. அப்புறம் பாருங்க. :)

said...

// மணியன் said...
எங்களைப் போன்ற mugglesக்கு பதிவெழுதிய உங்களுக்கு மிக மிக நன்றிங்க!
கொஞ்சமாவது தலைமுடி மிஞ்சும் :) //

:)))) வாங்க மணியன். அப்படியெல்லாம் பயப்படக் கதையில ஒன்னுமில்லைங்க. நல்ல விறுவிறுப்பான கதை. மொதல்ல இருந்து படிங்க...நல்லாயிருக்கும்.

said...

இங்கிலீஷ்ல இருக்க புத்தகத்த எப்படி படிக்கறது ?

இதென்ன கொடுமையா இருக்கு ?

said...

ஜீரா,

ஏழு பாகங்களின் கதையையும் சுருக்கி ஒரு பதிவில் குடுத்ததுக்கு தேங்ஸு! இதைவைச்சே காலத்தை ஓட்டிர மாட்டேன்?

நாங்க என்னைய்யா படிக்க மாட்டோம்னா சொல்லறோம்? புத்தகத்தை பிரிச்சா எல்லாம் abcd லயே இருக்கு! அப்பறம் எங்கத்த?! :)

said...

//ஹாரிபாட்டர் கதையில என்னதான் இருக்கு?
ஏன் இப்பிடி பைத்தியமா அலையிறாங்க?
நடுநிசில கட வாசல்ல வரிசைல நின்னு வாங்கித்தான் ஆகனுமா?
விடியிற வரைக்கும் கூடப் பொறுக்க முடியலையா?
சிறுசு பெருசுன்னு வயசு பாக்காம எல்லாரையும் மயக்க எந்த ஊர் சொக்குப்பொடியத் தூவி கதை எழுதீருக்காங்க?//

என் மனசில் உள்ள கேள்விகளை எப்படி கரெக்டா சொல்லுறீங்க?

said...

///இந்தக் கதைய எழுதுனாங்களே...அவங்க சோத்துக்குக் கஷ்டப்பட்டவங்க. இந்தக் கதையால இன்னைக்கு இவ்வளவு தூரம் முன்னேறியிருக்காங்க. எழுத்துக்கு இருக்குற வலிமை அவ்வளவு. வாங்க...ஹாரி பாட்டர் படிக்கலாம்.///

இங்கிலாந்து அரச குடுமப்த்தினருடன் ஒப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பணம் குவிந்துள்ளதாம்.

தமிழில் எழுதி அதில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது யாரவது பெறமுடியுமா?

said...

ஹாரி பாட்டர சாப்பிட தூண்டியிருக்கீங்க... அட டே... நீங்க கூட ஒரு எதிர்காலத்துல ஒரு ஜே.கே. ராவ்லிங்க வரலாம் போல இருக்கு.... கடந்த காலத்துல நாஜிக்கள எதிர்த்து போராடி வேண்டியிருக்கு. நிகழ்காலத்துல நம்ம இந்தியாவுல இந்துத்துவா - மோடித்துவாவ எதிர்த்து போரட வேண்டியிருக்கு.... சுப்பர்பா....

said...

ஜி.ரா,

ஹாரி பாட்டர் படிச்சதில்லை, பார்த்ததில்லை! ஒங்க சுவாரசியமான விமர்சனம் / கதைச் சுருக்கம் வாசித்த பிறகு, படிச்சுத் தான் பார்க்கலாமே என்று ஓர் எண்ணம் :) சுவையாக எழுதியுள்ளீர்கள், நன்றி.

எ.அ.பாலா

said...

நம்மா ஆளுங்க எதையுமே ஒவ்ர் சிம்ளிபை பன்னி அதை கெடுத்துடுவாங்க...கடல் புறா, பொன்னியின் செல்வன் வாசித்த தமிழர்க்கு 1ரு பாக்கெட் நாவல் வந்து படிக்கும் வழக்கமே வழக்கொழிந்து வருகிறது..என் போன்ற ஒரெசியஸ் ரீடர்ஸ் கூட தீனி இல்லமல் ஷெல்டன், டான் ப்ரொவுன் என்ற திசை மாறி விட்டாம்..(யார் யார் எல்லாம் இன்னு கேக்காதீங்க...)

said...

நல்ல பொழுதுபோக்கு புத்தகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உள்ளோட்டமாக சில சமயம் அங்கங்கே பல நல்ல விஷயங்களை சொல்லி விட்டு சென்றிருப்பார் எழுத்தாளர்.

உண்மைதான் உடனே மின் வடிவ பதிப்பும் வந்திடுச்சு. வெறியா இருக்காங்கய்யா....

இப்போழுதும் மிகப் பிடித்த ஆங்கில படங்கள்னா Lord of the Rings ம் Horry potter உம் மனதிற்குள் வந்து போவதைத் தடுக்க முடியாது.

ஜி.ரா நீங்கள் கிங் ஆர்தர் பார்த்திருக்கிறீர்களா???? பதிவுக்கு சம்பந்தமில்லாம இருக்கேன்னு நினைக்காதீங்க. புடிச்ச படம்னு பேசறப்போ இதையும் கேகணும்னு தோணுச்சு.

said...

ஹாரி பாட்டர 33 மொழிகள்ள மொழி பெயர்த்திருப்பதாக கூறுகிறார்கள். நம்ம செம்மொழியான தமிழில் ஏன் மொழி பெயர்க்கப்படவில்லை என்பது என்னுடைய கேள்வி! அதுவும் கல் தோன்றா மண் தோன்றா காலத்து மொழி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பதிப்பகங்கள் ஏதாவது முயற்சி செய்யலாம்...

said...

Thanks Everybody for your comments. Dont hv unicode at work. will reply to ur comments once i reach home in the eve.

said...

ஒரு ட‌வுட்டு சார்! நம்ம தொலைக்காட்சி ரசிகர்களும் Maggles தானா?

புள்ளிராஜா

said...

கடைசியில், சன் டிவி திரை விமர்சனம் ஸ்டையிலே முடிச்சிருக்கீங்க!
:-)

said...

அதுக்குள்ள படிச்சிட்டீங்களா! சூப்பர்!

said...

ஜிரா,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

ஒரு தகவலுக்காக -

வால்டிமார்டே ஒரு half-blood-தான். மேலே குறிப்பிட்டது போல pure blood கிடையாது.

வால்டிமார்டின் தாய் ஒரு witch - Merope Gaunt. அவருடைய தந்தை Tom Riddle Senior.

சாதாரண மனிதர்களை வெறுப்பதால் தனக்கிடப்பட்ட தந்தையின் பெயரை (Tom Marvello Riddle) மாற்றி அமைத்து 'I am Lord Voldemort' என்று வைத்துக் கொள்கிறான்.

said...

Simply Superb! Excellant review and intro! Hatsoff Guru!

said...

/*Thanks Everybody for your comments. Dont hv unicode at work. will reply to ur comments once i reach home in the eve. */

நான் எல்லாம் தமிழ்ல எழுதுறேன்னா...அதுக்கு இது தான் காரனம்..
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

said...

/நாங்க என்னைய்யா படிக்க மாட்டோம்னா சொல்லறோம்? புத்தகத்தை பிரிச்சா எல்லாம் abcd லயே இருக்கு! அப்பறம் எங்கத்த?! :)/

ரிப்பீட்டேய் :)

said...

அண்ணாச்சி!!
கலக்கி போட்டீங்க போங்க!!

சூப்பர் விமர்சனம்!!
எங்களை போன்ற muggles-க்கு நல்லா ஆர்வத்தை கிளப்பி விட்டுட்டீங்க!! :-)

said...

ஜிரா,

எனக்கும் அந்த பொஸ்தகத்தை படிக்க ஆசைதான்..... ஆனா ஒவ்வொரு வார்த்தைக்கும் டிக்சனரியிலே அர்த்தம் கண்டுபிடிக்குறதுக்கு சோம்பேறித் தனமா இருக்கு.... :(

என்னப் பண்ணலாம்... :)

said...

யோவ்..
அண்ணைக்கு போய் ஆர்டர் ஆஃப் த பீனிக்ஸ் பாத்து தலைய பிச்சிட்டு வந்தேன். இப்பத்தான் புரியுது இதன் அடித்தளம்.

கலக்கிட்டீங்க ராகவன்.

இருந்தாலும் அந்த தடித்த புத்தகங்கள படிக்கிறதுக்கு என்ன 'ஸ்பெல்' பயன்படுத்துறதுன்னு சொல்லலியே!!
:)

said...

ஜி.ரா.

அவர்களுக்கு

நமது தினமலர் அந்துமணி ரமேஸ் பீனிக்ஸ் கட்டளையால்தான்
ஆபாச SMS அனுப்பி உள்ளார் எனவே ஹாரி பார்ட்டர் பீனிக்ஸ்தான்
குற்றவாளி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

said...

விமர்சனம் கலக்கல் ஜிரா.. அந்த புஸ்தகத்துல அப்படி என்னா இருக்கு அப்படின்னு நினைத்து விட்டுட்டேன் (சொன்னா நம்பணும், யாருப்பா அது படிச்சி புரியாத தால படிக்கலை அப்படின்னு சொல்றது..)

said...

ஜிரா அண்ணா

கொஞ்சம் மந்திர தந்திரக் காட்சிகளைச் சாம்பிளுக்குச் சொல்லியிருந்தீங்கனா...muggles எல்லாம் எழுந்தூ ஓடி இருப்போம், புத்தகம் வாங்க :-)

//வால்டிமார்டே ஒரு half-blood-தான். மேலே குறிப்பிட்டது போல pure blood கிடையாது.
வால்டிமார்டின் தாய் ஒரு witch - Merope Gaunt. அவருடைய தந்தை Tom Riddle Senior//

இது தான் கதையில் சூப்பர் உண்மை! அப்பட்டமான அவலம்! இதுக்கு வால்டிமார்ட் ஆடும் ஆட்டங்கள்! ஹூம்! அவனுக்கும் இடிச்சாத் தான் ஒரைக்கும் சுக்கும் மிளகும்! :-)

said...

// இளவஞ்சி said...
ஜீரா,

ஏழு பாகங்களின் கதையையும் சுருக்கி ஒரு பதிவில் குடுத்ததுக்கு தேங்ஸு! இதைவைச்சே காலத்தை ஓட்டிர மாட்டேன்? //

ஆகா...ஐயா..நான் சொன்னது ராக்கெட்ல இருந்து பூமியப் பாக்குற மாதிரி. மத்தபடி நான் சொன்னது புரியுறதுக்கு ஏழு புத்தகத்தையும் படிக்கனும். அப்பத்தான் முழுத்திருப்தி இருக்கும். சங்கரங்கோயில் சாயுபு ஓட்டல் பிரியாணிய வெங்காயத் தயிர்ப்பச்சியோட மோத விட்டு வாயில அள்ளிப் போட்டுக்கிறாப்புல.

// நாங்க என்னைய்யா படிக்க மாட்டோம்னா சொல்லறோம்? புத்தகத்தை பிரிச்சா எல்லாம் abcd லயே இருக்கு! அப்பறம் எங்கத்த?! :) //

// செந்தழல் ரவி said...
இங்கிலீஷ்ல இருக்க புத்தகத்த எப்படி படிக்கறது ?

இதென்ன கொடுமையா இருக்கு ? //

// அருட்பெருங்கோ said...
/நாங்க என்னைய்யா படிக்க மாட்டோம்னா சொல்லறோம்? புத்தகத்தை பிரிச்சா எல்லாம் abcd லயே இருக்கு! அப்பறம் எங்கத்த?! :)/

ரிப்பீட்டேய் :) //



என்னது இது? இளவஞ்சியும் ரவியும் கூட்டணியா? தொணைக்கு அருட்பெருங்கோ வேற!!!!

ஒங்களையெல்லாம் ஒன்னு கேக்குறேன். நீங்க ஆணிபுடுங்குற எடத்துல abcdலதான ஆணி புடுங்குறீங்க. படிச்சது வெச்சதெல்லாம் abcdதான. அப்படி இருக்கைல கதப் புத்தகம் படிக்கிறதுல abcd இருந்தா கசக்குதா! எறங்குங்கய்யா. நல்லாருக்கும். எம் பேச்சக் கேளுங்க. மொதப் புத்தகத்த எடுத்து வெச்சிப் படிங்க. மெதுவாப் படிங்க. ரௌலிங்கு ரொம்ப எளிமையான ஆங்கிலத்துலதான் எழுதீருக்காங்க.

said...

// ஜோ / Joe said...

என் மனசில் உள்ள கேள்விகளை எப்படி கரெக்டா சொல்லுறீங்க? //

ஏன்னா மொதமொதல்ல 2000ல என் கைக்கு புத்தகம் கெடைச்சப்போ...என்னடா புக்குன்னு நான் நண்பனக் கேட்டக் கேள்விதான. அப்புறம் நடந்ததச் சொல்லனுமா...நாயாப் பேயா அலைஞ்சு...ஒருவழியா இப்ப ஏழு புத்தகத்தைப் படிச்சு முடிச்சாச்சு. ஒங்களுக்கு வசதியா ஏழும் இருக்கு. ஒரு புத்தகம் படிங்க...அப்புறம் பாருங்க.

// SP.VR.சுப்பையா said...
இங்கிலாந்து அரச குடுமப்த்தினருடன் ஒப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பணம் குவிந்துள்ளதாம்.

தமிழில் எழுதி அதில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது யாரவது பெறமுடியுமா? //

கண்டிப்பாக முடியாது. தமிழ் எழுத்துக்கு உலக வர்த்தகம் இப்ப இல்லைங்குறது ஒரு காரணம். இருந்தாலும் தமிழ் வாசகர் ரசனைங்குறதும் இன்னொரு காரணம். தமிழில் புத்தகங்கள் மக்களில் எத்தனை பேரைப் போய்ச் சேருகிறது என்றும் இருக்கிறதே. படிக்கும் வழக்கம் நமக்கு வளர வேண்டும்.

said...

// சந்திப்பு said...
ஹாரி பாட்டர சாப்பிட தூண்டியிருக்கீங்க... அட டே... நீங்க கூட ஒரு எதிர்காலத்துல ஒரு ஜே.கே. ராவ்லிங்க வரலாம் போல இருக்கு.... கடந்த காலத்துல நாஜிக்கள எதிர்த்து போராடி வேண்டியிருக்கு. நிகழ்காலத்துல நம்ம இந்தியாவுல இந்துத்துவா - மோடித்துவாவ எதிர்த்து போரட வேண்டியிருக்கு.... சுப்பர்பா.... //

ஆகா! அப்ப எழுதத் தொடங்கீரலாம்னு சொல்றீங்களா? தொடங்கீருவோம். :)

// enRenRum-anbudan.BALA said...
ஜி.ரா,

ஹாரி பாட்டர் படிச்சதில்லை, பார்த்ததில்லை! ஒங்க சுவாரசியமான விமர்சனம் / கதைச் சுருக்கம் வாசித்த பிறகு, படிச்சுத் தான் பார்க்கலாமே என்று ஓர் எண்ணம் :) சுவையாக எழுதியுள்ளீர்கள், நன்றி. //

படிங்க. படிங்க. கண்டிப்பா படிங்க. மொதப் புத்தகத்தப் படிச்சிருங்க...அப்புறம் பாருங்க. இப்பிடித்தான் என்னோட நண்பர ஒரு வழியா மொதப் புத்தகம் படிக்க வெச்சிட்டேன். இப்ப என்னடான்னு அவரு புத்தகம் வாங்க வரிசைல எனக்கு முன்னாடி நிக்குறாரு. :)))

// TBCD said...
நம்மா ஆளுங்க எதையுமே ஒவ்ர் சிம்ளிபை பன்னி அதை கெடுத்துடுவாங்க...கடல் புறா, பொன்னியின் செல்வன் வாசித்த தமிழர்க்கு 1ரு பாக்கெட் நாவல் வந்து படிக்கும் வழக்கமே வழக்கொழிந்து வருகிறது..என் போன்ற ஒரெசியஸ் ரீடர்ஸ் கூட தீனி இல்லமல் ஷெல்டன், டான் ப்ரொவுன் என்ற திசை மாறி விட்டாம்..(யார் யார் எல்லாம் இன்னு கேக்காதீங்க...) //

மொதமொதலா நம்ம வலைப்பூவுக்கு வந்திருக்கீங்க. வாங்க. உண்மைதான். தமிழில் ஆழப்படிக்கும் வழக்கம் பரவலாகவே காணாமல் போயிருக்கிறது. படிக்கும் வழக்கத்தை இழந்த இங்கிலாந்து குழந்தைகளை ஹாரி பாட்டர் மந்திரம் திரும்பவும் புத்தகங்களுக்குக் கூட்டி வந்தது. தமிழ்க்குழந்தைகளை?

// TBCD-2 said...
/*Thanks Everybody for your comments. Dont hv unicode at work. will reply to ur comments once i reach home in the eve. */

நான் எல்லாம் தமிழ்ல எழுதுறேன்னா...அதுக்கு இது தான் காரனம்..
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm //

நன்றிங்க. பிரச்சனையே அலுவலகத்துல மட்டுந்தான். யுனிகோடு இல்லை. எழுதுறதுக்கு நீங்க குடுத்த சுட்டி உதவும். நன்றி.

said...

// Sridhar Venkat said...
ஜிரா,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

ஒரு தகவலுக்காக -

வால்டிமார்டே ஒரு half-blood-தான். மேலே குறிப்பிட்டது போல pure blood கிடையாது.

வால்டிமார்டின் தாய் ஒரு witch - Merope Gaunt. அவருடைய தந்தை Tom Riddle Senior.

சாதாரண மனிதர்களை வெறுப்பதால் தனக்கிடப்பட்ட தந்தையின் பெயரை (Tom Marvello Riddle) மாற்றி அமைத்து 'I am Lord Voldemort' என்று வைத்துக் கொள்கிறான். //

வாங்க ஸ்ரீதர். ஆமாம். உண்மைதான். இரண்டாவது புத்தகமான Chamber of Secretsல் இந்த உண்மை ஹாரி பாட்டருக்குத் தெரிய வருகிறது. ஆமாம். அதையெல்லாம் ரொம்பவும் விளக்கமாச் சொல்லி மக்களை ரொம்பவும் குழப்ப விரும்பவில்லை. ஆகையால அப்படியே விட்டுட்டேன். ஒரு அறிமுகம் கொடுக்க இது போதும்ன்னுதான்.

நீங்களும் கதையப் படிச்சிருக்கீங்கன்னு தெரியுது. Deathly Hallows முடிச்சாச்சா?

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா அண்ணா //

அண்ணாவா? சரி ரவி தாத்தா :))))

////வால்டிமார்டே ஒரு half-blood-தான். மேலே குறிப்பிட்டது போல pure blood கிடையாது.
வால்டிமார்டின் தாய் ஒரு witch - Merope Gaunt. அவருடைய தந்தை Tom Riddle Senior//

இது தான் கதையில் சூப்பர் உண்மை! அப்பட்டமான அவலம்! இதுக்கு வால்டிமார்ட் ஆடும் ஆட்டங்கள்! ஹூம்! அவனுக்கும் இடிச்சாத் தான் ஒரைக்கும் சுக்கும் மிளகும்! :-) //

வாங்க ரவி வாங்க. புத்தகம் படிக்காம படம் பாத்தே வெளுத்து வாங்குறீங்களே ;) அதெப்படி?

said...

// நந்தா said...
நல்ல பொழுதுபோக்கு புத்தகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உள்ளோட்டமாக சில சமயம் அங்கங்கே பல நல்ல விஷயங்களை சொல்லி விட்டு சென்றிருப்பார் எழுத்தாளர். //

ஆமா. உண்மைதான். படிக்கப் படிக்கத் தெரியும்.

// உண்மைதான் உடனே மின் வடிவ பதிப்பும் வந்திடுச்சு. வெறியா இருக்காங்கய்யா....//

ஆமாமா. இப்பல்லாம் மின்வடிவமாக்குறது ரொம்ப லேசாப் போயிருச்சா...ஆகையால நடுராத்திரி புத்தகம் வந்தவுடனே அப்படியே மின்வடிவமாக்கீர்ராங்கய்யா.

// ஜி.ரா நீங்கள் கிங் ஆர்தர் பார்த்திருக்கிறீர்களா???? பதிவுக்கு சம்பந்தமில்லாம இருக்கேன்னு நினைக்காதீங்க. புடிச்ச படம்னு பேசறப்போ இதையும் கேகணும்னு தோணுச்சு. //

கிங் ஆர்தர் பாத்ததில்லை நந்தா. நல்லாயிருக்குமா? பழைய கிங் ஆர்தல் டிவிடி ஒன்னு வாங்கினேன். ஆனா நல்லாவேயில்லை. புதுசு இன்னமும் வாங்கலை.

said...

// Anonymous said...
ஒரு ட‌வுட்டு சார்! நம்ம தொலைக்காட்சி ரசிகர்களும் Maggles தானா?

புள்ளிராஜா //

:))))))))) அதுல என்ன சந்தேகம்

// ஜீவா (Jeeva Venkataraman) said...
கடைசியில், சன் டிவி திரை விமர்சனம் ஸ்டையிலே முடிச்சிருக்கீங்க!
:-) //

என்னங்க செய்றது ஜீவா. படிச்சேன். ரசித்தேன். நீங்களும் படிங்கன்னு சொல்லனும்ல.

// Dreamzz said...
அதுக்குள்ள படிச்சிட்டீங்களா! சூப்பர்! //

படிச்சிட்டேன் படிச்சிட்டேன். அவசர அவசரமா படிச்சி முடிச்சிட்டேன். :) இனிமே பொறுமையா ஆற அமர படிக்கனும். :)

// Anonymous said...
ஜி.ரா.

அவர்களுக்கு

நமது தினமலர் அந்துமணி ரமேஸ் பீனிக்ஸ் கட்டளையால்தான்
ஆபாச SMS அனுப்பி உள்ளார் எனவே ஹாரி பார்ட்டர் பீனிக்ஸ்தான்
குற்றவாளி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் //

ஆகா.....இப்பிடி வேற இருக்கா. இதெனக்குத் தெரியாமப் போச்சே. நல்லவேளை இப்பவாச்சும் சொன்னீங்களே! :)

said...

// ILA(a)இளா said...
Simply Superb! Excellant review and intro! Hatsoff Guru! //

வாங்க இளா வாங்க. என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க. முடிஞ்ச வரைக்கும் சுருக்கமா ஒரு அறிமுகம் குடுக்கலாம்னுதான் இப்பிடி.

// CVR said...
அண்ணாச்சி!!
கலக்கி போட்டீங்க போங்க!!

சூப்பர் விமர்சனம்!!
எங்களை போன்ற muggles-க்கு நல்லா ஆர்வத்தை கிளப்பி விட்டுட்டீங்க!! :-) //

வாப்பா சீவியாரு. என்னவோ நாளைக்கே முதப் புத்தகத்தப் படிக்கப் போறாப்புலதான். ;)

// இராம் said...
ஜிரா,

எனக்கும் அந்த பொஸ்தகத்தை படிக்க ஆசைதான்..... ஆனா ஒவ்வொரு வார்த்தைக்கும் டிக்சனரியிலே அர்த்தம் கண்டுபிடிக்குறதுக்கு சோம்பேறித் தனமா இருக்கு.... :(

என்னப் பண்ணலாம்... :) //

புரியாத வரிய விட்டுட்டு அடுத்த வரிக்கு ஓடு. இப்பிடிப் புரியுறத மட்டும் படிச்சிக்கிட்டே போ. கடைசில எல்லாம் புரிஞ்சிரும். நான் சொல்றதக் கேளு ராமு. அப்புறம் நீ எனக்கு ஹாரி பாட்டர் வகுப்பெடுப்ப.

// சிறில் அலெக்ஸ் said...
யோவ்..
அண்ணைக்கு போய் ஆர்டர் ஆஃப் த பீனிக்ஸ் பாத்து தலைய பிச்சிட்டு வந்தேன். இப்பத்தான் புரியுது இதன் அடித்தளம். //

:)))) அதுக்கு முன்னாடி வந்த நாலு படத்தையும் பாத்தீங்களா? அப்பக் கதை கொஞ்சம் புரிஞ்சிருக்கும். இல்லைன்னா அவ்வளவுதான்.

// கலக்கிட்டீங்க ராகவன்.

இருந்தாலும் அந்த தடித்த புத்தகங்கள படிக்கிறதுக்கு என்ன 'ஸ்பெல்' பயன்படுத்துறதுன்னு சொல்லலியே!!
:) //

ஆகா! இதெல்லாம் டூமச்சு. புத்தகமே படியோசாங்குற ஸ்பெல் போட்டா போதும்.

//சந்தோஷ் said...
விமர்சனம் கலக்கல் ஜிரா.. அந்த புஸ்தகத்துல அப்படி என்னா இருக்கு அப்படின்னு நினைத்து விட்டுட்டேன் (சொன்னா நம்பணும், யாருப்பா அது படிச்சி புரியாத தால படிக்கலை அப்படின்னு சொல்றது..) //

:))) என்னங்க இது..இப்பிடிச் சொல்லீட்டீங்க. தன் முயற்சியில் மனந்தளராத விக்கிரமாதித்தனா திரும்பவும் முயற்சி செஞ்சு பாருங்க. வெற்றி கிட்டும்.

said...

அப்ப படிக்கலாம்னு சொல்ல வறீங்க???

அப்படித்தானே!!!

பொன்னியின் செல்வன் மாதிரி இருக்குமா?

said...

ஜிரா

நேற்று புத்தகக் கடைக்கு சென்றிருந்தோம். இந்த புத்தகத்தை மலை போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள். சுமார் 12$ என நினைக்கிறேன்.

நான் சும்மா புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கும் போதே சுமார் ஐந்து பேருக்கு மேல் Shopping Cartல் இந்த புத்தகத்தை எடுத்து சென்றனர். நான் மொத்தம் அந்த புத்தகத்தை புரட்டியது வெறும் ஐந்து நிமிடங்கள் தான்.

இவ்வளவு Graceயா?
என தோன்றியது!


பதில் இப்பதிவில் கிடைத்துவிட்டது.

said...

ராகவன் சார்

ஹாரி பார்ட்டர் படம் என்றால் சூப்பர் graphicsக்கும் மட்டும் தான்னு நினைச்சேன் ...ஆனா அதுக்கு பின்னாடி இம்புட்டு விஷயம் இருக்கா !!!!!!!

புத்தகத்தை படிக்கானும் நினைச்ச தான் ரொம்ப யோசிக்க வேண்டியாதா இருக்கு (எல்லாம் இந்த இங்கிலீஷ் பிரச்சனை தான்)

said...

சன் தொலைக்காட்சி செய்தியில் இது பற்றி தேவைக்கதிகமாக கவரேஜ் பார்த்தபோது வெறுப்படித்தது. "இவன் ஏன் இந்த அளவுக்கு மார்க்கெட்டிங் செய்றான்" என்னும் அளவுக்கு. இதில் ஒரு பள்ளிச்சிறுவனை பேட்டி வேறு. அந்த சிறுவனும் ஏதோ இமயம் தொட்ட திருப்தியோடு வெகுநேரம் காத்திருந்து வாங்கியதை விவரித்தபோது, 'ஒரு தமிழ் புத்தகத்தை (நாவலை) இதே அளவு ஆர்வத்தோடு வரிசையில் காத்திருந்து வாங்குவாயா ?' என்று கேட்கவேண்டும் போல இருந்தது.

தமிழ் பாமரர்களின் மொழியெனும் மொழியியல் தீண்டாமை மனப்பான்மையும் 'ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவாளி'யென்ற மயக்கமும் அகலும்போது இதற்கு விடிவு உண்டாகும் என்று நினைக்கிறேன்.

எனினும், வலியது வாழும் என்ற சித்தாந்தத்தின்படி, இவ்வளவு உலகளாவிய புகழும், பெரும்பணமும் ஈட்டக்கூடிய அளவுக்கு ஈர்ப்புடன் எழுதும் வலிமை வாய்ந்த அந்த நாவலாசிரியைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.

said...

ஜிரா.

//கிங் ஆர்தர் பாத்ததில்லை நந்தா. நல்லாயிருக்குமா? பழைய கிங் ஆர்தல் டிவிடி ஒன்னு வாங்கினேன். ஆனா நல்லாவேயில்லை. புதுசு இன்னமும் வாங்கலை.//

பழசுன்னா நீங்க 1975 களில் வந்த King Arthur, the Young Warlord ஐ சொல்கிறீர்களோ???

நான் சொல்வது 2004ல் TouchStone Pictures ஆல் தயாரிக்கப்பட்ட கிங் ஆர்தர். எனக்கு மிகவும் பிடித்துப் போன படம்.

ஓரளவு வரலாற்று சம்பவங்களை வைத்து தயாரிக்க்கப்பட்ட படம் என்றாலும் ஒரு சிலர் இதில் புனைவுகள் அதிகம் என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ 2 மணி நேரம் நம்மை அசைய விடாமல் வைக்கும் வெகு நிச்சயமாக. முடிந்தால் பாருங்கள். நானே DVD யில்தான் பார்த்தேன்.

said...

ராகவன்,

விமர்சனம் பண்றதுக்கு ஒங்களுக்கு சொல்லி தரணுமா?

படிக்காதவங்களையும், படிக்க விருப்பமில்லாதவங்களையும் கூட உங்க விமர்சனம் படிக்க வச்சிரும்.

நானும் முதல் மூன்று புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆனால் இத்தனை புகழ் பெறும் அளவுக்கு அத்தனை ஸ்பெஷல் இல்லையென்பது என்னுடைய தாழ்மையான(!) அபிப்பிராயம்.

எல்லாம் இந்த மீடியா செய்கிற வேலை.

ஆனா ஒன்னு பாருங்க எங்க அப்பார்ட்மெண்ட் வாசல்ல ஒரு ஃபுட் வேர்ல்ட் இருக்கு... நாலு பில்டிங் தள்ளி ஸ்பென்சர் இருக்கு. ரெண்டுலயும் சுமார் முப்பது புஸ்தகங்கள அடுக்கி வச்சிருக்காங்க.. ரெண்டு, மூனு நாளா பாக்கறேன். யாருமே சீந்தக் காணம். இத்தனைக்கும் எங்க அப்பார்ட்மெண்டுலயே ஏறக்குறைய அம்பது இளைய தலைமுறையினர் இருக்காங்க...

said...

// வெட்டிப்பயல் said...
அப்ப படிக்கலாம்னு சொல்ல வறீங்க???

அப்படித்தானே!!!

பொன்னியின் செல்வன் மாதிரி இருக்குமா? //

ஆமா. படிக்கலாம். கண்டிப்பா படிக்கலாம். பொன்னியின் செல்வன் மாதிரி இருக்குமான்னு சொல்ல முடியாது. அது ஒரு வகை. இது ஒரு வகை. ஆனா அதுல ஊன்றிப் போற மாதிரி...இதுலயும் ஊன்றிப் போயிருவோம்.

// சிவபாலன் said...
ஜிரா

நேற்று புத்தகக் கடைக்கு சென்றிருந்தோம். இந்த புத்தகத்தை மலை போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள். சுமார் 12$ என நினைக்கிறேன்.

நான் சும்மா புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கும் போதே சுமார் ஐந்து பேருக்கு மேல் Shopping Cartல் இந்த புத்தகத்தை எடுத்து சென்றனர். நான் மொத்தம் அந்த புத்தகத்தை புரட்டியது வெறும் ஐந்து நிமிடங்கள் தான்.

இவ்வளவு Graceயா?
என தோன்றியது!

பதில் இப்பதிவில் கிடைத்துவிட்டது. //

ஆமாங்க சிவபாலன். அந்த அளவுக்கு நம்மள உள்ள இழுத்துரும். மொதப் புத்தகம் படிச்சாப் போதும். அப்புறம் நீங்களும் பதிவு போடுவீங்க. :)

said...

// கோபிநாத் said...
புத்தகத்தை படிக்கானும் நினைச்ச தான் ரொம்ப யோசிக்க வேண்டியாதா இருக்கு (எல்லாம் இந்த இங்கிலீஷ் பிரச்சனை தான்) //

ஆகா! என்னதிது....இங்கிலீசு தெரிஞ்ச எல்லாரும் இப்பிடிச் சொன்னா எப்படி? புத்தகம் முடிஞ்ச வரைக்கும் எளிமையான ஆங்கிலத்துல எழுதப்பட்டதுதான். படிக்கப் படிக்கப் புரியும். நீங்க சொல்றதெல்லாம் ஒத்துக்க முடியாது கோபிநாத்.

// Anonymous said...
சன் தொலைக்காட்சி செய்தியில் இது பற்றி தேவைக்கதிகமாக கவரேஜ் பார்த்தபோது வெறுப்படித்தது. "இவன் ஏன் இந்த அளவுக்கு மார்க்கெட்டிங் செய்றான்" என்னும் அளவுக்கு. இதில் ஒரு பள்ளிச்சிறுவனை பேட்டி வேறு. அந்த சிறுவனும் ஏதோ இமயம் தொட்ட திருப்தியோடு வெகுநேரம் காத்திருந்து வாங்கியதை விவரித்தபோது, 'ஒரு தமிழ் புத்தகத்தை (நாவலை) இதே அளவு ஆர்வத்தோடு வரிசையில் காத்திருந்து வாங்குவாயா ?' என்று கேட்கவேண்டும் போல இருந்தது. //

உண்மைதான் அனானி. தமிழ்ப் புத்தகமென்றால் அவன் காத்திருந்து வாங்குவானான்னு தெரியாது. ஆனால் அவன் பசிக்குத் தீனி போடும் தமிழ்க் குழந்தைகள் இலக்கியம் இன்றைய காலகட்டத்தில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். பெற்றோர்களும் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

// தமிழ் பாமரர்களின் மொழியெனும் மொழியியல் தீண்டாமை மனப்பான்மையும் 'ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவாளி'யென்ற மயக்கமும் அகலும்போது இதற்கு விடிவு உண்டாகும் என்று நினைக்கிறேன். //

ஆமாங்க. தமிழ் பாமரர்களின் மொழி அல்ல. இருந்தாலும் அதைப் படிப்பதை தமிழர்களிடையேயே பரவலாக்க வேண்டியுள்ளது.

// எனினும், வலியது வாழும் என்ற சித்தாந்தத்தின்படி, இவ்வளவு உலகளாவிய புகழும், பெரும்பணமும் ஈட்டக்கூடிய அளவுக்கு ஈர்ப்புடன் எழுதும் வலிமை வாய்ந்த அந்த நாவலாசிரியைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். //

ஆமாங்க. இதுதான் இன்றைய உண்மை. அந்த எழுத்தாளர் மிகுந்த சிரமப் பட்டிருக்காங்க. இந்தப் புத்தகத்த எடுத்துக்கிட்டு கடகடையா ஏறி எறங்கீருக்காங்க. ஆனா யாரும் வாங்கலை. அப்புறம் ஒருத்தர் ஒத்துக்கிட்டாரு. இப்பப் பாருங்க...

said...

// நந்தா said...
ஜிரா.

பழசுன்னா நீங்க 1975 களில் வந்த King Arthur, the Young Warlord ஐ சொல்கிறீர்களோ??? //

இருக்கலாம் நந்தா. ஆனா அது ரொம்பப் பழைய படமாட்டமா இருந்தது. ஆர்தர்னு இருக்கேன்னு வாங்குனேன். ஆனா பாக்க முடியலை. பயங்கர கடி.

// நான் சொல்வது 2004ல் TouchStone Pictures ஆல் தயாரிக்கப்பட்ட கிங் ஆர்தர். எனக்கு மிகவும் பிடித்துப் போன படம்.

ஓரளவு வரலாற்று சம்பவங்களை வைத்து தயாரிக்க்கப்பட்ட படம் என்றாலும் ஒரு சிலர் இதில் புனைவுகள் அதிகம் என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ 2 மணி நேரம் நம்மை அசைய விடாமல் வைக்கும் வெகு நிச்சயமாக. முடிந்தால் பாருங்கள். நானே DVD யில்தான் பார்த்தேன். //

ஓ ஆமால்ல. ஒரு படம் சமீபத்துல வந்ததே. கையில கத்தியோட ஒரு பொண்ணு நிக்குற மாதிரி படம் போட்டிருந்துச்சுன்னு நெனைக்கிறேன். :) அது பாத்ததில்லை. அடுத்து பார்க்கனும். அறிமுகத்துக்கு நன்றி நந்தா.

// tbr.joseph said...
ராகவன்,

நானும் முதல் மூன்று புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆனால் இத்தனை புகழ் பெறும் அளவுக்கு அத்தனை ஸ்பெஷல் இல்லையென்பது என்னுடைய தாழ்மையான(!) அபிப்பிராயம்.

எல்லாம் இந்த மீடியா செய்கிற வேலை.//

:) இருக்கலாம் சார். சுவைகள் பலவிதம். அதில் இது ஒருவிதம். ஆனா நான் புத்தகம் படிக்கத் தொடங்குனப்போ இப்ப இருக்குற hype and craze கெடையாது. இன்னும் சொல்லப் போனா கடைக்குப் போய்க் கேட்டா புத்தகமும் இருக்காது. ஒரு வாரம் கழிச்சு வந்து வாங்கிக்கச் சொன்னாங்க. இப்பப் பாருங்க...

// ஆனா ஒன்னு பாருங்க எங்க அப்பார்ட்மெண்ட் வாசல்ல ஒரு ஃபுட் வேர்ல்ட் இருக்கு... நாலு பில்டிங் தள்ளி ஸ்பென்சர் இருக்கு. ரெண்டுலயும் சுமார் முப்பது புஸ்தகங்கள அடுக்கி வச்சிருக்காங்க.. ரெண்டு, மூனு நாளா பாக்கறேன். யாருமே சீந்தக் காணம். இத்தனைக்கும் எங்க அப்பார்ட்மெண்டுலயே ஏறக்குறைய அம்பது இளைய தலைமுறையினர் இருக்காங்க... //

ஜோசப் சார்..இங்க ஒன்னு யோசிக்கனும். புட்வோர்ல்டுல கேசட்டுகளும் சிடிகளும் இருக்கும். இருந்தாலும் யாரும் வாங்க மாட்டாங்க. புத்தகம் வாங்குறவங்க புத்தகக் கடைல வாங்கத்தான் விரும்புவாங்க. புட்வோர்டுல இல்ல. ஒடிசி, லேண்ட் மார்க்கு போய்தான் வாங்கீருப்பாங்க. அவங்கதான் கொஞ்சம் டிஸ்கவுண்ட் குடுப்பாங்க. புட்வோர்ல்டு, ஸ்பென்சல்ஸ் குடுக்காது.

said...

புத்தகம் வாங்கி படிக்க இன்னும் நேரம் வரவில்லை. ரொம்ப டைட். answers.com-ல் ஒரு சினாப்ஸிஸ் போட்டிருந்தார்கள். இப்பொழுது தூக்கி விட்டார்கள் போலும். cache-ல் இருந்து படித்துக் கொள்ளலாம். இளவஞ்சியின் பதிவில் கூட அதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

Order of Phoenix-ல் வால்டிமோர்டின் தாய் தந்தையரைப் பற்றி விரிவாக வருமே. படம் இன்னும் பார்க்கவில்லை.

பின்னூட்டங்கள் பார்க்கும் பொழுது தமிழ் பதிவர்கள் மத்தியில் ஹாரி போர்ட்டர் பிரபலம் ஆகவில்லை போல் தெரிகிறது :-)).

said...

நேத்து வால்மார்டில பாக்குறப்ப 14$ போட்டிருந்தது. இன்னொரு கடையில 35$ போட்டிருந்தது. 14ஏ அதிகம் என்று பேசாமல் வந்துவிட்டேன். இங்கே அரசு நூலகத்துல 30 பிரதி வாங்கியிருக்கிறதா செய்தித்தாளில் படிச்சேன். அதனால ஒரு வருடம் சென்ற பின்னர் கட்டாயம் இதனைப் படித்துவிடலாம் என்று நினைத்தேன். :-)

இணையப் பிரதி கிடைக்கிறதா சொல்லியிருக்கீங்களே?! எங்கே கிடைக்கும்? இங்கே பொதுவில சொல்ல வேண்டாம் என்றால் மின்னஞ்சலில் சொல்லுங்க. நேரமும் கிடைத்து சுவையாகவும் தோன்றினால் தொடர்ந்து படிக்கிறேன்.

said...

// Sridhar Venkat said...

பின்னூட்டங்கள் பார்க்கும் பொழுது தமிழ் பதிவர்கள் மத்தியில் ஹாரி போர்ட்டர் பிரபலம் ஆகவில்லை போல் தெரிகிறது :-)). //

ஆமாங்க. அதான் என்னால தாங்க முடியலை. :( இப்ப நான் இந்தியாவுல இருக்குற நண்பர்களோட தெனமும் செயின் மெயில்கள் வழியா கதையைப் பத்திக் கதையடிக்கிறோம். ம்ம்ம்...வலைப்பூ நண்பர்களுக்குக் கொடுத்து வைக்கலை.

// குமரன் (Kumaran) said...
நேத்து வால்மார்டில பாக்குறப்ப 14$ போட்டிருந்தது. இன்னொரு கடையில 35$ போட்டிருந்தது. 14ஏ அதிகம் என்று பேசாமல் வந்துவிட்டேன். இங்கே அரசு நூலகத்துல 30 பிரதி வாங்கியிருக்கிறதா செய்தித்தாளில் படிச்சேன். அதனால ஒரு வருடம் சென்ற பின்னர் கட்டாயம் இதனைப் படித்துவிடலாம் என்று நினைத்தேன். :-) //

ஆ!!!! 14 டாலாரா! இது கொடுமை. நான் 20 யூரோ குடுத்து வாங்கீருக்கேன். இவ்வளவு சல்லிசா கிடைக்குறப்போ...சரி விடுங்க. நீங்க குடும்பி.

புத்தகங்கள் எங்க இருக்குன்னு தெரியலைங்க. ஸ்ரீதர் வெங்கட்தான் தரனும். :)

said...

Big apology for not writing in tamil. Still getting familiarized with kalapai.

I couldn't find much discussions about Harry Potter in tamil blogs.

Your blog summarized all the books in a very nice way.

The last book in the series is mind blowing. It brings closure to lots of unanswered things. But for an avid Harry Potter reader, its never enough..

Looking fwd. to see more discussions on the last book.

said...

ஜிரா,

நான் மேலே சொன்னபடி answers.com-ல அழகாக சினாப்சிஸ் கொடுத்திருந்தார்கள். இப்பொழுது தூக்கிவிட்டார்கள் போலும். cache-ல் கிடைக்கலாம். வேண்டுமென்றால் தனி மெயிலில் அனுப்பி வைக்கிறேன். உங்க மெயிலார்ட்ட படிக்க சொல்லி கேட்டுக்கோங்க :-)

மின் புத்தகம் தேடிகிட்டுதான் இருக்கேன். கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன். :-) நீங்களும் கிடைத்தால் தாருங்கள்.

எனக்கு படங்களும் பிடித்திருந்தது. ஆனால் புத்தகத்தில் படிக்கும் பொழுது நாம் நிதானமாக அனுபவிக்க முடியும் அந்த உலகத்தை.

said...

இந்த புத்தகம் வெளியிடபட்ட சமயத்தில் மக்களுக்கு பல கவுன்சிலிங் மையங்களை திறந்தார்களாம். காரணம் இந்த புத்தகம் மக்கள் மனதை அந்த அளவிற்கு பாதித்திருக்கிறது.

said...

அடக் கடவுளே.. நான் சும்மா வெறியோட வாசிச்ச கதைபின்னாடி இப்படி ஒரு தீம் இருக்கெண்டு இப்பத்தான் தெரிஞ்சுது... நன்றி அண்ணா...

நீங்க சொன்னமாதிரி படம் சும்மா பார்க்கலாம். ஆனால் புத்தகத்துடன் ஒப்பிட்டால் வெறும் சப்பைதான்!!!!

said...

வோல்டேமார்ட்(Voldemort). தன்னை Pure Bloodன்னு சொல்லிப் பெரிய ஆளா வர்ரான்

Voldermart, like harry is not pure blood

said...

// இடிச்சாத்தான் ஒரைக்கும் சுக்கும் மிளகும். படிச்சாத்தான் பிடிக்கும் ஹாரிபாட்டரும் லார்டு ஆஃப் தி ரிங்ஸ்-சும்னு.....தூத்துக்குடியில ஒரு கெழவி சின்ன வயசுல சொல்லிக் கேட்டிருக்கேன்//
:-) :-) நல்ல பழமொழி..

said...

நல்ல ஏழு கதைச் சுருக்கம். நன்றி.

said...

I saw all the five parts but it didn't inspired me that much..however I am going to read the story now..Thanx so much..