Saturday, September 08, 2007

தமிழ் ஊடு கேளுங்க....

ஊடு கட்டி அடிக்கப் போறதா பயந்துக்கிறாதீங்க....ஊடுன்னா தெரியுந்தானே...மந்திரம் மாந்திரீகம் மாதிரி. அப்படித் தமிழ்ல ஊடு கட்டி அடிச்சா எப்படியிருக்கும்?

சுசீலா ராமன்னு ஒரு தமிழ்ப் பொண்ணுதான்...இப்பிடி ஊடு கட்டி அடிச்சது. அதுவும் பாரீஸ்ல. கூட யார்னு நெனைக்கிறீங்க? கோவை கமலா. சேது படத்துல "கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்ரியா வர்ரியா"ன்னு பாடுனாங்களே. அவங்கதான். கே.பி.சுந்தராம்பாள் மாதிரிப் பாடுவாங்களே...அவங்கதான். அவங்களும் சுசீலா ராமனும் ஊடு கட்டி அடிச்சதுதான் இந்தத் தமிழ் ஊடு. பாரீஸ் மக்களுக்கு இப்பிடி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.

உள்ளபடிக்கு இத முருகனருள்ளதான் போட்டிருக்கனும். ஆனாலும் மகரந்தத்துல போட்டாச்சு. மக்களே. கேட்டு ரசிச்சி...உங்க கருத்துகளை அள்ளி விடுங்க பாக்கலாம். வேலவா.............!!!!!!!!!!!!!!



அன்புடன்,
கோ.இராகவன்

22 comments:

said...

ராகவா!
இந்த பாரிஸ் மக்களின் ரசனையே புதுமையானதே!!
அருணா சாயிராம்,லதா மங்கேஸ்கார்,இந்த சுசிலா எல்லாம் ரசிப்பவர்கள் உள்ளார்கள்.
அதுவும் இவர் மகா கணபதிம், காமாட்சி காமகோடி.. எனும் தீட்சிதர் கீர்த்தனைகளைப் பிச்சு உதறுவார்.(அதில் எனக்கு உடன் பாடில்லை,ஆனாலும் நம்ம தமிழ்நாட்டு சங்கீதக் காவலர்கள் கண்டு கொள்வதாகவில்லை)
நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
இவர் 'சல்ட் லேக்' என்னு அல்பம் விட்டுள்ளார்.

said...

ஜிரா,

சூப்பர்.. நான் இரசித்தேன்..

நன்றி!

said...

பாட்டப் பார்த்தேன்
இப்போதைக்கு ;-)))

said...

அடாடா!!
இது மாதிரி ஒரு பாட்டு இது வரைக்கும் கேட்டதில்லை!!
எங்கிருந்து தலைவா இதெல்லாம் பிடிக்கறீங்க?? :-D

said...

நல்லாத்தான் ஊடு கட்டி ஆடிப் பாடியிருக்காங்க இராகவன். நீங்கள் பாரிஸுக்குப் போகவில்லையா? ஆடிப்பாடவில்லையா?

said...

கண்ணை மூடிக்கிட்டு கந்தனைக் கும்பிடவேண்டிய நீர் இப்படி கண்ட ஆட்டமெல்லாம் பார்க்கலாமாய்யா?!!! ஆள் வெளியூர் போயி ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டீரு!

பயமா இருக்குடே!!

said...

ஏதோ, எழவு ஊட்டுக்கு போனா மாதிரி இருக்கு. ஒன்னுமே புரியல.

ஆனா நான் தமிழ்ல சிந்திக்கிறத மட்டும் உங்களால தடுத்து நிறுத்த முடியாது

said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
இந்த பாரிஸ் மக்களின் ரசனையே புதுமையானதே!!
அருணா சாயிராம்,லதா மங்கேஸ்கார்,இந்த சுசிலா எல்லாம் ரசிப்பவர்கள் உள்ளார்கள்.
அதுவும் இவர் மகா கணபதிம், காமாட்சி காமகோடி.. எனும் தீட்சிதர் கீர்த்தனைகளைப் பிச்சு உதறுவார்.(அதில் எனக்கு உடன் பாடில்லை,ஆனாலும் நம்ம தமிழ்நாட்டு சங்கீதக் காவலர்கள் கண்டு கொள்வதாகவில்லை)
நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
இவர் 'சல்ட் லேக்' என்னு அல்பம் விட்டுள்ளார். //

வாங்க யோகன் ஐயா...நீங்க அங்கயேதான இருக்கீங்க. ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கனுமே. அதான் தெரிஞ்சிருக்குதே. சுசீலா ராமன்னு பேரு கேள்விப்பட்டிருக்கேன். இப்பத்தான் பாக்குறது...கேக்குறது எல்லாம். அந்த சால்ட் லேக்கு எங்க இருக்குன்னு தேட வேண்டியதுதான். திருப்புகழ் புத்தகத்தோட பாரீசுக்கு அக்காவைப் பார்க்க வரவேண்டியதுதான். :)))

said...

அங்கே போயும் 'அரோகரா'தானா?

இவங்கள திருத்தவே முடியாது போல இருக்கு!

பொழுது போக்கு கேளிக்கை கூத்துகள் நல்லாவே இருக்கு.

இதே போல தமிழ்நாட்டுல புதுவையில ஏதாவது ஒரு சேரியில போய் வேசம் கட்டி டான்சு ஆடுமா இந்த பொம்பள?

கேட்டு பாக்கனும்.

வெளிநாடுன்னா, அதுவும் வெள்ளைத்தோல் நாடுன்னா, இதையும் செய்வாங்க, இதுக்கு மேலும் செய்வாங்க.

அரோகரா!

said...

// சிவபாலன் said...
ஜிரா,

சூப்பர்.. நான் இரசித்தேன்..

நன்றி! //

நானும் ரசிச்சேன். ஹி ஹி சாமி வராததுதான் குறை. எதுக்கும் இருக்கட்டும்னு துந்நூறு மஞ்சத்தண்ணி எல்லாம் எடுத்து வெச்சிருந்தேன்.

// கானா பிரபா said...
பாட்டப் பார்த்தேன்
இப்போதைக்கு ;-))) //

பொறுமையா ரசிச்சிப் பாக்கப் போறீங்கன்னு சொல்றீங்க. அதான? ;)

said...

// CVR said...
அடாடா!!
இது மாதிரி ஒரு பாட்டு இது வரைக்கும் கேட்டதில்லை!!
எங்கிருந்து தலைவா இதெல்லாம் பிடிக்கறீங்க?? :-D //

அதெல்லாம் ரகசியம். மயிலார் கொண்டாந்து குடுத்தாருன்னா சொல்ல முடியும். ;)

// குமரன் (Kumaran) said...
நல்லாத்தான் ஊடு கட்டி ஆடிப் பாடியிருக்காங்க இராகவன். நீங்கள் பாரிஸுக்குப் போகவில்லையா? ஆடிப்பாடவில்லையா? //

தெரியாமப் போச்சே குமரன். தெரிஞ்சிருந்தா அங்க போய் அரகரான்னு ஒரு ஆட்டம் போட்டிருக்கலாம். ம்ம்ம்...கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு மனசத் தேத்திக்கிட்டேன்.

said...

// இலவசக்கொத்தனார் said...
கண்ணை மூடிக்கிட்டு கந்தனைக் கும்பிடவேண்டிய நீர் இப்படி கண்ட ஆட்டமெல்லாம் பார்க்கலாமாய்யா?!!! ஆள் வெளியூர் போயி ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டீரு!

பயமா இருக்குடே!! //

பயப்படாதீங்க கொத்ஸ். எங்கும் முருகனே. எதிலும் முருகனே. அப்ப இதிலும் முருகனே!!!! முருகா! முருகா!

// ILA(a)இளா said...
ஏதோ, எழவு ஊட்டுக்கு போனா மாதிரி இருக்கு. ஒன்னுமே புரியல. //

ஒன்னும் புரியலையா? முருக உபாசனை உமக்குப் புரியலையா? அரகரா மந்திரம் தெரியலையா? "கோவை" கமலா பாடுறது கூடவா காதுல விழல?

// ஆனா நான் தமிழ்ல சிந்திக்கிறத மட்டும் உங்களால தடுத்து நிறுத்த முடியாது //

அதை ஏன் நான் தடுக்கப் போறேன். அதென்ன அணுஆயுதப் போரா? இல்ல சுனாமியா? குறுக்க விழுந்து தடுக்குறதுக்கு. ஆனா ஒன்னு...நீங்க சுனாமி சிந்தனையாளர்தான். சுனாமியார் இளா வாழ்க வாழ்க.

said...

ராகவா!
இவர் ஒஸ்ரேலியாவில் வாழும் தமிழக ஐயர் பெண், இப்போ அமெரிக்கரை மணந்துள்ளார். இவர் தாயார் சங்கீதஞானமுள்ளவர்.
வருடா வருடம் பாரிசிலும் கச்சேரி(துள்ளு) செய்வார். ஒல்லாந்து கூட வருவார். ஐரோப்பிய சுற்றுப் போடுவார். கஞ்சா மன்னர்கள் அதிகம்
இவர் ரசிகர்கள். அதனால் ஒல்லாந்து தப்பது.

said...

மேளம், நாதசுவரம், தமுக்கு, பறை, கிடார்... ஃபியூஷன்..

இசையின் புதிய திசையிலேறி வரும் வேலவனுக்கு அரோகரா... :)

said...

Ragavan,
Ahaa.
Ippadikkooda Murukanai azhaikka mudiyumaa.

Guitar veku arumai.
saamiyaattam....saamiiii AAAttam.

kadavuLE UNNAI NEEYE KAAPPAATHTHIKKO.

siricchu siricchu narambuth thaLarcchiye vanthuttathu.

Ahaa enna otu puththuNarvup paadal.

Avanga peru Suseelaa vaa.
Aiyyo paavam:))))

said...

// மாசிலா said...
அங்கே போயும் 'அரோகரா'தானா?

இவங்கள திருத்தவே முடியாது போல இருக்கு!

பொழுது போக்கு கேளிக்கை கூத்துகள் நல்லாவே இருக்கு.

இதே போல தமிழ்நாட்டுல புதுவையில ஏதாவது ஒரு சேரியில போய் வேசம் கட்டி டான்சு ஆடுமா இந்த பொம்பள?

கேட்டு பாக்கனும். //

ஆடுனாலும் ஆடுவாங்க. ஆனா யாரும் வெளக்கமாறு கொண்டு வராம இருக்கனும்.

// வெளிநாடுன்னா, அதுவும் வெள்ளைத்தோல் நாடுன்னா, இதையும் செய்வாங்க, இதுக்கு மேலும் செய்வாங்க.

அரோகரா! //

செய்யட்டும்....அந்தம்மா ஆடுறதும் பாடுறதும்...அருள் வந்து ஆடுறதும்..ஹி ஹி...நான் ஒன்னும் சொல்லலை.

said...

நாலைஞ்சு முறை கேட்டுட்டேன் ஜிரா!

முதல் முறை பயமா இருந்திச்சி!
ரெண்டாம் முறை முருகா-னு கூவின பகுதி மட்டும் பிடிச்சி இருந்திச்சி.

மூன்றாம் முறை தவில் பட்டைய கெளப்பிச்சி!
நான்காம் முறை வேலவா....வேல் அவா...Well அவா...ஐ லைக் இட்! :-))

said...

பாட்டு ஒரு பக்கம் இருந்தாலும்....ரெண்டு பேரோட நடனத்தை பார்த்த ஒரே சிரிப்பு தான் ;-))))

முருகா....

said...

காலத்திற்கேற்ப காட்சிகள் அரங்கேறுகின்றன. நாளைய தலைமுறைக்கு ஏற்ற 'பக்தி'ப் பாடல் ! பெருசுகள் ஒதுங்கிக் கொள்ளணும் தான்.

said...

ithu inga tahhn pondicherryla eduthhanga,hindula kooda vanthuirukku hindu sutti tharen
http://www.hindu.com/2007/01/26/stories/2007012601800200.htm

said...

firewall block. veetuku ponathum thaan parkanum :)

said...

//Dreamzz said...
firewall block. veetuku ponathum thaan parkanum :) //

ஆகா, தீ கொழுந்து விட்டு எறிந்த சென்னிர மண்டலத்தின் அதிபதி வேலவாக்கே ஃபையர்வோல் ஃப்லோக்கா!!! :-)))))

வெற்றிவேல் முருகனுக்கு அரகரா

......................................

எது எப்படியோ, பூமியில் ஒரு ஐம்பதாயிரம் மக்களை ஒரு நிமிடமாவது வேலவனை நினைக்க வைத்த கமலா ஆன்டிக்கும் சுசியக்காவுக்கு நன்றிகள் கோடி

பதிவு போட்ட கோ.ராகவன் சாருக்கும்தான்

வள்ளி வீட்டுகாரருக்கு அரகரா