Monday, September 24, 2007

காதல் குளிர் - 1

"ஏய் ப்ரகாஷா......லேப்டாப்புக்குள்ளயே போயிறாத. மண்டைய வெளியவும் நீட்டு. நான் நாளைக்கு டெல்லிக்குப் போறேன். அதான் சொல்லலாம்னு வந்தேன்."

ப்ரகாஷா என்று அழைக்கப்பட்டவன் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான். பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் சூர்யா போல இருப்பான். அதென்ன போல. சூர்யா என்றே வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுக்கும் கற்பனை செய்வதற்கு எளிதாக இருக்கும்.

"ஹே! ரம்யா....வா வா உக்கார். டெல்லிக்கு என்ன திடீர்னு ப்ரயாணம்?"

அவனைச் சூர்யா என்று சொல்லி விட்டோம். அப்படியானால் ரம்யா? அசின்....வேண்டாம். வேண்டாம். ஜோதிகா என்றே வைத்துக் கொள்வோமே.

இப்பொழுது புரிந்திருக்குமே. அவன் கதாநாயகன். அவள் கதாநாயகி. அடுத்து காதல்தான். அவ்வளவுதான் கதை. ஆனால் அது எப்படி நடக்கின்றது என்று கதை முழுக்க படித்துத் தெரிந்து கொள்வோமே.

ப்ரகாஷாவும் ரம்யாவும் பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள். இருவரும் லீட் பதவியில் இருப்பவர்கள். தமிழ் இலக்கணப்படி சொன்னால் அவர்கள் வேலை மேய்த்தலும் மேய்க்கப்படுவதும். இவர்களிடம் இவர்களது மேனேஜர்கள் வேலை வாங்குவார்கள். அது மேய்க்கப்படுவது. இவர்கள் இருவரும் தங்களுக்குக் கீழ் ஒரு சிறிய கூட்டத்தை வைத்து வேலை வாங்குவார்கள். அது மேய்த்தல்.

வழக்கமாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன் தமிழாகவும் கதாநாயகி வேறு மொழியாகவும் இருப்பார்கள். ஆனால் காதல் குளிரில் வேறு மாதிரி. ப்ரகாஷா கன்னட மகா. ரம்யா தமிழச்சி.


வேலையில் சேரும் பொழுதுதான் முதற் பழக்கம். கடந்த நான்கரை வருடங்களில் இருவரும் இவ்வளவு தூரம் வேலையிலும் நட்பிலும் முன்னேறியிருக்கின்றார்கள். இருவரும் காதலிக்கின்றார்களா என்று கேட்டால்....ஆமாம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.

உள்ளுக்குள் காதல் உண்டு. ப்ரகாஷாவிற்குத் தன் காதல் புரிந்தது விட்டது. ரம்யாவிற்கு அது இன்னமும் தெளிவாகப் புரியவில்லை. அவ்வளவுதான் விஷயம். அதைப் புரிய வைக்கத்தான் ப்ரகாஷாவும் படாதபாடு படுகிறான்.

ரம்யா ப்ரகாஷாவின் க்யூபிக்கிளில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

"என்ன திடீர்னு டெல்லி?" திரும்பவும் ரம்யாவைக் கேட்டான்.

"அட. அதுவா...நம்ம ஹெச்.ஆர் இருக்காங்கள்ள.....அதாம்ப்பா நல்லாயிருக்குறவங்களையெல்லாம் நம்ம கம்பெனியில சேத்து அவங்க வாழ்க்கையப் பாழடிக்கிறாங்களே....அவங்க டெல்லியில இருக்குற பலரோட வாழ்க்கைய வீணடிக்கனும்னு அங்க இண்டர்வியூ வெச்சிருக்காங்களாம். அதுக்குப் போகனும்னு கேட்டு மெயில் அனுப்பீருந்தாங்க. நானும் சரீன்னு சொல்லீட்டேன். ஆனா ஒரு கண்டிஷனோட. அது என்னன்னு தெரியுமா?" கேட்டு விட்டு ப்ராகாஷின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"என்னது?" அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. இண்டர்வியூ ஞாயித்துக்கெழமை. ஆனா எனக்கு வியாழக் கெழமை நைட்டே பிளைட் புக் பண்ணனும்னு கண்டிஷன். வெள்ளிக்கிழமை லீவு. அது ஏன்னு தெரியுமா?" திரும்பவும் ப்ரகாஷாவின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"ஏன்?" மறுபடியும் அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. நொய்டால யாரு இருக்காங்க? சப்யாவும் சித்ராவும் இருக்காங்கள்ள. அவங்க ரெண்டு பேரும் நொய்டா போய் ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. அதுக்கப்புறம் ஃபோன்ல பேசிக்கிறதோட சரி. மெயில் அனுப்புறதோட சரி. இந்த இண்டர்வியூவச் சாக்கா வெச்சுக்கிட்டுப் பாத்திரலாம்ல. அதான். வெள்ளியும் சனியும் அவங்களோட சுத்தீட்டு ஞாயித்துக்கெழம இண்டர்வியூ எல்லாம் எடுத்திட்டு திரும்பவும் பெங்களூர். எப்படிப் பிளான்?" முகத்தை பொம்மை போல வைத்துக் கொண்டு கேட்டாள்.

அவளுடைய முகத்தைப் பார்த்துக் கஜினி சூர்யா போல ஷார்ட் டெர்ம் மெமரி லாசுக்குப் போனான். அவனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பீ.பி.ஸ்ரீநிவாஸ் பாடினார். "நின்ன கண்ண கண்ணடியல்லி கண்டே நன்ன ரூபா (உந்தன் கண்ணின் கண்ணாடியிலே கண்டேன் எந்தன் ரூபம்)"

"ஏய்...என்ன பாத்துக்கிட்டேயிருக்க.... பொறாமையா இருக்கா? நான் போய் சப்யாவையும் சித்ராவையும் பாக்கப் போறேன்னு? சரி....எனக்கு வேலையிருக்கு. இதச் சொல்லலாம்னுதான் வந்தேன். வர்ரேன்....." சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் போனாள் ரம்யா.


யாரிந்த சப்யாவும் சித்ராவும்? இவர்களும் ரம்யா ப்ரகாஷாவோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள்தான். ச்ப்யாவின் முழுப்பெயர் சப்யாசாச்சி. பெங்காலிப் பையன். மிஸ்டர் அண்டு மிசஸ் ஐயர் படத்தில் நடித்த ராகுல் போஸ் போல இருப்பான். சித்ரா பெங்களூர் தமிழ். அதே மிஸ்டர் அண்டு மிசஸ் படத்தில் நடித்த கொன்கொனா சென் போல இருப்பாள். இனிமேல் இவர்களை அவர்களாகவே உருவகம் செய்துகொள்ளுங்கள். இருவரும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டு நொய்டாவிற்குப் போய் விட்டார்கள். இருவர் வீட்டிலும் நிறைய பிரச்சனைகள் இருந்ததால் நொய்டாவில் வேலை தேடிப் போய் விட்டார்கள். இருவர் வீடுகளுக்குமே அது தொலைவுதான். அந்தத் தொலைவு இருவர் வீட்டாரிடமும் நன்றாகவே வேலை செய்தது. குழந்தை பிறந்ததும் இருவீட்டுப் பிரச்சனைகளும் தீர்ந்தும் போனது.

எப்பொழுதும் ஒன்றாகவே இருந்த கூட்டணி இப்பிடிப் பிரிந்து ஒன்று மத்திய அரசாங்கமாகவும் மற்றொன்று மாநில அரசாங்கமாகவும் மாறிப் போனது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தப்படி ஃபோனிலும் மெயிலிலும் விடாத தொடர்பு. ஆனால் ரம்யாவும் சரி..ப்ரகாஷாவும் சரி...நொய்டா சென்று பார்க்கவேயில்லை. இப்பொழுது ரம்யாவிற்கு அலுவலகம் வழியாக ஒரு வாய்ப்பு. ஆகையால் அவளுடைய கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்.

தொடரும்...

இந்தக் கதையில் இதே நடிகர்களை நினைவில் வைத்துப் படியுங்கள். இந்தக் கதைக்காகப் படங்களைத் தேடுக் கொடுக்கும் தேவ், ராம், சிவிஆருக்கு என்னுடைய நன்றிகள். கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கருதினால் அந்தப் படத்தினை எனக்கு நீங்களும் அனுப்பலாம்.

26 comments:

said...

சூப்பரு அண்ணாத்த!!
ஆரம்பத்துலையே உங்க வர்ணனை கலக்குது!!

சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!!!! :-)

said...

நல்ல ஆரம்பம். நடத்துங்கண்ணா.

said...

உங்களுக்கான படங்கள் எனது பதிவில்

http://kalaaythal.blogspot.com/2007/09/92_24.html

said...

ஜிரா,


இந்த தொடர்கதைக்கு தானா அந்த படங்கள் எல்லாம்.... ???


அடுத்த பகுதி எப்போ??? :)

said...

Rahul.. wow..

Mr and Mrs Iyer படத்தின் பாதிப்பு வருதே. பரவாயில்லியா? காட்டுக்குள்ள போகப்போறாங்களா?

said...

Rahul.. wow..

Mr and Mrs Iyer படத்தின் பாதிப்பு வருதே. பரவாயில்லியா? காட்டுக்குள்ள போகப்போறாங்களா?

said...

// CVR said...
சூப்பரு அண்ணாத்த!!
ஆரம்பத்துலையே உங்க வர்ணனை கலக்குது!!

சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!!!! :-) //

அடுத்த பகுதி அடுத்த வாரந்தான். :) பொறுமை சி.வி.ஆர். பொறுமை.

// இலவசக்கொத்தனார் said...
நல்ல ஆரம்பம். நடத்துங்கண்ணா.//

சரிங்கண்ணா :)

said...

i feel this style - forcing the readers to visualize the real life characters spoil the imagination-every novel should be a personal expereince for each reader. well its done now - goodluck :)

said...

// இராம்/Raam said...
ஜிரா,


இந்த தொடர்கதைக்கு தானா அந்த படங்கள் எல்லாம்.... ???


அடுத்த பகுதி எப்போ??? :) //

ஆமா...இதே கதைக்குத்தான் படங்கள். அடுத்த பகுதி அடுத்த திங்கள் :)

// ILA(a)இளா said...
Rahul.. wow.. //

ஆமாங்க. அவருதான் இந்திய ரக்பீ டீம் கேப்டனாமே.

// Mr and Mrs Iyer படத்தின் பாதிப்பு வருதே. பரவாயில்லியா? காட்டுக்குள்ள போகப்போறாங்களா? //

பாதிப்பா? எங்கங்க? வராதுங்க. அப்படித்தான் நானும் நம்புறேன்.

said...

ஜி.ரா. சில்லுன்ன்னு ஆரம்பிச்சு இருக்கீங்க... குளிர் அடிக்க காத்திருக்கோம்... அடுத்தப் பாகம் எப்போ?

said...

:) adutha part kaka waiting

said...

சூப்பர் ஆரம்பம்...ஜோடி பொருத்தம் எல்லாம் கலக்கல்.... ;))

said...

// pandaram said...
i feel this style - forcing the readers to visualize the real life characters spoil the imagination-every novel should be a personal expereince for each reader. well its done now - goodluck :) //

உண்மதான் பண்டாரம். ஒரு கதையைப் படிக்கும் பொழுது நாமே அனைத்தையும் மனதிற்குள் உருவாக்குவதும் ஒரு இன்பம். ஆனால் இது ஒரு நாவல்டிக்காக அப்படிச் செய்தது.

said...

// தேவ் | Dev said...
ஜி.ரா. சில்லுன்ன்னு ஆரம்பிச்சு இருக்கீங்க... குளிர் அடிக்க காத்திருக்கோம்... அடுத்தப் பாகம் எப்போ? //

நல்ல கேள்வி. அடுத்த திங்கள்தான். வேறெப்போ

// துர்கா|thurgah said...
:) adutha part kaka waiting //

நானுந்தான்..காத்திருக்கேன்

said...

என்னை ஹீரோவா போட்டதுக்கு நன்றி!

said...

தொடக்கம் நல்லாவே இருக்குங்ணா...

ஆமா நீங்க கூட போன வருஷம் ஆள் எடுப்புக்காக புது தில்லி போனீங்க இல்லையா? ச்சும்மா கேக்கணும்னு தோணுச்சி..அதான் கேட்டேன்..

said...

// பேரழகன் said...
என்னை ஹீரோவா போட்டதுக்கு நன்றி!//

வாங்க பேரழகன். நீங்கதான் கதாநாயகர். ஜோதிகாதான் கதாநாயகி. அத மாத்த மாட்டோம்ல. இல்ல...வேற யாரும் கதாநாயகி மாத்தனுமா? ;)

// சுதர்சன்.கோபால் said...
தொடக்கம் நல்லாவே இருக்குங்ணா...

ஆமா நீங்க கூட போன வருஷம் ஆள் எடுப்புக்காக புது தில்லி போனீங்க இல்லையா? ச்சும்மா கேக்கணும்னு தோணுச்சி..அதான் கேட்டேன்..//

ஏய்யா இப்பிடி? ஒம்ம நினைவாற்றலைப் பாராட்டுறேன். இதுக்காக் மொட்டைத்தலைக்கும் இமயமலைக்கும் முடிச்சுப் போடக்கூடாதேய்...அப்புறம் லண்டன் பார்க்குல நடக்குற மேட்டர்கள் போட்டோக்களோடு வெளிவரும் என்பதை மிகத்தாழ்மையும் தெரிவித்துக் கொள்கிறேன். :)

said...

kalakkalaa vanthirukku muthal paagam. :-)

ethukku surya padamellaam. athukkuthaan maddy padam irukke. ungge profile'le. ;-)

said...

ஜிரா
கதை சுவாரஸ்யமான துவக்கம்! இன்னும் குளிரலைன்னாலும் தூறல் தெறிச்சிருச்சி!

//அட. அதுவா...நம்ம ஹெச்.ஆர் இருக்காங்கள்ள.....அதாம்ப்பா நல்லாயிருக்குறவங்களையெல்லாம் நம்ம கம்பெனியில சேத்து அவங்க வாழ்க்கையப் பாழடிக்கிறாங்களே//

ஜிரா...
யார் மேலயாச்சும் ஒங்களுக்குக் கோபமா? :-)
ஆனா கோபப்பட்டா தான் உண்மை பேச முடியும்! :-))

//கதைக்காகப் படங்களைத் தேடுக் கொடுக்கும் தேவ், ராம், சிவிஆருக்கு என்னுடைய நன்றிகள்//

யார் யார் எந்தெந்த படத்தைக் கொடுத்தாங்கன்னும் சொல்லுங்க! அந்த வங்காளிப் பையன், பொண்ணு, கொழந்தை...நிச்சயம் சீவீஆராத் தான் இருக்கும்ண்ணேன்! :-)

said...

நானும் இந்தப் படத்துல உண்டா?

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
kalakkalaa vanthirukku muthal paagam. :-)

ethukku surya padamellaam. athukkuthaan maddy padam irukke. ungge profile'le. ;-) //

கிழிஞ்சது போ. நானும் சோதிகாவும் நிக்குறாப்புல படம் போட்டா....சூரியா கோவிச்சிக்கிற மாட்டாரா?

// மாயாவி said...
நானும் இந்தப் படத்துல உண்டா? //

இந்தப் படத்துல நீங்க இல்ல...ஆனா அடுத்த படத்துல நீங்கதான் கட்டாயமா ஈரோ. ஈரோயினி யார் வேணும்னு சொல்லுங்க. அவங்களையே புக்கு நோட்டு எல்லாம் செஞ்சிரலாம். :)

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
கதை சுவாரஸ்யமான துவக்கம்! இன்னும் குளிரலைன்னாலும் தூறல் தெறிச்சிருச்சி! //

தூறல் தெரிச்சிருச்சா...நாங்க சின்ன வயசுல குத்தாலம் போவோம். அப்ப தெங்காசி வரும் போதே சாரல் அடிக்கத் தொடங்கீரும். குத்தாலம் வரும் பின்னே சாரல் வரும் முன்னேன்னு இருக்கும். அந்த மாதிரியா?

// ஜிரா...
யார் மேலயாச்சும் ஒங்களுக்குக் கோபமா? :-)
ஆனா கோபப்பட்டா தான் உண்மை பேச முடியும்! :-)) //

ஆத்திரத்தையெல்லாம் மூட்டை கட்டி வெச்சாச்சு. இப்பல்லாம் அமைதியா இருக்கேன்.

// யார் யார் எந்தெந்த படத்தைக் கொடுத்தாங்கன்னும் சொல்லுங்க! அந்த வங்காளிப் பையன், பொண்ணு, கொழந்தை...நிச்சயம் சீவீஆராத் தான் இருக்கும்ண்ணேன்! :-) //

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

said...

காதல் ஜுரம் தானே வரும்????குளிர் வேறயா:))))

சொல்லுங்கப்பா...கேட்டுக்கிறோம்.
அடுத்தது எப்போ????

said...

கதை நல்ல ஆரம்பம்.. வாசிக்கும் போதே கற்பனையில் கதையோடுது... ஜோ, சூர்யா ஜோடியைத் தெரியும் ஆனால் அந்த மிஸ்டர் அன்ட் மிசஸ் ஐயர் (ஸ்மித் இல்லீயே?? :)) ஆளுங்களைத்தான் முன்னப்பின்னப் பார்த்ததில்லை....ஹிந்தி நடிகர்கள் என்று நம்புகின்றேன்.

அடுத்த பாகம் எழுதும் வரை காத்திருக்கின்றேன்.

said...

அருமையான ஆரம்பம்....அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.....

said...

ஆஹா... காதல் கத... ஐய்யா.. ஜாலிதான்... :))