Sunday, March 15, 2009

பிரியாணி - 4

பிரியாணி கிண்டி ரொம்ப நாளாச்சுன்னு. இப்பிடியே விட்டா பிரியாணி அண்டாவுல இறால் வளப்புல எறங்கனுமோன்னு தோணி... ஒரு பதிவு போட்டாச்சு.

சமீப காலத்துல ரொம்பப் பாதிச்சது ஈழம் தொடர்பான தமிழக இந்திய அரசியல்வாதிகளின் கேடுகெட்டத்தனமான அணுகுமுறைதான். மனசெரிஞ்சி சொல்றேன். ஒங்களுக்குக் கொஞ்சமாச்சும் தமிழ்மான உணர்வுன்னு ஒன்னு இருந்தா... காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூனு கட்சிகளுக்கும் ஓட்டுப் போடாதீங்க. அதுக்காக விஜயகாந்துக்குப் போடுங்கன்னு சொல்லலை. ஒங்கொங்க தொகுதியில இந்தக் கட்சிகளைத் தவிர்த்த வேட்பாளர்களில் பொருத்தமா யாருக்காச்சும் போடுங்க. போதுங்க. எத்தனை நாளைக்குத்தான் கட்சியப் பாத்து..சாதியப் பாத்து... மதத்தப் பாத்து ஓட்டுப் போடுவீங்க? கட்சி, மத, சாதீயப் பாசங்கள்ள மாட்டிக்கிட்டீங்கன்னா... அதுலருந்து வெளிய வரவே முடியாது.

ஜெயலலிதாவோட நடவடிக்கைகளை வெச்சுப் பாக்குறப்போ... எந்தவித"மான" மாற்றமும் அதிகுமல... சேச்சே அதிமுகல தெரியலை. காங்கிரஸ் கட்சி தன்னோட முடிவுல ஒரே உறுதியா இருக்குறாப்புல இருக்கு. ஈழத்துல எத்தாலி போனாலும் இத்தாலியம்மன் விடாப்பிடியா இருக்காங்க போல. நம்ம மட்டும் ஏன் விட்டுக் குடுக்கனும்? தமிழகத்துல காங்கிரஸ் கட்சி ஒரு இடத்துல கூட வெற்றி பெறக்கூடாது இந்த முறை.

திமுக.... அடப்பாவிகளா.... மத்தவங்க மேலையெல்லாம் எப்பவும் இருக்குற கோவந்தான். ஒங்க மேல இருக்குறது அறச்சீற்றம். ஏற்கனவே ஒங்க குடும்ப அரசியலக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கோம். நாளிதழ், தொலைக்காட்சி, சிமிண்ட்டு, திரைப்படம்... இப்பிடி தமிழ்நாட்டுத் தொழில்வளத்தையே குடும்பத்துக்குள்ள முடக்குனது மட்டுமில்லாம..... ஈழம் தொடர்பா அந்தக் காங்கிரசோட சேந்துக்கிட்டு ஆடுற ஆட்டம் இருக்கே......ஒங்களுக்கு போன தேர்தல்லயே பாதிப் பாடம் நடத்தியாச்சு. மீதிப் பாடம் இந்தத் தேர்தல்லதான்.

சரி... பிரியாணில அரசியல் மிளகாய் கூடிருச்சி. அடுத்து ஒரு சந்தேகத்துக்கு வருவோம். ஒரு வலைப்பூவில் இடும் பின்னூட்டத்தைப் பிரசுரம் செய்யும் உரிமை அந்த வலைப்பூவின் சொந்தக்காரருக்கு உண்டு. ஒத்துக்கிறேன். ஆனால் பின்னூட்டத்தை எழுதியவர்.. தன்னுடைய கருத்தைச் சொல்ல... மறுக்கப்பட்ட அந்தப் பின்னூட்டத்தைத் தன்னுடைய வலைப்பூவுல இடலாம்ல. அதத்தான் இங்க பண்றேன்.

உடன்பிறப்பின் இந்தப் பதிவில் நானிட்ட முதற்பின்னூட்டம்.

அரசியல்கட்சீன்னு வந்துட்டாலே... இப்படிப்பட்டக் காமெடிக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. இவங்கள நம்பி கொஞ்சம் ஏழ பாழைங்க கட போட்டுக் காசு பாத்தத நெனச்சிச் சந்தோஷம். இது எல்லாக் கட்சிகளுக்கும் பொதுன்னு நெனைக்கிறேன்.

ஆனா அதிமுகவுக்குன்னு விசேசக் காட்சிகள் இருக்கு. குறிப்பா அந்த மொதப் படம். கால்ல விழுந்து கும்புடுறது. தன்னுடைய காலில் விழுகின்றவனைப் புன்னகையோடு ரசிக்கும் பாங்கு....அவரது மனநிலையைச் சந்தேகிக்க வைக்கிறது.

அது கிடக்க. மானமுள்ளவன் அதிமுகவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததுதானே. ஈழத்துக்கான உண்ணாவிரதம் ஒரு நாடகம். ஜெயலலிதா தான் ஒரு நடிகை என்பதை திரும்பவும் நிரூபிக்கிறார். ஆனால் இந்த முறை மிக அசிங்கமாக.

இந்தப் பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் அதே பதிவில் வேறொரு கருத்துக்குப் பதிலளித்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நானிட்ட பின்னூட்டம் பிரசுரிக்கப்படவில்லை. அவருடைய உரிமையை மதிக்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய உரிமையை இங்கே நிலைநாட்டிக்கொள்கிறேன். ஆம். அந்தப் பின்னூட்டம் இங்கே.

// உடன்பிறப்பு said...

//// நந்தா said...
பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கெல்லாம் அதிமுக அப்படி பண்ணலையா, அம்மா பண்ணா மட்டும் சும்மா இருக்கீங்க கலைஞர்னா மட்டும் கேள்வி கேக்குறீங்க//

நன்றி நந்தா, இப்போ நீங்களே பாருங்க, நம்ம பத்ரி வந்து அ.தி.மு.க. உண்ணாவிரதத்துல மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குமா, மற்ற கட்சிகள் உண்ணாவிரதத்துல நடக்காதா என்று கேட்கிறார். இது மாதிரி கேட்கிறவர்கள் எல்லா கட்சி சார்பாகவும் இருக்கிறார்கள் //

நண்பரே... இத்தகைய வாதங்கள்தான்... அதிமுக எதிர்ப்பு என்ற எங்களைப் போன்றவர்கள் நிலையைத் திமுக ஆதரவு என்று மாற்றாமல் இருக்கிறது.

அதிமுகவோடு ஒப்பிட்டு...அவங்க பண்றாங்க...நாங்களும் பண்றோம்னு நெனைக்கிறதுதான்...ரெண்டு கட்சிகளிடமிருந்தும் எங்களைச் சம தூரத்தில் தள்ளி வைக்கிறது.

இப்படிச் சொல்வதனால் அதிமுகவை நான் ஆதரிக்கிறேன் என்பது பொருளாகாது. முன்பு திமுகவிற்கு ஆதரவளித்தவன் என்ற வகையில் இன்றைய திமுகவின் மேல் மிஞ்சி இருப்பது ஏமாற்றம் மட்டுமே. இதை இந்தப் பதிவில் சொன்னது உங்கள் மனதைப் புண்படுத்துமானால் மன்னிக்க. ஏனென்றால் இது கட்சி சார்பற்ற ஒரு சராசரித் தமிழனின் வயிற்றெரிச்சல்.


சரிங்க... ரொம்ப அரசியல் பேசீட்டோம். ஏதாச்சும் சினிமா பத்திப் பேசலாமா? சினிமான்னாலே ஒரு இதுதான். அதுலயும் சிலுக்கு சுமிதான்னா கேக்கவே வேண்டாம். தமிழகத்துல அப்படியொரு கனவுக்கன்னி இனிமே அவ்வளவு லேசுல வர முடியாது. மலையாளத்துல அவங்க நடிச்ச பாட்டு ஒன்னு. இளையராஜா இசையில். நல்ல பாட்டு. ஆகையால எல்லாருமே பாத்து ரசிக்கலாம்.




அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

18 comments:

said...

காரமான பிரியாணிதான் ! :)

said...

// Blogger ஆயில்யன் said...

காரமான பிரியாணிதான் ! :) //

வாங்க வாங்க வாங்க

அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் உள்ளதுன்னு சொல்ற மாதிரி... காரம் என்பது ருசிப்பவர் நாக்கில் உள்ளதுன்னு சொல்றாங்களே... அதப் பத்தி ஒங்க கருத்தென்ன? :)

said...

ம்ம்ம்..சிலுக்கு வீடியோ பார்க்க கொடுத்துவைக்கல எனக்கு ;( (கம்பெனி பிரச்சனை)

said...

சிங்கை பதிவர் சந்திப்பில் தொலைபேசி மூலம் கலந்து கொண்டதற்கு நன்றி

:)
அன்புடன்
சிங்கை நாதன்

said...

எவ்வ்வ்வ்வ்

ஏப்பம் சாமி!

said...

// கோபிநாத் said...

ம்ம்ம்..சிலுக்கு வீடியோ பார்க்க கொடுத்துவைக்கல எனக்கு ;( (கம்பெனி பிரச்சனை) //

ஆகா... பழநிக்குப் போய் பஞ்சாமிர்தம் திங்காம.... திருநவேலி போய் அலுவா திங்காம.... திருப்பதி போய் லட்டு திங்காமப் போன மாதிரி... இந்தப் பதிவுக்கு வந்து சிலுக்கு பாட்டு பாக்கலைன்னு சொல்றீங்களே!

said...

பிரியாணி காரமா இருந்தாலும், பச்சடி நல்லாவே இருந்துச்சி ராகவா! :))

//ஆனால் பின்னூட்டத்தை எழுதியவர்.. தன்னுடைய கருத்தைச் சொல்ல... மறுக்கப்பட்ட அந்தப் பின்னூட்டத்தைத் தன்னுடைய வலைப்பூவுல இடலாம்ல. அதத்தான் இங்க பண்றேன்//

ஒங்களுக்கும் இதே பிரச்சனை தானா? :)

said...

// singainathan said...

சிங்கை பதிவர் சந்திப்பில் தொலைபேசி மூலம் கலந்து கொண்டதற்கு நன்றி

:)
அன்புடன்
சிங்கை நாதன் //

வணக்கங்க. பதிவர் சந்திப்பு நல்லபடியா நடந்தது குறித்து மகிழ்ச்சி. எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்.

said...

வெஜிடபிள் குருமா வெச்சேன்.பிரியாணி கொஞ்சம் கேட்கலாமுன்னு வந்தா என்னை மாதிரியே ஓட்டு பார்க்க நேரமாச்சுன்னு புலம்புறீங்களே!

said...

தயிர் பச்சடி மாதிரி சிலுக்கு பாட்டு சூப்பர்.

said...

// நாகை சிவா said...

எவ்வ்வ்வ்வ்

ஏப்பம் சாமி! //

புளியேப்பத்தப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். புலியேப்பத்தப் பத்தி இப்பத்தான் கேள்விப்படுறேன். பெரிய ஏப்பமாயிருக்கே! செரிமானம் சரியில்லையா?

said...

பதிவ படிக்கல.. Wellback .

said...

ஜி.ரா,
உங்கள் வேண்டுகோளுக்கிணங்க பட்டாம்பூச்சி விருது பதிவு போட்டாச்சு. இங்கன இருக்கு பாருங்க. நன்றி.

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post_18.html

said...

****
அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் உள்ளதுன்னு சொல்ற மாதிரி... காரம் என்பது ருசிப்பவர் நாக்கில் உள்ளதுன்னு சொல்றாங்களே... அதப் பத்தி ஒங்க கருத்தென்ன?
*****
என்னோட கருத்தையா கேட்டீங்க ?

வேற என்ன ! ருசிப்பவர் நாக்க வெட்டிட்டா போச்சு.

எனக்கும் சிலுக்கு வீடியோ பாக்க கொடுத்துவைக்கல. வீட்டுலபோய் பாக்கணும்.

said...

வணக்கம் சார். என்ன ஆளையே காணோமேன்னு பார்த்தேன்.
இப்படி நாங்க மனசில நினைக்கறதை நீங்க பதிவிட்டுட்டிங்க. அப்புறம் இவ்வளவு காரமா பிரியாணி போடவும் தெரியாது. அதனால் நல்லா இருந்ததுன்னு சொல்லிக்கிறேன்.:)

said...

இராகவன்,
என்ன கண்டு கனகாலம்? கன நாளுக்கும் பிறகு உங்கட பதிவிவைப் படிக்கக் கிடைச்சுது.

/* ஒங்கொங்க தொகுதியில இந்தக் கட்சிகளைத் தவிர்த்த வேட்பாளர்களில் பொருத்தமா யாருக்காச்சும் போடுங்க. போதுங்க. எத்தனை நாளைக்குத்தான் கட்சியப் பாத்து..சாதியப் பாத்து... மதத்தப் பாத்து ஓட்டுப் போடுவீங்க? கட்சி, மத, சாதீயப் பாசங்கள்ள மாட்டிக்கிட்டீங்கன்னா... அதுலருந்து வெளிய வரவே முடியாது. */

அருமையான கருத்து.

said...

வீட்டுப்பக்கம் வந்தேங்களேன்னு புது பிரியாணி ஏதாவது சமைச்சிருக்கீங்களோன்னு மீண்டும் ஒரு முறை வந்தேன்.

said...

நீலக்கலர் எழுத்துக்களை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு சரியான அலைகளில்தான் பயணமிடுகிறீர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்ததற்கு தமிழ்நாட்டு மர்லின்மன்றோவையும் தரிசித்து விட்டுப் போகிறேன்.