Monday, October 01, 2007

காதல் குளிர் - 2

சென்றைய பகுதியை இங்கே படிக்கவும்.

பெங்களூர் ஏர்ப்போர்ட் ரோட்டில் எல்லா வண்டிகளும் டிராஃபிக் கடவுளின் வரத்திற்காக அமைதியாக நின்றபடித் தவமிருந்தன. அவ்வளவு நெருக்கடி. அந்த நெருக்கடியில் ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவிற்குள் ரம்யா. ரம்யாவிற்குள் எரிச்சல்.

"எட்டரைக்கு ஃபிளைட். சீக்கிரம் போலாம்னு கெளம்பி வந்தா இப்பிடி டிராஃபிக். எறங்கி நடந்தாக் கூட பத்து நிமிசந்தான் ஆகும். முருகேஷ்பாளையா சிக்னலயே இன்னமும் தாண்டலை. ஆட்டோமேட்டிக் சிக்னல் போட்டா எல்லாம் ஒழுங்காப் போகும். எப்ப டிராபிக் போலிஸ் வந்து நிக்குறாங்களோ அப்பல்லாம் டிராபிக் ஜாம்தான்!!!!" எரிச்சலில் நினைத்ததைச் செயல்படுத்தியும் விட்டாள் ரம்யா.

"தொகளி மூவத் ரூபாய். நானு இல்லே இளிக்கொள்ளுதினி (இந்தாங்க முப்பது ரூவா. நா இங்கயே எறங்கிக்கிறேன்)" பணத்தைக் குடுத்து இறங்கி நடக்கத் தொடங்கினாள். அவள் இறங்கிய நேரம் டிராஃபிக் தெய்வம் கடைக்கண்ணைத் திறந்து சிக்னலும் கிடைத்து. ஆட்டோவும் விருட்டென்று போய் விட்டது.

ரம்யாவின் எகிறிப்போன எரிச்சலையும் கூடிப்போன கடுப்பையும் சொல்ல வேண்டுமா? விடுவிடுவென கோவத்தோடு நடந்து ஏர்ப்போர்ட்டிற்குள் நுழைந்தாள்.

நெருக்கடி ரோட்டில் மட்டுமல்ல ஏர்ப்போர்ட்டிலும் இருந்தது. சிறிய விமான நிலையம். ஆனால் நிறைய கூட்டம். பெட்டியை ஸ்கேன் செய்ய ஒரு நீள வரிசை. செக்கின் செய்ய ஒரு நீள வரிசை. செக்யூரிட்டி செக் செய்ய இன்னொரு நீள வரிசை. பார்க்கும் பொழுதே தலையைச் சுற்றியது ரம்யாவிற்கு. "என்ன நேரத்துல கெளம்புனோமோ! ச்சே! கெளம்புறப்போ ப்ரகாஷாவுக்குக் கூட ஃபோன் பண்ணலை. சரி இப்பவாச்சும் கூப்புடுவோம். வரிசையப் பாத்தா செக்கின் பண்ண இன்னும் பத்துப் பதினஞ்சு நிமிஷம் ஆகும் போல இருக்கு...."

மொபைல் ஃபோனில் அவனை அழைத்தாள். "ஹலோ ப்ரகாஷா...நான் கெளம்புறேன். ஏர்ப்போர்ட் வந்துட்டேன். வீட்டுலயே கூப்பிடலாம்னு நெனச்சேன். கெளம்புற அவசரத்துல மறந்துட்டேன். அதான் ஏர்ப்போர்ட் வந்ததும் கூப்டேன்."

"இருக்கட்டும் ரம்யா. பத்திரமா போய்ட்டு வா. டிராபிக் மோசமா இருந்திருக்குமே இந்நேரம். ஆட்டோ கெடைச்சதா?"

"ஆட்டோதான...கெடைச்சது..கெடைச்சது. டிராபிக் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம். இந்தா இருக்குற ஜீவன்பீமா நகர்ல இருந்து ஏர்ப்போர்ட் வர முப்பது நிமிஷம். ஆமா. நீ எங்க இருக்க?"

"நானா? திரும்பிப் பாரு. வரிசைல ஒனக்கு நாலு பேருக்குப் பின்னாடி நிக்கிறேன்."

ஆச்சரியத்தில் படக்கென்று ஆந்தை முழி முழித்துக்கொண்டே திரும்பினாள். அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.

"நீ எங்கடா இங்க?" கேட்டுக்கொண்டே வரிசையில் தனக்குப் பின்னாடி இருந்த நாலு பேரையும் முன்னாடி விட்டுவிட்டு ப்ரகாஷாவோடு சேர்ந்து கொண்டாள்.

நறுக்கென்று அவன் தலையில் கொட்டினாள். "எங்கயோ போறேன்னு எனக்குச் சொல்லவேயில்லையேடா? நீ எங்க இங்க?"

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....மெதுவா மெதுவா...என்னோட தலையில ஒன்னோட கன்னம் மாதிரி குழி விழுந்திருந்திரப் போகுது. சரி..சரி..முறைக்காத. நீ டெல்லிக்குப் போற.....கூடப் போய்ப் பாத்துக்கோன்னு ஹெச்.ஆர் என்னையக் கேட்டதால...சரி..சரி..முறைக்காத...உண்மையச் சொல்லீர்ரேன். நீ டெல்லிக்குப் போற. சப்யாவையும் சித்ராவையும் பாக்கனும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? அதான் நான் ஹெச்.ஆர் கிட்ட பேசி....நீ கெளம்புற அதே பிளைட்டில்...அதே மாதிரி வெள்ளிக்கிழமை லீவு போட்டு....எப்படி என் ஐடியா?" பெருமையாகக் கேட்டான்.

பொய்க் கோவத்தோடு மூஞ்சியைக் கோணங்கியாய் வைத்துக் கொண்டு சொன்னாள். "ஓ! சப்யாவையும் சித்ராவையும் பாக்கத்தான் டெல்லி வர்ரியா? நாங்கூட ஏதோ நான் தனியாப் போறேனோன்னு தொணைக்கு நீ வர்ரதா தப்பா நெனைக்க இருந்தேன்."

உள்ளபடி சொன்னால்....டெல்லிக்குப் போவதை ப்ரகாஷாவிடம் அவள் சொன்னதே அவனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துதான். சொன்னால் எப்படியாவது இவனும் வருவான் என்று நினைத்தாள். அவனும் வந்தது ரம்யாவிற்கு மகிழ்ச்சியே. ஆனால் சப்யாவையும் சித்ராவையும் பார்ப்பதற்காக அவன் வருவதாகச் சொன்னது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இவள் இப்படியென்றால் ப்ரகாஷா வேறுமாதிரி. அவள் வந்து சொன்னதுமே ஹெச்.ஆரை உடனடியாகத் தொடர்பு கொண்டான். ஒருவேளை அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இவன் டெல்லிக்குப் போவதாகவே முடிவு செய்ந்திருந்தான். நல்லவேளையாக ஹெச்.ஆரில் உடனே ஒத்துக்கொண்டார்கள். ஏற்கனவே வர ஒப்புக்கொண்ட யாரோ வரமுடியாது என்று சொல்லி விட்டதால் ப்ரகாஷாவிற்கு டெல்லி பயணம் எளிதானது.


அட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா? சூப்பரப்பு. ரம்யா...ப்ரகாஷா...டெல்லி....குளிர்...காதல்..இப்படித்தானே முடிச்சுப் போட்டு வைத்திருப்பீர்கள். அந்த முடிச்சுப்படியேதான் போகப் போகிறோம். ஆகையால் தொடர்ந்து இப்பிடியே சரியாக ஊகித்துக் கொண்டு வாருங்கள். இப்பொழுது கதைக்குப் போவோம்.

சோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள். இரண்டு குலாப்ஜாமூன்கள். எல்லாரும் தத்தமது கத்திகளையும் முள்கரண்டிகளையும் ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து வந்த உணவோடு சண்டைக்கு விட்டிருந்தார்கள்.

"ஏண்டா...நீ வரப்போறன்னு சொல்லீருக்கலாம்ல. உங்கூட கார்லயாவது வந்திருப்பேன். ஆட்டோவுல வந்து...சிக்னல்ல எறங்கி....பெரிய கூத்தாப் போச்சு..." ஆட்டோ கதையைச் சொன்னாள்.

"ஹா ஹா ஹா....ஒரு சர்ப்ரைசுக்கு மஸ்த் பிளான். அதான் சொல்லலை. சப்யாவுக்கும் சித்ராவுக்கும் ஃபோன் போட்டுச் சொல்லீட்டேன்."

"சரி சரி பொழைச்சுப் போ. பாரேன்...இந்த ரெண்டையும்....எங்கிட்ட நீயும் வர்ரேன்னு சொல்லவே இல்லை. ஏர்ப்போர்ட்ல இருந்து நொய்டாவுக்குப் போக டாக்சி புக் பண்ணீருக்கான் சப்யா. ஒரு மொபைல் நம்பர் குடுத்திருக்கான். எறங்குனதும் அதுல கூப்புடனும். அது டாக்சி டிரைவரோட மொபைல் நம்பர்."

"அந்த நம்பர் எங்கிட்டயும் இருக்கு. சப்யா குடுத்தான்." பேசிக்கொண்டேயிருந்தவன் படக்கென்று ரம்யாவின் டிரேயில் இருந்து ஒரு குலாப்ஜாமூனை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விட்டான். ரம்யா சுதாரிப்பதற்குள் அவனுக்குக் குடுத்திருந்த குலாப்ஜாமூனையும் முழுங்கி விட்டான்.


ரம்யாவுக்கு ஆத்திரம். அட....செல்லமாதான். அந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள். அவன் விடுவானா? அந்த பிரியாணியை எடுத்து அவள் பிரியாணியோடு கலந்து விட்டான். அட...எப்பொழுதும் அப்படித்தான். நட்பான காலத்திலிருந்தே இப்படித்தான். ப்ரகாஷா, சப்யா, ரம்யா, சித்ரா சாப்பிட உட்கார்ந்தால் வேறு யாரும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. மில்க் ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்...இப்படித்தான்...யாருடைய தட்டில் யார் எதைக் கலந்தார்கள் என்ற வரைமுறையே இல்லாமல் இருக்கும். ஆனால் நால்வரும் நிம்மதியாம மகிழ்ச்சியாக சாப்பிட்டிருப்பார்கள். சப்யா சித்ரா போன பிறகு ப்ரகாஷா ரம்யா...

"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!" கட்டபொம்மியானாள் ரம்யா.

"ஸ்டாப் ஸ்டாப்..எனக்கு எதுவும் அர்த்தாகலை. நிதானா நிதானா."

"என்னடா நிதானா....நாங்க மறத் தமிழர்கள். அப்படித்தான் பேசுவோம்."

"மரமா? என்ன மரம்?"

"ஆகா...தமிழக் கேவலப் படுத்துறியா...ஒன்ன........அது மரம் இல்ல. மறம்...சொல்லு பாப்போம்."

"மர்ரம். என்ன மர்ரமோ.எனக்கு ஷமா குடுத்துரு." தலையைக் குனிந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டான். பெருந்தன்மையாக ரம்யாவும் மன்னித்து விட்டாள். இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்காரர் இவர்களது பொய்ச்சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார்.

"அம்மா தாயீ....உன்னோட இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்."

"பின்னே...நாங்க யாரு...மர்ர்ர்ர்ர்ர்ர்ர...சரி... விடு. என்னோட இருக்குறது இருக்கட்டும்...ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா."

தொடரும்...

23 comments:

said...

///ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்////

ம்ம்ம்!!
எங்கிட்டு போனாலும் ஜிராவையும் பிரியாணியையும் பிரிக்க முடியது போல!! :-P

இந்த ரம்யா மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே!!
பார்க்கலாம் கதை எப்படி போகுதுன்னு!!! ;)

said...

சோத்துக்காகவே ஒரு பகுதி. நல்லா இருக்கு.

//ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்//
இதெல்லாம் நாம் செய்ய முடியாதா?

said...

இன்னும் குளிரடிக்கலை.

said...

//ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா."
//

காதல்தான் ஆயிருச்சே. அப்புறம் இது என்ன? இல்லை இன்னும் காதலைச் சொல்லலியா? நாந்தான் சொன்னதா நினைச்சுக்கிட்டேனா?

said...

// CVR said...
///ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்////

ம்ம்ம்!!
எங்கிட்டு போனாலும் ஜிராவையும் பிரியாணியையும் பிரிக்க முடியது போல!! :-P //

யெய்யா சிவிஆரு...போகுற போக்குல பொருத்திப் போடுற...எங்க எப்படி வெடிக்கப் போகுதோ தெரியலையே...........

// இந்த ரம்யா மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே!!
பார்க்கலாம் கதை எப்படி போகுதுன்னு!!! ;) //

யார் மனசிலே யாருன்னு விஜய் டீவில ஒருத்தர் கேப்பாரே...அவரக் கூட்டீட்டு வந்து கேக்கச் சொல்வோமா? :)

said...

// ILA(a)இளா said...
சோத்துக்காகவே ஒரு பகுதி. நல்லா இருக்கு. //

என்னய்ய இது கொடுமை..பதிவு நெறய எவ்ளோ சொல்லீருக்கேன். ஒமக்குப் பார்வை சோத்துலதான்.

////ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்//
இதெல்லாம் நாம் செய்ய முடியாதா? //

செய்யலாம். அதுக்கெல்லாம் கூட்டணி சரியா அமையனும்.

// மங்களூர் சிவா said...
இன்னும் குளிரடிக்கலை. //

இன்னும் டெல்லி வரலையேய்யா....வழீலதான இருக்காங்க. டெல்லீல எறங்கட்டும்...அப்புறம் குளிரும்னு நம்புவோம்.

said...

நல்லா போகுதுங்க, ஜிரா நல்லா கலக்குதுங்க :)

said...

காதல் குளிரா? இல்லை காதல் விருந்தா? :)))

said...

ஆஹா...ஜிரா கதை சூப்பர போகுது ;-)))

\\அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.\\

அது என்ன ஓட்கா புன்னகை.....புரியலியே!!!?

\\ந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்.\

ப்ராகாஷாம் உங்களை போல தானா!! சாப்பாட்டில் ;-)))

இல்ல அந்த ப்ராகாஷ் நீங்க தானா?? (நாங்களும் கொளுத்தி போடுவோம்ல) ;-))))

said...

SUPER APPU

said...

:)) உன்ன மாதிரிதான் ஒரு பொண்ணு வேணும்னு சட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே... :))

said...

//அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு//

உங்க ஃப்ரொபைல் படத்துல ஒரு புன்னகை வருதே! அதானே ஓட்காப் புன்னகை? :-)

//ஜிராவை எடுத்து கலந்து விட்டாள்//

நாங்க எந்த "ஜிரா" -வைன்னு நினைச்சிக்கறது? :-)))))

//தொடரும்...//
மொதப் பகுதி காதல் சாரல்!
ரெண்டாம் பகுதி காதல் ஸ்டார்டர்ஸ்!
மூணாம் பகுதியில் தான் காதல் விருந்தா?

யோவ்-தொடரும்னு மொட்டையாப் போட்டாப் போதுமா? எப்ப தொடரும்-னும் போடுங்கய்யா! சொல்லிப்புட்டேன் ஆமாம்!

said...

எனக்கும் அந்த வோட்கா புன்னகை எப்படி இருக்குமுன்னு தெரியலீங்க... :-)

said...

//ஜி said...
:)) உன்ன மாதிரிதான் ஒரு பொண்ணு வேணும்னு சட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே... :))
//

டபக்குன்னு காதல சொல்லீட்டா சுவரஸ்றமே இருக்காது ஜி......

இந்த பொண்ணுங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்கு தெரியும்.

அடுத்த பதிவ எதிர் நோக்கி,ஆவலுடன் இருக்கேன்....

said...

இந்த குளிரு பெங்களூரூலே பெருங்குளிரும்'ஆ மாறுமின்னு நினைச்சேன்....

ஹிம் நொய்டா'லே தான் குளிருமா???


வெயிட்டிங் ஃபார் த நெக்ஸ்ட் பார்ட்.... :)

said...

// இலவசக்கொத்தனார் said...
//ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா."
//

காதல்தான் ஆயிருச்சே. அப்புறம் இது என்ன? இல்லை இன்னும் காதலைச் சொல்லலியா? நாந்தான் சொன்னதா நினைச்சுக்கிட்டேனா? //

கொத்ஸ், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் கதையில் எதுவுமில்லை :)

// அனுசுயா said...
நல்லா போகுதுங்க, ஜிரா நல்லா கலக்குதுங்க :)//

நன்றி நன்றி ஜெட் ஏர்வேஸ் படம் போட்டிருக்கேன்ல...நல்லாத்தான் போகும். இண்டியன் ஏர்லைன்ஸ் படம் போட்டிருந்தாதான் நல்லாப் போகாது. :)

// தேவ் | Dev said...
காதல் குளிரா? இல்லை காதல் விருந்தா? :))) //

விருந்து சாப்புட்டப்புறந்தான குளிர் விடும் ;)

said...

// கோபிநாத் said...
ஆஹா...ஜிரா கதை சூப்பர போகுது ;-))) //

சூப்பராக்குதா...சூப்பருதான் அப்ப

//\\அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.\\

அது என்ன ஓட்கா புன்னகை.....புரியலியே!!!? //

அடடே! இதெல்லாம் வெளக்கனுமா சாமி? அப்படியே கோடு போட்டாப் புரிஞ்சிக்கிருங்கப்பா... :)

//\\ந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்.\

ப்ராகாஷாம் உங்களை போல தானா!! சாப்பாட்டில் ;-)))

இல்ல அந்த ப்ராகாஷ் நீங்க தானா?? (நாங்களும் கொளுத்தி போடுவோம்ல) ;-)))) //

இது கொளுத்திப் போடுறதுல்ல...அணுகுண்டையே எடுத்து அடுப்புல போடுறது....வேண்டாம்யா...தாங்க மாட்டேன்... கொஞ்சோல கருணை ப்ளீஸ்

// karthi said...
SUPER APPU //

சூப்பரப்புன்னு சொல்றீங்களா? சூப்பர் ஆப்புன்னு சொல்றீங்களா கார்த்தி? நீங்க சூப்பரப்புன்னு சொன்னதாகவே நெனச்சிக்கிறேன். ஏன்னா..நீங்க நல்லவரு :)

// ஜி said...
:)) உன்ன மாதிரிதான் ஒரு பொண்ணு வேணும்னு சட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே... :)) //

சொல்லீருவான்னு நெனைக்கிற? ஜியா இருந்தா நீதான் வேணும்னு சொல்லீருப்ப. இது ப்ரகாஷாவாச்சே...என்ன சொல்றான்னு அடுத்த திங்கள் பாப்போம்.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு//

உங்க ஃப்ரொபைல் படத்துல ஒரு புன்னகை வருதே! அதானே ஓட்காப் புன்னகை? :-) //

இதெல்லாம் திரீ மச்சு. ஓட்டைப் புன்னகைக்கும் ஓட்காப் புன்னகைக்கும் வேறுபாடு தெரியாதவராயிருக்கீங்களே.

////ஜிராவை எடுத்து கலந்து விட்டாள்//

நாங்க எந்த "ஜிரா" -வைன்னு நினைச்சிக்கறது? :-))))) //

ஆண்டவா...இதென்னய்யா கூத்து...மேல ஒருத்தன் ஜிராவையும் பிரியாணியையும் பிரிக்க முடியுமாங்குறான்..நீங்க என்னடான்னா...ம்ம்ம்ம்ம்

////தொடரும்...//
மொதப் பகுதி காதல் சாரல்!
ரெண்டாம் பகுதி காதல் ஸ்டார்டர்ஸ்!
மூணாம் பகுதியில் தான் காதல் விருந்தா?

யோவ்-தொடரும்னு மொட்டையாப் போட்டாப் போதுமா? எப்ப தொடரும்-னும் போடுங்கய்யா! சொல்லிப்புட்டேன் ஆமாம்! //

அடுத்த திங்கள்தான். ஒவ்வொரு திங்களுந்தான ரிலீசு. நாம மெகாதொடர் இல்ல. வாரத்தொடர்தான்.

// மதுரையம்பதி said...
எனக்கும் அந்த வோட்கா புன்னகை எப்படி இருக்குமுன்னு தெரியலீங்க... :-) //

ஹி ஹி பொய்தானே சொன்னீங்க. கண்டுபிடிச்சிட்டேன் பாத்தீங்களா. :)

said...

//சென்றைய பகுதியை இங்கே படிக்கவும்.//

இன்றைய பகுதி தெரியும். சென்ற பகுதி தெரியும். ஆனா இது என்ன புதுசா சென்றைய பகுதி?

said...

//ஓட்கா புன்னகையோடு.//

அதென்ன வோட்கா புன்னகை?

//அட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா?
//

நான் ஊகிக்கலை. நான் வேலை பாக்க வந்த இடத்துல காதலிக்கலை. அதனால இதை ஊகிக்கலைன்னு நினைக்கிறேன். :-)

//சோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள்.//

அடப்பாவி. அடப்பாவி. நல்லா இருப்பீங்களா?!

புரட்டாசி மாதம் கறி சாப்புடாம இருக்கலாமான்னு வீட்டுல கேட்டாங்க. சரின்னுட்டேன். பாதி மாதம் கூட முடியலை. கனவுல சிக்கன் கறி வருது. நீங்க எழுதுனதைப் படிச்சவுடனே நாக்குல ஊறுதே. என்ன செய்வேன் என்ன செய்வேன்? :-(

ஒவ்வொரு வருடமும் தப்பிச்சிருவேன். இந்த வருடம் மாட்டிக்கிட்டேன். வாக்கு தவறாம இருக்க எனக்கு மனதிடம் கொடுப்பாய் வாக்கு தவறா இராகவா.

ஓ இது பறணையில (ப்ளைட்ல) கொடுக்குற சிக்கன் பிரியாணியா? அப்ப அதை நீங்களே தின்னுங்க. எனக்கு வேண்டாம்.

//ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்.//

நல்ல காம்பினேஷன். ஜிராவும் பிரியாணியும் தான் நல்ல காம்பினேஷன் என்று சொன்னேன். :-)

//"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!" கட்டபொம்மியானாள் ரம்யா.//

இது ஓவர் கற்பனையா இருக்கே? மகளிர் தான் சொல்லணும் இப்படி மகளிர் பேசுவாங்களான்னு.

said...

// இலவசக்கொத்தனார் said...
//சென்றைய பகுதியை இங்கே படிக்கவும்.//

இன்றைய பகுதி தெரியும். சென்ற பகுதி தெரியும். ஆனா இது என்ன புதுசா சென்றைய பகுதி? //

ஆகா! தப்பாயிருச்சுய்யா. மன்னிச்சிருங்க. :) ஆனா சரியாக் கண்டுபிடிச்சீங்க பாருங்க. அதுக்கு ஒங்களப் பாராட்டியே தீரனும்.

// குமரன் (Kumaran) said...
//ஓட்கா புன்னகையோடு.//

அதென்ன வோட்கா புன்னகை? //

ம்ம்ம்..இதெல்லாம் ஒங்களுக்குப் புரியாதுங்க. :) நீங்கள்ளாம் நல்ல பையனா இருந்திருக்கீங்க.

////அட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா?
//

நான் ஊகிக்கலை. நான் வேலை பாக்க வந்த இடத்துல காதலிக்கலை. அதனால இதை ஊகிக்கலைன்னு நினைக்கிறேன். :-) //

அடடா! அப்ப அலுவலகத்துல காதலிச்சாதான் இது புரியுமா? ஏய்யா இப்பிடி அப்புராணியா இருக்கீங்க.

////சோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள்.//

அடப்பாவி. அடப்பாவி. நல்லா இருப்பீங்களா?!

புரட்டாசி மாதம் கறி சாப்புடாம இருக்கலாமான்னு வீட்டுல கேட்டாங்க. சரின்னுட்டேன். பாதி மாதம் கூட முடியலை. கனவுல சிக்கன் கறி வருது. நீங்க எழுதுனதைப் படிச்சவுடனே நாக்குல ஊறுதே. என்ன செய்வேன் என்ன செய்வேன்? :-(

ஒவ்வொரு வருடமும் தப்பிச்சிருவேன். இந்த வருடம் மாட்டிக்கிட்டேன். வாக்கு தவறாம இருக்க எனக்கு மனதிடம் கொடுப்பாய் வாக்கு தவறா இராகவா. //

இதெல்லாம் தேவையா....அந்த ஒரு மாசம் மட்டும் கோழி திங்கலைன்னா பெருமாளுக்குச் சந்தோசமாயிருமா? சாப்புடுங்கய்யா...சும்மாச் சாப்புடுங்க. இறைவனுக்கு எல்லா நாளும் உகந்த நாளுதான்.

//ஓ இது பறணையில (ப்ளைட்ல) கொடுக்குற சிக்கன் பிரியாணியா? அப்ப அதை நீங்களே தின்னுங்க. எனக்கு வேண்டாம். //

என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க. கிங் பிஷ்ஷர்ல நல்ல பிரியாணியாவே குடுப்பாங்க.

////ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்.//

நல்ல காம்பினேஷன். ஜிராவும் பிரியாணியும் தான் நல்ல காம்பினேஷன் என்று சொன்னேன். :-) //

நீங்களுமா? வாழ்க வளமுடன்.

////"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!" கட்டபொம்மியானாள் ரம்யா.//

இது ஓவர் கற்பனையா இருக்கே? மகளிர் தான் சொல்லணும் இப்படி மகளிர் பேசுவாங்களான்னு.//

மகளிர் பேச மாட்டாங்க. ஆனா பொண்ணுங்க பேசுவாங்க. ஆக இதுல இருந்து என்ன தெரியுதுன்னா....ஒங்களுக்குத் தோழிகளே பள்ளி-கல்லூரி காலத்துல இருந்ததில்லைன்னு....சரியா?

said...

//ஒங்களுக்குத் தோழிகளே பள்ளி-கல்லூரி காலத்துல இருந்ததில்லைன்னு....சரியா?
//

தப்பு தப்பு தப்பு. என்ன பாக்குறீங்க? நான் எங்கேயாவது ஒளறிடுவேனான்னு தங்கமணி என் முதுகுல தப்பு தப்புன்னு குடுக்குற சத்தம் தான். :-)

இந்தக் கதை எல்லாம் தங்கமணிகிட்ட மட்டும் தான் சொல்றது. மத்தவங்க எல்லாம் அப்புராணின்னு நெனச்சுக்கணும்ல. :-)

said...

ஆஹா, தொடர் எழுதறவங்களைப் பார்த்திருக்கேன். ஆனா பின்னூட்டமே ஒரு தொடரா வரும் போல இருக்கே.:))
ராகவன், ஜிராவும் பிரியா ஆணியும் சேர்ந்தா எப்படி இருக்கும்னு தெரியலையே.
எங்களுக்கெல்லாம் அனுபவமே போறாதுன்னு தெரிகிறது. சின்னப் பிள்ளைங்க கிட்டேருந்து கத்துக்க வேண்டியதுதான்.:))))