Saturday, May 17, 2008

பிரியாணி - 1

அதாவதுங்க.. பிரியாணின்னா நமக்கு ... அதாவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடைசியா இந்தியாவுல சாப்ட பிரியாணி இன்னும் மறக்க முடியாம இருக்கு. அதுவும் காரசாரமான ஐதராபாத் பிரியாணி. ருசி நாக்குலயே இருக்கு.

சரி கதைக்கு வருவோம்...

கியோக்கன்ஹாஃப் (Keukenhof) அப்படீங்குற ஊர் பேர் உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. ஆனா அங்க என்ன இருக்குன்னு சொன்னா உங்களுக்குக் கண்டிப்பாத் தெரியும். டூலிப் (tulips) மலர்த் தோட்டங்களை அந்நியன் படத்துல கூமாரீஈஈஈஈஈன்னு பாடுவாரே... அந்தத் தோட்டங்கள்தான்.

போன வருசம் நான் இங்க நெதர்லாந்து வந்தப்பவே போயிருக்க வேண்டியது. ஆனா பாருங்க இந்தத் தோட்டங்கள் மூனு மாசத்துக்குத்தான் இருக்கும். அப்புறம் பூவே இருக்காது. மார்ச்சுல இருந்து மே மாசத்துக்குள்ளதான் பாக்க முடியும்.

நான் இங்க வந்தது ஏப்ரல் கடைசி. வந்து ஒரு வாரத்துலயே அம்மை போட்டுருச்சு. அதுல இருந்து எந்திரிச்சு தெளிவாகுறதுக்குள்ள தோட்டங்கள் காஞ்சு போச்சு. இந்த வருசம் எப்பிடியாச்சும் போயிருனுமப்போய்னு இருந்தப்பதான் அம்மாவும் அப்பாவும் ரெண்டு மாசத்துக்கு இங்க வந்தாங்க. இப்ப இங்கதான் இருக்காங்க.

சரீன்னு அவங்களையும் கூட்டீட்டு போனேன். அவங்க ஐரோப்பாவுல மொதல்ல போன சுற்றுலா கியோக்கன்ஹாஃப்க்குத்தான். ரொம்பவே ரசிச்சாங்க. ஒரு மாதிரி மூடுன மேகங்கள். அப்பப்போ தெறிச்ச தூறல்கள். ஒன்றா ரெண்டா என்று கூட்டிப் பாக்க நமக்கு 20 வெரல்களுக்கு மேல இல்லையேன்னு வருத்தப்பட வைக்கிற பலப்பல வண்ணங்களில் மலர்கள். காதலர்களுக்காகவே உண்டான தோட்டம் அது. கண்டிப்பா அவங்களுக்குப் பிடிச்சதுல வியப்பில்லை.

கீழ இருக்குற படங்களைப் பாருங்க. நீங்களே சொல்வீங்க.































அத்தனை படங்கள்ளயும் எனக்குப் பிடிச்சது இந்தப் படம். பாருங்க காதலன் காதலிக்கு முத்தம் குடுக்குற மாதிரி இருக்கு. மலர்கள் மனதை பதமாக்கும். இதமாக்கும். எவ்வள்வு உண்மை. கண்களுக்கும் கருத்துக்கும் குளுமையோ குளுமை.

************************************************************

அப்புறம் நெதர்லாந்துலயும் அரிசி வெலை ஏறுது. ஆமா. இங்க நான் இருக்குற எடத்துல இந்திய உணவுப் பொருட்கள் வாங்கனும்னா ஒரே வழி பக்கத்துல இருக்குற ஒரு காஷ்மீரி கடைதான். ஆம்ஸ்டர்டாம்ல இன்னோரு ஓரத்துல ஒரு இலங்கைத் தமிழர் கடை இருக்கு. ஆனா அங்க போயிட்டு வர்ரதுக்கே பாதி நாளுக்கு மேலயே போயிரும். ஆகையால இங்க காஷ்மீரிக்காரங்க கடையிலேயே வாங்குறது வழக்கம்.

தஞ்சாவூர் பொன்னி அரிசி, நல்ல இட்டிலி அரிசி, உழுந்து, பருப்பு எல்லாமே கெடைக்கும். அந்தப் பருப்புகளுக்கு மொதல்ல வெலை ஏறுச்சு. இப்ப அரிசிக்கு. எனக்கு அரிசி இல்லைன்னா ஒன்னுமில்லை. ஆனா அம்மா அப்பா இருக்காங்க. அவங்களுக்காகத்தான் வாங்குறது. அதுவுமில்லாம எனக்குத் தோசைன்னா ரொம்பப் பிடிக்கும். மிக்சியில அப்பப்ப மாவரைச்சுச் சுட்டுக்குறது.

*************************************************************

ஆங்கிலப் படங்கள்னாவே பிரம்மாண்டமும் கிராபிக்சும்னு பெரும்பாலும் ஒரு எண்ணம் இருக்குது. ஆனா பாருங்க....தமிழ்ப் படங்களை விட சிறப்பான கதையம்சங்களோடவும் நடிப்போடயும் ஆங்கிலப் படங்கள் நிறையவே வருது. சமீபத்துல அப்படிப் பாத்த இரண்டு படங்கள் 27 Dresses மற்றும் Nanny's Diaries. இரண்டுமே புதுமையான கதைக்களன். இந்த பிரியாணியில 27 Dresses படத்தப் பத்திப் பாப்போம்.

இது ஆனா ஃபிளெச்சர் (Anne Fltecher) அப்படீங்குற பெண் இயக்குனர் இயக்கிய படம். 27 முறை மணப்பெண்களின் தோழியா அலங்கார உடையணிந்த ஒரு பெண் 28வது முறை தனக்காகவே திருமண உடை அணியிறதுதான் கதை. சொல்லறப்பவே வித்தியாசமா இருக்குல்ல.

ஜேன், அவதான் அந்தப் பொண்ணு. ரொம்பவும் சுறுசுறுப்பு. நல்ல பொண்ணு. வேலை பாக்குற எடத்துல அவ பாஸ் மேல ஆசைப்படுறா. ஆனா அவரோட பாசும் ஜேனோட தங்கச்சியும் விரும்புறாங்க. பாஸ் இருக்காரே... அவரு மரக்கறி சாப்புடுறவரு. இயற்கையை ரசிக்கிறவரு. நல்லவரு. வல்லவரு. இப்பிடி பலப்பல. ஆனா ஜேனோட தங்கச்சி அதுக்கெல்லாம் நேர்மாறு. ஆனாலும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நடிக்கிறா. அவ கிட்ட ஜேன் சொல்லிப் பாத்தாலும் கேக்கலை. உண்மையச் சொல்லீட்டா ஒப்புக்கிறவர்தான் அந்த பாஸ். ஆனா இவ சொல்லனுமே.

நம்ம கதாநாயகி ஒரே நாள்ள ரெண்டு கல்யாணத்துல தோழியா இருக்க வேண்டி வருது. ஒன்னு அமெரிக்கக் கல்யாணம். இன்னொன்னு இந்தியக் கல்யாணம். இங்கயும் அங்கயும் மாறி மாறி ஓடி...உடைய மாத்தி...அத இதன்னு மாத்தி.. ரெண்டு எடத்துலயும் நல்ல பேரு வாங்குற. அந்த சமயத்துலதான் கெவினைச் சந்திக்கிறா. அவன் ஒரு பத்திரிக்கையாளன். ஆனா வேற பேர்ல எழுதுறான். அவனோட எழுத்து மேல ஜேனுக்கு ரொம்ப விருப்பம்.

ரெண்டு பேரும் நட்பா பழகுறாங்க. 27 உடைகளையும் வெச்சு ஜேனை கெவின் படங்கள் எடுக்குறான். ஒரு கட்டுரை எழுதுறான். அத அவனுக்குத் தெரியாமலேயே பத்திரிக்கைல போட்டுர்ராங்க. அப்பத்தான் கெவின் யாருன்னு ஜேனுக்குத் தெரிய வருது. அவன் மேல கோவிச்சிக்கிட்டு பேசாம இருந்துர்ரா.

ஜேனோட தங்காச்சீ பாஸை டாவடிச்சாளே.. அவங்க திருமணம் செஞ்சுக்கிறதா முடிவெடுக்குறாங்க. அக்காக்கு முன்னாடி தங்காச்சீ கல்யாணம். அதுனால அவங்க அம்மாவோட கல்யாண உடையை இளையமகளுக்குக் குடுக்குறாரு அப்பா. ஆனா அந்த மரமண்டை அந்த உடையை வெட்டித் தச்சு வேற உடையா மாத்தீர்ரா. ஜேனுக்கு ஆத்திரம்னா ஆத்திரம். தன்னோட கல்யாணத்துக்குப் போட வெச்சிருந்த உடையை... அதுவும் இறந்து போன அம்மாவோட கல்யாண உடையை கிழிச்சிட்டாளேன்னு ஆத்திரப் பட்டு பாஸ் கிட்ட தங்காச்சீ பத்தி உண்மையைச் சொல்லீர்ரா. நடக்க இருந்த திருமணம் நின்னு போகுது.

இந்தக் கெவின் பயலும் அப்பப்பா அம்மா தாயே நானும் இருக்கேன்னு பின்னாடியே வர்ரான். ஆனா இவதான் கோவிச்சிக்கிட்டாளே. அதுனால ஒதுங்கிப் போறா.

அப்ப ஆபீஸ்ல இருக்குற பாசு... இவகிட்ட புதுசா ஏற்படுற பிடிப்பைச் சொல்றாரு. ஆனா அவளுக்கு இப்ப அவர் மேல இருந்த ஆசை போயிருச்சு. எங்க போயிருச்சு? அதான். அந்தக் கெவின் பய இருக்கானே...அவன் கிட்ட போயிருச்சு. ஆனாலும் முந்தி தான் விரும்புனதையும்....தங்காச்சீ மேல பொறாமை இருந்ததையும் ஒத்துக்கிறா. ஒத்துக்கிட்டு ஓடுறா. எங்க? அந்தக் கெவின் கிட்டதான். அப்புறமென்ன முடிவு சுபமோ சுபம். கெவினும் ஜேனும் சேர்ந்துர்ராங்க. பின்னாடி பாசும் தங்காச்சீயும் கூட புரிஞ்சிக்கிட்டு சேந்துர்ராங்க. இதாங்க கதை. ஆனா... படத்தப் பாக்கனுமே... ஒரு எடத்துல கூட தொய்வு இல்லை. அவ்ளோ நேர்த்தி.

அதுலயும் ஜேனா நடிச்ச Katherine Heiglம் கெவினா நடிச்ச James Marsdenம் ரொம்பவே அருமையா நடிச்சிருப்பாங்க. வாய்ப்புக் கெடைச்சா படத்தக் கண்டிப்பா பாருங்க. உண்மையிலேயே பார்த்து மனசுக்குத் திருப்தியான படம். அதுலயும் ஜேனுக்கும் கெவினுக்கும் திருமணம் நடக்குறப்போ ஜேனின் தோழிகள் 27 பேரும், அவள் அவங்கவங்க கல்யாணத்துக்குப் போட்ட உடையோட வரிசையா நிப்பாங்க. பாக்கவே நல்லா இருக்கும்.



பிரியாணிகள் தொடரும்.....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

23 comments:

said...

பிரியாணி ஜூப்பரு :))

said...

//அதுலயும் ஜேனா நடிச்ச Katherine Heiglம் கெவினா நடிச்ச James Marsdenம் ரொம்பவே அருமையா நடிச்சிருப்பாங்க. //

வீட்டு நம்பர் தரவும்...அப்பா அம்மாவிடம் பேச வேண்டும். :)

அதென்னய்யா பிரியாணி கூட தொடருமா?....:)

said...

படங்கள் அருமை. பிரியாணி நல்லா ருசியா இருக்கு. இன்னும் நெறைய பிரியாணிய கட்டுங்க.

said...

//இந்தப் படம். பாருங்க காதலன் காதலிக்கு முத்தம் குடுக்குற மாதிரி இருக்கு//

முத்தம் கொடுத்த பின்...காதலன் ஏதோ சொல்ல, காதலி போங்க-ன்னு திரும்பிக்கிட்டு வெட்கப்படுற மாதிரி-ல்ல இருக்கு! :-)
சேமிச்சிக்கிட்டேன், படத்தை :-)

இந்தப் பிரியாணி சூப்பர்! 27 Dresses இன் ரொம்பவே இயல்பான விமர்சனம்.
திருமணத்தில் மணப்பொண்ணு வரும் போது, மணமகன் முகம் பார்க்கணும்-னு கெவின்/ஜேன் வருவாய்ங்க! ஆனா குடிச்சிப்போட்டு ஆடும் அந்த டான்ஸ் மற்றும் பாட்டு படத்துலயே சூப்பர்! பாட்டின் முடிவில் வரும் முத்தக் காட்சியைப் போடுவதற்குப் பதிலாகத் தான் பூக்களின் முத்தக் காட்சியைப் போட்டீங்க போல! :-))

அடுத்த என்ன பிரியாணி-ன்னு சொல்லுங்க!

said...

பிரியாணி அருமை.
என்னோட பிளாக்
www.lathananthpakkam.blogspot.com
படிச்சுப்பாருங்க. நம்க்குள்ள ஒரு ஒத்துமை தெரியும்

said...

படம் பாக்கணுங்கற உணர்வை ஏற்படுத்திட்டீங்க. டூலிப் நிழற்படங்கள் அருமை.

said...

படங்கள் சூப்பரோ சூப்பர்!

\\அத்தனை படங்கள்ளயும் எனக்குப் பிடிச்சது இந்தப் படம். பாருங்க காதலன் காதலிக்கு முத்தம் குடுக்குற மாதிரி இருக்கு. மலர்கள் மனதை பதமாக்கும். இதமாக்கும். எவ்வள்வு உண்மை. கண்களுக்கும் கருத்துக்கும் குளுமையோ குளுமை.\\

நல்லாயிருக்கு வர்ணனை:))

said...

// கப்பி பய said...

பிரியாணி ஜூப்பரு :)) //

அப்ப கப்பிக்கு இன்னோரு பிளேட் பார்சல்ல்...பில்லு போடாதே... :D

// Blogger மதுரையம்பதி said...

//அதுலயும் ஜேனா நடிச்ச Katherine Heiglம் கெவினா நடிச்ச James Marsdenம் ரொம்பவே அருமையா நடிச்சிருப்பாங்க. //

வீட்டு நம்பர் தரவும்...அப்பா அம்மாவிடம் பேச வேண்டும். :)//

ஏங்க? அவங்க நல்லா நடிச்சா அம்மா அப்பா கிட்ட சொல்லனுமா?

// அதென்னய்யா பிரியாணி கூட தொடருமா?....:) ///

ஆமா ஒரு நாள் கோழி....மறுநாள் ஆடு...இன்னொரு நாளு மீனு.. வேறோரு நாளு எறா....அப்படியே முட்டை. நடுவுல ஒரு நாள் காய்கறி பிரியாணி. இப்பிடித் தொடரும்ல...

said...

will try to see the movie

do write also about the miniature Holland.

said...

நல்ல வேளை, காய்கறி பிரியாணியும் இருக்குன்னு சொன்னதால வந்தேன் :)

ரெண்டு தரம் நெதர்லாண்ட்ஸ் வந்தேன்; உங்கள மிஸ் பண்ணிட்டேனே :(

said...

//அந்தப் பருப்புகளுக்கு மொதல்ல வெலை ஏறுச்சு. இப்ப அரிசிக்கு//

சிங்கப்பூர் லையும் அப்படி தான் :(

said...

// ILA said...

படங்கள் அருமை. பிரியாணி நல்லா ருசியா இருக்கு. இன்னும் நெறைய பிரியாணிய கட்டுங்க. //

கட்டீருவோம். கண்டிப்பாக் கட்டீருவோம். பிரியாணியே நமக :D

// லதானந்த் said...

பிரியாணி அருமை.
என்னோட பிளாக்
www.lathananthpakkam.blogspot.com
படிச்சுப்பாருங்க. நம்க்குள்ள ஒரு ஒத்துமை தெரியும் //

வாங்க லதானந்த். உங்க பதிவுகளைப் படித்தேன். முடிந்தவரை வந்து படிக்கிறேன். நீங்களும் தொடர்ந்து வரனும்.

said...

// Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இந்தப் படம். பாருங்க காதலன் காதலிக்கு முத்தம் குடுக்குற மாதிரி இருக்கு//

முத்தம் கொடுத்த பின்...காதலன் ஏதோ சொல்ல, காதலி போங்க-ன்னு திரும்பிக்கிட்டு வெட்கப்படுற மாதிரி-ல்ல இருக்கு! :-)
சேமிச்சிக்கிட்டேன், படத்தை :-) //

சேமிச்சு என்ன பண்ணப் போறீங்க? இதே மாதிரி யார் கிட்டயோ முத்தம் கொடுக்க முயற்சி செய்யப் போறீங்களா? :D

// இந்தப் பிரியாணி சூப்பர்! 27 Dresses இன் ரொம்பவே இயல்பான விமர்சனம்.///

இது விமர்சனம் இல்லை ரவி. பாத்தேன். நல்லாருந்துன்னு சொல்றதுக்கு.

// திருமணத்தில் மணப்பொண்ணு வரும் போது, மணமகன் முகம் பார்க்கணும்-னு கெவின்/ஜேன் வருவாய்ங்க! ஆனா குடிச்சிப்போட்டு ஆடும் அந்த டான்ஸ் மற்றும் பாட்டு படத்துலயே சூப்பர்! பாட்டின் முடிவில் வரும் முத்தக் காட்சியைப் போடுவதற்குப் பதிலாகத் தான் பூக்களின் முத்தக் காட்சியைப் போட்டீங்க போல! :-)) //

முத்தக்காட்சி போடலைன்னு சொல்வீங்க. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு போடச் சொல்வீங்க. ஆன்மீகச் செம்மல் இப்பிடியெல்லாம் பேசுறது நல்லதில்லை.

// அடுத்த என்ன பிரியாணி-ன்னு சொல்லுங்க!//

அடுத்து என்ன... கமகமக்கும் சீலா மீன் பிரியாணிதான் ;) ரெடியா... மூக்கு மட்டுமில்லை. நாக்கையும் தீட்டிக்கிட்டு வந்தாத்தான் கெடைக்கும்.

said...

அந்நியன் படத்துல கூமாரீஈஈஈஈஈன்னு பாடுவாரே..//


:))))


நான் உங்க ஊருக்குப் போயிருந்த பொழுது போக முடியாமல் போன இடம். இப்படி படங்களில் பார்க்கத்தான் கிடைக்குது.

said...

பிரியாணி மணமும், ட்யூலிப் பூக்களின்
வாசமும் கலந்த கலப்பு மணம் ரொம்ப நல்லாருக்கு!!
நான் யூஎஸ் போயிருந்தபோது பார்க்க விரும்பிய இடங்கள் இப்பூந்தோட்டமும்
ஸ்ட்ராபெரீ வயலும். ஆனால் வாய்க்கவில்லை.

said...

சூப்பர் பிரியாணி ஜிரா ;))

said...

ஜிரா,நல்லா வந்திருக்கு பிரியாணி. பாவம் அந்தப் பொண்ணும் மாப்ப்பிள்ளையும் நல்லா சந்தோஷமா இருக்கட்டும் டியூலிப் ஷோ பிரமாதம். எப்போதான் ராகவனோட தங்கமணி அங்க வருவாங்களோ...ஹ்ம் :)

said...

இந்தத் தோட்டங்களைப் பற்றிய டிவிடி பார்த்திருக்கிறேன் ஜிரா!

படங்கள் செம அசத்தலா எடுத்துறிக்கீங்க!

சினிமா விமரிசனமும் தூள்!

அடூத்த ப்ளேட்டுக்கு நான் ரெடி!

said...

தம் பிரியாணி தம் ;-)

ஏதோ சமையல் குறிப்போன்னு கொஞ்சம் தாமதிச்சுத் தான் வந்து பார்த்தேன். வடை பாயாசம் போட்டு, கிடாய் வெட்டிக் கலக்கீட்டீங்க

said...

ஜிரா! அருமையான பிரியாணி! ரொம்ப சுவையா இருந்தது.

said...

// சின்ன அம்மிணி said...

படம் பாக்கணுங்கற உணர்வை ஏற்படுத்திட்டீங்க. டூலிப் நிழற்படங்கள் அருமை. //

படத்தைக் கண்டிப்பா பாருங்க. நிச்சயம் ரசிக்கத்தகுந்த படம்.

// Blogger Divya said...

படங்கள் சூப்பரோ சூப்பர்!

\\அத்தனை படங்கள்ளயும் எனக்குப் பிடிச்சது இந்தப் படம். பாருங்க காதலன் காதலிக்கு முத்தம் குடுக்குற மாதிரி இருக்கு. மலர்கள் மனதை பதமாக்கும். இதமாக்கும். எவ்வள்வு உண்மை. கண்களுக்கும் கருத்துக்கும் குளுமையோ குளுமை.\\

நல்லாயிருக்கு வர்ணனை:)) //

ஹி ஹி நன்றி திவ்யா. ஒங்க கதைய விடவா நான் வர்ணனைல எழுதீர்ரேன். :)

said...

// இலவசக்கொத்தனார் said...
நான் உங்க ஊருக்குப் போயிருந்த பொழுது போக முடியாமல் போன இடம். இப்படி படங்களில் பார்க்கத்தான் கிடைக்குது. //

மிஸ் பண்ணீட்டீங்க கொத்ஸ். ரொம்பவே நல்ல எடம். கண்டிப்பா அடுத்த வாட்டி போயிருங்க. நிச்சயம் பாக்க வேண்டிய இடம்.

//Blogger நானானி said...

பிரியாணி மணமும், ட்யூலிப் பூக்களின்
வாசமும் கலந்த கலப்பு மணம் ரொம்ப நல்லாருக்கு!!
நான் யூஎஸ் போயிருந்தபோது பார்க்க விரும்பிய இடங்கள் இப்பூந்தோட்டமும்
ஸ்ட்ராபெரீ வயலும். ஆனால் வாய்க்கவில்லை. //

ஆமா. யூஎஸ்லயும் இப்ப டூலிப் தோட்டங்கள் வைக்கிறாங்களாம். அதுவும் அங்கிருக்கிற டச்சுக்காரங்கதானாம். ஸ்ட்ராபெர்ரி எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அந்த வயலப் பாக்கனும்னு இப்ப ஆசையா இருக்கே.....

said...

நீங்க செஞ்சு வச்ச பிரியாணியைச் சாப்புட இம்புட்டு நாளாகிப் போச்சு இராகவன். ஆனாலும் நல்லாவே இருக்கு. முதல் பாதி சாப்புட்டதோட வயிறு நிறைஞ்சுப் போச்சு. :-)