Saturday, June 14, 2008

தசாவதாரம் விமர்சனம்

ஹறி ஓம் நாறாயணாய நமக

இனிமேல் இந்த விமர்சனத்தைப் படிக்கின்றவர்கள் ஹறியருளால் திரைப்படத்தின் கதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்படியால்...விரும்பதாவர்கள் மேற்கொண்டு படிக்காமலும்...விரும்புகிறவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இல்லாதிருக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

உலகநாயகன் என்று தமிழ் கூறும் திரையுலகத்தாலும் ரசிகர்களாலும் போற்றப்படும் திரு.தாமரைநகையானாகிய கமல்ஹானசன் நடித்த தசாவதாரம் திரைப்படமானது கி.பி 12ம் நூற்றாண்டிலே... அதாவது கொடுங்கோற் சைவர்கள் பேயாட்சி செய்த ஊழிக்காலத்தில்...உத்தமர்களும் அமைதிவிரும்பிகளும் நற்சிந்தனையாளர்களுமாகிய வைணவர்கள் நாள்தோறும் அல்லலுற்று அழுது தொழுது பயனில்லாமல் போயிருந்ததுமான பாவப்பட்ட பொழுதுகளில் தொடங்குகிறது.

நம்பிராஜன் பாத்திரத்தில் வீரம் கொப்புளிக்க நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல். ஆளுடைப்பிள்ளையாரைப் போலச் சிறுவனுக்கு வேடமிட்டுக் கல்லெறிய வைத்த கமலின் சிந்தனை சமயவொற்றுமை என்பதேயன்றி வேறொன்றில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணரும் வகையில் இருப்பதை மறுக்கவே முடியாது. அஞ்சும் எட்டும் ஒன்றுதான் என்ற நற்பண்பு எல்லாரும் பழக வேண்டியதேயானாலும் உயிரே போனாலும் அஞ்செழுத்தைச் சொல்ல மாட்டேன் என்று ஆவேசம் கொண்டு எட்டெழுத்தை முழங்குவது தான் அஞ்சாம்படை இல்லை என்று காட்டத்தான் என்பதையும் படம் பார்க்கும் அனைவரும் குற்றமற உணர்வர்.

முப்புரி நூலைக் காட்டி...பிரதோஷாங்கள் சூழ்ந்த மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷமும் சூழ நேறிடும் என்று மிரட்டும் பொழுது ஒரே கல்லில் இரண்டு மாந்தோப்பையே அடித்து விடும் அறிவாற்றலை வியந்து வியந்து பாராட்ட வேண்டியிருக்கும் என்பதையும் யாரும் மறந்து விட முடியாது. எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போகாது என்று சொல்வது கூட நமக்கெல்லாம் கணக்குப் பாடம் எடுக்கும் சீறிய நல்லெண்ணம் என்பது போற்றுதலுக்குரியது.

இப்படிப் பட்ட புளகாங்கிதங்களோடும் தொடங்கிய படம் பலப்பல நாடுகளுக்கும் செல்கிறது. நாம் திரையில் பார்த்துப் பலகாலங்கள் ஆகியிருக்கும் கே.ஆர்.விஜயா, நாகேஷ், ஜெயப்பிரதா மற்றும் ரேகா ஆகியோரை இந்தப் படத்தில் மீண்டும் காண முடிகிறது. இந்தப் படத்தின் சிறப்பே அதனுடைய தொடர்ச் சங்கிலிதான். தொடங்கிய இடத்திலிருந்து ஓங்கி உத்தமன் உலகளந்தது போல தொடர்பு விட்டுவிடாமல் செல்வதுதான். ஆனால் அந்த வளர்ச்சிக்கு முடிவே கிடையாது என்று இறுதியில் நமக்குத் தெரியும் பொழுது இறைவனின் அருளுக்கும் முடிவே கிடையாது என்ற உண்மை புலப்படும்.

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் சென்ற காகுந்தன் இந்நாளில் சுனாமியாக வந்து உலகைக் காத்த உன்னதச் சித்திரம் தசாவதாரம், உண்மையிலேயே சுனாமி வந்த பொழுது மாமல்லபுரத்தில் முருகன் கோயில் வெளிவந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது... அந்தக் கோயிலைப் பெயர்த்தெடுத்து வேறொரு சமயத்தைச் சார்ந்த யாரோ கடலில் போட்டிருக்கக் கூடும் என்ற எண்ணுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்க விஞ்ஞானியின் கிருமி பாமை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற அமெரிக்காவிலிருந்து மெரினாபீச் வரையில் பெருமாள் சிலையைத் தூக்கிக்கொண்டு அசினோடு ஓடிக்கொண்டேயிருப்பதுதான் கதை. கடைசியில் கடவுளே காப்பாற்றுவதுதான் கதை. இந்தக் கதையில் அலங்காரமாக பத்து கமல்கள் இருப்பதுதான் தசாவதாரம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கமல் மெனக்கெட்டிருக்கிறார் என்பதே உண்மை. அத்தனை அவதாரங்கள் எடுத்த பொழுதிலும் ராமனும் கண்ணனும் வைணவர்கள் கொண்டாடுவது போல பலராம் நாயுடுவும் பூவராகனுமே பார்க்கின்றவர்கள் மனதில் திருப்பதி வெங்கடேசர் தாடைக் கற்பூரம் போல ஒட்டிக் கொள்கிறார்கள். பலராம் நாயுடு காமெடி கலக்கல் என்றால் பூவராகன் நேர்மைக் கலக்கல்.

பாட்டி கமலும் நன்றாகத்தான் இருக்கிறது. குறிப்பாக குரலும் பேச்சும். வில்லனாக வரும் ஃப்ளெச்சர் கமலிம் நடிப்பும் அருமை. அந்த அப்பாவி முஸ்லீம் இளைஞன் கமலும் மனதில் நிற்கிறார். இருந்தாலும் நம்மை ராமபாணம் பட்ட அசுரர்கள் போல எரிச்சல் பட வைப்பது விஞ்ஞானி கமல்தான். சிலபல இடங்களில் ஹைபர் டென்ஷன் அசின் அந்த எரிச்சல்களைக் குறைக்கிறார் என்பதும் உண்மை.

இசையா? யாரோ ஹிமேஷ் ரேஷமைய்யாவாம். அவரைப் படத்தில் வரும் கற்பனைப் பாத்திரமான நம்பிராஜனின் இடத்தில் வைத்துப் பார்க்கப் பலர் விரும்பியிருப்பார்கள். அத்தனை அலுப்பூட்டும் இசை. முகுந்தா பாடல் மட்டும் தேவலாம். பேசாமல் தேவிஸ்ரீ பிரசாத்தையே பின்னணியோடு பாடல்களுக்கும் இசையமைக்கச் சொல்லியிருக்கலாம். அட... தேவையாவது கூப்பிட்டிருக்கலாம். ஹிந்தி ரசிகர்களை மனதில் வைத்து ரேஷமைய்யாவை அழைத்து வந்திருக்கிறார்கள். அதே போலப் பாடல் காட்சிகளும் அலுப்போ அலுப்பு. எழுந்து வெளியே போய்விடலாமா என்ற அளவிற்கு. அது தெரிந்துதானோ என்னவோ பாடல்களுக்கு நடுவில் சில கதைக்காட்சிகளையும் காட்டி நம்மை இருக்கையை விட்டு எழவிடாமல் செய்கிறார்கள்.

ஒரு சாதாரண ரசிகனாகப் பார்ப்பதற்கு படம் நன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாகப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு வைணவராக இருந்தால் படம் முழுக்கவே கண்டபடிக்குத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கும். அமெரிக்க வில்லன் கமல், ஜப்பான் கமல் மற்றும் ஜார்ஜ் புஷ் தவிர்த்து அனைத்து கமலுக்கும் விஷ்ணுவின் பெயர்கள்தான். அதுவும் இல்லாமல் கமலின் தந்தையின் பெயர் ராமசாமி நாயக்கர். கமல் ஏறும் லாரிகள் படகுகள்...அதிலெல்லாம் ராமானுஜம், ஸ்ரீராமஜெயம், கோவிந்தசாமி...இப்பிடி விஷ்ணுவின் பெயர்கள் இருக்கும். அதாவது கமல் விஷ்ணு சிலையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார் அல்லவா. ஆகையால் அந்தப் பெயர்கள் வருவது பொருத்தமாகவும் பார்க்கின்றவர்களை மெய்சிலிரிக்க வைக்கவும் செய்யும். அதிலும் ரயிலில் இருந்து விழும் விஷ்ணு சிலை ஆற்று மணலில் நட்டுக்குத்தலாக நிற்கும் பொழுது பின்னணி இசையோடு நமக்கு மெய்சிலிர்க்கிறது. இராம நாராயணா! என்று உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.

கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டிருந்த கமல்..கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஹி ஹி. இரண்டுக்கும் பொருல் வெவ்வேறு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் சில கமல் ரசிக நண்பர்கள் அந்த வசனத்தைச் சொல்லி பேரானந்தத்தோடு மகிழ்ந்தது புன்னகைக்க வைத்தது. அதே போல கருணாநிதி ஜெயலலிதா காட்சிகளும் காமெடியே. படத்தில் மல்லிகா ஷெராவத்தும் இருக்கிறார்.

படம் முடியும் பொழுது 12ம் நூற்றாண்டில் உள்ளே போடப்பட்ட கோவிந்தராஜன் சிலை வெளியே வந்துவிடுவது போலக்காட்டுகிறார்கள். அதைப் பார்க்கின்ற வைணவர்களுக்கு....டச்சுக்காரர்கள் கடலில் போட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வெளியே வந்தது போல....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல..... கோவிந்தராஜனும் வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம் எழுவது நிச்சயம். அந்த ஏக்கத்தில் தவறேதும் இல்லை.

மொத்தத்தில் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். பார்க்கவும் வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்புதான். ஆனால் கமலுக்கு ஒரு அறிவுரை. பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.

தசாவதாரம் வெற்றிப்படமாக அமைய எனது வாழ்த்துகள்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

57 comments:

கோபிநாத் said...

நல்ல விமர்சனம் ஜிரா ;)

\\பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.
\\\

வழிமொழிகிறேன் ;)

Athisha said...

ஆஹா படம் சாமி படமா

மங்களூர் சிவா said...

/
நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்புதான்
/

:)))))))))))

MyFriend said...

//மொத்தத்தில் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். பார்க்கவும் வேண்டும்.//

ரிப்பீட்டேய்.. :-)

G.Ragavan said...

// கோபிநாத் said...

நல்ல விமர்சனம் ஜிரா ;)

\\பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.
\\\

வழிமொழிகிறேன் ;) //

வாங்க கோபிநாத். இந்த மேக்கப்-மிமிக்கிரியை விட்டு கமல் வெளிய வரனும். அதுதான் நல்லது. :) நானும் நீங்க வழிமொழிஞ்சதை ஆதரிக்கிறேன் :D

// அதிஷா said...

ஆஹா படம் சாமி படமா //

ஆமா ஆமா ஆ"சாமி" படந்தான் அதிஷா :)

ஷைலஜா said...

ஹறி ஓம் நாறாயணாய நமக..//

என்ன ஹறி நாறாயணாவா? ஏன் இப்படி வல்லினமாகிப்போனீங்க ஜிரா?:) படம் அப்படி பாதிப்பை உண்டாக்கி விட்டதா?:0
!!!
>>>>கி.பி 12ம் நூற்றாண்டிலே... அதாவது கொடுங்கோற் சைவர்கள் பேயாட்சி செய்த ஊழிக்காலத்தில்......//

ஓஹோ வல்லினப்பிரயோகத்துக்கு இதான் காரணமா?

>>>முப்புரி நூலைக் காட்டி...பிரதோஷாங்கள் சூழ்ந்த மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷமும் சூழ நேறிடும் என்று மிரட்டும் பொழுது ஒரே கல்லில் இரண்டு மாந்தோப்பையே அடித்து விடும் அறிவாற்றலை வியந்து வியந்து பாராட்ட வேண்டியிருக்கும் என்பதையும் யாரும் மறந்து விட முடியாது. எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போகாது என்று சொல்வது கூட நமக்கெல்லாம் கணக்குப் பாடம் எடுக்கும் சீறிய நல்லெண்ணம் என்பது போற்றுதலுக்குரியது.>>>

ஒன்று புரிகிறது தேவை இல்லாமல் இதுபோன்ற காட்சிகளைப்படத்தில் காட்டி இருக்கிற ஒற்றுமையை சிதைப்பது தவறு என்று.

>>>>மெனக்கெட்டிருக்கிறார் என்பதே உண்மை. அத்தனை அவதாரங்கள் எடுத்த பொழுதிலும் ராமனும் கண்ணனும் வைணவர்கள் கொண்டாடுவது ...//


நரசிம்மர் இதுல சேர்க்கலையே?

>>>>ஒரு சாதாரண ரசிகனாகப் பார்ப்பதற்கு படம் நன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாகப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு வைணவராக இருந்தால் படம் முழுக்கவே கண்டபடிக்குத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கும்//

அப்படியானால் போய்ப்பார்க்கவேண்டியதுதான்!


>>>படம் முடியும் பொழுது 12ம் நூற்றாண்டில் உள்ளே போடப்பட்ட கோவிந்தராஜன் சிலை வெளியே வந்துவிடுவது போலக்காட்டுகிறார்கள். அதைப் பார்க்கின்ற வைணவர்களுக்கு....டச்சுக்காரர்கள் கடலில் போட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வெளியே வந்தது போல....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல..... கோவிந்தராஜனும் வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம் எழுவது நிச்சயம். அந்த ஏக்கத்தில் தவறேதும் இல்லை.///

கண்ணனுக்கும் கந்தனுக்கும் பேதமில்லை ஜிரா!..நான் அப்படித்தான் நினைக்கிறேன்


..//ஆனால் கமலுக்கு ஒரு அறிவுரை. பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.//

பலப்பல வேடங்களே மாறுதல்தானே?
நொந்து நீங்க இப்படி விமர்சனம் செய்வதைப்பார்த்தால் பாஸ்மார்க் வங்கலோயோன்னு தோன்றுகிறதே...ஆனா விமர்சனம் வித்தியாசமா சுவையா இருக்கு படிக்க.

..

திங்கள் சத்யா said...

நேர்மையாக விமர்சித்துப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சரியான பார்வையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தால் நிச்சயம் நீங்கள்தான் பாராட்டுக்குறியவர்கள். நானும் படத்தைப் பார்க்கிறேன்... என்னதான் இருக்கிறதோ!

கானா பிரபா said...

படம் முடிந்து வந்து இப்பொது தான் ஒவ்வொருவர் விமர்சனம் படிக்கிறேன். உங்க பார்வை சிறப்பா இருக்கு ராகவன்.

VSK said...

\\பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.
\\\

இதையேதான் நானும் உணர்ந்தேன் ஜிரா.
எவ்வளவு பெரிய கலைஞன் கமல்!
இப்படி ஆணவத்தால் "உருக்குலைவது" முறையா?

ஹ'றி' மட்டும் இல்லை ஷைலஜா!

சீ'றி'யையும் பாருங்கள்!

ஆடவல்லான் ஆட்டத்தை ஆனந்தமாக அரங்கன் பள்ளிகொண்டு ரசிப்பதாக அமைந்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கோயிலுக்குள்ளும் [சங்கரன்கோயிலைத் தவிர] ஒரு பிரச்சினையை நுழைத்திருக்கும் கமலின் நோக்கு சந்தேகிக்க வைக்கிறது.

k4karthik said...

நல்ல விமர்சனம் முருகா!!

சின்னப் பையன் said...

கமல் விஜயைப் பார்த்து நிறைய கத்துக்கவேண்டியது இருக்குன்னு சொல்றீங்களா?... ( நம்ம டாக்டர் மீசையைக்கூட மாத்தாமல் எல்லா படத்துலேயும் ஒரே மாதிரி நடிக்கிறாரே)...

G.Ragavan said...

// Blogger மங்களூர் சிவா said...

/
நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்புதான்
/

:))))))))))) //

நீங்க ஏன் சிரிக்கிறீங்கன்னு எனக்குப் புரியுது. அதுக்குத்தானே சொன்னது... :-)

// Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

//மொத்தத்தில் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். பார்க்கவும் வேண்டும்.//

ரிப்பீட்டேய்.. :-) //

யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சேய். ரிப்பீட்டேய்!

5:17 AM

k4karthik said...

//சுனாமி வந்த பொழுது மாமல்லபுரத்தில் முருகன் கோயில் வெளிவந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது...//

//டச்சுக்காரர்கள் கடலில் போட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வெளியே வந்தது//

அடிக்கடி நீங்க முருகனு நிருபிக்குறேங்க

M.Rishan Shareef said...

ஆஹா..
இதற்குப் படமே பார்த்திருக்கலாம் :)

G.Ragavan said...

// ஷைலஜா said...

ஹறி ஓம் நாறாயணாய நமக..//

என்ன ஹறி நாறாயணாவா? ஏன் இப்படி வல்லினமாகிப்போனீங்க ஜிரா?:) படம் அப்படி பாதிப்பை உண்டாக்கி விட்டதா?:0 //

ஹா ஹா ஹா... இந்தக் கேள்வியை இன்னொருத்தரும் கேக்கப் போறாரு. அவரும் கேக்கட்டும். சேத்தே விடை சொல்றேன். :-) நாறாயணா என்ற பயன்பாட்டைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.


// >>>>கி.பி 12ம் நூற்றாண்டிலே... அதாவது கொடுங்கோற் சைவர்கள் பேயாட்சி செய்த ஊழிக்காலத்தில்......//

ஓஹோ வல்லினப்பிரயோகத்துக்கு இதான் காரணமா? //

:-) இதுவும்...

// >>>முப்புரி நூலைக் காட்டி...பிரதோஷாங்கள் சூழ்ந்த மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷமும் சூழ நேறிடும் என்று மிரட்டும் பொழுது ஒரே கல்லில் இரண்டு மாந்தோப்பையே அடித்து விடும் அறிவாற்றலை வியந்து வியந்து பாராட்ட வேண்டியிருக்கும் என்பதையும் யாரும் மறந்து விட முடியாது. எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போகாது என்று சொல்வது கூட நமக்கெல்லாம் கணக்குப் பாடம் எடுக்கும் சீறிய நல்லெண்ணம் என்பது போற்றுதலுக்குரியது.>>>

ஒன்று புரிகிறது தேவை இல்லாமல் இதுபோன்ற காட்சிகளைப்படத்தில் காட்டி இருக்கிற ஒற்றுமையை சிதைப்பது தவறு என்று. ///

அதுவே என்னுடைய கருத்தும். ஆனால் கமல் விரும்பிச் செய்தது போலத்தான் தெரிகிறது.

// >>>>மெனக்கெட்டிருக்கிறார் என்பதே உண்மை. அத்தனை அவதாரங்கள் எடுத்த பொழுதிலும் ராமனும் கண்ணனும் வைணவர்கள் கொண்டாடுவது ...//


நரசிம்மர் இதுல சேர்க்கலையே? //

ஆமால்ல.... நரசிம்மரைப் போலத்தான் கிருஷ்ணவேணிப் பாட்டி படத்துல வர்ராங்களே...

// >>>>ஒரு சாதாரண ரசிகனாகப் பார்ப்பதற்கு படம் நன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாகப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு வைணவராக இருந்தால் படம் முழுக்கவே கண்டபடிக்குத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கும்//

அப்படியானால் போய்ப்பார்க்கவேண்டியதுதான்! //

கண்டிப்பாகப் போய்ப் பார்க்க வேண்டியதுதான்.


// >>>படம் முடியும் பொழுது 12ம் நூற்றாண்டில் உள்ளே போடப்பட்ட கோவிந்தராஜன் சிலை வெளியே வந்துவிடுவது போலக்காட்டுகிறார்கள். அதைப் பார்க்கின்ற வைணவர்களுக்கு....டச்சுக்காரர்கள் கடலில் போட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வெளியே வந்தது போல....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல..... கோவிந்தராஜனும் வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம் எழுவது நிச்சயம். அந்த ஏக்கத்தில் தவறேதும் இல்லை.///

கண்ணனுக்கும் கந்தனுக்கும் பேதமில்லை ஜிரா!..நான் அப்படித்தான் நினைக்கிறேன் ///

நானும் மறுக்கலையே ஷைலஜா. :-)


// ..//ஆனால் கமலுக்கு ஒரு அறிவுரை. பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.//

பலப்பல வேடங்களே மாறுதல்தானே?
நொந்து நீங்க இப்படி விமர்சனம் செய்வதைப்பார்த்தால் பாஸ்மார்க் வங்கலோயோன்னு தோன்றுகிறதே...ஆனா விமர்சனம் வித்தியாசமா சுவையா இருக்கு படிக்க. //

பலப்பல வேடங்கள் மாறுதல்கள்தான். ஆனா மாறுதல்கள் மட்டுமே செய்வேன்னு சொன்னா எப்படி?

ambi said...

//அதாவது கொடுங்கோற் சைவர்கள் பேயாட்சி செய்த ஊழிக்காலத்தில்...உத்தமர்களும் அமைதிவிரும்பிகளும் நற்சிந்தனையாளர்களுமாகிய வைணவர்கள் //

யப்பா! பதிவு முழுக்க ஒரே உள்குத்து. சாம்பிளுக்கு இது ஒன்னு. :))

ambi said...

ஆக தமிழ் கடவுளான முருகனை மல்லையில் கடலில் தூக்கி போட்டது யாரு?னு கேக்க வரிங்க இல்லையா? :p

ambi said...

முக்ய ஆட்கள் வந்ததும் இரண்டாம் ரவுண்டு கும்மிக்கு வரேன். :)))

Sridhar Narayanan said...

ஒன்ரு நிச்சயம். நீங்கள் எதையோ தேடிப் போய் வேரு எதையோ பார்த்திருக்கிரீர்கள்.

அவர் புதுமையாக திரைக்கதை அமைத்திருக்கிரார். நீங்களும் ஏதோ புதுமையாக விமர்சித்திருக்கிரீர்கள். அதையும் இங்கு ஆய்ந்து தோய்ந்து மருமொழியிடுகிறோம். அம்புட்டுதேன்.

Dreamzz said...

thirumbi vandhu padikiren. innaiku thaan parka poren :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

படத்தை வெள்ளித் திரையிலும் பாக்கலாம்!
அவங்க அவங்க மனத் திரையிலும் பாக்கலாம்!

இரண்டாவதாச் சொன்ன திரையில் பாத்துப் பண்ணிய விமர்சனம் அமர்க்களம் ஜிரா! அமர்க்களம்! :-)

படத்துல வர லாரி, பஸ், படகு-ன்னு இத்தினி பேர்லயும் "அவரு" தான் வராறா? அடங்கொக்க மக்கா! அடியேன் கூட இத நோட் பண்ணலியே!

இதுக்குத் தான் எங்கப் பதிவுலகப் பறந்தாமன் ஜிறா வேணும்ங்கிறது!

ஹறி ஓம் நமோ நாறாயணாய நமக!
:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//டச்சுக்காரர்கள் கடலில் போட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வெளியே வந்தது போல....//

அதான் பழிக்குப் பழி வாங்க, டச்சு நாட்டு நகரமான ஆம்ஸ்டற்டாமில், எங்க ஜிறா இப்போ பாசறை முகாம் இட்டிருக்காரு! டச்சர்களே ஓடுங்கள்! துள்ளி வருகுது வேல்! :-)

//ஆக தமிழ் கடவுளான முருகனை மல்லையில் கடலில் தூக்கி போட்டது யாரு?னு கேக்க வரிங்க இல்லையா?//

தமிழ்க் கடவுளை மட்டும் தூக்கிப் போடலைப்பா! அதான் சொல்லி இருக்காரே! அம்புட்டு பெரிய கோயிலே வெளீல வந்திருக்குன்னு! களவாணிப் பய பசங்க, கோயிலையே ஃப்வுண்டேசனோடு நகர்த்திக் கடலில் தூக்கிப் போட்டிருப்பானுக! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரங்கராஜ நம்பி கதாபாத்திரம் கதையுடன் ஒட்டியதான்னே தெரியலை!

சென்னையில் ஒரு சிலை ஒதுங்கறதாக் காட்டுறதுக்காக, படத்தின் துவக்கத்தில் இப்பிடி ஒரு கற்பனை/உண்மை கலந்த கதையைக் கமல் எதுக்குச் சொல்ல வந்தாரு என்பது அந்த ஹறி பறந்தாமனுக்கே வெளிச்சம்! :-)

மத்தபடி இதைப் பற்றி முன்னரே இந்தப் பதிவில் சொல்லி இருக்கேன் - http://madhavipanthal.blogspot.com/2008/05/kamal-haasan-his-naked-lies.html

ஒரே ஒரு ஆறுதல்! எங்க ஜிறா பாஷையில் சொல்லணும்னா,
அடிச்சிட்டு அஞ்சு ரூவா கொடுக்கறா மாதிரி...
"உண்மையில் கொஞ்சம் கற்பனையும் கலந்துருக்கேன்"-னு கமல் படத்தின் துவக்கத்தில் டிஸ்கி போட்டுட்டாரு!

(கேஆரெஸ் பதிவில் சொல்லித் தான், கமல் மனச மாத்திக்கிட்டு, அப்படிப் போட்டாரு-ன்னு யாருக்கும் சந்தேகம் வரலையே? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

படத்தின் இசையை எம்.எஸ்.வி-இளையராஜா கூட்டணிக்கு கொடுத்திருந்தா பாட்டெல்லாம் இருவரும் கலக்கி இருந்திருப்பாங்க! பக்தி ட்யூனுக்கு எம்.எஸ்.வியும், அந்த அவ்தார் டான்ஸ் ஷோ ட்யூனுக்கு ராஜாவோ/ஹாரிஸோ கூட சூப்பரா செஞ்சிருப்பாங்க!

யாருப்பா இந்த ஹிமேஷ் மியாமியா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்பு தான்//

வேர் இஸ் ஜோ, வென் வீ நீட் ஹிம் தி மோஸ்ட்? :-)))

நகைச்சுவைப் படம் பற்றிய நகைச்சுவை விமர்சனமும் நகைச்சுவையாகவே இருந்தது என்பதை நகைச்சுவையுடன் சொல்லிக் கொள்கிறேன்! :-)

(அட, நல்லாச் சிரிச்சிக்கிட்டே படமும் பார்த்தேன், விமர்சனமும் படிச்சேன்-னு சொன்னேன்-பா! நாமல்லாம் தமிழிலேயே மொத்தம் ஐந்து மொழியில சொல்வோம்-ல, பலறாம் நாயுடு மாதிரி? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மல்லிகா ஷெராவத் படத்துல இருக்காங்களா?
சரியாவே தெரியலை!
கமல் "அதை" மி(கி)ஸ் பண்ணிட்டாரோ? :-)))

கேஆரெஸ்ஸின் விமர்சனம் எங்கே-ன்னு யாரும் கேக்கக் கூடாது! சொல்லிட்டேன்! அதை ஜிறாவின் இந்தப் பதிவிலேயே படித்துக் கொள்ளவும்! :-))

Anonymous said...

ஆளவந்தான் நம்பர் ஓன் ,தசாவதாரம் நம்பர் டூ வாழ்க உலக நாயகனின் சாதனைகள்.

ஏதோ எலிமெண்ட்டிரி ஸ்கூல் மாறு வேச போட்டி பார்த்த மாதிரி இருக்கு,

சுனாமி காட்சிகள் க்ராபிஸ் அபத்தம்.. ஏன் சென்னையில் ஒழுங்காக க்ராபிக்ஸ் செய்பவர்களே இல்லையா ??

Anonymous said...

படத்தில் அசின் பெருமாளே பெருமாளே என்று அடிக்கடி சொல்லி இருப்பது எரிச்சல் வர வைத்து இருக்கிறது. கமலின் நோக்கமும் அது தானே !!

கூடவே சம்பந்தல் இல்லாமல் மடம், தீட்டு, ராமசாமின்னு இழுத்து இருப்பது படி பேஜாரு..

ரசித்த சில காட்சிகள்..

1. ரா ஆபிசர் வரும் ஆரம்ப காட்சிகள்
2. பாட்டியின் காட்சிகள்
3. நம்பியின் காட்சிகள்.

மத்தது எல்லாம் எரிச்சல் .. அய்யோ என்ற எண்ணம் தான்

இலவசக்கொத்தனார் said...

யோவ், எங்க நான் போட்ட காமெண்ட்?

Sridhar Narayanan said...

//சென்னையில் ஒரு சிலை ஒதுங்கறதாக் காட்டுறதுக்காக, படத்தின் துவக்கத்தில் இப்பிடி ஒரு கற்பனை/உண்மை கலந்த கதையைக் கமல் எதுக்குச் சொல்ல வந்தாரு என்பது அந்த ஹறி பறந்தாமனுக்கே வெளிச்சம்! :-)//

கே ஆர் எஸ் அண்ணா,

இது என்ன புதுசா நமக்கு. இப்படித்தானே நாம பல புரானக் கதைகளை உருவாக்கியிருக்கிறோம்.

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவினால் வேறு எங்கோ ஒரு பெரும் சக்தி வெளிப்பட வாய்ப்பிருக்கின்றது என்று சொல்லப்படும் chaos theory-ன் அடிப்படையில் சொல்லப்பட்ட கதை.

கடலுக்கடியில இருக்கும் techtonic plates-ன் உரசல்கள் மூலம் சுனாமி ஏற்படுகிறது. எப்பொழுதோ விழுந்த ஒரு கனமான கல் சிறிது சிறிதாக ஏற்படுத்திய அழுத்தத்தினால் அது பின்னர் பெரும் சக்தியாக வெளிப்படுகிறது.

பல நூற்றாண்டுகள் பின்னர் ஒரு மாபெரும் நாசகார சக்தியை அழிக்க பெருமாள் கடலுக்கடியில் போய் உட்கார்ந்து கொள்கிறார். அப்படியும் சொல்லலாம்.

இன்னமு எத்தனைப் பதிவுகளில் இதே பின்னூட்டத்தை போட வேண்டுமோ :-))

Sridhar Narayanan said...

உற்சவர் ஊர்வலமாக போகும்பொழுது சிலரின் வாழ்க்கையில் மாறுதல்களை உண்டாக்கி செல்கிறார்.

- பல வருடங்களாக காணாத தன் மகனை ஆராவமுதனை, (ஆறாவதுதானே - பல்ராம் நாயுடு) மண்ணுக்காக போராடும் படிக்காத மேதை வின்செண்ட் பூவராகனிடம் சோகம் கரைகிறாள் பாட்டி

- மனைவியின் மேல் மாறாப்பாசம் வைத்திருக்கும் அவ்தாரின் தொண்டை கேன்சரை 'magic bullet'னால் சரி செய்கிறார்.

- மசூதி கட்டித்தர நிலம் தந்திருக்கும் முக்தாரின் உற்றார் உறவினங்களை காப்பாற்ற ஏற்பாடு செய்கிறார்

இத்தோடு தமிழக வெயிலில் இருந்து அந்த வைரஸ் வெய்லை (vail)யை தனக்குள் வைத்து பாதுகாக்கிறார் (பஞ்சலோக சிலைக்குள்)

அவருக்கு துணையாக ஒரு கடவுள் நம்பிக்கையாளளும் (ஆண்டாள்), கடவுள் அவநம்பிக்கையாளனும் (கோவிந்த்) நேரிடையாக பங்குபெற, காவலர் பல்ராம் நாயுடுவும், சுனாமி பற்றிய பரிச்சயம் உள்ள ஜப்பானிய வீரரும் தொடர்ந்து வருகிறார்கள்.

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப உணர்ச்சிவசப்படல் போல. அதான் பதிவெங்கும் எழுத்துப் பிழைகள்.


ராகவா!!

Kavinaya said...

சரி சரி... நான் படம் பார்க்கப் போறதில்ல :)

Anonymous said...

....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல.....

FYI,

Tsunami hit on year 2004. HaaHaa, The film really messup G.R. Thanks for saving me.

Muhammad Ismail .H, PHD,
http://infoismail.blogspot.com

G.Ragavan said...

// திங்கள் சத்யா said...

நேர்மையாக விமர்சித்துப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சரியான பார்வையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தால் நிச்சயம் நீங்கள்தான் பாராட்டுக்குறியவர்கள். நானும் படத்தைப் பார்க்கிறேன்... என்னதான் இருக்கிறதோ! //

பாருங்க சத்யா. கமல் மெனக்கெட்டிருபதற்காகவாவது படத்தைப் பார்க்க வேண்டும். பார்த்து விட்டு உங்கள் கருத்து என் கருத்தோடு எவ்வளவு ஒத்துப் போகிறது என்று சொல்லுங்கள்.

// Blogger கானா பிரபா said...

படம் முடிந்து வந்து இப்பொது தான் ஒவ்வொருவர் விமர்சனம் படிக்கிறேன். உங்க பார்வை சிறப்பா இருக்கு ராகவன். //

வாங்க பிரபா. நம்ம பார்வைகள் எல்லாமே ஒன்னாதான் இருந்திருக்கு. ஆனா அதைச் சொல்ற விதத்துலதான் வேறுபட்டிருக்கோம்.

ஒலிபெருக்கி said...

பரவாயில்ல நல்லாயில்ல... சூப்பரு...

சுரேகா.. said...

//உற்சவர் ஊர்வலமாக போகும்பொழுது சிலரின் வாழ்க்கையில் மாறுதல்களை உண்டாக்கி செல்கிறார்.

- பல வருடங்களாக காணாத தன் மகனை ஆராவமுதனை, (ஆறாவதுதானே - பல்ராம் நாயுடு) மண்ணுக்காக போராடும் படிக்காத மேதை வின்செண்ட் பூவராகனிடம் சோகம் கரைகிறாள் பாட்டி

- மனைவியின் மேல் மாறாப்பாசம் வைத்திருக்கும் அவ்தாரின் தொண்டை கேன்சரை 'magic bullet'னால் சரி செய்கிறார்.

- மசூதி கட்டித்தர நிலம் தந்திருக்கும் முக்தாரின் உற்றார் உறவினங்களை காப்பாற்ற ஏற்பாடு செய்கிறார்

இத்தோடு தமிழக வெயிலில் இருந்து அந்த வைரஸ் வெய்லை (vail)யை தனக்குள் வைத்து பாதுகாக்கிறார் (பஞ்சலோக சிலைக்குள்)

அவருக்கு துணையாக ஒரு கடவுள் நம்பிக்கையாளளும் (ஆண்டாள்), கடவுள் அவநம்பிக்கையாளனும் (கோவிந்த்) நேரிடையாக பங்குபெற, காவலர் பல்ராம் நாயுடுவும், சுனாமி பற்றிய பரிச்சயம் உள்ள ஜப்பானிய வீரரும் தொடர்ந்து வருகிறார்கள்.//

வணக்கம் ராகவன் சார்...வித்யாசமான கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

வணக்கம் ஸ்ரீதர் நாராயணன்...!

படத்தின் விவாதத்தில் பேசப்பட்டதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். ஆச்சர்யப்படுத்துகிறது.
இது chaos theory ஐ அடிப்படையாக வைத்து பின்னப்பட்டதுதான்.
மிகச்சரியாக புரிந்துகொண்டீர்கள்!!

உங்கள் பதிவுக்கு அனுமதி கிடைக்குமா!?

வல்லிசிம்ஹன் said...

சரிப்பா, நான் பதிவு படிக்காமிலியே பின்னூட்டம் போடரேன்.
ற ராவா மாத்திடலாம்.:)

நானும் பார்த்திருக்கேம் நாறாயணானு பல இடங்களில்
எழுதி இருப்பதைப் பார்த்திருக்கேன்.
அதுக்கும் ரவி ஏதாவது அர்த்தம் தயவு செய்து சொல்லட்டும்

k4karthik said...

//சுனாமி காட்சிகள் க்ராபிஸ் அபத்தம்.. ஏன் சென்னையில் ஒழுங்காக க்ராபிக்ஸ் செய்பவர்களே இல்லையா ?? //

அனானி அவர்களே.. முதல்லே, தைரியமா நீங்க யாருன்னு சொல்லுங்க.. அப்பாளிக்கா, சென்னைல ஆளுங்க இருக்காங்களா, இல்லையானு சொல்றேன்...

G.Ragavan said...

// VSK said...

\\பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.
\\\

இதையேதான் நானும் உணர்ந்தேன் ஜிரா.
எவ்வளவு பெரிய கலைஞன் கமல்!
இப்படி ஆணவத்தால் "உருக்குலைவது" முறையா? //

உண்மைதான் வி.எஸ்.கே. மாறுவேடப் போட்டிகள் போதும். வழக்கமான கமல் வேண்டும்.

// ஹ'றி' மட்டும் இல்லை ஷைலஜா!

சீ'றி'யையும் பாருங்கள்! //

அதெல்லாம் சரியாப் பாத்திருவீங்களே! :D

// ஆடவல்லான் ஆட்டத்தை ஆனந்தமாக அரங்கன் பள்ளிகொண்டு ரசிப்பதாக அமைந்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கோயிலுக்குள்ளும் [சங்கரன்கோயிலைத் தவிர] ஒரு பிரச்சினையை நுழைத்திருக்கும் கமலின் நோக்கு சந்தேகிக்க வைக்கிறது. //

உங்களுக்கு என்ன சந்தேகம் வருது வி.எஸ்.கே?

// Blogger k4karthik said...

நல்ல விமர்சனம் முருகா!! //

நன்றி அண்ணா :-)

// Blogger ச்சின்னப் பையன் said...

கமல் விஜயைப் பார்த்து நிறைய கத்துக்கவேண்டியது இருக்குன்னு சொல்றீங்களா?... ( நம்ம டாக்டர் மீசையைக்கூட மாத்தாமல் எல்லா படத்துலேயும் ஒரே மாதிரி நடிக்கிறாரே)... //

ஹா ஹா ஹா வேண்டாம் வேண்டாம். விஜய்யைப் பாத்து எதுவும் கத்துக்க வேண்டாம். உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணான்னு ஆயிரும் அப்புறம். :D

Sridhar Narayanan said...

சுரேகா,

:-) நான் பதிவெல்லாம் எழுத ஆரம்பிக்கவில்லை.

//படத்தின் விவாதத்தில் பேசப்பட்டதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். ஆச்சர்யப்படுத்துகிறது.
இது chaos theory ஐ அடிப்படையாக வைத்து பின்னப்பட்டதுதான்.
மிகச்சரியாக புரிந்துகொண்டீர்கள்!!//

மிக்க நன்றி! ஆனால் படத்தில் இந்த அடிப்படையை இன்னமும் சற்று அழுத்தமாக காட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அப்படி காட்டினால் படம் 'வெறும் சாமி படம்' மட்டுமாக வந்துவிடும் அபாயம் இருப்பதினால் தவிர்த்தீர்களோ என்னவோ தெரியவில்லை :-)

இன்னொரு ரசித்த விசயம் கதாபாத்திரத்தின் பெயர்கள் ஒரிஜினல் தசாவதாரதத்தோடு இருக்கும் தொடர்பு.

- ரங்கராஜன் - உலகை காப்பாற்ற வேதங்களை கடலுக்கடியில் கொண்டு மறைக்கும் மச்சமாக, இவர் ஒரு கல்லோடு கடலுக்கடியில் போகிறார்.

- கோவிந்த் - ஆமையை அச்சாக வைத்து பாற்கடலை கடைந்த்தால் வெளிவருகிறது ஆலகால விசம். இவரை அச்சாணியாக வைத்து நடக்கும் ஆராய்ச்சியில் ஆலகால விசம் உருவாகிறது

- வின்செண்ட் பூவராகன் - தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரம் பூமியை காப்பாற்றுகிறது. இந்த பூவராகன் மண்ணைக் காப்பாற்றுகிறார்.

- கபிபுல்லா - வாமனர் மூன்றடி நிலம் கேட்டார். இவரோ எட்டடி உயரத்துடன் மசூதிக்காக நிலம் கொடை செய்கிறார்.

- ஷிங்கேன் நரஹசி - இறுதியில் நரசிம்ம அவதாரம் எடுக்கிறார்.

- அவ்தார் சிங் - குரலை இழந்தாலும் உயிரை இழக்க சம்மதிக்கவில்லை. மனைவி மேல் உள்ள பாசம். மனைவியை காட்டுக்கு அனுப்பிய இராமனின் செய்கை தவறு என்பதால் அவ்தார் இந்த முடிவை மேற்கொள்கிறார் போல :-)

- பல்ராம் நாயுடு - தசாவதாரக் கதைகளில் பலராமருக்கு தனிக் கதை கிடையாது. அதே போல் இவரும் தனி கதை எதுவும் இல்லாமல் படத்தில் ஒரு துணைப் பாத்திரமாகவே வந்து போகிறார் (பூவராகவன், கபிபுல்லா, அவ்தார், நரஹசி எல்லாருக்கும் ஒரு கதை தெரிகிறது)

- கிருஷ்ணவேணி - பெயரில் கிருஷ்ணர் வருகிறார்.

Fletcher - உலகை அழிக்க வரும் கல்கியோ இவர்? உலகம் அழியவில்லை. அதனால் இந்த இறுதி அவதாரம் எடுக்கப்படவில்லை.

கற்பனைக்குதான் எல்லையே இல்லையே. :-))

தமிழன்-கறுப்பி... said...

///நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்புதான்///

இது ஜிரா...:))

TBR. JOSPEH said...

வழக்கம் போல கலக்கிட்டீங்க ராகவன்.

கமலுக்கு தன்னம்பிக்கை அதிகம் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் அது இந்த படத்தில் சற்று அதிகமாகவே ஆகிவிட்டதோ என்று நினைக்கிறேன்.

இந்த படத்தை புஷ் பார்த்திருப்பாரா? கமலின் புஷ் வேடம் கோமாளித்தனமாக இருக்கிறது என்றனர் நண்பர்கள். உண்மைதானா?

அன்று நவராத்திரியில் நடிகர் திலகத்தின் முழு திறமையைக் கொண்டு வர ஏதுவாக மிக இயற்கையாக இருந்தது திரைக்கதை. ஆனால் இவருடையது ஒரு contrived screenplay என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.அதாவது பத்து வேடம் நடிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட திரைக்கதை.. சரிதானா?

இராம்/Raam said...

எல்லாம் சரி... எதுக்கு இங்கே முருகன் வந்தாரு????

G.Ragavan said...

// Anonymous said...

....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல.....

FYI,

Tsunami hit on year 2004. HaaHaa, The film really messup G.R. Thanks for saving me.

Muhammad Ismail .H, PHD,
http://infoismail.blogspot.com //

:) இஸ்மாயில் சார். நான் என்ன சொல்ல வந்தேன்னா... 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயில் சுனாமியால வெளிய வந்தது போல..... :) 2000ம் ஆண்டு சுனாமியால இல்லை :D

// ambi said...

முக்ய ஆட்கள் வந்ததும் இரண்டாம் ரவுண்டு கும்மிக்கு வரேன். :))) //

என்ன அம்பி.. கும்மிக்கு வர்ரேன்னு சொல்லீட்டு வரவேயில்லையே... பாருங்க கே.ஆர்.எஸ் வருத்தப்படுறாரு. ஸ்ரீதர் சங்கடப்படுறாரு. :D

// Blogger Sridhar Narayanan said...

ஒன்ரு நிச்சயம். நீங்கள் எதையோ தேடிப் போய் வேரு எதையோ பார்த்திருக்கிரீர்கள்.

அவர் புதுமையாக திரைக்கதை அமைத்திருக்கிரார். நீங்களும் ஏதோ புதுமையாக விமர்சித்திருக்கிரீர்கள். அதையும் இங்கு ஆய்ந்து தோய்ந்து மருமொழியிடுகிறோம். அம்புட்டுதேன். //

ஸ்ரீதர், நான் முன்பே சொன்னது போல கடின உழைப்பு தெரிகிறது. அதில் மறுப்பேதுமில்லை. இது எனது பார்வையிலான விமர்சனம். சொல்லியிருந்த விதம் பிடிக்காவிட்டாலும் முதல் பதினைந்து நிமிடங்கள்தான் படத்தின் சிறந்த பகுதி.

SP.VR. SUBBIAH said...

/////எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போகாது என்று சொல்வது கூட நமக்கெல்லாம் கணக்குப் பாடம் எடுக்கும் சீறிய நல்லெண்ணம் என்பது போற்றுதலுக்குரியது.///

இது மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை! அது ஏன் என்றும் தெரியவில்லை!

Sathiya said...

நல்லா எழுதி இருக்கீங்க ஜிரா! பின்னூட்டத்தில் ஸ்ரீதரின் விளக்கம் அருமை!

ambi said...

//பாருங்க கே.ஆர்.எஸ் வருத்தப்படுறாரு. ஸ்ரீதர் சங்கடப்படுறாரு.//

@ஜிரா, ஹிஹி, வரலாம்னு தான் இருந்தேன். பாவம் கேஆரெஸ், ஏற்கனவே அவரை தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிச்சுட்டு இருக்காங்க மக்கள்ஸ். :p

@ஸ்ரீதர் அண்ணா,

அசின் தான் மஹாலட்சுமி, முனிவர் சாபத்துனால 12ம் நூற்றாண்டு மஹாலட்சுமி தான் சீதையா 21ம் நூற்றாண்டு அசினா வராங்க இல்லையா? :))

அப்ப மல்லிகா தான் மண்டோதரியா? :p

ambi said...

//முதல் பதினைந்து நிமிடங்கள்தான் படத்தின் சிறந்த பகுதி.//

@ஜிறா, அப்படினு உங்களை சொல்ல சொல்லி கேஆரெஸ் மிரட்டினாறா? :p

சொல்ல முடியாது, செஞ்சாலும் செஞ்சு இருப்பார் மனுஷன். :))

மனதின் ஓசை said...

50 :-)

ஜோ/Joe said...

//கமலின் புஷ் வேடம் கோமாளித்தனமாக இருக்கிறது என்றனர் நண்பர்கள். உண்மைதானா?//

உண்மை தான் ஜோசப் சார் ..ஏனென்றால் அது கோமாளித்தனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது .. இது உங்கள் நண்பர்களுக்கு புரியாதது தான் உண்மையிலேயே கோமாளித் தனம்.

T.JAY said...

பார்வை சிறப்பா இருக்கு ராகவன்.
நல்ல விமர்சனம்

G.Ragavan said...

இந்தப் பதிவு வைணவர்களுடைய மனதைப் புண்படுத்தியிருப்பதாக அறிகின்றேன். அதற்காக நான் மனம் ஒப்பி மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் சொல்ல வந்திருப்பது படத்தைப் பார்த்து விட்டு அதனால் தோன்றிய கருத்துகளை. அதைச் சொல்லும் உரிமை உண்டு. அந்த உரிமை உங்கள் மனதைப் புண்படுத்தியிருப்பதால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜிரா சொன்ன எழுத்துப் பிழையும் சொற் சுவையும் கலந்த பாணத்தை, அவர் மீதே திருப்பி விட்டுப், பதிலுக்கு விளையாடியது வெறும் விளையாட்டே!

ஆனால் இதனால் எழுத்துப் பிழைகள் மலியும் என்று என் உயிர் நண்பர் உளமாரக் கருதியதால், அடியேன் இங்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

இதனால் பலரும் தொடர்ந்து விளையாடிய கும்மிக்கும் அடியேனே பொறுப்பேற்றுக் கொண்டு, எதையும் விளக்க முற்படாது, நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்!

ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ!

Anonymous said...

நீங்கள் அனைவரும் ஒரு விஷயடத்தை முதலில் உணர வேண்டும்.....இத்தனை பேரையும் பல கோணங்களில் பேச வைத்த கமலின் படைப்பு வெற்றி படைப்புத்தானே? வேற எந்தப் படைப்பு உங்கள் அனைவரையும் இப்படி பேச வைத்திருக்கிறது? "மொட்டை" அடித்து நமக்கு நாமம் போட்டதை விட இது எவ்வளவோ மேல்.

புருனோ Bruno said...

//- ஷிங்கேன் நரஹசி - இறுதியில் நரசிம்ம அவதாரம் எடுக்கிறார்.

- அவ்தார் சிங் - குரலை இழந்தாலும் உயிரை இழக்க சம்மதிக்கவில்லை. மனைவி மேல் உள்ள பாசம். மனைவியை காட்டுக்கு அனுப்பிய இராமனின் செய்கை தவறு என்பதால் அவ்தார் இந்த முடிவை மேற்கொள்கிறார் போல :-)//

இது குறித்து எனது கருத்து மாறுபடுகிறது http://payanangal.blogspot.com/2008/06/blog-post_19.html

துளசி கோபால் said...

நல்ல விமரிசனம் ராகவன்.


அவ்தார்சிங்கும் அவர் மனைவியும்
மகா எரிச்சல் ஊட்டும் பகுதிகள்.

'டாலர்'மெஹெந்தி நினைவு வருது.....

அதேபோல் நெட்டைக்கமல் கட்டாயம் வேணுமா?

ஹரி ஓம் நமஹ....