Thursday, January 12, 2006

போகியிலேயே பொங்கல் பரிசு

பொங்கல் பரிசுன்னா பொங்கல் அன்னைக்குக் குடுப்பாங்க. ஆனா பாருங்க...தினமலர் பத்திரிகைல பொங்கலுக்கு ஒரு நாள் முன்னாடி வர்ர போகிப் பண்டிகை அன்னைக்கே குடுத்துட்டாங்க.

அதாங்க. நம்ம வலைப்பூ முகவரியக் கொடுத்து, கூடவே கண்டு பிடித்துக் கொடுப்பவருக்குப் பரிசு மாதிரி இருக்குற நம்ம போட்டவப் போட்டு (நம்ம முழியோ ஒரு மாதிரி!) அறிமுகம் கொடுத்திருக்காங்க.

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. மிக்க நன்றி தினமலர்.

வலைப்பூவத் தொடங்கிய பெறகு, அதுக்குத் தமிழ்மணம் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய வலைப்பூவ எல்லாருக்கும் எடுத்துட்டுப் போய் உதவி செஞ்சு...நட்சத்திரமாக்கி...இன்னும் பிரபலப்படுத்தி...என்ன சொல்றது. ரொம்ப நன்றி தமிழ்மணம். (இப்போ நந்தவனம்). ரொம்ப ரொம்ப நன்றி.

வலைப்பூவுல பல விஷயங்கள எழுதீருக்கேன். கத, கவித, கட்டுர, தமிழ் இலக்கியம், ஆன்மீகமுன்னு. கந்தர் அலங்காரங்கத்து விளக்கம் எழுதுனதுண்டு. திருப்பாவைக்கு அடுத்து. கதைகளும் ஒரு ஏழெட்டு இருக்குமே. ஆனா பாருங்க.......நமக்குப் பொழப்பக் கொடுத்து உப்புப் போட்ட பெங்களூருதான் இந்த வாட்டியும் பரிசக் குடுத்திருக்கு. பெங்களூரு ஒரு நன்றி.

என்னதான் எழுதுனாலும் யாருமே கண்டுக்காமப் போனா நல்லாவா இருக்கும்? நம்ம எழுத்துல இருக்க நல்லது கெட்டது நமக்குத் தெரிய வேண்டாமா? அதுக்கெல்லாம் நீங்க எல்லாரும் போட்ட பின்னூட்டங்களும் கருத்துகளும் பலவிதங்களில் உதவியிருக்கு. இப்பவும் என்னுடைய பேரு வந்திருக்குன்னு மொதல்ல ஃபோன் பண்ணிச் சொன்ன தி.ரா.ச, அப்புறம் வலைப்பூவுல அத மகிழ்ச்சியா வந்து சொன்ன மாயவரத்தான், சிங்.செயகுமார், துளசி கோபால், குமரன், அப்புறம் இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்ட வாழ்த்து போடப் போற உங்கள் எல்லாருக்கும் என்ன சொல்றது? நன்றிதான். ரொம்ப நன்றி நண்பர்களே!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு. நான் ஒரு வாட்டி நன்றி மறந்தேன். அது என் மனசுல இன்னும் இருக்குது. முள்ளாக் குத்துது. அதுனால இப்ப எல்லாருக்கும் நன்றி சொல்றேன். விட்டுப் போனவங்க. சொல்ல மறந்தவங்க. எல்லாருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

வழக்கமா நான் அன்புடன்னு முடிப்பேன். இந்த வாட்டி........

நன்றியுடன்,
கோ.இராகவன்

34 comments:

said...

வாழ்த்துகள் ராகவன்

said...

நன்றி முத்துக்குமரன்.

said...

Congrajulations

said...

மிக்க நன்றி தேவ்.

said...

வாழ்த்துக்கள் ராகவன்
உங்கள் அனைத்து ஆக்கங்களையும் படிக்க முடியவில்லை :( அப்பப்போ தமிழ் மணத்தில் தோன்றும் சிலவற்றை தான் படித்துள்ளேன். நேரம் வரும் போது அனைத்தையும் படிக்க ஆவல்.

said...

வாழ்த்துகள் ராகவன். பொங்கலுக்கு பெரிய பரிசு தான்.

said...

பொங்கல் பரிசா? ம்ம்ம். கலக்குங்க. தற்செயலா நடக்கும் ஒரு விஷயத்துக்கு ஒரு காரணம் கண்டுபிடித்து மகிழ்வது நம் வழக்கம் தான். நான் கூட எனது வலைப்பூ தினமலரில் வந்த போது 50வது பதிவுக்கு வந்த பரிசுன்னு தான் சொன்னேன். இல்லையா? :-)

மீண்டும் வாழ்த்துகள் இராகவன். உங்கள் எழுத்துகளில் நல்ல எழுத்தைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்குப் பரிசுன்னு அறிவிச்சா சீக்கிரமே அந்தப் பரிசை அறிவிச்சவங்க ஓட்டாண்டி ஆயிடுவாங்க :-)

தமிழ்மணம் இன்னைக்கு மட்டும் தான் நந்தவனம்ங்கற தம்பியோட இருக்கு. நாளைக்கு மீண்டும் அது தமிழ்மணமாய் மாறிவிடும். அதனால் தமிழ்மணத்துக்கு நன்றிகள் என்றுமே சொல்லிக்கொண்டு இருக்கலாம். தமிழ் மணம் சூரியன் மாதிரி. பகலவன் எந்தச் செயலும் செய்யாவிட்டாலும் எல்லாச் செயல்களும் பகலவனை வைத்துத் தான் நடக்கிறது. அது போலத் தான் தமிழ்மணமும். இல்லையா?

said...

வாழ்த்துகள் ராகவன்

said...

பொங்கல்+கரும்பு வாழ்த்துக்கள் ராகவன்!

said...

// வாழ்த்துக்கள் ராகவன்
உங்கள் அனைத்து ஆக்கங்களையும் படிக்க முடியவில்லை :( அப்பப்போ தமிழ் மணத்தில் தோன்றும் சிலவற்றை தான் படித்துள்ளேன். நேரம் வரும் போது அனைத்தையும் படிக்க ஆவல். //

நன்றி ஜெயச்சந்திரன். நேரம் கிடைக்கையில் பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துகளை இடுங்கள்.

said...

// வாழ்த்துகள் ராகவன். பொங்கலுக்கு பெரிய பரிசு தான். //

நன்றி சிவா.

// பொங்கல் பரிசா? ம்ம்ம். கலக்குங்க. தற்செயலா நடக்கும் ஒரு விஷயத்துக்கு ஒரு காரணம் கண்டுபிடித்து மகிழ்வது நம் வழக்கம் தான். நான் கூட எனது வலைப்பூ தினமலரில் வந்த போது 50வது பதிவுக்கு வந்த பரிசுன்னு தான் சொன்னேன். இல்லையா? :-) //

ஆமாம் குமரன். அதுவும் ஒருவகை மகிழ்ச்சி அல்லவா. :-)

said...

// மீண்டும் வாழ்த்துகள் இராகவன். உங்கள் எழுத்துகளில் நல்ல எழுத்தைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்குப் பரிசுன்னு அறிவிச்சா சீக்கிரமே அந்தப் பரிசை அறிவிச்சவங்க ஓட்டாண்டி ஆயிடுவாங்க :-) //

என் மூதுள்ள அன்பு மிகுதியில் சொல்கின்றீர்கள் குமரன். உங்கள் அன்பிற்கு உடன்படுவதைத் தவிர என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை.

// பகலவன் எந்தச் செயலும் செய்யாவிட்டாலும் எல்லாச் செயல்களும் பகலவனை வைத்துத் தான் நடக்கிறது. அது போலத் தான் தமிழ்மணமும். இல்லையா? //

அது உண்மைதான். நானும் இன்னைக்கு டெம்பிளேட்டுகளை மாத்திப் போட்டிருக்கேன். இன்னும் தமிழ்மண லிஸ்ட்டுல வரலை. என்ன பிரச்சனையோ. வீட்டுக்குப் போய்தான் பாக்கனும்.

said...

// வாழ்த்துகள் ராகவன் //
நன்றி பூங்குழலி.

// பொங்கல்+கரும்பு வாழ்த்துக்கள் ராகவன்! //
நன்றி ஞானபீடம்.

said...

இப்பதிவில் போடாமல் வேறு பதிவில் வாழ்த்துக்கூறிவிட்டேன். எடுத்துக்கொள்வீர்களென நம்புகிறேன்.

வாழ்க! வளர்க!!

said...

// இப்பதிவில் போடாமல் வேறு பதிவில் வாழ்த்துக்கூறிவிட்டேன். எடுத்துக்கொள்வீர்களென நம்புகிறேன்.

வாழ்க! வளர்க!! //

நன்றி ஞானவெட்டியான். மிக்க நன்றி. எங்கு சொன்னாலும் வாழ்த்துதானே. உங்கள் வாழ்த்து எனக்கு நல்லதுதான்.

said...

தற்போது தான் இ.பேப்பரில் பாத்தேன் வாழ்த்துகள் ஜீ.ஆர்

said...

என்னார் ஐயா. ஜீ.ஆர்.ன்னு கூப்புடறதைவிட ஜீரான்னு கூப்பிடுங்க. இனிக்க இனிக்க இனியது கேட்கின்னு சொல்லிக் குடுக்கிறாரே....

said...

நன்றி என்னார். உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

said...

தினமலர் வாழ்த்துடன்...பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

said...

விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
சொல்லுக செவ்வி அறிந்து.

said...

ராகவன், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றூம் நண்பர்களுக்கும் எனதினிய தமிழ்ப் புத்தாண்டு மற்றூம் பொங்கல் நல்வாழ்த்துகள்

said...

சிங்கப்பூரின் தமிழ்முரசுவரை கரம் பதித்தவராயிற்றே தாங்கள்! இப்போது தினமலர்! பாராட்டுகிறேன் ராகவன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

வாழிய நலமே!

said...

// நானும் காலைலயே பார்த்தேன்...
வாழ்த்துக்கள் இராகவன்! //

வாங்க காக்கா பிரியன். நம்ம வலைப்பூவுக்கு மொதமொதலா வந்திருக்கீங்க. உங்க வாழ்த்துக்கு நன்றி. உங்க பேருக்கேத்த மாதிரி உங்க வலைப்பூ இருக்கான்னு வந்து பாக்குறேன். :-)

said...

// ராகவன், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றூம் நண்பர்களுக்கும் எனதினிய தமிழ்ப் புத்தாண்டு மற்றூம் பொங்கல் நல்வாழ்த்துகள் //

நன்றி முத்துக்குமரன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

said...

// சிங்கப்பூரின் தமிழ்முரசுவரை கரம் பதித்தவராயிற்றே தாங்கள்! இப்போது தினமலர்! பாராட்டுகிறேன் ராகவன். //
நன்றி அண்ணா. அந்தக் கருணை மூர்த்தியின் கருணை அவனே அறிவான். :-)

// தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
வாழிய நலமே! //

நன்றி அண்ணா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். எங்கும் இன்பம் நிறைந்து இன்புறுவாய் எம்பாவாய்!

said...

பொங்கல் வாழ்த்துக்கள்!

said...

சூஊஊஊஊஊப்பர ராகவன்..

உங்க போட்டோவும் சூப்பரா இருக்கு.. உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா... இல்லன்னா என் பொண்ண கட்டிக்கிறீங்களான்னு ப்ரொப்போசல் வந்தாலும் வரும்..

தயாராயிருங்க..

said...

wishing u a very happy pongal and congrats for ur dinamalar stuff

said...

இது போல் உஙகள் புகழ் வையம் எங்கும் பெருக வாழ்த்துக்கள்!!!

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

said...

// பொங்கல் வாழ்த்துக்கள்! //

நன்றி நடேசன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்.

// wishing u a very happy pongal and congrats for ur dinamalar stuff //

நன்றி மோகன். உங்களுக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

// இது போல் உஙகள் புகழ் வையம் எங்கும் பெருக வாழ்த்துக்கள்!!!
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். //

நன்றி நெய்பர். இந்தப் பொங்கல் திருநாள் உங்களுக்கு எல்லா மகிழ்ச்சையையும் அள்ளித்தர வாழ்த்துகிறேன்.

said...

// சூஊஊஊஊஊப்பர ராகவன்.. //
நன்றி ஜோசப் சார்.

// உங்க போட்டோவும் சூப்பரா இருக்கு.. உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா... இல்லன்னா என் பொண்ண கட்டிக்கிறீங்களான்னு ப்ரொப்போசல் வந்தாலும் வரும்..
தயாராயிருங்க.. //

என்ன தயாரா இருக்கச் சொல்றீங்களா? இந்தப் போட்டோ எடுத்து மூனு மாசத்துக்கும் மேல ஆச்சு. ஆனா இந்த மூனு மாசத்துல வெயிட் போட்டுட்டேன். :-(((((((((((( எல்லாரும் சொல்லீட்டாங்க. எனக்கும் தெரியுது. :-(((((((((

said...

அட அப்படியா ?

நான் இன்று தினமலர் பார்க்கவில்லை.

மிக்க மகிழ்ச்சி. உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

said...

// மிக்க மகிழ்ச்சி. உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள். //

நன்றி கேமிலியான்.

said...

நண்பர்கள் அனைவருக்கும் சொல்லிவிட்டீர்களா தங்களின் வலைப்பதிவு தினமலரில் வந்திருக்கிறது என்று.



தாமதமான மற்றும் உள்ளன்பு கொண்ட வாழ்த்துக்கள் ராகவா..

அன்புடன்

ரசிகவ் ஞானியார்