Wednesday, April 26, 2006

தேன்கூட்டின் தேன்மழை

இன்னைக்குக் காலைல கொஞ்சம் நேரங்கழிச்சி எந்திரிச்சேன். ஏன்னா நேத்து ராத்திரி வீட்டுக்கு வரும் போது நடுநிசி. மயில்களை எல்லாம் பாக்கலாம்னு உக்காந்தா பொன்ஸ் கிட்ட இருந்து ஒரு மயில்......ராகவன்...சதி நடக்குது....ஒங்கள சாமியார் ஆக்கப் பாக்குறாங்கன்னு....தேன்கூட்ட ஒடனே பாக்கச் சொன்னாங்க....நானும் படக்குன்னு போய்ப் பாத்தேன். அட! வாசகர் பரிந்துரைன்னு மகரந்த வலைத்தளத்த இன்றைய பரிந்துரைல போட்டிருக்காங்க. அதுவும் படத்தப் போட்டு. நன்றி தேன்கூடு. தேன்மழைதான் இந்தப் பரிந்துரை. பரிந்துரை செஞ்ச அந்த நண்பருக்கும் நன்றி.

என்னப் பத்தி என்ன சொல்லீருக்காங்கன்னு கீழ குடுத்திருக்கேன். அதுக்கு நடுவுல என்னோட குறிப்புகளும் இருக்கு. ஊதா நிறத்துல.

திருமணம் ஆகாத அழகான இளைஞர். தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் கணிப்பொறி வல்லுநராக இருக்கிறார்.

போட்டுத் தாங்கீட்டாங்க. அழகுல தொடங்கி வல்லுனர்ல முடிச்சிருக்காங்க. :-) தூத்துக்குடி நாம் பொறந்த ஊராச்சே.....சின்ன வயசுல ஓடியாடி திரிஞ்ச ஊராச்சே....அதுனாலதான் மத்த ஊர்கள விட தூத்துக்குடி மேல பாசம் நெறைய.

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு, அதிலும் முருகக்கடவுள் மீது தீராத அன்பு.

உண்மைதாங்க. அந்த அன்பும் முருகன் தந்ததுதான். எல்லாம் தமிழ் காட்டிய வழி.

பழமையை உடைத்தெறிந்து புதிய பாதையில் உலகை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர், தன் கருத்தை கடைப்பிடிப்பவரும் கூட.

இந்தக் கருத்தைச் சொன்ன நண்பருக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சிருக்கு. ஐயா, யாருய்யா நீங்க...எனக்கு ஒரு மயிலாவது தட்டி விடுங்க gragavan at gmail dot com. முடிஞ்ச வரைக்கும் சொல்றதச் செய்யனும்னு நெனப்பேன். நெனச்சத முடிஞ்ச வரைக்கும் செய்வேன். என்னைய ஒருத்தன் அடிக்கக்கூடாதுன்னு நெனச்சேன்னா...நானும் அடுத்தவன அடிக்கக் கூடாதுன்னு நெனக்கிறேன். இவ்வளவுதாங்க.

பல தளங்களில் எழுதியிருக்கிறார், வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியதை வைத்து எழுதிய நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமானது.பட்டிமன்றத்தில் இளம்வயதிலேயே நடுவராக பணி புரிந்த அனுபவம் உண்டு.நல்ல சமையல் கலைஞரும் கூட, தினம் தினம் எதையாவது புதிதாக சமைக்க முயற்சி செய்வார்.நட்பு பாராட்டுவதிலும் வல்லவர். விரைவில் இமயமலைக்கு ஆன்மீகப்பயணம் செல்லும் எண்ணமும் உண்டு.

வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திய வெச்சு எழுதுன விக்கிரமாதித்தன் கதை நகைச்சுவைக் கதை. மாரப்பன்,அரசகுமார், இளங்கோ (இளைய மகன்) மேல் பாசம் கொண்ட அன்புச்செல்வர், வெற்றிச்செல்வி எல்லாரும் வருவார்கள். இவங்கள்ளாம் யாருன்னு தெரியுதுல்ல. அப்போ எழுத இடங்கொடுத்தது Forumhub. அதுலதான் எழுதினேன். பலர் விரும்பிப் படிச்சாங்க.

அதே மாதிரி பட்டிமன்றம்....இது தினம் ஒரு கவிதைக் குழுவுக்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றம். அதை நடத்தி வந்த நாகா வாய்ப்பு கொடுத்தார். அடுத்து மகேந்திரன் என்ற நண்பர் வழியா பாரதியா பிறந்த நாள் விழாவுக்கு பெங்களூர் டவுன்ஹாலில் நடந்த பட்டிமன்றத்தில் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்புகள் கிடைக்கக் காரணமான நண்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.


இமயமலைக்கா? நான் ஏற்கனவே போயிருக்கேனே...தூரத்துல இருந்து K-2 சிகரத்தையும் பாத்திருக்கேனே....ஆனா அது ஆன்மீகச் சுற்றுலா இல்ல. நல்ல இன்பச் சுற்றுலாதான். ஆகஸ்ட்டுல Valley of flowers போக வேண்டியது. மூனு மாசம் சென்னைக்குப் போக வேண்டியிருக்கிறதால போக முடியாது. :-(

அருணகிரி நாதரின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிய சொல்ல சொல்ல இனிக்குதடா புகழ் பெற்ற பதிவு.இதற்கு மேலே உங்களுக்கே தெரியும் தானே :)

இதச் சிரிச்சிக்கிட்டே சொல்றீங்க....அதுனால நீங்க யாருன்னு தெரிஞ்சி போச்சு.....நேத்து அப்படி ஒரு கேள்வி கேட்டப்போ தெரியாயது இப்பத் தெரிஞ்சி போச்சு. :-)

சுமார் ஓராண்டுக்கும் மேலாகத் தமிழ் இணையத்திலும், வலைப்பதிவுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்று வரும் கோ.ராகவனின் வலைப்பதிவு:
மகரந்தம்

நன்றி: #வாசகர் பரிந்துரை (27/04/06)


தேன்கூட்டிற்கும் என்னை ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கும் நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

46 comments:

said...

நாந்தான் ஏற்கனவே வாழ்த்திட்டேனே.. சென்னை வரும்போது ஒரு ஸ்வீட் செஞ்சி குடுத்துடுங்க இதுக்கு..
//நேத்து அப்படி ஒரு கேள்வி கேட்டப்போ தெரியாயது இப்பத் தெரிஞ்சி போச்சு. :-)//
யாருங்க அது..எனக்கு மட்டும் சொல்வீங்களாம்..

said...

வாழ்த்துக்கள் அன்பரே

said...

/// என்னை வாழவைத்த அன்பு தெய்வங்களுக்கு ///

ஒரு மேட்டர தேன் கூட்டுல சேக்காம உட்டுட்டாங்க பா...

கூடிய விரைவில் கட்சி ஆரம்பிக்கறத சொல்லல....ஹஹஹா..

said...

congratulations Raghavan!!!!!
keep up the good work....

yaaro avar yaaro??1


Radha

said...

ராகவன்,

சந்தோஷமா இருக்கு.

வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

பிகு: இந்த (க்) எழுதறப்ப எல்லாம் உங்க நினைவு வரும்.
இன்னிக்கு உங்களுக்கே (க்) எழுதும்படி ஆயிருச்சு:-))))

said...

ராகவன், கலக்குங்க!!!

கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு! :)

said...

மென்மேலும் பேருன் புகழும் பெற வாழ்த்துக்கள்.

said...

நட்பின் இலக்கணம் நண்பர் ராகவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

said...

ஆஹா, அட்டகாசம்.

வாழ்த்துகள் அண்ணா, வாழ்த்துகள்.

இமயமலைக்கு என்னையும் அழைத்து செல்லுங்க.

அன்புடன்
பரஞ்சோதி

said...

Hi Raghavan,
Congratulations!
Pl continue your good work.

said...

அறிவிலும் ,தெளிவிலும் நான் பொறாமைப் படும் இளைஞர் ,அன்பிற்கினிய ஆன்மீகச் செம்மல் அருளாளர் ராகவன் புகழ் ஓங்குக!

said...

இன்னைக்கு சாயங்காலம் downtownல பெரிய ட்ரீட் குடுக்கப்போறீங்களாம்.. என்கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீங்களா ??

:)

said...

மகரந்தம் இல்லாமல்
தேன் கூடு
மணப்பதில்லை...

அன்பான வாழ்த்துகள் ராகவன்

said...

//துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

பிகு: இந்த (க்) எழுதறப்ப எல்லாம் உங்க நினைவு வரும்.
இன்னிக்கு உங்களுக்கே (க்) எழுதும்படி ஆயிருச்சு:-)))) //

ஆமாம் அ(க்)கா,

எனக்கும் அதே தான், க் போடும் போது எல்லாம் இராகவன் அண்ணா தான் நினைவுக்கு வருகிறார் :)

said...

தேன் கூட்டின் இன்றைய வலைப் பதிவு பகுதியில் தேர்தெடுக்கப் பட்டதற்காக வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி உங்களுடய எல்லா பதிவுகளும் உங்களுடய எல்லா முயற்சிகளும் மிகவும் நன்றாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள்.

said...

//கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு! :)//

நானும் வழிமொழிகிறேன்.

said...

வாழ்த்துக்கள் ராகவன்.

சரி இப்ப உங்களப்பத்தி எழுதுனத பார்ப்போம்..

திருமணம் ஆகாத அழகான இளைஞர். தூத்துக்குடியை சேர்ந்தவர்.//

உண்மையாவா? இன்னும் ஆகலையா? ஏன்? வயசாகலையா?

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு, அதிலும் முருகக்கடவுள் மீது தீராத அன்பு. //

ஓ! இதத்தான் சாமியாராக்கப் பாக்கறாங்கன்னு சொல்றாரா?

பழமையை உடைத்தெறிந்து புதிய பாதையில் உலகை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர்//

பார்த்து ராகவன். கொஞ்சம் மெதுவாவே போங்க..:-)

பல தளங்களில் எழுதியிருக்கிறார், வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியதை வைத்து எழுதிய நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமானது//

அப்படியா? நான் படிக்கவே இல்லையே! எங்கருக்கு?

said...

:)
வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் ராகவன்.

said...

ராகவன் சார்,
பிடிங்க வாழ்த்துக்களை.
இன்னும் நெறய செய்யுங்க.

சாமியாராகி தான் நல்லது செய்ய முடியுங்கரதை மாத்தி காட்டனும்.

சாப்ட்வர் வல்லுனரா இருந்தும் நல்லது செய்யமுடியுங்கரதை நிருபிச்சிக்கிட்டே இருக்கணும்.

said...

// நாந்தான் ஏற்கனவே வாழ்த்திட்டேனே.. சென்னை வரும்போது ஒரு ஸ்வீட் செஞ்சி குடுத்துடுங்க இதுக்கு.. //

கண்டிப்பா பொன்ஸ். பாவக்கா புளி அல்வான்னு புதுசாக் கண்டு பிடிச்சிருக்கேன். அது முதல் முதலா உங்களுக்குத்தான். :-)

// //நேத்து அப்படி ஒரு கேள்வி கேட்டப்போ தெரியாயது இப்பத் தெரிஞ்சி போச்சு. :-)//
யாருங்க அது..எனக்கு மட்டும் சொல்வீங்களாம்.. //

அட நீங்க வேற...இப்பிடிச் சொன்னாலாவது கண்டுபிடிக்கலாம்னுதான்..........

said...

// ILA(a)இளா said...
வாழ்த்துக்கள் அன்பரே //

நன்றி இளா.

said...

// ரவி said...
/// என்னை வாழவைத்த அன்பு தெய்வங்களுக்கு ///

ஒரு மேட்டர தேன் கூட்டுல சேக்காம உட்டுட்டாங்க பா...

கூடிய விரைவில் கட்சி ஆரம்பிக்கறத சொல்லல....ஹஹஹா.. //

அந்தா பிடிச்சீங்களே......ப.ம.க-வில கலந்தப்புறம் இதெல்லாம் தானா வருது........ :-)

said...

//கண்டிப்பா பொன்ஸ். பாவக்கா புளி அல்வான்னு புதுசாக் கண்டு பிடிச்சிருக்கேன். அது முதல் முதலா உங்களுக்குத்தான். :-)//
பாவக்கா புளி அல்வாவா?!! நீங்க அனுப்பின வத்தக் கொழம்பே இன்னும் வந்த பாடில்லை.. ம்ம்ம்..

said...

// Radha Sriram said...
congratulations Raghavan!!!!!
keep up the good work.... //

நன்றி ராதா

// yaaro avar yaaro??1 //

யார் யார் யார் அவர் யாரோ! ஊர் பேர் தான் தெரியதோ!

said...

// துளசி கோபால் said...
ராகவன்,

சந்தோஷமா இருக்கு.

வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

பிகு: இந்த (க்) எழுதறப்ப எல்லாம் உங்க நினைவு வரும்.
இன்னிக்கு உங்களுக்கே (க்) எழுதும்படி ஆயிருச்சு:-)))) //

நன்றி டீச்சர். அந்த க்கையும் அடைப்புக்குள்ளதான குடுத்திருக்கீங்க. :-) அந்த அளவுக்கு எனக்கு மகிழ்ச்சிதான்.

said...

// இளவஞ்சி said...
ராகவன், கலக்குங்க!!!

கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு! :) //

அதெல்லாம் சரிதான் இளவஞ்சி....நமக்கு?

said...

// இலவசக்கொத்தனார் said...
மென்மேலும் பேருன் புகழும் பெற வாழ்த்துக்கள். //

நன்றி கொத்ஸ். உங்களுக்கும் எனது வாழ்த்துகள். பமகவின் சார்பாக.

said...

// Dev said...
நட்பின் இலக்கணம் நண்பர் ராகவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வாழ்த்துக்கள். //

என்ன தேவ் இலக்கணம்னு சொல்லீட்டீங்க........இனிமே யாரும் கண்டுக்க மாட்டாங்களே!

said...

// பரஞ்சோதி said...
ஆஹா, அட்டகாசம்.

வாழ்த்துகள் அண்ணா, வாழ்த்துகள்.

இமயமலைக்கு என்னையும் அழைத்து செல்லுங்க. //

ஆக மொத்தத்துல என்னைய இமயமலைக்கு அனுப்புறதுல எல்லாரும் குறியா இருக்கீங்க! ம்ம்ம்ம்ம்ம்....முருகா...இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல...

said...

// Holdat9000 said...
Hi Raghavan,
Congratulations!
Pl continue your good work. //

நன்றி நண்பரே. நிச்சயமாகச் செய்கிறேன்.

said...

// ஜோ / Joe said...
அறிவிலும் ,தெளிவிலும் நான் பொறாமைப் படும் இளைஞர் ,அன்பிற்கினிய ஆன்மீகச் செம்மல் அருளாளர் ராகவன் புகழ் ஓங்குக! //

:-) என்ன ஜோ என்னைப் பாத்துப் பொறாமைப் பட என்ன இருக்கு!

ஆமா இப்ப என்ன பதிவுகள் கொறஞ்சு போச்சு....சீக்கிரம் எழுதுங்க...

said...

சபாஷ் சிவமுருகன்,

//சாமியாராகி தான் நல்லது செய்ய முடியுங்கரதை மாத்தி காட்டனும். //

போட்டீங்களே ஒரு போடு :-)))))

எனக்குப் பிடிச்சிருக்கு.

said...

// ராசா (Raasa) said...
இன்னைக்கு சாயங்காலம் downtownல பெரிய ட்ரீட் குடுக்கப்போறீங்களாம்.. என்கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீங்களா ??

:) //

ராசா, downtown party அழைப்பு ஒங்களுக்கும் அனுப்பிச்சிருக்கேன்னு இதுல இருந்து தெரியுது. சரி...ஏன் நீங்க வரலை? ஒங்க ஏரியாவ விட்டு வெளிய வர வழி தெரியலைன்னு நீங்க அனுப்புன மெசேஜ் கெடச்சது. சுதர்சன் மட்டும் வந்து கலந்துக்கிட்டாரு. அவரும் downtown ஆளுதான....

said...

// முத்துகுமரன் said...
மகரந்தம் இல்லாமல்
தேன் கூடு
மணப்பதில்லை...

அன்பான வாழ்த்துகள் ராகவன் //

நன்றி முத்துக்குமரன். எப்படி இருக்கீங்க. பேசியும் ரொம்ப நாளாச்சு....

said...

// குமரன் எண்ணம் said...
தேன் கூட்டின் இன்றைய வலைப் பதிவு பகுதியில் தேர்தெடுக்கப் பட்டதற்காக வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி உங்களுடய எல்லா பதிவுகளும் உங்களுடய எல்லா முயற்சிகளும் மிகவும் நன்றாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். //

வாங்க செந்தில்குமரன். உங்கள் வாழ்த்துகளுக்கு எனது உளமார்ந்த நன்றி.

said...

// tbr.joseph said...
வாழ்த்துக்கள் ராகவன். //

நன்றி ஜோசப் சார்.

// சரி இப்ப உங்களப்பத்தி எழுதுனத பார்ப்போம்.. //

பாக்கலாமே..... :-)

////திருமணம் ஆகாத அழகான இளைஞர். தூத்துக்குடியை சேர்ந்தவர்.//

உண்மையாவா? இன்னும் ஆகலையா? ஏன்? வயசாகலையா? //

ஆயிக்கிட்டே இருக்குது சார்.

// ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு, அதிலும் முருகக்கடவுள் மீது தீராத அன்பு. //

ஓ! இதத்தான் சாமியாராக்கப் பாக்கறாங்கன்னு சொல்றாரா? //

இது இல்லீங்க....என்னைய இமயத்துக்கு அனுப்புற முயற்சியச் சொன்னேன்.

// // பழமையை உடைத்தெறிந்து புதிய பாதையில் உலகை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர்//

பார்த்து ராகவன். கொஞ்சம் மெதுவாவே போங்க..:-) //

ஆமாம் சார். ஒவ்வொரு அடியாத்தான் பாத்துப் பாத்து வைக்கிறேன்.

// // பல தளங்களில் எழுதியிருக்கிறார், வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியதை வைத்து எழுதிய நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமானது//

அப்படியா? நான் படிக்கவே இல்லையே! எங்கருக்கு? //

அது forumhub-ல எழுதுனது சார். நெறைய எழுத்துப்பிழை அது இதுன்னு இருக்கும். ஆனாலும் அத இங்க குடுக்குறதிலயும் தப்பில்லை. நேரம் கிடடக்கிறப்போ அதையும் போடுறேன். தொடர்கதை அது. அப்படி இல்லைன்னா ஒங்களுக்கு மயில்ல அனுப்பி வைக்கிறேன்.

said...

// எஸ்.பாலபாரதி said...
:)
வாழ்த்துக்கள் //

நன்றி பாலபாரதி. உங்கள் பதிவைப் பார்த்தேன். இன்னும் பின்னூட்டம் இடவில்லை. ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கோங்க...

// // தேசாந்திரி said...
//கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு! :)//

நானும் வழிமொழிகிறேன். //

பழமொழிய நானும் வழி மொழியிறேன் :-)

said...

// Jayashree said...
வாழ்த்துக்கள் ராகவன். //

வாங்க ஜெயஸ்ரீ. நானும் உங்களக் கேட்டுக்கிட்டே இருக்கேன். திருப்புகழ், தாயுமானவர்னு....எப்போ எப்போ!

said...

// சிவமுருகன் said...
ராகவன் சார்,
பிடிங்க வாழ்த்துக்களை.
இன்னும் நெறய செய்யுங்க.

சாமியாராகி தான் நல்லது செய்ய முடியுங்கரதை மாத்தி காட்டனும்.

சாப்ட்வர் வல்லுனரா இருந்தும் நல்லது செய்யமுடியுங்கரதை நிருபிச்சிக்கிட்டே இருக்கணும். //

ரொம்ப சரியாச் சொன்னீங்க சிவமுருகன். அதுதான் என்னுடைய கருத்தும். என்னுடைய வாழ்க்கை லட்சியம் ஒன்னு இருக்கு. அத நிறைவேத்தனும். ஒங்க எல்லார் கிட்டயும் வருவேன். கொஞ்சம் பொறுங்க....

said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இராகவன்.

said...

வாழ்த்துக்கள் ராகவன்.கலக்கல்கள் தொடரட்டும்.

said...

//உண்மையாவா? இன்னும் ஆகலையா? ஏன்? வயசாகலையா? //

ஆயிக்கிட்டே இருக்குது சார்.//

எது ஜிரா? ;)

said...

உங்கள் ஓரு வருட பதிவுகளை நிறையவே படிக்க இருக்கிறதே. கொஞ்ச கொஞ்சமாவது படிக்கோனும்! முதன் முதலாய் உங்கள் பதிவை படித்த போதே "அட நல்லாயிருக்கே!" என ஆவலை தூண்டியது. அது எந்த பதிவாய் இருந்தாலும் அந்த ஈர்ப்பு இருக்கிறது.

//அழகான இளைஞர்/ கணிப்பொறி வல்லுனர்//
அப்போ அழகான வல்லுனர்-ன்னு சொல்லுங்க. திருமண ப்ராப்தி ரஸ்து!

//நான் அடி வாங்கக்கூடாது என்றால் நான் மற்றவரை அடிப்பதில்லை. //
நானும் அது போலத் தான். ஆனால் பல நேரம் சங்கடமாகிவிடுகிறது.

said...

"வாழ்த்து"களுக்கு "க்" போட சொன்னீர்கள் என்றால் புரிகிறது.

ஆனால் "மயில்" அனுப்புகிறேன் என்று சொல்கிறீர்களே எதனால்? "மெ" வை தவற விட்டீர்களோ என நினைத்தால் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் போல "மயில்" என்றே எழுதுகிறீ்ர்களே!

அப்புறம் அந்த "Valley of...." எங்கே இருக்கிறது? முகவரி பயண விவரம் இருந்தால் கொடுங்களேன்.

said...

தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்!
{நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல}